கொத்தனார் என்னும் கோயபல்சுக்கு ஒறு பகிறங்கக் "கடி"தம்

மைடியர் பெனாத்தலாரே என்று சமீபத்தில் நீங்கள் பெனாத்தலார் இன்னும் சமீபத்தில் எழுதிய பதிவொன்றினுக்கு எதிர்வினையாக எழுதியதை கண்டேன்.

இதுவரை பின்னூட்டக்கயமைத்தனம் மட்டும் செய்துவந்த தாங்கள் பறிமானக் கோட்பாட்டின்படி முன்னேறி இப்போது ஒருவர் இட்ட பதிவையே வைத்து கயமைத்தனம் செய்துள்ளதில் - வலையுலக முதிர்ச்சியின் இளவேக பாய்ச்சலைக் கண்டு ஒரு புறம் பூரித்தாலும், மறுபுறம் இத்தகைய இடுகையமைத்தனம் செய்வது வலைப்பூவுலகின் தற்போதைய ஆரோக்கியமான போக்கிற்கு எவ்வாறான கேடுகளை விளைவிக்கும் என்பதை எண்ணுகையில் முன்னர் உப்பிய பூரி சப்பென்று அடங்கிவிடுகிறது. அதன் காரணமாகவே இக்கடிதம்.

*******************************************
ஐபிஎல்லை தமிழ் படுத்துகிறதா அல்லது ஐபிஎல் தமிழைப்படுத்துகிறதா என்று இனமானக்காவலர்கள் வெகுண்டெழுந்து வேட்டியவிழ்த்து போராடிவரும் வேளையில்: ஐபிஎல்லுக்கு பதிலாக மாநிலகிட்டிப்புற்கழகம் சார்பில் இனி மாவட்டத்துக்கு ஒன்றாக சர்வதேச கிட்டிப்புல் வீரர்களை விலைபேசி: அவர்களுக்கு தமிழக நகரங்களின் தெருக்களில் இருக்கும் கோடிகளில் சிலவற்றை கொடையாகத்தந்து சிறப்பு கிட்டிப்புல் கூட்டுசம்பந்தத்தில் சேர்த்துக்கொண்டு, ஆட்ட இடைவேளைகளில் ஒயிலாட்டம், மயிலாட்டம் என கலாச்சாரத்துடன் விளையாட்டார்வத்தை வளர்த்துவருவதுடன்; 2011ல் சிறப்புப் கிட்டிப்புல் வளர்ச்சி மண்டலங்களுக்கான வெள்ளையறிக்கையும் தயாராகிவருவது தெரிந்தும் இவ்வாறான கேள்வியை நீர் எழுப்புவது விஷமத்தனமானது மட்டுமல்ல விஷமானதும்கூட.

