தீபாவளி நூறு!

முதல்ல எல்லாருக்கும் என்னோட தீபாவளி நல்வாழ்த்துகள். பட்டாசெல்லாம் வெடிக்க கிடைக்கல இங்கே. இருந்தாலும் வீக்கெண்ட் சின்ன பார்ட்டினு முடிவு பண்ணிருக்கோம். பாப்போம். நீங்களும் சந்தோஷமா கொண்டாடுங்க. ஆனா, ஜாக்கிரதையா இருங்க.

---

அடுத்தது, இது என்னோட நூறாவது பதிவு. நூறாவது பதிவுன்னா கொசுவத்தி கொளுத்த வேண்டாமா? சில ஹைலைட்ஸ். இதுதான் இப்போ டெம்ப்ளேட் ஆயிடுச்சே. மார்ச் 2005-ல் தமிழில் வலைப்பதிய ஆரம்பித்தேன், தங்கமகனின் ஊக்கத்தால். நிறைய நண்பர்களையும் பல வாசகர்களையும் ஏற்படுத்திக்கொடுத்த தமிழ்மணத்திற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். நேரில் பார்க்காமலேயே ஏதோ நெருங்கிய உறவு போல் ஒரு அன்னியோன்யத்தை உருவாக்க வல்ல வலைப்பூக்களின், இல்லை.... தமிழின் தாக்கத்தை உணர்ந்து கொண்டேன்.

இனி சில நம்பர்கள். இதுவரை இந்த தளத்திற்கு வருகை தந்தவர்கள் 9115 பேர்கள் (என்னைச் சேர்க்காமல், என்னோடது மட்டும் இன்னுமொரு ஆயிரமாவது இருக்கும் :-) ).

இதெல்லாம் சில அக்காக்களுடனும் தலைகளுடனும் ஒப்பிடும் போது ஜுஜுபின்னாலும், ஏதோ ஏழைக்கேத்த எள்ளுருண்டை.

அதிகமாக கவனிக்கப்பட்ட பதிவுகள்: மறக்க முடியாத விளம்பரங்கள், சூப்பரின் சாதனையை இருட்டடிக்கும் ஆங்கில வெப்சைட்கள்


அதிகமான பதிவுகள் எழுதியது: அக்டோபர் 2005 - 24 பதிவுகள் இதையும் சேர்த்து.

மிகக் குறைவான பதிவுகள்: மே 2005 - 0!

தமிழ்மணத்தில் மிகவும் சந்தோஷப்பட்டது: 8 செப்டம்பர் - மதி கந்தசாமி அவர்கள் ஒருவார நட்சத்திரமாக இருக்க அழைப்பு விடுத்தது. ஆனால், என்னுடைய ஜாகையை மாற்றும் எண்ணத்தில் இருந்ததால், இருப்பதால் பின்னர் நானே கேட்டு வாங்கிக்கொள்கிறேன் என்று சொன்னேன். அதை செய்வதற்கு இன்னும் காலம் வரவில்லை. விரைவில் வருமென்று எதிர்ப்பார்க்கிறேன்.

வருத்தப்பட்டது: சின்னவன், குசும்பன் பதிவுகள் தூக்கப்பட்டபோது.

சில தொடர்கள்:
கு.போ.கதை

மருதைக்கு போலாமா


சில படப்பதிவுகள்:
வயிரவன் கோயில் எறும்புகள்

Spider-Man

தஞ்சைப் பெரியகோயில்

சூரிய அஸ்தமனம்



நான் மிகவும் ரசிக்கும் பதிவர்கள்: ஆனந்த், துளசியக்கா, ராகவன், ரம்யா அக்கா, தாணு அத்தை, பரணீ, முகமூடி, குழலி

இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள் என்று என்னோட blogroll-ஐ பார்த்தாலே தெரியும்.

என் பதிவுகளையும் படித்து frequent ஆக பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்திய எல்லோருக்கும் நன்றி. எல்லோருடைய பெயர்களையும் போடணும்னா அப்புறம் தொடர் தான் ஆரம்பிக்கணும். அதனால், கோச்சுக்காம என் நன்றிகளை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறேன்.

--
சுய புராணம் ஜாஸ்தியாப் போச்சு. அதனால் இதோட நிறுத்திக்கிறேன். நூறாவது பதிவு டெம்ப்ளேட்டின் (updated) காப்பிரைட் இப்ப என்கிட்ட! :)

மீண்டும் ஒருமுறை அனைவருக்கும்

தீபாளி நல்வாழ்த்துகள்

39 Comments:

  1. ilavanji said...

