237. தசாவதார ஓப்பரா; கேபிள் வழியாக 500$க்கு கடவுள்

தசாவதாரத்தைப் பார்த்து அலுப்புத்தட்டுகிறதோ இல்லையோ அதைப்பற்றிய விமர்சனங்களையும் அப்படம் தரும் கோணல்களையும் கோணங்களையும் குவாண்டத்தை உடைக்கும் தியரிகளையும் இன்னமும் முக்கியமாக ஆதிக்க மேட்டிமைத்தனத்தையும் பற்றி The World+Dog® எழுதித்தள்ளிய/தள்ளிக்கொண்டிருக்கும் உப்புமாக்களைப் பார்த்து அலுத்துவிட்டது. இப்படி fanbois/விசிலடிச்சான்குஞ்சுகள்(கமல் / ரஜினி) களின் முக்காச் சரக்கடித்து முழுவதும் ப்ளாட்டாகாமல்/'தெளிவாகவும் அல்லாமல்' (இரண்டும் ஒன்றென்று தமிழ்கூறு நல்லுலகம் சர்டிபிகேட் கொடுப்பினும்) நம் பிராணனை வாங்கும் விதமான 'தி ஒன் & ஒன்லி தமிழகம் கண்ட ரோசர் ஈபர்ற்கள்' மேலும் நம் கழுத்தையறுக்காமல்: அந்த தசாவதாரத்து தெய்வத்தின் ஒரு அவதாரமோ அவரது தாரங்களில் ஒன்றோ கருணை காட்ட வேண்டுகிறேன். பார் தி ரிக்கார்ட், இன்னும் படம் பார்க்கவில்லை (அதாவது றோரென்ற்களில் நல்ல காப்பி வரவில்லை எனக் கொள்க - கொத்ஸ் கவனிக்க). நிற்க. அல்லது அமர்க.

-----------------------------------
நெருப்புநரி 3.0 வெளியிட்ட தினத்தன்று ஏழு மில்லியன் நரியார்வலர்கள் தரவிறக்கம் செய்துகொண்டதாக சொல்லப்படுகிறது. நெருப்புநரியின் ஆர்வலனாக 2.0ல் ஆரம்பித்த என் பந்தம் இன்னும் தொடருமா என்பது அந்த ஏழு மில்லியனில் எத்துணை இங்கே இயங்கும் Nouveau பதிவர்களோ/கிழபாடு (சீனியர்) பதிவர்களோ 3.0 இறக்கி அவித்தோ பாவித்தோ வருவதில் நரகம்/முக்தி அடைந்தார்கள் என்பதைப் பொறுத்தது. எனவே 3.0-ஐ தனியாக நிறுவி வைத்திருக்கிறேன். 2.0-ல் நான் பயன்படுத்தும் ஆட்-ஆன்கள் 3.0ல் இன்னும் வரவில்லையென்பதும் ஒரு காரணம். முக்கியமாக IETabs. ஆனால் 3.0-ல் அதற்கு வேலையிருக்காது என்பது போலத்தோன்றுகிறது. வழக்கமாக 2.0 கடித்துத்துப்பும் பல பக்கங்கள் 3.0ல் சரியாகத்தெரிகின்றன. ஒரு நாள் முழுக்க ஓடவிட்டால், கணினியில் மொத்தமாக இருக்கும் 1.5 கிகா மெமரியில் பாதியாவது தனக்கே என்று 2.0 சீன் போடுவது வழக்கம். 3.0 எப்படி என்று பயனர்கள் சொன்னால் நலம். தசாவதாரமே கதி என்று கிடக்காமல் இதுபோன்ற வாழ்வாதார பிரச்சனைகளைப்பற்றியும் அறிந்துகொள்வோம் வகையான பதிவுகள் எழுதி ‘எழுதிருக்கேன்.. படிச்சுட்டு போ' என்றோ 'please stay long enuf to please her at least tonite' வகை பின்னூட்ட விளம்பரங்களோ தரவாவது வேண்டுகிறேன். மற்றபடி நானெல்லாம் ஒரு சீனியர்/பாடு என்ற எண்ணத்தில் வந்து தங்கள் நேரத்தையும், ஒரு கமெண்டாவது வந்ததே என்று பார்த்து என் ஏமாற்ற வயிற்றெரிச்சலையும் சம்பாதித்துக்கொள்ளவேண்டாம்.

