தனியாய் கஷ்டப்படும் ஆண்களுக்கு: சமையல் குறிப்பு!

வெளிநாடு வாழ் மற்றும் வெளிமாநிலங்களில் தத்தம் சொந்த ஊரைப் பிரிந்து வாழும் பல்லாயிரக்கணக்கான தமிழ் ஆண்களைப் போலவே நானும் ஆரம்ப காலங்களில் சரியான சாப்பாடு இல்லாமல் திண்டாடியிருக்கிறேன். வீட்டில் இருந்த வரைக்கும் வெங்காய சாம்பார், மோர்குழம்பு, அவியல், உருளைக்கிழங்கு ரோஸ்ட் என்று புகுந்து விளையாடிவிட்டு திடீரென்று வீட்டிற்கு வெளியே இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டால் சமாளிப்பது மிக கடினம். அதுவும், நம் வீட்டில் இருந்தவரைக்கும் முந்திரி பருப்பு இன்னவகையற திருடித் தின்பதற்கு தவிர சமையல் அறை பக்கமே காலடி எடுத்துவைக்காமல் இருந்துவிட்டு நாமே சொந்தமாக சமைக்கவேண்டும் என்பது பெரிய இடிதான். பாட்டிகள் இருந்துவிட்டால் போதும், நிலைமை இன்னும் மோசம்.. "நல்லாருக்கு! ஆம்பிளைப் பசங்களுக்கு சமையல்கட்டுல என்ன வேலை"ன்னு discriminate பண்ணி வெளியே துரத்திவிடுவார்கள்.

இந்தியாவில் வேறு மாநிலத்திற்கு செல்வோர் நிலைமை ஒரு வகையில் பரவாயில்லை. ஏதொ ஒரு மெஸ்-ஸோ ஒன்றையோ கண்டுபிடித்து விடலாம். வெளிநாட்டில் வாழவோர்க்கு பிரச்சனைகள் சொல்லி மாளமுடியாது. மூன்று வேளையும் மெக்டோனால்ட்ஸில் சாப்பிட முடியுமா? கட்டுபடியாகுமா? அப்படியே ஆனாலும் மார்கன் ஸ்பர்லாக் போல் ஆவோமா என்று பயம் வேறு வரும். ஒரே நக்கட்ஸும், பிக் மாக்கும் எத்தன நாள் சாப்பிட முடியும்? சரி, இதெல்லாம் சரிப்பட்டு வராது, நாமே சமைக்கலாம் என்றால் வெண்டக்காயை நுனி உடச்சு வாங்கணும், தக்காளி அமுக்கிப் பாத்து வாங்கணும்கறது போன்ற ட்ரேட் ரகசியங்கள் தெரியவில்லையென்றால் தொலைந்தோம். சரி, அப்படியே ஏதாவது ஒரு காய்கறி வாங்கி மீனாட்சி அம்மாளின் 'சமைத்து பார்' வைத்து ஒப்பேத்தலாம் என்றால் அவர் குறிப்பிடும் வீசை, ஆழாக்கு போன்றவற்றிற்கெல்லாம் நிகழ்காலத்தில் equivalents இல்லை.

அப்போ? என்னதான் வழி? இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று. புதிதாய் நாம் இருக்கும் நாட்டிற்கு குடியேறிய தம்பதிகளுக்கு உதவுவதாய் சொல்லி அவர்கள் வீட்டிலேயே காப்பி உட்பட மூன்று வேளையும் கொட்டிக்கொள்வது.

இன்னொன்று சுயமாக சமையல் கற்றுக்கொள்வது. சமையல் என்பது ஒன்றும் பிரம்ம வித்தை இல்லை என்பதை உணர்த்தவே ஒரு குறிப்பை சொல்ல ஆசைப்படுகிறேன். இந்த ரெசிபி எந்த காண்டினெண்டிலும், எந்த குக்கிராமத்திலும் செய்யலாம். ஏனென்றால், மூலப்பொருள் எல்லா இடத்திலேயும் பாகுபாடின்றி கிடைக்கும். சரி, விஷயத்திற்கு வருவோம். இரண்டுவகை இன்ஸ்டண்ட் பசி மறக்கடிக்கும் ரெசிபிக்கள் இருக்கின்றன. அருகிலுள்ள சூப்பர் மார்க்கெட் சென்று ஒரு கிரேட் வாங்கிக்கொள்ளூங்கள். கார்ல்ஸ்பெர்க், ஹைனக்கென் என்று பலதரப்பட்ட பசி நிவாரணிகள் இருந்தாலும் உங்களுக்கு எது பிடிக்குமோ அதை கண்டுபிடிப்பதற்கு ஆரம்ப காலத்தில் சில சோதனைகள் செய்து தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். ஒரு மணி நேரத்திற்கு இருபாட்டில்கள் என்பது சராசரி அவரேஜ். ஒரு கிரேட் வாங்கினால் ஒரு 2 நாட்களுக்கு பசியிலிருந்து விடுதலை.

