239. அவியல் - Just Tongue Dip!

மின்வெட்டு பத்தி பலரும் எழுதி, சலிச்சுப்போய் அது இப்போ ஒரு non-issue ஆவே ஆகிடுச்சு. அதுக்காகவே மின்வெட்டுத்துறை அமைச்சரை பாராட்ட வேண்டிய கட்டாயத்துல நாம இருக்கோம். கழக ஆட்சி இல்லாத மாநிலங்கள்லலாம் வெட்டலியானு புத்திசாலித்தனமான கேள்விகள் சிலர் கேட்கறாங்க. நைஸ்!

தலீவர்முதுகுசொறிதல் விழா
(அண்ணா நூற்றாண்டு நினைவு விழா) பார்க்க சகிக்கவில்லை. வைரமுத்து வீராசாமியை வாரி, தலைவரை நக்கினார். டயமண்டுக்குச் சரி,வாலிக்கு இந்த வயசில் இதெல்லாம் தேவையா? அப்புறம் சமீபத்துல போயிருந்த ஒரு திருமண விழால வைரமுத்து பேசிய பேச்சு அவரு எந்நேரமும் உண்மையான சமூக அக்கறையோட மட்டுமே இருக்காருன்னு புரியவச்சுது. சாதி அப்படிங்கிறதுக்கு பொலிடிக்கலி கரெக்ட் வார்த்தை தான் சமூகமாம். அதுவும் சமீபத்துல தான் எனக்கு புரிஞ்சது.

டமிளச்சி டங்கபாண்டியனிடம் - விழக்கு இல்லை விளக்கு என்பதையாவது யாராவது விளக்கினால் புண்ணியமாக போகும். தமிழ் திணறுகிறது.

சென்னைல (பத்திக்கு பத்திக்கு கனெக்ஷன் இருக்கணும்னெல்லாம் எதிர்பார்க்கக்கூடாது) ரொம்ப நாள் கழிச்சு ஒரு ரெண்டு நாள் தங்கற மாதிரி ஆச்சு. அதுல பிரமிட் அண்ணா (அண்ணா சாலைல காஸ்மோபாலிட்டன் க்ளப் பக்கத்துல) அப்படிங்கிற தியேட்டர்ல போய் 'சரோஜா' பார்த்தே விட்டேன். படம் தேவலை. தியேட்டர்ல ஆடியோதான் சுமாரா இருந்தது. சத்யம் தொடங்கி ஐனாக்ஸ் வரைக்கும் எங்கயும் டிக்கட் லேது. மெட்ராஸ் யூத் புல்லா தியேட்டர்லயே இருக்காங்க போலிருக்கு.

ஜெயராமை தமிழ் ஆளா காமிச்சு, அவர் கடசீல சாவறாரோ இல்லியோ தமிழ சாவடிக்கிறார். இதுக்கு பதிலா மலையாளத்தில் பேசற ஒரு கேரளத்து சேட்டனாவே இனி நடிக்க வைக்கலாம்.

லென்சுமாமாவோ சிற்றிலக்கியவாதிகளுக்கு மட்டும் சப்ளை செய்யகிடைக்கும் வள்ளல்களோ யாரும்கூட வரலேன்னாலும் 'டப்ளினில்' என்ன நடக்குதுனு பாக்கணும்னு போனேன் (the most happening place in chennai -னு பில்டப்புடன்). நாசமாப் போனவர்கள் செவ்வாய்க்கிழமை மாங்காடம்மனுக்கு விரதமாம். லீவு விட்டுவிட்டார்கள். பக்கத்தில் உள்ள தக்ஷினில் ஐஸ்வர்யா (விஜயதசமிக்கு நல்ல சேதி உண்டா என்று கேட்டு அடிவாங்க நான் தயாராக இல்லை) அண்ட் தனுஷ் (மைனஸ் யாத்ரா) தரிசனம் கிடைத்தது. பின்னால் வந்த பெண் சோனியா அகர்வாலா இல்லியா என்கிற எங்கள் தொடரும் பட்டிமன்றத்திற்கு இன்னும் விடைகிடைக்கவில்லை.

