பள்ளி இறுதியாண்டுகள் மற்றும் கல்லூரி நாட்களை formative yearsனு சொல்றோமில்லியா... இந்த நாட்களில் தான் உலகத்தைப் புதிதாக பார்ப்பது தொடங்கி சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ நம் கருத்து என்று ஒன்றை அனைத்து விஷயங்களிலும் உருவாக்கிக்கறோம்.
பொதுவா பள்ளிநாட்களில் காலையில் அம்மா வந்து "கண்ணா எழுந்திருடா.. ஸ்கூலுக்கு போவேணாமா"னு கொஞ்சியபடியே எழுப்பிவிடுவதிலிருந்து "காபி வச்சு எத்தனமணியாச்சு.. சீக்கிரம் எழுந்திருடா"ன்னு அப்பா ஸ்க்ரினெல்லாத்தையும் தள்ள அதுவரையில் இருள்படர்ந்த அறையில் மிதந்துகொண்டிருந்த தூசிகளையெல்லாத்தையும் ஸ்டன்னாக்கியபடி ஜன்னலிலிருந்து கசியும் வெயிலிருந்தும் தப்பிக்க போர்வையை இழுத்துப்போர்த்திக்கொள்வதில் ஆரம்பிக்கும் இனிய பள்ளிக்காலைப் பொழுதுகள் அப்புறம் ட்யூஷனிலோனு ஓடி வந்து ஒரு அவசரகுளியல், நித்தியதர்மமாய் சாமிபடம் முன்னாடி நின்னு பாவ்லா பண்ணி அப்புறம் இருக்குற சுடச்சுட சூப்பர் இட்லியையோ மொறுமொறு தோசையோ அடுப்பிலிருந்து அப்படியே தட்டில்விழ அப்படியே டன் கணக்கில் உள்ளே தள்ளி ஸ்கூல் பஸ்ஸுக்கு ஓடுவதற்குள் டிபன் பாக்ஸையோ தண்ணீர் பாட்டிலையோ மறந்துவைத்திருப்போம். அதை எடுத்துக்கொண்டே பஸ்பின்னாடியே வண்டியை எடுத்துக்கொண்டு அப்பா வந்து அடுத்த ஸ்டாப்பிங்கில் கொடுக்க என்று சுகமாய் நகரும் காலைகள். சாயந்திரம் வந்து எதுனாச்சும் நாம கொறிக்கவென்று அம்மா கையில் வைத்துக்கொண்டு நம்பின்னால் சுத்த நாம மட்டையையும் ஷுவையும் தேடி அலைய அப்புறம் விளையாடிவந்த் பிள்ளை ரொம்ப டயர்டாக இருப்பானே என்று பூஸ்டும் கொஞ்சமே படியென்ற அறிவுரையுடன் அதையும் செய்துமுடித்தால் இரவுச்சாப்பாடு தாயார் தயாராக வைக்க அதையும் சாப்பிட்டு சுகமாய் டிவியுடன் தூக்கமென்று நகர்ந்துவந்த துயரில்லாப் பள்ளிப்பருவம்.
இப்படி நாம அனுபவிக்கறதெல்லாம் கண்டு பொறுக்காதவன் ஒருத்தன் வானத்துல உக்காந்து விதிய எழுதுறான்னு தோணுற மாதிரி திடீர்னு ஒருநாள் நீ பெரியவனாயிட்ட.. இனிமே தனியா போய் விடுதியில தங்கிப்படின்னு கொண்டுபோய் திடுதிப்புன்னு கல்லூரி விடுதியில்; பல இடங்களில் சொல்லவே முடியாத அளவு கேவலமாய் இருக்கும்: இடங்களில் முன்பின் தெரியாத நம்ம வயசுப்பசங்க ரெண்டு பேரோட கொண்டுவிட்டு போய்விடுவார்கள். இதுவே வெளிநாடு என்றால் கேட்கவே வேண்டாம். அவன் நம்ம நாட்டுக்கார பசங்களாக் கூட இருக்கமாட்டான். என்ன பேசுறதுன்னு திருதிருன்னு முழிக்கறதுல ஆரமிச்சு இந்தப்பயலுக முழியப்பார்த்தாலே பொறுக்கியாட்டம் இருக்கேன்னு பரஸ்பரம் கைகுலுக்குவதில் தொடங்கும் இந்த உறவு பெரும்பாலும் இந்த ரூம் மேட்ஸே நம் அத்யந்த தோழர்களாய் பெரும்பாலும் மாறுவது அழகுதான்.
