குடிப்பழக்கம் நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடா?

பல நாட்களுக்கு முன்னர் எழுதியது. குடிப்பழக்கம் என்பது தனி மனித சுதந்திரமா என்று சர்ச்சை நடக்கும் வேளையில் மறுபதிவு செய்யலாம் என்று தோன்றியதால் செய்கிறேன். இதனால் நான் குடிப்பழக்கத்தை ஆதரிக்கிறேன் என்பது இல்லை. சிலருக்கு டிவி ட்ராமா, சினிமா மோகம் மாதிரியே இதுவும் தனி மனிதனைச் சார்ந்தது என்பது என் எண்ணம். இனி ஒரிஜினல் பதிவு

---

மிகவும் பிரபலமான "slogan" இது இந்தியாவில். ஆனால் உண்மையா இது? என்ற கேள்வி எனக்கு ரொம்ப நாளாக உண்டு. குடிகாரன் எனப்படுபவர்களை மூன்று வகையாக பிரிக்கலாம். Lite, medium, மொடாக்குடிகாரன் இல்லை addict.

வெளிநாடுகளில் லைட் வகையறாக்களைப் பற்றி கவலைப்படுவது கூட இல்லை. social drinking என்று சாதாரணமாக விட்டுவிடுவார்கள். இங்கே ரஷ்யாவில் வாரத்தில் குறைந்தது மூன்று நான்கு வேலை நாட்களில், வேலைக்குப்பின் இரண்டு மூன்று பியர்கள் என்பது கிட்டத்தட்ட கலாச்சாரமாகவே ஆகிவிட்டது. வாரயிறுதியிலோ ஒருமுறையாவது hard alcohol என்பது வழக்கம். குறிப்பாய் 'வோட்கா'. இங்கே ஜோக் கூட உண்டு. தாகமெடுத்தால் பியர் குடிப்பது மினரல் வாட்டர் குடிப்பதை விட மலிவு என்று.

மீடியம் ஆல்கஹாலிக்ஸ் எனப்படுபவர்கள் சுயக்கட்டுப்பாட்டை இழந்தால் மட்டுமே addicts ஆகின்றனர். அதுவும் கூட addiction என்பதன் விளக்கம்: "A chronic brain disorder characterized by the loss of control of drug-taking behavior, despite adverse health, social, or legal consequences to continued drug use."

இவ்விளக்கத்தில் கவனிக்க வேண்டிய ஒன்று. சமூதாயம் மற்றும் சட்டம். இந்த duties-ஐ ஒருவன் மறந்து குடி உள்பட எவ்வகை போதைப்பொருட்களை பயன்படுத்தினால் மட்டுமே அது addiction-ஆக கருதப்படும். அதற்கு மருத்துவசிகிச்சை அளிப்பது அவசியமாகிறது. ஆனால் இந்தியாவில் குடிப்போரை (குடிகாரர்கள் என்பது கொஞ்சம் derogatory-ஆக ஒலிப்பதால்) பெரும்பாலும் இகழ்வது வழக்கமாய் உள்ளது. சோமபானத்தை அருந்தி மகிழ்ந்த தேவர்களை வணங்கும் நாம் ஏன் குடிப்பழக்கத்தை (இதிலும் பழக்கம் என்பது habit என்றில்லாமல் addiction என்றே தொனிப்பதாய் தெரிகிறது) இப்படி நம் சமூகம் வெறுக்கிறது என்பது புரியவில்லை.