எனிவே அதுவரை ஓபரா 9.5/நெ.ந 2.0. ஓபரா 9.5 நன்றாகவே இருக்கிறது. இருந்தாலும் comfort level இல்லை. சித்திரமும் கைப்பழக்கம் கதையாகக்கூட இருக்கலாம். குறிப்பிட்டு ஓபராவில் பக்/தவறு என்று சொல்வதற்கேதுமில்லை. ஆனால் ஆட்-ஆன்கள் பற்றாக்குறை. முக்கியமாக noscript மற்றும் torbutton வகையறா... (torbutton பற்றி அறியாமல் தமிழ்வலையுலகத்தில் அலையும் திக்கற்றவர்களுக்கு விரைவில் ஞானோதயம் கிடைக்க இறைவன் சித்திக்கட்டும்). நிற்க அல்லது அமர்க.
------------------------------------
500$க்கு டெனான் கேபிள் ஒண்ணை விக்குது. அதன் மூலமா கடவுளே தெரியிறார்னும், கேபிளை தலைகீழா பிக்ஸ் பண்ணினா சாத்தான் தெரியிறார்னும் நெட்ல திமிலோகப்பட்டுக்கிடக்குது. பசையுள்ளவர்கள் வாங்கிப்பாத்து சொன்னா நானும் காஞ்சிப்பெரியவர்/பங்காரு அடிகளார்/சத்யசாய்/பூங்கோதை போன்ற திசைகளில் இனி தலைவக்கணுமா வேணாமானு ஒரு முடிவு காண யூஸ் ஆகும். இல்ல My God Can Beat the Shit out of your God © (God = கலைஞர்/கமல் AND/OR மகாவிஷ்ணு/அல்லா/ஹோலி பாதர்/பெரியார்) வகையறா பிரச்சாரமாவான்னாவது தெரிஞ்சாகணும் எனக்கு.

பொழுது போகலைன்னா அங்கே அமேஸானிலிருக்கும் பின்னூட்டமெல்லாம் படிக்கலாம். தமிழ்வலையுலக கமெண்டுகள் (இப்பதிவிற்கும் சேர்த்துதான்) போக வேண்டிய தூரம் அதிகம் என்பது புரியும்.
------------------------------------
ராயல் கேபிள் - எனக்கு புல்லரிக்குது. பேரக்கேட்டாலே. சாலப்பொருத்தம். ராயல்டிக்கு இருக்குற க்ளாசு மாஸுக்கு வருமா? இந்த க்ளாசும் மாஸும் எப்படி மேனேஜ் பண்றதுனு தெரியாம அந்த இங்கிலாந்து எலிசபெத்தே "என் பாட்டனார் ஒரு பிற்படுத்தப்பட்டவராக இருந்தாலும் ஐந்து முறை ஆட்சிக்கட்டிலிலே அமர்ந்திட்டேனே - நாடொன்றே - நம்மக்களின் ஏறுமுகம் காணும் ஒரே நோக்கத்தோடுதானே - ஆளத்தகுந்த வாரிசுகளை நான் மட்டுமின்றி என் வாரிசுகளும் அல்லும் பகலுமாய் உருவாக்கிக்கொண்டிருக்கின்றோம்"ன்னு கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய், தில்லாய் சொல்லமுடியுமா?

தெகச்சு போயி கிடக்கேன் நானு. ஒரு பங்கா பிரிச்சு மன்னார்குடிக்கு குடுக்கறத விடவும் மொத்தத்தையும் கடலூர்/திண்டிவனதுக்கு அடிமைனு சொல்றத விடவும் அவங்கவங்க ஏரியாவுக்கு அவங்கவங்க (அதாவது அவங்க அவங்க) ராஜானு சொல்றது உத்தமம் இல்ல?
______________________________
1. எழுத மேட்டரில்லை என்று சொல்வது writer's block - இது கட்டிவைத்து உதைக்கக் காத்திருக்கும் சிலரின் குறைபட்ட டிக்‌ஷனரிகளை அப்டேட் செய்துகொள்வதற்காக.
2. தசாவதாரம் இந்தியா போய் பார்க்கவேண்டியதுதான் (அதுவரைக்கும் ஓடினால்)
3. ரோயலுக்கும் எனக்கு எந்த சம்பந்தமுமில்லை.

