சில கூத்துகள்

ஜென்சன், நாராயண் மற்றும் இரான் அதிபர்

BAR Honda வின் ஜென்சன் பட்டன் சொல்லிருக்காரு
"And one week of the month you wouldn't want to be on the circuit with them, would you?"

"A girl with big boobs would never be comfortable in the car."

"And the mechanics wouldn't concentrate. Can you imagine strapping her in?"

சுட்டி
இதப் படிச்சப்பறம் என்ன சொல்றதுன்னு தெரியல..

நூறு ஸ்டார்ட்க்கு அப்புறமும் ஒரு ரேஸ் கூட ஜெயிச்ச பாடில்ல. நடுவுல காண்ட்ராக்ட் பிரச்சனை வேற. 2006 -லேயாவது ஒரு ரேஸாவது ஜெயிக்க வழி செய்யாம, அலட்டலா வாய்ச் சவடால் மட்டும் செஞ்சுருக்கறது தேவையா? பெண்களே இல்லாத விளையாட்டு F1. இருக்கலாம். ஆனா, ஜென்சன் என்ன நினைச்சுகிட்டு பேசுறார்னு புரியவேயில்ல. இவர மாதிரி சில ஆள்ங்களால தான் இன்னும் பெண்கள் F1 இல் இல்லியோ? டானிகா பாட்ரிக் போன்றவர்களுக்கு கண்டிப்பா சான்ஸ் கிடைக்கணும். எப்ப நடக்கப் போகுதோ? எம்மா பார்க்கர் போல்ஸ் சரியான பதிலடி கொடுத்திருக்காங்க. "Oh grow up. If he spent less time staring at grid girls' breasts he might win more races "

------
அடுத்த கூத்து நம்ம நாராயண். நாப்பது கோடி ரூபாய் கொடுத்து டாடாவும், ஜேகேவும் ரொம்ப மெனக்கெட்டாங்க. ஆனா சொதப்பு சொதப்புன்னு சொதப்பிட்டாரு. அடுத்த வருஷம், பணத்துக்காக டப்பா டீம்கள் கேக்கலாம். அதிலேயும் மினார்டி இனிமே இல்ல. ஜோர்டன் கைமாறியாச்சு.

ட்ராக்க விட்டு வெளிய ஓட்ட ரொம்ப பிடிக்கும்போல. சமீபத்திய ரேஸ்களில் எல்லாம் ராலி ட்ரைவர்களுக்கு போட்டியா ஓட்டறாரு மனுஷன். f1 ன்னுக்கு வரத்துக்கு முன்னாடியும் ஒண்ணும் பெரிசா சாதிச்சதில்லங்க்றத நினைவில் கொள்ளவும். எல்லாம் பணம் படுத்தும் பாடு. பெராரி தவிர வேற எந்த டீஸண்ட் டீமுமே பங்கெடுக்காத இண்டி ரேஸில் கூட தன் டீம் மேட்டிடம் தோற்றபோதே இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போச்சு.

ரெட் புல்லோட ரெண்டாவது டீமிற்கும் ஆட்கள் ரெடி. டொயோட்டா, வில்லியம்ஸ் எல்லாம் வெறும் பகல் கனவு. என்ன பொறுத்தவரை, நாராயண் இன்னொரு alex yoong மாதிரி has been. ஆனா, வியாபாரம் தானே. பணம் நிறைய கொடுத்து அடுத்த வருஷம் ஸீட் வாங்கலாம். but he is not F1 material.

இன்னும் பல திறமையான இளம் டிரைவர்கள் சான்ஸ் கிடைக்காம அலைகிறார்கள். ஜப்பானுக்கு சாட்டோ மாதிரி நாராயண் இந்திய விளம்பரத்துக்காக சேர்த்துக்கொள்ளப்படலாம். அதனால் இழப்பு, F1 விசிறிகளுக்கு தான்.

-------
இன்றைய டாப்!
காலையில் பார்த்தவுடனே இதப் பத்தி யாராவது பதிவு செய்திருப்பார்கள்னு நினச்சேன். இல்ல அதனால்.. படிச்சுப் பாத்துட்டு சிரிக்கறதா கவலப்படறதான்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க.

இரானின் புதிய ஜனாதிபதியின் அறிக்கை.

highlight இதுதான்

``no doubt the new wave in Palestine will soon wipe off this disgraceful blot (Israel) from the face of the Islamic world.

