241. திருட்டு டிவிடி எடுக்க ஆள் தேவை!

போன வாரம் வந்த செய்தி ஒன்றினை படித்தவுடன் எங்கே போய் முட்டிக்கொள்ளலாம் என்பது போல இருந்தது. இயன்முறை பயிற்சி (அதான்பா பிஸியோ தெரபி) அளிப்பவர்கள் சங்கம் இந்தியாவின் முன்னணி ஆர்த்தோ மருத்துவர்களில் ஒருவரான மயில்வாகன நடராஜன் மேல் பாய்ந்திருக்கிறது. அதுவும் கோமாளித்தனமாக. மரு. நடராஜன் உறுப்பினராக இருக்கும் ஆய்வுக் குழு ஒன்று தமிழக அரசுக்கு அளித்த பரிந்துரையே சர்ச்சைக்கு காரணம். அதாவது இயன்முறை பயிற்சியளிப்பவர்கள் Dr. என்று போட்டுக்கொள்ளக்கூடாது; அவர்கள் எக்ஸ்-ரே, இரத்த பரிசோதனை போன்றவற்றை நோயாளிகளுக்கு பரிந்துரைக்கக்கூடாது என சில அம்சங்கள் அப்பரிந்துரையில்.

இயன்முறை பயிற்சி அளிப்பவர்கள் மட்டுமல்ல இன்னும் என்னவெல்லாமோ படித்தவர்களெல்லாமும் இப்போதெல்லாம் Dr. என்று போட்டுக்கொண்டு வளைய வருகிறார்கள். போகிற போக்கில் நியாயமாக நவீன மருத்துவத்தை கல்லூரிகளில் கற்றுத்தேறுபவர்கள் Dr. என்பதை விட்டுவிட வேண்டும் என்று கூட இவர்கள் கோரிக்கை வைப்பார்கள். 'நாங்கள் நோயாளிகளை லேப்-புக்கு அனுப்பலாமா, டாக்டர் என்று போட்டுக்கொள்ளலாமா என்றெல்லாம் முடிவு செய்ய மயில்வாகன் நடராஜனுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது' என்று பேசும் இந்தச் சங்கத்தின் மூடர்களுக்கு அவர் யார் என்று தெரியாமல் போனதில் ஆச்சரியம் இல்லை.

இப்போதெல்லாம் பையோகெமிஸ்ட்ரி/லேப் டெக்னாலஜி படித்தவர்கள் டெஸ்ட் ரிஸல்ட்களை interpret செய்கிறார்கள், நர்ஸிங் படித்தவர்கள் சில OP ப்ரோஸிஜர்களைச் செய்கிறார்கள், பார்மகாலஜி படித்தவர்கள்/மருந்து கடையில் வேலை பார்த்தவர்கள் மருந்துகளை பரிந்துரைக்கிறார்கள். இப்படி மருத்துவர்கள் செய்ய வேண்டிய காரியங்களை, முறையான பயிற்சியற்ற சகலரும் தப்பும் தவறுமாக தொடர்ந்து செய்து வருவதுடன், நோயாளிகளை ஏமாற்றும் வகையில் Dr. என்று வேறு போட்டுக்கொண்டு தனி க்ளினிக்கே வைத்துச் செய்கிறார்கள். இதை அவர்களின் தகுதியின்மையை காட்டி எதிர்க்கப்போனால், மருத்துவர்களின் வருமானம் பறிபோகிறது என்கிற காரணத்தினால் எதிர்க்கிறார்கள் என்று திசை திருப்பி அரசியலாக்குகிறார்கள்.

துணிந்து முடிவெடுக்க ஒரு பரிசீலனைக்குழு முனைந்து பரிந்துரைகளும் அளிக்கின்ற நேரத்தில், முதல்வரின் பிரத்யேக மருத்துவர் இந்த நடராஜன் என்ற லின்கை பிடித்து தொங்கி, கலைஞரை வார வேண்டிய அரிப்பில், ஜூனியர் விகடன் "முதல்வரின் மருத்துவர் செய்யும் கெடுபிடி" என்ற பொருள் படும்படி விஷயத்தையே திரித்து செய்தி வெளியிடுகிறது. இவர்களையும் நம்பி ஏமாற மக்களே தயாராக இருக்கும்போது நமக்கென்ன என்று போவதுதான் மருத்துவர்களின் தற்போதைய மனநிலை. ஏதாவதொரு விபரீதம்/சோகம் நிகழும் வரை மீடியாக்களுக்கோ மக்களுக்கோ க்ளினிக் வைத்து முழுக்கை சட்டை போட்ட எல்லாரும் "Dr." தான்.
------------------------------------------------
வாரணம் ஆயிரம் தியேட்டரில் போய் பார்த்தேன். துரை தயாநிதி தியேட்டருக்கு வந்து பார்ப்பவர்களுக்கெல்லாம் பிரியாணி போடப்போவதாக கேள்விப்பட்டவுடனே எடுத்த முடிவு அது. (அபச்சாரம் என அலறும் மாமா/மாமிகள் கவனிக்க: லெக் பீஸை எடுத்துவிட்டு குஸ்கா மட்டும் சாப்பிடத்தான் போனேன்). என் துரதிருஷ்டம் நிஷா வந்து அடித்து ஊத்தியதில் பிரியாணி வாங்க என்னைத்தவிர யாரும் இல்லை. அந்தக் கடுப்புடன் தியேட்டரில் நுழைந்த எனக்கு வாயில் அவலாக அல்லாமல் கௌதம் அன்று தப்பிக்க பெரிதும் உதவியவர்கள் சூர்யா மற்றும் சூர்யா. மேக்கப் அங்கங்கே அசடு வழிந்தாலும், சூர்யா வளைந்து நிமிர்ந்து கலக்கிவிட்டார். வேட்டையாடு அளவுக்கு ஆர்வக்கோளாறு இல்லாமல் கௌதம் அடக்கி வாசிப்பதும் பரவாயில்லை. லெப்ட் லிபரல் இண்டெலிஜென்சியா என கரித்துக்கொட்டப்படும் கேட்டகரியில் வர வாய்ப்புள்ள நம்மில் பலர் கூட அப்படியெல்லாம் பணம் கொடுத்து மூணு மாசம் அமெரிக்காவில் போய் தேடிட்டு வா என்று அனுப்புவோமா என்பது சந்தேகம். அதைவிட எளிதான கார்யம் - சமீராவின் தந்தையை சந்தித்து நிலைமையை விளக்கி எளிதாக தீர்த்திருக்கலாம். கௌதமுக்கு அமெரிக்கா ரொம்ப பிடித்துவிட்டதோ என்னமோ. சமீராவை இன்னும் கொஞ்சம் நேரம் பார்க்க வாய்ப்பு வழங்கிய ஒரே புண்ணியத்திற்காக மன்னிக்கலாம்.
------------------------------------------------
"அனல் மேலே பனித்துளி" என்று கிணத்திலிருந்து பாடவைத்த ஹாரிஸ் ஜெயராஜின் கைங்கர்யத்தாலோ "பரம்பராவில் இது மாறுமோ" என்று அருவியில் பாடியதாலோ சென்னையில் இந்த வருஷம் சுதா இரகுநாதனுக்கு மாலை 4:30 மணி ஸ்லாட் என்று கேள்வி. ஏற்கனவே மெக்ஸிகோவிற்கோ எங்கேயோ போய் அரை ட்ராயருடன் போட்டோ எடுத்துக்கொண்டதோடு சும்மா இல்லாமல் அதை ஆனந்த விகடனில் வேறு பிரசுரித்த சுதாவுக்கும், அதே விகடனில் கைவைக்காமல் தோள் தெரிய வளைய வந்த சௌம்யாவுக்கும் இந்த வருஷம் மாமிகள் மத்தியில் ஆதரவும் ரொம்ப குறைவு என்றும் கேள்வி. எனக்கென்னவோ, தங்கள் வீட்டு வயசுப்பெண்கள் செய்யும் அதகளத்தை கண்டிக்க முடியாத ஆற்றாமை தேங்கி வழிந்து கரைபுரண்டு இவ்விரு புனிதப்பிம்பங்கள் மேல் திரும்பிவிட்டதோவென சந்தேகம். எங்கிருந்தோ வந்த சுடிதாரும் சல்வாரும் (வடக்கிலிருந்துனு குதர்க்கம் பேசப்படாது) தமிழ்நாட்டின் நேஷனல் ட்ரெஸ்ஸாகிப்போயிருக்காவிட்டால் நைட்டி ஆகியிருக்கும். இதற்கு சுடிதார் எவ்வளவோ தேவலை. இதற்கு மேல் இதை திருவினால், கலாச்சாரம் என்ற சுமையை பெண்களின் மேல் மட்டும் திணிக்கும் கொடுமை காலங்காலமாக நிகழ்ந்து வருகிறது என்று ஈயச் சாயம் பூசப்படும் அபாயம் அதிகம்.
---------------------------------------------------
பெடோரா 10 வெளிவந்த செய்தி பார்த்ததும் விண்டோஸுக்கு மாற்றாக லின்க்ஸ் பாவித்து பார்க்கலாம் என்ற விபரீத எண்ணத்துடன் பழைய மடிக்கணினியில் ஜன்னலை சாத்தி பெடோராவை நிறுவ முயன்றால் சான்ஸே இல்லை என்று சுருண்டுவிட்டது. சரியென்று உபுண்டு நிறுவினேன். alternate install/low mem install செய்தும் பயனின்றி ஆமை போல வேலை செய்த கணினிக்கு xubuntu வே தீர்வு என்று இறங்கினால் அங்கேயும் சூப்பர் ஸ்லோ. 192 mb ramஇல், 1.6 Ghz 64-பிட் AMD Turion, 60 Gig என மிகவும் சக்திவாய்ந்த கணினியாக்கும் (நான் வாங்கின வருஷத்தில்). ஒரு மாதிரி இணையத்தில் குருடனாய்த் துழாவித்துழாவி LXDE டெஸ்க்டாப் நிறுவி வைத்துள்ளேன். இப்போது பரவாயில்லை எனினும் விண்டோஸ் XP இன்னும் வேகமாக வேலை செய்கிறது. லினக்ஸ் ஆதரவு/வெறியாளர்கள் யாராச்சும், எல்லாவற்றிற்கும் point & click செய்தே பழக்கப்பட்ட லினக்ஸ் அரிச்சுவடி அறியாத அடிப்பொடியான என்னை டெர்மினலினுள்ளேயே சுற்றிவரும் டாம் ஹேன்க்ஸ் மாதிரி ஆக்காத ஒரு ஃபாஸ்டான டிஸ்ட்ரோவை பரிந்துரைக்க வேண்டுகிறேன்.
--------------------------------------------------
மெட்ராஸில் இருக்கும் ரசிக சிரோன்மணிகளே - அதிலும் நல்ல டிஜிடல் HD ஹேண்டிகாம் வைத்திருக்கும் கண்மணிகளே, உடனடியாக நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றுதான். டிசம்பர் 18 அன்று வெளிவரவிருக்கும் 'மார்கழி ராகம்' படம் வெளியாகும் தியேட்டருக்கு சென்று திருட்டு டிவிடி எடுத்து காப்பி அனுப்பிவைக்கவும். சரியான காப்பி அனுப்புபவர்களுக்கு பேரும் புகழும் பிள்ளையும் செல்வமும் கல்வியும் கேள்வியும் வேள்வியும் சித்திக்க எல்லாம் வல்ல கிருஷ்ணா பகவான் அருளாமல் கண்ணாலேயே எரித்துவிடுவார் என்றாலும் அவர் அடியார்களுக்காக இச்சிறுத்தொண்டை செய்தால் பன்னிருவரோடு சேர்த்து உங்களையும் பதிமூன்றாக்க ஆவன செய்யப்படும்.

படத்தை பற்றிய முன்னோட்ட மின்னஞ்சலைப் பார்த்தபோது ஒன்றும் புரியவில்லை. விஜயில் வரும் ட்ரெயிலரைப் பார்த்தால் டபுளாக வயிறெரிகிறது. சென்னையில் இருப்பவர்களைக்கண்டு.

இப்படிக்கு
இப்படம் வெளியாக வாய்ப்பே அற்ற, கலைவளர்த்த சோழரின் மண்டலத்தின் தற்போதைய கலையார்வத்தை நினைத்து நொந்திருப்பவன்

240. காமத்தின் குறைந்தபட்ச(ம்) அதிகரிப்பு!

மாஸ்டர்ஸ் கோப்பை கை நழுவிவிட்டது. போகட்டும். ஜோக்கரின் வெற்றி தற்காலிகமானதுதான். தி டார்க் நைட் (உபயம்: நைக்கி) துவளாமல் அடுத்த வருடத்திற்குள் துள்ளி எழுந்து வரலாறு படைப்பாரா என்று காத்திருக்கிறேன். ஒரு ஆல்ப்ரெட் கிடைத்தால் வெற்றி நிச்சயம்... இது வேத சத்தியம் என வைராக்கிய சிச்சுவேஷன் சாங்க் வைக்க வசதியாக இருக்கும்.



தி டார்க் நைட் - படம் அட்டகாசம். ஹீத் லெட்ஜர் இறந்தபிறகு பார்ப்பது ஒருவிதமாக இருந்தது. தி பைரேட்ஸ் ஆப் கரீபியன் - ஜானி டெப்-பின் பாதை உடைக்கும் நடிப்பினைப் போல ஜோக்கராக வரும் லெட்ஜருடையதும். கல்ட் பெர்பாமன்ஸ் என்பார்களே. கிறிஸ்டியன் பேல் ஈக்விலிப்ரியம் எனும் கண்றாவி படத்தில் நடித்ததிலிருந்தே என் ஆதர்ச நடிகர்களில் ஒருவராகிப்போனார். அதற்கப்புறம் மஷினிஸ்ட், தி ப்ரெஸ்டீஜ் என சிக்ஸர் மேல் சிக்ஸர் அடித்துக்கொண்டிருந்தவருக்கு ’பேட்மேன் பிகின்ஸ்’ வந்து உச்சத்திற்கு உசத்தி விட்டது.

(பி.கு: அப்புறம் உலகநாயகர்கள் ”படத்துக்கு அவ்ளோ ஹோம்-ஒர்க் செஞ்சேன், ஆனால் புரிந்துகொள்ளும் தகுதிதான் பார்ப்போருக்கு இல்லை” என அக்ரஹாரத்துப் பாட்டியென்று சொல்லி பேய் மேக்கப் அப்பிக்கொள்வதையெல்லாம் பில்டப் செய்து புரியாத கவிதை பேசுவதை வாய்திறந்தபடி படிப்போர் அனைவரும் பார்க்க வேண்டியது மஷினிஸ்ட்! குறைந்தபட்சம் நிழற்படங்களையாவது கூகிளில் தேடவும்.)

ஒரு நுண்ணணு ஆறுதல் - சரியா வருதா? குவாண்டம் ஆப் சோலஸ் இன்னும் பார்த்த பாடில்லை. ஈபர்ட் காறித்துப்பியிருக்கிறார். அதனால் பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் குறைந்துவிட்டது.


சென்னை சட்டக்கல்லூரி வளாகத்தினுள் நடந்ததை நேரலையில் பார்க்கமுடியவில்லை. அதற்க்காகவாவது, அடுத்த முறை விஜய்ஸ், அஜித்ஸ், ரஜினிஸ் எக்ஸெட்ரா வகையினர் கல்லூரியில் புகுந்து கலாட்டா செய்யும் பொன்னம்பலம், சங்கர், ஆனந்தராஜ் போன்றவர்கள் புரட்டி நொறுக்கும்போது ஒரு முன்னறிவிப்பு கொடுத்தால் தேவலை. உலகத்தொலைக்காட்சிகளில் முதல்முறையாக கடைசியில் கூட போலீஸ் நுழையாத பல திருப்பங்களுடன் என விளம்பரம் செய்து பண்டிகை/விடுமுறை நாட்களில் ஒரு “இண்டர் கட்சி சாம்பியன்ஷிப்” காட்டலாம். ஸ்பான்ஸர்கள் பிடிப்பது அவ்வளவு கடினமாக இராது.

இந்த ஜந்துக்களெல்லாமும் நாளைக்கு படித்து வக்கீல்களாக/எம்.எல்.ஏ என சுமோ/குவாலிஸிஸ் பவனி வரும். ஆளுயர கட் அவுட் வைத்து மாலை போட்டு தமிழ்நாட்டின் அலெக்ஸாண்டரேனு அடிப்பொடிகளெல்லாம் ப்ளெக்ஸ் போர்ட் வைத்து குத்தாட்டம் போடுவதையும் பார்க்கத்தான் போகிறோம். ஆனால் அதையெல்லாம் ப்ளாகில் எழுதி நேரத்தை வீணடித்துக்கொண்டிருப்போமா என்றால் இல்லை.


