217. Wii+Mii=We-Me

மகளிர் மட்டும் படத்துல சிவாஜி சொல்ற - dreadful மிட்-லைப் டெபனிஷன் டயலாக்கான 'டெக்னாலஜி ஹேஸ் இம்ப்ரூவ்ட் வெரி மச்'னு எங்க முப்பது வயசுக்குள்ளயே சொல்ல வச்சுருவாங்களோனு அப்பப்ப பயமுறுத்துற மாதிரி விஷயங்கள் சிலது. நிறைய கண்ல பட்டாலும், விநோதமானதே நம்ம கண்ல படும்கறதால இதோ. இதையே ஒரு தொடரா போட்டு ஒப்பேத்துவோமில்ல. அன்லிமிடட் சப்ளை.

இன்னிய மேட்டர் குடும்பத்துள் கசமுசா...

வழக்கமான கதை. ஒரு அழகான குட்டி குடும்பம். ஆத்துக்காரர இராக் போய் டார்கெட் ப்ராக்டிஸ் பண்ணிட்டு வானு புஷ் அண்ணாச்சி அனுப்பி வச்சுருக்காரு. போன ஆத்துக்காரர் திரும்ப வர ஒரு வருஷம் ஆயிடறது. ஒரு வருஷ பணி முடியறதுக்கு முன்னாடி கொஞ்ச கொஞ்சமா இராக்லேர்ந்து தன்னோட பெர்ஸனல் ஐடம்ஸ்லாம் ஊருக்கு அனுப்பி வைக்கறாரு. திரும்ப வந்த ஆத்துக்காரருக்கு பயங்கர ஷாக். தன் அன்பு மனைவியுடன் யாரோ ஒரு மர்மக்காதலன் விளையாடிருக்கான்னு அவருக்கு தெரியவருது. இதக் காரணமா வச்சு மனைவிய கொளுத்தாம, ரீஜண்டான முறையில விவாகரத்து கோரியிருக்காரு.

இதுல என்ன புதுசு அப்படிங்கறீங்களா? புருஷன் எப்படி மனைவிக்கு காதலன் இருந்தான்னு கண்டுபிடிச்சாங்கறது தான்.

இந்த Wii னு ஒரு வஸ்து இருக்கு. இளவயசுப்பசங்க யாருனாச்சும் கிட்டக்க இருந்தா கேட்டுபாருங்க. அவங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். என்ன கிறிஸ்துமஸ் ஷாப்பிங் நேரத்துல கேட்கப்போய் அவங்களுக்கு வாங்கிக்கொடுக்கத்தான் கேக்கறீங்கனு நிறையவே அளந்துவிடுவாங்க. (இப்பல்லாம் கிறிஸ்துமஸ்/புது வருஷத்துக்கு இது வேணும்னு நேரடியா கேக்கறதோட இல்லாம, பெரிய ஆளுங்க வேற வந்து ரெகமெண்ட் பண்றாங்க. விவரம் இங்கே.)

ஆகமொத்தம் இந்த வீ ங்கறது ஒரு ப்ளேஸ்டேஷன் மாதிரி விளையாட்டு சாதனம். புரட்சிகரமானதுன்னா மிகையில்ல. குடும்பத்தோட விளையாட ஏத்தது. அது எப்படி குடும்பத்துல கலகம் செஞ்சுது?

புருஷன் நாட்டுக்கு திரும்பின உடனே அவனோட நண்பர்களும் அக்கம்பக்கத்தவர்களும் மனைவியப் பத்தி கொஞ்சம் விவகாரமா சொல்லிருக்காங்க. ஆனா அண்ணாச்சி நம்பல. மனைவிய கேட்டால் அவ இல்லவே இல்லேன்னு சாதிச்சிருக்கா. பாவம், அண்ணாச்சி நொந்து போயி ஒரு நாள் ஆசையாசையா தன்னோட Wii அ ஆன் செஞ்சு தன்னோட பேவரிட் கேமான பவுலிங்கை ஆரமிச்சுருக்காரு. அங்கன சிக்கிருச்சு பட்சி.

விஷயம் என்னன்னா அந்த கேம்-குள்ள ஆத்துக்காரர், அவரோட நண்பர்கள், மனைவி தவிர ஒரு புதிய profile (Miiனு பேரு இதுக்கு) இருந்திருக்கு. பளிச்னு ப்ளாஷ். இந்தாளு கூட ஒரு சின்ன fling இருந்துச்சு ஆனா அது முடிஞ்சு போன மேட்டர்னு மனைவி சொல்லிருந்தது நியாபகத்துக்கு வந்துருக்கு. ஏன் வந்துச்சுன்னா இந்த மீ ஒர் டிஜிடல் 'அவதார்'. அக்டோபர் மாசம் கலகம் பண்ணின அதே பாதகனோட அச்சு அசல் மாதிரி இருந்திருக்கு இந்த அவதார். புருஷன் சுதாரிச்சுகிட்டு உடனே மீ ஓட ஆன்லைன் ஃபாரம்களில் தேடவே அழகா அவரோட மனைவியும் அந்த அவதாரும் எந்தெந்த நாளைக்கு என்னென்ன விளையாட்டு (Wii console-ல மட்டுமே) விளையாடினாங்கனு புட்டு புட்டு வச்சுருந்திருக்காங்க அந்த ஃபாரம்களில்.

