240. காமத்தின் குறைந்தபட்ச(ம்) அதிகரிப்பு!

மாஸ்டர்ஸ் கோப்பை கை நழுவிவிட்டது. போகட்டும். ஜோக்கரின் வெற்றி தற்காலிகமானதுதான். தி டார்க் நைட் (உபயம்: நைக்கி) துவளாமல் அடுத்த வருடத்திற்குள் துள்ளி எழுந்து வரலாறு படைப்பாரா என்று காத்திருக்கிறேன். ஒரு ஆல்ப்ரெட் கிடைத்தால் வெற்றி நிச்சயம்... இது வேத சத்தியம் என வைராக்கிய சிச்சுவேஷன் சாங்க் வைக்க வசதியாக இருக்கும்.



தி டார்க் நைட் - படம் அட்டகாசம். ஹீத் லெட்ஜர் இறந்தபிறகு பார்ப்பது ஒருவிதமாக இருந்தது. தி பைரேட்ஸ் ஆப் கரீபியன் - ஜானி டெப்-பின் பாதை உடைக்கும் நடிப்பினைப் போல ஜோக்கராக வரும் லெட்ஜருடையதும். கல்ட் பெர்பாமன்ஸ் என்பார்களே. கிறிஸ்டியன் பேல் ஈக்விலிப்ரியம் எனும் கண்றாவி படத்தில் நடித்ததிலிருந்தே என் ஆதர்ச நடிகர்களில் ஒருவராகிப்போனார். அதற்கப்புறம் மஷினிஸ்ட், தி ப்ரெஸ்டீஜ் என சிக்ஸர் மேல் சிக்ஸர் அடித்துக்கொண்டிருந்தவருக்கு ’பேட்மேன் பிகின்ஸ்’ வந்து உச்சத்திற்கு உசத்தி விட்டது.

(பி.கு: அப்புறம் உலகநாயகர்கள் ”படத்துக்கு அவ்ளோ ஹோம்-ஒர்க் செஞ்சேன், ஆனால் புரிந்துகொள்ளும் தகுதிதான் பார்ப்போருக்கு இல்லை” என அக்ரஹாரத்துப் பாட்டியென்று சொல்லி பேய் மேக்கப் அப்பிக்கொள்வதையெல்லாம் பில்டப் செய்து புரியாத கவிதை பேசுவதை வாய்திறந்தபடி படிப்போர் அனைவரும் பார்க்க வேண்டியது மஷினிஸ்ட்! குறைந்தபட்சம் நிழற்படங்களையாவது கூகிளில் தேடவும்.)

ஒரு நுண்ணணு ஆறுதல் - சரியா வருதா? குவாண்டம் ஆப் சோலஸ் இன்னும் பார்த்த பாடில்லை. ஈபர்ட் காறித்துப்பியிருக்கிறார். அதனால் பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் குறைந்துவிட்டது.


சென்னை சட்டக்கல்லூரி வளாகத்தினுள் நடந்ததை நேரலையில் பார்க்கமுடியவில்லை. அதற்க்காகவாவது, அடுத்த முறை விஜய்ஸ், அஜித்ஸ், ரஜினிஸ் எக்ஸெட்ரா வகையினர் கல்லூரியில் புகுந்து கலாட்டா செய்யும் பொன்னம்பலம், சங்கர், ஆனந்தராஜ் போன்றவர்கள் புரட்டி நொறுக்கும்போது ஒரு முன்னறிவிப்பு கொடுத்தால் தேவலை. உலகத்தொலைக்காட்சிகளில் முதல்முறையாக கடைசியில் கூட போலீஸ் நுழையாத பல திருப்பங்களுடன் என விளம்பரம் செய்து பண்டிகை/விடுமுறை நாட்களில் ஒரு “இண்டர் கட்சி சாம்பியன்ஷிப்” காட்டலாம். ஸ்பான்ஸர்கள் பிடிப்பது அவ்வளவு கடினமாக இராது.

