233. அடுத்தவர் வீட்டிற்குள் எட்டிப்பாருங்கள்!

நம் வீட்டில் நடக்கும், இருக்கும் விஷயங்களை விட அடுத்தவர் வீட்டில் என்ன நடக்கிறது என்பது பலமடங்கு சுவையானது இல்லியா? அவன் என்ன சொன்னான், ஏன் சொன்னான், இந்த மாசம் ஏன் சம்பளம் பிடிச்சுட்டாங்க, ஈ.எம்.ஐ கட்ட முடியல இந்த மாசம் தொடங்கி அடுத்தவங்க என்ன செய்யறாங்கனு ஒக்காந்து அனலைஸ் பண்ணி அத நாலுபேர்கிட்ட பகிர்ந்துகிறதுல இருக்குற அல்ப சந்தோஷத்துக்கு ஈடு இணையே கிடையாது.

பக்கத்தாத்து அம்பியாகட்டும், எதிர்த்த வீட்டு முருகனாகட்டும் - இப்படி நம்மள மாதிரியான சாதாரண ஆளுங்க வீட்டுக்குள்ளயும் வாழ்க்கைக்குள்ளயும் தேவையில்லாம மூக்கை நுழைச்சு எட்டிப்பார்க்கும் நமக்கு சுளையா வந்து ஒரு பெரிய ஆளு வந்து மாட்டினா சும்மா விட்ருவோமா சான்ஸை?

விஜயகாந்த் ராதிகாவ வச்சிருந்தாரு, எம் சி ஆரு ஜெயலலிதா கூட சுத்தினாரு, கலைஞர் வேற என்னமோ செஞ்சாருன்னு எல்லாம் நேரா போட்டா கேஸ் வரும்கறதால வாரமலர் துணுக்குமூட்டை தொடங்கி இண்டிபெண்டன்ட் வரைக்கும் இந்த மாதிரியான செய்திகளை ஏதோ பெரிய ரீபஸ் போட்டியாட்டம் க்ளூ க்ளூவா கொடுத்து நம்மள பைத்தியம் அடிச்சிர்றாங்க. ஆனா பாருங்க, இதப் பத்தி குறை சொல்றேனே தவிர நானும் சான்ஸ் கிடச்சா படிக்காம விடறதில்லேங்குறது வேற மேட்டர்.

இப்படி அடுத்தவங்களப் பத்தி பேசுறது மனித இயல்புனு சும்மா போயிடமுடியுமா? அடுத்தவங்களோட தனிமனித சுதந்திரம்,தனிப்பட்ட வாழ்க்கைல நாம தலையிடுறோமேனு ஒரு நிமிஷம் கூட தோணமாட்டேங்குதே. பத்திரிகைகளுக்கு காசு பார்க்கணும். அதுக்குச் சொல்ற சாக்கு பொதுவாழ்க்கைல ஈடுபட்டா - all is fair game. எனக்கென்ன டவுட்டுன்னா நீங்களும் நானும் எதுனாச்சும் மனித நடமாட்டம் அற்ற தீவுல இருக்கிறோமா? பொதுவாழ்க்கைல இல்லியா? நாமும் சமூகத்துல ஒரு பொதுவெளியில தான இயங்கறோம். இன்னிக்கு கமலஹாசனோட மனைவிகள்னு ஜூவில கட்டுரை போட்டா நாக்கை தொங்கப்போட்டுகிட்டு படிக்கிற நாம, நம்மளோட எலும்புக்கூடுகள் வெளில வந்தா இதே ஆர்வத்தோட அடுத்தவங்க படிக்கறத விரும்புவோமா?

எலும்புக்கூடுகள் இல்லாம ஒருத்தரும் இல்லை. காந்தியும் நேருவும் என்ன புத்தர் வரைக்கும் இதே கதைதான். நமக்கு இருக்கும் மதிப்பு நாம இயங்கும் தளத்தில் நமது திறமைக்கானதாக மட்டுமில்லாமல் நமது தனிப்பட்ட வாழ்க்கையின் அடிப்படையில் இருந்தால்? திரும்பிப்பார்த்தால் எல்லாரும் ஏதாவதொரு தருணத்தில் சறுக்கியிருப்போம். இப்போது நினைத்தால் ஏன் அவ்வாறு செய்தோம்னு புரியாதுன்னாலும், கண்கெட்ட சூரிய நமஸ்காரம் பண்ணி புண்ணியமில்லேங்கிறதால தவறுகளை பீரோக்களில் இறுக்கமாக பூட்டிவச்சுட்டு தெனாவட்டா திரியிறோம். ஆனா பாருங்க, எப்படிப்பட்ட லாக்கருக்கும் ஒரு சாவி இருக்கு. அந்த சாவிக்கும் ஒரு டூப்ளிகேட் இருக்கு.

ஒரு பிரபலத்தின் நிலைமையில் நாம் இருந்தால் இம்மாதிரி விஷய(ம)ங்கள் வெளியாகும் போது ஏற்படும் மன உளைச்சலை இருந்து அனுபவித்தால் தான் தெரியுமோ என்னவோ? அதுவரைக்கும் ‘பத்திகிச்சு' தாராளமா படிச்சு அரிப்பத் தீத்துக்கலாம்.