``Anybody who recognizes Israel will burn in the fire of the Islamic nation's fury,''

Bloomberg

Al-Jazeera

எங்க போய் முட்டிக்கறது?

7 Comments:

  1. வானம்பாடி said...

    இதுக்கே முட்டிக்கிட்டா எப்படி.. இதைப் பாருங்க.. Bush and Blair will lick your boots
    இப்படி மக்களுக்கு வெறியை ஏத்தி ஏத்தியே பொழப்பை ஒட்டறானுங்க..


  2. rv said...

    சுதர்சன்,
    சுட்டிய பாத்தேன். என்னத்த சொல்றது..


  3. dvetrivel said...

    அய்யா மோண்டயா, அதுததான் அண்ணன் நரேன், வில்லியம்ஸ்-னு பேச்சு அடிபடுதே! அட்த வருஷம் தகுதிச் சுற்று knockout முறையில் நடக்கும் போல கீதே? பாக்க சொல்ல கும்முனு இருக்கும் நயினா!


  4. Sundar Padmanaban said...

    ஒரு பொறுப்பு மிக்க பதவியில் இருந்துகொண்டு இம்மாதிரி விஷப் பேச்சுகளைக் கக்குவது இரான் அதிபருக்கு அழகல்ல. "இப்ப மட்டும் இல்லை. எங்களோட நீண்ட காலக் கொள்கையே இதுதான்"ன்னு ஒரு விளக்கம் வேற.

    பாவம் பாலஸ்தீன அமைச்சர். "பாலஸ்தீனத்தை உலக வரைபடத்தில் சேத்துக்கறதுதான் இரானுடைய நோக்கமா இருக்கணுமேயொழிய, இஸ்ரேலை நீக்குவது இருக்கக் கூடாது. 2002-03 அராப் லீக் சந்திப்புலயே இஸ்ரேல் என்ற தேசத்தை ஒத்துக்கிடாச்சு. பாலஸ்தீனத்தைத்தான் இனிமே உருவாக்க அனைவரும் முயற்சிக்கணும். அமைதிப் பேச்சு நடந்துக்கிட்டு இருக்கும் போது இந்த மாதிரி டயலாக்லாம் விடறதைப் பற்றி இரான் அதிபர் யோசிக்கணும்"ன்னு புலம்பறாரு.

    இந்தப் பக்கம் இஸ்ரேல். அந்தப் பக்கம் மத்த எல்லாரும். நடுவுல இடிபடறது அப்பாவிப் பாலஸ்தீன மக்கள்.

    பாவம் பாலஸ்தீனியர்கள்.

    சுந்தர்.


  5. rv said...

    ஆல்தோட்டபூபதி,
    அத நானும் கேள்விப்பட்டேன். வில்லியம்ஸ் அப்படி ஏதாவது பணத்துக்கு ஆசைப்பட்டு செய்யாம இருந்தா சரி! :(

    //அட்த வருஷம் தகுதிச் சுற்று knockout முறையில் நடக்கும் போல கீதே? பாக்க சொல்ல கும்முனு இருக்கும் நயினா!
    //
    இன்னும் விறுவிறுப்பா இருக்கும்னுதான் நானும் நினைக்கிறேன்.


  6. rv said...

    //ஒரு பொறுப்பு மிக்க பதவியில் இருந்துகொண்டு இம்மாதிரி விஷப் பேச்சுகளைக் கக்குவது இரான் அதிபருக்கு அழகல்ல//

    என்ன நினச்சுகிட்டு பேசினார்னு தெரியல. இதுல அணு ஆயுதங்கள்கறதும் ஈக்வேஷன்ல சேர்ந்தா - பயமா இருக்கு.


  7. rv said...

    சுந்தர்,
    //ஒரு பொறுப்பு மிக்க பதவியில் இருந்துகொண்டு இம்மாதிரி விஷப் பேச்சுகளைக் கக்குவது இரான் அதிபருக்கு அழகல்ல//

    என்ன நினச்சுகிட்டு பேசினார்னு தெரியல. இதுல அணு ஆயுதங்கள்கறதும் ஈக்வேஷன்ல சேர்ந்தா - பயமா இருக்கு.


 

வார்ப்புரு | தமிழாக்கம்