மது, அதிலுள்ள alcohol மற்றும் சிகரெட்டில் உள்ள சில வஸ்துக்கள், போதைப்பொருட்கள் மட்டுமல்லாமல் பல மருந்தாய்ப் பயன்படும் பொருட்களும் இந்த dependence-ஐ (மருத்துவத்துறையில் இதுவே preferred term. addiction என்பது மருத்துவத்துறைக்கு வெளியில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது) விளைவிக்கின்றன. சிகரெட்டின் தீமைகளை திண்ணமாக ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்தது போல் மதுவிற்கு இல்லை. சொல்லப்போனால், குறைந்த அளவில் ஆல்கஹால் (ஆலகால விஷம் இது தான் என்று வைத்துக்கொண்டால், நீலகண்டன் நிரந்தரமாக உபயோகப்படுத்தி வந்துள்ளார் :) ) உடலுக்கு நன்மையே விளைவிக்கின்றது. இன்னும் ஒருபடி மேலே போய் சில ஆராய்ச்சிகளில் பியர் குடிப்பதன் மூலம் புதிய synapses உண்டாவதாகக் கூட கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டு பியர் குடிப்பதன் மூலம் அறிவு வளர்ச்சி என்று மேம்போக்காக சொன்னாலும், புதிய சினாப்ஸகளின் வேலை மது dependence-ஐ உண்டாக்குவதற்காகத்தான் இருக்கவேண்டும் என்பது என் கருத்து. மேலதிக விவரம் தெரியவில்லை.

'அளவிற்கு அதிகமானால்' என்பதாகவே ஆல்கஹாலினால் விளையும் தீமைகளும். alcoholic liver disease மற்றும் மிகவும் கடைசி நிலையில் liver cirrhosis-உம் உண்டாகும். இதில் ALD வெளிப்படுவதற்கு குறைந்த பட்சமாக ஐந்து வருடங்களோ அதிகபட்சமாக பத்து வருடங்களாகவோ தினமும் 30 கிராம் வெறும் ஆல்கஹால் units அருந்தியிருக்கவேண்டும். பலவருடங்களாக தினமும் குடிப்பது அதுவும் 5 வருடங்களாக என்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம். இந்த மருத்துவ சான்று ஒன்றினால், சரி இனிமே குடிப்போம் என்று நினைப்பவர்களுக்கு. ஆல்கஹால் அட்டிக்ஷன் என்பது மிகவும் கொடியது. அட்டிக்ஷன் என்றில்லாமல் இப்போதைய பேஷனான binge-இன் மூலமும் பாதிப்புகள் உருவாகலாம். நேரிடையாக பாதிக்கப்படும் கல்லீரலைத் தவிர பான்கிரியாஸ் போன்ற மிச்ச இடங்களிலும் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றது. அதனால், நீங்கள் மிதமாவோ லைட்டாவோ குடிப்பவர்களானால், அப்படியே இருப்பது உத்தமம். குறிப்பாக, இரத்தக்கொதிப்பு நோயுடையோர் அடியோடு நிறுத்துவதுதான் நல்லது.

சரி, மருத்துவப்படி dependence state-ஐ தவிர மிதமாய்க் குடிப்போர்க்கு பயப்படுவதற்கு பெரும்பாலும் ஒன்றுமில்லை. இப்படியிருக்கையில், சமூகத்தில் ஏன் இத்தனை இகழ்வு என்பது விந்தை. அடுத்த மனிதரையோ சமூகத்தையோ தொல்லைப்படுத்தாதவரை ஏன் இதைப் பற்றி கவலைப்பட வேண்டும்? இது தனிமனித அல்லது நண்பர்களுடான harmless பொழுதுபோக்கு என்று கருதாமல் சமுகம் ஏன் சர்ச்சைப்பட வேண்டும் என்ற கேள்வி வருகிறதல்லவா?

