என்னோட 'வந்தாச்சு வந்தாச்சு' பதிவில் போட்டோ போட முடியல. அதனால போன வருஷம் எடுத்த சில படங்கள். எல்லாம் சான்க்ட் பீட்டர்புர்க்கில் எடுத்தது.
1. உறைந்து போன நேவா நதி. சில்ஹவுட்டில் வலமிருந்து இடம். ராஸ்டரெல்லி தூண், இசாக்கியெவ்ஸ்கி கதீட்ரல், அட்மிரால்ட்டி, ஹெர்மிடாஜ் அருங்காட்சியகம்.

2. Church of the Spilt Blood - பின்புறமுள்ள ஒரு பார்க்.

3. Peter and Paul Fortress அருகில் எடுத்தது. பாலத்துக்கு அந்தப் பக்கம் நான் இன்னும் போய்பாத்தில்லை!

4. Summer Garden அருகில் ஒரு canal.

5. Anichkov Palace - அருகில். இடது பக்கம் கொஞ்சமாத் வெள்ளை பில்டிங் தெரியுது இல்லையா? இந்த நதிக்கு பேர் fontanka. இந்தப் பாலத்தின் பெயர் அனிச்கவ் மோஸ்ட் (பாலம்). மிகவும் பிரபலமானது. முக்கிய சாலையான நெவ்ஸ்கி ப்ராஸ்பெக்டில் இருக்கிறது. இந்த பாலத்தில் இருக்கும் நான்கு சிலைகளும் - குதிரையை அடக்கும் வீரர்கள் - ரொம்ப பிரபலம். போட்டோ எடுக்காத டுரிஸ்ட்களே இல்லேன்னு சொல்லலாம்.

3 Comments:
அருமையான படங்கள்.
மயில் பார்க்கலையா?
ப்ரியா அக்கா,
if theres one thing i hate, it is to be on photos! :)
இன்னிக்கு பதில் 'மயில்' போடறேன் உங்களுக்கு. hopefully.
அக்கா.
சாரி, ஒரு நாலஞ்சு நாளா பிஸி. அதான் வெறும் படம் காட்டறேன். இப்போ மயில் அனுப்பறேன்.
Post a Comment