பிபிசியில பாலஸ்தீனிய தகவல்தொடர்பு அமைச்சர் நபில் ஷாத்தை பேட்டி கண்டபோது சொல்லிருக்காரு...
2003 ஜூன்ல இஸ்ரேலிய-பாலஸ்தீனிய பேச்சுவார்த்தை அமெரிக்காவில் நடந்தது. அதில் ஜனாதிபதி புஷ் எல்லார்கிட்டேயும் சொல்லிருக்காரு "'I'm driven with a mission from God'. God would tell me, 'George go and fight those terrorists in Afghanistan.' And I did."
இது தாலிபான் பத்தி ஆண்டவன் சொன்னது. அதுக்கப்புறம் கூடுதலா இராக் பற்றியும் ரொம்பவே புஷ்ஷிடம் வருத்தப்பட்டிருக்காரு. "And then God would tell me,' George, go and end the tyranny inIraq' And I did."
இன்னிக்கு வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் இது கட்டுக்கதைன்னு மறுத்திருக்காரு.
ஆண்டவனே வந்து பர்சனலா வருத்தப்பட்டுகிட்டா என்னா செய்வார் பாவம் நம்ம ஜார்ஜு? இப்படி என்னிக்காவது இந்தியா சரியில்ல புஷ் தம்பி, நம்ம படைகளை அனுப்பி அவுங்க கொட்டத்தை அடக்குன்னு சொல்லித் தொலைக்காம இருக்கணும்!
Independent
அந்த ஆண்டவன் சொல்றான்!
Subscribe to:
Post Comments (Atom)
9 Comments:
இராமநாதன், சொன்னாலும் சொல்லுவார். "God bless ONLY America " இதானே இவனுங்க ஸ்லோகன். எவன் செத்தா இவனுங்களுக்கென்ன.
ஆமா சிவபுராணம்,
ஈராக்கின் சதாம் அகற்றப்பட வேண்டியவரென்றாலும், அதை செயல்படுத்திய முறை சரியில்லை என்ற கருத்து எனக்கும் உண்டு. மாறாக ரஷ்யா, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய மூன்றும் சேர்ந்து முன்வைத்தவை செயல்படுத்தப்பட்டிருந்தால் ஐக்கிய நாடுகள் சபை மேல் மதிப்பு கூடியிருக்கும். எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற அமெரிக்க மற்றும் பிரித்தானிய நிலைப்பாட்டில் எனக்கு ஒப்புதல் இல்லை.
இதுதான் ஆழமான பின்னூட்டமோ?? :)
//இந்தியா சரியில்ல புஷ் தம்பி,.....//
இதுமட்டும் நடக்கவே நடக்காது. இவுங்களுக்கு ஒரு சாமிதான். நமக்கு?
தேவர்கள் மட்டுமே முப்பத்து முக்கோடின்னா, மத்த சாமிங்க?
ஈராக்கின் சதாம் அகற்றப்பட வேண்டியவரென்றாலும், அதை செயல்படுத்திய முறை சரியில்லை என்ற கருத்து எனக்கும் உண்டு. மாறாக ரஷ்யா, ஜெர்மனி, பிரான்ஸ் போன்றவற்றோடு சேர்ந்து செயல்பபட்டிருந்தால் ஐக்கிய நாடுகள் சபை மேல் மதிப்பு கூடியிருக்கும். எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற அமெரிக்க மற்றும் பிரித்தானிய நிலைப்பாட்டில் எனக்கு ஒப்புதல் இல்லை.
உங்கள் கருத்தோடு ஒத்துப் போகிறேன் இராமநாதன் அவர்களே.
// இதுதான் ஆழமான பின்னூட்டமோ
ஆழமான பின்னூட்டம் வரனும்னா தலைப்பு ஒழுங்க வைக்கனும்
* கடவுளும் , புஷ்ஷ¤ம்,
*வெள்ளை மாளிகையும் சமதானப்புறாவும்
*புஷ் அதிபரா, சதிபரா
*புஷ்ஷ¤ம் (அ)நியாங்களும்..
இந்த மாதிரி !!!
:-)
கூடவே நம்ம மன்மோகன்சிங் சார் கனவில வந்து அமெரிக்காவை அழிக்கணும்னு சொல்லாமல் இருக்கணும். (எந்த விதத்துல சார் நாம குறைஞ்சு போயிட்டோம்)
மூர்த்தி,
நன்றி
சின்னவன்,
அதானே, தலப்பிலேயே பிரச்சனை. இனிமே உம் உம் சேக்காம வக்கறதில்லேன்னு முடிவு செஞ்சிட்டேன்
//இதுமட்டும் நடக்கவே நடக்காது. இவுங்களுக்கு ஒரு சாமிதான். நமக்கு//
அக்கா, முப்பத்து முக்கோடின்னா எவ்ளோ பேர் அப்படின்னு கோயிஞ்சாமி வந்து கேக்கறதுக்குள்ளே நானே கேட்டுடறேன்..
//கூடவே நம்ம மன்மோகன்சிங் சார் கனவில வந்து அமெரிக்காவை அழிக்கணும்னு சொல்லாமல் இருக்கணும். (எந்த விதத்துல சார் நாம குறைஞ்சு போயிட்டோம்)
//
அட கணேஷ், சுருக்குன்னா டென்ஷனாயிடுறீங்களே! இந்த விஷயத்திலே நம்ம மன்மோகன் குறைஞ்சே இருக்கறதுதான் நல்லதுன்னு எனக்கு படுது. பின்ன, அவரும் கிருஷ்ணர் வந்தார், குரு நானக் சொன்னார்னு தத்துபித்துன்னு உளறினா நிலம என்னாகும்? நினச்சு பாருங்க..
Post a Comment