மேற்கத்திய சமூகம் குடியைப் பற்றி கவலைப்படாவிட்டாலும் போதைப்பொருட்களை பொறுப்பதில்லை. ஆனால் நான் அறிந்த வரையில் அமெரிக்க பழங்குடியினரிடத்தும் தெற்கமெரிக்க பழங்குடியினரிடத்தும் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகவே போ.பொ விளங்குகின்றன. இன்னும் ஒரு சில சமூகங்களிடையே, shamans எனப்படும் நம்மூர் கடவுளிடம் பேசும் பூஜாரிகள் போன்றோர் தம்முடைய சடங்குகளில் peyote எனப்படும் போதை வஸ்துவை பயன்படுத்தியே கடவுளைக் காண்கின்றனர். கலாச்சார வித்தியாசம் என்பதைத் தவிர வேறொரு காரணமும் இருப்பதாய் தெரியவில்லை. கலாச்சாரங்கள் மாறும் நேரத்தில், மற்றவரை எவ்வகையிலும் தொல்லைப்படுத்தாத வித்தியாசம் என்று சொல்லுவதால், அது தனி மனித உரிமை ஆகிவிடுகிறதல்லவா?

11 Comments:

  1. குழலி / Kuzhali said...

    குடி சரியா தவறா என்று ஒற்றை வரியில் தீர்மானிக்க முடியாது, சாரு கிண்டலடிப்பது போல அது ஆளுக்கு ஆள் மாறுபடும், குடிப்பது தவறு ஆனால் பியர் மட்டும் அடிக்கலாம் என கிண்டலடித்திருப்பார் சாரு, சிலருக்கு அளவுகோல் எப்போதாவது குடிக்கலாம், சிலருக்கு ஒயின் மட்டும் குடிக்கலாம் என்று பல அளவுகோள்கள் உள்ளன, அதில் தனி மனித உரிமை என்பது ஒரு பரிமாணம் மட்டுமே, ஆனாலும் அடித்தட்டு மக்கள் இந்த குடியால் வாழ்க்கையையும் குடும்பத்தையும் இழக்கின்றனர், இதிலிருந்து வெளிவரவேண்டுமென சில தலைவர்கள் முயற்சிக்கின்றனர், தொடக்க காலங்களில் மருத்துவர் இராமதாசு பேசிய ஊர் கூட்டங்களில் (தற்போது ஊர் கூட்டங்கள் நடக்கின்றதா என தெரியவில்லை) குடியை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார், குடும்பமும்,சமூகமும் முன்னேற வேண்டுமெனில் குடிப்பதை நிறுத்த வேண்டுமென கடுமையான வார்த்தைகளில் பேசியதை கேட்டிருக்கின்றேன்.

    சிவசங்கரி அவர்கள் இது தொடர்பாக ஒரு நாவல் எழுதியுள்ளார்(நான் படித்ததில்லை), ஒரு முறை அவரது பேச்சை கேட்டபோது குடி ஒரு நோய் என குறிப்பிட்டார்.

    சாராய கடைகள் மூடப்பட்டதால் கள்ளச் சாராயம் தான் பெருகியதேயொழிய வேறெந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை, எயிட்ஸ் விழிப்புணர்ச்சி போல குடி பற்றிய விழிப்புணர்ச்சியும் ஏற்பட வேண்டும், அந்த விழிப்புணர்ச்சி ஏற்படுத்த சில திட்டங்கள் தீட்டி செயல் படுத்த வேண்டும், இதை அரசாங்கங்கள் மட்டுமின்றி தனி மனிதர்களும், சமூக நல அமைப்புகளும் இதை கையில் எடுக்க வேண்டும், அது வரை இந்த அடித்தட்டு மக்களை குடியிலிருந்து விடுவிக்க இந்த தலைவர்கள் எடுக்கும் முயற்சிகளை பத்திரிக்கைகளும், சமூக ஆர்வலர்களும்(?!) கிண்டலடிக்காமல் இருக்க வேண்டும், பத்திரிக்கைகள் அவர்களின் காழ்ப்புணர்ச்சியை காண்பிக்க எத்தனையோ விடயங்கள் உள்ளன, தயவு செய்து இதில் உங்கள் காழ்ப்புணர்ச்சியை காட்டி அடித்தட்டு மக்களின் வயிற்றில் அடிக்காதீர்கள்...


  2. குழலி / Kuzhali said...