இந்த ஜந்துக்களெல்லாமும் நாளைக்கு படித்து வக்கீல்களாக/எம்.எல்.ஏ என சுமோ/குவாலிஸிஸ் பவனி வரும். ஆளுயர கட் அவுட் வைத்து மாலை போட்டு தமிழ்நாட்டின் அலெக்ஸாண்டரேனு அடிப்பொடிகளெல்லாம் ப்ளெக்ஸ் போர்ட் வைத்து குத்தாட்டம் போடுவதையும் பார்க்கத்தான் போகிறோம். ஆனால் அதையெல்லாம் ப்ளாகில் எழுதி நேரத்தை வீணடித்துக்கொண்டிருப்போமா என்றால் இல்லை.


பைக்கில் அமர்ந்தபடி, விஜய் முடியைக் கலைத்துக்கொண்டு விரலை வைத்து விஷ்க் விஷ்க் என பஞ்ச் டயலாக் பேசினாலும் பேசினார், தமிழ்நாட்டு தெருக்களில் விஜய் ரசிகர்கள் அதிகமாகிவிட்டனர். அவரைப்போலவே ஒரு ரெண்டு நாள் தாடியுடன் ஒரு மோட்டார் பைக்கில் ஏறிக்கொண்டு பாயிண்டு டு பாயிண்டு சர்வீஸ் விட்டுக்கொண்டிருக்கின்றனர். நடுவில் ப்ரேக், ஹார்ன் போன்ற வஸ்துக்களை பயன்படுத்துவதில்லை என்ற வைராக்கியத்துடன். தப்பித்தவறி இப்படி ஹீரோயின் காக்க/பாக்க பறந்து கொண்டிருக்கும் விஜய்களின் பாதையில் நாம் குறுக்கே சென்றாலோ (ராங் சைடில் வந்தாலும் விஜய் ரசிகருக்கு வழிவிட வேண்டியது நம் கடமை), அல்லது ஹார்ன் அடித்தாலோ விடுகிற லுக் இருக்கே. யேய்... யேய்ய்ய்ய்ய்ய்ய்.... யேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்... யேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் என அர்த்தமுள்ள வசனங்களை பேசிக்கொணடே வில்லனை பார்வையாலேயே எரித்துவிடுவது போல இ.த டாக்டர் விஜய் பார்ப்பாரே. அந்த லுக்கை பார்த்தவுடன் நாம் தான் தப்பாக வந்துவிட்டோமோ என்று சந்தேகம் வந்துவிடும்.

விலை மலிகிறது, அவனவன் பைக் கார் என வாங்குகிறான். அதோடு காசு கொடுத்தால் டோர் டெலிவரி செய்யப்படும் லைசென்ஸையும் வைத்துக்கொண்டு தெருக்களில் விடும் அளப்பரை தாங்கமுடியவில்லை. சைக்கிள் வைத்திருந்தவன் ஸ்கூட்டருக்கு மாறினால் அது வரவேற்க்கப்படவேண்டிய பொருளாதார வளர்ச்சி என்றாலும் சைக்கிளைப் போல் ஸ்கூட்டரையும் இஷ்டத்துக்கு ஓட்டுவது என வைத்துக்கொண்டு திரிகிறார்கள். இவர்கள் தொல்லை ஊர்களுக்குள் மட்டுமின்றி நெடுஞ்சாலைகளிலும் அதிகரித்துவிட்டது. ரேஸிங் பைக்கை ஓட்டுகிற ஸ்டைலில் ரெண்டு இஞ்சு அகலமுள்ள டயருடன் கூடிய வண்டிகளை தறிகெட்டு ஓட்டி அதோடு நில்லாமல் பதினைந்து இருபது மடங்கு சக்தி அதிகம்வாய்ந்த கார்களுடன் போட்டி வேறு போட்டு நம் பிராணனை எடுக்கிறார்கள்.


சானிடரி நாப்கின் வரை அரசியல் வந்துவிட்டாலும் எதற்கு எனக்கு. நான் ரொம்ப பயந்த சுபாவம் உடையவன்.

எனினும் கலைஞருக்கு நன்றி சொல்லக்கடமைப் பட்டிருக்கிறேன். அவர் உபயத்தால் சென்ற ஞாயிற்றுக்கிழமை காலை எனக்கு தெய்வ தரிசனம் சன் ரீவியில் கிட்டியது. எனது ஆஸ்தான முடிதிருத்துபவர் கடையில் அரசு தொலைக்காட்சிப் பெட்டியின் வழியாக. சிறிய அளவில் இருப்பது ஒன்றே குறை. மற்றபடி ஒலி, ஒளியில் தவறாய் ஒன்றும் தெரியவில்லை.