    வாழ்த்துக்கள்.. தீபாவளிக்கும் சேர்த்து.. :)


  2. ஜெயஸ்ரீ said...

    congrats


  3. குமரன் (Kumaran) said...

    வாழ்த்துகள் ராமநாதன் (ராமநாதர்??)....முதன்முதலில் நான் உங்கள் வலைப்பதிவில் படித்தது 'மருதைக்குப் போலாமா' தொடர் தான். நன்றாய் எழுதியிருந்தீர்கள்.

    இனிய தீபாவளி வாழ்த்துகள்.


  4. மோகன் said...

    நூறு+ஆயிரமாக...வாழ்த்துக்கள் ராமநாதன்.


  5. பத்மா அர்விந்த் said...

    நூறு பல்லாயிரமாக பெருக வாழ்த்துக்கள்.


  6. ramachandranusha(உஷா) said...

    தாய்குலங்களை மட்டும் அக்கா, அத்தைன்னு ஒறவு? மத்தவங்கள அண்ணன், சித்தப்பு, பெரியப்பா என்று மெய்டென் பண்ணுப்பா!
    பி.கு வாழ்த்துக்கள், அப்புறம் சின்ன டவுட், உங்க பதிவுல போட்டோல இருக்கிற ரஷ்யாகாரர் யாரு :-)


  7. rv said...

    பின்னூட்டத்தில் வாழ்த்திய அனைவருக்கும் என் நன்றி.

    ஆயிரந்தானே.. இப்ப போற ஸ்பிடுல மெகாத்தொடர்கள் எழுதினாலே போதும். அடுத்த தீபாவளிக்குள்ள புடிச்சிடலாம் :)

    குமரன்,
    //ராமநாதன் (ராமநாதர்??)....//
    இராமநாதன் - தான். அதான் தருமி சொல்லிட்டாருல்ல!

    உஷா அக்கா,
    //மத்தவங்கள அண்ணன், சித்தப்பு, பெரியப்பா என்று மெய்டென் பண்ணுப்பா!
    //
    இனிமே முயற்சி செய்யறேன். தலன்னு கூப்பிட்டாத்தான் பிடிக்கும்னு நினச்சுகிட்டேன்.

    // உங்க பதிவுல போட்டோல இருக்கிற ரஷ்யாகாரர் யாரு//
    அட, அது நான் தான்னு சொன்னா யாரு நம்பறா? ;-)


  8. துளசி கோபால் said...

    அட்றா சக்கை. அங்கங்கே தீவுளிக்கு தவுசண்ட் வாலா கொளூத்தறாங்களேன்னு பார்த்தா இங்கே 'ஹண்ட்ரட்வாலா' கொளுத்திப் போட்டாச்சா:-))))

    வாழ்த்துக்கள் தம்பி.

    உஷா நம்பலேல்லெ அந்த போட்டோலே இருக்கறது நீங்கதான்னு.
    குடும்ப சொத்துன்னு எத்தனைதரம் சொல்றதாம்?

    நல்லா இருங்க. தீபாவளி வாழ்த்துக்கள்.

    என்றும் அன்புடன்,
    அக்கா


  9. Boston Bala said...

    ராமநாதனாரே... தீபாவளி வாழ்த்துக்கள் :-)


  10. Unknown said...

    இரஷ்யா இராமநாதான்,
    தீபாவளி நல்வாழ்த்துகள் + 100 ஆவது பதிவிற்கு சிறப்பு வாழ்த்துக்கள்


  11. முகமூடி said...

    அடேங்கப்பா... நூறு தடவை இம்சிக்கப்பட்டிருக்கிறோமா நாங்கள்... இருந்தாலும் இது ஒரு சுகமான இம்சைதான்... வாழ்த்துக்கள்.

    அந்த போட்டோ சந்தேகம் எல்லாருக்கும் வர காரணம் இதுக்கு முந்தைய போட்டோதான். ராசுகுட்டி பாக்கியராசுக்கு கூட தோணாத ஒரு ரேஸ் ட்ரைவர் போஸ்ல போட்டோ போட்டதும் எல்லாருக்கும் சந்தேகம் வந்திருச்சி...

    ஏம்பா கட்சிக்காரங்க எல்லாம் முக்கியமான இது மாதிரி நேரத்துல கட்சிய பத்தி ஒரு வார்த்தை சொல்ல தேவல... துளசியக்கா அயல்நாட்டு கொபசென்னு பேருதான், ஆனா கட்சி வளர்ச்சி பத்தி ஒன்னியும் பண்ணக்காணோம்.