மணியடிச்சா சோறு ரேஞ்சுக்கு ஹாஸ்டல் மெஸ் பிரச்சனைகள். இந்த மாதிரி காய்கறிகள இவ்ளோ மட்டமா சமைக்கவும் முடியும்னு ஒருவித ரிசர்ச் பெஸிலிடி மாதிரி இந்தப்பசங்க எவ்ளோதான் தாங்குவாங்கன்னு பார்ப்போம்னே மெஸ்காரங்க செய்றா மாதிரி இருக்கும். அப்புறமா வழக்கமான தண்ணி வராது. விளக்கு எரியாது. நமக்கு முன்னாடி இருந்தவனெல்லாம் இந்த ரூம்ல அப்படி என்னதாண்டா பண்ணிருப்பானுங்கன்னு யோசிக்கவைக்கிற அளவுக்கு சுவரில் மேஜையில் என ஆபாச +/- கிறுக்கல்கள், நொடிப்பொழுதுகளில் வைரமுத்து ஆனவர்கள் விட்டுப்போன draft-கள் என சைட் ட்ராக்கில் ஓடுவது; இதனூடே சீனியர்கள் அலம்பல், பாடங்களின் சுமை என இன்னொரு ட்ராக்கில் அது.
இந்த விடுதிகள் இருக்கே அது ஒரு பாரதவிலாஸ் மாதிரி. முழுக்கிறுக்கனும் இருப்பான். அரைக்கிறுக்கனும் இருப்பான். நம்மளை கிறுக்கன்னு சும்மா சொல்றவனும் இருப்பான் (இதுல என்ன விசேஷம்னா நாம அடுத்தவங்கள கிறுக்கன்னு சொல்லலாம்.. ஆனா அடுத்தவங்க நம்மள சொல்லிடப்படாதுங்கறது பாலபாடம்) இப்படி பலதரப்பட்ட மனிதர்கள். வாழ்க்கையில் நாம் சந்திக்கப்போகின்ற பலமுகங்களின் ஒரு digest. பள்ளிக்கும் இங்கேயும் என்ன வித்தியாசமென்றால் நம் பிரச்சனையை நாம்தான் தீர்த்துக்கொள்ளவேண்டும். இரு இரு எங்கப்பாவை கூட்டிகிட்டுவரேன்னு மிரட்டறதெல்லாம் இனிநடக்காது. 'காலேஜ் முடியட்டும் வெளியில வாடா'ன்னு பஞ்ச் டயலாக்தான் அங்கே செல்லுபடியாகும். கிளிகளும் நம்மை லுக் விடும். கூடவே பட்டாளத்தையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். நிஜமாவே காதல், கத்திரிக்காய், போதை, பழக்கமென பல்வேறு தடைகளை தாண்ட வேண்டும்.
சரி, இப்பதிவின் இல்ல சொல்லப்போனா கொத்ஸ்-ஸ்டைல் விவாதமேடையின் நோக்கமே 'விடுதியா வீடா? எது சிறந்ததுன்னு நினைக்கிறீங்க?' வீட்ல படிச்சா அம்மாப்புள்ளையாவே இருப்பாங்க. விடுதியில் படிச்சா ஜகதலப்பிரதாபனா ஆயிடுவாங்கங்கறது தொன்றுதொட்டு இருந்துவரும் நம்பிக்கை. இதுல எந்தளவுக்கு உண்மையிருக்கு? worldwiseனு ஆகறதுக்கு வீடு நல்லதா விடுதி நல்லதான்னும் நாளைக்கே இரண்டுமே சாத்தியமென்றால் உங்க பசங்களை எங்க விடுவீங்கன்னும் நாலுபேரு சொல்லுங்க. அப்புறம் ஒரு முடிவுக்கு வருவோம்.
