225. வந்தாடியே! வந்த வழி போயிடு ஓடியே!

மும்பையில் நடந்துகொண்டிருக்கும் கூத்தப்பத்தி, அதான்பா அமிதாப் பச்சன் அண்ட் உத்தர பிரதேசம் vs தி ஸ்டேட் ஆப் மஹாராஷ்ட்ரா (c/o இராஜ் தாக்குடே) பத்தி பதிவெழுதுலாம்னு நினச்சுகிட்டிருந்தேன்.

அப்போ பிரத்யட்ச தெய்வம் கனவுல வந்து 'என்னையப் பத்தி ஒரு தொடர் போடறேனு சொல்லிட்டு இப்படி ஜகா வாங்குறியே, இது உனக்கே நல்லா இருக்கா'னு கேட்டாரு. சரினு தலகிட்ட 'உம்ம மேட்டர் கெடக்குது. இந்த மும்பைல உபிக்காரவுகல்லாம் வந்து அட்டூழியம் செய்யறாங்களாம். இந்த நார்த்தீ கும்பலால மராட்டியர்களுக்கு வேலைபோச்சாம், மானம் போச்சாம் மருவாதை போச்சாம். அப்படியே அமைதிப்பூங்காவான மும்பைல இவனுக வந்ததுலேர்ந்து எல்லா கிரிமினல் ஆக்டிவிடிஸும் ஜாஸ்தியாயிருச்சாம். அதுனால அவங்களையெல்லாம் வெளியேத்தணும்னு தாக்குடே அண்ணாச்சி சொல்றாருனு' சொன்னேன்.

அதுக்கு தல ‘இதெல்லாம் காலங்காலமா எல்லா ஊர்லயும் நடக்குற மேட்டர் தானப்பா.. இதுல என்ன புதுசா கண்டுட்ட? ஹிட்லர் போல்பாட் தொடங்கி ஒரு பெரிய க்ரூப்பே இப்படித்தானே வெறியத்தூண்டி வெளாண்டாங்க? இப்ப நம்ம கதையவே எடுத்துக்கயேன். இந்த வருச 2008 விம்பிள்டன்ல இதே மாதிரி நடக்கப்போகுது'. உலகவலைப்பதிவுகள்ல முதல்முறையாக வருங்காலத்துல வரத நீ இப்பவே போட்டு நியுஸ மக்களுக்குச் சொல்லிடு'னு சொன்னாரு.



(படத்துமேல கிளிக்கினா அடுத்த படத்துக்கு போவும்)

தல சொன்னத குறள்வாக்கா எடுத்துகிட்டு ஒரு வார்த்தை கூட என்சேர்க்கை இல்லாம போட்டுட்டேன்! வேறு எவர்கூடயோ எது கூடயோ லின்க்கெல்லாம் பண்ணி என்னய்யவும் புலம்பவச்சிருதாதீங்கப்பூ!


---------------
Photos from Menstennisforums

24 Comments:

  1. மணியன் said...

    ரொம்ப அவசியம்..


  2. சின்னப் பையன் said...

    படக்கதை அற்புதம்...:-)


  3. பினாத்தல் சுரேஷ் said...

    ஹி ஹி.

    ஆனால், புதிய ஆள் வராமல், கனவில் இன்னும் பழைய ஆளே வருவது விசிலடிச்சான் மனப்பான்மையைத் தானே காட்டுகிறது?


  4. இலவசக்கொத்தனார் said...

    வந்தாடியா? அப்படின்னா என்ன? வந்து ஏறி வம்பு பண்ணறவங்களைத் தெரியும். வந்து ஆடி வம்பு பண்ணறவங்களைத் தெரியாதே!!

    அப்புறம் இந்த வார்த்தை பிரயோகம் எல்லாம் பார்த்துப் செய்யுங்க. அடுத்த அரசு வந்தா ஆடி ஆவணி அப்படின்னு சொல்லக்கூடாது அப்படின்னு ரூல் போடப் போறாங்க.

    மகரம்னுதான் சொல்லணும், அன்னிக்குதான் தென் அமெரிக்காவுல சூரியன் மகர ரேகையில கிரிகோரியன் கேலண்டர் படி பிரவேசிக்கிறான் தெரியுமா? அப்படின்னு சிலர் வந்து பறந்து பறந்து அடிப்பாங்க.

    இன்னும் ஒரு க்ரூப் இருக்கு அவங்க வந்தாடி அப்படின்னு சொன்ன அதை வந்தா-டி அப்படின்னு படிச்சுட்டு ஈயம் பித்தளைன்னு ஆரம்பிப்பாங்க. எதுக்கும் ரெடியா இருங்க. ஜூட் சொன்னா ஓடிடணும். சரியா?