*******************************************
தமிழகத்தில் பிறநது தமிழ் நாட்டின் உண்மையான மண்ணின் மைந்தனாக அல்லாமல் வேலைபிழைக்கச் சென்ற தாங்கள், ஏதுமறியாதவரைப்போல, கருநாக்காவுக்கும் புதரகத்துக்கும் கொடி பிடிக்கும் சூட்சுமம் எங்களுக்கு புரியாமலில்லை. இன்று தமிழர்கள் தண்ணியடிக்கிறார்கள் தண்ணீரில்லை என்று கருநாடகாவும், சோறு சாப்பிடுகிறார்கள் சோறில்லை என்று அமெரிக்காவும் சொல்வதை ஒப்புக்கொண்டால், நாளை தமிழர்கள் ஏதோ செய்தார்கள் அதான் சுனாமி பேரலை வந்தது என்று இந்தோனேஷியா புலம்ப வாய்ப்புகள் உண்டு என்று அறியாதவரா தாங்கள்? இந்தச் சமூக அவலத்தினை தோலுரித்துக்காட்டி - அடுத்த தளத்திற்கு எடுத்துச்செல்ல முயன்ற அருமை பெனாத்தலாரின் கருத்தை, நகைச்சுவை என்ற பெயரில் பூசி மெழுகுவது அழகா?
*******************************************
ஆச்சரியத்தை ஆச்சர்யமாக வெளிப்படுத்துவது தவறா இல்லை எல்லாவற்றிலும் ஆச்சார்யங்களை - உங்களைப்போல் - தேடுவது தவறா? சினிமா போஸ்டரில்கூட நாம் தேடும் விஷயத்தை மட்டும்தான் தேடுவோம் என்று ஆடுகிறீர்களே? ஆச்சார்யங்களை வலிந்து தொலைத்த கமலே, ஆச்சார்யர்களைப் பற்றி படமெடுத்தால் படம் ஓடும் என்கிற நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதைக்கண்டு பரிதாபப்பட்டு ப்ளாசில் அவரை விளாசாமல் விட்டார் நமது கொ.ப.செ. மேலும் ப்ளாசில் அதைப் போட்டால் வேறு 'எதெதை' போடுவது என்ற குழப்பமும் குட இருந்திருக்கலாம்
*******************************************
எனக்குத் தெரிந்து இந்த மாதிரி பிரமிட் ஸ்கீம்களை முதன்முதலில் வகுத்து அதன் மூலமாய் சொத்துகளை குவித்தவர்கள் பண்டைய எகிப்தியர்கள் தான். அப்படி சுரண்டியவர்களை பின்னர் சுரண்டியது ஒரு கூட்டம். இங்கேயும் அதே கதைதான் நடக்கும். மன்மோகன் சிங்கிற்கு நம்ம கைச்செலவில் நாலு லெட்டர்பேட் அடித்துக்கொடுத்தால் வேலையாயிற்று. அவரே பிரதியெல்லாம் எடுத்து அனுப்பவேண்டியவர்களுக்கு அனுப்பி சபாநாயகருக்கு அறிவுரைத்து அனைத்தையும் அமுக்கிவிடுவார். சொல்ல முடியாது, இப்போது கம்ப்ளெயிண்ட் கொடுத்த பொதுமக்கள் மீதே சொத்துக்குவிப்பு வழக்கு போட்டாலும் போடுவார்கள். ஸோ கவலைப்படாமல் நைஜீரியன் திட்டத்தினை விரைவில் தொடங்கவும்.
*******************************************
புதிய தமிழ்மணம்/மறுமலர்ச்சி தமிழ்மணம் பற்றியும் உத்தப்புரம் மற்றும் அது குறித்து தலைவர்கள் தந்த பொன்மொழிகள் பற்றியும் பலரும் பல்வேறு கோணல்களில் ஆராய்ச்சி செய்து ஆகிவிட்டபடியால் அப்பகுதிகளுக்கு 'பாஸ்'
*******************************************
வலைப்பூக்களில் எழுதுவது மன அழுத்தத்தை குறைக்கிறதா அல்லது மன அழுத்தத்தை எகிறடித்து கல்யாணியை விட்டு ஆத்த வைக்கிறதா என்ற கேள்விக்கான பதிலை படிப்போர்களிடமே விட்டுவிடுகிறேன்.
*******************************************
டிஸ்கி 1: கொத்ஸைக்குறித்து சிபிஐயிடம் விசாரிக்க உத்தரவிட வேண்டி இக்கடிதத்தினை சாதாரண தபாலில் நடுவண் அரசிற்கு எழுதியனுப்பாமல், இன்ஷ்டண்டாக அனைவரையும் சென்றடையும் மின்னணு தகவற்தொடர்பு ஊடகத்தை பயன்படுத்துவது தமிழகத்தின் நாகரிகத்திற்கு எதிரானதொன்று என்றாலும் சூடு ஆறுவதற்குள் சுடவேண்டும் என்ற பொறுப்பும் சொரணையும் இருந்ததால், ஏற்பட்ட இப்பிழையினை பொறுத்தருள வேண்டும்.

டிஸ்கி 2: மேட்டர் இல்லாத வறட்சியில் எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற எனது அவலநிலையை அறிந்து அவலாய் பதிவொன்று தந்த பெனாத்தலாருக்கும் அதையே வறுத்தெடுத்து நூறடித்த கொத்ஸிற்கும் இப்பதிவு சமர்ப்பணம்.

52 Comments:

  1. பினாத்தல் சுரேஷ் said...

    //இடுகையமைத்தனம்// ஆஹா தமிழுக்கு உன்னாலின்றோர் வார்த்தை வந்து சேர்ந்ததடா என் உடன்பிறப்பு சிங்கமே!!


  2. பினாத்தல் சுரேஷ் said...

    //ஆட்ட இடைவேளைகளில் ஒயிலாட்டம், மயிலாட்டம் // அந்த ஆடலரசிகள் தமிழ்ப்பெயர் கொண்டோராய் இருந்திடல் வேண்டும்.. அதை மறவேல்!!


  3. பினாத்தல் சுரேஷ் said...

    //நாளை தமிழர்கள் ஏதோ செய்தார்கள் அதான் சுனாமி பேரலை வந்தது// என்ன அந்த ஏதோ?


  4. பினாத்தல் சுரேஷ் said...

    //வேறு 'எதெதை' போடுவது என்ற குழப்பமும் குட இருந்திருக்கலாம்// ஆஹா! இஃதன்றோ அருமையான உள்ளப்படப்பிடிப்பு.. அமீரக அண்ணன் நிலையை உருசியாவில் உணர்ந்த தம்பி!!


  5. பினாத்தல் சுரேஷ் said...

