219. புத்தாண்டு வாழ்த்துகள்: template

தோழர்களுக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை அனுப்ப முனைந்தேன். ஆனால், உள்குத்து இல்லாமல், எந்த ஒரு நபரையும் காயப்படுத்தாத வாழ்த்துச் செய்தி அனுப்புவது அவ்வளவு சுலபம் இல்லை. எனவே, என் வழக்கறிஞர் துணையோடு, அவர் அறிவுரைப்படி, கீழ்க்கண்டவாறு கூற விழைகிறேன்.

Please accept, with no obligation, implied or implicit, the best wishes of the owner of "தெரியல” (sometimes hereinafter referred to as the "wisher") for an environmentally conscious, socially responsible, low stress, non-addictive, gender neutral, celebration of the winter solstice holiday, practiced within the most enjoyable traditions of the religious persuasion of your choice, or secular practices of your choice, with respect for the religious/secular persuasions and/or traditions of others, or their choice not to practice religious or secular traditions at all, and a fiscally successful, personally fulfilling, and medically uncomplicated recognition of the onset of the generally accepted calendar year 2008, but not without due respect for the calendars of choice of other cultures whose contributions to society have helped make this world great, (not to imply that Georgian Calendar is necessarily greater than any other calendar), and without regard to the race, creed, color, age, physical ability, religious faith, or sexual preference of the wishee (or lack thereof with regards to any or all of such factors) (and further not to imply that the winter should be considered a holiday for those afflicted, through no fault of their own, with some form of psychological or physical depression occasioned by the natural reduction of sunlight or increase in precipitation due to seasonal factors (or increase/reduction for those in the so-called Southern Hemisphere.))

(Do not alter below this line. By accepting this greeting, you are accepting these terms. This greeting is subject to clarification or withdrawal. It is freely transferable with no alteration to the original greeting. It implies no promise by the wisher to actually implement any of the wishes for her/him or others, and is void where prohibited by law, and is revocable at the sole discretion of the wisher. This wish is warranted to perform as expected within the usual application of good tidings for a period of one year, or until the issuance of a subsequent holiday greeting, whichever comes first, and warranty is limited to replacement of this wish or issuance of a new wish at the sole discretion of the wisher. Terms are subject to change without notice. You are authorized to freely distribute the above greeting onto any media that you may deem fit, including digital media as long as this disclaimer is included in the subsequent redistribution.)

IMPORTANT NOTE: Any adaptations of this electronic document must include a disclaimer to this effect. Any similarity to real persons, living or dead, is purely coincidental. Void where prohibited. This document contains forward-looking statements that are subject to a number of risks and uncertainties; actual results may differ. Some assembly required. Batteries not included. Contents may settle during shipment. Use only as directed. No other warranty expressed or implied. Do not use while operating motor vehicle or heavy equipment. Postage will be paid by addressee. Subject to FCC approval. This is not an offer to sell or to buy securities. Apply only to affected area. May be too intense for some viewers. If condition persists, consult your physician. Use other side for additional listings. For recreational use only.

All models over 18 years of age. No user-serviceable parts inside. Subject to change without notice. Times approximate. Simulated picture. Reading this greeting constitutes your acceptance of agreement. One size fits all. No animals were harmed in the making of this production. Contains a substantial amount of non-tobacco ingredients. Colors may, in time, fade. We have sent the greeting that seem to be right for you. For official use only. Not affiliated with the American Red Cross. Drop in any mailbox. Post office will not deliver without postage. List was current at time of printing. Return to sender, no forwarding order on file, unable to forward.

The document on this site contains hypertext pointers to information created and maintained by other public and private organizations. Please be aware that I do not control or guarantee the accuracy, relevance, timeliness, or completeness of this outside information. Further, the inclusion of pointers to particular items in hypertext is not intended to reflect their importance, nor is it intended to endorse any views expressed or products or services offered by the author of the reference or the organization operating the site on which the reference is maintained.

Not responsible for direct, indirect, incidental or consequential damages resulting from any defect, error, or failure to perform. At participating locations only. See label for sequence. Sanitized for your protection. Be sure each item is properly endorsed. Employees and their families are not eligible. Beware of wild animals. Your mileage may vary. Limited time offer, call now to ensure prompt delivery. You must be present to win. No purchase necessary. Keep away from fire or flame. Replace with same type. Approved for veterans. Stock markets are volatile and can decline significantly in response to adverse issuer, political, regulatory, market, or economic developments. Different parts of the market can react differently to these developments. Foreign markets can be more volatile than the U.S. market due to increased risks of adverse issuer, political, regulatory, market, or economic developments and can perform differently from the U.S. market.

The value of individual security or particular type of security can be more volatile than the market as a whole and can perform differently from the value of the market as a whole. Check here if tax deductible. Some equipment shown is optional. Price does not include taxes. Not recommended for children. Prerecorded for this time zone. Reproduction strictly prohibited without express consent by the wisher. No solicitors. No alcohol, dogs, or horses. No anchovies unless otherwise specified. Do not accept if seal broken. List at least two alternate dates. Call toll free before digging. Some of the trademarks mentioned in this product appear for identification purposes only. Do not fold, spindle, or mutilate.