  12. Unknown said...

    //ராசுகுட்டி பாக்கியராசுக்கு கூட தோணாத ஒரு ரேஸ் ட்ரைவர் போஸ்ல//
    :-))


  13. rv said...

    பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி..


    இனி துளசியக்கா ஸ்டைல்..


  14. Thangamani said...

    நூறு பல்லாயிரமாக பெருக வாழ்த்துக்கள்.


  15. rv said...

    மஞ்சுளா,
    நன்றி..

    தேடுன பாட்டு கிடச்சுதா?

    அக்கா,
    //உஷா நம்பலேல்லெ அந்த போட்டோலே இருக்கறது நீங்கதான்னு.
    குடும்ப சொத்துன்னு எத்தனைதரம் சொல்றதாம்?
    //
    அதான் வருத்தமும் ;)


  16. rv said...

    பாஸ்டன் பாலானாரே,
    //ராமநாதனாரே...//
    நன்றி. உங்களுக்கும் :)

    கல்வெட்டு,
    //இரஷ்யா இராமநாதான்//
    இதென்ன புதுபேரு?? :)


  17. rv said...

    'வாரு'ங்கள் தல,
    ஆழக்குத்தர்கறது சரியாத்தான் இருக்குது போங்க.

    // ராசுகுட்டி பாக்கியராசுக்கு கூட தோணாத ஒரு ரேஸ் ட்ரைவர் போஸ்ல போட்டோ போட்டதும் எல்லாருக்கும் சந்தேகம் வந்திருச்சி...//
    எப்படித்தான் இப்டியெல்லாம் தோணுது? :)

    //ஏம்பா கட்சிக்காரங்க எல்லாம் முக்கியமான இது மாதிரி நேரத்துல கட்சிய பத்தி ஒரு வார்த்தை சொல்ல தேவல... //
    மன்னிச்சுக்குங்க. தப்பாயிடுச்சு. நீங்களே கட்சியின் CMP பத்தி ஒரு டெம்ப்ளேட் குடுத்தீங்கனா, நான் சேத்துடறேன். சரியா?

    தங்கமணி,
    நன்றி.


  18. Unknown said...

    "இரஷ்யா இராமநாதன் " அப்படீன்னுதான் எழுத நினைச்சேன் ஒரு துணைக்கால் அதிகமாப் போயிருச்சு :-)


  19. rv said...

    கல்வெட்டு
    //அப்படீன்னுதான் எழுத நினைச்சேன் ஒரு துணைக்கால் அதிகமாப் போயிருச்சு :-)
    //

    இதான் மேட்டரா? நீங்க வேற கல்வெட்டா - சொன்னதுல எதுனாவது குத்து/வெட்டு இருக்குமோன்னு நினச்சிட்டேன்.. ஒகே ஒகே..


  20. Sundar Padmanaban said...

    ஏங்க... நீங்க ஒரு தடவை சொன்ன போதாதா? ;)

    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். இன்னும் பலநூறு படைக்கவும் வாழ்த்துகள்.

    அன்புடன்
    சுந்தர்


  21. rv said...

    சுந்தர்,
    டமில் நாட்ல "நா ஒரு தட்வ சொன்னா"னு சொல்லுறதுக்கு ஒருத்தர்கிட்ட மட்டுந்தான் எக்ஸ்க்ளூசிவ் ரைட்ஸ் இருக்கு.

    அது நானில்லை :)

    நன்றி


  22. Kasi Arumugam said...

    ராமநாதன், நூறு ஆயிரமாக வாழ்த்துக்கள்.


  23. இராதாகிருஷ்ணன் said...

    வாழ்த்துகள் இராமநாதன், தீபாவளிக்கும் சேர்த்து.. :)


  24. Ramya Nageswaran said...

    ஹை, நூறு பதிவுகள் போட்டாச்சா? தீபாவளியோட coincideஆனது இன்னும் நல்லா இருக்கு! Christmasக்குள்ளே இன்னோரு நூறு எழுத வாழ்த்துகள்!!!


  25. rv said...

    காசி, இராதாகிருஷ்ணன், ரம்யா அக்கா,
    நன்றி

    //Christmasக்குள்ளே இன்னோரு நூறு எழுத வாழ்த்துகள்!!//
    மெகாத் தொடர் எழுதறத விட வேணாம்கறீங்க. நீங்க சொல்லி, நான் என்ன மாட்டேன்னா சொல்லப் போறேன்? :)


  26. rv said...