    //இப்போது கம்ப்ளெயிண்ட் கொடுத்த பொதுமக்கள் மீதே சொத்துக்குவிப்பு வழக்கு போட்டாலும் போடுவார்கள்.// இப்போது சொ கு வழக்கு, முந்தைய ஆட்சியாய் இருந்திருந்தால் கஞ்சா வழக்கு என்று சொன்னால், அடுத்த மந்திரிசபை மாற்றத்தில் கேபினட் நிச்சயமாம்.


  6. பினாத்தல் சுரேஷ் said...

    //கல்யாணியை விட்டு ஆத்த வைக்கிறதா// யாரந்தக் கல்யாணி, 2000 முறை யோசித்தாலும் தெரியவில்லை.


  7. பினாத்தல் சுரேஷ் said...

    சரி.. இப்போது தலைப்புக்கு.. வரிக்கு வரி உடன்பட முடியாது.. ஒரே வரிதான் என்பதால்.. கமாவுக்கும் கொட்டேஷனுக்கும் எழுத்தின் வளைவுகளுக்கும் உடன்படுகிறேன்


  8. பினாத்தல் சுரேஷ் said...

    சரி.. இப்போது தலைப்புக்கு.. வரிக்கு வரி உடன்பட முடியாது.. ஒரே வரிதான் என்பதால்.. கமாவுக்கும் கொட்டேஷனுக்கும் எழுத்தின் வளைவுகளுக்கும் உடன்படுகிறேன்


  9. Geetha Sambasivam said...

    //ஆச்சார்யங்களை //
    ஆச்சாரியருக்கு வணக்கமும் செலுத்தியாச்சு, சரி இன்னும் ரஷ்யா தானா? அங்கே என்ன ஒரு க்ளைமேட், இங்கே இருக்கிற சூடில் உங்க உப்புமாவில் கையை விட்டதில் கை பொத்துப் போச்சு,:P

    மீ த பர்ஸ்டு? என்ன பரிசு ஏதானும் உண்டா? உடனே வந்து ஆதரவு தெரிவிச்சிருக்கேன். என் பின்னாலே அணி திரண்டு வருவாங்க, சிஷ்யகேடிங்க எல்லாம். :P-


  10. Geetha Sambasivam said...

    "ற" வை இப்படியா அழுத்திக் "கடி"க்கிற்ற்ற்ற்ற்ற்றது, அழுத்தினதிலே இப்படி வந்துடுச்சு! :P


  11. SP.VR. SUBBIAH said...

    ////டிஸ்கி 2: மேட்டர் இல்லாத வறட்சியில் எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற எனது அவலநிலையை அறிந்து அவலாய் பதிவொன்று தந்த பெனாத்தலாருக்கும் அதையே வறுத்தெடுத்து நூறடித்த கொத்ஸிற்கும் இப்பதிவு சமர்ப்பணம்.///

    ஓகோ இதான் மேட்டரா?
    அப்ப உண்மையிலேயே யுத்தம் இல்லையா?
    கூட்டணி போட்டுக் குழப்புகிறீர்களே சாமி!
    எதுக்கும் கொத்தனார் வந்து என்ன சொல்கிறார் என்று பார்க்கிறேன்!
    பிறகு மீண்டும் வருகிறேன்!


  12. அபி அப்பா said...

    மருத்துவர் அய்யா நல்லா இருங்க! நீங்க என்ன தமிழ்ல மருத்துவம் படிச்சீயகலா:-)))


  13. Unknown said...

    //ஒறு பகிறங்கக் கடிதம்// இது கட்டாயம் தப்ப்பு(2)!

    "பறிமானக் கோட்பாடு" என்றால் என்ன? பதிவு விஷயத்தை அவர்ட்டயிருந்து இவரு பறிச்சுகிட்டார்ன்னா? மான விஷயம் பத்தி ஒண்ணும் கேக்கலை.

    மத்தபடி உப்புமா ரெகுலர் கைமணத்தோட‌.


  14. இலவசக்கொத்தனார் said...

    //கொத்தனார் என்னும் கோயபல்சுக்கு ஒறு பகிறங்கக் "கடி"தம்//


    முதலில் ஒண்ணு சொல்லறேன் கேட்டுக்குங்க. தம் வாயில் வெச்சா அதில் எச்சியே படக்கூடாது. இதில் தம்மைக் கடிச்சா என்ன ஆவறது?

    கடிதம் என்பது சரி. ஆனால் 'கடி'தம் என்பது தவறு.


  15. இலவசக்கொத்தனார் said...

    //மைடியர் பெனாத்தலாரே //

    முதல் கோணல் முற்றிலும் கோ நான் எழுதிய பதிவு மை டியர் பெனாத்தலாரே. நீங்க சொல்வது போல் இல்லை.