அப்புறமா சுவாரசியமான கல்லூரி விடுதி /வீட்டில்(அப்படி எதுனாச்சும் இருந்தா... :) எந்த சைடுலயும் நான் இல்லை) அனுபவங்களையும் சொன்னா நல்லா பொழுதுபோகும்.
விடுதியா வீடா... தமிழா?
Subscribe to:
Post Comments (Atom)
37 Comments:
பின்னூட்டம் எதுவும் சரியா வரலைன்னா உடனே விவாத மேடைன்னு போட்டு சோடா குடிப்பீங்களே.
//worldwiseனு ஆகறதுக்கு வீடு நல்லதா விடுதி நல்லதான்னும் நாளைக்கே இரண்டுமே சாத்தியமென்றால் உங்க பசங்களை எங்க விடுவீங்கன்னும் நாலுபேரு சொல்லுங்க.//
கடைசி ரெண்டு வரி மேட்டர். இதுக்கு இம்புட்டு பெரிய பதிவா? நல்லாத்தான்யா எழுதறீங்க. அதுல வேற இதுக்குப் பதில் சொல்லாம போயிடப் போறாங்களேன்னு அனுபவத்தைச் சொல்லுங்கன்னு ஒரு சேஃப்டி நெட் வேற. நல்லாயிருங்கடா!
//அப்பா ஸ்க்ரினெல்லாத்தையும் தள்ள//
ஐயோ எல்லார் வீட்லயும் இதே கதையா? :)
//சுடச்சுட சூப்பர் இட்லியையோ மொறுமொறு தோசையோ அடுப்பிலிருந்து அப்படியே தட்டில்விழ அப்படியே டன் கணக்கில் உள்ளே தள்ளி//
ஊகூம்.. எல்லார் வீட்லயும் இதே கதையில்ல.. நானெல்லாம் வெறும் வயித்துல ஓடுவேன். பசிக்காது. ஒரு இட்லி கூட இறங்காது. (உஷ்.. இப்பல்லாம் எத்தனை டஜன் இட்லி இறங்குதுன்னு கேட்க்கப்படாது சொல்லிட்டேன்)
//கிளிகளும் நம்மை லுக் விடும்.//
ம்.. *இது* கதை! :-D
1. சில பசங்களின் விடுதி அனுபவங்களைக் கேட்டா.. நானெல்லாம் விடுதிக்கு அனுப்பறதே டவுட்.. :)
2. விடுதியில் இருக்கவங்க நம்ம டிபன்பாக்ஸை வேட்டியாடி விளையாடிருவாங்க. ரொம்ம்ம்ம்ப அனுபவப்பட்டிருக்கோம்ல!!
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் யோசிச்சுச் சொல்றேனே.
nalla oru thalaippu ithu..
aanaal, naan veeddula irunthapothu, engkamma ennai ippadiyellam vanthu ezuppiyathillai.
naane alarm vaiththu ezunthirichchu school poven. kaalai paddinithaan. :-( ammavum appavum avanga velaila busyaave iruppaangge..
appuram, college ponathum, naanum friendsum vaadagaikku veedu eduththu thamginom. athanaal, hostel vazhkkai illai. ellaam oru kooddu kudumbamaa irunthom. 4 varudam mudinju ippo final yearle irukken..
Hostel vazhkkai try pannalainna vaazhkkaiyile oru waste aagidumo? athaiyuim try pannuvomnnu intha varudam apply panninen. kidaiththathu. so, intha oru varudam hostel life. ennudaiya family home life, friends home life & hostel life le appadi ethuvum periya difference ille..
veeddule irukkum pothu appappo bil kaddurathukkum naanethaan poven. enna oru easynnaa, appa erkkanave ellam kanakku panni envelopele poddu koduththuduvaaru.
friedsudan thanggumpothu, naanthan chief tenant.. housemates dealingle irunthu house owner dealing varaikkum ellame naanthaan pannuven. maathaa maatham, billai kanakku panni, ovvoruththavangga evvalavu panam tharanumle irunthu ellaa poruppum en thalai mele. first week of the month, intha matterle busy.
hostel vanthathum, intha velai seyya avasiyam illaamal ponathu. class - hostel room.. ithuthaan vazhkkai.
avvappothu post officekkum, bankum Odura velai illai. ;-)
(College lable irukkumpothu intha pathivu padichathaal thamizil type seyya mudiyalai)
;-)
வீடுமில்லாம விடுதியுமில்லாம வெளிய வீடெடுத்து நண்பர்களா ஒரு பெரிய கூட்டமே தங்கீருக்கு இராமநாதன். அவங்களை நீங்க கணக்குல சேக்காததுக்கு உங்களை அவர்கள் சார்பா நான் கடுமையா கண்டிக்கிறேன்.
