வந்தாச்சு வந்தாச்சு!

இன்னும் அக்டோபர் முடியறதுக்கே அஞ்சு நாள் இருக்கு. ஆனா, இன்னிக்கு காலம்பற எழுந்து பாத்தா வெள்ளிப் பனி மழை மீதுலவுவோம் தான். முதல் ஸ்னோபால்கறதாலே நல்ல ஸ்ட்ராங்காவே பெஞ்சுருக்கு. தரையே காணும். ஒரே ராத்திரில ஊருக்கே வெள்ளையடிச்சாச்சு. திரும்ப மத்தியானம் பெரிய பனிமழை. இப்பவும் பெஞ்சுகிட்டுதான் இருக்கு. ஜன்னல் வழியா பாக்க ரொம்ப அழகா இருக்கு. மரங்களுக்கெல்லாம் டைம்டேபிள் மாறுனது தெரியல போலிருக்கு. இன்னும் முழுசா இலையையெல்லாம் உதிர்க்காததால, இலையெல்லாம் வெள்ளையா உறைஞ்சு படு சூப்பரா இருக்கு. குளிர் இன்னும் அவ்வளவு இல்லை. மைனஸ் மூணு நாலு தான். ஆனா இந்த வருஷம் நல்ல குளிரப்போதுன்னு பயமுறுத்திருக்காங்க. பாப்போம்.

முதல்முதல்லா பாத்தது 98-ல். ஏன்னா அதுவரைக்கும் சந்தோஷ் சிவன் புண்ணியத்துல 'புது வெள்ளை மழை' தான் பனின்னா என்னங்கறதுக்கு எனக்கெல்லாம் டெபனிஷன். மெக்டானல்ட்ஸில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, 'ஸ்னோ பெய்யறதுடா'னு ஒரு சவுண்ட். சாப்பாட்டல்லாம் விட்டுட்டு நேரா தெருவுக்கு ஓடினோம். இத்தன வருஷமானாலும் முததடவை பாத்தா மாதிரியே பரவசமா இருக்கு. அலுக்கவேயில்ல. குளிரும் காத்தும் தான் பிரச்சனை. ஸ்னோல விளையாடறது பயங்கர தமாஷ். நடந்து போய்க்கொண்டிருக்கும் பிரண்ட்ஸோட விண்டர் ஜாக்கெட் குள்ளெல்லாம் திடீர்னு கட்டி போடறது இல்லேன்னா 7-stones கணக்கா டமால் டமால்னு பனிக்கட்டி அடிதடி இந்தமாதிரி நடக்கும்.

குழந்தைகள்லாம் இனிமே ஆளுக்கு ஒரு குட்டி போர்ட் எடுத்துக்கிட்டு சறுக்கிக்கிட்டே இருப்பாங்க. சின்ன குழந்தைகள் சும்மாவே அழகு. அதுல மொத்து மொத்துன்னு ரெண்டு மூணு ஸ்வெட்டர், அதுக்கு மேல தலை வரைக்கும் மூடற ஜாக்கெட்னு உப்பின பொம்மைகளாட்டம் தத்தக்கா பித்தக்கான்னு நடக்கறது பாத்தா பொழுது போறதே தெரியாது. குழந்தைகள்னு இல்ல. பெரிய ஆளுகளும் தான்.. சைட் வாக்கில பாத்தீங்கன்னா, சில சமயம், பனி எல்லாம் கெட்டியாகி ஐஸாகி இருக்கும். அதுல சர்சர்னு வழுக்கிகிட்டே விளையாடுவாங்க. நானும் ட்ரை பண்ணேன். வழுக்கி விழுந்து இடுப்பு போனதுதான் மிச்சம்.

போன வருஷம் மட்டும் தான் ஒருதடவை கூட வழுக்கி விழாம சாதனை படைச்சேன். இல்லாட்டி வருஷாவருஷம் குறஞ்சது அஞ்சாறுதடவை சறுக்கு விளையாட்டுதான். முத வருஷம் மட்டும் முப்பது நாப்பது தடவையாவது இருக்கும். ஒரு நாள் ரோடு க்ராஸ் பண்ணும்போது நடு ரோடுல நான் விழவும், க்ரீன் விழவும் சரியா இருந்தது. முதல்ல நிக்கறதோ பஸ். ஆனா பாவம், நல்ல ஆளு அந்த பஸ் ட்ரைவர், நான் ரெண்டு மூணு தடவை எழ முயற்சித்தும் திரும்ப திரும்ப விழுவத பார்த்து பரிதாபப்பட்டு கிளப்பாமல் வெயிட் பண்ணிக்கொண்டிருந்தார். என் ப்ரண்டோ அந்தப் பக்கம் நின்னு நான் விழுந்து வாரரதை ஏதோ சர்க்கஸ் போல வேடிக்கை பாத்துகிட்டே பெரிய ஹாஹா வெல்லாம் போட்டு எஞ்சாய் பண்ணிக்கிட்டுருந்தான்.. "யூ *****, வந்து தூக்கிவிடு"னு நான் கத்தினதுக்கப்புரம் தான் என் நிலம புரிஞ்சு வந்து தூக்கிவிட்டான். எல்லாரும் வேடிக்கை பார்க்க, பயங்கர அசிங்கமா போச்சு. அன்னிலேர்ந்து பனிக்காலத்தில குனிஞ்ச தலை நிமிராம, ஒத்தையடிப் பிரதட்சணம் மாதிரி பாத்து பாத்துத்தான் கால வைக்கிறேன். அப்படியும் சில சமயம் பனி பகவான் காலவாரி விட்டுடறாரு.

