Showing posts with label நிழற்படம் / Photos. Show all posts
Showing posts with label நிழற்படம் / Photos. Show all posts

238. பீட்டரின் கோர்ட்டில்... - 1

ஊர்பொறுக்கி பலநாளாகிவிட்டபடியால் எங்காவது ஒரு குட்டி பிக்னிக் போவோமென்று நினைத்திருந்த நேரத்தில் பீட்டரின் கோர்ட்டிலிருந்து சம்மன்ஸ் வந்திருப்பதாக நண்பர் சொன்னார். என்ன கோர்ட், எதுக்கு சம்மன் அப்படினு ஒரு பக்கம் இருந்தாலும், போகாமல் இருக்கமுடியாது என்ற காரணத்தால் ஞாயிறன்று கிளம்பினோம்.

சபர்பன் ரயிலில் 40 நிமிடப் பயணம். அங்கே எல்லாமே டூரிஸ்ட் ரேட்டில் இருக்கும் என்று கேள்விப்பட்டிருந்த படியால், இங்கேயே மூட்டை முடிச்சு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் (அதாவது ரொட்டி, சீஸ், சாலட் இன்னபிற) கட்டிக்கொண்டு சென்றோம்.

ஊரின் பெயர் Peterhof. டச்சு மொழியில் பீட்டரின் கோர்ட் (court) என்று அர்த்தம். ரஷ்யாவின் வெர்ஸாய் என்றும் அழைக்கப்படும் ஊர் இது. சுமார் நூற்றைம்பது நீரூற்றுகளும் (fountains) நான்கு தொடரூற்றுகளும் (Cascades) என அமர்க்களப்படுத்தும் இவ்வூரின் அரண்மனைகள் 'தண்ணி வச்சு காட்டும் வித்தைக்கு' நிகராக வேறொன்றை பூலோகத்தில் காணவியலாது என்று பில்டப் நிறையவே கொடுத்திருந்தார்கள்.

ரயில் நிலையத்தில் இறங்கினால் பேருந்துகள் அனைத்திலும் fountains என்று அடைமொழியில் எழுதிவைத்திருக்கிறார்கள். பத்துநிமிடத்தில் ராட்சத வாயிற்கதவுகளின் அருகில் எங்களை இறக்கிவிட்டார்கள். கடலை, சிப்ஸ், பாப்கார்ன் அதோடு வெகுநாளைக்குப் பிறகு பஞ்சுமிட்டாயும் (அநியாயம் என்னவென்றால் ஒரு மிட்டாய் 1 யூரோ! எனக்கு நம்மூர் எக்ஸிபிஷனும் பீச்சும் நினைவுக்கு வந்து தொலைத்தது) என தயாராய் வைத்திருந்த வஸ்துக்களோடு அரண்மனை காம்ப்ளெக்ஸினுள் நுழைந்தவுடன் வாயைப்பிளந்தபடி எடுத்த படம் இது...


Midway Fountainஇது முதலில் வரவேற்கும் Midway fountain

அரண்மனைக்கட்டிடம் வரையிலான இத்தோட்டத்திற்கு Upper Gardens என்று பெயர். இதைச்சுற்றி ஒரு ரவுண்ட் வந்தபடியே அரண்மனையை நோக்கி நடக்கத்தொடங்கினோம். அடுத்து வந்தது 92 மீட்டர் நீளமும் 33 மீட்டர் அகலமும் கொண்ட பிரம்மாண்டமான Neptune Fountain.

Neptune FountainNeptune Fountain நடுவில்.. வேற யாரு? Neptune தான்...

ஜெர்மன் முறைப்படி அமைக்கப்படிருக்கும் இந்த நீரூற்று ஜெர்மனியால் இரண்டாம் உலகப்போரின் போது திருடப்பட்டு பின்னர் முக்கால்வாசி மீட்கப்பட்டு - என பீட்டர்ஸ்பர்கின் வரலாற்றுச்சின்னங்கள் அனைத்திற்குமான common வரலாறு இதற்கும் உண்டு.