மின்வெட்டுகள் ஓரளவிற்கு குறைந்துள்ளது. கிராமங்களில் எப்படியோ. எனினும் வீட்டிற்கு இன்வெர்டர் போட்டால் வயரிங் எல்லாம் திரும்ப செய்யவேண்டும் என்று சொல்லப்பட்டதையடுத்து ஹோண்டா ஜெனரேட்டர் வாங்கலாம் என்று பார்த்தோம். ஸ்டார்ட் செய்ய பெட்ரோலும் தொடர்ச்சியாக ஓட கெரசினும் வேண்டும். விசேஷம் என்னவென்றால் கெரசின் வெளி மார்க்கெட்டில் கிடைப்பதில்லையாமே? ரேஷன் கடைகளில் குறைந்தவிலைக்கு வாங்கப்பட்டு கறுப்புச் சந்தையில் ரூ.30-35 வரை விலைக்கு வருகிறது. ரேஷன் கடையில் கெரசின் வாங்குவோர் வாங்கக்கூடிய விலையில் இல்லாத இந்த ஜெனரேட்டரை எந்த தைரியத்தில் ஹோண்டா நிறுவனம் தமிழகத்தில் விற்பனை செய்கிறது? அரசுதான் எப்படி அனுமதி வழங்கிற்று? புரியவில்லை.


மேலே இருக்கும் பத்திகளையெல்லாம் ஸ்கிப் செய்துவிட்டு தலைப்பு மேட்டர் படிக்கவென கடைசி பத்திக்கு வந்திருப்போரின் ஆர்வத்தை பாராட்டியபடியே, இதுவரை பொறுமையாய் படித்துவந்த நல்லவர்களுக்கும் நன்றி சொன்னபடியே இதோ தலைப்பு மேட்டர்.


ஐசிஐசிஐ வங்கியில் நகர்ப்புற கணக்குகள் வைத்திருப்பவர்கள் இனி குறைந்தபட்ச காலாண்டு இருப்பாக (QAB) ரூ. 10,000 வைத்திருக்கவேண்டும் என்று ஜூலை 1 லிருந்து மாற்றியிருக்கிறார்களாம். அதாவது average-ஆக ஒரு காலாண்டின் ஒவ்வொரு நாளிலும் உங்கள் கனக்கில் ரூ. பத்தாயிரம் இருக்கவேண்டும். இல்லாதபட்சத்தில் அதற்கு அபராதமாக ரூ. 800+ சொச்சம் எடுத்துக்கொள்வார்கள். நான் கேட்டதற்கு "வீட்டிற்கு தபால் அனுப்பினோம், வரவில்லையென்றால் நாங்கள் பொறுப்பில்லை" என்று எடக்கான பதில். சண்டை போட்டு அதை மாற்றவேண்டியதாக போயிற்று. ஆகவே ஐசிஐசிஐ கணக்கு உள்ளவர்கள் ட்ரான்ஸாக்ஷன் ஹிஸ்டரியை ஒரு முறை சரிபார்த்துக்கொள்ளவும்! கூட்டிக்கழிச்சு பாருங்க...தலைப்பு சரியா வந்துருச்சா?

12 Comments:

  1. இலவசக்கொத்தனார் said...

    யாருய்யா நீயி? உண்மைத்தமிழன் ரேஞ்சுக்குப் பதிவு போடற?


  2. கப்பி | Kappi said...

    //குவாண்டம் ஆப் சோலஸ் இன்னும் பார்த்த பாடில்லை//

    தப்பிச்சீங்க

    //விஜய் முடியைக் கலைத்துக்கொண்டு விரலை //

    வருங்கால தமிலக முதள்வர்
    எதிர்கால அமெரிக்க ஜனாதிபதி
    இளைய தளபதி டாக்டர் விஜய்யை வெறுமனே விஜய் என்று குறிப்பிட்டிருப்பதை கண்மூடித்தனமாக கண்டிக்கிறேன்.


  3. rv said...

    கொத்ஸு,
    உண்மைத்தமிழன் ரேஞ்சுக்கா? ஆசையக் கெடுப்பானேன்... 'மகேஷ், சரண்யா மற்றும் பலர்' பத்தி ஒரு சின்ன முனைவர் ஆய்வுக்கட்டுரை எழுதிடட்டுமா?


