க்ருபா அவர்கள் சொன்ன படங்களை நீக்கிவிட்டு, முருகன் கோயிலில் எடுத்தவற்ற ைபோட்டுவிட்டேன்.
தஞ்சாவூர் கோயில் கோபுரத்தின் மீது ஏறி உள்ளே சென்று பார்க்கும் சந்தர்ப்பம் சமீபத்தில் கிடைத்தது. கோயிலின் வலதுபுறம் தட்சிணாமூர்த்திக்கு முன்னர் இரும்பு
படக்கட்டின் மீது ஏறிச் செல்லவேண்டும். இதற்கு தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகத்திடமிருந்து அனுமதி பெற்றாக வேண்டும்.
1. விமானம் வெளித்தோற்றம்
2. விமானம் close-up
மேலே ஏறிப்பார்த்தால் விமானத்தின் உண்மையான அளவு தெரிகிறது. அதேபோல் கோயிலின் பரப்பளவும் பிரமிக்க வைக்கிறது. கோயிலின் இடதுபுறம் உள்ள இடத்தில்
உள்ள சுப்பிரமணியர் மற்றும் பெரியநாயகி அம்மன் சன்னதிகளும், எண்ணற்ற சிவலிங்கங்களை உள்ளடக்கிய பிரகாரமும் அருமை.
3. சுப்பிரமணியர் மற்றும் சண்டிகேஸ்வரர் சன்னதி
4. பெரிய நாயகி அம்மன் சன்னதி
விமானத்தின் அமைப்பு ஒரு பூக்கூடையை தலைகீழாய்க் கவிழ்த்தது போல் இருக்கிறது. 14 அடுக்குகளாய் 216 அடிகளுக்கு உயர்ந்து நிற்கும் ஒரு கோபுரம் உள்புறம்
வெற்றிடமாய் இருப்பது அதிசயமாக இருக்கிறது. விமானத்தின் மேலே இருக்கும் வட்ட வடிவ கல் மட்டும் 80 டன்கள் இருக்கலாம் என்கிறார்கள். இவ்வளவு எடையை
இத்தனை நூற்றுக்கணக்கான ஆண்டுகளாய் தாங்கி நிற்பது தமிழரின் கட்டடக்கலைக்கு ஒரு மகுடமாகும்.
முதல் அடுக்குக்குள் சென்றால் கர்ப்பகிரகத்திற்கு மேலே வட்ட வடிவில் ஒரு பெரிய அறை. தரை இருக்கிறது. அங்கிருந்து அண்ணார்ந்து பார்த்தால் 216 அடி உயரத்தில்
விமானத்தின் உச்சியில் இருக்கும் கல்லை தாங்கும் கருங்கல் platform தெரிகிறது. நடுவில் தாங்குவதற்கு ஒரு support ம் இல்லை.
6. முருகன் கோயில்
7. அழகிய வேலைப்பாடு
8. கல்லுக்குள் குச்சி!
இது போல் 14 அடுக்குகள்.
இந்த கர்ப்பகிரகம் இருக்கும் அறைக்கு வெளியில் உடனே பெரிய சுவர் இருக்கின்றது. சுவற்றிற்கும் இதற்கும் மத்தியில் நடைபாதை. முதல் அடுக்கில் உள் சுவற்றில் முழுதும்
பரதநாட்டியக் கலையின் 108 கரணங்கள் என வழங்கப்படும் pose கள் கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. வெளியிலிருந்து கல்லில் செதுக்கி எடுத்து வந்து ஒட்டாமல், முதலிலேயே
சுவற்றில் granite கற்களை பதித்து விட்டு பின்பு சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதற்கு ஆதாரமாக 108 கரணங்கள் முழுதாய் முடிக்கபடாமல் நான்கைந்து கற்கள்
செதுக்கப்படாமல் இருக்கின்றன. இராசேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரத்திலுள்ள கோயிலில் வேலை செய்ய பணித்ததால் சிற்பிகள் விட்டு சென்று விட்டார்கள்
என்று காரணம் சொல்கிறார்கள்.