  16. இலவசக்கொத்தனார் said...

    //இதுவரை பின்னூட்டக்கயமைத்தனம் மட்டும் செய்துவந்த தாங்கள் பறிமானக் கோட்பாட்டின்படி முன்னேறி இப்போது ஒருவர் இட்ட பதிவையே வைத்து கயமைத்தனம் செய்துள்ளதில், வலையுலகின் முதிர்ச்சியின் இளவேக பாய்ச்சலைக் கண்டு ஒரு புறம் பூரித்தாலும், மறுபுறம் இத்தகைய இடுகையமைத்தனம் செய்வது வலைப்பூவுலகின் ஆரோக்கியமான தற்போதைய போக்குக்கு எவ்வாறான கேடுகளை விளைவிக்கும் என்பதை எண்ணுகையில் முன்னர் உப்பிய பூரி இப்போது சப்பென்று அடங்கிவிடுகிறது. அதன் காரணமாகவே இக்கடிதம்.//

    ஆயிரம் ஓட்டைகள் கண்டுபிடிக்கலாம். ஆனால் பின்னவீனத்துவதின் முன்னேற்றத்திற்காக நீர் பாடுபடுவதை முழு மனதுடன் வரவேற்பதால் அந்த ஓட்டைகளை எல்லாம் சாய்ஸில் விட்டு வருக வருக என வரவேற்கிறேன்.


  17. இலவசக்கொத்தனார் said...

    //வர்களுக்கு தமிழக நகரங்களின் தெருக்களில் இருக்கும் கோடிகளில் //

    தெருவில் எங்கய்யா கோடி இருக்கு? ஒன்லி கேடிங்கதான் இருக்காங்க.


  18. இலவசக்கொத்தனார் said...

    //ஆட்ட இடைவேளைகளில் ஒயிலாட்டம், மயிலாட்டம் என கலாச்சாரத்துடன் விளையாட்டார்வத்தை வளர்த்துவருவதுடன்; //

    சென்னை சங்கமத்தை இப்படி நேரடியாக கிண்டல் செய்வதின் மூலம் உங்கள் தமிழ் எதிர்ப்பு பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டதே!!


  19. இலவசக்கொத்தனார் said...

    //தமிழகத்தில் பிறந்த தாங்கள் தமிழகத்தின் உண்மையான மண்ணின் மைந்தனாக அல்லாமல் வேலைபிழைக்கச் சென்ற தாங்கள்//

    தமிழகத்தில் நான் வேலை தேடி இருந்தால் தமிழன் ஒருவன் வேலையை அல்லவா தட்டிப் பறித்து இருப்பேன், அதை விடுத்து வேறு இடம் சென்று எனக்கு ஒரு வேலை தேடுவதின் மூலம் தமிழனுக்கு, தமிழுக்கு தொண்டாற்றும் என்னைப் பார்த்தா இப்படி ஒரு கேள்வி.

    (என்னது கோட்டா இருக்கறவங்க எல்லாம் அங்க சேராம ஓப்பன் இடத்துக்கு வர மாதிரியா? கிட்டத்தட்ட அந்த மாதிரிதான் வெச்சுக்குங்களேன்.)

    //நாளை தமிழர்கள் ஏதோ செய்தார்கள் அதான் சுனாமி பேரலை வந்தது //

    அன்பே சிவம் படம் எடுத்தாங்க. வேற என்னாப்பா செஞ்சாங்க?


  20. Sridhar Narayanan said...

    என்னமோ <>கிறங்க<> வைக்கிற மாதிரி கடிதம் எழுதியிருக்கீங்களோன்னு உள்ள வந்து பாத்தா கொத்தனாரின் நுண்ணரசியலை <>பகிரங்க<>படுத்தியிருக்கிறீர்கள் போல. இனிமேதான் படிக்கனும் முழுசா. இதில பினாத்தலாரும், கொத்தனாரும் பேருக்கு பத்து மறுமொழி போட்டிருக்காங்க. ரூம் போட்டு படிச்சாதான் முழுசா படிக்க முடியும் போல :-))

    பறிமானக் கோட்பாடா? அப்ப அந்த கடிதத்தை வச்சு நீங்க எழுதறது அடிபிடி கோட்பாடா? கோனார் நோட்ஸ் அடுத்த பதிப்பு போடுங்கப்பா.


  21. Sridhar Narayanan said...

    //ஐபிஎல்லை தமிழ் படுத்துகிறதா அல்லது ............. கேள்வியை நீர் எழுப்புவது விஷமத்தனமானது மட்டுமல்ல விஷமானதுகூட.
    //

    இத்த சொல்றதுக்கு அம்மாம் பெரிய வரியா? ஜோடா குடிங்க முதல்ல :-))

    //உண்மையான மண்ணின் மைந்தனாக//

    மண்ணின் மைந்தர்களுக்கு எதுக்கு ஒரு அட்ஜெக்டிவ்?