36 Comments:

  1. இலவசக்கொத்தனார் said...

    //posted by இராமநாதன் at இரவு 23:02 //

    யப்பா சாமி, கண்ணைக் கட்டுது. இனிமே இப்படிப் பாதி ராத்திரிக்கு எல்லாம் எழுதாம நல்லா தெளிஞ்ச பின்னாடி, சாரி விடிஞ்ச பின்னாடி பதிவு போடு. அப்பவாவது புரியுதான்னு பார்க்கலாம்.


  2. Sridhar Narayanan said...

    //றோரென்ற்களில் நல்ல காப்பி வரவில்லை//
    //torbutton பற்றி அறியாமல் தமிழ்வலையுலகத்தில் அலையும் திக்கற்றவர்களுக்கு //

    திக்கற்றவர்களுக்கு DVD கிடைக்கும் தல. ஆனா 'வெள்ளத்தில' ரொம்ப விளையாடாதீங்க. ©கோப்பிறைற்© சட்டம் சும்மா இருக்காது ஆமாம் :-))

    ஒழுங்கா டிவிடி வாங்கிப் பாருங்க தல :-)

    //My God Can Beat the Shit out of your God © //

    நல்ல விசயம்தானே. அல்லவை தேய அறம் பெருகும் இல்லையா?

    //ஒரு பங்கா பிரிச்சு மன்னார்குடிக்கு குடுக்கறத விடவும் மொத்தத்தையும் கடலூர்/திண்டிவனதுக்கு அடிமைனு சொல்றத விடவும் அவங்கவங்க ஏரியாவுக்கு அவங்கவங்க (அதாவது அவங்க அவங்க) ராஜானு சொல்றது உத்தமம் இல்ல?//

    என்னமோ அரசியல் பேசறீங்கன்னு தெரியுது. நான் புவியியல்ல கொஞ்சம் வீக்கா இருக்கறதனால இந்த அரசியல் இப்ப புரியாது போல :-))


  3. கிரி said...

    கிண்டல் அடிக்கவில்லைங்க.

    உண்மையிலேயே உங்கள் பதிவு தெளிவில்லாமல் இருக்கு


  4. சின்னப் பையன் said...

    //ராயல் கேபிள் - எனக்கு புல்லரிக்குது. பேரக்கேட்டாலே.//

    ஏங்க ராயல் சேலஞ்ச்னு படிச்சிட்டீங்களா.....


  5. பினாத்தல் சுரேஷ் said...

    ஒரு சேஞ்சுக்கு, பின்னூட்டத்தை விமர்சிக்கிறேனே!

    @கொத்தனார்: //நல்லா தெளிஞ்ச பின்னாடி// இதற்கும், //இது கட்டிவைத்து உதைக்கக் காத்திருக்கும் சிலரின் குறைபட்ட டிக்‌ஷனரிகளை // இதற்கும் சம்மந்தமில்லை என்று மாரியாத்தா மீது சத்தியம் வைத்து,துண்டு போட்டு தாண்டத் தயாரா?

    @ஸ்ரீதர்: //நான் புவியியல்ல கொஞ்சம் வீக்கா இருக்கறதனால இந்த அரசியல் இப்ப புரியாது போல// இது அரசியல்னு புரிஞ்சுகிட்டதே பெரிய விஷயம். உமக்கா அரசியல் தெரியாது? நுண்ணரசியல் பார்ட்டியாச்சே நீர்!

    @கிரி: //உங்கள் பதிவு தெளிவில்லாமல் இருக்கு// சேச்சே அதெல்லாம் டாக்டர் தப்பா எடுத்துக்க மாட்டார். இப்ப படிச்சா அவருக்கே புரியாமல் போகக்கூட வாய்ப்பிருக்கு :-)

    @ச்சின்னப்பையன்: //ராயல் சேலஞ்ச்னு படிச்சிட்டீங்களா// ப இல்லை கு.


  6. rv said...

    கொத்ஸு,
    //நல்லா தெளிஞ்ச பின்னாடி, சாரி விடிஞ்ச பின்னாடி பதிவு போடு.//
    ... பின்னாடி பதிவு போட முடிஞ்சா மாட்டேனா?

