223. மாட்டிக்கொள்ளாமல் ப்ளாக்கர்பேஷன் செய்வது எப்படி?

ஓண்ணுமில்ல நிறைய பதிவர்கள் புதுசா கிடைச்ச வலையுலக சுதந்திரத்த வெங்கலக்கடையில் யானை புகுந்த கதையா பயன்படுத்தறாங்க. ஒரு சின்ன ரியாலிடி செக் அவ்ளோதான். உங்களுக்கும் அவங்களுக்கும் பயனுள்ள தகவல்களா இருக்கும்னு நம்பறேன். நன்னி!
----------------------------
What is Defamation?

It is a law created to protect individuals or organisations from unwarranted, mistaken or untruthful attacks on their reputation. This means the publication of any statement which:

* Exposes them to hatred, ridicule or contempt
* Causes them to be shunned or avoided
* Discredits them in their trade, business or profession
* Generally lowers them in the eyes of right thinking members of society

Posting a defamatory statement on an Internet message board or community area is the same as publishing it in a newspaper or magazine and can result in a court case if a formal complaint is made. Both the publisher, (in this case the blogspot.com), and the author, (you), risk being sued for making a defamatory statement. And there is no Legal Aid for defamation.


How to avoid it?

Get your facts right. In Indian law, as in most countries around the world and its likely that the country you live in, if its democratic - follows similar laws, YOU have to prove that what you write is true, rather than the person you've targeted having to prove that you're wrong. And proving things in court can be a very difficult and costly process.

Don't make these common mistakes...

* Repeating others...

If you repeat defamatory remarks about people or organisations made by other people, you will be just as liable to be sued as they are.

-- படிச்சுப்ப்பாக்காம 'ரிப்பீட்டேய்', 'சூப்பர் பதிவு', ‘நன்னாச் சொன்னேள் போங்கோ' போடாதீங்க


* Jumping to conclusions...
If Mr X is seen going into a hotel room with a call-girl, this does not necessarily mean he enjoyed a 'night of passion', and will certainly not prove that he did.
-- இவன் எழுதுறது எனக்குப்பிடிக்கலை = இவன் பேரு பாப்பாரப்பேராட்டம் இருக்கு = இவன் ஒரு பாப்பான் = இவன் ஒரு பாசிஸ்ட் = இவன் ஒரு பன்னாடை = இவனோட அம்மா ஒரு... இப்படினெல்லாம் ஈக்வேஷன் போட்டுகினே போகக்கூடாது.


* Exaggeration...
Be very careful about the words you use. A factory may release chemicals into the air, but describing it as 'poisoning the atmosphere' could well be defamatory.
-- பண்ணாடை, பரதேசின்னு எல்லாம் யாரையும் எக்காரணத்தைக்கொண்டும் பொது இடத்துல திட்டக்கூடாது. பொது இடம் என்பது இந்த வலையுலகமும் சேர்ந்ததுதான். அப்பா அம்மா சொல்லிக்கொடுத்திருப்பாங்களே சின்ன வயசுல?


* Representing all sides...
Presenting both sides of an argument is often good practice, but not a defence against defamation.
-- தமிழ்ப்படத்துல வர மக்கள் கருத்தாட்டம் 9 பேரு ஹீரோ நல்லவன்னு சொல்லவச்சி, ஒருத்தனை மட்டும் அவனைக் கெட்டவன்னு சொல்றதெல்லாம் வேலைக்காவாது மாமோய்!


* Innuendo...
To say Mrs Y doesn't recycle her waste paper may sound harmless. But to people who know that Mrs Y is a Green Party activist, the implication is that she is hypocritical in her politics.
-- அதாவது தமிழே சொல்லித்தராத ஹிந்தி பள்ளிக்கூடத்துல தமிழினத்தலைவர் ஒருவரின் (Mr. X) பிள்ளைகள் படிக்கிறாங்கங்கறது உண்மையான செய்தியாக இல்லாத பட்சத்தில் சொல்பவர் மீது இச்சட்டம் பாயும்.


* Inference...
If somebody was guilty of fraud once, calling him a fraudster in a way which might suggest he's still doing the same can be seen as defamation.
-- அத்தை விடுங்க, இங்க நாம என்ன பண்றோம்? யாரோ தாத்தா பண்ண தப்புக்கு பேரனை பண்ணாடை பரதேசின்னு சொல்லறோமே!