நன்னி 1 & 2

This section intentionally left blank.

Objects may appear closer than they actually are. All of the views expressed in this greeting accurately reflect the wisher's personal views about any and all of the subject and no part of the wisher's compensation was, is, or will be, directly or indirectly, related to the specific recommendations or views expressed by the wisher in this document. This material should be approached with an open mind, studied carefully, and critically considered. Not valid toward previous purchase. Offer excludes money orders, alcohol, tobacco, stamps and dairy products.


---------------
லீகலீஸ் கண்டாலே எஸ்கேப் ஆகற ஆசாமியா நீங்க?


Have a Happy New Year 2008!

218. தமிழகத்தின் அடுத்த முதல்வர்?

தமிழக அரசியல்வாதிகளின் இப்போதைய லேட்டஸ்ட் அறிக்கை டெம்ப்ளேட்டில் சேர்ந்துள்ள வாசகம் 'அடுத்த தமிழக முதல்வர் நான் தான்/என் மகன் தான்/என் வளர்ப்பு நாய்க்குட்டி ஜிம்மிதான்'. இப்படி புரட்சிகலைஞர், தளபதி, அஞ்சாநெஞ்சன், மருத்துவர் த.குடிதாங்கி, சுப்ரீம் ஸ்டார், நவரச நாயகன், இல.கணேசன், ஜி.கே.வாசன், இளங்கோவன், தொல். திருமாவளவன், குட்டி மருத்துவர் என புதியவர்கள் ஒருபக்கம் முழக்கமிட.. மற்றொரு பக்கம் பழம்தின்று கொட்டை போட்ட கலைஞரும் தானைத்தலைவியும் இப்போதைக்கு ரிட்டையர் ஆவதற்கான அறிகுறிகளையே காட்டாமல் இருக்கிறார்கள். கலைஞராவது ஹிண்ட் கொடுத்திருக்கிறார்.

இதில் சிலர் ஒருபடி மேலே போய் - தமிழர்கள் எல்லாம் என்னமோ அவர்கள் வீட்டுக்கு தினமும் காலையில் வந்து தயவுசெய்து பதவியேத்துகிட்டு எங்களைக் காப்பாத்துங்க, போராடுங்கனு லட்சக்கணக்குல மனு கொடுத்தா மாதிரி தமிழகத்தின் பிரதிநிதிகளாகவே சுய பில்டப் கொடுத்துக்கொண்டிருக்கின்றனர். விவேக் ஏதோ படத்தில் சொன்னபடி "தமிழ்நாடே என் பின்னாடி பின்னாடின்னு ஆளாளுக்கு என்னடா சொல்றீங்க? தமிழ்நாடு உங்க பின்னாடி இருக்க நீங்க என்ன ஆந்திரா பார்டர்லயா நிக்கிறீங்க"னு கேட்ட கேள்வி தான் நினைவுக்கு வருகிறது.

தமிழகத்தின் இருபெரு தலைவர்களுக்கென்று சேருகிற கூட்டம் - இப்படி தினந்தோறும் நாளைய தமிழகம் நம்முடையது என்று முழக்கமிடும் தலைவர்களுக்கு கண்டிப்பாக இல்லை என்பதுதான் நிஜம். கலைஞருக்காகவும், ஜெயலலிதாவுக்கும் அதைவிட ஏன் இருபது வருடங்களானபின்னும் இன்னமும் கூட புரட்சித்தலைவருக்குமே வோட்டு குத்துபவர்கள் பெரும்பான்மையான தமிழர்கள். எந்தப் பக்கம் அரசியல் எவருக்கு ஒத்துவருகிறதோ அந்த வரிசையில் கலைஞரோ தலைவியோ தமிழகத்தின் விடிவெள்ளியாய் இருப்பர்.

இவர்களைத் தவிர்த்து தமிழகத்தின் மாபெரும் சக்தியென சொல்லிக்கொள்ளும்படியாக திமுகவின் நம்பர் டூக்களான ஸ்டாலினோ அழகிரியோ கூட இல்லை. கலைஞருக்கு பின் பிரியுமா நிற்குமா என்ற கேள்வி ஒருபுறம் என்றாலும் தி.மு.க என்ற அமைப்பாவது கண்டிப்பாக இப்போதைய வலிமையில் ஐம்பது சதவிகிதத்துடனாவது இருக்கும் என்பது என் எண்ணம். அதிமுக நிலைமை மிகவும் கவலைக்கிடம். ஜெயலலிதா இல்லாத அதிமுக அ.. தி.. மு.. க என்ற அளவில் சிதறுண்டாலே அதிருஷ்டத்தை எண்ணி திருப்திபட்டுக்கொள்ள வேண்டியதுதான் என்ற நிலையில் இருக்கிறது.