என்ன வெட்டி குறிப்பு கொடுத்து டபாய்க்கிறன்னு பாப்பவங்களுக்கு, இதோ உருப்படியான குறிப்பு. அதே சூப்பர் மார்க்கெட்டில் பழரச செக்ஷனுக்குப் போனீர்களானால், 2 லிட்டர் ஆரஞ்சு ஜூஸ் கிடைக்கும். அந்த பாக்கெட்டை பத்திரமாக வீட்டிற்கு எடுத்துவந்து (காசுகொடுப்பதும் கொடுக்காததும் உங்கள் சாமர்த்தியம்) ஒரு டேபிளின் மேல் செட் செய்து கொள்ளவும். பத்திரமாக டெட்ராபாக்கை பிரித்து ஏற்கனவே சுத்தம் செய்யப்பட்ட/மூன்று நாள் முந்திய கிளாஸ் எடுத்து அதில் ஒரு 500 மில்லி ஊத்தவும். மிக ஜாக்கிரதையாக வாயருகில் கொண்டு சென்று அருந்தவும். பாதி கிளாஸ் குடித்து முடித்தபின் ஏன் முதல்வகை பசிநிவாரணி வாங்கவில்லைன்னு சுய இரக்கம் வரும். பெரும்பாலான ஆண்களுக்கு வரும் உணர்ச்சிதான் இது, அதனால் பதட்டப்பட தேவையில்லை. எவ்வளவு ஜூஸ் வேணுமோ குடித்து முடித்து, மூடி பிர்ட்ஜுக்குள் வைப்பது நலம். கொஞ்சம் adventurous ஆன வாசகர்கள் ஜ்ஸ் பாக்கை சரியாக மூடாமல் டேபிள் மேலேயே முன்று நாட்கள் வைத்தால் ஆரஞ்சு சுவையுடன் கூடிய mushroom ஜுஸும் கிடைக்கும். ஒரே கல்லில் ரெண்டு மாங்கா.

இந்த ஆரஞ்சு ஜூஸ் குடித்துவிட்டு தூக்கம் வரவில்லையென்று சொல்வோர் மேற்சொன்ன முதல்வகை நிவாரணிகளை பரிட்சித்துப் பார்க்க வேண்டுகிறோம்.

This article is a stub and readers are expected to further experiment and provide feedback.

10 Comments:

  1. Anand V said...

    //ஆரஞ்சு சுவையுடன் கூடிய mushroom ஜுஸும் கிடைக்கும். ஒரே கல்லில் ரெண்டு மாங்கா
    //

    கொல்றது என்று முடிவோடத்தான் இருக்ககீங்களா ?
    :-)


  2. rv said...

    ஆனந்த்,
    //கொல்றது என்று முடிவோடத்தான் இருக்ககீங்களா ?//
    என்னோட சேவை தமிழ்நாட்டுக்குத் தேவைன்னு நினச்சுகிட்டுருக்கேன்!

    வாங்க, போங்க விட்டுடலாமே...நான் ரொம்ப சின்னபையனாக்கும்!

    நன்றி


  3. Anand V said...

    இராமநாதன்
    மயில் அனுப்பி இருக்கிறேன்.. பாரு(ங்க) !


  4. துளசி கோபால் said...

    ராமநாதா, ச்சின்னப்பையா,

    கொல்வது என்ற முடிவோடுதான் இருக்கின்றாயா?

    'ங்க'வை விட்டாச்சு:-)

    இப்படிக்கேக்கணுமா தம்பி?:-)

    தெரியாமப் போச்சே.

    என்றும் அன்புடன்,
    அக்கா


  5. rv said...

    அக்கா,
    //கொல்வது என்ற முடிவோடுதான் இருக்கின்றாயா?//
    ஹி ஹி,, ஏதோ என்னாலான .யிர் தமிழ்ச்சேவை!

    //'ங்க'வை விட்டாச்சு:-)
    //
    கண்டிப்பா அக்கா... இதையே தொடருங்க..

    இதப் பாத்தீங்களா?


  6. G.Ragavan said...

    அடடா! ராமநாதன், ஒங்க நெலமை இப்படியா ஆகனும்......ஜூஸ் மட்டும் போதுமா! பேசாம ரெண்டு பிரெட்டு வாங்கி வெச்சுக்கிரக்கூடாதா!

    ஒங்களுக்கு சிம்பிள் ரெசிப்பீஸ் வேணுமுன்னா சொல்லுங்க. நல்ல வெஜிடேரியன் ரெசிப்பீசா அனுப்பி வைக்கிறேன்.


  7. அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

    இராமனாதன், நான் உங்கள விட சின்னப்பையன்..அதனால ங்க போடலாம் என நினைக்கிறேன் :) நல்லா நக்கல் வருது உங்களுக்கு..ஆனா, உங்க கஷ்டம் எனக்கு நல்லா புரியுது..ஏனா, நானும் ஜெர்மனியில மண்டை காஞ்சிக்கிட்டிருக்கேன் :(


  8. rv said...

    ரவிசங்கர்,
    உங்களுக்குமா? சின்னப் பசங்களா இருக்குறதுனால copying machine, washing machine, coffee machine, cooking machine என்று எல்லாம் உள்ளடக்கிய ஆல்-இன்-ஒன்னை இந்தியாவில் வாங்க நேரம் வரவில்லை.. ;-)))


  9. rv said...
    This comment has been removed by the author.

  10. நாகை சிவா said...

    இந்த டெட்ராபேக் ஜுஸ் குடிப்பதற்கு பதில் விரதம் இருந்திடலாம். இல்ல 4 கிளாஸ் தண்ணிய குடிச்சுட்டு நம் விதி ய நொந்துக்கிட்டு குப்பற படுத்து தூங்கலாம்.

    ஹைத்தியில் நம்ம வாழ்க்கை இந்த ஜுஸ்லால் தான் ஒரு ஆறு மாதம் ஒடியது. + (sweet yoghurt, flavoured)


 

வார்ப்புரு | தமிழாக்கம்