226. சைவத்தை புறக்கணியுங்கள்!

சைவர்கள் பெரும்பாலும் தங்கள் கருத்துகளில் மிகத்தீவிரமாக இருப்பர். அறிவியல் பூர்வமாகவோ வேற எந்தப் பூர்வமாகவோ அவர்களிடம் விவாதம் செய்வது பெரும்பாலும் நேரவிரயமே. சைவர்களுக்கு மற்றவர்களைவிட தாங்கள் ஒருபடி மேலே என்ற எண்ணமும் தானாக வந்துவிடுவதும் கூட காரணமாக இருக்கலாம். அப்படி அலைபவர்களுக்கு ஒரு செக் வைக்கும் விதமாக ஒரு அறிவியல் பூர்வமான கட்டுரையை pravda வெளியிட்டிருக்கிறது.

முக்கிய அம்சங்கள்:
1. உங்களுக்கு பிள்ளைப்பேறு வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் சைவம் பக்கம் கண்டிப்பாக போகவேண்டாம்.

2. சைவம் மட்டுமே உட்கொள்பவர்களுக்கு வறண்ட பொலிவற்ற சருமமே இருக்கும்.

3. தன்னம்பிக்கை குறைந்து காணப்படுவார்கள். பகுத்தறியும் திறன் குறையும். லாஜிக் திறன்கள் குறைந்து காணப்படும்.

4. சைவ உணவப்பழக்கத்தை கொண்ட வயதானவர்களின் இதயத்தின் தசைகள் வலுவிழக்கக்கூடும்.

5. இதயம் மட்டுமல்லாமல் கைகால்களெல்லாம் சத்தற்று போகும்.

6. ஏனைய நோய்களும் வரவாய்ப்புகள் அதிகம்.

பெரும்பாலும் சைவ உணவே உட்கொள்ளும் ஆப்ரிக்க குழந்தைகளை பார்த்திருக்கிறீர்கள் தானே? நலிந்து போய், வீங்கிய வயிறுடன் அவர்கள் இருப்பதற்கு சைவமே காரணம்.

-----------------------------
இப்படி பல மேட்டர் இருக்கு.

படிச்சாச்சா? சிரிச்சாச்சா? குழந்த பொறக்குமா, ஹார்ட் பெயிலியர் வருமானெல்லாம் கற்பனை வளர்த்துக்கவேணாம். அரைவேக்காட்டுத்தனமா எழுதப்பட்ட டிபிகல் மெயின்ஸ்ட்ரீம் மீடியாவோட கட்டுரை அது. கிட்டத்தட்ட இவர்கள் சொல்லும் எல்லாமுமே நேர்மறையாக இருக்கிறது. ரொம்ப பயந்தவர்கள் இவக சொல்றத படித்துக்கொள்ளலாம்.

இன்னிய பதிவின் முக்கியமான மேட்டருக்கு வந்திருக்கோம்.

இதயம் பலகீனமானவர்கள், ஸ்க்ரீனில் பளீச்சிடும் வண்ணங்களால் வலிப்புநோய் வரக்கூடியவர்கள், easily offended ஆட்கள் என பொதுவாக பதினெட்டு வயதுக்கு கீழுள்ளவர்கள் கீழே உள்ள வீடியோவை பார்க்கவேண்டாம். கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டுமே.

(டிஸ்கி: This video may contain content that is inappropriate for some users)

வறண்ட சருமத்துடன், கைகாலெல்லாம் சூம்பிப்போய், தசைகளெல்லாம் வற்றி - தன்னம்பிக்கை சற்றுமற்ற ஒரு பாவப்பட்ட சைவரை பாருங்கள்.





இதைப் பார்த்தப்புறமும் நீங்கள் இனியும் சைவராக இருக்கத்தான் வேண்டுமா?

24 Comments:

  1. பினாத்தல் சுரேஷ் said...

    காக்காய்க் கறி சமைத்து கருவாடும் என உண்பர் சைவர் னு இவங்களைத்தான் சொல்றாங்களா?