    //கருநாக்காவுக்கும்//

    அவருக்கு 'கரு நாக்கு' என்ற மேட்டர் உங்களுக்கும் தெரிஞ்சி போச்சா? எதுக்கும் சாக்கிரதையா பேசுங்க. எதுனா சொல்லி சபிச்சிடப் போறாரு.

    //பெனாத்தலாரின் சமூக அவலத்தினை தோலுரித்துக்காட்டும்//

    அய்யோ... பெனாத்தலாரின் சமூக அவலமா? அதை கொத்தனார் தோலுரிச்சிட்டாரா? இப்ப நீங்க அதை ஜூஸ் போடறீங்களா? :-))

    //குழப்பமும் குட இருந்திருக்கலாம்//

    ஏதோ 'குட'க்கூலியில குழப்பம் போல. நமக்கு என்னாத்த தெரியுது போங்க.

    மொத்ததில ஒரு அவியல வச்சு நல்லா போணி பண்றீங்கப்பா உங்க கட்சிக்காரங்க எல்லாரும் :-)


  22. துளசி கோபால் said...

    //எனக்குத் தெரிந்து இந்த மாதிரி பிரமிட் ஸ்கீம்களை முதன்முதலில் வகுத்து அதன் மூலமாய் சொத்துகளை குவித்தவர்கள் பண்டைய எகிப்தியர்கள் தான்//
    ஆஹா.... இது:-))

    பதிவுக்குள்ளெ வந்து பார்த்தால் பி.க. கூடிப்போயிருக்கு:-))))


  23. Kannabiran, Ravi Shankar (KRS) said...

    //கொத்தனார் என்னும் கோயபல்சுக்கு ஒறு பகிறங்கக் "கடி"தம் //

    தல
    தலைப்பு-ல எழுத்துப் பிழையை மாத்தாக்காட்டி தலைப்பு-வை உடைக்க கைப்பு-வைக் கூட்டிக்கிட்டு வருவேன் என்று பாசத்துடன் எச்சரிக்கை செய்கிறேன்!

    "கொத்தனாற்" என்னும் கோயபல்சுக்கு ஒறு பகிறங்கக் "கடி"தம்


  24. SP.VR. SUBBIAH said...

    நல்லாத்தான் பதிவிற்குத் தலைப்பு வச்சிருக்கீங்க சாமி!
    தெரியல!
    பதிவைத் திரும்பத் திருமபப் படிச்சேன் எனக்கு ஒன்னும்
    தெரிய மாட்டேங்குது.

    ஆனா, ஒன்னு மட்டும் சொல்றேன்.

    கொத்தனாரு நல்லவரு
    கொத்தனாரு வல்லவரு
    எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாரு!

    சந்தேகமாக இருந்தா டீச்சரைக் கேட்டுப்பாருங்க!


  25. கால்கரி சிவா said...

    ய்ப்பா...கண்ணை கட்டுதே....

    அண்ணாத்தே முகமூடி இல்லாத குறை தீர்ந்துடுச்சு...


  26. கால்கரி சிவா said...

    ய்ப்பா...கண்ணை கட்டுதே....

    அண்ணாத்தே முகமூடி இல்லாத குறை தீர்ந்துடுச்சு...


  27. மெளலி (மதுரையம்பதி) said...

    யப்பா சாமிகளா, இதெல்லாம் கொஞ்சம் ஓஓஓவராயில்லையாப்பா?..

    ஏதேது, உங்க மூணு பேரு கூட்டணிக்கு மட்டுமே 100 கமெண்ட் ஆகிடும் போல...

    வேலையிருக்கு, அப்புறமா வாரேன்.


  28. ILA (a) இளா said...

    என்னமோ, ரொம்ப படுத்தி இருக்கீங்க. அட தமிழ் படுத்தி இருக்கீங்கன்னு சொல்ல வந்தேன். கொத்ஸ ஏதாவது சொன்னா KRSஅ வெச்சி அடிப்பாரு தெரியுங்களா?


  29. rv said...

    பெனாத்தலார்,
    //தமிழுக்கு உன்னாலின்றோர் வார்த்தை வந்து சேர்ந்ததடா //

    ஏதோ நம்மாலான சேவையும் பிழிய வேணாமா?

    //ஆடலரசிகள் தமிழ்ப்பெயர் கொண்டோராய் இருந்திடல//
    பாரதிராஜா பட ஹீரோயின் மாதிரி காஸ்ட்யூமா இல்ல வேற எப்படி?