போட்டோ போடலாம்னா கைல காமிரா இல்ல. :(

24 Comments:

  1. Anand V said...

    படம் இல்லையா ? ம்ஹஹ¥ம்.. சோகம்தான் !


  2. rv said...

    ஆனந்த்,
    படம் தானே? போன வருஷம் எடுத்த சிலது இருக்கு. நாளைக்கு போடறேன். இதுக்கு ஏன் சோகமெல்லாம் படறீங்க?


  3. rv said...

    ப்ரியா அக்கா,
    தலை தப்பிக்க உதவியதற்கு நன்றி! நன்றி!! :)


  4. துளசி கோபால் said...

    ஆஹா, ஸ்நோஃபால்.... நல்லா அனுபவிங்க.

    FYI இன்னைக்கு எங்களுக்கு 23 டிகிரி ஸெல்ஷியஸ்.

    வெய்யிலு வரட்டும்னு ஒத்திப்போட்டிருந்த வேலைகள் எக்கச் சக்கம். இப்ப
    மரியாதையா வீட்டுவேலை செய்யணும்(-:


  5. வானம்பாடி said...

    :))


  6. Sundar Padmanaban said...

    //சில சமயம் *பனி பகவான்* காலவாரி விட்டுடறாரு.//

    :)) :))

    இங்கிட்டு இன்னும் நாப்பத்தஞ்சுலயே இருக்கு. வராமயா போப்போவுது. பாக்கலாம்.

    வந்ததும் நானும் மகாநதி கமல் ஸ்டைல்ல "வழுக்கி..வழுக்கி விழுந்துட்டேன்"ன்னு ஒரு பதிவு போடறேன். :)


  7. rv said...

    அக்கா,
    இன்னும் ஆறு மாசத்துக்கு உங்களுக்கு... அப்புறம் எங்களுக்கும் காலம் வரும், காலம் வந்தால் வாழ்வு வரும்!

    //வேலைகள் எக்கச் சக்கம். இப்ப
    மரியாதையா வீட்டுவேலை செய்யணும்(-:
    //
    என்னது இது? இனிமே காலையில் எழுந்தவுடன் தமிழ்மணம் கிடையாதா??

    அதப் போய் பாத்தீங்களா? மயில் இன்னும் பறக்கலியா இல்ல ரொம்ப ஸ்லோவா பறக்குதா?


  8. rv said...

    சுதர்சன்,
    //:)) //

    இதுக்கு பின்னாடி உள்/வெளி/ஆழ் குத்தெல்லாம் ஒண்ணும் இல்லைங்கற நம்பிக்கையில், நன்றி!

    இப்பல்லாம் வெறும் ஸ்மைலி போடறவங்கள பாத்தா பயமா இருக்குது! :)


  9. rv said...

    சுந்தர்,
    //இங்கிட்டு இன்னும் நாப்பத்தஞ்சுலயே இருக்கு. வராமயா போப்போவுது. பாக்கலாம்//

    ஒரு நிமிஷம் ஆடிப்போயிட்டேன். நாப்பத்தஞ்சு செல்சியஸ்ஸான்னு. நீங்கல்லாம் பேரன்ஹீட் ஆளுங்கயில்ல?

    //"வழுக்கி..வழுக்கி விழுந்துட்டேன்"//
    அப்பாடா, எனக்கு கம்பெனி கொடுக்க நீங்களும் இருக்கீங்களா..விட்டுடக்கூடாது..கீப் இட் அப் :)

    எப்போ ஆரமிக்கும் உங்களுக்கு?


  10. rv said...

    மஞ்சுளா,
    ஆல்பமெல்லாம் இல்ல. விஜய் தனியா சிடி ரெக்கார்ட் பண்ணித் தந்திருந்தார்.