* 'Allegedly'...
In spite of its use in a popular current affairs panel game, adding the word 'allegedly' to a statement you cannot prove does not stop it being defamation.
--வீரப்பன் நிஜமாவே மரம் வெட்டினானோ என்னமோ! கன்னடப்பிரசாத் ஒருவேளை ஒழுக்கமானவனாக இருக்கலாம், இருள்நீக்கி சுப்புணி வீச்சருவாளால ராதாகிருஷ்ணனை போட்டுத்தள்ளிட்டு சொர்ண்மால்யா கூட என்னவோ செஞ்சான் -- இப்படினெல்லாம் குருட்டாம்போக்குல அடிச்சு விடாம யோசிச்சு எழுதணும்னு சொல்றாங்க போல!


Defending a statement


In the event that you are accused of defamation, there are several defences...

1. Truth.

நீங்கள் சொன்னது உண்மையாக இருக்கும்பட்சத்தில் இதை பயன்படுத்தலாம்.


2. Fair comment: The defendant is allowed to comment on facts truly stated, as long as the comment is fair and the defendant is not motivated by actual malice.
-- உதாரணத்துக்கு பதிவர் 'D' ஒரு பன்னாடை, நாய். அவன் சாதியைத் தூக்கிப்பிடிக்கிறான். அந்த சாதித்திமிர் ஒழிய வேண்டும் என்று சொன்னாலும்...
பொதுநலம், சமூகப் பொறுப்பு போன்ற பிரதிவாதங்கள் தனிமனித அல்லது இனவெறியைத்தூண்டும் கருத்துகள் அதே பயனரின் பெயரில் இடம்பெற்றிருந்தால் defamation என்றே கருதப்படும்.

3. Privilege: On certain occasions, the courts have held that policy and convenience require that a person should be free from responsibility for the publication of defamatory words. These occasions constitute privileges. Privilege may be absolute, such as statements in the House of Commons or the Courts. It may be qualified, in that it may be lost if the publication is unnecessarily wide or made with malice.

4. Innocent dissemination: This last defence is potentially very important in cyber libel. If a defendant proves that his statements were true and in public interest, then his conduct is regarded as lawful. In addition, if the defendant can show that he had no intention to defame (the plaintiff), then he could avoid liability.
ஹி ஹி... சொல்லிக்கலாமே.. நான் சொல்வதெல்லாமே உண்மை.. என்னைத்தவிர உண்மையானவன் இல்லை... and so forth..

*************
The global nature of the Internet also raises some interesting procedural questions for the libel lawyer. In traditional libel law there are three different types of defamatory statements:

i) The first is a statement that is defamatory on its face and which is obviously defamatory.

ii) The second is a statement, which contains false innuendo. False innuendo is a defamatory statement that has an inferential meaning, therefore only persons with the necessary contextual knowledge appreciate that the statement is defamatory. Since statements on the internet are published globally, their inferential meanings may vary depending on the geographic or cultural location of the reader or the newsgroups or the Usenet group involved.
-- முதுகுல நெளியுது, கொண்டை தெரியுது போன்ற வலைப்பூவுலகத்தினருக்கு மட்டுமே புரிந்த பொன்மொழிகள் இதுல வரும்னு நினைக்கிறேன்.

iii) The third category is legal innuendo. While not defamatory on their face, these statements are defamatory when viewed together with extrinsic circumstances. Once again, contextual knowledge may render a statement defamatory in one jurisdiction but not in another.
**************


Indian Penal Code on Defamation:
Chapter XXI of the IPC exclusively talks of defamation. Section 499 prescribes the offence:

Whoever, by words either spoken or intended to be read, or by signs or by visible representations, makes or publishes any imputation concerning any person intending to harm, or knowing or having reason to believe that such imputation will harm, the reputation of such person, is said . . . to defame that person.

Explanation 2. - It may amount to defamation to make an imputation concerning a company or an association or collection of persons as such.

Section 500 prescribes the punishment in such cases:

Whoever defames another shall be punished with simple imprisonment for a term, which may extend to two years, or with fine, or with both.

Employer's liability
A company can be held liable for the conduct of its employees. If an employee, during working hours, e-mails a defamatory remark about a competitor company to a colleague, the firm could be held liable for defamation even if the employee's actions were not authorised or expressly prohibited.

-------------------------------------------------------------
அனானிமைஸர், torproject என்று பலவழிகள் உங்களை அனானிகளாக மாற்றுவதற்கு இருந்தாலும் - உங்களின் உண்மையான இருப்பிடத்தையும் அதன்மூலம் பெயர், ஜாதகம் போன்றவற்றை பாதிக்கப்பட்டவர் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளால் பெறமுடியும். யாருமே நூறு சதம் அனானி கிடையாது.



