இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அடுத்த மெகாத்தொடர் ஆரம்பம். திருமுருகன், திருச்செல்வனுக்கெல்லாம் நான் அடுத்தபோட்டியாளர்னு மண்டபத்துல பேசிக்கிறாங்க இல்ல? அதனால தான். அக்காவோட நியுஸிலாந்து பற்றிய பகுதிகளின் பாதிப்பு நிறைய இருக்கும் பொறுத்துக்கோங்க.
முதல்ல சில பாக்ட்ஸ் - சி.ஐ.ஏ விலிருந்து...
உலகின் மிகப்பெரிய நாடு. மொத்த நிலப்பரப்பு: 16,995,800 சதுர கி.மீ (ஒரு ஒப்பீடுக்காக இந்தியாவின் நிலப்பரப்பு : 2,973,190 சதுர கி.மீ. அமெரிக்காவை விட ஒன்றேமுக்கால் மடங்கு பெரியது. ஐரோப்பா, ஆசியா ஆகிய இரு கண்டங்களிலும் இருக்கிறது)
ரோசியா - Россия [Rossiya] / Russia என்பது ஷார்ட் பார்ம்.
லாங் பார்ம்னா Российская Федерация [Rossiyiskaya Federatsiya] / Russian Federation
அரசியலமைப்பு: federation
ஜனாதிபதி: விளாடிமீர் விளாடிமீரோவிச் பூடின் / Владимир Владимирович Путин (Vladimir Vladimirovic Putin)
பிரீமியர்: மிஹாயில் எபிவோவிச் ப்ராட்கோவ் / Михаил Эфимович Фрадков (Mikhail Yefimovic Fradkov)
இணைப் பிரிமீயர்: அலெக்ஸாண்டர் டிமிட்ர்யேவிச் ஷுகவ் / Александр Дмитревич Жуков (Aleksandr Dmitreyevic Zhukov)
சுதந்திர தினம்: 24 ஆகஸ்ட் 1991
தேசிய தினம்: 12 ஜூன்
தலைநகரம்: மஸ்க்வா / Москва [Moskva] / Moscow
மற்ற முக்கிய நகரங்கள்: சான்க்ட் பீட்டர்புர்க் ( Saint Petersburg), நோவோசிபிர்ஸ்க் (Novo Sibirsk), வ்ளாடிவோஸ்டாக் (Vladivostok), துலா (Tula), வோல்காகிராட் (Volgograd), ரோஸ்டோவ் (Rostov), த்வேர் (Tver), நீஷ்னி நவ்கோரத் (Nizhny Novgorod)
மக்கள்தொகை: 143,420,309 (ஜூலை 2005)
மக்கள்தொகை வளர்ச்சி விகிதம்: -0.37% (2005 est.)
மொழி: ரஷ்யன் : எழுத்து: சிரில்லிக் (Cyrillic)
படிப்பறிவு: ஆண்கள் - 99.7%; பெண்கள்: 99.5%
பணவீக்கம்: 11.5%
பணம்: ரூபிள்ஸ் - Rubles = 28.5 ரூபிள்ஸ் / US$
தொலைபேசி இலக்கம்: 7
மாஸ்கோ: +7-095
செயிண்ட் பீட்டர்புர்க்: +7-812
வலை இலக்கம்: .ru
பயிர் செய்யப்படக்கூடிய நிலப்பரப்பு: 7.33%
permanent crops: 0.11%
other: 92.56% (2001)
சீதோஷ்ண நிலை: sub tropical லிருந்து sub arctic வரை
உயரமான இடம்: கோரா எல்ப்ரஸ் (ஐரோப்பாவின் மிக உயர்ந்த இடம்)
மதங்கள்: Russian Orthodox, Muslim, மற்றவை
இரயில்வே - மொத்தம்: 87,157 km
அகலப்பாதை: 86,200 km ஐரோப்பிய அளவு (40,300 கிமீ மின்சாரமயமாக்கபட்டவை)
நெடுஞ்சாலை: paved: 362,133 km
எண்ணெய் வளங்கள்: proved 69 billion bbl
இயற்கை வாயு: proved 47 trillion cu m (2003)
ஏற்றுமதி: $162.5 billion
ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள்: பெட்ரோலியப் பொருட்கள், கனிமங்கள், ரசாயனப் பொருட்கள், இராணுவ தளவாடங்கள்
மொத்தக் கடன்: $169.6 billion
வேலையில்லாதோர்: 8.3%
GDP: purchasing power parity - $1.408 trillion
முக்கிய படைகள்: Ground Forces (SV), Navy (VMF), Air Forces (VVS); Airborne Troops (VDV), Strategic Rocket Troops (RVSN), and Space Troops (KV) are independent "combat arms," not subordinate to any of the three branches
ரிசர்வ்-களையும் சேர்த்து available ஆட்படை: 18-49 வயதுக்குட்பட்ட ஆண்கள்: 35,247,049 (2005 est.)