    இங்கேயும் அந்தப் பாட்ட பாத்ததா ஞாபகம்.

    http://63.206.195.32:8080/musd/servlet/level1

    இந்த லின்க் வேலை செய்யலேன்னா, சொல்லுங்க, நான் எங்கேயாவது அப்லோட் செய்யறேன்.


  11. தாணு said...

    இந்த சீசனில் உங்க டிபார்ட்மெண்ட்டுக்கு ஏக கிராக்கி இருக்கும்னு சொல்லுங்க!

    பொண்ணு பார்க்க அக்காக்கள் எல்லாம் ரெடியாயிட்டு இருக்கும்போது வாழ்க்கையில், சாரி, வழியில் வழுக்கி விழுந்த கதையெல்லாம் எழுதலாமா ராமநாதன்? ஹீரோயிக்காக செஞ்சது ஏதாச்சும் எழுதுங்க! இப்போதான் உங்க அக்கா `மயில்' பார்த்துட்டு வரேன்


  12. Ganesh Gopalasubramanian said...

    //சில சமயம் பனி பகவான் காலவாரி விட்டுடறாரு.//

    யார் மேலயாவது விழாம பாத்துக்கோங்க..... அப்புறம் பனி பகவன் கையையும் உடைச்சிடுவாரு....:-)


  13. Ramya Nageswaran said...

    நானும் முதல் தடவை பனி பெய்யறதை பார்த்துட்டு புளகாங்கிதம் அடைஞ்சேன். ஆனா அடுத்த இரண்டு வருஷதுக்கு போதும் போதும்னு அலற்றா மாதிரி snow storm of the centuryல்லாம் வந்து படுத்திடுத்து (இது அமெரிக்காவுலே இருக்கும் பொழுது)


  14. rv said...

    தாணு அத்தை,

    என்னது,என் கல்யாணத்த பத்தி தனி மயில்களெல்லாம் பறந்துகிட்டிருக்குதா? என்ன இருந்து என்ன, இதுவரைக்கும் டிசே வ மட்டுந்தான் பாத்திருக்கீங்க. இத்தன அக்கா, அத்தையெல்லாம் இருந்து என்ன பலன்??


  15. rv said...

    வாங்க கணேசரே..
    சவுக்கியமா? பூகம்பத்துல ஒண்ணும் பிரச்சனையில்லியே?

    //பனி பகவன் கையையும் உடைச்சிடுவாரு//
    ஒருதடவ கொழுப்பெடுத்து அவரோட விளையாடினதுக்கு, கால உடச்சி அனுப்பிட்டார். அது ஒரு கத. விடுங்க.


  16. rv said...

    ரம்யா அக்கா,
    ஏழு வருஷமாச்சு. இன்னும் போரடிக்கலையே.. ஆனா, பனி உருகுற மார்ச், ஏப்ரல் தான் ரொம்ப கடி. எங்க பாத்தாலும் வெறும் சேறும் சகதியுமா இருக்கும்.


  17. பாலராஜன்கீதா said...

    அன்புள்ள இராமநாதன்,

    உங்கள் ஊரிலிருக்கும் Raduga Publications பற்றி ஏதேனும் எழுதுங்களேன். அவர்கள் தமிழில் மொழிபெயர்த்துப் பதிப்பித்த பல நல்ல நூல்களைப் படித்திருக்கிறேன். சதுரங்கம் பற்றியும் அவர்கள் பல புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார்கள் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.


  18. rv said...

    அய்யய்யோ பாலராஜன்கீதா,
    Raduga-வா.. ராதுகா - அப்படின்னா வானவில். இதுக்குமேல சொல்றதுக்கு ஒண்ணுமில்ல.
    இப்படி வம்புல மாட்டி விடறீங்களே. இந்த Raduga publication ன்னு ஒண்ணு இருக்கறதே நீங்க இப்ப சொல்லித்தான் தெரியும். அவ்வளவு வாசிப்பு அனுபவம் பெற்றவன் நான்!

    என்ன மாதிரி ஆள் கிட்டப் போய், இப்படியெல்லாம் சொல்லி மானத்தை வாங்கிட்டீங்களே! :(((


  19. Sundar Padmanaban said...

    //ஒரு நிமிஷம் ஆடிப்போயிட்டேன். நாப்பத்தஞ்சு செல்சியஸ்ஸான்னு. நீங்கல்லாம் பேரன்ஹீட் ஆளுங்கயில்ல?//

    ஹூம். செல்ஷியஸ்லாம் ஞாபகப் படுத்தாதீங்க ஸார். மூணு மாசம் முன்னாடி வரைக்கும் - நாப்பத்தஞ்சு என்ன நாப்பத்தொம்பது அம்பது டிகிரி செல்ஷியஸ் வரைக்கும் போற தேசத்துல இருந்து (மஸ்கட்) Fahrenheit 9/11 தேசத்துக்கு வந்துருக்கேன்.