--------------------
கீழ இருக்கும் படத்துக்காக ஒரு முன்னுரை எழுதணும்னு ஆரமிச்சு என்னவோ சீரியஸா போச்சு. எனக்கு வந்த மின்னஞ்சலின் படி இது மைக்ரோசாப்ட் நிறுவனத்தலைவர் பில் கேட்ஸோட ஆபீஸ் ரூமாம். இல்லேங்கிறேன் நானு. ஏன் இல்லேனு பத்துவினாடிகளுக்குள்ள கண்டுபிடிச்சு சொல்ற அனைவருக்குமே ‘வலையுலக தகவல் தொழில்நுட்ப வாழ்நாள் சாதனையாளர்/சாதனையாளினி' அப்படிங்கற பட்டத்தை கொடுக்கத்தயார். வலையுலக கைநாட்டுகள்னு சொல்லிக்கிற அல்லாருக்கும்,அரசியல்வாதியாட்டம் இன்ஷ்டண்ட் டாக்டர் பட்டம் மாதிரி தகுதியோட, இந்தப்பட்டத்தை போட்டு தகுதியை வளர்த்துக்க அருமையான சான்ஸ்.



என்ன கண்டுபிடிச்சாச்சா?

26 Comments:

  1. Anonymous said...

    There is a mac in the picture :-)


  2. rv said...

    அனானி,
    கரீட்டா பாயிண்ட புடிச்சிட்டீரு... வாழ்த்துகள்!

    பேரயாவது சொல்லிருக்கலாமே.. அனானிக்கு எப்படி பட்டம் கொடுக்கிறது? :))


  3. Unknown said...

    இதுவரைக்கும் அப்படித்தான் எல்லோரும் எண்ணிக் கொண்டிருக்கும்போது சஸ்பென்சை உடைத்ததை(அனானி ன்comment)தாங்கள் ...............??????


  4. Radha Sriram said...

    எனக்கு தெரியலயே??!!:)


  5. வல்லிசிம்ஹன் said...

    ஒரு வேளை அங்க கம்ப்யூட்டர் மாதிரி ஒண்ணுமே காணோமே அதனாலயா:)


  6. பினாத்தல் சுரேஷ் said...

    எங்க ஊர்லே ஒரு ஹோட்டல்காரர் காலைலே முதல்லே பக்கத்து டீக்கடையில டீ குடிச்சுட்டுதான் வேலைய ஆரம்பிப்பாராம்...


  7. rv said...

    நெல்லை கண்ணன்,
    இது அவரோட ஆபீஸ் இல்லைங்கறது obvious. ஏன்னு அனானி கரெக்டா புடிச்சிட்டாரு.. அவரோட கமெண்ட வெளியிட்டா சுவாரசியம் கெட்டுடுமே.. அதான்.. கொஞ்சம் வெயிட்டீஸ்...


  8. பினாத்தல் சுரேஷ் said...

    ஆமாம், இதைப்போய் இங்கே ஏன் சொன்னேன்?

    ராம்ஸு, கமெண்டு வேணாம்னா அழிச்சுரு!


  9. rv said...
    This comment has been removed by the author.

  10. rv said...

    இராதா,
    பெடரர் போயும் போயும் ராடிக்கிடம் தோத்த கொடுமைய நினைக்காம இருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டிருக்கு பாருங்க... :)))

    தெரியலியா??? வலையுலக கைநாட்டு பட்டத்தை வெற்றிகரமா தக்கவச்சுகிட்டீங்க... :P


  11. rv said...

    வல்லியக்கா,
    :))))))))


  12. ILA (a) இளா said...

    இந்தப் பதிவ போட்டு 10 நிமிஷம் கூட ஆவலை அதுக்குள்ள விமர்சனமா?


  13. Radha Sriram said...

    //இராதா,
    பெடரர் போயும் போயும் ராடிக்கிடம் தோத்த கொடுமைய நினைக்காம இருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டிருக்கு பாருங்க... :)))//

    ஆமாங்க ராம்ஸ்...மனசுக்கு ரொம்ப கஷ்டமாயிருச்சு..மார்டி பிஃஷ் அடுத்தது இவரு...

    http://anandvinay1.blogspot.com/2008/03/blog-post_28.html

    இங்கபோய் படமெல்லாம் பாத்தீங்களா??

    //வலையுலக கைநாட்டு பட்டத்தை வெற்றிகரமா தக்கவச்சுகிட்டீங்க... :P//

    நன்றி கும்புட்டுக்கரேன்...:):)


  14. Unknown said...

    1. அந்த Whale க்கு பக்கத்தில் "மனிதன்" proportion சரி இல்லை.
    2. அந்த மனிதனுக்கும் "பிங்க்" (Lord have mercy) சோஃபாவுக்கும் proportion சரி இல்லை.

    கைநாட்டு.


