230. அசுரர்களும் மனிதர்கள்தான்!

மனித வரலாறு மிகவும் விசித்திரமானது. மனிதனுக்கு மனிதன் நம்பிக்கைகளின் பெயரால், மதத்தின் பெயரால், பொருளாசையின் பெயரால் செய்த/செய்துவருகின்ற கொடுமைகள் வரலாறெங்கும் கொட்டிக்கிடக்கின்றன. ஹிட்லர், ஸ்டாலின், செங்கிஸ் கான், போல்பாட், சதாம் என நாம் பார்க்கும் கொடுங்கோலர்கள் மக்களை நடத்தியவிதம் அதிர்ச்சியடைய வைக்கின்ற அதே நேரத்தில் ஆச்சரியமும் பட வைக்கின்றது. அந்த ஆச்சரியத்திற்கான காரணம், மனிதன் என்ற நிலையிலிருந்து இவ்வளவு கீழும் இறங்க முடியுமா என்பதேயாகும். அப்படிப்பட்ட குமட்டும் காட்சிகளை அரங்கேற்றிய ஆட்சியாளர்களை நம் புராண இதிகாசங்களில் தோன்றும் அசுரர்களுக்கு ஒப்பாகவும் அவர்கள் மனிதர்களே இல்லையெனும் படியாகவும் நமக்கு நாமே சமாதானம் சொல்லிக்கொள்கிறோம். Surely, நம்மை போன்ற decent and law abiding மக்கள் 'மனிதர்கள்' என அழைக்கப்படும்போது இந்த கொடிய அரக்கர்கள் மனிதர்களாக இருந்திருக்கமுடியாது என்ற பார்வையில் இருக்கும் சவுகரியகங்கள் பல. ‘நான் அவன் இல்லை' அல்லது ‘நாம் அவன் இல்லை' என்று சொல்லும்வேளையில் ஒரு குறிப்பிட்ட கொடுங்கோலன் மனிதனே அல்ல, அவனுக்கும் நமக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை என்பது சுட்டெரிக்கும் வெயிலில் குளிர்தருவின் நிழல் போல மனச்சாந்தியை அளிக்கிறது. அதோடு கூட, இந்த குளிர்தருவின் நிழலின் எல்லைக்கோட்டிற்கு அப்பால் இருக்கும் உலகில் தற்சமயம் நடக்கும் ஏனைய மனிதத்தை மதிக்காத சர்வாதிகார, எதேச்சதிகார ஆட்சிகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் நமக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை, அதில் தலையிட வேண்டிய அவசியமும் நமக்கு இல்லை/தலையிட்டாலும் நன்மை வருவதற்கில்லை என்ற defeatist எண்ணமும் மேலோங்க வழிவகுக்கும். பூனை கண்ணை மூடிக்கொள்வது பூனைக்கு சவுகரியப்படும் போதுதான். அசவுகரியமானவற்றை பற்றி பேச வேண்டியதோ அவற்றை நீக்கவேண்டி செயல்படவேண்டியதோ இல்லை.

மனித குலத்தின் சாபக்கேடே இந்த 'நான் அவன் இல்லை' எண்ணம தான் என்பது என் கருத்து. இவ்வாறு தட்டையாக இல்லாமல், 'ஆம் அந்தக்கொடியவனும் மனிதன் தான். அதே இரத்தமும் சதையும் ஆசையும் கோபமும் வேகமும் காமமும் நம்முள்ளும் இருக்கிறது, என்ன நம்முள் தூங்கிக்கொண்டிருக்கிறது. நம்முள் இல்லாத ஒன்று புதிதாக உற்பத்தியாகி ஒருவனை கொடுமைக்காரனாக, கொலைசெயல் புரியவும் துணிந்தவனாகவும் ஆக்க முடியாது. நம்முள் இருக்கும் தூங்கும் மிருகம் சிலரினுள் விழிப்படைந்து, அம்மிருகத்தை அவனின் அறிவும் மனமும், சுற்றமும் சமூகமும் கட்டுக்கு கொண்டுவரவில்லை' என்பதை உணருதலே நாம் வரலாற்றை கற்றதன் பயனாக இருக்கமுடியும். இப்படி சொல்வதன் மூலமாக ஒருவரின் குற்றத்தைக் குறைத்துக்கூறி, அவன் கொலைசெய்ததற்கு இச்சமூகமே காரணம் என்பது மாதிரியான அபத்தங்களை முன்னிருத்தவில்லை. மாறாக ஒரு குற்றவாளியின், கொலையாளியின் வாழ்க்கையை ஆழ்ந்து பார்த்தால், அவனுக்கும் இருந்த (நம்மைப் போன்ற) மனித முகம் கோரமாக நம்முன்னே பல்லிளிக்கும் என்ற பயத்திலேயே நாம் மனிதர்களாக அப்படிப்பட்ட ஒரு கொடுங்கோலர்களை சித்தரிக்க நாம் துணிவதில்லை.