பைக்கில் அமர்ந்தபடி, விஜய் முடியைக் கலைத்துக்கொண்டு விரலை வைத்து விஷ்க் விஷ்க் என பஞ்ச் டயலாக் பேசினாலும் பேசினார், தமிழ்நாட்டு தெருக்களில் விஜய் ரசிகர்கள் அதிகமாகிவிட்டனர். அவரைப்போலவே ஒரு ரெண்டு நாள் தாடியுடன் ஒரு மோட்டார் பைக்கில் ஏறிக்கொண்டு பாயிண்டு டு பாயிண்டு சர்வீஸ் விட்டுக்கொண்டிருக்கின்றனர். நடுவில் ப்ரேக், ஹார்ன் போன்ற வஸ்துக்களை பயன்படுத்துவதில்லை என்ற வைராக்கியத்துடன். தப்பித்தவறி இப்படி ஹீரோயின் காக்க/பாக்க பறந்து கொண்டிருக்கும் விஜய்களின் பாதையில் நாம் குறுக்கே சென்றாலோ (ராங் சைடில் வந்தாலும் விஜய் ரசிகருக்கு வழிவிட வேண்டியது நம் கடமை), அல்லது ஹார்ன் அடித்தாலோ விடுகிற லுக் இருக்கே. யேய்... யேய்ய்ய்ய்ய்ய்ய்.... யேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்... யேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் என அர்த்தமுள்ள வசனங்களை பேசிக்கொணடே வில்லனை பார்வையாலேயே எரித்துவிடுவது போல இ.த டாக்டர் விஜய் பார்ப்பாரே. அந்த லுக்கை பார்த்தவுடன் நாம் தான் தப்பாக வந்துவிட்டோமோ என்று சந்தேகம் வந்துவிடும்.

விலை மலிகிறது, அவனவன் பைக் கார் என வாங்குகிறான். அதோடு காசு கொடுத்தால் டோர் டெலிவரி செய்யப்படும் லைசென்ஸையும் வைத்துக்கொண்டு தெருக்களில் விடும் அளப்பரை தாங்கமுடியவில்லை. சைக்கிள் வைத்திருந்தவன் ஸ்கூட்டருக்கு மாறினால் அது வரவேற்க்கப்படவேண்டிய பொருளாதார வளர்ச்சி என்றாலும் சைக்கிளைப் போல் ஸ்கூட்டரையும் இஷ்டத்துக்கு ஓட்டுவது என வைத்துக்கொண்டு திரிகிறார்கள். இவர்கள் தொல்லை ஊர்களுக்குள் மட்டுமின்றி நெடுஞ்சாலைகளிலும் அதிகரித்துவிட்டது. ரேஸிங் பைக்கை ஓட்டுகிற ஸ்டைலில் ரெண்டு இஞ்சு அகலமுள்ள டயருடன் கூடிய வண்டிகளை தறிகெட்டு ஓட்டி அதோடு நில்லாமல் பதினைந்து இருபது மடங்கு சக்தி அதிகம்வாய்ந்த கார்களுடன் போட்டி வேறு போட்டு நம் பிராணனை எடுக்கிறார்கள்.


சானிடரி நாப்கின் வரை அரசியல் வந்துவிட்டாலும் எதற்கு எனக்கு. நான் ரொம்ப பயந்த சுபாவம் உடையவன்.

எனினும் கலைஞருக்கு நன்றி சொல்லக்கடமைப் பட்டிருக்கிறேன். அவர் உபயத்தால் சென்ற ஞாயிற்றுக்கிழமை காலை எனக்கு தெய்வ தரிசனம் சன் ரீவியில் கிட்டியது. எனது ஆஸ்தான முடிதிருத்துபவர் கடையில் அரசு தொலைக்காட்சிப் பெட்டியின் வழியாக. சிறிய அளவில் இருப்பது ஒன்றே குறை. மற்றபடி ஒலி, ஒளியில் தவறாய் ஒன்றும் தெரியவில்லை.


மின்வெட்டுகள் ஓரளவிற்கு குறைந்துள்ளது. கிராமங்களில் எப்படியோ. எனினும் வீட்டிற்கு இன்வெர்டர் போட்டால் வயரிங் எல்லாம் திரும்ப செய்யவேண்டும் என்று சொல்லப்பட்டதையடுத்து ஹோண்டா ஜெனரேட்டர் வாங்கலாம் என்று பார்த்தோம். ஸ்டார்ட் செய்ய பெட்ரோலும் தொடர்ச்சியாக ஓட கெரசினும் வேண்டும். விசேஷம் என்னவென்றால் கெரசின் வெளி மார்க்கெட்டில் கிடைப்பதில்லையாமே? ரேஷன் கடைகளில் குறைந்தவிலைக்கு வாங்கப்பட்டு கறுப்புச் சந்தையில் ரூ.30-35 வரை விலைக்கு வருகிறது. ரேஷன் கடையில் கெரசின் வாங்குவோர் வாங்கக்கூடிய விலையில் இல்லாத இந்த ஜெனரேட்டரை எந்த தைரியத்தில் ஹோண்டா நிறுவனம் தமிழகத்தில் விற்பனை செய்கிறது? அரசுதான் எப்படி அனுமதி வழங்கிற்று? புரியவில்லை.


மேலே இருக்கும் பத்திகளையெல்லாம் ஸ்கிப் செய்துவிட்டு தலைப்பு மேட்டர் படிக்கவென கடைசி பத்திக்கு வந்திருப்போரின் ஆர்வத்தை பாராட்டியபடியே, இதுவரை பொறுமையாய் படித்துவந்த நல்லவர்களுக்கும் நன்றி சொன்னபடியே இதோ தலைப்பு மேட்டர்.


ஐசிஐசிஐ வங்கியில் நகர்ப்புற கணக்குகள் வைத்திருப்பவர்கள் இனி குறைந்தபட்ச காலாண்டு இருப்பாக (QAB) ரூ. 10,000 வைத்திருக்கவேண்டும் என்று ஜூலை 1 லிருந்து மாற்றியிருக்கிறார்களாம். அதாவது average-ஆக ஒரு காலாண்டின் ஒவ்வொரு நாளிலும் உங்கள் கனக்கில் ரூ. பத்தாயிரம் இருக்கவேண்டும். இல்லாதபட்சத்தில் அதற்கு அபராதமாக ரூ. 800+ சொச்சம் எடுத்துக்கொள்வார்கள். நான் கேட்டதற்கு "வீட்டிற்கு தபால் அனுப்பினோம், வரவில்லையென்றால் நாங்கள் பொறுப்பில்லை" என்று எடக்கான பதில். சண்டை போட்டு அதை மாற்றவேண்டியதாக போயிற்று. ஆகவே ஐசிஐசிஐ கணக்கு உள்ளவர்கள் ட்ரான்ஸாக்ஷன் ஹிஸ்டரியை ஒரு முறை சரிபார்த்துக்கொள்ளவும்! கூட்டிக்கழிச்சு பாருங்க...தலைப்பு சரியா வந்துருச்சா?

239. அவியல் - Just Tongue Dip!

மின்வெட்டு பத்தி பலரும் எழுதி, சலிச்சுப்போய் அது இப்போ ஒரு non-issue ஆவே ஆகிடுச்சு. அதுக்காகவே மின்வெட்டுத்துறை அமைச்சரை பாராட்ட வேண்டிய கட்டாயத்துல நாம இருக்கோம். கழக ஆட்சி இல்லாத மாநிலங்கள்லலாம் வெட்டலியானு புத்திசாலித்தனமான கேள்விகள் சிலர் கேட்கறாங்க. நைஸ்!

தலீவர்முதுகுசொறிதல் விழா
(அண்ணா நூற்றாண்டு நினைவு விழா) பார்க்க சகிக்கவில்லை. வைரமுத்து வீராசாமியை வாரி, தலைவரை நக்கினார். டயமண்டுக்குச் சரி,வாலிக்கு இந்த வயசில் இதெல்லாம் தேவையா? அப்புறம் சமீபத்துல போயிருந்த ஒரு திருமண விழால வைரமுத்து பேசிய பேச்சு அவரு எந்நேரமும் உண்மையான சமூக அக்கறையோட மட்டுமே இருக்காருன்னு புரியவச்சுது. சாதி அப்படிங்கிறதுக்கு பொலிடிக்கலி கரெக்ட் வார்த்தை தான் சமூகமாம். அதுவும் சமீபத்துல தான் எனக்கு புரிஞ்சது.

டமிளச்சி டங்கபாண்டியனிடம் - விழக்கு இல்லை விளக்கு என்பதையாவது யாராவது விளக்கினால் புண்ணியமாக போகும். தமிழ் திணறுகிறது.

சென்னைல (பத்திக்கு பத்திக்கு கனெக்ஷன் இருக்கணும்னெல்லாம் எதிர்பார்க்கக்கூடாது) ரொம்ப நாள் கழிச்சு ஒரு ரெண்டு நாள் தங்கற மாதிரி ஆச்சு. அதுல பிரமிட் அண்ணா (அண்ணா சாலைல காஸ்மோபாலிட்டன் க்ளப் பக்கத்துல) அப்படிங்கிற தியேட்டர்ல போய் 'சரோஜா' பார்த்தே விட்டேன். படம் தேவலை. தியேட்டர்ல ஆடியோதான் சுமாரா இருந்தது. சத்யம் தொடங்கி ஐனாக்ஸ் வரைக்கும் எங்கயும் டிக்கட் லேது. மெட்ராஸ் யூத் புல்லா தியேட்டர்லயே இருக்காங்க போலிருக்கு.

ஜெயராமை தமிழ் ஆளா காமிச்சு, அவர் கடசீல சாவறாரோ இல்லியோ தமிழ சாவடிக்கிறார். இதுக்கு பதிலா மலையாளத்தில் பேசற ஒரு கேரளத்து சேட்டனாவே இனி நடிக்க வைக்கலாம்.

லென்சுமாமாவோ சிற்றிலக்கியவாதிகளுக்கு மட்டும் சப்ளை செய்யகிடைக்கும் வள்ளல்களோ யாரும்கூட வரலேன்னாலும் 'டப்ளினில்' என்ன நடக்குதுனு பாக்கணும்னு போனேன் (the most happening place in chennai -னு பில்டப்புடன்). நாசமாப் போனவர்கள் செவ்வாய்க்கிழமை மாங்காடம்மனுக்கு விரதமாம். லீவு விட்டுவிட்டார்கள். பக்கத்தில் உள்ள தக்ஷினில் ஐஸ்வர்யா (விஜயதசமிக்கு நல்ல சேதி உண்டா என்று கேட்டு அடிவாங்க நான் தயாராக இல்லை) அண்ட் தனுஷ் (மைனஸ் யாத்ரா) தரிசனம் கிடைத்தது. பின்னால் வந்த பெண் சோனியா அகர்வாலா இல்லியா என்கிற எங்கள் தொடரும் பட்டிமன்றத்திற்கு இன்னும் விடைகிடைக்கவில்லை.

சென்னை மரீனாவுக்கு போனால் நொந்திருவேன்னு சொல்லப்பட்டதால் (வலைப்பதிவர் சந்திப்பு அல்ல - கூட்டநெரிசல் தான் காரணம்) பெசண்ட் நகர் போனேன். அந்த சாலை முழுவதும் ஃபுல். ''பார்க்கிங்கிற்குள் என் கார் நுழைந்தது. பின் வெளியே வந்தது. பின் மீண்டும் நுழைந்தது என கண்ணாமூச்சி விளையாடி ஒருவழியாக இடம் பிடித்தேன்.'' மிளகாய் பஜ்ஜி, மிக்சட் பஜ்ஜி என 15ரூபாய்க்கு அஞ்சு பஜ்ஜி கொடுக்கிறார்கள். அது காரம் போட்ட மாங்காய், கடலை சுண்டல், குல்பி ஐஸ்க்ரீம், சோளம் என வகைதொகையில்லாமல் வெங்கலக்கடையில் புகுந்த ஆனையாய் ஆட்டம் போட்டேன். பலவாண்டுகள் கழித்தும் பட்டம் ஒன்று வாங்கி விட்டேன். கூட இருந்தவர்களிடம் கொசுவர்த்தி சுத்தி கழுத்தறுக்கலாம் என்று பார்த்தால் அவர்களெல்லாம் ஒரு டார்டாய்ஸ் கொடவுனையே வைத்திருந்தார்கள்.

சென்னையின் ஆகப்பெரிய மால் ஆகிய ஸ்பென்சரில் இரண்டாவது மாடியில் ஒரு வடக்கத்திக்காரர் பானிபூரி விற்கிறார். நல்ல கூட்டம். தன் பொற்கரங்களால் பானி பூரியை எடுத்து ஓட்டை போட்டு சட்னியில் முக்கி கொடுக்கையில்... ஆஹா. என்ன அந்த காட்சியைப் பார்த்தபடியே சாப்பிட்டால் பூரி உள்ளே இறங்காது. டேஸ்ட் என்னவோ நன்று.

கேபிள் டிவியிலிருந்து டி.டி.எச் க்கு மாறினபின் துல்லியமாக 'நாக்க முக்க' (மட்டுமே) கேட்க முடிகிறது. அப்படியாவது வரிகள் புரிகிறதா என்றால் இல்லை. சரி புரிஞ்சவங்களையாவது கேப்போமேன்னா, சித்தி பசங்க 'நீயெல்லாம் போன ஜெனரேஷன் டா'ங்கிற மாதிரி ஒரு பார்வை பாத்துட்டு போயிட்டாங்க. சகஸ்ரநாமம் மட்டுமென்ன ஒரே நாளிலா புரிஞ்சுருது. எல்லாம் நாப்பழக்கம் தானே.

ஸ்டாரில் "Moment of Truth" என்று நிகழ்ச்சி வருகிறது. அதை நம்மூரில் நடத்தினால் எப்படியிருக்கும் என்று பார்க்க எனக்கு ரொம்ப ஆசை. விஜய் இதையும் இம்போர்ட் பண்ணினால் மெகா சீரியல் டி.ஆர்.பில்லாம் ஒரே நாளில் அவுட் என்பது நிச்சயம்.

டிஸ்கி
1. tongue dip என்பதில் பெரிய சூத்திரமெல்லாம் இல்லை. தமிழாக்க வேண்டியதுதான்.
2. இந்தப்பதிவை படிச்சு கருத்து சொல்லுங்கனு கூப்பிடக்கூட இப்பல்லாம் பயமா இருக்குபா.

238. பீட்டரின் கோர்ட்டில்... - 1

ஊர்பொறுக்கி பலநாளாகிவிட்டபடியால் எங்காவது ஒரு குட்டி பிக்னிக் போவோமென்று நினைத்திருந்த நேரத்தில் பீட்டரின் கோர்ட்டிலிருந்து சம்மன்ஸ் வந்திருப்பதாக நண்பர் சொன்னார். என்ன கோர்ட், எதுக்கு சம்மன் அப்படினு ஒரு பக்கம் இருந்தாலும், போகாமல் இருக்கமுடியாது என்ற காரணத்தால் ஞாயிறன்று கிளம்பினோம்.

சபர்பன் ரயிலில் 40 நிமிடப் பயணம். அங்கே எல்லாமே டூரிஸ்ட் ரேட்டில் இருக்கும் என்று கேள்விப்பட்டிருந்த படியால், இங்கேயே மூட்டை முடிச்சு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் (அதாவது ரொட்டி, சீஸ், சாலட் இன்னபிற) கட்டிக்கொண்டு சென்றோம்.

ஊரின் பெயர் Peterhof. டச்சு மொழியில் பீட்டரின் கோர்ட் (court) என்று அர்த்தம். ரஷ்யாவின் வெர்ஸாய் என்றும் அழைக்கப்படும் ஊர் இது. சுமார் நூற்றைம்பது நீரூற்றுகளும் (fountains) நான்கு தொடரூற்றுகளும் (Cascades) என அமர்க்களப்படுத்தும் இவ்வூரின் அரண்மனைகள் 'தண்ணி வச்சு காட்டும் வித்தைக்கு' நிகராக வேறொன்றை பூலோகத்தில் காணவியலாது என்று பில்டப் நிறையவே கொடுத்திருந்தார்கள்.

ரயில் நிலையத்தில் இறங்கினால் பேருந்துகள் அனைத்திலும் fountains என்று அடைமொழியில் எழுதிவைத்திருக்கிறார்கள். பத்துநிமிடத்தில் ராட்சத வாயிற்கதவுகளின் அருகில் எங்களை இறக்கிவிட்டார்கள். கடலை, சிப்ஸ், பாப்கார்ன் அதோடு வெகுநாளைக்குப் பிறகு பஞ்சுமிட்டாயும் (அநியாயம் என்னவென்றால் ஒரு மிட்டாய் 1 யூரோ! எனக்கு நம்மூர் எக்ஸிபிஷனும் பீச்சும் நினைவுக்கு வந்து தொலைத்தது) என தயாராய் வைத்திருந்த வஸ்துக்களோடு அரண்மனை காம்ப்ளெக்ஸினுள் நுழைந்தவுடன் வாயைப்பிளந்தபடி எடுத்த படம் இது...


Midway Fountainஇது முதலில் வரவேற்கும் Midway fountain

அரண்மனைக்கட்டிடம் வரையிலான இத்தோட்டத்திற்கு Upper Gardens என்று பெயர். இதைச்சுற்றி ஒரு ரவுண்ட் வந்தபடியே அரண்மனையை நோக்கி நடக்கத்தொடங்கினோம். அடுத்து வந்தது 92 மீட்டர் நீளமும் 33 மீட்டர் அகலமும் கொண்ட பிரம்மாண்டமான Neptune Fountain.