  15. Unknown said...

    ஹ்ம்! என் பின்னூட்டத்தை வெளியிட்டிருக்கீங்க. தப்பா:-(

    கீழ இருப்பது என் முதல் ரியாக்ஷன்; முன்னது யோசிச்சு எழுதியது.... எது சரின்னு பாக்கலாம்:

    1. anykey காணோம்.
    2. Windows உம் காணோம், Windows logoவும் காணோம்.
    3. Automatic Whale_Windows Defender program Activation காணோம்.
    4. Security Hack போல இந்த கண்ணாடியை உடைக்க பக்கத்திலேயே எதுவுமில்ல;)


  16. Unknown said...

    :-) Is that a MAC on the bottom right?


  17. பெருசு said...

    அண்ணா வுடுங்கண்ணா

    ஃபெடரர் 11 தடவை ஜெயிச்சுருக்காரு.

    ரோடிக் ரெண்டு தடவைதானே.

    இப்ப ரோடிக்கிட்ட ஜெயிச்சு இருந்தா அடுத்தது டேவிடெகோ கிட்டே ஜெயிக்கணும்.

    அடுத்தது நடால் கிட்ட ஜெயிக்கணும்.

    விட்டுக்குடுத்தாதானே வாழ்க்கை ரொம்ப சுவாரசியமா இருக்கும்.

    ஃபெடரர் ஒவ்வொரு தடவை தோக்கும்போதும்,இதையே சொல்லி
    சொல்லியே மனச தேத்திக்க வேண்டியதா இருக்கு.


  18. rv said...

    பெனாத்தலார்,
    எதுக்கு இப்ப இங்க சம்பந்தமில்லாம பின்னூட்டம்??? :P

    ஆனாலும் அழிக்கமாட்டோமே!


  19. rv said...

    இளா,
    கிசுகிசு போஸ்டுக்கும் எனக்கும் என்னப்பா சம்பந்தம்???

    இல்ல மேட்டர் பத்தி சொல்றீரா? அதெல்லாம் விஷயமேயில்ல. துணுக்குமூட்டை, பத்திகிச்செல்லாம் நாம படிக்கலேன்னா அப்புறம் யாரு படிப்பாங்க..


  20. வல்லிசிம்ஹன் said...

    நானும் பத்திக்கிச்சு எல்லாம் படிக்கிற ஆளுதான்.
    //வலையுலக கைநாட்டுகள்னு சொல்லிக்கிற அல்லாருக்கும்,அரசியல்வாதியாட்டம் இன்ஷ்டண்ட் டாக்டர் பட்டம் மாதிரி தகுதியோட//
    எனக்கேன் நீங்க காநாட்டு பட்டம் கொடுக்கலை. ஆக்ஷேபிக்கிறேன்:)


  21. rv said...

    இராதா,
    பார்த்தேன் பார்த்தேன்..

    இதவிட நடால் படங்கள் இன்னும் நல்லா இருந்ததா நினைவு. அவரோட ப்ளிக்கர்ல பாருங்க.

    என்ன செய்ய.. ஆஸ்திரேலியாலேர்ந்து கிரகசேர்க்கை சரியில்லை...


  22. rv said...

    கெக்கேப்பிக்குணி,
    கொஞ்சம் கொஞ்சம் ஓவரா லேட்டரல் திங்கிங் பண்ணி கடசியில கரெக்டா பாயிண்ட பிடிச்சிட்டீங்க.

    'வலையுலக தகவல் தொழில்நுட்ப வாழ்நாள் சாதனையாளர்/சாதனையாளினி' பட்டத்தை உங்களுக்கும் அனானிக்கும் வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்!


  23. rv said...

    பெருசு,
    //விட்டுக்குடுத்தாதானே வாழ்க்கை ரொம்ப சுவாரசியமா இருக்கும்.//

    முடியலய்யா முடியல.. இனிமே இந்த பெடரர் ஜெயிக்கிற வரைக்கும் அழுவாச்சி வேணாம்னு பாக்கறேன்.

    ஜெயிக்கலேன்னாலும் GOAT அவர் தான் கிறது வேற விஷயம். அந்த மட்டும் சந்தோஷம்.

    நன்னி.


  24. rv said...

    வல்லியக்கா,
    //எனக்கேன் நீங்க காநாட்டு பட்டம் கொடுக்கலை. ஆக்ஷேபிக்கிறேன்:)//

    கேட்டு வாங்கிக்கிறீங்களா?

    காநாட்டு பட்டத்துல எதுனாச்சும் அட்வாண்டேஜ் இருக்கா என்ன? இருந்தா நானும் போட்டுப்பேனே...


  25. PPattian said...

    வலது ஓரத்துல ஒரு ஆப்பிள் கம்ப்யூட்டர் (iMac'ஓ ஏதோ ஒண்ணு)இருக்கே..


  26. துளசி கோபால் said...

    என்னுடைய 'சொந்த' பட்டத்தை இப்படி வழிப்பிள்ளையார்களுக்குக் கொடுப்பதை முதலில் நிறுத்தும்.


    திமிங்கிலம் இருக்கும் இடத்தில் ச்சின்ன மீனா? :-)))))


 

வார்ப்புரு | தமிழாக்கம்