7. கோயில் விமானத்தின் rough வரைபடம்
இன்னும் மேலடுக்குகளில் muralகளும் சிற்பங்களும் இருப்பதாக சொன்னார்கள். ஆனால் மேலே செல்ல அன்று அனுமதி கிடைக்கவில்லை. மேலும் படிப்படியாய் 216 அடி
ஏறுவதற்கும் முடியவில்லை!
இக்கோயிலைப் பற்றி என்னுடைய முந்தைய பதிவு இங்கே.
தஞ்சாவூர்: பெருவுடையார் கோயில் - புகைப்படங்கள் - 2
Subscribe to:
Post Comments (Atom)
22 Comments:
நல்லா இருக்குங்க.தொடர்ந்து கலக்குங்க.
அப்போ, அரிய புகைப்படங்கள்னு சொல்லுங்க. நல்லா இருக்கு.
நல்லா இருக்கு ராமநாதன். நான் கங்கை கொண்ட சோழபுரம் போயிருக்கேன். அங்க தொல்பொருள் அனுமதியோடகோயில் மேல போனேன். நிறைய ஓவியங்கள் பராமரிக்க இயலாமல் இருந்தது சோகம். அங்க சிவன் சன்னதிக்கி நேர் மேல ஒரு ஓட்டை இருக்கும். அதன் மூலமா சிவலிங்கத்தை வித்தியாசமான perspectiveல் பார்த்தது ஒரு தனி அனுபவம்.
தஞ்சை பெரிய கோயிலும், அதன் விமானத்தில் ஏற்றியுள்ள பெருங்கல்லும் எனக்குள் எப்போதும் பிரமிப்பை உண்டாக்கும். எப்படி அந்தக் கல்லை ஏற்றியிரூப்பார்கள் என்ற கேள்வியோடு, மற்றொரு கேள்வியும் வருவதுண்டு. பதில்...?
மதிப்பிற்குரிய டாக்டர். ராமநாதன்,
ராஜராஜீஸ்வரம் பற்றி எழுதி இருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி.
ஆராய்ச்சி நிமித்தம் கோயிலின் உள்ளே படங்கள் எடுப்பதிலும் கூடத் தவறில்லை. ஆனால் அதைப் பொதுவில் வெளியிடுவது அவ்வளவு சரியான செயல் இல்லை.
குறிப்பாக, கீழ்க்கண்ட பெயர்களுள்ள மூன்று படங்கள்:
1) inside_2_th.jpg
2) vimana_wall_structure_th.jpg
3) oorthava_thandavar_th.jpg
இவை புகைப்படம் எடுக்கத் தடையுள்ள உட்புற அமைப்பைப் பற்றியது.
இது போன்ற படங்கள் பல என்னிடமும் இருக்கின்றன. என் நண்பர்களிடம் இன்னும் சென்சிடிவான பல படங்களும் இருக்கின்றன. ஏனைய ஆராய்ச்சியாளர்களிடமும் இருக்கின்றன. ஆனால் வேண்டுமென்றேதான் இது வரை யாரும் வெளியிடவில்லை.
என்ன காரணம்? யோசித்துப் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். அந்த மூன்று படங்களை மட்டுமாவது சற்று நீக்குவீர்களா?
'என் இஷ்டம்' என்று நீங்கள் சொன்னால் நான் ஒன்றும் சொல்ல முடியாது. இது ஒரு வேண்டுகோள் மட்டுமே.