Neptune FountainNeptune Fountain நடுவில்.. வேற யாரு? Neptune தான்...

ஜெர்மன் முறைப்படி அமைக்கப்படிருக்கும் இந்த நீரூற்று ஜெர்மனியால் இரண்டாம் உலகப்போரின் போது திருடப்பட்டு பின்னர் முக்கால்வாசி மீட்கப்பட்டு - என பீட்டர்ஸ்பர்கின் வரலாற்றுச்சின்னங்கள் அனைத்திற்குமான common வரலாறு இதற்கும் உண்டு.

நெப்ட்யூனைத்தாண்டினால் வந்தது Oak Fountain.
Oak Fountain
இந்த அப்பர் தோட்டம் ஜுஜுபி என்பது போலவும் அரண்மனைக்கு பின்னாலிருக்கும் லோயர் தோட்டம் தான் சுந்தரமானது என்றும் கூகிளாண்டவர் சூடமடித்து சத்தியம் செய்திருந்ததால் அதனை நோக்கி நடக்கத்தொடங்கினோம்.

எல்லாருக்கும் ஏற்படும் வலமா இடமா பிரச்சனையில் அதன் அரசியல்களை விலக்கி - அப்போதைக்கு அரண்மனைக்கு வலது பக்கமே செல்வது என்று ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது.

திரும்பிய திசை அப்படியொன்றும் மோசமானதில்லை என்று ஆறுதலளிப்பது போல வரவேற்றது Fountain of the Square Pool.

Fountain of the Square Poolsஇதைத்தாண்டினால் வலதுசாரி என்பது எப்போதுமே கரடுமுரடானதல்ல என்பதாக அரசியல் பேசும் பாதை
The Righteous Path!

கீழெயுள்ள படத்தில் அரண்மனைக்கு மேலே இருப்பது Upper Gardens-ம் நாம் இதுவரை பார்த்த நீரூற்றுகளும். கீழே இருப்பது தான் Lower Gardens. அதைப்பற்றி அடுத்த பகுதியில்...

A View from the Top
பிகு: கடைசி படம் மட்டும் வலையில் சுட்டது

(தொடரும்)

237. தசாவதார ஓப்பரா; கேபிள் வழியாக 500$க்கு கடவுள்

தசாவதாரத்தைப் பார்த்து அலுப்புத்தட்டுகிறதோ இல்லையோ அதைப்பற்றிய விமர்சனங்களையும் அப்படம் தரும் கோணல்களையும் கோணங்களையும் குவாண்டத்தை உடைக்கும் தியரிகளையும் இன்னமும் முக்கியமாக ஆதிக்க மேட்டிமைத்தனத்தையும் பற்றி The World+Dog® எழுதித்தள்ளிய/தள்ளிக்கொண்டிருக்கும் உப்புமாக்களைப் பார்த்து அலுத்துவிட்டது. இப்படி fanbois/விசிலடிச்சான்குஞ்சுகள்(கமல் / ரஜினி) களின் முக்காச் சரக்கடித்து முழுவதும் ப்ளாட்டாகாமல்/'தெளிவாகவும் அல்லாமல்' (இரண்டும் ஒன்றென்று தமிழ்கூறு நல்லுலகம் சர்டிபிகேட் கொடுப்பினும்) நம் பிராணனை வாங்கும் விதமான 'தி ஒன் & ஒன்லி தமிழகம் கண்ட ரோசர் ஈபர்ற்கள்' மேலும் நம் கழுத்தையறுக்காமல்: அந்த தசாவதாரத்து தெய்வத்தின் ஒரு அவதாரமோ அவரது தாரங்களில் ஒன்றோ கருணை காட்ட வேண்டுகிறேன். பார் தி ரிக்கார்ட், இன்னும் படம் பார்க்கவில்லை (அதாவது றோரென்ற்களில் நல்ல காப்பி வரவில்லை எனக் கொள்க - கொத்ஸ் கவனிக்க). நிற்க. அல்லது அமர்க.

-----------------------------------
நெருப்புநரி 3.0 வெளியிட்ட தினத்தன்று ஏழு மில்லியன் நரியார்வலர்கள் தரவிறக்கம் செய்துகொண்டதாக சொல்லப்படுகிறது. நெருப்புநரியின் ஆர்வலனாக 2.0ல் ஆரம்பித்த என் பந்தம் இன்னும் தொடருமா என்பது அந்த ஏழு மில்லியனில் எத்துணை இங்கே இயங்கும் Nouveau பதிவர்களோ/கிழபாடு (சீனியர்) பதிவர்களோ 3.0 இறக்கி அவித்தோ பாவித்தோ வருவதில் நரகம்/முக்தி அடைந்தார்கள் என்பதைப் பொறுத்தது. எனவே 3.0-ஐ தனியாக நிறுவி வைத்திருக்கிறேன். 2.0-ல் நான் பயன்படுத்தும் ஆட்-ஆன்கள் 3.0ல் இன்னும் வரவில்லையென்பதும் ஒரு காரணம். முக்கியமாக IETabs. ஆனால் 3.0-ல் அதற்கு வேலையிருக்காது என்பது போலத்தோன்றுகிறது. வழக்கமாக 2.0 கடித்துத்துப்பும் பல பக்கங்கள் 3.0ல் சரியாகத்தெரிகின்றன. ஒரு நாள் முழுக்க ஓடவிட்டால், கணினியில் மொத்தமாக இருக்கும் 1.5 கிகா மெமரியில் பாதியாவது தனக்கே என்று 2.0 சீன் போடுவது வழக்கம். 3.0 எப்படி என்று பயனர்கள் சொன்னால் நலம். தசாவதாரமே கதி என்று கிடக்காமல் இதுபோன்ற வாழ்வாதார பிரச்சனைகளைப்பற்றியும் அறிந்துகொள்வோம் வகையான பதிவுகள் எழுதி ‘எழுதிருக்கேன்.. படிச்சுட்டு போ' என்றோ 'please stay long enuf to please her at least tonite' வகை பின்னூட்ட விளம்பரங்களோ தரவாவது வேண்டுகிறேன். மற்றபடி நானெல்லாம் ஒரு சீனியர்/பாடு என்ற எண்ணத்தில் வந்து தங்கள் நேரத்தையும், ஒரு கமெண்டாவது வந்ததே என்று பார்த்து என் ஏமாற்ற வயிற்றெரிச்சலையும் சம்பாதித்துக்கொள்ளவேண்டாம்.

எனிவே அதுவரை ஓபரா 9.5/நெ.ந 2.0. ஓபரா 9.5 நன்றாகவே இருக்கிறது. இருந்தாலும் comfort level இல்லை. சித்திரமும் கைப்பழக்கம் கதையாகக்கூட இருக்கலாம். குறிப்பிட்டு ஓபராவில் பக்/தவறு என்று சொல்வதற்கேதுமில்லை. ஆனால் ஆட்-ஆன்கள் பற்றாக்குறை. முக்கியமாக noscript மற்றும் torbutton வகையறா... (torbutton பற்றி அறியாமல் தமிழ்வலையுலகத்தில் அலையும் திக்கற்றவர்களுக்கு விரைவில் ஞானோதயம் கிடைக்க இறைவன் சித்திக்கட்டும்). நிற்க அல்லது அமர்க.
------------------------------------
500$க்கு டெனான் கேபிள் ஒண்ணை விக்குது. அதன் மூலமா கடவுளே தெரியிறார்னும், கேபிளை தலைகீழா பிக்ஸ் பண்ணினா சாத்தான் தெரியிறார்னும் நெட்ல திமிலோகப்பட்டுக்கிடக்குது. பசையுள்ளவர்கள் வாங்கிப்பாத்து சொன்னா நானும் காஞ்சிப்பெரியவர்/பங்காரு அடிகளார்/சத்யசாய்/பூங்கோதை போன்ற திசைகளில் இனி தலைவக்கணுமா வேணாமானு ஒரு முடிவு காண யூஸ் ஆகும். இல்ல My God Can Beat the Shit out of your God © (God = கலைஞர்/கமல் AND/OR மகாவிஷ்ணு/அல்லா/ஹோலி பாதர்/பெரியார்) வகையறா பிரச்சாரமாவான்னாவது தெரிஞ்சாகணும் எனக்கு.

பொழுது போகலைன்னா அங்கே அமேஸானிலிருக்கும் பின்னூட்டமெல்லாம் படிக்கலாம். தமிழ்வலையுலக கமெண்டுகள் (இப்பதிவிற்கும் சேர்த்துதான்) போக வேண்டிய தூரம் அதிகம் என்பது புரியும்.
------------------------------------
ராயல் கேபிள் - எனக்கு புல்லரிக்குது. பேரக்கேட்டாலே. சாலப்பொருத்தம். ராயல்டிக்கு இருக்குற க்ளாசு மாஸுக்கு வருமா? இந்த க்ளாசும் மாஸும் எப்படி மேனேஜ் பண்றதுனு தெரியாம அந்த இங்கிலாந்து எலிசபெத்தே "என் பாட்டனார் ஒரு பிற்படுத்தப்பட்டவராக இருந்தாலும் ஐந்து முறை ஆட்சிக்கட்டிலிலே அமர்ந்திட்டேனே - நாடொன்றே - நம்மக்களின் ஏறுமுகம் காணும் ஒரே நோக்கத்தோடுதானே - ஆளத்தகுந்த வாரிசுகளை நான் மட்டுமின்றி என் வாரிசுகளும் அல்லும் பகலுமாய் உருவாக்கிக்கொண்டிருக்கின்றோம்"ன்னு கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய், தில்லாய் சொல்லமுடியுமா?

தெகச்சு போயி கிடக்கேன் நானு. ஒரு பங்கா பிரிச்சு மன்னார்குடிக்கு குடுக்கறத விடவும் மொத்தத்தையும் கடலூர்/திண்டிவனதுக்கு அடிமைனு சொல்றத விடவும் அவங்கவங்க ஏரியாவுக்கு அவங்கவங்க (அதாவது அவங்க அவங்க) ராஜானு சொல்றது உத்தமம் இல்ல?
______________________________
1. எழுத மேட்டரில்லை என்று சொல்வது writer's block - இது கட்டிவைத்து உதைக்கக் காத்திருக்கும் சிலரின் குறைபட்ட டிக்‌ஷனரிகளை அப்டேட் செய்துகொள்வதற்காக.
2. தசாவதாரம் இந்தியா போய் பார்க்கவேண்டியதுதான் (அதுவரைக்கும் ஓடினால்)
3. ரோயலுக்கும் எனக்கு எந்த சம்பந்தமுமில்லை.

236. அட இராகவா!

ஹும்....

அடுத்ததுக்கு பிரயோசனப்படுற மாதிரி முட்டையாவது கொடுத்தாரே...!

அதுக்கு நன்னி!

கொத்தனார் என்னும் கோயபல்சுக்கு ஒறு பகிறங்கக் "கடி"தம்

மைடியர் பெனாத்தலாரே என்று சமீபத்தில் நீங்கள் பெனாத்தலார் இன்னும் சமீபத்தில் எழுதிய பதிவொன்றினுக்கு எதிர்வினையாக எழுதியதை கண்டேன்.

இதுவரை பின்னூட்டக்கயமைத்தனம் மட்டும் செய்துவந்த தாங்கள் பறிமானக் கோட்பாட்டின்படி முன்னேறி இப்போது ஒருவர் இட்ட பதிவையே வைத்து கயமைத்தனம் செய்துள்ளதில் - வலையுலக முதிர்ச்சியின் இளவேக பாய்ச்சலைக் கண்டு ஒரு புறம் பூரித்தாலும், மறுபுறம் இத்தகைய இடுகையமைத்தனம் செய்வது வலைப்பூவுலகின் தற்போதைய ஆரோக்கியமான போக்கிற்கு எவ்வாறான கேடுகளை விளைவிக்கும் என்பதை எண்ணுகையில் முன்னர் உப்பிய பூரி சப்பென்று அடங்கிவிடுகிறது. அதன் காரணமாகவே இக்கடிதம்.

*******************************************
ஐபிஎல்லை தமிழ் படுத்துகிறதா அல்லது ஐபிஎல் தமிழைப்படுத்துகிறதா என்று இனமானக்காவலர்கள் வெகுண்டெழுந்து வேட்டியவிழ்த்து போராடிவரும் வேளையில்: ஐபிஎல்லுக்கு பதிலாக மாநிலகிட்டிப்புற்கழகம் சார்பில் இனி மாவட்டத்துக்கு ஒன்றாக சர்வதேச கிட்டிப்புல் வீரர்களை விலைபேசி: அவர்களுக்கு தமிழக நகரங்களின் தெருக்களில் இருக்கும் கோடிகளில் சிலவற்றை கொடையாகத்தந்து சிறப்பு கிட்டிப்புல் கூட்டுசம்பந்தத்தில் சேர்த்துக்கொண்டு, ஆட்ட இடைவேளைகளில் ஒயிலாட்டம், மயிலாட்டம் என கலாச்சாரத்துடன் விளையாட்டார்வத்தை வளர்த்துவருவதுடன்; 2011ல் சிறப்புப் கிட்டிப்புல் வளர்ச்சி மண்டலங்களுக்கான வெள்ளையறிக்கையும் தயாராகிவருவது தெரிந்தும் இவ்வாறான கேள்வியை நீர் எழுப்புவது விஷமத்தனமானது மட்டுமல்ல விஷமானதும்கூட.

*******************************************
தமிழகத்தில் பிறநது தமிழ் நாட்டின் உண்மையான மண்ணின் மைந்தனாக அல்லாமல் வேலைபிழைக்கச் சென்ற தாங்கள், ஏதுமறியாதவரைப்போல, கருநாக்காவுக்கும் புதரகத்துக்கும் கொடி பிடிக்கும் சூட்சுமம் எங்களுக்கு புரியாமலில்லை. இன்று தமிழர்கள் தண்ணியடிக்கிறார்கள் தண்ணீரில்லை என்று கருநாடகாவும், சோறு சாப்பிடுகிறார்கள் சோறில்லை என்று அமெரிக்காவும் சொல்வதை ஒப்புக்கொண்டால், நாளை தமிழர்கள் ஏதோ செய்தார்கள் அதான் சுனாமி பேரலை வந்தது என்று இந்தோனேஷியா புலம்ப வாய்ப்புகள் உண்டு என்று அறியாதவரா தாங்கள்? இந்தச் சமூக அவலத்தினை தோலுரித்துக்காட்டி - அடுத்த தளத்திற்கு எடுத்துச்செல்ல முயன்ற அருமை பெனாத்தலாரின் கருத்தை, நகைச்சுவை என்ற பெயரில் பூசி மெழுகுவது அழகா?
*******************************************
ஆச்சரியத்தை ஆச்சர்யமாக வெளிப்படுத்துவது தவறா இல்லை எல்லாவற்றிலும் ஆச்சார்யங்களை - உங்களைப்போல் - தேடுவது தவறா? சினிமா போஸ்டரில்கூட நாம் தேடும் விஷயத்தை மட்டும்தான் தேடுவோம் என்று ஆடுகிறீர்களே? ஆச்சார்யங்களை வலிந்து தொலைத்த கமலே, ஆச்சார்யர்களைப் பற்றி படமெடுத்தால் படம் ஓடும் என்கிற நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதைக்கண்டு பரிதாபப்பட்டு ப்ளாசில் அவரை விளாசாமல் விட்டார் நமது கொ.ப.செ. மேலும் ப்ளாசில் அதைப் போட்டால் வேறு 'எதெதை' போடுவது என்ற குழப்பமும் குட இருந்திருக்கலாம்
*******************************************
எனக்குத் தெரிந்து இந்த மாதிரி பிரமிட் ஸ்கீம்களை முதன்முதலில் வகுத்து அதன் மூலமாய் சொத்துகளை குவித்தவர்கள் பண்டைய எகிப்தியர்கள் தான். அப்படி சுரண்டியவர்களை பின்னர் சுரண்டியது ஒரு கூட்டம். இங்கேயும் அதே கதைதான் நடக்கும். மன்மோகன் சிங்கிற்கு நம்ம கைச்செலவில் நாலு லெட்டர்பேட் அடித்துக்கொடுத்தால் வேலையாயிற்று. அவரே பிரதியெல்லாம் எடுத்து அனுப்பவேண்டியவர்களுக்கு அனுப்பி சபாநாயகருக்கு அறிவுரைத்து அனைத்தையும் அமுக்கிவிடுவார். சொல்ல முடியாது, இப்போது கம்ப்ளெயிண்ட் கொடுத்த பொதுமக்கள் மீதே சொத்துக்குவிப்பு வழக்கு போட்டாலும் போடுவார்கள். ஸோ கவலைப்படாமல் நைஜீரியன் திட்டத்தினை விரைவில் தொடங்கவும்.
*******************************************
புதிய தமிழ்மணம்/மறுமலர்ச்சி தமிழ்மணம் பற்றியும் உத்தப்புரம் மற்றும் அது குறித்து தலைவர்கள் தந்த பொன்மொழிகள் பற்றியும் பலரும் பல்வேறு கோணல்களில் ஆராய்ச்சி செய்து ஆகிவிட்டபடியால் அப்பகுதிகளுக்கு 'பாஸ்'
*******************************************
வலைப்பூக்களில் எழுதுவது மன அழுத்தத்தை குறைக்கிறதா அல்லது மன அழுத்தத்தை எகிறடித்து கல்யாணியை விட்டு ஆத்த வைக்கிறதா என்ற கேள்விக்கான பதிலை படிப்போர்களிடமே விட்டுவிடுகிறேன்.
*******************************************
டிஸ்கி 1: கொத்ஸைக்குறித்து சிபிஐயிடம் விசாரிக்க உத்தரவிட வேண்டி இக்கடிதத்தினை சாதாரண தபாலில் நடுவண் அரசிற்கு எழுதியனுப்பாமல், இன்ஷ்டண்டாக அனைவரையும் சென்றடையும் மின்னணு தகவற்தொடர்பு ஊடகத்தை பயன்படுத்துவது தமிழகத்தின் நாகரிகத்திற்கு எதிரானதொன்று என்றாலும் சூடு ஆறுவதற்குள் சுடவேண்டும் என்ற பொறுப்பும் சொரணையும் இருந்ததால், ஏற்பட்ட இப்பிழையினை பொறுத்தருள வேண்டும்.