And what is good, Phædrus,
And what is not good...
Need we ask anyone to tell us these things?
- Epigraph to Zen and the Art of Motorcycle Maintenance, Robert Pirsig


உண்மையில் கொலையாளிகளை அரக்கர்களாய் மட்டும் பார்க்காமல் சகமனிதன் என்ற அளவில் அணுகினால் அவன் வாழ்க்கைத் தரும் பாடங்கள் ஏராளம். பாடங்கள் என்றால் நாம் பின்பற்றி நடக்கவேண்டிய சாஸ்திர விதிகளாய் மட்டும் இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. எவையெவை நல்லவை என்று சொல்லிக்கொடுக்க ஒரு நல்லாசிரியர் தேவையென்றால் எவையெவை பாதகரமானவை என்று சொல்லிக்கொடுக்கவும் ஒரு ஆசிரியன் தேவைப்படுகிறானல்லவா? கெட்டவற்றைச் சொல்லிக்கொடுப்பதில் அவன் நல்லாசிரியனாக விளங்கினால் நமக்கு அதில் ஒரு குரூர பலன் இருக்கிறது. இனி வரும் உலகத்தில் இப்படியான ஒருவன் தோன்றாமல் இருக்க நாம் என்ன செய்யவேண்டும் என்பது விளங்கும்படியாக நாம் அவனைப் படிக்கலாம். அதனால் அசுரர்களுக்கும் மனித முகங்கள் கொடுப்பது empathy/sympathy ஐ உருவாக்கும் என்பது போன்ற வாதங்களை விட்டு அணுகினால் அசுரர்களை படிக்கவேண்டியதே நம் கடமை என்பது தெளிவாகும்.

------------------------------------------------------
எதற்கு இத்தகைய நீளமான முன்னுரை? சரியான வலைப்பூவுக்குத்தான் வந்திருக்கமா அப்படினெல்லாம் உங்களுக்கு சந்தேகம் வந்திருக்கும். எனினும் இவ்வளவு தூரம் படித்துக் கடந்தாகிவிட்டது. இன்னும் ஒரிரண்டு பத்திகள் மட்டுமே.

Der Untergang (2004) என்ற படத்தை சமீபத்தில் தான் பார்க்க நேர்ந்தது. சென்ற நூற்றாண்டின் மனித விரோதி நெ.1 அடால்ப் ஹிட்லரின் வாழ்விலான கடைசி பத்து நாட்களை பற்றியதான படம். கிட்டத்தட்ட மொத்தப்படமும் அவனது Fuhrerbunkerக்குள் மட்டுமே நடக்கிறது. கோய்பல்ஸ், ஹிம்லர், ஷ்பியர், ஏவா என நமக்கு தெரிந்த அனைவரும் வந்துபோகிறார்கள். ஆனால் நாம் படித்த அரக்கர் உருவில் அல்ல. சாதாரண மனிதர்களாக.

அனாயசமான நடிப்பு ப்ரூனோ கான்ஸுடையது. ஹிட்லர் என்ற வரலாற்றின் மூலம் நமக்கு அறிமுகமான ஆசாமி பலவிடங்களில் மறைந்தேபோய்விடுகிறது. அதற்கு பதிலாக ஒரு frail, deranged, demented கிழவனே தோன்றுகிறான். குறிப்பாக சோவியத் படைகள் நெருங்கி பெர்லினின் மேல் குண்டுவீச்சு நடத்தும் சமயத்திலும் தன் பங்கரின் மேலே வந்து சிறுவர்களுக்கான சாகச விருதுகளை வழங்கும் காட்சி. இப்படி படமெங்கும் முத்துகள்.