    அந்த அம்மணி சைவம் இல்லை - எதையுமே துன்னறதில்லை போல இருக்குன்னு பார்த்தவங்க சொல்றாங்க - நோட் த பாயிண்ட், நான் பாக்கலை.

    சைவத்தைப் பத்தி இவ்ளோ அசைவமா ஒரு போஸ்டா? டாக்டர் என்னாச்சு?


  2. துளசி கோபால் said...

    புறக்கணிச்சாச்சுப்பா.:-)


  3. வடுவூர் குமார் said...

    download this video? என்று கேட்கிறது..
    பண்ணவா? வேண்டாமா?
    நான் சைவம் தான். :-))


  4. யாழ் Yazh said...

    சைவத்தை புறக்கணியுங்கள்!"

    saivamaga irupathinal unavu patrakuraithan.

    miga athigamana kadal unvai nam ilakkinrom.


  5. jeevagv said...

    புலால் உணவிற்கு அசைவம் என்றெப்படி பெயர் வந்தது? சைவம்/அசைவம் என்ற சொல்லாடல் சரியா?
    ஒருவர் ஏன் புலால் மறுக்க வேண்டும்?


  6. Anonymous said...

    இந்த படம் பார்த்த பிறகு ரெண்டு தீர்மானங்கள எடுத்திருக்கேன்.

    ஒன்னு - சாப்பாடு விஷயத்துல சைவமா மாறனும்.


  7. மங்களூர் சிவா said...

    வீக் எண்ட் வீடியோ!!

    நானும் பாக்கலை.


  8. Anonymous said...

    vaazhga Vainavam


  9. சேதுக்கரசி said...

    பதிவுக்கும் படத்துக்கும் நல்ல பொருத்தம். வாழ்த்துக்கள் :-)


  10. Unknown said...

    தொடரட்டும் தங்கள் சைவத் திருத் தொண்டு.எல்லாம் சைவமாய் தழைக்கட்டும்.............நெல்லைகண்ணா10-02-08


  11. rv said...

    பெனாத்தலார்,
    காக்கா கறியும் கருவாடும் சாப்பிடறது சைவமா? நடாத்துங்க.

    //பார்த்தவங்க சொல்றாங்க - நோட் த பாயிண்ட், நான் பாக்கலை. டாக்டர் என்னாச்சு?
    //
    ஏனிந்த ஓவர் சீனு? பார்த்து அப்ரூப் பண்ணி க்ளீன் சென்சார் சர்டிபிகேட் கொடுத்துட்டு இங்கன வந்து பு.பி கட்ட முயற்சியா?


  12. rv said...

    அக்கா,
    :))))))))


  13. rv said...

    குமார்,
    டவுன்லோட் தானே? பண்ணி வச்சுட்டு எப்பல்லாம் அசைவம் சாப்பிடணும்னு தோணுதோ அப்பப்போ பாருங்க. ;)


  14. rv said...

    யாழ்,
    சைவமாக இருப்பதுனால உணவுப் பற்றாக்குறையா?

    விளக்கவும்.


  15. rv said...

    ஜீவா,
    படித்தேன். நன்றாக எழுதியிருந்தீர்கள்.

    இந்த போஸ்ட்டோட அஜெண்டா வேற. :)


  16. G.Ragavan said...

    ஆகா...சைவத்துல இவ்வளவு விஷயங்கள் இருக்கா? ஒருவேளை இதெல்லாம் டீவீல பல்பொடி ஷேவிங் கிரீம் விளம்பரங்கள் மாதிரியோ :) அதாவது சொல்வாங்க..ஆனா அவங்க அதப் பயன்படுத்துவாங்களான்னு தெரியாது... :))) just kidding.. :)

    இங்க நெதர்லாந்துல எனக்குத் தெரிஞ்சு ரெண்டு டச்சுக்காரங்க மரக்கறி சாப்புடுறவங்க.


  17. rv said...