உங்களை நம்பி உள்ளே அழைத்துச் சென்ற கோயில் பணியாளரைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். இந்தப் படங்கள் வெளியில் தெரிந்தால் அவர் வேலையை இழக்க நேரிடும். உண்மையிலேயே அந்தக் கோயிலின் மேல் பற்றுடன், dedciation¯¼ý ¯¨Æ츢ÈÅ÷¸û «Å÷¸û.
www.varalaaru.com
ஆஹா, கண்டனப்பினூட்டம் என்று நினைத்து விடாதீர்கள். விளக்கமாகச் சொல்ல நினைத்து போஸ்ட் பண்ணிவிட்டுப் பார்த்தால் என் மறுமொழியே ஒரு தனிப்பதிவு அளவுக்கு இருக்கிறது. LOL.
நல்ல பதிவு, அருமையான புகைப்படங்கள். அதை சக தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கும் முனைவும் பாராட்டுக்குரியது. ஆனால் எல்லாவற்றையும் வெளியில் காண்பித்தால் சிலருக்குப் பிரச்சனையாகும் இல்லையா... அதான் சொன்னேன். உங்கள் செயலைப் புண்படும்படி என் பின்னூட்டம் அமைந்திருந்தால் மன்னிக்கவும். நான் அப்படி நினைத்து எழுதவில்லை.
விமானத்தின் மேலமைந்த கல் ஒரே கல் அன்று என்றும் அது பல கற்கள் ஒட்டப்பட்டது என்றும் வரலாறு.காம்-ல் படித்ததாக நினைவு. ஆனால் உள்ளே எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிடக்கூடாதென்பது எனக்கு புரியவில்லை. நம்முடைய பல சட்டங்கள் இப்படி அமைக்கப்பட்டிருப்பதற்கு அடிப்படையில் எதுவும் பொருள் இருப்பதாகத் தெரியவில்லை. (ஆராய்ச்சியாளர்களுக்கு மட்டும் அனுமதி கொடுப்பதென்பது புரிந்துகொள்ளக்கூடியது) ஒருமுறை நா.கண்ணன் ஒரு ஓலைச்சுவடியினை ஒரு நூலகத்தில் இருந்து ஸ்கேன் பண்ணமுடியாமல் போனதற்கு இப்படிப்பட்ட சட்டங்கள் (வழக்குகளை) காரணமாய் இருப்பதைக் காட்டிருந்ததாய் நினைவு. இவைகளை பற்றிய பொறியியல்/கட்டிடக்கலை/உலோக, கனிம வியல் ஆய்வுகளை விரிவாக முறையாக மேற்கொண்டு அவைகளை மக்கள் அறியும் வண்ணம் செய்தல் அவசியம். மாறாக இவைகளை இப்படி பாதுகாக்கிரோம் என்ற போர்வையில் மூடிவைத்தல் இவைகள் பற்றிய அறிவு அழிந்துபோகவும், மூடந்ம்பிக்கைகள் வளரவுமே இடமளிக்கும் என்பதெ என் எண்ணம்.
படங்களுக்கு நன்றி இராமநாதன்.
அருமையான் படங்கள். அருமையான விவரிப்பு. நன்றி!
தங்கமணி,
பெரியகோயில் என்பது ASIயால் பாதுகாக்கப்படும் ஒரு நினைவுச்சின்னம். நம் நினைவுச்சின்னங்களை, பழம்பெரும் செல்வங்களைச் சிதிலம் அடையாமல், போற்றிப் பாதுகாப்பது நம் கடமை. துரதிர்ஷ்டவசமாக, போதிய விழிப்புணர்வு இல்லாததாலும் நல்லது செய்கிறேன் பேர்விழி என்று ஆர்வக்கோலாறில் நம் அடையாளங்களை அழிக்க நேரிடும் சமூக அமைப்புகள் காரணமாகவும், பலவற்றை இழந்துவிட்டோம்.
இவற்றையெல்லாம் பேணிப் பாதுகாக்கும் பொறுப்பை ASI ஏற்று மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. எனவே அழிந்துவிடும்/சேதாரம் அடைய வாய்ப்பு உள்ளது என்று ASI குறிப்பிடும் இடங்களைப் பாதுகாக்கும் பொருட்டு, பொதுமக்களை அண்டவிடாமல் இருக்கச் செய்வது மிகவும் அத்யாவசியமும் கூட.