வரிசையாக தோல்விகளை சந்திக்கும்போதும், அவனுடைய தளபதிகள் ஒவ்வொருவராக எதிரணியிக்கு தாவும்போதும், சோவியத் படை நெருக்கும் போதும், தற்கொலையை விட்டால் வழியில்லையென்ற நிலைக்கு தள்ளப்படும்போதும் என சமயங்களில் எனக்கு அப்புத்திபேதலித்த கிழவனைப் பார்த்து பரிதாபமே மிஞ்சியது. அப்படி பரிதாபப்படுதலே படுபாவம் என்று எண்ணிக்கொள்ளவும் செய்தேன். என் பரிதாபம் நிறைய நேரத்துக்கு நீடிக்கவில்லை என்பதென்னவோ உண்மைதான். ஹிட்லரை மனிதனாக காண்பிப்பதாய்ச் சொல்லி சர்ச்சைகளிலும் இப்படம் சிக்கியது. எவ்வித முன்முடிவுகளுடன் ஹிட்லரை அணுகாமல் பார்வையாளர்களின் முடிவுக்கு விட்ட இயக்குநரை பாராட்டியே ஆகவேண்டும்.

தன் நாட்டு மக்களையே பலியாடாக்க துணிந்ததுடன் அனைத்துக்குமான பழியை யூதர்களின் மேல் சுமத்துவது என தொடர்ச்சியாக இந்த மனித முகத்திற்கு பின் மறைந்திருக்கும் அரக்கன் யார் என்றும் படத்தில் காட்டத்தவறவில்லை. ஹிட்லரெனும் அரக்கனைப் பார்த்து பரிதாபப்பட்டதற்காக சற்று கோபப்பட்ட போது ரோஜர் ஈபர்ட் தன்னுடைய விமர்சனத்தில் எழுதியதைப் பார்த்தேன்.

”Admiration I did not feel. Sympathy I felt in the sense that I would feel it for a rabid dog, while accepting that it must be destroyed. I do not feel the film provides "a sufficient response to what Hitler actually did," because I feel no film can, and no response would be sufficient. All we can learn from a film like this is that millions of people can be led, and millions more killed, by madness leashed to racism and the barbaric instincts of tribalism.“...

”What I also felt, however, was the reality of the Nazi sickness, which has been distanced and diluted by so many movies with so many Nazi villains that it has become more like a plot device than a reality. As we regard this broken and pathetic Hitler, we realize that he did not alone create the Third Reich, but was the focus for a spontaneous uprising by many of the German people, fueled by racism, xenophobia, grandiosity and fear. He was skilled in the ways he exploited that feeling, and surrounded himself by gifted strategists and propagandists, but he was not a great man, simply one armed by fate to unleash unimaginable evil. It is useful to reflect that racism, xenophobia, grandiosity and fear are still with us, and the defeat of one of their manifestations does not inoculate us against others.”

இதற்கு மேலே சொல்ல எதுவுமில்லை.

radical nationalism என்ற பெயரில் உலகெங்கும் ஹிட்லர்களும் கோய்பல்ஸ்களும் இன்னும் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்ற வகையில் அனைவரும் பார்க்கவேண்டிய படம்.

12 Comments:

  1. பினாத்தல் சுரேஷ் said...

    ராம்ஸு..

    ரொம்ப நாளைக்கப்புறம் பழைய ராம்ஸைப் பாத்த மாதிரி இருக்கு ;)

    //அதனால் அசுரர்களுக்கும் மனித முகங்கள் கொடுப்பது empathy/sympathy ஐ உருவாக்கும் என்பது போன்ற வாதங்களை விட்டு அணுகினால் அசுரர்களை படிக்கவேண்டியதே நம் கடமை என்பது தெளிவாகும்//

    லாஜிக் நல்லாத்தான் இருக்கு! Good Judgement comes from Experience and Experience comes from Bad judgement னு சொல்லுவாங்களே.. அதுபோல கெட்டவங்களும் ஆசிரியர்கள்தான்.