நெப்ட்யூனைத்தாண்டினால் வந்தது Oak Fountain.
Oak Fountain
இந்த அப்பர் தோட்டம் ஜுஜுபி என்பது போலவும் அரண்மனைக்கு பின்னாலிருக்கும் லோயர் தோட்டம் தான் சுந்தரமானது என்றும் கூகிளாண்டவர் சூடமடித்து சத்தியம் செய்திருந்ததால் அதனை நோக்கி நடக்கத்தொடங்கினோம்.

எல்லாருக்கும் ஏற்படும் வலமா இடமா பிரச்சனையில் அதன் அரசியல்களை விலக்கி - அப்போதைக்கு அரண்மனைக்கு வலது பக்கமே செல்வது என்று ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது.

திரும்பிய திசை அப்படியொன்றும் மோசமானதில்லை என்று ஆறுதலளிப்பது போல வரவேற்றது Fountain of the Square Pool.

Fountain of the Square Poolsஇதைத்தாண்டினால் வலதுசாரி என்பது எப்போதுமே கரடுமுரடானதல்ல என்பதாக அரசியல் பேசும் பாதை
The Righteous Path!

கீழெயுள்ள படத்தில் அரண்மனைக்கு மேலே இருப்பது Upper Gardens-ம் நாம் இதுவரை பார்த்த நீரூற்றுகளும். கீழே இருப்பது தான் Lower Gardens. அதைப்பற்றி அடுத்த பகுதியில்...

A View from the Top
பிகு: கடைசி படம் மட்டும் வலையில் சுட்டது

(தொடரும்)

220. தொடரில் தனியாய்...

புதுசா ஏதோ புகைப்படத் தொடராமே... அதுக்கு நம்ம கொத்ஸு நான் படம் போடணும்னு சொல்லிருந்தாரு. நமக்கு நாமே சான்ஸ் கிடச்சா விடற கோஷ்டியா நாம?

அதுக்கு முன்னாடி ரூல்ஸ்:
<$quote:baba$>
அதாகப்பட்டது என்ன செய்யவேண்டுமென்றால்...
1. கடந்த வருடத்தில் எடுத்த புகைப்படம் ஒன்றை இடவேண்டும்.
2. எதுவாக இருந்தாலும் ஒகே. கலையுணர்ச்சி, PIT நுட்ப சிறப்பு, சொந்த ஃபீலிங்ஸ்... சரிதான்.
3. ஏன் அந்தப் படம் ரொம்ப இஷ்டம் என்பதை சொல்ல வேண்டும்.
<$/unquote:baba$>

கைவசம் இருக்கும் படத்தில் இதுதான் தேறிச்சுனு நான் சொன்னாக்க... எப்படியும் உங்கள்ல ஒரு நாலு பேராவது பாவம், இன்னும் நல்லா எடுத்திருக்கான் போலிருக்கு பையன் ஆனா துரதிருஷ்டம் கைவசம் இல்லியேனு பாவப்படுவீங்கன்னு அந்த பிட்டையும் போட்டுக்கறேன்.

இது எடுத்த இடம்: Pavlovsk அப்படிங்கற ஊர். மன்னர்களோட கிராமம்னு ஒரு போஸ்ட் போட்டேனே அந்த ஊர் பக்கத்துல இருக்கறது இது. அரண்மனையெல்லாம் ஜோரா இருந்தாலும், அதோட இருக்குற இந்த காடு தான் (காடுனு சொன்னா பொருள் மாறறா போல இருக்கு. இது பார்க்). நாங்க போன அன்னிக்கு நல்ல மேகமூட்டம் லேசான தூறல்னு நாள் புல்லா சூரியன் வராம டகால்டி கொடுத்திகிட்டிருந்தாரு. ஜில்லுனு நீராகாரத்தோட சுடச்சுட பார்பக்யூ ஐட்டங்கள ஒரு கட்டு கட்டிட்டு அப்படியே அந்த நாள் பூரா காலாற நடந்த சுகம் வாழ்நாளுக்கும் மறக்க முடியாதது. அப்படியொரு அமைதி.





மேலதிக விவரம்:விக்கிபீடியா
படிக்காம படம் மட்டும் பார்க்க இங்க போங்க.
------------------------------------------------------------------------------------
ஒரே படத்தோட முடிச்சா உப்புமா சாப்பிட வந்த உங்களுக்கு நான் பண்ணும் துரோகமில்லியா?