சென்னை மரீனாவுக்கு போனால் நொந்திருவேன்னு சொல்லப்பட்டதால் (வலைப்பதிவர் சந்திப்பு அல்ல - கூட்டநெரிசல் தான் காரணம்) பெசண்ட் நகர் போனேன். அந்த சாலை முழுவதும் ஃபுல். ''பார்க்கிங்கிற்குள் என் கார் நுழைந்தது. பின் வெளியே வந்தது. பின் மீண்டும் நுழைந்தது என கண்ணாமூச்சி விளையாடி ஒருவழியாக இடம் பிடித்தேன்.'' மிளகாய் பஜ்ஜி, மிக்சட் பஜ்ஜி என 15ரூபாய்க்கு அஞ்சு பஜ்ஜி கொடுக்கிறார்கள். அது காரம் போட்ட மாங்காய், கடலை சுண்டல், குல்பி ஐஸ்க்ரீம், சோளம் என வகைதொகையில்லாமல் வெங்கலக்கடையில் புகுந்த ஆனையாய் ஆட்டம் போட்டேன். பலவாண்டுகள் கழித்தும் பட்டம் ஒன்று வாங்கி விட்டேன். கூட இருந்தவர்களிடம் கொசுவர்த்தி சுத்தி கழுத்தறுக்கலாம் என்று பார்த்தால் அவர்களெல்லாம் ஒரு டார்டாய்ஸ் கொடவுனையே வைத்திருந்தார்கள்.

சென்னையின் ஆகப்பெரிய மால் ஆகிய ஸ்பென்சரில் இரண்டாவது மாடியில் ஒரு வடக்கத்திக்காரர் பானிபூரி விற்கிறார். நல்ல கூட்டம். தன் பொற்கரங்களால் பானி பூரியை எடுத்து ஓட்டை போட்டு சட்னியில் முக்கி கொடுக்கையில்... ஆஹா. என்ன அந்த காட்சியைப் பார்த்தபடியே சாப்பிட்டால் பூரி உள்ளே இறங்காது. டேஸ்ட் என்னவோ நன்று.

கேபிள் டிவியிலிருந்து டி.டி.எச் க்கு மாறினபின் துல்லியமாக 'நாக்க முக்க' (மட்டுமே) கேட்க முடிகிறது. அப்படியாவது வரிகள் புரிகிறதா என்றால் இல்லை. சரி புரிஞ்சவங்களையாவது கேப்போமேன்னா, சித்தி பசங்க 'நீயெல்லாம் போன ஜெனரேஷன் டா'ங்கிற மாதிரி ஒரு பார்வை பாத்துட்டு போயிட்டாங்க. சகஸ்ரநாமம் மட்டுமென்ன ஒரே நாளிலா புரிஞ்சுருது. எல்லாம் நாப்பழக்கம் தானே.

ஸ்டாரில் "Moment of Truth" என்று நிகழ்ச்சி வருகிறது. அதை நம்மூரில் நடத்தினால் எப்படியிருக்கும் என்று பார்க்க எனக்கு ரொம்ப ஆசை. விஜய் இதையும் இம்போர்ட் பண்ணினால் மெகா சீரியல் டி.ஆர்.பில்லாம் ஒரே நாளில் அவுட் என்பது நிச்சயம்.

டிஸ்கி
1. tongue dip என்பதில் பெரிய சூத்திரமெல்லாம் இல்லை. தமிழாக்க வேண்டியதுதான்.
2. இந்தப்பதிவை படிச்சு கருத்து சொல்லுங்கனு கூப்பிடக்கூட இப்பல்லாம் பயமா இருக்குபா.

12 Comments:

  1. Radha Sriram said...

    அட ரொம்ப நாள் கழிச்சு வந்து அவியல் பதிவு போட்ட்ருகீங்க??:) மத்தபடி பதிவ பத்தி என்ன சொல்ரது தெரியல....:)

    //பத்திக்கு பத்திக்கு கனெக்ஷன் இருக்கணும்னெல்லாம் எதிர்பார்க்கக்கூடாது)//அய்ய.....இதெல்லாம் இப்பத்த ட்ரெண்ட்.....ரொம்ப நாள் இந்தபக்கம் நீங்க வரலன்னு தெரிஞ்சுடுச்சு..:):)


  2. ramachandranusha(உஷா) said...