  4. rv said...

    கப்பி,
    தப்பிக்கிறதா இல்லை. எப்படியும் பாத்துறணும். கிரிலென்கோவுக்காக வேணும்.

    அப்புறம், பட்டம் விட்டது கிடக்கட்டும். உண்ணாவிரதம் இருந்தீங்களா இல்லியா? அதச்சொல்லுங்க முதல்ல.


  5. நாகை சிவா said...

    //காமத்தின் குறைந்தபட்ச(ம்) அதிகரிப்பு!"//

    ரொம்ப காலத்துக்கு முன்னாடியே ஊர் எல்லாம் போஸ்டர் அடிச்சு ஒட்டாத குறையா சொல்லி எல்லாருக்கு தெரிஞ்ச ஒரு மேட்டருக்கு இப்படி ஒரு தலைப்பை வைத்து பதிவின் ஹிட்ஸை ஏத்திக் கொள்ளும் உம்மை என்ன சொல்வது.....

    உம்மை நாடு கடத்தியாச்சா? அது எப்ப நடந்துச்சு...


  6. நாகை சிவா said...

    //இந்த ஜந்துக்களெல்லாமும் நாளைக்கு படித்து வக்கீல்களாக/எம்.எல்.ஏ என சுமோ/குவாலிஸிஸ் பவனி வரும். //

    ஸ்கார்ப்பியோ வை விட்டு விட்டீர்கள்.... உர்ர்ர்ர்ர்ர்ர் இப்போதைக்கு அதுக்கு டிமாண்ட் ஜாஸ்தி...


  7. வானம்பாடி said...

    இந்தியா திரும்பியாச்சா? எப்போ?


  8. பினாத்தல் சுரேஷ் said...

    //யாருய்யா நீயி? // ரிப்பீட்டு!

    எங்க டாக்டர் வலைப்பதிவை வேற ஹாக் பண்ணிட்டே!உண்மையச் சொல்லு..


  9. rv said...

    புலி,
    //ரொம்ப காலத்துக்கு முன்னாடியே ஊர் எல்லாம் போஸ்டர் அடிச்சு ஒட்டாத குறையா சொல்லி எல்லாருக்கு தெரிஞ்ச ஒரு மேட்டருக்கு இப்படி ஒரு தலைப்பை வைத்து பதிவின் ஹிட்ஸை ஏத்திக் கொள்ளும் உம்மை என்ன சொல்வது.....
    //
    பதுங்கின புலியையெல்லாம் வெளில கொண்டு வர வைக்க என்னென்ன செய்ய வேண்டியிருக்கு பாரு!

    //ஸ்கார்ப்பியோ வை விட்டு விட்டீர்கள்.... உர்ர்ர்ர்ர்ர்ர் இப்போதைக்கு அதுக்கு டிமாண்ட் ஜாஸ்தி...//
    ஆமாம்.. அதோட சஃபாரியும்... இவங்களத்தவிர தமிழ்நாட்டுல இந்த வண்டிங்கள யாரும் வாங்கறாப்புலயே தெரியலை.


  10. rv said...

    சுதர்சன்
    ஆச்சே.. சில மாசம் ஆச்சு! :)


  11. rv said...

    பெனாத்தலார்,
    "கோஸ்ட் ரைட்டிங் பார் டம்மீஸ்"இன் ஏகபோக காப்புரிமையாளரும் மற்றும் பலதரப்பட்ட ப்ளாக்குகளை ப்லாக்கில் எழுதுபவரும் ஆன தாங்கள் என்னை இந்த கேள்வி கேட்பது நியாயமா?


  12. தருமி said...

    not relevant to this post.so எக்ஸ்க்யூஸ் மீ ப்ளீஸ் ...

    உங்கள நினச்சு ஒரு கேள்வி போட்டா வந்து பார்த்து பதிலே சொல்றதில்லைன்னாலும் உட்டுருவோமா ..

    இங்கன F1 பார்முலாவோடு சம்பந்தப்படுத்தி ஒரு கேள்வி கேட்டிருக்கோம்ல ..


 

வார்ப்புரு | தமிழாக்கம்