எனினும் ஆராய்ச்சியாளர்களுக்கும், உண்மையிலேயே வரலாற்று ஆய்வில் ஈடுபடுபவர்களுக்கும் அப்படிப்பட்ட இடங்களுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்படுவது இல்லை. ஆனால் அவர்கள் எடுத்த புகைப்படங்களை பொதுவில் வைக்கும்பொழுது, விதிகளை மீறிய குற்றச்சாட்டு எழுகிறது. மேலும் அரசியல், சமூக அமைப்புகளுக்கும் பதில் சொல்ல முடியாமல் போகிறது. அரசியல்வாதிகளும், சமூக அமைப்புகளும் அவற்றை என்ன நோக்கத்திற்காகப் பார்வையிட நினைக்கிறார்கள் என்பது சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதிலை. ;-)
'மூடிவைத்தல்' என்றெல்லாம் ஒன்றும் இல்லை. ஒளி ஆவணமாக்கப்பட்டு பலவை அரசாங்கத்திடமும், ASIஇடம் இருக்கின்றன. ஆர்வமிருந்தால் அங்கேயே சென்று பார்த்துக்கொள்ளலாம். பல ஆய்வுக்கட்டுரைகளும் இப்பொழுது நூல்வடிவிலும், வரலாற்று ஆய்விதழ்களிலும் (உ.தா.: 'ஆவணம்', 'வரலாறு' போன்றவை) கிடைக்கின்றன.
க்ருபா
பொதுமக்களுக்கு இவ்விடங்கள் மறுக்கப்படுவதை நான் புரிந்துகொள்கிறேன். அது அவசியம் என்பதையும் அறிகிறேன். ஆனால் அவ்விசயங்கள் மக்களிடம் சென்று சேரும் வகையில் அதைப்பற்றிய படங்கள், ஆராய்ச்சிக்கட்டுரைகள், வரைபடங்கள் போன்றவைகள் அரசின் அமைப்பொன்றால் தயாரிக்கப்பட்டு வழங்கப்படல் வேண்டும். அல்லாவிடில் யாரோ எப்பவோ சொன்ன கட்டுக்கதைகள் (80 டன் கல் போல)மட்டுமே மக்களிடம் புழங்கும். மக்களும் தமது பாரம்பரியம், அறிவியல் பற்றிய உண்மையான அறிவை அடையமுடியாமற் போகும் என்பதைத்தான் மூடிவைத்தல் என்று குறிப்பிட்ட்டேன். நன்றி கிருபா.
Officialஆன படங்கள் ASIயில் கிடைக்கின்றன. ஆராய்ச்சிக் கட்டுரைகள் நான் குறிப்பிட்ட வரலாற்று இதழ்களில் அவ்வப்பொழுது வந்துகொண்டு இருக்கின்றன. மற்றபடிக்கு 80 டன் கல் போன்றவை புதிய கண்டுபிடிப்புகள் (?!) என்பதால் மக்களைச் சென்றடைய சற்று தாமதம் ஆகிறதென்று நினைக்கிறேன்.
க்ருபா
க்ருபாவின் கருத்தோடு நான் ஒத்துப் போகின்றேன்.
ராமநாதன், நீங்கள் அந்தப் படங்களை நீக்குவது நல்லது. காரணமின்றி தடை செய்திருக்க மாட்டார்கள்.
உங்கள் கட்டுரை படிக்க நன்றாக இருக்கிறது. தஞ்சைக் கோபுரப் பெருமையை விளக்குறது.
படங்கள் நன்றாக உள்ளன.