டிஸ்கி 2: மேட்டர் இல்லாத வறட்சியில் எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற எனது அவலநிலையை அறிந்து அவலாய் பதிவொன்று தந்த பெனாத்தலாருக்கும் அதையே வறுத்தெடுத்து நூறடித்த கொத்ஸிற்கும் இப்பதிவு சமர்ப்பணம்.

233. அடுத்தவர் வீட்டிற்குள் எட்டிப்பாருங்கள்!

நம் வீட்டில் நடக்கும், இருக்கும் விஷயங்களை விட அடுத்தவர் வீட்டில் என்ன நடக்கிறது என்பது பலமடங்கு சுவையானது இல்லியா? அவன் என்ன சொன்னான், ஏன் சொன்னான், இந்த மாசம் ஏன் சம்பளம் பிடிச்சுட்டாங்க, ஈ.எம்.ஐ கட்ட முடியல இந்த மாசம் தொடங்கி அடுத்தவங்க என்ன செய்யறாங்கனு ஒக்காந்து அனலைஸ் பண்ணி அத நாலுபேர்கிட்ட பகிர்ந்துகிறதுல இருக்குற அல்ப சந்தோஷத்துக்கு ஈடு இணையே கிடையாது.

பக்கத்தாத்து அம்பியாகட்டும், எதிர்த்த வீட்டு முருகனாகட்டும் - இப்படி நம்மள மாதிரியான சாதாரண ஆளுங்க வீட்டுக்குள்ளயும் வாழ்க்கைக்குள்ளயும் தேவையில்லாம மூக்கை நுழைச்சு எட்டிப்பார்க்கும் நமக்கு சுளையா வந்து ஒரு பெரிய ஆளு வந்து மாட்டினா சும்மா விட்ருவோமா சான்ஸை?

விஜயகாந்த் ராதிகாவ வச்சிருந்தாரு, எம் சி ஆரு ஜெயலலிதா கூட சுத்தினாரு, கலைஞர் வேற என்னமோ செஞ்சாருன்னு எல்லாம் நேரா போட்டா கேஸ் வரும்கறதால வாரமலர் துணுக்குமூட்டை தொடங்கி இண்டிபெண்டன்ட் வரைக்கும் இந்த மாதிரியான செய்திகளை ஏதோ பெரிய ரீபஸ் போட்டியாட்டம் க்ளூ க்ளூவா கொடுத்து நம்மள பைத்தியம் அடிச்சிர்றாங்க. ஆனா பாருங்க, இதப் பத்தி குறை சொல்றேனே தவிர நானும் சான்ஸ் கிடச்சா படிக்காம விடறதில்லேங்குறது வேற மேட்டர்.

இப்படி அடுத்தவங்களப் பத்தி பேசுறது மனித இயல்புனு சும்மா போயிடமுடியுமா? அடுத்தவங்களோட தனிமனித சுதந்திரம்,தனிப்பட்ட வாழ்க்கைல நாம தலையிடுறோமேனு ஒரு நிமிஷம் கூட தோணமாட்டேங்குதே. பத்திரிகைகளுக்கு காசு பார்க்கணும். அதுக்குச் சொல்ற சாக்கு பொதுவாழ்க்கைல ஈடுபட்டா - all is fair game. எனக்கென்ன டவுட்டுன்னா நீங்களும் நானும் எதுனாச்சும் மனித நடமாட்டம் அற்ற தீவுல இருக்கிறோமா? பொதுவாழ்க்கைல இல்லியா? நாமும் சமூகத்துல ஒரு பொதுவெளியில தான இயங்கறோம். இன்னிக்கு கமலஹாசனோட மனைவிகள்னு ஜூவில கட்டுரை போட்டா நாக்கை தொங்கப்போட்டுகிட்டு படிக்கிற நாம, நம்மளோட எலும்புக்கூடுகள் வெளில வந்தா இதே ஆர்வத்தோட அடுத்தவங்க படிக்கறத விரும்புவோமா?

எலும்புக்கூடுகள் இல்லாம ஒருத்தரும் இல்லை. காந்தியும் நேருவும் என்ன புத்தர் வரைக்கும் இதே கதைதான். நமக்கு இருக்கும் மதிப்பு நாம இயங்கும் தளத்தில் நமது திறமைக்கானதாக மட்டுமில்லாமல் நமது தனிப்பட்ட வாழ்க்கையின் அடிப்படையில் இருந்தால்? திரும்பிப்பார்த்தால் எல்லாரும் ஏதாவதொரு தருணத்தில் சறுக்கியிருப்போம். இப்போது நினைத்தால் ஏன் அவ்வாறு செய்தோம்னு புரியாதுன்னாலும், கண்கெட்ட சூரிய நமஸ்காரம் பண்ணி புண்ணியமில்லேங்கிறதால தவறுகளை பீரோக்களில் இறுக்கமாக பூட்டிவச்சுட்டு தெனாவட்டா திரியிறோம். ஆனா பாருங்க, எப்படிப்பட்ட லாக்கருக்கும் ஒரு சாவி இருக்கு. அந்த சாவிக்கும் ஒரு டூப்ளிகேட் இருக்கு.

ஒரு பிரபலத்தின் நிலைமையில் நாம் இருந்தால் இம்மாதிரி விஷய(ம)ங்கள் வெளியாகும் போது ஏற்படும் மன உளைச்சலை இருந்து அனுபவித்தால் தான் தெரியுமோ என்னவோ? அதுவரைக்கும் ‘பத்திகிச்சு' தாராளமா படிச்சு அரிப்பத் தீத்துக்கலாம்.

--------------------
கீழ இருக்கும் படத்துக்காக ஒரு முன்னுரை எழுதணும்னு ஆரமிச்சு என்னவோ சீரியஸா போச்சு. எனக்கு வந்த மின்னஞ்சலின் படி இது மைக்ரோசாப்ட் நிறுவனத்தலைவர் பில் கேட்ஸோட ஆபீஸ் ரூமாம். இல்லேங்கிறேன் நானு. ஏன் இல்லேனு பத்துவினாடிகளுக்குள்ள கண்டுபிடிச்சு சொல்ற அனைவருக்குமே ‘வலையுலக தகவல் தொழில்நுட்ப வாழ்நாள் சாதனையாளர்/சாதனையாளினி' அப்படிங்கற பட்டத்தை கொடுக்கத்தயார். வலையுலக கைநாட்டுகள்னு சொல்லிக்கிற அல்லாருக்கும்,அரசியல்வாதியாட்டம் இன்ஷ்டண்ட் டாக்டர் பட்டம் மாதிரி தகுதியோட, இந்தப்பட்டத்தை போட்டு தகுதியை வளர்த்துக்க அருமையான சான்ஸ்.



என்ன கண்டுபிடிச்சாச்சா?

232. பெண்களுக்கான புரட்சி பட்ஜெட்! - CNN-IBN

மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் திரு. சிதம்பரம் தாக்கல் செய்துள்ள நிதியறிக்கையில் புரட்சிகரமான புதியதொரு அம்சத்தை சத்தமில்லாமல் சேர்த்துள்ளார். இதுபற்றி வேறெந்த ஊடகமும் கண்டுகொள்ளாத நிலையில், சிஎன்என் - ஐ.பி.என் மட்டுமே பொறுப்பாக நடந்துகொண்டுள்ளது.


இவ்விடயத்தை பொறுப்புடன் வெளியிட்டுள்ள செய்தி நிறுவனத்துக்கு பாராட்டுகளுடன் நன்றிகளும்!

231. K.I.S(low).S!

பொதுவா இந்த அவசர உலகத்துல எதையுமே நிறுத்தி நிதானமா பார்க்கிறதுக்கு நேரமிருக்குறதில்ல. இந்த லட்சணத்துல நிதானமா செயல் படுறதுக்கா நேரமிருக்கப்போவுது?

அன்றாடம் பயன்படுத்தும் விஷயங்கள்/பொருட்கள்... (கொஞ்சம் எக்ஸ்ட்ரா பொறுமை தேவை)




கொஞ்சம் அடிதடி, குத்து, டமால், டுமீல்!




இது கலை!






இது? பாவப்பட்ட மட்டைப்பந்து ஆட்ட வெறியர்களுக்காக..


டிஸ்கி: அல்லா வீடியோலயும் சவுண்ட் வரும். தலயோடத தவிர.

230. அசுரர்களும் மனிதர்கள்தான்!

மனித வரலாறு மிகவும் விசித்திரமானது. மனிதனுக்கு மனிதன் நம்பிக்கைகளின் பெயரால், மதத்தின் பெயரால், பொருளாசையின் பெயரால் செய்த/செய்துவருகின்ற கொடுமைகள் வரலாறெங்கும் கொட்டிக்கிடக்கின்றன. ஹிட்லர், ஸ்டாலின், செங்கிஸ் கான், போல்பாட், சதாம் என நாம் பார்க்கும் கொடுங்கோலர்கள் மக்களை நடத்தியவிதம் அதிர்ச்சியடைய வைக்கின்ற அதே நேரத்தில் ஆச்சரியமும் பட வைக்கின்றது. அந்த ஆச்சரியத்திற்கான காரணம், மனிதன் என்ற நிலையிலிருந்து இவ்வளவு கீழும் இறங்க முடியுமா என்பதேயாகும். அப்படிப்பட்ட குமட்டும் காட்சிகளை அரங்கேற்றிய ஆட்சியாளர்களை நம் புராண இதிகாசங்களில் தோன்றும் அசுரர்களுக்கு ஒப்பாகவும் அவர்கள் மனிதர்களே இல்லையெனும் படியாகவும் நமக்கு நாமே சமாதானம் சொல்லிக்கொள்கிறோம். Surely, நம்மை போன்ற decent and law abiding மக்கள் 'மனிதர்கள்' என அழைக்கப்படும்போது இந்த கொடிய அரக்கர்கள் மனிதர்களாக இருந்திருக்கமுடியாது என்ற பார்வையில் இருக்கும் சவுகரியகங்கள் பல. ‘நான் அவன் இல்லை' அல்லது ‘நாம் அவன் இல்லை' என்று சொல்லும்வேளையில் ஒரு குறிப்பிட்ட கொடுங்கோலன் மனிதனே அல்ல, அவனுக்கும் நமக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை என்பது சுட்டெரிக்கும் வெயிலில் குளிர்தருவின் நிழல் போல மனச்சாந்தியை அளிக்கிறது. அதோடு கூட, இந்த குளிர்தருவின் நிழலின் எல்லைக்கோட்டிற்கு அப்பால் இருக்கும் உலகில் தற்சமயம் நடக்கும் ஏனைய மனிதத்தை மதிக்காத சர்வாதிகார, எதேச்சதிகார ஆட்சிகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் நமக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை, அதில் தலையிட வேண்டிய அவசியமும் நமக்கு இல்லை/தலையிட்டாலும் நன்மை வருவதற்கில்லை என்ற defeatist எண்ணமும் மேலோங்க வழிவகுக்கும். பூனை கண்ணை மூடிக்கொள்வது பூனைக்கு சவுகரியப்படும் போதுதான். அசவுகரியமானவற்றை பற்றி பேச வேண்டியதோ அவற்றை நீக்கவேண்டி செயல்படவேண்டியதோ இல்லை.

மனித குலத்தின் சாபக்கேடே இந்த 'நான் அவன் இல்லை' எண்ணம தான் என்பது என் கருத்து. இவ்வாறு தட்டையாக இல்லாமல், 'ஆம் அந்தக்கொடியவனும் மனிதன் தான். அதே இரத்தமும் சதையும் ஆசையும் கோபமும் வேகமும் காமமும் நம்முள்ளும் இருக்கிறது, என்ன நம்முள் தூங்கிக்கொண்டிருக்கிறது. நம்முள் இல்லாத ஒன்று புதிதாக உற்பத்தியாகி ஒருவனை கொடுமைக்காரனாக, கொலைசெயல் புரியவும் துணிந்தவனாகவும் ஆக்க முடியாது. நம்முள் இருக்கும் தூங்கும் மிருகம் சிலரினுள் விழிப்படைந்து, அம்மிருகத்தை அவனின் அறிவும் மனமும், சுற்றமும் சமூகமும் கட்டுக்கு கொண்டுவரவில்லை' என்பதை உணருதலே நாம் வரலாற்றை கற்றதன் பயனாக இருக்கமுடியும். இப்படி சொல்வதன் மூலமாக ஒருவரின் குற்றத்தைக் குறைத்துக்கூறி, அவன் கொலைசெய்ததற்கு இச்சமூகமே காரணம் என்பது மாதிரியான அபத்தங்களை முன்னிருத்தவில்லை. மாறாக ஒரு குற்றவாளியின், கொலையாளியின் வாழ்க்கையை ஆழ்ந்து பார்த்தால், அவனுக்கும் இருந்த (நம்மைப் போன்ற) மனித முகம் கோரமாக நம்முன்னே பல்லிளிக்கும் என்ற பயத்திலேயே நாம் மனிதர்களாக அப்படிப்பட்ட ஒரு கொடுங்கோலர்களை சித்தரிக்க நாம் துணிவதில்லை.


And what is good, Phædrus,
And what is not good...
Need we ask anyone to tell us these things?
- Epigraph to Zen and the Art of Motorcycle Maintenance, Robert Pirsig


உண்மையில் கொலையாளிகளை அரக்கர்களாய் மட்டும் பார்க்காமல் சகமனிதன் என்ற அளவில் அணுகினால் அவன் வாழ்க்கைத் தரும் பாடங்கள் ஏராளம். பாடங்கள் என்றால் நாம் பின்பற்றி நடக்கவேண்டிய சாஸ்திர விதிகளாய் மட்டும் இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. எவையெவை நல்லவை என்று சொல்லிக்கொடுக்க ஒரு நல்லாசிரியர் தேவையென்றால் எவையெவை பாதகரமானவை என்று சொல்லிக்கொடுக்கவும் ஒரு ஆசிரியன் தேவைப்படுகிறானல்லவா? கெட்டவற்றைச் சொல்லிக்கொடுப்பதில் அவன் நல்லாசிரியனாக விளங்கினால் நமக்கு அதில் ஒரு குரூர பலன் இருக்கிறது. இனி வரும் உலகத்தில் இப்படியான ஒருவன் தோன்றாமல் இருக்க நாம் என்ன செய்யவேண்டும் என்பது விளங்கும்படியாக நாம் அவனைப் படிக்கலாம். அதனால் அசுரர்களுக்கும் மனித முகங்கள் கொடுப்பது empathy/sympathy ஐ உருவாக்கும் என்பது போன்ற வாதங்களை விட்டு அணுகினால் அசுரர்களை படிக்கவேண்டியதே நம் கடமை என்பது தெளிவாகும்.

------------------------------------------------------
எதற்கு இத்தகைய நீளமான முன்னுரை? சரியான வலைப்பூவுக்குத்தான் வந்திருக்கமா அப்படினெல்லாம் உங்களுக்கு சந்தேகம் வந்திருக்கும். எனினும் இவ்வளவு தூரம் படித்துக் கடந்தாகிவிட்டது. இன்னும் ஒரிரண்டு பத்திகள் மட்டுமே.

Der Untergang (2004) என்ற படத்தை சமீபத்தில் தான் பார்க்க நேர்ந்தது. சென்ற நூற்றாண்டின் மனித விரோதி நெ.1 அடால்ப் ஹிட்லரின் வாழ்விலான கடைசி பத்து நாட்களை பற்றியதான படம். கிட்டத்தட்ட மொத்தப்படமும் அவனது Fuhrerbunkerக்குள் மட்டுமே நடக்கிறது. கோய்பல்ஸ், ஹிம்லர், ஷ்பியர், ஏவா என நமக்கு தெரிந்த அனைவரும் வந்துபோகிறார்கள். ஆனால் நாம் படித்த அரக்கர் உருவில் அல்ல. சாதாரண மனிதர்களாக.