  5. Sridhar V said...

    //c/o இராஜ் தாக்குடே//
    //தல சொன்னத குறள்வாக்கா //
    //அட இராமா! எங்கன குடிச்சிட்டு விழுந்து கெடக்க நீயி!//

    எப்படிய்யா... எப்படி... இப்படியெல்லாம்... அவ்வ்வ்வ்...


  6. rv said...

    மணியன்,
    :)))))))))))

    ஆமா... லேபிள் பின்னூட்டம்கறது இதுதானா? :P


  7. rv said...

    ச்சின்னப்பையன்,
    நன்னி!


  8. தருமி said...

    ம்ம்.. ஹூம்...
    ???
    !!!!


  9. இராம்/Raam said...

    காரணக்காரியங்கள் இல்லாமல் இந்த பதிவினை கண்டமேனிக்கு எதிர்ப்பு தெரிவித்து கொள்கிறேன்.... :)


  10. rv said...

    பெனாத்தலார்,
    நீர் கூடதான் பழைய ஆளு வந்திருக்கீரு...

    அதுக்காக என்னோட விசிலடிச்சானா உம்மள கன்ஸிடர் பண்ண உங்க லாஜிக் இடம் தருமா? யாரையாவது கேட்டுச்சொல்லவும்..


  11. rv said...

    கொத்ஸு,
    இன்னும் பழைய ஹாங்கோவர்லேயே இருக்கா மாதிரி இருக்கு போலிருக்கே! உடம்புக்கு நல்லதில்லபா..

    வார்த்தை விளையாட்டுக்கும் நமக்கும் ரெம்ப தூரமய்யா... இந்த போஸ்டுக்கும் மகர குண்டல ராசிக்குமெல்லாம் என்னய்யா சம்பந்தம்?

    ஈயடிச்சான்(ள்) காப்பியாட்டம் ஒரே ரெம்ப்ளேட் பின்னூட்டம் வர வாய்ப்பிருக்குனு சொல்றீரா?


  12. rv said...

    ஸ்ரீதர்,
    ஆஹா...கரெக்டா புடிக்குறீரு.. கோனார் நோட்ஸ் வெர்ஷன் 2.0 போட சரியான ஆளுதான் நீர்தானய்யா!

    வாழ்க!

    (கொத்ஸ் தொல்லை தாங்கலையா? :)))))


  13. G.Ragavan said...

    ஓ இதெல்லாம் ஷட்டில் விளையாடுறதப் பத்தியா? அவரு ஷட்டில் பேட்தானே கைல வெச்சிருக்காரு? டேபிள் டென்னில் இல்லையே?


  14. பெருசு said...

    //ஓ இதெல்லாம் ஷட்டில் விளையாடுறதப் பத்தியா? அவரு ஷட்டில் பேட்தானே கைல வெச்சிருக்காரு? டேபிள் டென்னில் இல்லையே?//
    ஜிரா , இதெல்லாம் ரொம்ப ஓவரு
    நக்கலு, வேண்டாம்.

    அப்புறம் ராம் அண்ணன் அழுதுருவாரு.


  15. Anonymous said...

    கொத்ஸ்,

    \\அடுத்த அரசு வந்தா ஆடி ஆவணி அப்படின்னு சொல்லக்கூடாது அப்படின்னு ரூல் போடப் போறாங்க. //

    நான் சொன்னதே இல்லை ( சொல்லவதற்கு அதிகாரம் இல்லை, அது வேற விஷயம்). இது தனி மனிதத்தாக்குதல். பதிவை திசை திருப்பும் கொத்ஸை மென்மையாக கண்டிக்கிறேன். :-))))))

    -அரசு


  16. Anonymous said...

    இராம்,

    ஆஸ்திரேலியா ஓப்பனில் தோத்தற்காக, உங்கள் தலைவரை வைத்து 'அரசியல்' பண்ணியதை பார்க்கும் போது 'வெந்த புண்ணில், வென்னீர் ஊற்றியது' போல் உள்ளது. இருந்தாலும் 'தெய்வமே எங்கேயோ போய்ட்டேங்க'

    -அரசு


  17. rv said...

    பெரீய்யப்பா,
    //ம்ம்.. ஹூம்...
    ???
    !!!!//

    புரிஞ்சுருச்சு.. ரைட் ரைட்! :)))))))


  18. rv said...