ஒரே ஒரு வருடத்தைத் தவிர நான் முழுக்க முழுக்க வீட்டுல இருந்து படிச்சவந்தான். ஆனால் விடுதி நல்லதுன்னு தோணுது. விடுதி அனுபவங்கள் கண்டிப்பா வேணும். நாலு பேரோட பழகுற வாய்ப்பு கிடைக்கும்.
அப்புறம் இன்னொரு விஷயம். ரொம்ப நாள் கழிச்சி என்னைப் போல சாமானியர்களுக்கும் புரியுற மாதிரி பதிவு போட்டிருக்கீங்க. ரொம்ப நன்றி. ரொம்ப ரொம்ப நன்றி.
//விடுதியில் படிச்சா ஜகதலப்பிரதாபனா ஆயிடுவாங்கங்கறது தொன்றுதொட்டு இருந்துவரும் நம்பிக்கை. //
நான் விடுதி கிடையாது.... மற்றவைகளை நீங்க தான் சொல்லனும்...
சாயங்காலம் வரேன்..
நன்றாகவே மலர்ந்திருக்கின்றன மலரும் நினைவுகள்.
விவாதித்து இதுவே சரி என்று முடிவுக்கு வருவது கடினம் தான். சேர்கின்ற சமயத்திலும் சூழலிலும் மாணவனின் குணங்கள்(personality), செல்கின்ற விடுதியின் 'பெயர்', பொருளாதாரம் என பல காரணிகள் முடிவை பாதிக்கும். ஒரு மகனை விடுதியில் விட்டாலும் அடுத்தவனை வீட்டிலிருந்தே அனுப்புவதும் நடக்கலாம்.
இந்தக் காரணிகளை புறம்தள்ளி சொல்லுங்க என்றால் தன்னம்பிக்கையை வளர்ப்பதாலும் , உலகை தன் பார்வையினால் எடைபோட உதவுவதாலும் விடுதிவாழ்வே மாணாக்கருக்கு நன்று. பழைய குருகுல வாசத்திலும் பெற்றோரைப் பிரிந்து தன் துணைவர்களுடன் பயில்வதே கல்விக்குச் சிறந்ததாக கருதப் பட்டது.
ரசிக்கும்படியாக எழுதியிருக்கீங்க...
//அப்புறம் இன்னொரு விஷயம். ரொம்ப நாள் கழிச்சி என்னைப் போல சாமானியர்களுக்கும் புரியுற மாதிரி பதிவு போட்டிருக்கீங்க. ரொம்ப நன்றி. ரொம்ப ரொம்ப நன்றி.
//
அதே அதே சபாபதே
எந்தக் காலத்துல இருக்கீங்கப்பா?
நடக்கறது 2007.
எழுதினவருக்கு இன்னும் கல்யாணம் ஆகலியோ?
இல்லை இன்னும் குழந்தை இல்லியோ?
இல்லாட்டி, இன்னும் சின்னப்புள்ளைங்கதான் இருக்கு போல!
இப்பல்லாம் உங்களை யாரும் வந்து கேக்க மாட்டாங்க.
அப்பா, நான் ஹாஸ்டல்லதான் படிப்பேன் அப்படீன்னு உங்க புள்ளைங்க கண்ண்டிஷன் போடற காலம் இது!
சரின்னு, மறு பேச்சு சொல்லாம சேர்த்துறணும்.
ஒரு செமெஸ்டர் முடிந்ததுமே, சரிப்பட்டு வரலை, நான் வீட்டிலேர்ந்தே போயிக்கறேன், ஒரு கார் மட்டும் வாங்கிக் கொடுத்திருங்கன்னு அடுத்தப்பல வரும்.
வீட்டிலேயே தனி ரூம், வர்றது, போறதைக்கேக்கக் கூடாது.