    குடி பற்றிய மருத்துவ தகவல்களுக்கு நன்றி...


  3. பெத்தராயுடு said...

    "உங்களிடமிருந்து இப்படியொரு பதிவை எதிர்பார்க்கவில்லை."







    ....., அப்படின்னு நிறைய பின்னூட்டங்கள் வரலாம்.


  4. rv said...

    நன்றி குழலி..

    //அடித்தட்டு மக்கள் இந்த குடியால் வாழ்க்கையையும் குடும்பத்தையும் இழக்கின்றனர்,//

    இது உண்மை. பல குடும்பங்களில் தட்டிக்கேட்க ஆளில்லையென்பதாலும், சுயகட்டுப்பாடு இல்லாமல் குடிக்கும் ஆண்கள் அந்தக் குடி தரும் சிலமணி நேர அம்னீசியாவிற்காக அடிக்ட் ஆகிவிடுகின்றனர். இதைத் தடுப்பது அரசியல்வாதிகளால் மட்டுமே முடியும். அந்த விஷயத்தில் மருத்துவர் செய்தது சரிதான். ஆனால், எந்த இடத்தில் தனிமனித உரிமை என்பது மறைந்து சமூகப் பொறுப்பு என்று மாறுகிறது என்பது விவாதத்திற்குரிய ஒன்று.


  5. rv said...

    பெத்த ராயுடு,
    //உங்களிடமிருந்து இப்படியொரு பதிவை எதிர்பார்க்கவில்லை."//

    இதை நானும் நினைத்தேன். official தெளிவிற்க்காக. நான் குடிப்பதில்லை. நண்பர்களின் பார்டிகளுக்கு சென்றால், மறுக்கமுடியாத பட்சத்தில் ஒரு கிளாஸ் ஷாம்பெயின் என்ற அளவிலேயே முடிந்துவிடும்.

    நான் அசைவம் சாப்பிடுவதில்லையென்றாலும், அசைவம் சாப்பிடுபவர்களுக்கு எதிராய் எதுவும் சொல்வதில்லையே.. அதுபோலத்தான் இதுவும்.


  6. துளசி கோபால் said...

    குடிப்பழக்கம் நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடா?

    நாடும் வீடும் இருக்கட்டும். மொதல்லே குடிக்கிறவங்களுக்கு, அவுங்க உடம்புக்குக் கேடு.

    நல்லதுன்னு நீங்க வற்புறுத்திச் சொன்னா ,நாளையிலேயிருந்து நான் குடிக்கப்போறேன்.


  7. Anand V said...

    நிறைய குடிச்சா liver க்கு கேடு. குடிச்ச பிறகு அவங்க பேசறதை எல்லாம் கேட்கும் நமக்கும் கேடுதான் .


  8. rv said...

    அக்கா,

    //இந்த மருத்துவ சான்று ஒன்றினால், சரி இனிமே குடிப்போம் என்று நினைப்பவர்களுக்கு. ஆல்கஹால் அட்டிக்ஷன் என்பது மிகவும் கொடியது. அட்டிக்ஷன் என்றில்லாமல் இப்போதைய பேஷனான binge-இன் மூலமும் பாதிப்புகள் உருவாகலாம். நேரிடையாக பாதிக்கப்படும் கல்லீரலைத் தவிர பான்கிரியாஸ் போன்ற மிச்ச இடங்களிலும் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றது//

    இதப்பாக்கலீயோ? டிபண்டன்ஸ் உருவாகறதுக்கு visceral symptoms வெளிப்படணும்கறது தேவையில்லைங்கறத அவ்வளவா தெளிவா பதிவில சொல்லலேன்னு நினைக்கிறேன்.