    இராம்,
    //காரணக்காரியங்கள் இல்லாமல் இந்த பதிவினை கண்டமேனிக்கு எதிர்ப்பு தெரிவித்து கொள்கிறேன்.... :)//

    இதெல்லாம் யாரு செய்யலாம் யாரு செய்யப்படாதுனெல்லாம் ரூல்ஸ் இருக்குபா.. எதுக்கும் லேட்டஸ்ட் க்ளாசிபிகேஷன் பார்க்கவும்.


  19. rv said...

    ஜிரா,
    ஆமாய்யா... இவருதான் தீபிகா படுகோனேவோட அப்பா.. பிரகாஷ் படுகோனே. நல்லா வெளாடுவாரு.

    ஆம்ஸ்டெல் வற்றாத ஜீவநதியாப் பாயுதுன்னு உம்மளோட பின்னூட்டத்துல இருந்து புரிஞ்சுகிட்டேன்.


  20. rv said...

    பெருசு,
    //அப்புறம் ராம் அண்ணன் அழுதுருவாரு.//

    இந்த ஜிரா போடுற பின்னூட்டத்துக்கெல்லம் வேற என்ன செய்யறது? அதுவும் என் பதிவ குறிவச்சே இப்படியெல்லாம் செய்யறாரு. :))


  21. Geetha Sambasivam said...

    //வந்தாடியா? அப்படின்னா என்ன? //
    ரிப்பீஈஈஈஈஈஈட்ட்ட்ட்ட்டேஏஏஏஏஏஏ

    எங்கே இருந்துத் தோண்டி எடுக்கிறீங்க, நீங்களும், இ.கொ.வும், இப்படி அறுவையான, சீச்சீ, அற்புதமான தமிழ் வார்த்தைகளை?


  22. துளசி கோபால் said...

    என்னய்யா நடக்குது இங்கே?

    கொத்ஸ் & ராம்ஸ் அட்டகாசமா?

    ??????????

    :-)))))))))))


  23. rv said...

    அரசு,
    //நான் சொன்னதே இல்லை ( சொல்லவதற்கு அதிகாரம் இல்லை, அது வேற விஷயம்). இது தனி மனிதத்தாக்குதல். பதிவை திசை திருப்பும் கொத்ஸை மென்மையாக கண்டிக்கிறேன். :-))))))//

    நெனப்புதான் பொழப்பனு என்னவோ சொல்வாங்களே.. அது ஏனோ எனக்கு ஞாபகம் வந்து தொலைக்குது.. :P

    //உங்கள் தலைவரை வைத்து 'அரசியல்' பண்ணியதை பார்க்கும் போது 'வெந்த புண்ணில், வென்னீர் ஊற்றியது' போல் உள்ளது. //
    எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாரு இல்ல... மேற்கத்திய ஊடகங்கள் பலவும் write offஏ பண்ணிட்டாங்க..

    தல கௌரவம் ரஜினிகாந்த் மாதிரி ‘ஆனைக்கு அடிசறுக்கினா என்னாகும்னு தெரியுமோல்லியோ.. அதானே எல்லாரும் எதிர்ப்பாக்குறா.. நடக்காதுடி.. நடக்காது!' டயலாக் ரிகர்ஸல் பண்ணிகிட்டிருப்பாருன்னு நினைக்கிறேன்.


  24. rv said...

    கீதாக்கா,
    ////வந்தாடியா? அப்படின்னா என்ன? //

    ரிப்பீஈஈஈஈஈஈட்ட்ட்ட்ட்டேஏஏஏஏஏஏ//

    வெளியிடத்துலேர்ந்து வந்து ஆடுறவங்க (நான் டென்னிஸச் சொன்னேன்) வந்தாடி... இதுல என்ன சந்தேகம் உங்களுக்கு?


    //எங்கே இருந்துத் தோண்டி எடுக்கிறீங்க, நீங்களும், இ.கொ.வும், இப்படி அறுவையான, சீச்சீ, அற்புதமான தமிழ் வார்த்தைகளை?//

    தமிழுக்கு அவசர சிகிச்சை கொடுக்குறோம், சிபிஆர் பண்றோம்னெல்லாம் அவனவன் சொல்லிகிட்டு திரியிறான். யாரையாச்சும் பார்த்து இந்தக்கேள்வி கேட்டீங்களா?

    எதிர்க்கட்சினோன உடனே இப்படியெல்லாம் பேசி எங்க தமிழார்வத்தை குலைச்சிடலாம்னு சதி பண்ணா அது நிறைவேறாதாக்கும்.


 

வார்ப்புரு | தமிழாக்கம்