228. மோனிகா... ஓ! மோனிகா!

'எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது. எது நடக்குமோ அதுவும் நன்றாகவே நடக்கும்'?

90களின் ஆரம்பம். பள்ளிக்காலத்தில் மோனிகாவை பற்றி பேசாத நாளென்று ஒன்று இருந்ததாக நினைவில்லை. அப்படியொரு மோகம் மோனிகாவின் மீது.

1991,92,93 ஆஸ்திரேலியன்;
1990,91,92 - ப்ரென்ச்;
1992 - விம்பிள்டன் ரன்னர் அப்;
1991,92 - யு.எஸ்


என்று ஒன்பது கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள். இத்தனைக்கும் வயது இருபதுகூட ஆகவில்லை. ஸ்டெபி கிராபின் அரியணையில் ஏறத்தகுதி வாய்ந்த பெண்கள் டென்னிஸின் அடுத்த சூப்பர் ஸ்டார் கிடைத்துவிட்டார் என்ற சந்தோஷமான தருணத்தில்...

ஏப்ரல் 30,1993 - ஹாம்பர்கில் ஸ்டெபியின் மீது வெறி பிடித்த மனநோயாளி ஒருவனால் கோர்டின் நடுவில் அத்தனை பேரின் முன்னிலையிலும் தோள்பட்டைக்கு இடையில் கத்தியால் குத்தப்பட்டார் மோனிகா செலஸ். ஜெர்மனியில் குற்றவாளியை மனநோயாளி என்ற காரணத்தால் இரண்டு வருடத்திற்கு மனநோய் காப்பகத்தில் இருக்கச்சொல்லி தண்டனை விதித்தார்கள்.

இருபதாம் வயதில், பெண்கள் டென்னிஸ் உலகில் நம்பர் 1ஆகத்திகழ்ந்து, அவ்வருட ஆஸ்திரேலிய ஓபனைக் கைபற்றி பிரெஞ்சையும் கண்டிப்பாக வென்றிருக்க வேண்டிய சூழலில், குண்டர் பார்ச் என்ற நோயாளியின் செயலால் மோனிகாவின் career அவுட். எமோஷனலாகவும், உடல்ரீதியாகவும் அவர் இதிலிருந்து மீண்டு வர இரண்டு வருடங்கள் பிடித்தது. அதற்கப்புறம் வந்து 1996 ஆஸ்திரேலிய ஓபனை கைபற்றினாலும் பழைய பார்முக்கு திரும்பவே முடியவில்லை.

மார்டினா ஹிங்கிஸை எனக்கு பெர்ஸனலாக அவ்வளவாக பிடிக்காது என்பது ஒரு காரணமென்றாலும் (ட்ஜோக்கரைப் போன்ற ஆட்டிட்ட்யூட்), மோனிகாவிற்கு இந்த கொடுமை நிகழாமல் இருந்திருந்தால் மார்டினா 90-களின் பிற்பாதியில் பெண்கள் டென்னிஸை இவ்வளவு டாமினேட் செய்திருக்க முடியாது என்பது என் ஆணித்தரமான எண்ணம்.

பலருக்கு ஒரு வாழ்நாள் பிடிக்கும் காரியங்களை இருபது வயதிற்குள் செய்து வெற்றிகண்டு, ஒரு நோயாளியின் செயலால் அனைத்தையும் தொலைத்து நின்ற மோனிகாவிற்கு என்ன ஆறுதலோ ஊக்கமோ கொடுக்கமுடியும்?

pro டென்னிஸிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்று மோனிகா அறிவித்ததைப் படித்தபின் அந்த இனிமையான 90களுக்கு ஒரு நிமிடம் சென்று, கோர்டில் இவர் ‘அஹெம்' என்று கத்துவதில் தொடங்கி, ஹாம்பர்க் நிகழ்வுக்கு பிறகு எல்லாமே ஒரு கனவாய் முடிந்தது நினைத்து 'what could have been?' என்ற உபயோகமற்ற கேள்வி வந்து உருத்துகிறது.

Images © Brittanica Blog, Sports Illustrated

10 Comments:

  1. மெளலி (மதுரையம்பதி) said...

    //அந்த இனிமையான 90களுக்கு ஒரு நிமிடம் சென்று, கோர்டில் இவர் ‘அஹெம்' என்று கத்துவதில் தொடங்கி, ஹாம்பர்க் நிகழ்வுக்கு பிறகு எல்லாமே ஒரு கனவாய் முடிந்தது நினைத்து 'what could have been?' என்ற உபயோகமற்ற கேள்வி வந்து உருத்துகிறது//

    ரீப்பீட்டே..........


  2. உண்மைத்தமிழன் said...

    ஸ்டெபிகிராபின் பெர்ஸனாலிட்டி மற்றும் ஸ்டைலில் சொக்கிப் போய் இருந்தபோது பேயாய் உள்ளே நுழைந்தவர் மோனிகா.. போட்டியில் மோனிகா வெளிப்படுத்திய சவுண்ட் பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பினாலும் அது அவருடைய ஸ்டைல் என்று எடுத்துக் கொண்டு போகலாம்..