சுதர்சன் கோபால், sudharsan, ப.ம.க. தலைவரே, இராதாகிருஷ்ணன், தங்கமணி அவர்களே
மிக்க நன்றி
க்ருபா, g.raghavan அவர்களே,
இந்த விஷயத்தில் என்னுடைய கருத்து தங்கமணி அவர்களுடையதே. இருப்பினும், நீங்கள் சொன்ன மாதிரி படங்களை நீக்கி விட்டேன்.
ஏன் புகைப்படம் எடுக்க தடை செய்யப்பட்டுள்ளது என்பது எனக்கு புரியவில்லை. மேலும் காவலருக்கு தெரியாமல் எடுத்தவை அல்ல இவை. வெளியில் எடுத்துக் கொண்டிருந்த போது ஒன்றும் சொல்லாதவர், கொஞ்ச நேரத்திற்கு பிறகு திடீரென்று தடை என்றார். சொன்னதற்கு பிறகும் எடுத்தவை அல்ல. தெய்வச் சிலைகளையோ, பூசைகளையோ எடுக்காத போது என்ன தவறென்று தடுத்தார் என்றும் புரியவில்லை.
பெருவுடையாரின் அதிர்ஷ்டம் மற்றும் இராசராசனின் முன்னோர் செய்த புண்ணியம் - பெரிய கோயில் நல்ல விதமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. திருக்குற்றாலத்தில் உள்ள அற்புதமான சித்திர சபை கிட்டத்தட்ட முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது. இந்த மாதிரி கணக்கிலடங்கா வரலாற்றுச் சின்னங்கள் அழிந்து வருகின்றன. என்ன செய்வது, எல்லா இடங்களையும் அரசாங்கத்தினாலேயே பராமரிப்பது இயலாத காரியம். இதற்கு ஒரே தீர்வு, இத்தகைய இடங்களின் பெருமையையும், வரலாற்றுச் சிறப்பையும் மக்களுக்கு இன்னும் புரியும் வகையில் எடுத்துச் சொன்னாலே தவிர, அருமை தெரியாமல் கிறுக்கியும் சுரண்டியும் அழிக்கும் கூட்டத்தை தடுக்க முடியாது. அதைச் சரிவர செய்ய வில்லையோ என்று தோன்றுகிறது.
கடவுள் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளை புகைப்படம் எடுக்கக்கூடாதென்று சொல்வதிலேயே எனக்கு அவ்வளவு உடன்பாடு கிடையாது. அதற்கு வேண்டுமானால், கூட்ட நெரிசலில் அவரவரும் தம்மிஷ்டப்படி 'பிலிம்' காட்டினால் பிரச்சனை வருமென்று காரணம் சொல்லலாம்.
சானித்தியம் கெட்டுவிடும் என்பது அவரவரின் நம்பிக்கை. அதே கடவுள்களின் உருவங்களை புகைப்படமாகவும், படங்களாகவும் தேவஸ்தான ஆபீஸ்களில் பணத்திற்கு விற்கும் போது போகாத புனிதம் இதில் போய்விடுமா என்பதும் ஓன்று. கோயிலுக்கு வருவாய் என்று வந்துவிட்டால், பரவாயில்லை என்ற மாதிரியல்லவா ஆகிவிடுகிறது?.
இந்த மாதிரி சட்டங்கள் இருப்பதற்கான காரணம் தங்கமணி அவர்கள் சொன்னதுபோல் விளங்காமல் தான் இருக்கிறது.
எனவே கலைச்சிற்பம், கட்டிடக்கலை என்ற வகையில் பலரும் இந்த அதிசயங்களைப் பார்க்கலாம் என்றும், இதில் தவறொன்றும் இருப்பதாகத் தெரியவில்லை என்பதாலும் தான் பதிவு செய்தேன். வேறொன்றுமில்லை.
