மருதைக்கு போலாமா? - 5

மருதைக்கு போலாமா? - 5: வைத்தீஸ்வரன் கோயில், குஷ்பு

என் லட்சியப் பயணத்தொடர் முடியும் சமயத்தில் தானா இப்படியொரு பிரச்சனை வர வேண்டுமா? அடுத்த பாகம் எழுதுவதில் கொஞ்சம் ஸ்டார்டிங் ட்ரபிள். எழுத வரவில்லையென்பதுடன் குஷ்பு பதிவுகளில் விழும் ஆயிரக்கணக்கான புது பின்னூட்டங்களில் என்ன சொல்றாங்கன்னு தெரிஞ்சுக்கறதிலேயே நேரம் போய்விடுவதாலும் இப்போதைக்கு ஒத்திவைத்துள்ளேன்.

சரி, நமக்குத்தான் எழுத வரல... ஏற்கனவே மண்டபத்தில எழுதி வச்சுருப்பாங்களே.. அதுகளோட சிறிது நம்ம சொந்த சரக்கையும் சேர்த்து மிக்ஸ் பண்ணினா பதிவு ரெடியாயிடும், இல்லியா? கொஞ்சம் மசாலாவாக்கவும், கொஞ்சம் மேதாவித்தனமாகவும் இருக்கட்டும் என்று மதுரையை பத்தி லோயர் அப்பர் மாதிரி பெரிய ஆளுங்க ஏதாவது சொல்லிருக்காங்களான்னு தேடினேன். off hand ஆக தேவாரம், திருவாசகம் எல்லாம் quote பண்ணுவேன் என்று சொல்ல ஆசைதான்... ஆனால், நீதி, நியாயம் மற்றும் சிலர் என்னைத் தடுக்கிறார்கள். உண்மையில் தேடியது project madurai யில் தான். அங்கே, நான் தேடியதோடு சேர்த்து வேறு இரண்டு அருமையான பாடல்கள் கிடைத்தன. அதனால், இதையே ஒரு பதிவாப் போட்டு இப்போதைக்கு ஓப்பேத்திடலாம் என்கிற ஐடியாவுடன், இதோ..

(மேலும் நம்ம கணேஷ் வேறு இங்கே கலக்குகிறார். அவரும் இந்த ஆர்வத்திற்கு காரணம்.)

பேரா யிரம்பரவி வானோ ரேத்தும்
          பெம்மானைப் பிரிவிலா அடியார்க் கென்றும்
வாராத செல்வம் வருவிப் பானை
          மந்திரமுந் தந்திரமும் மருந்து மாகித்
தீராநோய் தீர்த்தருள வல்லான் றன்னைத்
          திரிபுரங்கள் தீயெழத்திண் சிலைகைக் கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
          போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே

                                                                                        - திருநாவுக்கரசர்


வருந்தாவகை, என் மனத்தாமரையினில் வந்து புகுந்து,
இருந்தாள், பழைய இருப்பிடமாக, இனி எனக்குப்
பொருந்தாது ஒரு பொருள் இல்லை-விண் மேவும் புலவருக்கு
விருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே.

                                                                                        - அபிராமி பட்டர்





இதற்கு முந்தைய பதிவுகளைப் படிச்சாச்சா?

1. மருதைக்கு போலாமா - 1: திண்டுக்கல், இராஜகாளி
2. மருதைக்கு போலாமா - 2: பழநி, சில்லி பரோட்டா, WWF
3. மருதைக்கு போலாமா - 3: பழநி, குச்சனூர், திருப்பரங்குன்றம்
4. மருதைக்கு போலாமா - 4: ஆதிசொக்கநாதர், சில நல்ல மனிதர்கள்

5 Comments:

  1. துளசி கோபால் said...

    போச்சுரா,

    'குஷ்பூ மேட்டராலே எழுத வரலை'ன்னு சொன்ன நேர்மையைப் பாராட்டுகின்றேன்.


  2. rv said...

    அக்கா,
    நிஜமாத்தான் சொல்றேன். எத்தன பதிவு, அதுல தான் எத்தன கமெண்ட். மண்டை காய்ஞ்சே போச்சு. நான நினச்சத கணேஷ் பதிவாவே போட்டுட்டார்.

    நீங்க மட்டும் டவுள் விசில் கொடுத்து பதிச்சு தாக்கறீங்க? :))


  3. சின்னவன் said...

    குஷ்பூ என்ற தலைப்பை பார்த்து நான் கூட ஏமாந்து விட்டேன்..

    குஷ்பூ பற்றி போடாத பதிவெல்லாம் ஒரு பதிவா என்று குப்பதுல சொல்லறாங்கோ !


  4. G.Ragavan said...

    எப்படியோ தலைப்புச் செய்திகளில் குஷ்பு வந்து விட்டார். விடுங்கள்.

    மதுரைக்கு வருவோம். நல்லதா ரெண்டு பாட்டு சொல்லீருக்கீங்க. மதுரையப் பத்தி திருப்புகழிலும் சொல்லீருக்காங்க.

    "ஏராறு மாட கூட மதுரையில் சீரான கோல கால நவமணியணி புணை"
    "வரையினில் எங்கும் உலவி நிறைந்தது வரிசைதரும் பதமது பாடி
    வளமொடு செந்தமிழ் உரை செய அன்பரும் மகிழ வரங்களும் அருள்வாயே
    கனக மிகும் பதி மதுரை வளம் பதி அதனில் உறைந்திடும் பெருமானே!"

    சிலப்பதிகாரத்துல இன்னும் பிரமாதமா சொல்லீருக்கு.

    சரி. உங்க அடுத்த அத்தியாயத்துக்குக் காத்திருக்கிறேன்.


  5. rv said...

    சின்னவன்,
    //குஷ்பூ பற்றி போடாத பதிவெல்லாம் ஒரு பதிவா என்று குப்பதுல சொல்லறாங்கோ ! //

    இதனாலேயே என் பதிவு ஒன்னிலும் இப்போ குஷ்புனு தலைப்பாவது போட்டாச்சு.. :)


 

வார்ப்புரு | தமிழாக்கம்