அதுனால அடுத்த படம்.



பார்க்க அழகா இருந்தாலும் இதப்போட வேண்டிய அவசியமென்னனு நீங்க கேக்கறதுக்கு முன்னாடி முன்கதை சுருக்கம்.

இந்த பிள்ளையார் கோயில் generic தெப்பக்குளத்துல நானும் நண்பர்களும் கல்லெல்லாம் எறிஞ்சு விளையாடிகிட்டிருந்தோம். அப்ப அந்தப் பக்கம் வந்த பெரியவர் தம்பிகளா இது என்ன குளம் தெரியுமான்னார். நாமதான் வரலாறுல புலிகளாச்சே... அவரே எங்க வழிசல பார்த்து பாவப்பட்டு் என்ன குளம்னு சொன்னோன எங்களுக்கெல்லாம் ஒருமாதிரி போச்சு.

இது இருக்குற ஊரு திருவையாறு. ஐயாறப்பன் கோயிலுக்கு பின் சந்தில் இருக்கும் ஒரு பிள்ளையார் கோயில் வாசலில் இருக்கு. திருநாவுக்கரசர் இமயமலையை நோக்கி போன போது உடல் தளர்ந்து வழியில் விழுந்தார். அப்போ அந்தப் பக்கமா வந்த ஒரு பெரியவர் இவரப்பார்த்து பரிதாபப்பட்டு ‘நீங்க இமயமலைக்கெல்லாம் இந்த வயசுல போகமுடியாது. அதுக்கு பதிலா பக்கத்தில் இருந்த குளத்தில் முங்கி எழுந்திருங்க'னு சொன்ன உபாயத்தால் அருகிலிருந்த குளத்தில் அப்பர் குதிக்க, அடுத்த நொடி அங்கேயிருந்து நேரா திருவையாத்துல இந்தக்குளத்துல தான் எழுந்தார் அப்பர். அதோட முடிஞ்சா பரவால்லியே...

எழுந்த அப்பருக்கு உமையாளோடு சிவபெருமான் காட்சி கொடுத்த திருக்குளம் இதுதான்.

அப்பேர்ப்பட்ட புண்ணியத்தீர்த்தத்திற்கு என் கைங்கர்யமாக கல் எறிந்தது ... என்ன சொல்றது.. இதெல்லாம் சகஜமப்பானு நினச்சு விட்றவேண்டியதுதானில்ல?

எழுந்து பாடின பதிகம் ஒண்ணும், சம்பந்தமான வீடியோ ஓண்ணும்... என்சாய்..

மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது
காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன்
கண்டே நவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்!

- திருநாவுக்கரசர்


-----------------------
அடுத்து ஆட்டத்துக்கு யாரக்கூப்பிடறது?
1. ஸ்காட்லாந்து போய் காய்ச்சினவரு

2. செப்புப்பட்டயத்துல விளாசுறவரு

3. A Tiger in Africa? :))

207. நன்றி! மீண்டும் தருக!

தொண்டர்கள் மனமுவந்து கொடுத்த ஒவ்வொரு ரூபாய் நன்கொடையைக் கொண்டு வாங்கிப்போட்டிருக்கும் வீட்டின் புகைப்படங்கள் சில.

1. A fine mantlepiece

2. The Italian Hall

3. The Main Staircase

4. The Flemish Hall

5. An exquisite door

6. The Dutch Hall

7. The Greeks and their Statuettes

7. Adonis and Cupid

இதை வாங்கறதுக்கே நிதி மொத்தமும் செலவாயிட்டதால, என் இனமானத் தொண்டர்களே!

இதோடு சோர்ந்துவிடலாமா? இன்னும் உங்களின் அன்புக்குரிய கட்சியின் உப தலைவர் மவுண்ட் ரோடில் டிவி ஸ்டுடியோ மற்றும் ஆபீஸ் தொடங்க வேண்டாமா? லண்டனில் ஹோட்டல் வாங்க வேண்டாமா? பாண்டிச்சேரியில் மெடிகல் காலேஜ் கட்டவேணாமா?

ஆதலால் பொங்கியெழுங்கள். நிதி சுருட்டுங்கள்.

நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாய்க்கும் முன்கூட்டி இப்பவே என் நன்றி! நன்றி! நன்றி!

------

பி.கு:1. காசோலைகள் மற்றும் வரைவோலைகளை நேரடியாக என் பெயரிலேயே அனுப்பிவைக்கலாம்.

2. நீங்கள் திரட்டித்தரப் போகும் கட்சி உப தலைவர் சுகவாழ்வு நிதிக்கு இன்கம்டாக்ஸ் வரிவிலக்கு கிடையாது.

---------

ஹெர்மிடாஜின் படங்கள் மேலும்

207. நன்றி! மீண்டும் தருக!

தொண்டர்கள் மனமுவந்து கொடுத்த ஒவ்வொரு ரூபாய் நன்கொடையைக் கொண்டு வாங்கிப்போட்டிருக்கும் வீட்டின் புகைப்படங்கள் சில.

1. A fine mantlepiece

2. The Italian Hall

3. The Main Staircase

4. The Flemish Hall

5. An exquisite door

6. The Dutch Hall

7. The Greeks and their Statuettes

7. Adonis and Cupid

இதை வாங்கறதுக்கே நிதி மொத்தமும் செலவாயிட்டதால, என் இனமானத் தொண்டர்களே!

இதோடு சோர்ந்துவிடலாமா? இன்னும் உங்களின் அன்புக்குரிய கட்சியின் உப தலைவர் மவுண்ட் ரோடில் அண்ணா சாலையில் டிவி ஸ்டுடியோ மற்றும் ஆபீஸ் தொடங்க வேண்டாமா? லண்டனில் ஹோட்டல் வாங்க வேண்டாமா? பாண்டிச்சேரியில் மெடிகல் காலேஜ் கட்டவேணாமா?

ஆதலால் பொங்கியெழுங்கள். நிதி சுருட்டுங்கள்.

நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாய்க்கும் முன்கூட்டி இப்பவே என் நன்றி! நன்றி! நன்றி!

------

பி.கு:1. காசோலைகள் மற்றும் வரைவோலைகளை நேரடியாக என் பெயரிலேயே அனுப்பிவைக்கலாம்.

2. நீங்கள் திரட்டித்தரப் போகும் கட்சி உப தலைவர் சுகவாழ்வு நிதிக்கு இன்கம்டாக்ஸ் வரிவிலக்கு கிடையாது.

---------

ஹெர்மிடாஜின் படங்கள் மேலும்

205. வந்தேன் வந்தேன்! மீண்டு(ம்) நானே வந்தேன்!

ஒரு மாசமாவது தமிழ்மணம் மற்றும் தமிழ்வலைப்பதிவுலக பக்கமே எட்டிப்பாக்காம இருந்தா பைத்தியம் பிடிக்குதா இல்லியான்னு செஞ்சுகிட்ட சுயபரிசோதனை எக்ஸ்ட்ராவா அப்படி ஒரு மாசம் இருந்தும் பைத்தியம் பிடிக்காம தோல்வியில் முடிஞ்சே விட்டது. இதுக்கு நடுவுலே மோகன்தாஸைத் தவிர வேற ஒருத்தர் கூட 'ஏண்டாப்பா எழுதறத விட்டுட்டே'ன்னு கேட்காததிலிருந்து எல்லாருக்கும் என்னோட தாக்கம் நிறைஞ்ச எழுத்துகளக் கண்டு பொறாமை என்பதையும் அனைவரும் 'இவன் எப்ப போவான் திண்ண எப்ப காலியாவும்'னு காத்திருந்தா மாதிரியே மவுனம் காத்த விதத்தை மறப்போம் மன்னிப்போம் வகையறாவில் சேர்த்து....

கடைசியில்... எவ்வளவு நாட்களுக்குத்தான் அறிவார்ந்த தெளிந்த அனாலிஸெஸ்கள் மூலம் சமூகத்தை கொத்துபுரோட்டா போட்டு கொத்தி, திடீர் சீர்த்திருத்த இடியாப்பம் இடித்து மற்றும் இன்னபிற ஆத்மவிசாரங்களை மத்தவங்க எழுத - நான் படிக்கிறது? இப்படி ஒன்சைடடா போறதவிட டூப்பு விட்டாவது டூப்ளே ஆக்கணும்னு அதெல்லாத்தையும் ஒண்ணு ரெண்டு மூணுன்னு சிவாஜி மாதிரி கவுண்ட் வச்சுகினு இப்போ ரிட்டர்ன் பண்ண வந்தாச்சு.