    இப்ப என்ன பிரியல உமக்குனு சொன்னா, வெளக்க ஸ்ரீதர் வருவாரு - வெளுக்க பெனாத்தலார் வருவாரு.


  7. rv said...

    ஸ்ரீதர்,
    அது எந்த ஊர்ல சார்? திருட்டு டிவிடில படம் பார்க்கலாம், றோரென்ற்களில் பார்க்கக்கூடாது? :))

    'tor' button பத்தி இங்கே... தமிழ்ல வலைப்பதியறதுக்கு ஈகலப்பை நிறுவுறீங்களோ இல்லையோ இத முதல்ல நெருப்புநரியில ஆட்-அவும். :)

    சதா நுண்ணரசியல் பேசிப்பேசி சாதா அரசியலே மறந்துபோச்சா?


  8. rv said...

    கிரி,
    //உண்மையிலேயே உங்கள் பதிவு தெளிவில்லாமல் இருக்கு//

    இப்பல்லாம் இந்த மாதிரி பின்னூட்டம் வந்தாதான் பதிவு அடுத்த தளத்துக்கு போயிருக்குன்னே அர்த்தம்.

    அதுனால காம்ப்ளிமெண்டுக்கு நன்னி! :))


  9. rv said...

    ச்சின்னப்பையன்,
    //ஏங்க ராயல் சேலஞ்ச்னு படிச்சிட்டீங்களா.....//

    பெனாத்தலார் எனக்கு முன்னாடியே வந்து ஒரு சிறு திருத்தம் பண்ணிட்டாரு.. இப்ப புரிஞ்சிருக்குமே. :P


  10. கிரி said...

    //இப்பல்லாம் இந்த மாதிரி பின்னூட்டம் வந்தாதான் பதிவு அடுத்த தளத்துக்கு போயிருக்குன்னே அர்த்தம்.//

    :-)


  11. Anonymous said...

    //இப்ப என்ன பிரியல உமக்குனு சொன்னா, வெளக்க ஸ்ரீதர் வருவாரு - வெளுக்க பெனாத்தலார் வருவாரு.//

    எனக்கு பதிவே மொத்தமா புரியல! ஸ்ரீதர், வெளக்கவும்... பெனாத்தலாரே, வெளுக்கவும்...கொத்தனாரே,அலசவும் ஆவண செய்யுங்க


  12. ramachandranusha(உஷா) said...

    ஒரு கை குறைதேன்னு பார்த்தேன் :-)


    //C'mon.. You can do it.. you can do it.. you can do it.. do it... do it.. do it.. do it.. do.. do.. do.. Just Do it already! will ya?//

    என்னடா இது? இங்கீலீஷ் படத்துல பிரசவ சீன் டயலாக்கு மாதிரி, சகிக்கலை :-(


  13. Anonymous said...

    //இப்பல்லாம் இந்த மாதிரி பின்னூட்டம் வந்தாதான் பதிவு அடுத்த தளத்துக்கு போயிருக்குன்னே அர்த்தம்.//

    இது எந்த விதமான கயமைத் தனமுன்னு அந்த கொத்தனாருக்குத் தான் வெளிச்சம் ;-)


  14. இலவசக்கொத்தனார் said...

    பெனாத்தல் எதோ கொஞ்சம் புரிய வெச்சதாலா இன்னும் ஒரு பின்னூட்டம்.

    1) றோரென்ற் பற்றி எங்க ஊர்க்காரர் ஸ்ரீதர் சொன்னதைக் கொஞ்சம் நினைத்துக் கொள்ளவும்.

    2) நெ.நரியில் நான் முன்பு வைத்திருந்த ஏட் ஆன்கள் தேவைப்படவில்லை. ஆனால் அந்த மெமரி சாப்பிடுவது குறைந்ததாகத் தெரியவில்லை. :(

    3) உம்ம பிசாத்து 500 டாலர் கேபிளுக்கு பதிலா இங்க கொஞ்சம் பாருங்க.

    http://gizmodo.com/gadgets/speaker-cables/7250-speaker-cables-turn-you-into-a-dancin-fool-302478.php

    ஆனா உம்ம பின்னூட்டங்கள்தான் சூப்பர்.

    4) அடுத்த மேட்டர் பத்தி சொன்னா மூவுருளைத் தானியங்கி வருமாம். அதனால அப்பீட்.