    //என்ன அந்த ஏதோ?//
    ஏதோ மேகம் வந்தது...ஏதோ வானம் தந்தது...


  30. rv said...

    //ஆஹா! இஃதன்றோ அருமையான உள்ளப்படப்பிடிப்பு.. //
    உள்ளப்படப்பிடிப்பு வாடகையெல்லாம் கேட்காம இருந்தாச்சரி!

    பொதுமக்களுக்கு ஒரு அறிவிப்பு! இந்தப்பதிவை நானாத்தான் எழுதினேன். மண்டபத்தில் யாரும் எழுதிக்கொடுத்ததை காபிபேஸ்ட் பண்ணவில்லை.

    //அடுத்த மந்திரிசபை மாற்றத்தில் கேபினட் நிச்சயமாம்.//
    கருநாடகாவில் மக்களாட்சி மலர்ந்தப்புறமில்லேனு நினச்சேன். அதுக்குள்ளேயே நடந்துருமா?


  31. rv said...

    //2000 முறை யோசித்தாலும் தெரியவில்லை.//
    2000 சரியாவரவில்லையென்றால் இருக்கவேயிருக்கு 5000. ஸ்ரீராமஜெயம் எழுதறா மாதிரி செய்யணும். இதுக்கெல்லாம் கணக்கு பார்க்கறது பாவமாக்கும்.

    //கமாவுக்கும் கொட்டேஷனுக்கும் எழுத்தின் வளைவுகளுக்கும் உடன்படுகிறேன்//
    இதையே இரண்டு தடவை அழுத்திச் சொன்னதற்கு நன்னி!


  32. rv said...

    சங்கத்தலைவி,
    //மீ த பர்ஸ்டு? என்ன பரிசு ஏதானும் உண்டா? உடனே வந்து ஆதரவு தெரிவிச்சிருக்கேன். என் பின்னாலே அணி திரண்டு வருவாங்க, சிஷ்யகேடிங்க எல்லாம்.//
    பர்ஸ்டு இல்லியே.. போட்டோபினிஷ்ல பெனாத்தலார் கெலிச்சுட்டாரு.


  33. rv said...

    //"ற" வை இப்படியா அழுத்திக் "கடி"க்கிற்ற்ற்ற்ற்ற்றது, அழுத்தினதிலே இப்படி வந்துடுச்சு!//
    பல்ல நறநறனு கடிக்கறதுக்கு பதிலா கீபோர்ட்ல அமுக்கிட்டேன்.. ஐயாம் தி சாரி.


  34. rv said...

    சுப்பையா சார்,
    //அப்ப உண்மையிலேயே யுத்தம் இல்லையா? கூட்டணி போட்டுக் குழப்புகிறீர்களே சாமி!//

    நாங்க அடிச்சுக்கறா மாதிரி வெளியில அடிச்சுக்கிடுவோம். உள்ள ஒப்பந்தம் போட்டுக்கொவோம். இதெல்லாம் புதுசா என்ன? கூட்டணி அரசியலின் அடிப்படையே குழப்பம் தானே!


  35. rv said...

    அபி அப்பா,
    //நீங்க என்ன தமிழ்ல மருத்துவம் படிச்சீயகலா:-)))//
    அந்த லெவல்லயா இருக்கோம் நம்ம??? சரி இதுக்கு காலர தூக்கிவிட்டுக்கணுமா இறக்கிவிட்டுக்கணுமா? அதை பு.த.செ.வி.


  36. rv said...

    கெக்கேபிக்குணி,
    //இது கட்டாயம் தப்ப்பு(2)!//
    கொத்ஸோட பதிவை படிச்சீங்களா இல்லியா? :)

    //"பறிமானக் கோட்பாடு" என்றால் என்ன? பதிவு விஷயத்தை அவர்ட்டயிருந்து இவரு பறிச்சுகிட்டார்ன்னா? மான விஷயம் பத்தி ஒண்ணும் கேக்கலை.//
    நான் ஏதோ எதேச்சையா எழுதுனதுக்கு இவ்வளவு ஆராய்ச்சியா? ஆஹா.. புல்லா அரிக்குது எனக்கு. :))

    நன்னி!


  37. rv said...

    கொத்ஸு,
    //கடிதம் என்பது சரி. ஆனால் 'கடி'தம் என்பது தவறு.//
    இவ்வளவு பி.ந.த்துவம் கூடாதுய்யா.. தாங்கலை...

    //முதல் கோணல் முற்றிலும் கோ நான் எழுதிய பதிவு மை டியர் பெனாத்தலாரே.//
    மைக்கும் டிக்கும் இடைவெளி கொடுக்கணும்னு அரசியல் சட்டமா இருக்கு. எனக்குத்தான் வாய்க்கலை.. அதுங்களாவது கூட இருக்கட்டுமே.