    அந்தக் கத்திக்குத்து சம்பவம் வருததத்திற்குரியதுதான்.. அப்போது அவர் நல்ல பார்மில்தான் இருந்தார்.. இப்படித்தான் நடக்க வேண்டும் என்று இருந்திருக்கிறது.. நடந்து விட்டது என்று தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்.

    மார்டினா ஹிங்கிஸை பிடிக்காது என்று எனக்குப் பிடிக்காத ஒரு வார்த்தையைச் சொல்லிவிட்டீர்கள்.. ஸாரி..


  3. கப்பி | Kappi said...

    ஹ்ம்ம்ம்.. What could have been..



    //உபயோகமற்ற கேள்வி வந்து உருத்துகிறது.//

    தலைவி பற்றிய அருமையான பதிவில் இது மட்டும் கொஞ்சம் உறுத்துகிறது :))


  4. Radha Sriram said...

    ஒரு fரென்ச் ஓபென் fஐனல்ஸ்ல பால் பாய்ஸ்க்கும் பால் கேர்ல்ஸுக்கும் நன்றி சொல்லி அந்த ட்ரெண்டையும் ஆரம்பித்து வைத்தவர் மோனிகா.ஒரு நல்ல ஜெண்டில்வுமன்...மிஸ் பண்ணுவோம் அவர..

    அப்பரம் ஒரு விஷயம்..paris hilton ஓட ஒரு படம் hottie or naughty IMDb ல worst top 10 mvies made ல முதல் இடத்தை புடிச்சிருக்காம் .:):)

    உங்க பதிவுக்கு மேல ஏதோ பாரிஸ் பேர பாத்தேனா சரி இதையும் உங்க காதுல போட்டு வைக்கலாமேன்னு.:)
    (ஹைய்யோ ஏந்தான் இப்படி junk சேகரிப்பேன்னே புரியல!!)


  5. இலவசக்கொத்தனார் said...

    1) எனக்கு மோனிகா செலஸை பிடிக்காது.
    2) முக்கியமாக அவர் முக்கும் சத்தத்தை!!
    3) ஆனாலும் அவருக்கு நடந்தது ஒரு பெரிய கொடுமை.
    4) அதற்கு பின் அவர் இவ்வளவு நாள் ஓய்வு பெறவில்லை என்பதே எனக்கு செய்திதான்.
    5) அடுத்து அவர் செய்ய இருக்கும் வேலைகள் சிறக்க நம் வாழ்த்துக்கள்
    6) ஹிங்கிஸ் எனக்குப் பிடிக்கும்
    7) அவருக்கு இருந்த திறமைக்கு அவர் சாதித்த அளவு பெரும் ஏமாற்றம்தான்.
    8) எத்தனை பேர் வந்தாலும் என்னளவில் சிறந்த டென்னிஸ் (ரென்னிஸ்?) வீராங்கனை வேறொரு மார்டினாதான்!


  6. Sridhar Narayanan said...

    //8) எத்தனை பேர் வந்தாலும் என்னளவில் சிறந்த டென்னிஸ் (ரென்னிஸ்?) வீராங்கனை வேறொரு மார்டினாதான்!//

    உங்க வயசுக்கு ஏத்தவரைதான் சொல்லியிருக்கீங்க கொத்தனார் தாத்தா... ஆனா பாருங்க கிறிஸ் எவர்ட்டை எல்லாம் விட்டுட்டீங்க போல :-p

    ஸ்டெபி, ஸபாடினி, மார்டினா ஹிங்கிஸ், அன்னா கோர்னிகாவ் (இவருடைய படங்களை சேகரிப்பது ஒரு காலத்திய பொழுதுபோக்கு), மேரி பியர்ஸ், சானியா மிர்ஸா இப்படிதான் நாங்க டென்னிஸ் (?!) விளையாட்டை ரசிச்சிருக்கோம். ஏனோ மோனிகா அந்த லிஸ்ட்ல வரவேயில்லை.

    ALl the best for her future endeavours.


  7. rv said...

    மதுரையம்பதி,
    ரிப்பீட்டேவுக்கு நன்னி!


  8. rv said...
    This comment has been removed by the author.

  9. rv said...

    உண்மைத்தமிழன்,
    //இப்படித்தான் நடக்க வேண்டும் என்று இருந்திருக்கிறது.. நடந்து விட்டது என்று தேற்றிக் கொள்ள வேண்டியதுதான். //
    ஹூம்..

    மார்டினா ஹிங்கிஸ் பிடிக்குமா... :))


  10. உண்மைத்தமிழன் said...

    பிடிக்குமாவா..?

    சபாடினி, ஸ்டெபிக்கு பிறகு ஆட்டத்தில் நளினம் தெரிந்தது ஹிங்கிஸிடம்தான்..


 

வார்ப்புரு | தமிழாக்கம்