அனாயசமான நடிப்பு ப்ரூனோ கான்ஸுடையது. ஹிட்லர் என்ற வரலாற்றின் மூலம் நமக்கு அறிமுகமான ஆசாமி பலவிடங்களில் மறைந்தேபோய்விடுகிறது. அதற்கு பதிலாக ஒரு frail, deranged, demented கிழவனே தோன்றுகிறான். குறிப்பாக சோவியத் படைகள் நெருங்கி பெர்லினின் மேல் குண்டுவீச்சு நடத்தும் சமயத்திலும் தன் பங்கரின் மேலே வந்து சிறுவர்களுக்கான சாகச விருதுகளை வழங்கும் காட்சி. இப்படி படமெங்கும் முத்துகள்.

வரிசையாக தோல்விகளை சந்திக்கும்போதும், அவனுடைய தளபதிகள் ஒவ்வொருவராக எதிரணியிக்கு தாவும்போதும், சோவியத் படை நெருக்கும் போதும், தற்கொலையை விட்டால் வழியில்லையென்ற நிலைக்கு தள்ளப்படும்போதும் என சமயங்களில் எனக்கு அப்புத்திபேதலித்த கிழவனைப் பார்த்து பரிதாபமே மிஞ்சியது. அப்படி பரிதாபப்படுதலே படுபாவம் என்று எண்ணிக்கொள்ளவும் செய்தேன். என் பரிதாபம் நிறைய நேரத்துக்கு நீடிக்கவில்லை என்பதென்னவோ உண்மைதான். ஹிட்லரை மனிதனாக காண்பிப்பதாய்ச் சொல்லி சர்ச்சைகளிலும் இப்படம் சிக்கியது. எவ்வித முன்முடிவுகளுடன் ஹிட்லரை அணுகாமல் பார்வையாளர்களின் முடிவுக்கு விட்ட இயக்குநரை பாராட்டியே ஆகவேண்டும்.

தன் நாட்டு மக்களையே பலியாடாக்க துணிந்ததுடன் அனைத்துக்குமான பழியை யூதர்களின் மேல் சுமத்துவது என தொடர்ச்சியாக இந்த மனித முகத்திற்கு பின் மறைந்திருக்கும் அரக்கன் யார் என்றும் படத்தில் காட்டத்தவறவில்லை. ஹிட்லரெனும் அரக்கனைப் பார்த்து பரிதாபப்பட்டதற்காக சற்று கோபப்பட்ட போது ரோஜர் ஈபர்ட் தன்னுடைய விமர்சனத்தில் எழுதியதைப் பார்த்தேன்.

”Admiration I did not feel. Sympathy I felt in the sense that I would feel it for a rabid dog, while accepting that it must be destroyed. I do not feel the film provides "a sufficient response to what Hitler actually did," because I feel no film can, and no response would be sufficient. All we can learn from a film like this is that millions of people can be led, and millions more killed, by madness leashed to racism and the barbaric instincts of tribalism.“...

”What I also felt, however, was the reality of the Nazi sickness, which has been distanced and diluted by so many movies with so many Nazi villains that it has become more like a plot device than a reality. As we regard this broken and pathetic Hitler, we realize that he did not alone create the Third Reich, but was the focus for a spontaneous uprising by many of the German people, fueled by racism, xenophobia, grandiosity and fear. He was skilled in the ways he exploited that feeling, and surrounded himself by gifted strategists and propagandists, but he was not a great man, simply one armed by fate to unleash unimaginable evil. It is useful to reflect that racism, xenophobia, grandiosity and fear are still with us, and the defeat of one of their manifestations does not inoculate us against others.”

இதற்கு மேலே சொல்ல எதுவுமில்லை.

radical nationalism என்ற பெயரில் உலகெங்கும் ஹிட்லர்களும் கோய்பல்ஸ்களும் இன்னும் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்ற வகையில் அனைவரும் பார்க்கவேண்டிய படம்.

229. எலே எடுபட்ட பயலே! வேலைய ஒழுங்காப் பாருவே!

நிகழ்வு 1:
எங்க தெருவுல ஒரு பால்காரர் பலகாலமா பால் ஊத்திகிட்டிருந்தாரு. கொஞ்ச நாளா என்ன கெரகமோ அவர் குடுக்கற பால்ல காபி போட்டா சுடுதண்ணியாட்டமா மாறிடுச்சு. தயிர் கெட்டியாவே ஆகலை. என்ன காரணமின்னு பார்த்தா பால்காரரு காசுக்கு ஆசைபட்டு தண்ணி கலக்க ஆரமிச்சுட்டாருனு தெரிஞ்சுது. தண்ணி கலக்கறது எல்லாரும் வழக்கமா செய்யறதுதானு சொன்னாலும், இவருக்கு சரியா தண்ணி கலக்க தெரியல. அதிகமா விட்டு பாலே தண்ணியாயிடுச்சு. எங்க தெருக்காரங்கள்லாம் சேர்ந்து முடிவு பண்ணி பால்காரர மாத்திட்டாங்க.

நிகழ்வு 2:
எங்களோட தெருவுல ஒரு பொட்டிக்கடை இருந்துச்சு. முனுசாமி அண்ணாச்சி வச்சுருந்தாரு. முனுசாமி அண்ணாச்சிக்கு மூணு பசங்க. அவங்க படிக்கணும்கறதுக்காக ராவு பகலா அவரும் கட வச்சிருந்தாரு. வியாபாரம் வளந்துச்சு. காய்கறி, பலசரக்குனு கொஞ்சம் பெரிய கடையா வச்சாரு. ஆரமிச்ச ஜரூர்ல நாலு வேலையத்த பசங்களுக்கு பொட்டலம் மடிக்க வேலையும் கொடுத்தாரு. ஆனா பாருங்க அவரோட போறாத காலம், பக்கத்துல் ஏசியோட ஸ்பென்சர் ப்ரெஷ் திறந்துட்டாங்க. இப்ப அண்ணாச்சி வியாபாரம் படுத்துருச்சு. காய்கறி மட்டுமே இன்னும் அவர்கிட்ட வாங்கினாங்க எங்க தெருக்காரவுக. வர்ற காசு தன் குடும்பத்துக்கே போறாத போது இந்த நாலு பசங்க வேற. என்ன செய்வாரு அண்ணாச்சி.

நிகழ்வு 3:
இப்படித்தான் லண்டன்ல பத்துவருஷம் படிச்சுட்டு ஒரு டாக்டரு எங்க தெருவுல பந்தாவா லோக்கல் அமைச்சர கூப்பிட்டு க்ளினிக் தொறந்தாரு. அவரு கிளினிக் தொறந்தாரா வைகுண்ட வாசல தொறந்தாரானு சந்தேகம் வர அளவுக்கு அவர்கிட்ட வைத்தியம் பாக்க போன கேஸுகளில் பத்துக்கு நாலு அவுட். தொறந்து வச்ச அமைச்சரே ‘டாக்டரே வெளியேறு'னு தெருவுல போராட்டம் நடத்தி அவருக்கு செருப்பு மாலை போட்டு படையல் நடத்திட்டாரு. கேபிள் டிவி, சன் டிவில வேற இவரு பேரு வந்துருச்சுனா இவரு எவ்வளவு பாப்புலர்னு பாத்துக்கோங்க.

நிகழ்வு 4:
இன்னொருத்தர் கதையும் சோகம். அவனவன் கம்பூட்டர் பொட்டி தட்ட படிக்கற காலத்துல இவரு அதிசயமா கட்டிடக்கலை படிச்சுட்டு வந்தாரு. ஒரு ஏக்கரா குடும்ப சொத்து இருந்துச்சா.. அடுத்தவன நம்பி என்ன பொழப்பு, நாமளே ஷாப்பிங்க் செண்டர் கட்டி வாடகைக்கு விடுவோம்னு பேங்க்ல எல்லாத்தியும் அடமானம் வச்சு, அதிகமில்ல, ஒரு நாலுகோடி வாங்கி ‘நம்மூருல நான் கட்டுறேன் பாருடா உலக வர்த்தக செண்டரை'னு அடிக்கல் நட்டாரு. அவர் போட்ட டிசைன்ல ஏதோ டேமேஜாம். கட்டிடம் பாதிலேயே இடிஞ்சு விழுந்திருச்சு.

-------------------------------------------------------
இதுல என்ன வந்துச்சு காலம் காலமா நம்ம நாட்டுல நடக்கறதுதானேனு நீங்க கேக்குறது எனக்கு கேக்குது. ஆனா பாருங்க... 'திறமையின்மை' காரணமா மட்டும் ஒருத்தர வேலைலேர்ந்து தூக்கிட கூடாதாம். ஏன்னா அவங்களுக்கு குடும்பம் குட்டி இருக்காம். பேங்க்ல லோன் வாங்கிருப்பாங்களாம். வீடு கட்டிருப்பாங்களாம். அதையெல்லாம் கருத்துல எடுத்துக்கணுமாம். இதே மாதிரி பரந்துபட்ட நெஞ்சத்தோட நம்ம நாட்டுல நல்லவங்க இத்தன பேரு இருக்கறதுனாலதான் மழை நல்லா பெய்யுது.

அப்படியே இந்த பால்காரர், முனுசாமி அண்ணாச்சி, டாக்டரு, கட்டிடக்கலை வல்லுநரு எல்லாருக்கும் கொஞ்சம் பொதுமக்களாகிய நீங்க எதுனாச்சும் பெரிய மனசு பண்ணி அவங்களோட ‘திறமையின்மை', ‘அதிருஷ்டமின்மை' அல்லது ‘பணத்தாசை' மட்டுமே காரணமா கொண்டு இவங்கள புறக்கணிக்காம அவங்களும் வாங்கின லோன திருப்பி அடைச்சு, காரு வாங்கி, வீடு வாங்கி, கல்யாணம் கட்டி, குழந்தை பெத்து, அது காலேஜ் முடிச்சு, பேத்திக்கு சீரு கொடுக்கற வரைக்கும் உங்களோட பேராதரவ கொடுக்கணும்.

இது வேண்டுகோள் இல்ல கட்டளை. அதுமட்டுமல்ல இது உங்க கடமை.

திறமையா வேலை செய்யலேனாலும் வேலைய விட்டுத் தூக்கக்கூடாது. கம்பெனியே திவாலாப்போனாலும் கம்பெனியோட CEO அவரோட குடும்பச் சொத்த வித்தாவது வேலைசெய்யறவங்களுக்கு சம்பளம் தரணும்.

இப்ப நீங்க mac sys-adminனு வச்சுக்கோங்க. உங்க கம்பெனி இன்னிலேந்து exclusiveஆ விண்டோஸுக்கு மாறப்போறதா பாலிஸி முடிவு பண்ணிருச்சு. ஆனாலும் உங்கள வேலைய விட்டு போயிடுனு சொல்லமுடியாது. 'செல்லம்.. நீ போயி இசைத்தமிழ்.நெட்ல டிவி பாரு, வலையுலகத்துல தமிழ வளரு... உன் சேவை காலத்துக்கும் இந்த கம்பெனிக்கு தேவை'னு பாசமுள்ள அப்பாவாட்டம் பொத்தி பொத்தி வளர்க்கணும். ஏன்னா பணம் இன்னிக்கு போகும். நாளைக்கு வரும். மனுசங்க வருவாங்களா?

அப்புறம் இதே லாஜிக்படி, ஐடி உட்பட எந்த கம்பெனியிலும் ஒருவாட்டி சேர்ந்துட்டீங்கன்னா, அப்புறம் இன்னொரு கம்பெனி வந்து ஜாஸ்தி பணம் தரேனு சொன்னா நீங்க மாறிடக்கூடாது. ஏன்னா உங்களுக்கு சோறு போட்டு அந்த சோத்துல உப்பையும் போட்ட தாய்க்கம்பெனிக்கு துரோகியாக முடியுமா?

------------------------------------------------------
'எலே முத்து! களத்துமேட்டில வேலை பாக்காம கவர்ன்மெண்ட் குடுத்த டிவில தேன்மொழியாள் பாத்துகினு மத்தியானத்து நேரத்துல கனவா? இந்த மாதிரி பாசக்கார பயலுகளா முதலாளிங்க காண்ட்ராக்ட் போட்ட வேலையில் இருக்கும் தொழிலாளிகளுக்கு மட்டும்தான் சலுக காட்டணுமாம். நீ இப்படி வேலை செய்யாம சொகமா கெடக்கேனு பண்ணையாருக்கு தெரிஞ்சுது... வேலைய விட்டு துரத்துறதோட இல்லாம பன மரத்துல கட்டி வெளாசிருவாரு' னு லட்சுமி வந்து சத்தம் போடவும் பழய சோத்தையும் பச்ச மொளகாயும் கொட்டிகிட்டு திரும்பவும் களத்துமேட்டுக்கு போரடிக்க போனேன்!

டிஸ்கி: No Offence intended or otherwise.

228. மோனிகா... ஓ! மோனிகா!

'எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது. எது நடக்குமோ அதுவும் நன்றாகவே நடக்கும்'?

90களின் ஆரம்பம். பள்ளிக்காலத்தில் மோனிகாவை பற்றி பேசாத நாளென்று ஒன்று இருந்ததாக நினைவில்லை. அப்படியொரு மோகம் மோனிகாவின் மீது.

1991,92,93 ஆஸ்திரேலியன்;
1990,91,92 - ப்ரென்ச்;
1992 - விம்பிள்டன் ரன்னர் அப்;
1991,92 - யு.எஸ்


என்று ஒன்பது கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள். இத்தனைக்கும் வயது இருபதுகூட ஆகவில்லை. ஸ்டெபி கிராபின் அரியணையில் ஏறத்தகுதி வாய்ந்த பெண்கள் டென்னிஸின் அடுத்த சூப்பர் ஸ்டார் கிடைத்துவிட்டார் என்ற சந்தோஷமான தருணத்தில்...

ஏப்ரல் 30,1993 - ஹாம்பர்கில் ஸ்டெபியின் மீது வெறி பிடித்த மனநோயாளி ஒருவனால் கோர்டின் நடுவில் அத்தனை பேரின் முன்னிலையிலும் தோள்பட்டைக்கு இடையில் கத்தியால் குத்தப்பட்டார் மோனிகா செலஸ். ஜெர்மனியில் குற்றவாளியை மனநோயாளி என்ற காரணத்தால் இரண்டு வருடத்திற்கு மனநோய் காப்பகத்தில் இருக்கச்சொல்லி தண்டனை விதித்தார்கள்.

இருபதாம் வயதில், பெண்கள் டென்னிஸ் உலகில் நம்பர் 1ஆகத்திகழ்ந்து, அவ்வருட ஆஸ்திரேலிய ஓபனைக் கைபற்றி பிரெஞ்சையும் கண்டிப்பாக வென்றிருக்க வேண்டிய சூழலில், குண்டர் பார்ச் என்ற நோயாளியின் செயலால் மோனிகாவின் career அவுட். எமோஷனலாகவும், உடல்ரீதியாகவும் அவர் இதிலிருந்து மீண்டு வர இரண்டு வருடங்கள் பிடித்தது. அதற்கப்புறம் வந்து 1996 ஆஸ்திரேலிய ஓபனை கைபற்றினாலும் பழைய பார்முக்கு திரும்பவே முடியவில்லை.

மார்டினா ஹிங்கிஸை எனக்கு பெர்ஸனலாக அவ்வளவாக பிடிக்காது என்பது ஒரு காரணமென்றாலும் (ட்ஜோக்கரைப் போன்ற ஆட்டிட்ட்யூட்), மோனிகாவிற்கு இந்த கொடுமை நிகழாமல் இருந்திருந்தால் மார்டினா 90-களின் பிற்பாதியில் பெண்கள் டென்னிஸை இவ்வளவு டாமினேட் செய்திருக்க முடியாது என்பது என் ஆணித்தரமான எண்ணம்.

பலருக்கு ஒரு வாழ்நாள் பிடிக்கும் காரியங்களை இருபது வயதிற்குள் செய்து வெற்றிகண்டு, ஒரு நோயாளியின் செயலால் அனைத்தையும் தொலைத்து நின்ற மோனிகாவிற்கு என்ன ஆறுதலோ ஊக்கமோ கொடுக்கமுடியும்?

pro டென்னிஸிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்று மோனிகா அறிவித்ததைப் படித்தபின் அந்த இனிமையான 90களுக்கு ஒரு நிமிடம் சென்று, கோர்டில் இவர் ‘அஹெம்' என்று கத்துவதில் தொடங்கி, ஹாம்பர்க் நிகழ்வுக்கு பிறகு எல்லாமே ஒரு கனவாய் முடிந்தது நினைத்து 'what could have been?' என்ற உபயோகமற்ற கேள்வி வந்து உருத்துகிறது.

Images © Brittanica Blog, Sports Illustrated

227. 7 +/- 2... இது ஏழரையல்ல

ஒரு மேட்டர் விஷயமாக கூகிளை தோண்டிக்கொண்டிருந்தபோது, reality 1.0-ல் வேண்டுவது அல்லாமல் மற்றதே கண்ணில் படுவது போல, அகப்பட்டது இந்த chunking. மூளை பிஸியாலஜி அண்ட் அஸ்ஸோசியேட்டட் மெமரி மேட்டரெல்லாம் துருப்பிடிச்சுருந்தபடியால் இன்னும் தேட ஆரம்பிச்சேன். சுவையாகவும் அதே சமயம் சில கடினமான விஷயங்களை குறித்த புரிந்துகொள்ளல்களை அதிகப்படுத்த உதவுவதாகவும் எனக்குப் பட்டது. அதை இந்த உலகத்தோடு பகிர்ந்து கொண்டேயாகவேண்டுமென்ற வெப் 2.0 வெறியுடன் இது...