Disclaimer: The information provided on this site is intended as a guide only. It does not constitute legal advice. Text Abstracts © BBC and LegalServicesIndia.


நன்றிகளும் சுட்டிகளும்

http://www.legalservicesindia.com/articles/defcy.htm
http://www.vakilbabu.com/Laws/Classify/Classify17.htm
http://www.vakilbabu.com/Laws/Classify/Classify18.htm


---------------------------------------------------------------
கடைசியாக ஒரு வீடியோ: ப்ளாக்கிங் பற்றி.
தமிழ் வலைப்பூக்களுக்குனே வீடியோ எடுத்தா மாதிரி இருக்கு.
ஆனால் Adult Content. So You have been warned!

20 Comments:

  1. Sridhar V said...

    அருமையான பதிவு.

    இந்த சட்ட திட்டங்கள் எல்லாம் நமக்கு அலர்ஜி. lets see the practical difficulties of a commentator (அட... கமெண்ட் மட்டும் போடுபவர் கமெண்டேடர்தானே)

    //* Repeating others...//

    எத்தனை எத்தனை பதிவுகளடா! அதில் எத்தனை எத்தனை திட்டுகளடா!! இதெல்லாம் படிச்சு பாத்து கமெண்ட் போட்டுகிட்டிருந்தா விளங்கிரும். சிலர் சாட்டையை சொடுக்கும்போது மாரல் சப்போர்ட் கொடுக்க கூட கூடாதா? என்னது... சட்டபூர்வ நடவடிக்கையா? இதான் உங்ககிட்ட... காமெடின்னே தெரியாம காமெடி பண்ணுவீங்க. Next please!

    //* Jumping to conclusions...//

    ஐயா! இது என்னய்யா கூத்து! முடிவெடுக்க கூடாதுங்கறீங்க. குதிக்க கூடாதுங்கறீங்க. விட்டா பல் விளக்கிட்டு வந்து பப்ளிஷ் பண்ணுன்னு சொல்லுவீங்க போல. இவ்ளோ பெரிய ஈக்குவேஷன்லாம் வேணாம். எல்லாம் பைனரிதான். புடிச்சா பட்டம் கொடுக்க வேண்டியது, புடிக்கலன்னா கட்டம் கட்டிர வேண்டிது. ஜிம்பிள்.

    //* Exaggeration...//

    கற்பணை எல்லாம் வேண்டாம். முச புடிக்கற ____யை மூணு வரி படிச்சா உடனே க(கா)ண்டு பிடிச்சுறுவோம்ல. தேவை ஒரு சின்ன அகராதிதான். ஒரு சில வார்த்தைகள், வாதங்கள் போதும் வேற ஒண்ணும், ஒண்ணுமே தேவையில்லை.

    //* Representing all sides...//

    நடுநிலைவியாதிகளுக்குதான் அதெல்லாம் தேவை. அப்படி ஒரு நடுநிலையே கிடையாது என்பதை நடுநிலையோடு சொல்ல முடியும்.

    //* Innuendo...//

    பாலிடிக்ஸ், ஹிப்போகிரிடிக்கல்ன்னு எல்லாம் சொல்றீங்க. அட என்ன கட்சின்னு சொல்லுங்கப்பா. அப்பதானே நாங்க ஒரு முடிவுக்கு வர முடியும்?

    //* Inference...//

    defamation? அதெல்லாம் சின்ன புள்ளங்க வெள்ளாட்டு. நீர் பேரை சொல்லும், ஒரேயடியா 'போட்டு தள்ளிரலாம்' அவரோட கேரக்டரை.

    //* * 'Allegedly'...//

    இந்த காபந்து எல்லாம் வேணாம். என்னத்த நிரூபிக்க போறீங்க? ஒரு குரூப்பா போட்டு தள்ளிகிட்டு போய்ட்டே இருக்க வேண்டிதான்.

    //Defending a statement//

    Attack... attack... till the person goes hiding... அதான்பா மேட்டர். நிரூபிக்க போறீங்களா? எதை? திருச்சியில பொட்டி தட்டற புள்ளையை கொண்டு போய் புனேல வச்சாங்களே... அந்த மாதிரியா? அட போங்க சார்..

    வீடியோ பாத்தேன்.

    புரியல! தயவுசெய்து விளக்கவும்...


  2. இலவசக்கொத்தனார் said...