இன்னும் ஆயத்தப்பணிகள் நடந்து கொண்டிருக்கிறதென்றபடியால், இப்போதைக்கு படம் மட்டும் போட்டு கிளம்பறேன். தெரியலேன்னு புலம்ப மீண்டும் ப்ளாக்கர் பகவான் அருளென்றென்றைக்கும் தடையின்றி இருக்குமென்று பணிவுடன் வேண்டியபடியே இதோ படங்கள்.
வழக்கம்போல் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் படங்கள்.


1. The Winter Palace



2. Kazanskiy Sobor



3. View from the Fontaka Most


4. The Throne Room


5. The Room of the Russian Generals


6. REDRUM The Red Room


7. The Marble Hall


8. The Golden Room


9. The Corridor


டிஸ்கி: உப்புமாவுக்கு டிஸ்கி செக்ஷன் இல்லேன்னா ரிஸ்கி. அதனால சம்பிரதாயத்துக்காக இது.

174. பூச்சி காட்டட்டுமா?

காமிரா வச்சுருக்கவங்க எல்லாரும் அப்பப்போ மாக்ரோ எடுத்து அலட்டறது வழக்கம். நான் மட்டும் விதிவிலக்கா என்ன? இதோ சில பூச்சீஸ்.

கைல எடுக்கறது பிடிக்காதுன்னாலும், பூச்சீஸ காமிரால்ல எடுக்க ரொம்பவே பிடிக்கும். எத்தன வண்ணங்கள் எத்தனை டிஸைன்கள்னு கணக்குவழக்கே இல்லாம படைச்சு வச்சுருக்கான். பூச்சிகள்னு சொன்னாலே பலருக்கு ஏதோ தங்க கைல தான் ஏதோ நெளியறாப்போல இருக்கும். ஆனா பாருங்க, அதுங்க இருக்கறது ஒரு தனி உலகம். honey i shrunk the kids னு அந்தக் காலத்துல ஒரு குழந்தைங்க படம் உண்டு. சைண்டிஸ்ட் அப்பா எதையோ செய்யப்போக குழந்தைங்க எல்லாம் அரிசி சைஸுக்கு ஆயிடுவாங்க. டினோசார் மாதிரி கட்டெறும்புகளும், திமிங்கிலம் மாதிரி கரப்பான்பூச்சிகளும், பெரிய பெரிய மரங்கள் மாதிரி புற்களும்னுட்டு பயங்கர தமாஷா இருக்கும்.

பூச்சிகளும் நாமளும் ஒரே பூமியில இருந்தாலும் நம்ம கண்ணுக்குத் தெரியாத உலகம் அதுங்களோடது. வீட்டுத் தோட்டத்துக்கு போய் ஒரு அஞ்சு நிமிஷம் நின்னு சுத்தி முத்தி பாத்தா தான் தெரியும். இக லோகம் பரலோகம் மாதிரிதான் தத்துவார்த்தமா சொன்னாக்க. நின்னு கவனிச்சாத்தான் கண்ணுக்கே புலப்படும். அவசர வாழ்க்கையில எங்க இருக்கு நேரம்?னு சலிச்சுக்கறீங்களா.. ஹூம்.. என்ன செய்ய..