  38. rv said...

    //நீர் பாடுபடுவதை முழு மனதுடன் வரவேற்பதால் அந்த ஓட்டைகளை எல்லாம் சாய்ஸில் விட்டு வருக வருக என வரவேற்கிறேன்.//

    பெரிய மனது பண்ணி சின்னத்தப்புகளை கண்டுக்காம எம்புட்டு மிஷ்டேக் இருக்கோ அதுக்குத் தகுந்தாப்போல பி.ந பட்டத்தை குறைச்சுக்கொடுங்களேன்.


  39. rv said...

    //தெருவில் எங்கய்யா கோடி இருக்கு? ஒன்லி கேடிங்கதான் இருக்காங்க//
    முன்னாடிலாம் தெருக்கோடி.. அதுல ஒரு பிள்ளையார் சிலையெல்லாம் இருக்குமே.. இல்லியா?

    இப்ப தெருக்கோடிலலாம் கேடிங்க சிலைதான் இருக்குனு சொல்ல வர்றீரா? புதசெவி.


  40. rv said...

    //சென்னை சங்கமத்தை இப்படி நேரடியாக கிண்டல் செய்வதின் மூலம் உங்கள் தமிழ் எதிர்ப்பு பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டதே!!//
    சங்கமத்தை நான் எங்கய்யா கிண்டலடிச்சேன்? வருஷத்துக்கு ஒரு தபா பந்தல் போட்டு நடத்துறாங்க. அப்படியே ஒரு சைட் வருமானமா அந்த கலைஞர்களுக்கு ஏற்பாடு செய்ய வழிசொன்ன என்னைய பார்த்தா?

    //(என்னது கோட்டா இருக்கறவங்க எல்லாம் அங்க சேராம ஓப்பன் இடத்துக்கு வர மாதிரியா? கிட்டத்தட்ட அந்த மாதிரிதான் வெச்சுக்குங்களேன்.) //
    இந்த பாலிடிக்ஸ் வேணாம். என்ன விடடுடுங்க.


  41. தி. ரா. ச.(T.R.C.) said...

    //தமிழகத்தில் பிறந்த தாங்கள் தமிழகத்தின் உண்மையான மண்ணின் மைந்தனாக அல்லாமல் வேலைபிழைக்கச் சென்ற தாங்கள்//

    நம்ப கேசு எப்படி

    இந்த பம்மாத்து இல்லாமே ஒரு தரம் நிஜமாவே சண்டை போடுங்க.அது சரி வெய்யில் ரொம்ப ஜாஸ்திதான் பின்ன என்ன பண்ணமுடியும்


  42. Geetha Sambasivam said...

    //பர்ஸ்டு இல்லியே.. போட்டோபினிஷ்ல பெனாத்தலார் கெலிச்சுட்டாரு.//

    பெனாத்தல் எல்லாம் இதிலே கணக்கே இல்லை, நான் தான் பர்ஸ்டு, பரிசை எடுங்க, இல்லைனா போட்ட பின்னூட்டங்கள் வாபஸ் வாங்கிடுவாங்க! :P


  43. Unknown said...

    //கெக்கேபிக்குணி, கொத்ஸோட பதிவை படிச்சீங்களா இல்லியா? :)// கூட்டணி போட்டு பதிவு போட்டுக்குங்க, பின்னூட்டம் போட்டுக்குங்க. ஆனாலும், உங்க கூட்டணி ஆளு போட்ட பதிவை நாங்களெல்லாரும் லைன் லைனா படிக்கணும்னு சொன்னா, அதுவும் படிச்சு புரிஞ்சுக்கச் சொன்னா, அநியாயமா படலே?

    அங்கங்கே ஒரோர், சரி, ஓறோற், வரி படிச்சு ஏற்றாப் போல் பின்னூட்டம் போடறதுக்குள்ளேயே தாவு தீருது.


  44. rv said...

    //அன்பே சிவம் படம் எடுத்தாங்க.//
    ரொம்ப நாளா எனக்கொரு சந்தேகம். யாரக்கேட்டாலும் எனக்குப்பிடிச்ச படம்னு இந்த படத்த சொல்றாங்க. சொல்ற ஆளுகள்ல பாதிபேரு தியேட்டர்ல பாத்திருந்தாலும் படம் பிச்சுகிட்டு ஓடியிருக்குமே.

    கமலே அன்பே சிவமெல்லாம் எடுத்தது போக இப்போ 'செப்டம்பர் 11 அன்று ட்வின் டவர் சாய்ஞ்சாலும்....' னெல்லாம் தத்துவார்த்த பாடல்களை வைத்து படமெடுக்கிற அளவுக்கு வந்துட்டாரு. :))


  45. rv said...