  20. rv said...

    // Fahrenheit 9/11 தேசத்துக்கு வந்துருக்கேன்//
    வாழ்த்துக்கள். நாப்பத்தஞ்சு பேரன்ஹீட்னா என்ன ஒரு பத்து செல்சியஸ் இருக்குமா? அதுக்கு கன்வெர்ஷன் பார்முலால்லாம் ஸ்கூல்ல படிச்சது!

    --
    சுய விளம்பரம் - என் பதிவுகளுக்கு நானே விளம்பரம் கொடுத்துக்க வேண்டிய அவல நிலை! :)

    இது லேட்டஸ்ட். பாத்தாச்சா?


  21. பாலராஜன்கீதா said...

    // நாப்பத்தஞ்சு பேரன்ஹீட்னா என்ன ஒரு பத்து செல்சியஸ் இருக்குமா? அதுக்கு கன்வெர்ஷன் பார்முலால்லாம் ஸ்கூல்ல படிச்சது! //

    C (F - 32)
    ____ = ___________
    100 180


  22. rv said...

    //C (F - 32)
    ____ = ___________
    100 180 //


    இதெல்லாம் டூ மச். நான் தூங்கப்போறேன்னு சொல்லி கண்ணியமா விலகிக்க்ரேன்!


  23. G.Ragavan said...

    சூப்பர் இராமநாதன். பனிபகவானோட நானும் விளையாடி என்னோட அவரும் விளையாடிய அனுபவமும் உண்டு.

    அமெரிக்காவுலதான். ஜெர்மன் டவுன் அப்ப்டீங்குற ஊருல ஒரே பனிமழை. எங்க பாத்தாலும் பனி. மாடிப்படியெல்லாம் மரத்துல இருக்கு. ஷூ இல்லாம நடந்தா காலு வெறைக்குது. ஷூ போட்டுக்கிட்டு நடந்தா காலு வழுக்குது. ரெண்டு மூனு வாட்டி மாடிப்படியிலேயே சறுக்கு விளையாண்டுட்டு அப்புறமா பழகியாச்சு.

    அத்தோட விட்டாங்களா......பென்சில்வேனியாவுல பனிச்சறுக்கு இடமிருக்குன்னு சொல்லி என்னோட நண்பர்களோட போனேன். அடக் கொடுமையே....எல்லாரும் கத்துக்கிட்டாங்க....நாந்தான் கத்துக்காம விழுந்து விழுந்து....எழுந்தேன்....அப்புறம் ரோசம் வந்து டியூட்டர் சொல்லிக் குடுத்த மாதிரி செய்யாம எனக்கு வந்த மாதிரி செஞ்சேன். அது நல்லா வேல செஞ்சது. நானா கண்டுபிடிச்ச மெத்தட் நல்லா வொர்க்கவுட் ஆச்சு.

    அப்புறம் கேபிள் கார்ல மேல போய்......சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருன்னு கீழ இறங்குனேன். பாதி தூரம் நல்லா போச்சு. நல்ல வேகம். குளிர் காத்து. திடீருன்னு வேகைத்தைக் கொறச்சுப் பாகலாமான்னு முயற்சி பண்ணி....தடபுடன்னு உருண்டு விழுந்து.......கடைசில என்னையத் தேடிக்கிட்டு நண்பர் வந்து கூட்டிக்கிட்டு போனார். நல்ல வேள அத யாரும் படம் பிடிக்கலை.


  24. rv said...

    நன்றி இராகவன்,
    //மாடிப்படியெல்லாம் மரத்துல இருக்கு//

    அதே மாதிரி இங்க சில புத்திசாலிகள் தங்கள் கடைகளின் வாசல் படி, ஸ்லோப்பிலெல்லாம் கிரானைட் போட்ருப்பாங்க. அதுக்கும் மேல் மேட்டோ ஒன்னோ இருக்காது. விண்டர்ல ஒரே வழுக்கு வழுக்குதான்.

    //திடீருன்னு வேகைத்தைக் கொறச்சுப் பாகலாமான்னு முயற்சி பண்ணி....தடபுடன்னு உருண்டு விழுந்து//

    நான் இதே மாதிரி தான் ஸ்கேட்டிங் போனேன். ஹேர்லைன் முறிவுதான் மிச்சம்! அது ஒரு மறக்கமுடியாத அனுபவம். அதைப்பத்தி தனியே பதிவு போடறேன். :)


 

வார்ப்புரு | தமிழாக்கம்