நீங்க ஒழுக்கா இருந்தீங்கன்னா, லேட்டாகும் போது ஒரு ஃபோன்கால் வரும்.
ரெண்டு திட்டு திட்டினீங்களோ... அதுவும் கட்!
கொஞ்சம் முழிச்சுக்கோங்கப்பா!
நடப்புக்கு தகுந்த மாதிரி பதிவு போடுங்க!
:))
கொத்ஸு,
//பின்னூட்டம் எதுவும் சரியா வரலைன்னா உடனே விவாத மேடைன்னு போட்டு சோடா குடிப்பீங்களே. //
காலம் கலிகாலம்! என்ன செய்யறது?
//கடைசி ரெண்டு வரி மேட்டர். இதுக்கு இம்புட்டு பெரிய பதிவா? //
நம்ம இஸ்டாண்டர்ட் டெம்ப்ளேட் இதுதான?
நல்லாயிருக்கோம்.. :))))
//எழுதினவருக்கு இன்னும் கல்யாணம் ஆகலியோ?//
எழுதினவர் பேச்சுலர் என்று நினைக்கிறேன் (வி.)எஸ்.கே!
சேதுக்கரசி,
//ஐயோ எல்லார் வீட்லயும் இதே கதையா? :)//
:))
//வெறும் வயித்துல ஓடுவேன்.//
காலையில சாப்பிடலேனா நானெல்லாம் டார்மண்ட் மோடுக்கு போயிடுவேன்... சாப்டாலும் அதே கததான்..ஹி ஹி..
//ம்.. *இது* கதை! :-D//
ஸ்டார் போட்டா குத்து இருக்குன்னு சொல்லிருக்காங்க. எதுனாச்சும் இருக்கா?
//
1. சில பசங்களின் விடுதி அனுபவங்களைக் கேட்டா.. நானெல்லாம் விடுதிக்கு அனுப்பறதே டவுட்.. :)//
ஹூம்.. அப்ப நீங்க வீடு சைடா.. சரி...
துளசியக்கா,
பெரிய டார்டாய்ஸா? கொளுத்துங்க கொளுத்துங்க.. மாமாவ பேசாம அந்தக்கம்பெனிக்கு மாறிக்கச் சொன்னா நமக்கு பதிவு போட ஈஸியா இருக்குமுன்னு நினைக்கிறேன். :))
மை பிரண்ட்,
ஹூம்..
//naane alarm vaiththu ezunthirichchu school poven.//
அது ரொம்ப கஷ்டம்.. இப்பவும் ஏழுமணிக்கு எழுந்துக்கணும்னா ஆறுமணிலேர்ந்தே ஸ்னூஸ்ல போடணும்.. ஹி ஹி..
//so, intha oru varudam hostel life. ennudaiya family home life, friends home life & hostel life le appadi ethuvum periya difference ille..//
விடுதிவாழ்க்கையில் தனி'கிக்'தான்.. ஆனாக்க இதுக்கெல்லாம் 'சத்'சங்கம் கிடைக்கனும்.. :P
//maathaa maatham, billai kanakku panni, ovvoruththavangga evvalavu panam tharanumle irunthu ellaa poruppum //
இது ரொம்ப கடிதான். அதுனாலதான் கணக்கு எழுதற வழக்கத்தையே விட்டாச்சு. எழுதினாத்தானே உதைக்கும்..
ஜிரா,
//வீடுமில்லாம விடுதியுமில்லாம வெளிய வீடெடுத்து நண்பர்களா ஒரு பெரிய கூட்டமே தங்கீருக்கு//
எல்லாத்துக்கும் புது கேட்டகரில இருக்கீங்க போலிருக்கு.. வேற ஒண்ணும் குத்து இல்லை.
//விடுதி அனுபவங்கள் கண்டிப்பா வேணும். நாலு பேரோட பழகுற வாய்ப்பு கிடைக்கும்.//
ஹூம்.. வீடு ஒண்ணு; விடுதி: ஒண்ணு.. ரைட்!