    டிஸ்கி1: நீங்க சொல்வது எல்லாம் எழுதறதை எழுதிட்டு பின்னூட்ட பெட்டி எல்லாம் மூடிக்கிட்டு இருக்கும் எழுத்தாளப் பெருமக்களுக்கு. நம்மை மாதிரி வலைப்பதிவர்களுக்கு எல்லாம் எப்போ சொன்னாலும் எழுத மேட்டர் இருக்கு. தெரியலைன்னா எழுத மாட்டேன்னு சொல்லிட்டு நாளுக்கு நாலு பதிவு போடறவங்க பக்கம் ஒரு ரவுண்ட் போயிட்டு வாங்க.

    டிஸ்கி2: நீர் போகும் போது ஓடும். அப்படி ஓடலைன்னாலும் பார்க்க உமக்கு வழியே தெரியாது இல்லையா...

    டிஸ்கி 3: நீர் சொன்னாச் சரிதான்.


  15. rv said...

    பெனாத்தலார்,
    //இப்ப படிச்சா அவருக்கே புரியாமல் போகக்கூட வாய்ப்பிருக்கு :-)//
    பதிவு போட உசுப்பேத்திட்டு ராயல் சேலஞ்சுக்கு நோட்ஸ் கொடுக்கறீரா?


  16. rv said...

    கிரி,
    :)
    நன்னி ஒன்ஸ் அகேன்!


  17. rv said...

    மாணவன்,
    வருவாருன்னு தான் நானும் வெய்ட் பண்றேன்.


  18. rv said...

    உஷா அக்கா,
    :))))

    பிரசவ சீன் மாதிரியா? பின்ன வர்ற ஓவ்வொருத்தர்கிட்ட இருந்தும் ஒரு கமெண்டு வாங்கறது சாதாரண விஷயமா?


  19. rv said...

    மாணவன்,
    //
    இது எந்த விதமான கயமைத் தனமுன்னு அந்த கொத்தனாருக்குத் தான் வெளிச்சம் ;-)//

    சீக்கிரமே மாணவர் பருவத்திலேர்ந்து புரொபஸர் அகவைக்கு வர வாழ்த்தூஸ்...


  20. மங்களூர் சிவா said...

    வணக்கம்
    பதிவு படிச்சேன்
    என்ன பின்னூட்டம் போடறதுன்னு தெரியலை











    மீ தி எஸ்க்கேப்பு


  21. Anonymous said...

    எனக்கு பதிவு நல்லா புரியுது மருத்துவர் ஐயா!! இனிமே இது போலவே பதிவு போடவும். எப்பவும் ராத்திரி 12க்குதான் நான் பதிவை படிப்பேன்! ஆனா ஒன்னியும் பிரியாது. ஆனா உங்க பதிவு ஜூப்பரா பிரிஞ்சுது:-)))

    வேற யாரு
    அபிஅப்பாத்தேன்!!!


  22. தமிழன்-கறுப்பி... said...

    ???????????


  23. இராம்/Raam said...

    //நம் பிராணனை வாங்கும் விதமான 'தி ஒன் & ஒன்லி தமிழகம் கண்ட ரோசர் ஈபர்ற்கள்' மேலும் நம் கழுத்தையறுக்காமல்//

    போட்டு தாக்கு.... :)

    //2.0-ல் நான் பயன்படுத்தும் ஆட்-ஆன்கள் 3.0ல் இன்னும் வரவில்லையென்பதும் ஒரு காரணம். முக்கியமாக IETabs.//

    IETab சூப்பரா வேலை செய்யுது... Even Tab preview'ம் சூப்பரா வேலை செய்யுது... அனேகமா பல ஆட்-ஆன்களை 3க்கு தகுந்தமாதிரி மாத்திட்டாங்க.... டிரை பண்ணி பாருங்க.... :)



    //ராயல் கேபிள் - எனக்கு புல்லரிக்குது. பேரக்கேட்டாலே. சாலப்பொருத்தம். ராயல்டிக்கு இருக்குற க்ளாசு மாஸுக்கு வருமா? இந்த க்ளாசும் மாஸும் எப்படி மேனேஜ் பண்றதுனு தெரியாம அந்த இங்கிலாந்து எலிசபெத்தே "என் பாட்டனார் ஒரு பிற்படுத்தப்பட்டவராக இருந்தாலும் ஐந்து முறை ஆட்சிக்கட்டிலிலே அமர்ந்திட்டேனே - நாடொன்றே - நம்மக்களின் ஏறுமுகம் காணும் ஒரே நோக்கத்தோடுதானே - ஆளத்தகுந்த வாரிசுகளை நான் மட்டுமின்றி என் வாரிசுகளும் அல்லும் பகலுமாய் உருவாக்கிக்கொண்டிருக்கின்றோம்"ன்னு கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய், தில்லாய் சொல்லமுடியுமா?///

    எங்க ஊரு கதை பேசுறமாதிரி இருக்கு..... :)


  24. rv said...