    ஏண்டா ஊர்லதான் இருக்கியா? யாரோ சாமியாரா போயிட்டேன்னாங்க :-)


  3. ILA (a) இளா said...

    உள்ளேன் ஐயா பதிவுக்கு உள்ளேன் ஐயா பின்னூட்டம்


  4. இலவசக்கொத்தனார் said...

    யாருய்யா நீயி?


  5. துளசி கோபால் said...

    என்னப்பா ராம்ஸ்,

    நலமா? படிப்பு முடிஞ்சதா?

    இப்பத்தான் நாலுநாள் முன்னே உங்க நினைவுவந்து நீங்க இப்ப எங்கேன்னு கோபால் என்னைக்கேட்டார்:-)

    மெயில் அனுப்பறென்னு சொல்லிட்டேன்.

    பதிவு இன்னும் படிக்கலை. அப்புறம் வர்றென்.


  6. பெருசு said...

    அய்யா வாங்க

    //C'mon.. You can do it.. you can do it.. you can do it.. do it... do it.. do it.. do it.. do.. do.. do.. Just Do it already! will ya?//
    இது யாருக்காக எழுதுனது.

    உங்களையும் காணோம், உங்க தலையையும் காணோம்.


  7. rv said...

    இராதா,
    //மத்தபடி பதிவ பத்தி என்ன சொல்ரது தெரியல....:)//
    குட். அப்படின்னா நல்ல பதிவுன்னுதானே அர்த்தம்?

    //இதெல்லாம் இப்பத்த ட்ரெண்ட்....//

    :)))

    பி.ந ஓவரா பொங்கிருச்சா எல்லாரிடத்துலயும்?


  8. rv said...

    உஷா அக்கா,
    தலைமை மடாதிபதினி போஸ்ட் உங்களுக்காகவே காத்துகிட்டு இருக்கு. நான் பாதரட்சைய வச்சு ஜூனியர் லெவல்ல சேவை பிழியறேன்.


  9. rv said...

    விவசாயி,
    attendance போட்டாச்சு. ப்ராக்ஸி கொடுக்காதவரை சந்தோஷம்.


  10. rv said...

    கொத்ஸு,
    நான் மறக்கப்பட்டவன் அல்ல. மறக்கடிக்கப்பட்டவன்-னு தமிழகமெங்கும் போஸ்டர் ஒட்டி நீதி கேட்க நிதி தேவைப்படுது. அனுப்பி வைக்கவும். அப்புறம் யாருன்னு தெரியும்.


  11. rv said...

    பெருசு,
    அதான் அடுத்த வாரத்துல வரேன்னு சொல்லிருக்காருல்ல... வருவாரு... மட்ரிட் மேட்டர் இல்ல..

    அடுத்த வருஷத்துலேர்ந்து ஆஸில பர்ஸ் கனம் ஜாஸ்தியாத் தூக்கணுமில்ல... அதான் ரெடி பண்ணிகிட்டிருக்கார்.


  12. ச.சங்கர் said...

    இப்டீக்கா வந்து போனதுக்கு ஒரு பின்னூட்டம் போட்டுகுறேன். :)

    பதிவு நல்லாதான் இருக்குது.

    ஆனாலும் வெளிநாடு வாழ் தமிழர்கள்!!?? நம்ம ஊருக்கு லீவுக்கு வந்த்துட்டு போனதுக்கப்பால விசிட் பத்தி பதிவு போடக்கூடாதுன்னு ஒரு தடா கொண்டு வரணும்..இதுக்காகவே வருவாய்ங்களோ அப்படீன்னு கேக்கிறபடிக்கு ஆயிருச்சு :)ஆனா இங்கிருந்து வெளிநாடு போகிறவங்க அது பத்தி பதிவு போடலாம் :)


 

வார்ப்புரு | தமிழாக்கம்