    அது சரி!!

    இப்போ பதிவு போடற பாதி பேரை (பாதிக்கு மேலேயே!!) பொழப்பில் மண்ணைப் போடறீங்க. விட்டா உமக்கும் ஒரு ரெம்பிளேற் பின்னூட்ட லிஸ்ட் போட்டுத் தரணும் போல இருக்கே!!


  3. Anonymous said...

    ok..who is ramu and who is freemason..

    just tell me this..ok..C'mon.. You can do it.. you can do it.. you can do it.. do it... do it.. do it.. do it.. do.. do.. do.. Just Do it already! will ya?


  4. பினாத்தல் சுரேஷ் said...

    சும்மா பயமுறுத்தாதே டாக்டர்! நாம எல்லாம் என்ன பாரம்பரியத்துல வந்தவங்க.. நம்ம பேர்லே அவதூறு வ்வழக்கு பாய்ஞ்சிடுமா? நம்ம கட்சி விட்டுடுமா? நம்ம கொள்கை நம்மை கைவிடுமா? நம்ம இனம் நம்மை கஷ்டப்படவைக்குமா?

    இந்தியாவில எத்தனை அவதூறு வழக்கு வெற்றி அடைஞ்சிருக்கும்? புள்ளி விவரம்..பெரும்புள்ளி கரும்புள்ளி எல்லா விவரமும் கிடைக்குமா? அதெல்லாம் இல்லாம ஹாலோவா ஒரு பதிவு..


  5. Anonymous said...

    ஹலோ ஹாலோ.. இலவசமாகப் பினாத்துபவர்தானே தெரியல என்று சொல்வது?


  6. Anonymous said...
    This comment has been removed by a blog administrator.

  7. சேதுக்கரசி said...

    இந்த டிபமேசன் எல்லாம் வலைப்பூல மட்டுமில்ல.. குழுமங்களிலும்தான் நடக்குது. ஆனா குழுமங்களில் அதை வந்து பண்றவங்க யார் தெரியுமா? வலைப்பூக்காரங்கதான்! சமீபத்தைய அனுபவம் அப்படி...


  8. rv said...

    ஸ்ரீதர்,
    வலைப்பூவுலக கமெண்டேட்டர் மாதிரி உரையெழுதறீரு? தேர்ந்த அனலிஸ்ட் மாதிரி இல்ல புட்டு புட்டு வச்சிருக்கீரு??


    //வீடியோ பாத்தேன்//

    தெய்வமே.. நீங்க எங்கியோ போயிட்டீங்க.. காலக்காட்டுங்க...

    சூப்பரோ சூப்பரு!


  9. rv said...

    கொத்ஸு,
    இதுக்கும் டெம்ப்ளேட்டா? போடுங்க.. கேட்டுக்கிறோம். அறிஞ்சிக்கிறோம்.. தெளிஞ்சிக்கிறோம்..

    எனக்கென்னவோ விக்கிபசங்க பதிவுலயே இதையெல்லாம் நீர் தொகுத்துப் போடலாம்னு தோணுது!

    //இப்போ பதிவு போடற பாதி பேரை பொழப்பில் மண்ணைப் போடறீங்க. //
    சும்மா.. இந்த மாதிரி ஐட்டம்ஸெல்லாம் இருக்குனு ஒரு தகவல் அறிவிப்பு பதிவுதான் இது...

    யாரும் யாரு பொழப்புல மண்ணும் போடப்போறதில்ல...யாரு மேலயும் கேஸும் போடப்போறதில்ல.. எல்லாத்தையும் லூசுல விடணும்.. முடியலேன்னா லூசானு விடணும்.

    தவிரவும் ஆயிரந்தான் அடிச்சுகிட்டாலும் ஆறுகோடில ரெண்டாயிரம் பேரில்லையா.. ஒண்ணுக்குள்ள ஒண்ணுனு சன் நியுஸ்லலாம் வேற சொன்னாங்களே..

    அப்புறம் சொடக்கு போட்டு பஞ்செல்லாம் கொடுக்க நான் என்ன சுள்ளானா?


  10. rv said...

    அனானி,
    நான் இராமு.. முன்னாடி பின்னூட்டமிட்டவர் கொத்ஸு. கொத்ஸ பார்த்தவங்க என்னப் பார்த்ததில்லை. என்னை நேர்ல பார்த்தவங்க கொத்ஸை பார்த்ததில்லை.