    //நல்லதுன்னு நீங்க வற்புறுத்திச் சொன்னா ,நாளையிலேயிருந்து நான் குடிக்கப்போறேன்//

    உடம்புக்கு கேடு என்பது குடிப்பதன் அளவைப் பொறுத்தது. சிகரெட் மாதிரி திவிரம் அவ்வளவு இல்லை. இது முக்கியமான விஷயமில்லை. நான் பதிவு செய்யக் காரணமே எந்தக் காரணத்துனால வெளிநாடுகளில் தனி மனித சுதந்திரமாக கருதப்படுவது நம்மூரில் கலாச்சாரம் என்கிற பெயரில் எதிர்க்கப் படுகிறது என்பதுதான். மத்தபடி குடிக்க ஆரம்பிங்கன்னு சொல்லவேயில்லை.

    அய்யய்யோ.. பயங்கர டென்ஷனாகிருக்கீங்க. என் வழக்கமான பதிவிலேர்ந்து மாறறது சரியா வராது போலிருக்கு.. இனிமே தொடர், படங்காட்டறதுன்னு வந்துடறேன்.. :)


  9. rv said...

    ஆனந்த்,
    //அவங்க பேசறதை எல்லாம் கேட்கும் நமக்கும் //

    இது சரி! எல்லா புது தியரி, மதம், கலாச்சாரம், சொந்தப்புலம்பல்னு தெளிவா இருக்கற நம்மள counsellor ஆ ஆக்கி கழுத்தறுத்துடுவாங்க... :))


  10. G.Ragavan said...

    ராமநாதன், குடிப்பழக்கம் என்பதில் நீங்கள் சொன்ன பலவகை உண்டு. மனிதனின் வாழ்கைத் தரங்களைப் பொருத்து இந்தக் குடிப்பழக்கம் மாறுபடுகிறது.

    சமயத்தில் பெரிய அலுவலகங்களில் socializing என்ற பெயரில் பேருக்கு ரெண்டு வாய் குடிப்பது ஒருவகை. இவர்கள் அத்தோடு விடுவார்கள். இன்னும் சிலர் அளவோடு விடுவார்கள். சிலர் அளவு மீறுவார்கள்.

    ஆனால் குடிப்பழக்கம் என்பது அடித்தட்டு மக்களிடத்தில் மேற்சொன்ன நிலைகளில் இல்லை. மொடாக்குடிதான் உள்ளது. இது மிகவும் ஆபத்தானது.

    ஆகவே குடிப்பழக்கம் ஒழிய வேண்டும். அதே நேரத்தில் நட்சத்திர ஓட்டலில் குடிக்கிறார்கள் என்று பேசுவதும் வீண் விவாதமே. சைவம் சாப்பிட வேண்டியவன் அசைவம் சாப்பிடுகிறவனைத் தடுத்த கதையாகத்தான் அது இருக்கும்.

    ஆக செய்ய வேண்டியது என்ன? பொறுப்புள்ள அரசியல் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் செல்ல வேண்டியது ஏழைகளிடத்தில். அவர்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்க வேண்டும். முறையான கல்வியறிவு பயனளிக்கும். கவுன்சிலிங் முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டும்.

    அதை விடுத்து வேறு எது செய்தாலும் நல்ல பயனை அளிக்காது.


  11. rv said...

    //குடிப்பழக்கம் என்பது அடித்தட்டு மக்களிடத்தில் மேற்சொன்ன நிலைகளில் இல்லை. மொடாக்குடிதான் உள்ளது. இது மிகவும் ஆபத்தானது//

    இது உண்மையென்றே எனக்கும் படுகிறது.

    //பொறுப்புள்ள அரசியல் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் செல்ல வேண்டியது ஏழைகளிடத்தில். அவர்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்க வேண்டும். முறையான கல்வியறிவு பயனளிக்கும். கவுன்சிலிங் முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டும்.
    //

    ஆமாம். ஆனால் எப்போ இதெல்லாம் நடக்கப் போகிறது என்று பிரமிப்பா இருக்கு.

    நன்றி


 

வார்ப்புரு | தமிழாக்கம்