முதலில் இந்த chunking என்பது என்ன? 1956ஆம் ஆண்டு அமெரிக்க ஆராய்ச்சியாளர் மில்லர் கண்டுபிடித்த வார்த்தைதான் இந்த சங்கிங். அவரது ஆய்வறிக்கை 'The Magical Number Seven, Plus or Minus Two" யில் தான் இந்த 7+/-2 முதலில் பேசப்பட்டது. அது என்ன 7+/-2? மனிதனுடைய short term நினைவுத்திறனினுடைய bandwidth தான் இந்த 7 +/-2.

சராசரியாக ஒரு மனிதனால் ஒரு சமயத்தில் அதிகபட்சமாக ஏழு அல்லது +/-2, அதாவது ஐந்து அல்லது ஒன்பது bits of informationஐ மட்டுமே கிரகிக்கமுடியும். இந்த bottleneck அளவு சிலருக்கு மாறுபடலாம். சிலருக்கு குறைந்து காணப்படலாம். ஆனால் பெரும்பாலானவர்களின் பேண்ட்வித் இவ்வளவுதான். சரி இந்த bits of information, அதாவது chunk என்பது என்ன? digits, images, thoughts, actions or any other piece of information - are grouped together as collections based on similarity. A chunk can then be defined as such "a collection of elements having strong associations with one another, but weak associations with elements within other chunks" - அதாவது ஒத்து இருக்கும் தகவல்களை ஒரு குழுவாக சேகரித்து வைப்பது. இப்படி குழுக்களாக வகைபடுத்தினாலும் அவற்றின் எண்ணிக்கை அளவும் 7+/-2 விதியின்படி ஒன்பது குழுக்களே அதிகபட்ச எண்ணிக்கையாக இருக்கமுடியும். ஒன்பது என்பது எந்நேரமும் சித்திக்கக்கூடியதுமில்லை. சேமிக்கப்படும் தகவலின் complexityக்கு ஏற்ப ஒரு சமயத்தில் கிரகிக்கப்படக்கூடிய அளவு மாறுபடும்.

தற்காலிக நினைவுத் திறன் குறித்து பேசப்பட்டு வந்த இந்த விதி, பின்னர் நிரந்தர நினைவுத்திறனின் கீழும் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. டெலிபோன் நம்பர்கள், பல இலக்க கடவுச்சொற்கள் போன்றவற்றை நம் மனம் சேமிப்பது இந்த டெக்னிக்கை வைத்துதான் என்றும் நம்பப்படுகிறது. சொல்லப்போனால் mnemonics என்று நாம் பரவலாக பயன்படுத்தும் வழக்கம் இதே அடிப்படையில் இயங்குவதே.

உதாரணத்திற்கு நான் படித்த ஒன்று நினைவுக்கு வருகிறது:

She Likes To Play, Try To Catch Her

மனிதனின் மணிக்கட்டில் இருக்கும் எலும்புகளில்
முதல் வரிசை: Scaphoid, Lunate, Triquetrum, Pisiform
இரண்டாவது வரிசை: Trapezium, Trapezoid, Capitate, Hamate

இங்கே மேற்சொன்ன உதாரணத்தில் catch என்று தொடும் பாகங்கள் (palms and wrists) சம்பந்தத்துடன் கடினமான லத்தீன பெயர்களை நினைவுக்கு கொண்டு வருவது சுலபமாகிறது. இந்த மாதிரி பிரபலமானவை நிறைய உண்டு. அவரவரின் படிக்கும் வழக்கத்திற்கு ஏற்ப சொந்தமாக கட்டமைப்பதோ வழக்கம்.

தியரியே படிச்சுகிட்டிருந்தா போரடிக்குது இல்ல... இதை எப்படி செயலாக்கத்தில் நமக்கு சாதகமாக்கிக்கொள்வது? எழுத்து வடிவில் வழங்கப்படும் எவ்வகையான தகவல்களையும் இந்த 7+/-2 ஐ மனதில் கொண்டு தயாரித்தால், நம்மை படிக்கும் வாசகர்களுக்கு அதை நினைவில் நிறுத்திக்கொள்வது எளிதாக்க முடியும். அடிப்படையாக சில விதிகள்.

* No more than nine bullet points on a slide
* No more than nine bullet points on a bulleted list - classify the information into smaller logically related groups and introduce a subheading
* No more than nine bubbles on a single data flow diagram - consider reducing this further if the functions are complex
* No more than nine classes in an object model module - consider creation of more super-classes or a more granular partitioning
* No more than nine states in a single state transition diagram - consider creation of super-states
* This principle statement is chunked into 7 units of information. No unit has more than 6 thoughts or sub-chunks.

உதாரணத்துடன் இங்கே காணலாம்
------------------------------
அது சும்மா எழுதுனா செய்யற விஷயம். ஆனால் இது போன்று வரிசைக்கிரமமாக வாசகர்களால் சிந்திக்க முடியுமா? மனமெனும் குரங்கு தாவிக்கொண்டேயிருப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் இருக்கே.

ஒரு விஷயத்தை யோசிச்சு செய்யறதுன்னா நடக்குற காரியமாவா இருக்கு? அதுக்கு என்ன செய்யறதுனு யோசிக்கணும்னு சொல்லிகிட்டே தமிழ்மணத்தை ஓப்பன் பண்ணி ஒரு ரெண்டு பதிவ திறந்து வைத்துக்கொண்டு, அப்புறம் திட்டிக்கொண்டு, திரும்ப கூகிளாண்டவரே கதினு விழுந்தேன். கொடுத்தார் ஒரு அருமையான லின்க்கை. நான் சொல்றதை நானே கேக்க மாட்டேனு போங்கு பண்ணிகிட்டிருந்த குரங்குக்குட்டி திரையில் வர்ற அம்புக்குறிகளப் பார்த்தோன சைலண்ட் ஆயிருச்சு. எனக்கே ஆச்சரியம்.

ஏன்னா பொதுவா எவ்வளவு சீரியஸான வாழ்க்கை மேட்டரானாலும் சரி ஜோவியலான வலைப்பூவுலகமானாலும் சரி அஞ்சு நிமிஷம் யோசிப்போம்னு ஆரமிச்சா - முறையே கார்கள், ****, அசின், ****, அரசியல், **** அப்படினு அஞ்சுநிமிஷத்துக்குள்ள அண்டார்டிகா வரைக்கும் தாவிகிட்டு இருக்குமே, இப்ப அதுக்கு என்னாச்சுனு எனக்கே டவுட் வர அளவுக்கு ஆயிருச்சு. அது எப்படினா ஒரு நாலஞ்சு வயசுல குழந்தைங்க உள்ளவங்களுக்கு தெரியும். 'ஹாயா டிவி பாத்துகிட்டே இருப்பாங்க, ஒரு பத்துநிமிஷம் கழிச்சு திடீர்னு யோசனை வரும். குழந்தையோட ரகளை எதுவுமில்லாம என்னடா இவ்ளோ அமைதியாயிருக்கேனு டிவிய mute பண்ணிட்டு முழிப்பாங்களே. அதே பீலிங்தான்.

சரி. ஒரு சின்ன டெஸ்ட். முதல்ல நீங்க நினைக்க வேண்டியது ஏதாவது ஒரு விஷயத்தை பத்தி. என்ன நம்புங்க இதுதான் கஷ்டமான காரியம். அப்புறம் எல்லாமே சுலபமே. அது உங்களோட டூத் பிரஷ்ஷாக இருக்கலாம், அல்லது கோசவோவோட சுதந்திரமா இருக்கலாம், நீங்க காரோட்டறதா இருக்கலாம் அல்லது உலகப் பொருளாதாரமா இருக்கலாம்.

இப்ப நீங்க செய்யவேண்டியதெல்லாம் ஒண்ணுதான். இப்ப ‘ஐஸ்கீரீம்' அப்படினு நினச்சிருந்தீங்கனு வையுங்க. நினச்சிட்டு கீழே படத்துல இருக்குற கறுப்பு பொத்தானை அமுக்கினால் திரையில் அம்புக்குறியீடுகள் வரும். இப்போது நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கும் பொருளின் தொடர்ச்சியாக எந்த திசையில் உங்கள் எண்ண ஓட்டம் இருக்க வேண்டும் என்று குறிக்கவே இந்த குறியீடுகள்.

மேலே குறிக்கும் அம்பு வந்தால் - ஐஸ்க்ரீமுக்கு மேலே போகவேண்டும். அதாவது ஐஸ்க்ரீம் என்பது உணவுவகை, அதோட டிஸ்ட்ரிப்யூஷன், டெமொக்ராபிக்ஸனு எந்த buzzword வேணா இருக்கலாம். ஆனா macro levelஅ இருக்கணும். big pictureனு கூட சொல்லலாம்.

கீழே குறிக்கும் அம்பு வந்தால் - ஐஸ்க்ரீமிகுள்ள போகணும். அதாவது ஐஸ்க்ரீமில் என்னென்ன இருக்கிறது. அவற்றின் தன்மைகள். அந்த மாதிரி. micro. in depth lookனு சொல்வாங்களே அந்த மாதிரி.

பக்கவாட்டில் குறிக்கும் அம்புகள் வந்தால் - ஐஸ்க்ரீமை ஒற்று இருக்கக்கூடிய வேறு பொருட்கள் என்பது மாதிரி போகலாம். lateral ஆக செல்லவேண்டும். metaphors மாதிரி.


ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டமா இருக்கும். போகப்போக ஒரு விஷயத்தைக் குறித்த உங்கள் புரிதல்கள் எப்படியிருக்குனு உங்களுக்கே புரிய உதவுற ஜாலியான விளையாட்டு.
ரெடியா? கறுப்பு பொத்தானை அமுக்கினால் ஜூட் தான். இதுக்கு time limit எல்லாம் கிடையாது. ஒரு விஷயத்தை குறித்து எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எடுத்துக்கொண்டு சிந்திக்கலாம். அடுத்த எண்ண ஓட்டத்துக்கான திசையை பெற மீண்டும் கறுப்பு பொத்தானை அழுத்தவும்.

©Manifestation.com

226. சைவத்தை புறக்கணியுங்கள்!

சைவர்கள் பெரும்பாலும் தங்கள் கருத்துகளில் மிகத்தீவிரமாக இருப்பர். அறிவியல் பூர்வமாகவோ வேற எந்தப் பூர்வமாகவோ அவர்களிடம் விவாதம் செய்வது பெரும்பாலும் நேரவிரயமே. சைவர்களுக்கு மற்றவர்களைவிட தாங்கள் ஒருபடி மேலே என்ற எண்ணமும் தானாக வந்துவிடுவதும் கூட காரணமாக இருக்கலாம். அப்படி அலைபவர்களுக்கு ஒரு செக் வைக்கும் விதமாக ஒரு அறிவியல் பூர்வமான கட்டுரையை pravda வெளியிட்டிருக்கிறது.

முக்கிய அம்சங்கள்:
1. உங்களுக்கு பிள்ளைப்பேறு வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் சைவம் பக்கம் கண்டிப்பாக போகவேண்டாம்.

2. சைவம் மட்டுமே உட்கொள்பவர்களுக்கு வறண்ட பொலிவற்ற சருமமே இருக்கும்.

3. தன்னம்பிக்கை குறைந்து காணப்படுவார்கள். பகுத்தறியும் திறன் குறையும். லாஜிக் திறன்கள் குறைந்து காணப்படும்.

4. சைவ உணவப்பழக்கத்தை கொண்ட வயதானவர்களின் இதயத்தின் தசைகள் வலுவிழக்கக்கூடும்.

5. இதயம் மட்டுமல்லாமல் கைகால்களெல்லாம் சத்தற்று போகும்.

6. ஏனைய நோய்களும் வரவாய்ப்புகள் அதிகம்.

பெரும்பாலும் சைவ உணவே உட்கொள்ளும் ஆப்ரிக்க குழந்தைகளை பார்த்திருக்கிறீர்கள் தானே? நலிந்து போய், வீங்கிய வயிறுடன் அவர்கள் இருப்பதற்கு சைவமே காரணம்.

-----------------------------
இப்படி பல மேட்டர் இருக்கு.

படிச்சாச்சா? சிரிச்சாச்சா? குழந்த பொறக்குமா, ஹார்ட் பெயிலியர் வருமானெல்லாம் கற்பனை வளர்த்துக்கவேணாம். அரைவேக்காட்டுத்தனமா எழுதப்பட்ட டிபிகல் மெயின்ஸ்ட்ரீம் மீடியாவோட கட்டுரை அது. கிட்டத்தட்ட இவர்கள் சொல்லும் எல்லாமுமே நேர்மறையாக இருக்கிறது. ரொம்ப பயந்தவர்கள் இவக சொல்றத படித்துக்கொள்ளலாம்.

இன்னிய பதிவின் முக்கியமான மேட்டருக்கு வந்திருக்கோம்.

இதயம் பலகீனமானவர்கள், ஸ்க்ரீனில் பளீச்சிடும் வண்ணங்களால் வலிப்புநோய் வரக்கூடியவர்கள், easily offended ஆட்கள் என பொதுவாக பதினெட்டு வயதுக்கு கீழுள்ளவர்கள் கீழே உள்ள வீடியோவை பார்க்கவேண்டாம். கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டுமே.

(டிஸ்கி: This video may contain content that is inappropriate for some users)

வறண்ட சருமத்துடன், கைகாலெல்லாம் சூம்பிப்போய், தசைகளெல்லாம் வற்றி - தன்னம்பிக்கை சற்றுமற்ற ஒரு பாவப்பட்ட சைவரை பாருங்கள்.





இதைப் பார்த்தப்புறமும் நீங்கள் இனியும் சைவராக இருக்கத்தான் வேண்டுமா?

225. வந்தாடியே! வந்த வழி போயிடு ஓடியே!

மும்பையில் நடந்துகொண்டிருக்கும் கூத்தப்பத்தி, அதான்பா அமிதாப் பச்சன் அண்ட் உத்தர பிரதேசம் vs தி ஸ்டேட் ஆப் மஹாராஷ்ட்ரா (c/o இராஜ் தாக்குடே) பத்தி பதிவெழுதுலாம்னு நினச்சுகிட்டிருந்தேன்.

அப்போ பிரத்யட்ச தெய்வம் கனவுல வந்து 'என்னையப் பத்தி ஒரு தொடர் போடறேனு சொல்லிட்டு இப்படி ஜகா வாங்குறியே, இது உனக்கே நல்லா இருக்கா'னு கேட்டாரு. சரினு தலகிட்ட 'உம்ம மேட்டர் கெடக்குது. இந்த மும்பைல உபிக்காரவுகல்லாம் வந்து அட்டூழியம் செய்யறாங்களாம். இந்த நார்த்தீ கும்பலால மராட்டியர்களுக்கு வேலைபோச்சாம், மானம் போச்சாம் மருவாதை போச்சாம். அப்படியே அமைதிப்பூங்காவான மும்பைல இவனுக வந்ததுலேர்ந்து எல்லா கிரிமினல் ஆக்டிவிடிஸும் ஜாஸ்தியாயிருச்சாம். அதுனால அவங்களையெல்லாம் வெளியேத்தணும்னு தாக்குடே அண்ணாச்சி சொல்றாருனு' சொன்னேன்.

அதுக்கு தல ‘இதெல்லாம் காலங்காலமா எல்லா ஊர்லயும் நடக்குற மேட்டர் தானப்பா.. இதுல என்ன புதுசா கண்டுட்ட? ஹிட்லர் போல்பாட் தொடங்கி ஒரு பெரிய க்ரூப்பே இப்படித்தானே வெறியத்தூண்டி வெளாண்டாங்க? இப்ப நம்ம கதையவே எடுத்துக்கயேன். இந்த வருச 2008 விம்பிள்டன்ல இதே மாதிரி நடக்கப்போகுது'. உலகவலைப்பதிவுகள்ல முதல்முறையாக வருங்காலத்துல வரத நீ இப்பவே போட்டு நியுஸ மக்களுக்குச் சொல்லிடு'னு சொன்னாரு.



(படத்துமேல கிளிக்கினா அடுத்த படத்துக்கு போவும்)

தல சொன்னத குறள்வாக்கா எடுத்துகிட்டு ஒரு வார்த்தை கூட என்சேர்க்கை இல்லாம போட்டுட்டேன்! வேறு எவர்கூடயோ எது கூடயோ லின்க்கெல்லாம் பண்ணி என்னய்யவும் புலம்பவச்சிருதாதீங்கப்பூ!


---------------
Photos from Menstennisforums

224. ஆதிக்க சக்தியும் அடங்கிடா தோழரும்!