    ஆனா இந்த ஒரு விஷயத்தினால் மட்டுமே நாங்க ரெண்டு பேரும் ஒரே ஆளில்லைனு நான் சொல்லலாம். சொல்லாமலும் போகலாம். சொன்னாலும் நீங்க நம்பலாம். நம்பாமலும் போகலாம்.

    நான் சொல்லலனைன்னா ரெண்டும் ஒண்ணுனு நீங்க நம்பலாம். நம்பாமலும் போகலாம். அவ்ளோதான். தெளிவாயிருச்சா?

    -------
    நான்-ல எதுக்கு ரெண்டு பேருன்னெல்லாம் சொல்லித்தெளிய வேண்டிய அளவு புதிய பதிவரா நீங்க? சீக்கிரம் ப்ளாக் ஆரமிங்க. புரியும். :P


  11. சிறில் அலெக்ஸ் said...

    கட்டற்ற மட்டற்றவோட கூட சட்டமற்ற இல்லியா?

    :)


  12. rv said...

    பினாத்தலார்,
    ஒரு முடிவோடதான் கிளம்பிருக்காப்போல இருக்கு. எதுவோ.. நல்லது நடந்தாச் சரி!

    புள்ளீவிவரம் இல்லாத ஹாலோ பதிவா... ஹாலோ ப்ளாக்-கறது இதுதானா?


  13. rv said...

    தி ஹாலோ கேங்க்,
    யாருய்யா நீயி? இன்னும் ரெண்டு கமெண்ட் இதே மாதிரி போட்டிருன்னா நானே குழம்பிடுவேன்.


  14. rv said...

    பா.பை.பீரோ,
    சாரி.. ராங் நம்பர்!


  15. rv said...

    சேதுக்கரசி,
    //ஆனா குழுமங்களில் அதை வந்து பண்றவங்க யார் தெரியுமா? வலைப்பூக்காரங்கதான்! //

    ஒரு ரவுடிக்கும்பல் தான் வலைப்பூக்களில் எழுதுகிறது என்றும் இணையத்தில் மற்ற இடங்களில் வம்பு செய்கிறது என்றும் கட்டமைக்க முயற்சிப்பது ஏன்? :)


  16. rv said...

    சிறில்,
    //கட்டற்ற மட்டற்றவோட கூட சட்டமற்ற இல்லியா?//

    கட்டற்ற மட்டற்ற சுதந்திரம்னு சொன்னா என்னாகும்? சட்டமற்றதாகித்தான் போகும். ஒருத்தர் ரெண்டு பேருனால எல்லாருடைய சுதந்திரமும் போவும்.. என்னவோ.. கஷ்ட காலம்..


  17. சேதுக்கரசி said...

    //ஒரு ரவுடிக்கும்பல் தான் வலைப்பூக்களில் எழுதுகிறது என்றும் இணையத்தில் மற்ற இடங்களில் வம்பு செய்கிறது என்றும் கட்டமைக்க முயற்சிப்பது ஏன்?//

    அப்படில்லாம் நான் சொல்லலியே... உண்மைல, வலைப்பூக்களில் எழுதறவங்கள்ல பெரும்பாலானோர் அமைதியா ஒழுங்கா மொக்கை, பின்னூட்ட விளையாட்டு, கும்மின்னு தேமேன்னு இருக்கிறவங்கதான். மிச்ச பேராலதான் அவங்க ஒட்டுமொத்தப் பேரும் கெடுதுன்னு வேண்ணா சொல்லலாமுங்களா? :-)


  18. சரவணகுமார் said...

    வீடியோ சூப்பருங்க:) தமிழ் வலையுலகுல இதுதான் நடக்குது..இப்ப சவுண்ட் எபெக்டோட சேத்து :)

    சரி..இப்படி சொன்னா மொத்த தமிழ் கூறும் வலை நல்லுலகம் என் மீது டிபமேட்டரி வழக்கு போடுமா ?


  19. Boston Bala said...

    அண்ணாத்தே... சூப்பர்


  20. மங்களூர் சிவா said...

    //
    சரவணகுமார் said...
    வீடியோ சூப்பருங்க:) தமிழ் வலையுலகுல இதுதான் நடக்குது..இப்ப சவுண்ட் எபெக்டோட சேத்து :)

    சரி..இப்படி சொன்னா மொத்த தமிழ் கூறும் வலை நல்லுலகம் என் மீது டிபமேட்டரி வழக்கு போடுமா ?
    //
    ரிப்பீட்டேய்ய்ய்


 

வார்ப்புரு | தமிழாக்கம்