புலி,
//மற்றவைகளை நீங்க தான் சொல்லனும்...//
உகாண்டாவை கலக்கி வெற்றியுறுமலுடன் திரும்பிய எங்கள் தங்கம் புலியாரைப் பற்றி நான் சொல்ல வயதில்லை. வணங்குகிறேன். நன்றி. (இந்தப்பின்னூட்டத்தின் மூலம் ஒரு 'பழைய' கேள்விக்கு closure கொடுத்தாச்சு.. கொத்ஸு???)
//ஸ்டார் போட்டா குத்து இருக்குன்னு சொல்லிருக்காங்க. எதுனாச்சும் இருக்கா?//
நமக்கு HTML-லாம் ரொம்ப தெரியாது. போல்டு போடத் தெரியாம தான் ஸ்டாரு போட்டேன்.
மணியன்,
கண்டிப்பா நீங்க சொல்ற காரணிகளையும் சேர்த்துக்கணும்.
விடுதியின் பெயர்? கல்லூரியின் பெயர் போய் இதுவரைக்கும் வந்தாச்சா?
எப்படியோ நீங்களும் விடுதியோட பக்கம்.
கடைசி நிலவரம்:
விடுதி: 2, வீடு: 1
இசக்கிமுத்து,
நன்றி
// இராமநாதன் said...
ஜிரா,
//வீடுமில்லாம விடுதியுமில்லாம வெளிய வீடெடுத்து நண்பர்களா ஒரு பெரிய கூட்டமே தங்கீருக்கு//
எல்லாத்துக்கும் புது கேட்டகரில இருக்கீங்க போலிருக்கு.. வேற ஒண்ணும் குத்து இல்லை. //
உள்ள குத்துனாலும் வெளிய குத்துனாலும்...இந்தக் கேட்டகிரியிலோ கேக்காத கிரியிலோ நான் இல்லை. :-)
// //விடுதி அனுபவங்கள் கண்டிப்பா வேணும். நாலு பேரோட பழகுற வாய்ப்பு கிடைக்கும்.//
ஹூம்.. வீடு ஒண்ணு; விடுதி: ஒண்ணு.. ரைட்! //
ஹீ ஹீ ரைட்டு ரைட்டு
குமரா,
உமக்கே புரியலைன்னா நான் யார்கிட்ட போய் அழறது??
அது ஒரிஜினல் ISO:9001 குமரனுக்கு..
இது அசல் பதிவாளர் குமரனுக்கு,
இனிமே இப்படியே நான் - கான்ரவர்ஷியலா இருக்க முயற்சி செய்றேன். நன்னி.
என்னைய பொறுத்த வரைக்கும் விடுதி ஒரு பெரிய் புத்த போதி மரம் மாதிரி, எல்லாத்தையும் கத்துக்கொடுக்கும், அது நல்லதாவும் இருக்கும் கெட்ட தாவும் இருக்கும்! ஆக எல்லோருக்கும் விடுதி அனுபவம் தேவை, அப்ப தான் பக்குவம் கிடைக்கும், ஏன்னா ஒன்னுல்லை இரண்டு இல்லை, நாலும் இல்லை, அஞ்சு வருஷம் குப்பை கொட்டினவங்கிற முறையிலே சொல்லுறேன்! அப்பறம் ராகவன் சொன்ன மாதிரி நம்க்கும் விடுதியுமில்லாம, வீடுமில்லாம் வெளியிலே தங்கின அனுபவம் உண்டு! வேணும்னா என்னோட எனை ஆண்ட அரிதாரம் படிச்சுபாருங்க, கிளுகிளுப்பான கதை உண்டு!
பள்ளிப்பருவம் முடிஞ்சு,கல்லூரியிலும் மூணு வருஷம் முடிச்சுட்டு, எங்க வீட்டுப் பசங்க ஹாஸ்டலில் தங்கினாங்க.
நல்ல அனுபவம் தான்.
அங்கெ என்ன நடந்தது அப்படின்னு எல்லாம் தெரியாது.
ஆனால் அந்த நட்புகள் இன்னும்தொடருகிறது.
சத்சங்கம் தான் பதில். நல்ல நட்பு கிடைக்கணும் வீடோ,விடுதியொ.
வீ.எஸ்.கே,
//எழுதினவருக்கு இன்னும் கல்யாணம் ஆகலியோ?
இல்லை இன்னும் குழந்தை இல்லியோ?