ஆதிக்க சக்திகள் எப்பொழுதும் தங்களின் ஆதிக்கத்தை தக்கவைத்துக்கொள்ள முயற்சிகள் செய்துகொண்டேதான் இருக்கும். அப்படி தக்கவைத்துக்கொள்வதற்காக அதன் முக்கிய ஆயுதம்: மற்றவரை அடக்கியாள்வதற்கு அவர்களிடம் பயத்தைத் தூண்டிக்கொண்டேயிருக்கவேண்டும். எந்த ஒரு நொடியில் அந்த சக்தியிடம் பயமற்று ஒரு இளைஞன் விழிப்படைகிறானோ, பீடத்தில் இருக்கும் பீடைகளின் வீழ்ச்சிக்கான புரட்சி துவங்கிவிட்டதாகவே நாம் கருத வேண்டும் என்று புரட்சியியல் தத்துவ நிபுணர் ஒருவர் சொல்லியிருக்கிறார்.

தன் தொழிலில், தான் இயங்கும் சமூகத்தில் தான் மட்டுமே முன்னிறுத்தப்பட்டு அத்தனை புகழும் தனக்கு மட்டுமே என்று சுரண்டும் பாசிஸ்ட்கள் இனி கனவில்தான் அவ்வாதிக்கத்தை காணவேண்டும் என்று நம்மைப் போன்ற சாதாரணர்களையும் பெருமைப்படவைக்கும் -empowering the people வகையறா - மாபெரும் புரட்சிகரமான சரித்திர நிகழ்வுகள் நம் வாழ்நாளில் நடப்பது மிகவும் அரிது. மற்றவர்களுக்கு கிடைக்கும் நியாயமான அந்தஸ்தையும் தன் பேராசையால் தட்டிப்பறித்தால் வேகமும் கோபமும் உள்ள இளைஞர்கள் பொறுமையாக இருக்கமுடியுமா?

ஆதிக்க சக்திக்கு குரல்வளையை நெறிக்கும் அத்தகைய ஆதிக்கத்தை செலுத்துமளவுக்கு தகுதி இருக்கிறதா என்ற கேள்வி தேவையற்றது. ஆதிக்கம் செலுத்தும் குழுவிற்கு அத்தகைய தகுதியே இருந்தாலும் - அந்த திறமையை மட்டுமே கொண்டு ஒரு சமூகத்தையே தன் பாதத்தினடியில் போட்டு மிதித்தல் எனும் கொடுமை நடந்துகொண்டிருக்கும் வேளையிலே, ஒரு சக்தியின் வெற்றியில் மற்றவர்களின் தோல்வி இருக்கிறது என்பதும் அதனூடாக மற்றவர் அடிமைப்படுத்தப்படுகின்றனர் என்ற கோணத்தை முற்றிலும் மறந்துவிட்டு, மனசாட்சியில்லா ஊடகங்கள் அடிக்கும் ஜல்லியில் - வென்றவனின் ‘திறமையை' மட்டுமே பறைசாற்றி; சாதாரண மக்களுக்கு அவை இழைக்கும் கொடுமையின் அளவை நாம் கணக்கிட எண்ணுமுன் இத்தகைய 'திறமை' என்ற தம்பட்டத்தின் காதைகிழிக்கும் ஒலியில் மக்களை இருட்டிலேயே வைத்திருப்பதன் அவசியத்தை ஊடகங்களும் உணர்ந்துள்ளன என்பதையும் அதனோடு கூட முக்கியமாக தங்களின் மொத்த வீரியமும் அத்தகைய இருட்டிலேயே அடங்கியிருக்கிறது என்பதை புரிந்துவைத்துள்ள ஆதிக்க சக்திகளைப்பற்றியும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

புரட்சியின் விதை விதைக்கப்படுவதற்கு முக்கிய காரணி மற்றவர்களுக்கு வாய்ப்பும் வாழ்வும் மறுக்கப்படுவதினால் மட்டுமே என்பதை ஆதிக்கசக்திகள் உணர்வதில்லை. வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளும் பண்பும் பொறுமையும் இருந்தால் ஆதிக்கசக்திகள் உருவாகாமலேயே போயிருக்கும் என்பதுடன் அப்படி ஒரு சக்தி உருவாயின் தனக்கே எல்லாம் என்று பேராசையாவது பட்டிருக்காது என்பது வெள்ளிடைமலை.

தன் சமுதாயத்துக்கு நேர்ந்த கொடுமைகளால் ஒரு புரட்சியாளன் தன் இரத்தத்தால், உழைப்பால், வீரத்தால், வீரியத்தால், கோபத்தால் எடுக்கும் ஆயுதம் அது வெறும் புல்லானாலும் அவன் கொடுக்கும் ஒவ்வொரு அடியும் அவன் மக்களின் வாழ்வை மறுக்கும் சக்திக்கு அது சம்மட்டி அடியாகவே விழும். ஏன் அடி, இடியாகவே விழும்.

இப்படி நடக்கும் ஒரு உரிமைப்போரில் நாம் எவர் பக்கம் என்று யோசிக்க வேண்டிய தேவை இருக்காது. ஏன், அப்படி யோசிக்க முயலும் 'அறிவாளி முகமூடிகளை வெட்கமில்லாமல் அணிந்துகொண்டு அம்மணமாக அலையும்' பரதேசிகள் நமக்கு தேவையுமில்லை. அவர்கள் நம் பக்கம் இல்லையென்று எதிரிப்பக்கம் போனாலும்கூட, அத்தகைய பாசிஸ்ட் சிந்தனையாளர்கள் இல்லாமல் போனது நம் பேறு என்று பெருமைபட்டுக்கொண்டு தொடர்ந்து புரட்சியாளனுக்கு ஊக்கமும் உந்துதலும் அளிக்க வேண்டியது நம் கடமை என்று உணருதல் வேண்டும்.
--------------------------------------------------------------------------------------
நிற்க.

டெபனிஷன் போடாமல் பரந்துபட்ட பிரபஞ்சத்தில் அட்டாக்கத்தி சுற்றுவது எதற்கு என்று குழப்பமுறும் துர்பாக்கிய நிலைக்கு நீங்கள் தள்ளப்படுமுன்... ஒரு ரசிகன் என்ற இழிநிலையிலிருந்து சற்றே சுயமுன்னேற்றம் அடைய வேண்டும் என்ற தேடுதலை என்னுள் தந்தவருக்கு காணிக்கையாக்குவதற்கு கடமைப்பட்டிருக்கிறேன்.

ஒண்ணுமில்லை ஐயாக்களா.. நம்ம தலை பெடரர ட்ஜோக்கோவிச் தோக்கடிச்சுட்டாரு. நேர் செட்கணக்கில் வேற. அதோடு விடாம 'The King (Roger Federer) is dead. Long live the (new) King! (Djokovic)” னு ட்ஜோக்கரோட அம்மா பேட்டி வேற கொடுத்தாங்க. பேசுறதுக்கு முன்னாடி யோசிச்சு பேசணும். இப்படி எடுத்தேன் கவுத்தேனெல்லாம் அறிக்கை விடக்கூடாது, அதுவும் பெடரரைப் பத்தி பேசறதுக்கு முன்னாடி கண்டிப்பா யோசிக்கணும்னு சொல்லப்போனேன். ஆனா அதெப்படி நீ சொல்லலாச்சுனு சில பேரு கிளம்பிட்டாங்க. அப்புறம் யோசிச்சு பார்த்ததுல நான் வெறும் ரசிகன் என்ற நுனிப்புல் கண்ணோட்டத்தில் பாத்துகிட்டிருக்கேங்றது எனக்கே புரிஞ்சுது.

நமக்குதான் ஜெயிக்கறவன கண்டா ஆகாதே...அப்படி ஜெயிச்சவனைப் பார்த்து பிடிக்குதுனா நம் வளர்ப்புல ஏதோ குறையிருக்குங்கறதுதான் உண்மை. underdog என்னவேணா சொல்வாரு.. இதையும் சொல்வாரு இதுக்கு மேலயும் சொல்வாருன்னு சொல்லி, அதான் ஆதிக்கசக்தி ஒழிஞ்சிச்சே... அத தகர்த்த புரட்சியாளன எத்தனை தடைகளையும் அவதூறுகளையும் தாண்டி இத்தகைய சமூக புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறான். அவனை அனாலைஸ் செய்ய நீ யாரு. பொத்திகிட்டு போடானு அடுத்தவனை கேட்காம அவர் சொல்வதை தவறு, அவையடக்கம், நாவடக்கம் வேண்டுமென்றெல்லாம் சொல்ல நான் யார்? அதான் செய்தவமா இந்தப்பதிவு.

ஆதிக்க சக்தியான பெடரர் ஒழிக!

புரட்சித்தளபதி உரிமைப்போராளி நோவாக் வாழ்க வாழ்க!

ஏன் ஆதிக்க சக்தியா?

இதப் பாருங்க.. இல்லாட்டி இதையாவது பாருங்க.

இத்தனை ஆண்டுகளாக டென்னிஸை தன் கைப்பிடியில் இறுக்கிப்பிடித்து மற்ற வீரர்களை ஜெயிக்க விடாமல் அடாவடி செய்த அரக்கனுக்கு கொடுமைக்காரனுக்கு குடைபிடிக்கவேண்டிய அவசியம் என்ன வந்தது? இவனை ஓட ஓட விரட்டிய ட்ஜோக்கருக்கு பிடிக்கவேண்டியதுதானே ஒவ்வொரு மானமுள்ள மனிதனும் செய்யவேண்டிய கடமை?

என்னைப்போல வெறும் ரசிகர் மன்ற விசிலடிச்சான்குஞ்சாக - தட்டையான சிந்தனையுடன் ஒற்றை பரிமாணத்தில் உழலாமல் - அரசியல், சமூகம், மொழி, மனிதவுணர்வு என சிறிதேனும் படித்துத் தெளிந்து அனைவரும் ஆதிக்க சக்தியழிந்ததை குறிப்பதாய், இனி ஜனவரித்திங்கள் 27ஆம் தேதியை அனைவரும் நோவாக் தினமாக அனுசரித்து அவர் புகழ் பரப்பவேண்டுமென்று வேண்டிக்கொள்கிறேன்.

என்னை இப்பதிவிட வைத்தவருக்கு மீண்டும் நன்றி சொல்லிக்கொள்கிறேன்.

223. மாட்டிக்கொள்ளாமல் ப்ளாக்கர்பேஷன் செய்வது எப்படி?

ஓண்ணுமில்ல நிறைய பதிவர்கள் புதுசா கிடைச்ச வலையுலக சுதந்திரத்த வெங்கலக்கடையில் யானை புகுந்த கதையா பயன்படுத்தறாங்க. ஒரு சின்ன ரியாலிடி செக் அவ்ளோதான். உங்களுக்கும் அவங்களுக்கும் பயனுள்ள தகவல்களா இருக்கும்னு நம்பறேன். நன்னி!
----------------------------
What is Defamation?

It is a law created to protect individuals or organisations from unwarranted, mistaken or untruthful attacks on their reputation. This means the publication of any statement which:

* Exposes them to hatred, ridicule or contempt
* Causes them to be shunned or avoided
* Discredits them in their trade, business or profession
* Generally lowers them in the eyes of right thinking members of society

Posting a defamatory statement on an Internet message board or community area is the same as publishing it in a newspaper or magazine and can result in a court case if a formal complaint is made. Both the publisher, (in this case the blogspot.com), and the author, (you), risk being sued for making a defamatory statement. And there is no Legal Aid for defamation.


How to avoid it?

Get your facts right. In Indian law, as in most countries around the world and its likely that the country you live in, if its democratic - follows similar laws, YOU have to prove that what you write is true, rather than the person you've targeted having to prove that you're wrong. And proving things in court can be a very difficult and costly process.

Don't make these common mistakes...

* Repeating others...

If you repeat defamatory remarks about people or organisations made by other people, you will be just as liable to be sued as they are.

-- படிச்சுப்ப்பாக்காம 'ரிப்பீட்டேய்', 'சூப்பர் பதிவு', ‘நன்னாச் சொன்னேள் போங்கோ' போடாதீங்க


* Jumping to conclusions...
If Mr X is seen going into a hotel room with a call-girl, this does not necessarily mean he enjoyed a 'night of passion', and will certainly not prove that he did.
-- இவன் எழுதுறது எனக்குப்பிடிக்கலை = இவன் பேரு பாப்பாரப்பேராட்டம் இருக்கு = இவன் ஒரு பாப்பான் = இவன் ஒரு பாசிஸ்ட் = இவன் ஒரு பன்னாடை = இவனோட அம்மா ஒரு... இப்படினெல்லாம் ஈக்வேஷன் போட்டுகினே போகக்கூடாது.


* Exaggeration...
Be very careful about the words you use. A factory may release chemicals into the air, but describing it as 'poisoning the atmosphere' could well be defamatory.
-- பண்ணாடை, பரதேசின்னு எல்லாம் யாரையும் எக்காரணத்தைக்கொண்டும் பொது இடத்துல திட்டக்கூடாது. பொது இடம் என்பது இந்த வலையுலகமும் சேர்ந்ததுதான். அப்பா அம்மா சொல்லிக்கொடுத்திருப்பாங்களே சின்ன வயசுல?


* Representing all sides...
Presenting both sides of an argument is often good practice, but not a defence against defamation.
-- தமிழ்ப்படத்துல வர மக்கள் கருத்தாட்டம் 9 பேரு ஹீரோ நல்லவன்னு சொல்லவச்சி, ஒருத்தனை மட்டும் அவனைக் கெட்டவன்னு சொல்றதெல்லாம் வேலைக்காவாது மாமோய்!


* Innuendo...
To say Mrs Y doesn't recycle her waste paper may sound harmless. But to people who know that Mrs Y is a Green Party activist, the implication is that she is hypocritical in her politics.
-- அதாவது தமிழே சொல்லித்தராத ஹிந்தி பள்ளிக்கூடத்துல தமிழினத்தலைவர் ஒருவரின் (Mr. X) பிள்ளைகள் படிக்கிறாங்கங்கறது உண்மையான செய்தியாக இல்லாத பட்சத்தில் சொல்பவர் மீது இச்சட்டம் பாயும்.


* Inference...
If somebody was guilty of fraud once, calling him a fraudster in a way which might suggest he's still doing the same can be seen as defamation.
-- அத்தை விடுங்க, இங்க நாம என்ன பண்றோம்? யாரோ தாத்தா பண்ண தப்புக்கு பேரனை பண்ணாடை பரதேசின்னு சொல்லறோமே!


* 'Allegedly'...
In spite of its use in a popular current affairs panel game, adding the word 'allegedly' to a statement you cannot prove does not stop it being defamation.
--வீரப்பன் நிஜமாவே மரம் வெட்டினானோ என்னமோ! கன்னடப்பிரசாத் ஒருவேளை ஒழுக்கமானவனாக இருக்கலாம், இருள்நீக்கி சுப்புணி வீச்சருவாளால ராதாகிருஷ்ணனை போட்டுத்தள்ளிட்டு சொர்ண்மால்யா கூட என்னவோ செஞ்சான் -- இப்படினெல்லாம் குருட்டாம்போக்குல அடிச்சு விடாம யோசிச்சு எழுதணும்னு சொல்றாங்க போல!


Defending a statement


In the event that you are accused of defamation, there are several defences...

1. Truth.

நீங்கள் சொன்னது உண்மையாக இருக்கும்பட்சத்தில் இதை பயன்படுத்தலாம்.


2. Fair comment: The defendant is allowed to comment on facts truly stated, as long as the comment is fair and the defendant is not motivated by actual malice.
-- உதாரணத்துக்கு பதிவர் 'D' ஒரு பன்னாடை, நாய். அவன் சாதியைத் தூக்கிப்பிடிக்கிறான். அந்த சாதித்திமிர் ஒழிய வேண்டும் என்று சொன்னாலும்...
பொதுநலம், சமூகப் பொறுப்பு போன்ற பிரதிவாதங்கள் தனிமனித அல்லது இனவெறியைத்தூண்டும் கருத்துகள் அதே பயனரின் பெயரில் இடம்பெற்றிருந்தால் defamation என்றே கருதப்படும்.

3. Privilege: On certain occasions, the courts have held that policy and convenience require that a person should be free from responsibility for the publication of defamatory words. These occasions constitute privileges. Privilege may be absolute, such as statements in the House of Commons or the Courts. It may be qualified, in that it may be lost if the publication is unnecessarily wide or made with malice.

4. Innocent dissemination: This last defence is potentially very important in cyber libel. If a defendant proves that his statements were true and in public interest, then his conduct is regarded as lawful. In addition, if the defendant can show that he had no intention to defame (the plaintiff), then he could avoid liability.
ஹி ஹி... சொல்லிக்கலாமே.. நான் சொல்வதெல்லாமே உண்மை.. என்னைத்தவிர உண்மையானவன் இல்லை... and so forth..

*************
The global nature of the Internet also raises some interesting procedural questions for the libel lawyer. In traditional libel law there are three different types of defamatory statements:

i) The first is a statement that is defamatory on its face and which is obviously defamatory.

ii) The second is a statement, which contains false innuendo. False innuendo is a defamatory statement that has an inferential meaning, therefore only persons with the necessary contextual knowledge appreciate that the statement is defamatory. Since statements on the internet are published globally, their inferential meanings may vary depending on the geographic or cultural location of the reader or the newsgroups or the Usenet group involved.
-- முதுகுல நெளியுது, கொண்டை தெரியுது போன்ற வலைப்பூவுலகத்தினருக்கு மட்டுமே புரிந்த பொன்மொழிகள் இதுல வரும்னு நினைக்கிறேன்.

iii) The third category is legal innuendo. While not defamatory on their face, these statements are defamatory when viewed together with extrinsic circumstances. Once again, contextual knowledge may render a statement defamatory in one jurisdiction but not in another.
**************


Indian Penal Code on Defamation:
Chapter XXI of the IPC exclusively talks of defamation. Section 499 prescribes the offence:

Whoever, by words either spoken or intended to be read, or by signs or by visible representations, makes or publishes any imputation concerning any person intending to harm, or knowing or having reason to believe that such imputation will harm, the reputation of such person, is said . . . to defame that person.