இப்படி அசைக்கமுடியாத ஆதாரம் கொடுத்தோன்ன மனைவி என்ன பதில் சொல்றதுன்னு தெரியாம முழி முழின்னு முழிச்சிருக்காங்க. லேட்டஸ்ட் நியுஸ் விவாகரத்துக்கு போயிருக்கு கேஸ். சாட்சி சொல்ல Wii வருமான்னு பொறுத்திருந்துதான் பார்க்கணும்.

முழு விவரம் இங்கே

என்னத்த சொல்ல, டெக்னாலஜி ஹேஸ் இம்ப்ரூவ்ட் வெரி மச்!

PS: எனக்கென்னவோ அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து வீ விளையாடின நாட்கள விட்டுட்டு விளையாடாத நாட்களப் பத்தி விசாரிக்க ஆரமிச்சா இன்னும் relevant details வரும்னு தோணுது! :)

216. பிறவிக்குணம், மூளை கழண்ட கேஸு

பிறந்த பிறவியினாலேயே வரும் குணங்கள் ஒரு சாராருக்கு மட்டுமே என்று நாம் இங்கே விவாதம் நடத்தி கிட்டத்தட்ட ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்திருக்கும் இந்த வேளையில், சன் ரீவியில் என்ன காரணத்தாலோ ஒளிபரப்பத் துவங்கப்பட்டு பாதியிலேயே நின்று போன அரசு திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் தமிழக முதல்வர் டாக்டர். கலைஞர் தன் பேச்சிலே குறிப்பிட்டு சொன்ன ஒரு விஷயம் என் கவனத்தை ஈர்த்ததனாலும் அதை வலையுலகில் யாரும் இதுவரை பதிவு செய்யாததன் காரணமாகவும் இதோ அதன் சாராம்சம். (quote unquote அல்ல. ஆனா அது மாதிரி இது...)

ஆட்சியில் இருக்கும் போதோ இல்லாத போதோ; ஆட்சிச்சக்கரம் சுழலும் போதோ சுழலாத போதோ; தமிழக மக்களுக்கு பணியாற்ற வேண்டியது என் பிறவியிலேயே வந்த கடமை என்ற உணர்வு இருப்பதாலேயே இந்த வயதிலும்.....

இப்படி அவர் பேசி முடித்ததும் சன் டிவி என்ன காரணத்தாலோ திடுதிப்பென்று நிகழ்ச்சியை பாதியிலேயே நிறுத்தி விட்டார்கள். நமீதா Uவாக இடுப்பில் அணிந்திருந்த ஆடை சற்றே நழுவி A ஆக அவையில் அனைத்து அகவையிலும் இருந்த கலையுலகத் தொடர்புடையவர்கள் மட்டுமே கண்டு களித்த அந்த வரலாற்று நிகழ்வை இருட்டடிப்பு செய்த சன் டிவிக்கு - இது வேண்டுகோள் வைக்கக்கூடிய இடமா என்று தெரியாததால்- கடுமையான கண்டனத்தையும் மறைக்காமல் முழுமையாக ஒளிபரப்ப வேண்டும் என்று ஒரு சாதா தமிழனாக இருப்பதால் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனிவே அடுத்த மேட்டர் - அதுல் சொந்தி

பார்த்தவுடனேயே இரத்தம் கொதித்தது எனக்கு. இப்படிப்பட்ட ஒரு காரியத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க நாதியே இல்லையே என்று உள்ளம் கலங்கும்வேளையில் நானாவது நமது பண்பாட்டின்படி எதிர்க்க வேண்டும் என்று துணிந்து இப்படி எழுதக்கூடியவன் ஒரு (குடிகாரன், எனக்கும் அவனுக்கும் ஜென்மப்பகையல்ல, அதுல் என்ற பெயருக்கு நான் எதிர்ப்பாளனுமல்ல, சொந்தி என்ற பெயரை படித்தவுடன் அவன் தொந்தி எப்படி என்று ஆராயும் முட்டாளுமல்ல) மூளை கழண்ட கேஸு - இவன் மூ.க.கேவாக இருக்கலாம் என்று விக்கிபீடியா கட்டுரை எழுதியவரே சொல்லியிருக்கிறார். நான் சொல்லவில்லை. விக்கிபீடியா சொல்கிறது. நான் சொன்னால் படிக்கும் உங்களுக்கு சந்தேகம் வராது என்று தெரிந்தாலும் சந்தேகமிருப்போரின் வீடுகள் அருகில் இல்லாத காரணத்தால் இதோ சுட்டி தருகிறேன். படித்துத் தெளிவுறலாம்.