    ரம்யா அக்கா,
    அப்படியே இன்னொரு விஷயம்.. உங்களால - போட்டோல இருக்கறது நான் தான்னு சொன்னா யாருமே நம்ப மாட்டேங்கறாங்களே! :(((


  27. குசும்பன் said...

    100 ஆ? ரேசுநாதர்'ன்னு நான் அன்னிக்கே சொன்னேன். குசும்பன் ஒரு தடவ சொன்னா? :-)

    வாழ்த்துக்கள் !!! கலக்குங்கள் !!!


  28. rv said...

    நன்றி குசும்பரே,

    //குசும்பன் ஒரு தடவ சொன்னா? :-)
    //
    தலைவர் தவிர வேற யாரும் இதச் சொல்ல முடியாதுன்னு என் நம்பிக்கை!

    கோப்பிரைர் பிரச்சனை வராமல் இருக்க வாழ்த்துகள்!


  29. G.Ragavan said...

    வாழ்த்துகள் இராமநாதன். நூறு பதிவு ஆயிருச்சா. சாதனைதான். இன்னும் நிறைய பதியுங்கள்.

    உங்கள் விருப்பப் பட்டியலில் என்னுடைய பெயரும் இருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.

    இரஷ்யா பற்றிய தொடர் நன்றாக இருக்கிறது. தெரியாதவைகளை தெரிந்த கொள்ள உதவியாக இருக்கிறது.

    இன்னும் நல்ல பல சுவையான பதிவுகளைத் தர வாழ்த்துகிறேன்.

    தீபாவளி பார்ட்டியை நன்றாகக் கொண்டாடுங்கள்.

    இங்கு என்னுடைய தீபாவளி நன்றாகச் சென்றது. வேட்டுச் சத்தம் கொஞ்சம் அதிகம்.


  30. மதுமிதா said...

    வாழ்த்துகள் இராமநாதன்
    100,
    100,100 ஆ தொடரட்டும்


  31. தருமி said...

    உங்கள் வருத்தத்தில் 50% எனக்கும் உண்டு. அடுத்த 50% பற்றி அதிகம் தெரியாது.

    நூத்துக்கு வாழ்த்துக்கள்.


  32. ரவிகுமார் ராஜவேல் said...

    Mclaren வண்டி ஒட்டுர ஆளு தமிழ் blog எழுதுறது தெரியாம போச்செ


  33. ரவிகுமார் ராஜவேல் said...

    100 க்கு வாழ்த்துக்கள்


  34. rv said...

    ராகவன், மதுமிதா

    நன்றி


  35. rv said...

    தருமி,
    ஒரு நாள் வித்தியாசத்துல, போட்டோ பினிஷ் மாதிரி உங்கள முந்திட்டேனே! :)


  36. rv said...

    ரவிகுமார் ராஜவேல்,
    //Mclaren வண்டி ஒட்டுர ஆளு தமிழ் blog எழுதுறது தெரியாம போச்செ

    //
    கொஞ்சம் அடக்கிவாசிங்க. மெக்லாரன் பத்தி தெரியாதவங்க இன்னும் சில பேர் இருக்கணும். அப்பத்தானே பொண்ணெல்லாம் பாக்கறாங்க? காரியத்தையே கெடுத்துடுவீங்க போலிருக்கே :)))

    நன்றி


  37. வீ. எம் said...

    இராமநாதன்
    தீபாவளிக்கும் நூறாவது பதிவுக்கும் எனது உளங்கனிந்த வாழ்த்துகள்!


  38. Ramya Nageswaran said...

    //உங்களால - போட்டோல இருக்கறது நான் தான்னு சொன்னா யாருமே நம்ப மாட்டேங்கறாங்களே! :(((//

    அது ஏன் தெரியுமா? படத்துலே கொஞ்சம் வழுக்கை விழுந்து 25விட வயசானவரா தெரியுதில்லை..அதான் நம்ப மாட்டேன்கிறாங்க மக்கள்...வேறே ஒண்ணும் இல்லை!! :-)


  39. rv said...

    நன்றி வீ.எம்

    அக்கா,
    அது வழுக்கையில்ல. இஷ்டைலுன்னு நினைக்கத் தோணலியாக்கும்? :(


 

வார்ப்புரு | தமிழாக்கம்