    //It is useful to reflect that racism, xenophobia, grandiosity and fear are still with us, and the defeat of one of their manifestations does not inoculate us against others.//

    அருமையான அப்சர்வேஷன். பாராட்டை சேர்க்கவேண்டிய இடத்துல சேர்ப்பித்துவிடவும் :)


  2. குமரன் (Kumaran) said...

    வழக்கம் போல இதுவும் எனக்குப் புரியலை. ஆனால் வழக்கத்தை மீறி இந்த இடுகைக்கு மட்டுமாவது பின்னூட்டம் போட்டுட்டுப் போகலாம்ன்னு பின்னூட்டம் போடறேன்.

    உள்ளேன் ஐயா.


  3. Geetha Sambasivam said...

    அருமையான விமரிசனம். நல்லா அனுபவிச்சிருக்கீங்க படத்தை நன்றி.


    //அருமையான அப்சர்வேஷன். பாராட்டை சேர்க்கவேண்டிய இடத்துல சேர்ப்பித்துவிடவும் :)//

    உ.கு.???????????


    .


  4. பினாத்தல் சுரேஷ் said...

    இதுல உள்குத்து என்ன இருக்கு கீதா? அந்த பீட்டர் விமர்சனம் சுட்டதுன்னுதான் அவரே சொல்லியிருக்காரே.. அந்த பீட்டருக்கு பாராட்டு.. அம்புட்டுதேன் :-)


  5. தி. ரா. ச.(T.R.C.) said...

    And what is good, Phædrus,
    And what is not good...
    Need we ask anyone to tell us these things?
    - Zen and the Art of Motorcycle Maintenance, Robert Pirsig


    ராமனாதன் பாரதியின் வாசகமும் கிட்ட தட்ட இதேதான்
    நல்லது தீயது நாமறியோமே நல்லதை நாட்டுக தீயதை ஓட்டுக
    அது சரி நல்லதைத்தான் நாம் தேடி கற்க வேண்டும் தீயது தானே வரும். hitlarukku பின் தான் இடி அமின் வந்தான்.


  6. rv said...

    பெனாத்தலார்,
    //ரொம்ப நாளைக்கப்புறம் பழைய ராம்ஸைப் பாத்த மாதிரி இருக்க//

    கீதாக்கா உ.கு சொன்னது இதுவாத்தான் இருக்கும்னு நினைக்கிறேன். :)

    //சேர்க்கவேண்டிய இடத்துல சேர்ப்பித்துவிடவும் :)//
    :)) நம்ம ரோஜர் தானே.. சேத்துடறேன்.


  7. rv said...

    குமரன்,
    இங்க என்ன மெடாபிஸிக்ஸா பேசுறோம்.. சும்மா படவிமர்சனம்..

    இதுவும் புரியலேனு உள்ளேன் ஐயா சொல்றீங்க. நீங்களா இல்ல யாராச்சும் ப்ராக்ஸியா? :)


  8. Kannabiran, Ravi Shankar (KRS) said...

    //ராம்ஸு..
    ரொம்ப நாளைக்கப்புறம் பழைய ராம்ஸைப் பாத்த மாதிரி இருக்கு//

    வழிமொழியறேன், வரிக்கு வரி!
    You did it Rams anne!

    பிகு: மேலே சொன்னது
    உகு இல்லை, இல்லவே இல்லை! :-)


  9. Anonymous said...

    // உண்மையில் கொலையாளிகளை அரக்கர்களாய் மட்டும் பார்க்காமல் சகமனிதன் என்ற அளவில் அணுகினால் அவன் வாழ்க்கைத் தரும் பாடங்கள் ஏராளம்.//

    கண்டிப்பாக

    // பாடங்கள் என்றால் நாம் பின்பற்றி நடக்கவேண்டிய சாஸ்திர விதிகளாய் மட்டும் இருக்கவேண்டும் என்று அவசியமில்லை.//

    இதை விட்டு விலகி நில் என்று கற்று கொடுக்கும் பாடங்கள் இவை.