    அனானி,
    ரெண்டாவது தீர்மானம் என்ன? இனிமே இந்தப்பக்கம் வரக்கூடாது-வா?


  18. rv said...

    மங்களூர் சிவா,
    //வீக் எண்ட் வீடியோ!!

    நானும் பாக்கலை.//

    ஓகே ஒகே.. ஆமென்.


  19. rv said...

    அனானி,
    //vaazhga Vainavam//

    இதுலயுமா? :))


  20. rv said...

    சேதுக்கரசி,
    //பதிவுக்கும் படத்துக்கும் நல்ல பொருத்தம். வாழ்த்துக்கள் :-)//

    அதெல்லாம் யோசிச்சு, எத்தனையோ க்ளிப்களை கடமையுணர்வு மாறாமல் முழுக்க பார்த்து, ரிஜெக்ட் செய்து சரியானதை தேர்வு செஞ்சுனு நிறைய வேலை மெனக்கெடுது இப்பல்லாம்.


  21. rv said...

    //தொடரட்டும் தங்கள் சைவத் திருத் தொண்டு.எல்லாம் சைவமாய் தழைக்கட்டும்.............நெல்லைகண்ணா10-02-08//

    நெல்லை கண்ணா,
    நன்றி.

    என் ப்ளாக்கர் ப்ரோபைலில் மின்னஞ்சல் முகவரி உள்ளது. நேரமிருப்பின் ஒரு மின்னஞ்சல் போடுங்களேன். நன்றி!


  22. rv said...

    ஜிரா,
    //அதாவது சொல்வாங்க..ஆனா அவங்க அதப் பயன்படுத்துவாங்களான்னு தெரியாது...//

    இருக்கலாம். ஆனா இவங்கள்லாம் கொஞ்சம் தீவிரவாத வெஜிடேரியன் கோஷ்டி. எதுக்கும் www.goveg.com போய் பாருங்க. குறிப்பா வீடியோ.(PETAவுடையது என்பதனாலேயே ரிஜெக்ட் செய்திட வேண்டாம்)

    //ரெண்டு டச்சுக்காரங்க மரக்கறி சாப்புடுறவங்க//
    இப்பல்லாம் நிறைய பேரு மாற ஆரமிச்சுட்டாங்க. பாஷனுக்காகவோ கொள்கைக்காகவோ எதுவாகினும்

    தினல்பொருட்டால் கொல்லாது உலகுஎனின் யாரும்
    விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்


    இல்லியா?


  23. Iyappan Krishnan said...

    :) //காக்காய்க் கறி சமைத்து கருவாடும் என உண்பர் சைவ//


    கால் காயைக் கறியாக சமைத்து (தன்)கருவாடும் என உண்பர் சைவர்...


    என்னங்க இது மதப் புத்தகங்களுக்கு விளக்கம் சொல்றமாதிரி என்னை எழுத வச்சுட்டீங்களே



    20+ வருஷமா சைவமா இருக்கேன். வித்தியாசமாப் பாக்கற சமூகத்தை கேலிப் பண்ணிட்டு ;)


    Born as Non-Veg, Grown as Non-veg... converted to Veg :)) Amen


  24. Kannabiran, Ravi Shankar (KRS) said...

    தல!
    நீங்க சொன்ன ஒரே வார்த்தைக்காகச் சைவத்தைப் புறக்கணிச்சாச்சு தல! அந்த வீடியோவைப் போட்ட நீரல்லவோ சைவக்குருமா! ச்சே சைவக் குருமார்! :-))

    //இங்க நெதர்லாந்துல எனக்குத் தெரிஞ்சு ரெண்டு டச்சுக்காரங்க மரக்கறி சாப்புடுறவங்க//

    அதுல ஒருத்தரு பேரு ஜிரா-ன்னு கனவு கண்டேன்! ச்சே பகல் கனவு பலிக்காது!-ல்ல! :-)))


 

வார்ப்புரு | தமிழாக்கம்