அரேபிய பாலைவனங்களா, அமெரிக்க வைல்ட் வெஸ்டா, சைபீரியன் பைக்கல் ஏரியா, ஆர்க்டிக் பனிமலைகளா, இந்திய சமவெளிகளா, ஆஸ்திரேலியாவின் டவுன் அண்டரா, பிஜித்தீவுகளா, ஆப்பிரிக்க காடுகளா, ஸ்காண்டினேவியன் பியார்டுகளா, கனேடிய ராக்கீஸா, தென்னமெரிக்க அமேசோனா, கரீபியன் கடற்கரைகளா, மங்கோலியன் ஸ்டெப்பீஸா? எதைப் பார்ப்பது எதைவிடுவது என்று தெரியாமல் எத்தனை ஆயிரம் ஜென்மம் எடுத்தாலும் பார்த்து முடிக்க முடியாத அளவுக்கு எழிலும் வண்ணமும் கொஞ்சும் உலகத்துல பிறக்க கொடுத்துவச்சுருக்கோம். ஆனாலும் நின்னு நிதானமா ஒரு நொடி ரசிக்கக்கூட முடியாம அப்படி என்னதான் ஓட்டம் வேண்டிக்கிடக்கோ தெரியவேயில்லை. நாமளே ஏற்படுத்திகிட்ட ஓட்டம். எல்லையில்லா ஓட்டமாகி சற்று தள்ளியிருந்து பார்த்தால் கொஞ்சம் சாடிஸ்டிக்காகவும் இருக்கிறது. நாய்க்கு ஒருவேலையும் இல்லையாம், அலைச்சலுக்கு மட்டும் குறைச்சலும் இல்லையாம் னு சொல்ற மாதிரி ஒரு ஓட்டம்.

நான் என்னவோ எழுதிக்கிட்டிருக்கேன். நீங்களும் கடனேன்னு படிச்சுகிட்டிருக்கீங்க. இத்தோட ஸ்டாப்பு. இனி படம் மட்டும் பாருங்க.

























175. கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு

கார்த்திகை மாதம் திங்கட்கிழமைகளில் விரதமிருந்து சிவபெருமானுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடுவது மிகவும் விசேஷமானது. விரதமிருப்பதும் தீபம் ஏற்றுவதும் பலருக்கு நடப்பதில்லையென்றாலும் கோபுரத்தையாவது தரிசிக்கலாமே.

இதோ சில கோபுரங்கள்:

1. தில்லை நடராஜர் திருக்கோயில்




2. தஞ்சை பிரகதீஸ்வரர் திருக்கோயில்



3. திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வர ஸ்வாமி திருக்கோயில்



4. மங்களாம்பிகா சமேத ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயில், கும்பகோணம்.


கும்பகோணம் என்ற பெயர் வரக்காரணமான ஈசன். பிரளய காலத்தின் போது மண் குடத்தில் அமிர்தம் மகாமேருவில் இருந்து உருண்டு வர, அதை வேட ரூபம் கொண்டு அம்பெய்தி உடைத்தார் பரமேஸ்வரன். அந்த உடைந்த குடம் தங்கிய இடமே குடந்தை ஆனது. வழிந்த அமிர்தமே மகாமக குளமானது என்று ஐதீகம். இங்கேயுள்ள சிவலிங்கத்தின் மேல் மண் குடத்தின் கலசம் சாய்ந்தாற்போல் கோணலாக இருப்பதால் கும்பகோணம் என்ற பெயர் பெற்றது.

5. திருச்சேறை ஞானாம்பிகை சமேத செந்நெறியப்பர் (சாரபரமேஸ்வரர்) ஸ்வாமி திருக்கோயில்






திருச்சேறை சாரபரமேஸ்வரர் மற்றும் ரிண விமோசன லிங்கேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சாரநாதஸ்வாமியும் கால பைரவரும். இத்தலம் கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் நாச்சியார்கோயிலுக்கு அப்பால் உள்ளது. ஓரே ஊரில் சாரநாதப் பெருமாளும், சாரநாதஸ்வாமியும் எதிரெதிர் கோயில்களில் உள்ளனர்.

கடன் தொல்லை நிவர்த்திக்கென தற்போது மிகவும் பிரபலமடைந்து வருகின்றது இந்த சிவன் கோயில். நாங்கள் தேடிய வரையில் மார்க்கண்டேயரின் பிறவிக்கடனை நிவர்த்தி செய்த சிவலிங்கம் என்று மட்டுமே தலவரலாற்று புத்தகத்தில் இருந்தது. ஆயினும் நமக்கு பிறவிக்கடனை பற்றி தற்போது என்ன கவலை? கவலையெல்லாம் வங்கிகளில் இருக்கும் கடனைப் பற்றிதானே. அதற்கு பதினோரு திங்கட்கிழமைகள் அர்ச்சனை செய்து இச்சிவனை வழிபட்டால் நிவர்த்தியாகும் என்று நம்பப்படுகிறது. நேரில் வர இயலாதவர்கள் "செயல் அலுவலர், அ/மி சாரபரமேஸ்வரர் திருக்கோயில், திருச்சேறை - 612605, கும்பகோணம் தாலுக்கா" என்ற விலாசத்திற்கு ரூ. 165 மணியார்டர் அனுப்பினால் அர்ச்சனை செய்து பதினோரு வாரங்களுக்கு பிரசாதம் அனுப்பப்படும் என்று எழுதிவைத்துள்ளார்கள். தொலைபேசி: 0435-2468001