17 வயதிலிருந்து ஆண்களுக்கு இரண்டு ஆண்டுகள் கட்டாய மிலிட்டரி recruitment
கைத்தொலைபேசிகள் எண்ணிக்கை: 17,608,800 (2002)
--
சரி, படிச்சு போரடிச்சிடுச்சா? இவ்வளவு பெரிய ரஷ்யாவிற்கு நான் வந்தது 1998-ல். அன்றிலிருந்து இங்கு தான் வாசம். நான் சென்ற முக்கிய நகரங்கள்னு பார்த்தா மஸ்க்வாவும், செயிண்ட் பீட்டர்ஸ்புர்க்கும் தான். இரும்புத்திரையின் பின்னாலிருந்த ரஷ்யா சோவியத் யூனியன் உள்நாட்டு போரில் சிக்கி உடைந்து, பல துண்டுகளாகி இன்று ரஷ்யா மீண்டும் தலைநிமிரும் நேரம். 98-ல் ஏற்பட்ட economic depression-ஐயும் சமாளித்து, ஜனநாயகத்திற்கு சில காலம் வேட்டு வைத்து, தன் படைபலத்தினால் மற்ற நாடுகளை மிரட்டி, இன்னமும் உலக அரங்கில் ஒரு முக்கிய உறுப்பினராக திகழ்கிறது: இதெல்லாம் நான் இருந்த காலத்தில் நடந்தது. ஏதோ ரஷ்யாவில் நான் பார்த்தவை நினைப்பவை நடப்பவை பற்றியே இந்தத் தொடர்.
(தொடரும்)
இரும்புத்திரைக்கு பின்னாலிருந்து - 1: some facts
Subscribe to:
Post Comments (Atom)
14 Comments:
வாங்க JSri,
முததடவையா வந்திருக்கீங்க..
--
விளம்பரதாரர் இடைவேளை..
என் முந்திய தொடர்கள் படிச்சிப் பாருங்க..
மருதைக்கு போலாமா - 1, 2, 3, 4, 5, 6
குத்தாலம் போன கதை - 1, 2, 3, 4
விளம்பர இடைவேளை முடிந்தது.. :)
--
தொடர்ந்து வாங்க..
நன்றி
மு.க. கஜினி காம்கி,
நம்ம தொடர் ஐடியலெல்லாம் துளசியக்காதான். குட்டித்தொடரெல்லாம் முன்னாடியே எழுதியாச்சு. இது நிஜ மெகாத்தொடர். ஏழு வருஷ அனுபவம் இருக்கே!
தொடர்ந்து வாங்க. உங்க பதிவிற்கு கண்டிப்பா வரேன்.
நன்றி
அக்காவுக்கேத்த தம்பி.
இப்படித்தான் ஆரம்பத்துலேயே 'புள்ளீவிவரமா' அடிச்சுவிட்டு ஒரு 'பிரமிப்பைக்' கொடுத்துரணும். ஜனங்க அலறிக்கிட்டே ஓடிவரணும் படிக்கறதுக்கு.
தலைப்பு நல்லா இருக்கு. இரும்புத்திரையைக் கொஞ்சம் கொஞ்சமா உடைச்சுக்கிட்டு எங்களையெல்லாம் நாட்டுக்குள்ளெ கொண்டுபோய் காமிங்க.
வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன்,
அக்கா
நன்றி அக்கா,
//இப்படித்தான் ஆரம்பத்துலேயே 'புள்ளீவிவரமா' அடிச்சுவிட்டு ஒரு 'பிரமிப்பைக்' கொடுத்துரணும். ஜனங்க அலறிக்கிட்டே ஓடிவரணும் படிக்கறதுக்கு//
அதான் ட்ரை பண்ணேன். பலரும் அப்டியே ஷாக்காகி இருக்காங்கன்னு பின்னூட்டம் போட்டவங்க எண்ணிக்கையிலேயே தெரியுது! :)
அப்படியே சைபீரிய தனிமை சிறை பற்றியும் எழுதும் !
:-)
ஸ்புட்னிக் பத்திரிக்கையின் வழவழத் தாள்களைப் பார்த்து, ஒரு கஷ்டமான பாய்லர் டிசைன் பற்றி ரஷ்யன் தெர்மோடைனமிக்ஸ் புத்தகத்தைப் பார்த்துக் குழம்பி - எனக்கும் ரஷ்யாவிற்கும் உள்ள அறிமுகம் இவ்வளவே. உங்கள் தொடரைப் படிக்க ஆவலுடன் இருக்கிறேன்.
எந்த சீரியலையுமே முதல் எபிசோடில் பார்ப்பதை விட கொஞ்சம் பிக்-அப் ஆனபிறகு பார்ப்பதுதான் உசிதம். எனவே, காத்திருக்கிறேன்.
"சுதந்திர தினம்: 24 ஆகஸ்ட் 1991"
யாரிடம் இருந்து சுதந்திரம் பெற்றார்கள்? விளக்கமாக எழுதுங்களேன்
ராமநாதன்,
எழுதுங்க. படிக்க காத்திருக்கிறோம். ரஷ்யா என்னும் மாய உலகைப் பற்றிய நிஜம் அறிய பலருக்கும் ஆர்வமிருக்கும். மேலும் அங்கு நம்மைப் போன்ற இந்தியர்கள்
வாழ்வதற்கு, படிப்பதற்கு, ஆகும் செலவுகள் (சிங்கை, மலேசியா, அமீரகம், அமெரிக்க,
ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடும்போது), அங்குள்ள வசதிகள், வசதியின்மை, சுதந்திரம், பாதுகாப்பு குறித்தும் எழுதுங்கள்.
- அலெக்ஸ்
(1)கோர்பச்சேவ் செய்தது சரியா? அது அவர் ஒருவராலேயே செய்யப்பட்ட விதயமா? C.I.A.கூட்டு ஏதும் உண்டா?
(2)U.S.S.R.வீழ்ந்ததும் பொருளாதாரமும் வீழ்ந்ததே; எப்படி? அதற்கு முன்பு எப்படியிருந்தது?
இதைப் பற்றி எழுத முடியுமா? தடையேதும் எந்த வடிவத்திலும் வருமா?
Ayn Rand-ன் கதை மூலம் பழைய ரஷ்யாவைப் பத்திக் கொஞ்சம் தெரியும் - ஆனாலும் அதில் எவ்வளவு உண்மை; எவ்வளவு கதை என்பது தெரியாது.
சின்னவரே,
எழுதறேன்.. முன்கூட்டியே தெரிஞ்சுவச்சுகறது நல்லதுதானே!
நன்றி பினாத்தல் சுரேஷ்.
குமரேஸ் மற்றும் தருமி,
உங்க கேள்விகளுக்கு விடை இன்றைய பதிவிலிருக்கிறது. முதலில் அரசியல் எல்லாம் வேண்டாமென்று நினைத்தேன். அப்புறம் தொடர் ஆரம்பிச்சிட்டு, எதுக்கு விடணும்னு தோணிச்சு. அதுக்கு வாகா, நீங்க இரண்டு பேரும் கேட்டுட்டீங்க..இது போறுமே :))
அலெக்ஸ்,
கண்டிப்பா எழுதறேன்.
நன்றி!
செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் எனக்கு பிடித்த இடங்களில் ஒன்று, மாஸ்கோ to செ.பீ எவ்வளவு தூரம் ராமனாதன் , அடுத்த பயணத்தின் போது முடிந்தால் செ.பீ -ல் சந்திக்கலாமே !
WoW...I came to ur blog very late..but its very intersting to know about Russia. Thanx so much for ur effort and keep going..wanna read more
Thanx
Kamalkanth
Post a Comment