    கொத்ஸு,
    //றோரென்ற் பற்றி எங்க ஊர்க்காரர் ஸ்ரீதர் சொன்னதைக் கொஞ்சம் நினைத்துக் கொள்ளவும். //
    இருக்குற ஊரப்பொறுத்து இல்லையா இதெல்லாம்? டாரெண்ட்ஸ்பைய மூடவச்சதெல்லாம் சப்பை மேட்டரு. Recording Industry Ass. of America முயற்சித்தும் பைரேட் பே இன்னும் தில்லாத்தான் நிக்குது.

    2. மெமரி பெரும்பிரச்சனையாத்தான் இருக்கு.

    3. 7250$க்கா? எப்படியும் கொஞ்சம் வயசானா ஸ்பீக்கர் அவுட் ஆயிடுமே.. அப்ப என்ன செய்யறது? டைரக்டா காதுல சொறுகிக்கறதா?

    மூவுருளைத்தானியங்கியா? யோவ்.. இதுக்காகவே உம்ம நிக்கவச்சு சுடணும்.


  25. rv said...

    சிவா,
    என்ன பின்னூட்டம் போடறதுன்னு தெரியலேன்னு சொல்லி ஒரு பின்னூட்டம் போட்டீரே.. வாழ்க நீ எம்மான்!


  26. rv said...

    அபிஅப்பா,
    இப்படி நடுராத்திரி 12 மணிக்கு வலைப்பக்கம் ரொம்ப மேயறீங்கனு அபியம்மாவுக்கு தெரிஞ்சா - வரப் போற பூரிக்கட்டை புண்ணியத்தால - எல்லாப்பதிவுமே எல்லா வேளையிலும் புரிய வாழ்த்துகள்!


  27. rv said...

    தமிழன்,
    தமிழன் நிலைமைக் கேள்விக்குறியதா?? தமிழன் நிலைப்பாடு கேள்விக்குறியதா?? தமிழன் யார் என்பது கேள்விக்க்குறியதா?? இந்தக் கேள்வி எல்லாமே கேள்விக்குறியதா?????

    ரியும் றியும் கொஞ்சம் தடம் மாறிப்போச்சு. இதுவும் நல்லதுக்குத்தான். மரபுகளை வேற எப்படி உடைச்செரியிரதாம்?


  28. rv said...

    இராம்,
    //போட்டு தாக்கு....//
    நம்மள போட்டுத்தாக்குனது போதாதா?

    பயன்படுத்திப்பார்க்கிறேன்.

    //எங்க ஊரு கதை பேசுறமாதிரி இருக்கு//
    இதெல்லாம் கதையல்லப்பா.. நிஜம்...


  29. Anonymous said...

    // இராமநாதன் said...
    தமிழன்,
    தமிழன் நிலைமைக் கேள்விக்குறியதா?? தமிழன் நிலைப்பாடு கேள்விக்குறியதா?? தமிழன் யார் என்பது கேள்விக்க்குறியதா?? இந்தக் கேள்வி எல்லாமே கேள்விக்குறியதா?????

    ரியும் றியும் கொஞ்சம் தடம் மாறிப்போச்சு. இதுவும் நல்லதுக்குத்தான். மரபுகளை வேற எப்படி உடைச்செரியிரதாம்?//

    மரபை உடைப்பதை ஒரு மறபாய் ஆக்க நீர் முயன்றால் அந்த மறபும் ஓர் நாள் உடைக்கப்படும்..மரவாதீர்!