ஷா ருக் என்று பிரபலமாக இந்திப்படவுலகில் அறியப்படும் நடிகரின் அல்லக்கைதான் இந்த சொந்தி. உண்மையில் சொல்லப்போனால் ஆடு/குரங்கு மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஷா ருக் 'அசத்தப்போவது யாரு'வில் வந்தால் நிரந்தர சாம்பியனாகியிருப்பார். உலகெங்குமுள்ள தமிழர்களின் உள்ளங்களில் ஒளிவிளக்கேற்றும் பேரன்புமிக்க இயக்குநர் திலகம் ஆண்ட்ரூ இவரை ஷோ வில் சேர்க்க ஆவன செய்தால், தமிழன் டிவி பார்த்து சிரித்தே சிரித்தே தன் சோகமனைத்தையும் மறந்துவிடுவான். உடனே போய் நேச்சர் பவர் பார் சோப்பும் வாங்குவான்.

இந்த சொந்தி ஒரு எளுத்தாளனே அல்ல என்பதற்கு என்னிடம் ஆதாரம் இருக்கிறது. இவனுடைய 'படைப்புகள்' காலச்சுவட்டிலோ, தீராநதியிலோ ஒருதடவை கூட பிரசுரிக்கப்பட்டதில்லை. சிற்றிலக்கிய சம்மேளனத்தின் R&D பிரிவான ஞாநியின் பூணூல் என்ற நுண்ணாராய்ச்சியில் இவன் பங்கெடுத்ததில்லை. சல்மாவிடம் கில்மா பண்ணியதில்லை. பா.ராவையோ எஸ்.றாவையோ இவன் வைததில்லை. சிவாஜிக்கு பின் (பா.) விஜயாவது தெரியுமா இவனுக்கு? நவீன இதிகாசகர்த்தா கவிப்பேரரசுவைத் தெரியுமா? குறைந்தபட்சம் வெளிக்கிட்டிருக்கும் மார்பகங்களும் கீறப்பட்ட யோனிகளும் என்று ஒரு கவிதையாவது எழுதியிருந்தானெண்டால் இவன் பெண்ணீயவாதி என்றாவது ஒத்துக்கொண்டிருக்கலாம். அதற்கு வழியில்லை. இதை நான் சொல்லவில்லை. வரலாறு சொல்கிறது. பேரறிஞர்கள் சொல்கிறார்கள். நான் வழிமொழிகிறேன் அவ்வளவே.

ஆகமொத்தம் எளுத்தாளனல்லாத ஒரு வெத்துவேட்டு ப்ளாக்கர்.காம்/ஐ.பி.என் தளம் இலவசமாக எழுதத்தருகின்றதே என்ற -ஓசியில் கொடுத்தால் எதையும் நக்கிப்பார்க்கும் அறிவிலிகளின் வழியில் ஒரு ப்ளாகை ஆரம்பித்து இவன் எழுதிக்கிழிப்பதையும் எழுத்து/படைப்பு/ஆக்கம் என்ற போலிப்போர்வையில் படிப்பவரை ஏமாற்றிக்கொண்டிருக்கிறான்.

இந்த சொந்தி சொல்கிறான். ஷாருக் கான் இந்திய சினிமாவின் ரோஜர் பெடரராம். @#@$^#&*@*(&^@)(*__(_*(*@^#@%%$@!

நீயெல்லாம் ஒரு ஆம்பிளையாடா? குடிபோதையில் இருப்பவர்கள் எழுதியதையெல்லாம் பிரசுரிக்கும் ஐ.பி.என் ஏனிப்படி ஷாருக்கிற்கு அல்லக்கையாக இருக்கிறது? ஒரு கமல்ஹாசனோடு ரோஜரை ஒப்பிட்டாலும்கூட பொறுத்திருந்திருப்பேன். போயும் போயும் ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்டோட கம்பேர் செய்ய என்ன துணிச்சல்? நீ எந்தக் கடையில் சாராயம் வாங்குகிறாய்?

உனக்கு ஷா ருக்கை அப்படி பிடிக்குமென்றால் பால் அபிஷேகம் செய், கட் அவுட் வை, அலகு குத்தி காவடி எடு. எப்படி என்று சொல்லிக்கொடுக்க எங்கள் சூப்பர் ஸ்டார்/தளபதி/அஞ்சா நெஞ்சனின் தொண்டர்கள் வரிசையில் நின்று காத்திருக்கிறார்கள். ஆனா அடக்கம் என்ற சொல்லிற்கும், திறமை என்ற சொல்லிற்கும் நவீன விளையாட்டுலக அகராதியில் இலக்கணமாக திகழும் ரோஜரை தயவு செய்து உன்னோட குப்பைத்தொட்டிற்குள் இழுக்காதே. விளைவுகள் விபரீதமாக இருக்கும்.

 

வார்ப்புரு | தமிழாக்கம்