    // எவையெவை நல்லவை என்று சொல்லிக்கொடுக்க ஒரு நல்லாசிரியர் தேவையென்றால் எவையெவை பாதகரமானவை என்று சொல்லிக்கொடுக்கவும் ஒரு ஆசிரியன் தேவைப்படுகிறானல்லவா? //

    மிக சரியாக சொன்னீர்கள்.

    நல்ல பதிவு, நன்றி.

    -அரசு


  10. rv said...

    சங்கத்தலைவி,
    நன்னி..

    பீட்டர் மேட்டர் சுட்டதுதான்..

    பெனாத்தலார் உ.குவை தோலுரித்ததுக்கு நன்னி.


  11. rv said...

    தி.இரா.ச,
    ப்ளேட்டோ காலத்துல நல்லது கெட்டது தெரிஞ்சு அத அடுத்தவங்க சொல்லவேண்டிய அவசியமே இல்லாம இருந்துச்சு.

    இப்ப அப்படியா.. ஆசிரியர்கள் ரொம்பே தேவைப்படறாங்க. அதான் வரலாறு தொடர்ச்சியா அப்படிப்பட்ட ஆட்கள அனுப்பிட்டே இருக்கோ என்னவோ? :(


  12. வவ்வால் said...

    ராமநாதன்,

    //இந்த கொடிய அரக்கர்கள் மனிதர்களாக இருந்திருக்கமுடியாது என்ற பார்வையில் இருக்கும் சவுகரியகங்கள் பல//

    இந்த பதிவை இப்போ தான் பார்க்கிறேன், நன்றாக சொல்லி இருக்கிங்க, மனிதன், அரக்கன் என்றெல்லாம் தனிப்பிறவிகள், இல்லை செய்யும் செயல்தான் அப்படி தீர்மானிக்கிறது.

    இந்த பதிவை குமரன் படிச்சுட்டு போய் இருக்கார் அப்படினா அவருக்கும் நியாபகம் இருக்கும், அரக்கர்கள் என்றெல்லாம் யாரும் இல்லை அவர்கள் மனிதர்களே என்று முன்னரே அவரோடு நான் உரையாடி இருக்கேன் ஒரு பதிவில் , ராவணன் அரக்கன் இல்லை, அவனும் மனிதனே ஆனால் அவன் அரக்க குணம் கொண்டிருந்தான்னு சொன்னேன்.ஆனாலும் குமரன் லேசில ஒத்துக்கலையே, சுட்டி எங்கேன்னு கேட்டு என்னை அலையவிட்டார் :-))

    ஹிட்லரும் அப்படிப்பட்ட அரக்ககுணம் கொண்ட மனிதனே அதில் சந்தேகமே இல்லை.


    //நம்முள் இருக்கும் தூங்கும் மிருகம் சிலரினுள் விழிப்படைந்து, அம்மிருகத்தை அவனின் அறிவும் மனமும், சுற்றமும் சமூகமும் கட்டுக்கு கொண்டுவரவில்லை' என்பதை உணருதலே நாம் வரலாற்றை கற்றதன் பயனாக இருக்கமுடியும்.//

    மாயன் உனக்குள்ள முழிச்சுக்கிட்டு இருக்க மிருகம் எனக்குள்ள தூங்கிட்டு இருக்கு அதை எழுப்பிடாதன்னு தேவர் மகன் படத்தில் கமல் சிம்பிள்ளா சொல்லிடுவார் இதை!

    செங்கிஸ்கான் எல்லாம் மனிதர்கள் உயிரோடு இருக்கும் போதே தோலை உரிப்பானாம். தலையை வெட்டி அதை வைத்து போலோ எல்லாம் விளையாடி இருக்கான்னு மதன் எழதியுள்ளார்.கூடுதலா ஒரு தகவல், இந்தியா மீது படை எடுத்த பாபர் சென்கிஸ்கான் கொள்ளுப்பேரன் தான்.பாபரோ இன்னொரு தாத்தா தைமூர்.


 

வார்ப்புரு | தமிழாக்கம்