    ஸ்ரீதர்,
    //ரூம் போட்டு படிச்சாதான் முழுசா படிக்க முடியும் போல :-))//
    ரூம் போட்டு படிச்சா மனவழுத்தம் குறையுமா கூடுமாங்கிற கேள்விக்கும் பதிலச் சொல்லலாமே!

    //
    பறிமானக் கோட்பாடா? அப்ப அந்த கடிதத்தை வச்சு நீங்க எழுதறது அடிபிடி கோட்பாடா? கோனார் நோட்ஸ் அடுத்த பதிப்பு போடுங்கப்பா.//

    எடுபிடி கோட்பாடு இல்லாதவரைக்கும் ஓகே... கோனார் நோட்ஸ் ப்ரான்சைஸீயே நீர் தான். இப்படி ஜகா வாங்கினா எப்படி?


  46. rv said...

    //இத்த சொல்றதுக்கு அம்மாம் பெரிய வரியா? ஜோடா குடிங்க முதல்ல :-))//
    மேடையில் இருக்கும்னு தொடங்கினா அரைமணிக்கு வணக்கம் சொல்றதில்லியா..

    //மண்ணின் மைந்தர்களுக்கு எதுக்கு ஒரு அட்ஜெக்டிவ்? //

    அடடா.. ரூல்ஸே தெரியலை ஐயா உமக்கு. மண்ணின் மைந்தர்கள்ல பல வகை இருக்கு. வேற்று, போலி, உண்மையான, இனமான.. இப்படி நிறைய... சிலபஸ் அப்டேட் செய்துகொள்ளவும்.


  47. rv said...

    அக்கா,
    //பதிவுக்குள்ளெ வந்து பார்த்தால் பி.க. கூடிப்போயிருக்கு:-))))//

    நம் கடன் பணிசெய்து கிடப்பதே அல்லவா.


  48. rv said...

    கே.ஆர்.எஸ்ஸு,
    //தலைப்பு-ல எழுத்துப் பிழையை மாத்தாக்காட்டி தலைப்பு-வை உடைக்க கைப்பு-வைக் கூட்டிக்கிட்டு வருவேன் என்று பாசத்துடன் எச்சரிக்கை செய்கிறேன்!//

    குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் பரம்பரையா.. கொத்ஸ மொத்தினா கூட சேர்ந்து கும்மியடிக்க துடிக்கும் பாசக்காரக்கூட்டத்தின் தலைவன் நீர்தானா?


  49. rv said...

    சுப்பையா சார்,
    //பதிவைத் திரும்பத் திருமபப் படிச்சேன் எனக்கு ஒன்னும்
    தெரிய மாட்டேங்குது.//
    ரிபீட் ஆடியன்ஸை கவர் செய்ய என்னவெல்லாம் செய்யவேண்டியிருக்கு பாத்தீங்களா? :))

    //எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாரு!//
    கே.ஆர்.எஸ் ஒருபுறம்.. இன்னொரு பக்கம் நீங்க. ஆட்டம் ஆரம்பமாகட்டும்.


  50. இலவசக்கொத்தனார் said...

    பெனாத்தலை பற்றிய என் பதிவில் 50ஆவது பின்னூட்டம் போட்டது அவரே. அதனால இந்தப் பதிவில் நான் போடுவதுதானே முறை.

    போட்டுடலாம்.

    போட்டுட்டேன்.


  51. G.Ragavan said...

    வா என்று வாய் திறந்து வாய்தா வாங்க வக்கில்லாதவன் என்ற வசைப் பெயரை வாங்கிடாமல் பதிவிட்டு வாக்குகள் பல வாங்கிய உங்களைப் பாராட்டும் அதே வேளையில் கொத்தனாரின் கொத்தாளத்தனத்தைக் கொஞ்சமேனும் திட்ட வேண்டும் என்ற நல்ல பண்பை நினைவு படுத்தியமைக்கு நன்றி. இந்தப் பதிவிற்கு என்னுடைய மானமார்ந்த வாழ்த்துகள். :)


  52. Sridhar Narayanan said...

    //கொத்தனாரின் கொத்தாளத்தனத்தைக் //

    'கொ'னாவுக்கு 'கொ'னாப் போட்டு கலக்கிட்டீங்க போங்க. :-))

    இன்னும் கொஞ்சம் விரிவாக்கி - கோயபல்ஸ் கொத்தனாரோட கோமாளித்தன கொத்தாள வித்தாள வஞ்சக நஞ்சை விஞ்சும் வித்தார நுண்ணரசியல் நுளம்பு நுனி நச்சுப் பொய்கள். அப்படிக் கூட சொல்லலாமோ?


 

வார்ப்புரு | தமிழாக்கம்