Explanation 2. - It may amount to defamation to make an imputation concerning a company or an association or collection of persons as such.

Section 500 prescribes the punishment in such cases:

Whoever defames another shall be punished with simple imprisonment for a term, which may extend to two years, or with fine, or with both.

Employer's liability
A company can be held liable for the conduct of its employees. If an employee, during working hours, e-mails a defamatory remark about a competitor company to a colleague, the firm could be held liable for defamation even if the employee's actions were not authorised or expressly prohibited.

-------------------------------------------------------------
அனானிமைஸர், torproject என்று பலவழிகள் உங்களை அனானிகளாக மாற்றுவதற்கு இருந்தாலும் - உங்களின் உண்மையான இருப்பிடத்தையும் அதன்மூலம் பெயர், ஜாதகம் போன்றவற்றை பாதிக்கப்பட்டவர் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளால் பெறமுடியும். யாருமே நூறு சதம் அனானி கிடையாது.



Disclaimer: The information provided on this site is intended as a guide only. It does not constitute legal advice. Text Abstracts © BBC and LegalServicesIndia.


நன்றிகளும் சுட்டிகளும்

http://www.legalservicesindia.com/articles/defcy.htm
http://www.vakilbabu.com/Laws/Classify/Classify17.htm
http://www.vakilbabu.com/Laws/Classify/Classify18.htm


---------------------------------------------------------------
கடைசியாக ஒரு வீடியோ: ப்ளாக்கிங் பற்றி.
தமிழ் வலைப்பூக்களுக்குனே வீடியோ எடுத்தா மாதிரி இருக்கு.
ஆனால் Adult Content. So You have been warned!

222. Shaken, Not Stirred!

The Joker has arrived... incredulous as it may seem, Thrashed the G.O.A.T and took his crown.

5-7 3-6 6-7

ஸ்ட்ரெயிட் செட்ஸ்.... ஹூம்...

அடுத்து பிரான்ஸ்.. :((((((((


Wir verloren eine Schlacht! Nicht der Krieg! Bedauerlich, aber nichts katastrophalen nach zehn aufeinander folgenden Grand Slam Finale!

Allez Roger!




Image Courtesy © Jura

UPDATE
The Gentleman: gives no excuses for his loss... and praises Djoker...
Post Match Interview

221. சத்தமில்லாமல் ஒரு சாதனை!

தமிழ்நாட்டுல எல்லாரும் என்னமோ திமுக, அதிமுகலாம் ,அவங்கவங்க நிலைப்பாட்டுக்கு தகுந்தாற்போல, சாதனையோ சோதனையோ செஞ்சதா மாத்தி மாத்தி பேசிக்கிறோம். ஆனா பாருங்க.. நம்மாளுங்க பேசத்தான் லாயக்கு!

அங்க என்னடான்னா வட இந்தியால சத்தமில்லாம ஒரு சாதனைய செஞ்சு காட்டிருக்காங்க உத்தர பிரதேச முதல்வர் மாயாவதி. உத்திர பிரதேசத்திற்கு முதல்வர் ஆகுறது ஒரு சாதனைனாலும் இந்த வருஷத்துல அவங்க செஞ்சிருக்கிறது மெய் சிலிர்க்க வைக்கிறது. பில்டர் நிறைய் கொடுக்க வேண்டிருக்கு. காரணம் சாதனை அந்தா மாதிரி.

இந்த வருடத்தில் இந்தியாவிலேயே அதிகம் வருமான வரி கட்டப்போகும் அரசியல் தலைவர் மாயாவதியாக இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாசத்துலேர்ந்து டிசம்பர் வரைக்கும் அவங்க கட்டிருக்கிற வருமான முன்வரி ரு. பதினைந்து கோடி. வரும் மார்ச் மாதம் வருடமுடிவில் மேலும் ரூ. ஐந்து கோடி கட்டுவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஆகக்கூடி அவரின் வருடத்திய வருமானவரி ரூ. இருபது கோடியைத் தொட்டால், அவரின் சொந்த வருமானம் க்டந்த ஆண்டில் ரூ. அறுபது கோடிக்கும் அதிகமாய் இருந்திருக்கலாம் என்று பிஸினஸ் ஸ்டாண்டர்ட் ஊகிக்கிறது.

இதன் மூலம் இந்தியாவிலேயே அதிக வருமானவரி கட்டும் தரப்பட்டியலில் முதல் 25க்குள் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் என் வருத்தமெல்லாம் கோலிவுட் பாதுசா 'கிங் காங்க்' கான் இந்த வருஷம் ரூ. இருபத்தியேழு கோடி முன்வரி கட்டும்போது ஒரு முதல்வர் அவரை விட ஏழு கோடி கம்மியாக கட்டுவதா? அதுவும் உத்திரப்பிரதேசத்தை இன்னும் பிரித்தால் இந்த சாதனை செய்ய முடியுமா? இதனை உணர்ந்தே, பிரிக்குமுன்னே சாதனையை முறியடிக்கவேண்டும் என்று செல்வி மாயாவதியின் முயற்சிக்கு எடுத்துக்காட்டு: போன வருடம் அவர் முழுவதுமாக கட்டிய மொத்த வருமான வரி ரூ. 12.5 கோடி. இந்த ஆண்டு அதை இரட்டிப்பாக்கி காட்டியிருப்பது நிச்சயம் பாராட்டுக்குரியதன்றோ? எர்லி பர்ட் பல்கலைக்கழகங்கள் அவருக்கு ஹானரரி டாக்டரேட், எம்.பி.ஏ கொடுக்க உடனே அவரை தொடர்புகொள்ளலாம்.

அவரின் முக்கிய வருமானம் தொண்டர்கள் கொடுக்கும் பரிசுகளே! வருமான வரித்துறை 'கமிஷன்'ர்கள் சாதாரணர்களை மிரட்டுவது போல கேட்டு இவரை மிரட்டி கேஸ் போடமுடியாதாம். காரணம் அவர் பொதுச்சேவையில் இருக்கிறாராம். அதனால் சி.பி.ஐ, அது நினைத்தால்(அதாவது மத்திய அரசுக்கு மாயாவதியை பிடிக்கவில்லையென்றால்) மட்டுமே, கேஸ் போட்டு அவரைக் கேள்வி கேட்க முடியுமாம். யார் சொன்னது? தனிமனித சுதந்திரம் இந்தியாவில் இல்லையென்று?

அதேசமயம்... மாயாவதி பாவம் ஒரு பெண். அரசியல் அனுபவம் பத்தாது. அதான் சொத்தெல்லாம் கணக்கில் காட்டுகிறார் என்றும் சொல்லலாம். இதுவே இந்தியாவில் எந்த ஒரு வருமான வரித்துறை ஆளுக்காவது எங்கள் தமிழினத்தலைவரையோ, கோல்(ட்)மாலுக்கே பெஞ்ச்மார்க்காய் திகழும் தங்கத்தாரகையையோ, மக்கள் பிரதிநிதி மருத்துவரையோ கேள்வி கேட்க தெகிரியம் இருக்கா? கேட்டாலும் மழுப்பியே கட்டம் கட்டிற மாட்டோம்? அப்படி வச்சிருக்கோமில்ல.. அங்கதான் நிக்கிறோம் நாம!

----------------------------------------------

நான் 2007 வருஷம் போட்டதுல ஒண்ணு கூட தேறாதுன்னு தெரிஞ்சே அண்ணா பினாத்தலார் இன்னுமொரு தொடருக்கு கூப்பிட்டிருந்தாரு.

கழுதை தேய்ஞ்சு கட்டெறும்பு ஆன கதையாக (கண்டெண்டில் இல்லை. கணக்கில் மட்டுமே) வெறும் நாற்பது பதிவுகளையே இட்டு, அதுவும் பெரும்பாலும் knee-jerk ரியாக்‌ஷன் அல்லது ஒருவருக்கும் புரியாத 'ஞானபீட'(TM) அவார்ட் பெற முழுத்தகுதியினைப் பெற்ற பதிவுகளாய்ப் போனதில் இன்னொருமுறை உங்க நேரத்த செலவழிச்சு உப்புமாவ படிக்கச் சொல்றதுக்கு ஒரு மாதிரி இருந்தாலும் வலையுலகில் சுயசொறிதல் அடிப்படை உரிமை/திறமை என்பதை கணக்கில் கொண்டு இதோ:
கொத்தனாருக்கென்று டெடிகேட் செஞ்சாலும் சென்சிடிவான மேட்டரில் மக்கள் குழப்பதுலதான் இன்னும் இருக்காங்கங்க்றதுக்கு இது.

பயணத்தொடர் எழுதி நாளாச்சுன்னு ஆரமிச்சு ரெண்டுலயே குறைப்பிரசவம் ஆனது செட்டிக்கோட்டை சீரீஸ். அதுக்கப்புறம் தமிழர்களுக்கு விடுதி பிடிக்குமா வீடு பிடிக்குமானு ரொம்ப பீடிகையோட கொத்தனாரின் சாபத்தால் ப்ளாப் ஆனது இந்தப்பதிவு.

நமக்கெல்லாம் பதிவுக்கு ரிசர்ச் என்பதெல்லாம் ஆக்ஸிமோரான் ஆச்சே. அதுனால போட்டு வாங்கிக்கட்டிக்கிறது பழக்கமான ஒண்ணு. இது ஏதோ கொஞ்சம் விதிவிலக்கா போச்சு.

இருநூத்தியிருபதுல இப்பதானே பத்துப்பதிவு பத்திச் சொல்லிருக்கேன்? இன்னும் நிறைய இருக்கு. கோவைப்பக்கம் நான் பொண்ணு பார்க்கப்போனதாய் கிளப்பப்பட்ட பொய் வதந்திகளையும் மீறி இது. அப்துல் கலாம் பத்தி பதிவு போடாதவங்க இருப்பாங்களா? ஆனா அப்துல்கலாமே ஆனாலும் வயிற்றிக்கு சிறிது ஈயப்படவில்லையென்றால் கஷ்டம் என்பதை நிருபிக்க இதுவும் இதுவும்.

போறும். எனக்கே தற்பெருமை தாங்கலை. 2005னு பெனாத்தலார் சொன்னது நான் எழுதின பயணக்கட்டுரைகளாதான் இருக்கும்னு நினைக்கிறேன். மருதைக்கு போலாமாவும் குத்தாலம் போன கதையும் தான் நான் இதுவரைக்கும் குப்பை கொட்டினதுலேயே எனக்கே ரொம்ப பிடிச்சது.

முடிவாக நான் ஆரமிச்ச டேக் வெளையாட்டு ஒண்ணு. பாவப்பட்டு ரெண்டு பேரு போட்டாங்க. மிச்சவங்க போடறேன்னு ஆசைக்காட்டினதோட சரி.

ஆட்டத்துக்கு கூப்பிடறது?
1. ஜிரா
2. குமரன்
3. புலி (இன்னும் போட்டோவே போடலை.. அதுக்குள்ள அடுத்தது.. இதுவாவது போடறாரான்னு பார்க்கலாம்.)

220. தொடரில் தனியாய்...

புதுசா ஏதோ புகைப்படத் தொடராமே... அதுக்கு நம்ம கொத்ஸு நான் படம் போடணும்னு சொல்லிருந்தாரு. நமக்கு நாமே சான்ஸ் கிடச்சா விடற கோஷ்டியா நாம?

அதுக்கு முன்னாடி ரூல்ஸ்:
<$quote:baba$>
அதாகப்பட்டது என்ன செய்யவேண்டுமென்றால்...
1. கடந்த வருடத்தில் எடுத்த புகைப்படம் ஒன்றை இடவேண்டும்.
2. எதுவாக இருந்தாலும் ஒகே. கலையுணர்ச்சி, PIT நுட்ப சிறப்பு, சொந்த ஃபீலிங்ஸ்... சரிதான்.
3. ஏன் அந்தப் படம் ரொம்ப இஷ்டம் என்பதை சொல்ல வேண்டும்.
<$/unquote:baba$>

கைவசம் இருக்கும் படத்தில் இதுதான் தேறிச்சுனு நான் சொன்னாக்க... எப்படியும் உங்கள்ல ஒரு நாலு பேராவது பாவம், இன்னும் நல்லா எடுத்திருக்கான் போலிருக்கு பையன் ஆனா துரதிருஷ்டம் கைவசம் இல்லியேனு பாவப்படுவீங்கன்னு அந்த பிட்டையும் போட்டுக்கறேன்.

இது எடுத்த இடம்: Pavlovsk அப்படிங்கற ஊர். மன்னர்களோட கிராமம்னு ஒரு போஸ்ட் போட்டேனே அந்த ஊர் பக்கத்துல இருக்கறது இது. அரண்மனையெல்லாம் ஜோரா இருந்தாலும், அதோட இருக்குற இந்த காடு தான் (காடுனு சொன்னா பொருள் மாறறா போல இருக்கு. இது பார்க்). நாங்க போன அன்னிக்கு நல்ல மேகமூட்டம் லேசான தூறல்னு நாள் புல்லா சூரியன் வராம டகால்டி கொடுத்திகிட்டிருந்தாரு. ஜில்லுனு நீராகாரத்தோட சுடச்சுட பார்பக்யூ ஐட்டங்கள ஒரு கட்டு கட்டிட்டு அப்படியே அந்த நாள் பூரா காலாற நடந்த சுகம் வாழ்நாளுக்கும் மறக்க முடியாதது. அப்படியொரு அமைதி.





மேலதிக விவரம்:விக்கிபீடியா
படிக்காம படம் மட்டும் பார்க்க இங்க போங்க.
------------------------------------------------------------------------------------
ஒரே படத்தோட முடிச்சா உப்புமா சாப்பிட வந்த உங்களுக்கு நான் பண்ணும் துரோகமில்லியா?

அதுனால அடுத்த படம்.



பார்க்க அழகா இருந்தாலும் இதப்போட வேண்டிய அவசியமென்னனு நீங்க கேக்கறதுக்கு முன்னாடி முன்கதை சுருக்கம்.

இந்த பிள்ளையார் கோயில் generic தெப்பக்குளத்துல நானும் நண்பர்களும் கல்லெல்லாம் எறிஞ்சு விளையாடிகிட்டிருந்தோம். அப்ப அந்தப் பக்கம் வந்த பெரியவர் தம்பிகளா இது என்ன குளம் தெரியுமான்னார். நாமதான் வரலாறுல புலிகளாச்சே... அவரே எங்க வழிசல பார்த்து பாவப்பட்டு் என்ன குளம்னு சொன்னோன எங்களுக்கெல்லாம் ஒருமாதிரி போச்சு.

இது இருக்குற ஊரு திருவையாறு. ஐயாறப்பன் கோயிலுக்கு பின் சந்தில் இருக்கும் ஒரு பிள்ளையார் கோயில் வாசலில் இருக்கு. திருநாவுக்கரசர் இமயமலையை நோக்கி போன போது உடல் தளர்ந்து வழியில் விழுந்தார். அப்போ அந்தப் பக்கமா வந்த ஒரு பெரியவர் இவரப்பார்த்து பரிதாபப்பட்டு ‘நீங்க இமயமலைக்கெல்லாம் இந்த வயசுல போகமுடியாது. அதுக்கு பதிலா பக்கத்தில் இருந்த குளத்தில் முங்கி எழுந்திருங்க'னு சொன்ன உபாயத்தால் அருகிலிருந்த குளத்தில் அப்பர் குதிக்க, அடுத்த நொடி அங்கேயிருந்து நேரா திருவையாத்துல இந்தக்குளத்துல தான் எழுந்தார் அப்பர். அதோட முடிஞ்சா பரவால்லியே...

எழுந்த அப்பருக்கு உமையாளோடு சிவபெருமான் காட்சி கொடுத்த திருக்குளம் இதுதான்.

அப்பேர்ப்பட்ட புண்ணியத்தீர்த்தத்திற்கு என் கைங்கர்யமாக கல் எறிந்தது ... என்ன சொல்றது.. இதெல்லாம் சகஜமப்பானு நினச்சு விட்றவேண்டியதுதானில்ல?

எழுந்து பாடின பதிகம் ஒண்ணும், சம்பந்தமான வீடியோ ஓண்ணும்... என்சாய்..

மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது
காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன்
கண்டே நவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்!

- திருநாவுக்கரசர்


-----------------------
அடுத்து ஆட்டத்துக்கு யாரக்கூப்பிடறது?
1. ஸ்காட்லாந்து போய் காய்ச்சினவரு

2. செப்புப்பட்டயத்துல விளாசுறவரு

3. A Tiger in Africa? :))

 

வார்ப்புரு | தமிழாக்கம்