    எலுமிச்சை வியாபாரிகளுக்கு உம்ம பதிவை நம்பித் தான் பிழைப்பு ஓடுதாம்...குற்றாலத்திலும் நல்ல கூட்டமாமே ;-)


  30. Anonymous said...

    //இராமநாதன் said...
    சீக்கிரமே மாணவர் பருவத்திலேர்ந்து புரொபஸர் அகவைக்கு வர வாழ்த்தூஸ்//
    அதெல்லாம் ஆயிடுச்சு ஏழு சிங்கம் அகவை :) ஆனாலும் மருத்துவர் அய்யா சந் நிதியில நானெல்லாம் பச்சா மாணவன் தானே! ஒரு பானை பதிவுக்கு இந்த ஒரு பதிவே பதமைய்யா


  31. rv said...

    மாணவன்,
    //அந்த மறபும் ஓர் நாள் உடைக்கப்படும்..மரவாதீர்!//
    மா....புகளையே உடைச்சு பி.ந பிழிஞ்சு எழுதித்தள்ளறாங்க. இதுல நான் கொஞ்சம் மரபை/மறபை மாத்தினா கலாச்சார காவலன் வேடம் பூணுவதோ ஏனோ?

    நீர் நிசமாவே புதுசா வந்திருக்கும் அனானியா அல்லது நுண்ணரசியல் பொருட்டு அனானி அவதாரில் வந்திருக்கும் பழம்பெருசானு சந்தேகமா இருக்கு... :)))


  32. rv said...

    மாணவன் சார்,
    //நானெல்லாம் பச்சா மாணவன் தானே! ஒரு பானை பதிவுக்கு இந்த ஒரு பதிவே பதமைய்யா//

    என் டவுட் கன்பர்ம்ட்... ஒரு முடிவோடதான் வெளாடத் தொடங்கிருக்கீரு போல..

    எங்கேயோ (எங்கேயோ என்ன.. இங்கேயோ..) கேட்ட குரலாட்டம் இருக்கே! :)))))))


  33. Anonymous said...

    //நீர் நிசமாவே புதுசா வந்திருக்கும் அனானியா அல்லது நுண்ணரசியல் பொருட்டு அனானி அவதாரில் வந்திருக்கும் பழம்பெருசானு சந்தேகமா இருக்கு... :)))//

    மெய்யாலுமே நான் புதுசு தான் டாக்டர்.. நுண்ணரசியல் கற்றுக் கொள்ள வந்த மாணவன். பழம்பெருசு போலத் தோன்றினால் நன்னிகள் பல!
    மாணவா, எங்கயோ போய்ட்டடா:-))


  34. Geetha Sambasivam said...

    //தெகச்சு போயி கிடக்கேன் நானு. ஒரு பங்கா பிரிச்சு மன்னார்குடிக்கு குடுக்கறத விடவும் மொத்தத்தையும் கடலூர்/திண்டிவனதுக்கு அடிமைனு சொல்றத விடவும் அவங்கவங்க ஏரியாவுக்கு அவங்கவங்க (அதாவது அவங்க அவங்க) ராஜானு சொல்றது உத்தமம் இல்ல?
    ______________________________
    1. எழுத மேட்டரில்லை என்று சொல்வது writer's block - இது கட்டிவைத்து உதைக்கக் காத்திருக்கும் சிலரின் குறைபட்ட டிக்‌ஷனரிகளை அப்டேட் செய்துகொள்வதற்காக.
    2. தசாவதாரம் இந்தியா போய் பார்க்கவேண்டியதுதான் (அதுவரைக்கும் ஓடினால்)
    3. ரோயலுக்கும் எனக்கு எந்த சம்பந்தமுமில்லை.//

    ஆட்டோ போதுமா????? வருது, ஆட்டோ விரைவில்.


  35. Geetha Sambasivam said...

    நெருப்பு நரி நானும் தரவிறக்கம் செய்து வச்சிருக்கேன், இன்னும் பார்க்கலை, என்ன செய்யுமோனு பயம் தான் வேறே என்ன???


  36. Geetha Sambasivam said...

    தசாவதாரம் பேரைப் போட்டு எத்தனை பேர் இப்படி ஏமாத்தணும்னு கிளம்பி இருக்கீங்களோ தெரியலை!!! :P

    ஒரு மாதிரி விஷயம் ஒண்ணும் இருக்காதுனு புரிஞ்சுடுச்சு, அதான் மெதுவா வந்தேன்!!!


 

வார்ப்புரு | தமிழாக்கம்