இங்குள்ள காலபைரவருக்கு என்ன விசேஷமென்றால் தமிழ்நாட்டில் திருநாவுக்கரசரால் தேவாரப்பதிகம் பாடப்பெற்ற ஒரே பைரவர் இவர்.

6. கண்ணபிரான் ரவிசங்கருக்காக சாரநாயகி சமேத சாரநாதப் பெருமாள் கோயில், திருச்சேறை



169. சில புகைப்படங்கள்

மறுபடியும்...

சிலர் இது என்ன கோயில் என்பது போலக் கேட்டிருக்கிறார்கள். அவர்களுக்காக: இது தஞ்சாவூரில் உள்ள இராஜ இராஜேச்சுரம் என்று அழைக்கப்படும் தஞ்சைப் பெரிய கோயில்.

இறைவன்: பெரிய நாயகி (எ) பிரஹன்நாயகி உடனுறை பெருவுடையார் (எ) பிரகதீஸ்வரர்



1. நடராஜர் சந்நிதிக்கு அருகிலிருந்து. நந்தி மண்டபம் foregroundஇல்.



2. நாட்டிய அரங்கேற்றத்துகென்று இருக்கிற மேடையிலிருந்து - பிரசாதக் கடைப் பக்கத்தில் என்று சொன்னால் சிலருக்குத் தெரிந்திருக்கலாம்.



3. ஆஞ்சநேய சுவாமி சந்நிதியிலிருந்து - பிக்காஸாவில் நிறைய பிஸ்கோத்துவேலை செய்து கலரே மாறிவிட்டது.



4. நுழைந்தவுடன் இடதுபுறத்தில் இருக்கிற இராகு சந்நிதி அருகிலிருந்து (a)


5. கால்நடை மருத்துவமனை அருகிலிருந்து (b)



6. மேம்பாலத்திலிருந்து (c)




----------------
(a) இவ்வளவு பெரிய கோயிலில் நவக்கிரகங்கள் கிடையாது. ஆனால் பிரம்மாண்ட இராகு பகவான் மட்டும் உண்டு, இரண்டாவது கோபுரத்தைத் தாண்டிய உடனே அக்கோபுரத்திலேயே பெருவுடையாரைப் பார்த்தபடி இருக்கிறார் இராகு. இராஜ இராஜனுக்கு சதய நட்சத்திரம் என்பதால் அதன் அதிபதியான இராகுவை மட்டும் ஸ்தாபிதம் செய்திருக்கிறான் என்று ஐதீகம்.

(b) இவ்வழி வெளியூர்க்காரர்களுக்குத் தெரியவாய்ப்பில்லை. சிவகங்கை பூங்கா நுழைவுவாயிலின் வழிவே நுழைந்தால், இடதுபுறம் செல்லும் சாலை ஏ.எஸ்.ஐ ஆபீஸ் தாண்டி நேரே இரண்டாவது கோபுரத்தின் அருகில் சென்று முடியும். இங்கே வண்டிகள் கூட்டமிருக்காது. செருப்பை காரிலேயே விட்டுவிட்டு செல்லலாம். பார்க்கிங் டோக்கனும் கிடையாது. :))

(c) இந்த viewவை மறைத்துத்தான் ராட்சத விளம்பரப் பலகைகள் வைக்கப்போய் சமீபத்தில் சர்ச்சையானது. பலகைக்கான எலும்புக்கூடுகள் இன்னும் மிச்சமிருக்கிறது.

 

வார்ப்புரு | தமிழாக்கம்