இல்லாட்டி, இன்னும் சின்னப்புள்ளைங்கதான் இருக்கு போல!//
இதுல ஒரு நொந்த டோன் எனக்குத்தெரியுதே.. அது எனக்கு மட்டும்தானா?? :))
//வீட்டிலேயே தனி ரூம், வர்றது, போறதைக்கேக்கக் கூடாது.
நீங்க ஒழுக்கா இருந்தீங்கன்னா, லேட்டாகும் போது ஒரு ஃபோன்கால் வரும்.
ரெண்டு திட்டு திட்டினீங்களோ... அதுவும் கட்!
கொஞ்சம் முழிச்சுக்கோங்கப்பா!//
இதெல்லாம் பண்ற வயசுதான்னு நினைக்கிறேன்.. எனக்கும்.. இனிமே முயற்சிக்கணும்.. ஹி ஹி
//எழுதினவர் பேச்சுலர் என்ற//
இப்போதைக்கு ரொம்பவே பேச்சுள்ளவன் தான்.. :))
ஜிரா,
//இந்தக் கேட்டகிரியிலோ கேக்காத கிரியிலோ நான் இல்லை. :-)//
போக்கிரியா இல்லாதவரைக்கும் ஒகே!
:)))
//புலி,
//மற்றவைகளை நீங்க தான் சொல்லனும்...//
உகாண்டாவை கலக்கி வெற்றியுறுமலுடன் திரும்பிய எங்கள் தங்கம் புலியாரைப் பற்றி நான் சொல்ல வயதில்லை. வணங்குகிறேன். நன்றி. (இந்தப்பின்னூட்டத்தின் மூலம் ஒரு 'பழைய' கேள்விக்கு closure கொடுத்தாச்சு.. கொத்ஸு???) //
அட அநியாய ஆபிஸரே, என்னய்யா அக்கிரமம் இது..... உன்னய "இப்ப" தட்டிக் கேட்க ஆள் இல்ல, அதான் ஆட்டம் அமர்க்களமா இருக்கு...
அது என்ன ஒரு பழைய கேள்வி...
டாக்குடரு அய்யா
அடுத்த கும்மி இங்கயா???
///இப்போதைக்கு ரொம்பவே பேச்சுள்ளவன் தான்.. :))//
இன்னும் எத்தன நாளைக்குன்னு பாத்துருவோம்!!
வெளிவெளிகண்டநாதர்,
//விடுதி ஒரு பெரிய் புத்த போதி மரம் மாதிரி, எல்லாத்தையும் கத்துக்கொடுக்கும், அது நல்லதாவும் இருக்கும் கெட்ட தாவும் இருக்கும்! //
இதுதான் வீட்டுக்குவெளி கண்ட நாதரா???
கதயப்பத்தி என்ன சொல்றது? :P
வல்லிசிம்ஹன்,
//சத்சங்கம் தான் பதில்.//
கரெக்டான பாயிண்ட் இதுதான்.. எங்க இருந்தாலும் நல்ல மனுஷங்க கூட இருந்தா கெட்டுப்போக வாய்ப்புகள் குறைவுதான்..
புலி,
//அதான் ஆட்டம் அமர்க்களமா இருக்கு....//
ஹி ஹி.. போட்டது நானு.. வாங்குறது நீயி.. ஹெ ஹெ..
பழைய கேள்வியா.. ஹூம் யாரு பழசுங்கறது கேள்வியா? கொத்ஸுக்கே வெளிச்சம்..
பெருசு,
//டாக்குடரு அய்யா
அடுத்த கும்மி இங்கயா???//
நான் என்ன வேணாம்னா சொல்றேன்..??? :))
சேதுக்கரசி,
//இன்னும் எத்தன நாளைக்குன்னு பாத்துருவோம்!!//
அட.. இது வேற எரிச்சலா நிறைய பேருக்கு... :))))
//இன்னும் எத்தன நாளைக்குன்னு பாத்துருவோம்!!//
அட.. இது வேற எரிச்சலா நிறைய பேருக்கு... :))))//
"ரஷ்ய மருத்துவரின் கொட்டத்தை அடக்க..."ன்னு விளம்பரம் குடுப்போமா? :D
Post a Comment