நன்றி
பி.கு: ஆராய்ச்சி என்ற பெரிய அளவிலெல்லாம் கிடையாது. ஆர்வம் மட்டுமே. விமானத்தின் மீதுள்ள கல் 80 டன் இடையுள்ளது என்னும் செய்தி, கடைசியாக இன்று காலை 7 மணி வரை பெரிய கோயில் இராண்டாவது கோபுர வாயிலில், 'உலகக் கலாச்சாரச் சின்னம்' என்னும் பலகைக்கு நேரெதிராக உள்ள தொல்பொருள் ஆராய்ச்சித்துறையின் தகவல் பலகையில் இருக்கிறது. எனவே இத்தகவல் தவறெனில் அதன் பொறுப்பு தொ.பொ.ஆராய்ச்சி கழகத்தினுடையது ;- )
//விமானத்தின் மீதுள்ள கல் 80 டன் இடையுள்ளது என்னும் செய்தி,//
80 டன் இடையில்லை!!!
எடைதான்.
:)
நன்றி ராமநாதன்.
கருவறைக்குள் புகைப்படம் எடுப்பதைத் தடுப்பதில் எனக்கும் உடன்பாடு கிடையாது. ஆகம விதிகள் உண்டான நாட்களில் புகைப்படக் கருவி இருந்ததா என்ன? சும்மா......ஏமாத்து வேலை.
தஞ்சைக் கோயில்களின் வெளிப்புறத்தில் நானும் புகைப்படங்கள் எடுத்திருக்கின்றேன். நந்திக்கு மேலே கூரையிலிருக்கும் ஓவியத்தைக் கவனித்திருக்கின்றீர்களா? பளபளக்கும் நீல நிறத்தில் கண்களைப் பறிக்கும்.
அதே போல முருகன் கோயிலின் சிற்ப வேலைப்பாடுகள் மிகவும் அருமை. மயில் மேல் அமர்ந்த முருகனைப் பார்த்தாலே ஓம் என்ற வடிவம் தெரியும். மிகவும் அழகு.
nalla pathivu
sa.sankar
sa.sankar, g.ragavan அவர்களே
மிக்க நன்றி
நீங்கள் சொல்லுவது போல் முருகன் கோயில் பிற்காலத்தில் கட்டப்பட்டதாயினும் அழகில் சிறிதும் குறைந்ததில்லை.
நந்தியைப்பற்றியும் அதன் மேலுள்ள கூரையைப் பற்றியும் பல கதைகள் உண்டு. :)
I thank you for these wonderful photographs.
I just want to mention that I donot think you should have removed some of the photos though. (I had saved my copies before you removed them, but others may also like to have them). Thanks again
arul
ரொம்ப நன்றிங்க.
ராமநாதன். அது கதையல்ல. உண்மைதான்.
பழைய நந்தி இன்னமும் தென்கிழக்கு மூலையில் கேட்பாரின்றி உட்கார்ந்திருக்கிறது.
முருகன் கோயில் கட்டிய காலத்தில் கட்டப்பட்டதுதான் இப்பொழுது இருக்கும் பெரிய நந்தியும் அதற்கான கூரையும். கூரை ஓவியங்களில் நாயக்கர் பாணி தெளிவாகத் தெரியும்.
இதுதானே ராமநாதன், நீங்கள் சொல்ல வந்தது?
அடடா, நான் எண்ணி எண்ணி வியக்கும் ஒரு இடம் தஞ்சை பெரிய கோயில். அதைப் பற்றிய பதிவுக்கு என் வாழ்த்துக்கள்!
ஆனால், சில புகைப் படங்களை வெளியிடக் கூடாது என்பதற்கு சரியான காரணம் எனக்குத் தெரியவில்லை.
எல்லோரும் கண்டு அனுபவிக்க வேண்டும் என்பதுதானே உண்மையாக இருக்க முடியும்? ஒருவேளை, வேறு ஏதாவதொரு பாதுகாப்புக் காரணமாக இருக்கலாம். எனக்குத் தெரியவில்லை!
Post a Comment