இது கிடக்கட்டும். இப்ப எதுக்கு இந்தப் பதிவுன்னா.. 23.12.07 குமுதம் ரிப்போர்டர்ல ஒரு செய்தி படிச்சேன். அத காப்பி & பேஸ்ட் பண்ணவே இது. கோவையில் பசும்பொன் தேவரின் நினைவு விழாவை நடத்தி வைத்திருக்கிறார் எம். நடராஜன் (சசிகலா). இனி குமுதம் செய்தி.

_______________________________________________________________
விழாவில் பேசிய அனைவரும் நடராஜனைப் புகழோ புகழ் என்று புகழ்ந்து தள்ளினார்கள். அதன் உச்சகட்டமாக திருச்சி வேலுச்சாமி தன் பேச்சில் எல்லோரையும் தூக்கிச் சாப்பிட்டு விட்டார். ‘‘நடராஜன் விரும்பியிருந்தால் ஜெயலலிதாவை நீக்கிவிட்டு அவரே முதல்வராகி இருக்க முடியும். தனி மனிதராக முதல்வராகும் தகுதி இங்கே உங்களுக்கு மட்டும்தான் இருக்கிறது. அதற்கு பசும்பொன் தேவரும் அருள் புரிவார்!’’ என்று ஒரு போடு போட, அங்கே ஒரே கரகோஷம்.

நடராஜன் என்ன பேசப்போகிறார் என்று எல்லோரும் ஆவலுடன் காத்திருக்க, முதலில் பிடி கொடுக்காமல் நழுவல் நடையில் பேசிய நடராஜன், ‘‘அரசியல் பற்றி இங்கே பேச மாட்டேன். அதற்கான மேடை இதுவல்ல. அதைப்பற்றி ஜனவரி 17_ம்தேதி தஞ்சையில் நான் நடத்தும் தைப்பொங்கல் திருநாள் நிகழ்ச்சியில் அறிவிப்பேன்!’’ என்று பேசி அதிர்ச்சியைக் கிளப்பினார்.

கூடவே, ‘‘அன்று என்னை நரசிம்மராவ், சென்னா ரெட்டி போன்றவர்கள் கூப்பிட்டு முதல்வராகச் சொன்னார்கள். அப்போது நினைத்திருந்தால் நானே முதல்வராகியிருக்கலாம். ஆனால் நான் அப்படிச் செய்யவில்லை’’ என்றவர், கலைஞர் பற்றியும் பேசினார்.

‘‘கலைஞருக்கும் எனக்குமான நட்பு கோப்பெருஞ் சோழன்_பிசிராந்தையாரின் நட்பு போன்றது. கலைஞருக்கு என்மீதிருப்பது ஒருவித பயம் கலந்த நட்பு. கலைஞருக்கு என்னைத் தெரியும். ‘நடராஜன் எதைச் செய்தாலும் சரியாகச் செய்வான். நம்மை எதுவும் செய்யாமல் இருந்தால் போதும்!’ என்று நினைத்து, ரொம்ப கவனமாக பயத்துடனேயே என் செயல்பாடுகளை அவர் கவனிப்பார். அது அச்சம் கலந்த நட்பு. இது சில முண்டங்களுக்குத் தெரியவில்லை!’’ என்றபோது கூட்டத்தில் செம கை தட்டல்.

நடராஜன் வந்து இப்படிப் பேசிவிட்டுப் போனது கோவை அ.தி.மு.க.வில் வினோத சலசலப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. ‘நடராஜன் புதிதாக கட்சி ஆரம்பிக்கப் போகிறார். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் பாதிக்கு மேற்பட்டவர்களும், அறுபது சதவிகித மாவட்டச் செயலாளர்களையும் அவர் தன்பக்கம் கொண்டு வந்து அ.தி.மு.க.வை உடைக்கப்போகிறார். ஒரிஜினல் அ.தி.மு.க. நாங்கள்தான். இரட்டை இலைச் சின்னமும் எங்களுக்குத்தான் என்று மல்லுக் கட்டப் போகிறார்!’ என்பதுதான் அந்தச் சலசலப்புகள்.
__________________________________________________________________
படிச்சுட்டீங்களா?

1. இந்த நடராஜன் யாரு (உ.பிறவா சகோதரியின் மாஜி கணவர் என்பதைத்தவிர)?

2. அவருக்கும் அதிமுக விற்கும் என்ன கொடுக்கல்வாங்கல்?

3. அவருக்கெல்லாம் யாரு செலவு பண்ணி டிஜிடல் பேனர் முதக்கொண்டு பிரியாணி பொட்டலம் வரை செலவு செய்யறாங்க? என்ன எண்ணத்துல அவர் பின்னாடி கூட்டத்துக்கெல்லாம் போய் இப்படியெல்லாம் பேசறாங்க?

4. தோராயமா அவரு பின்னாடி எத்தன பேரு இருப்பாங்கன்னு எல்லாம் தெரிஞ்சா எனக்கும் சொல்லிட்டு போங்க. ஏன்னா கலைஞரும் ஜெயலலிதாவும் இவரோட பேரைக் கேட்டாலே சும்மா அதிரும்போது... நமக்கு இந்தாளோட பேக் கிரவுண்டே தெரியலியேனு ரொம்ப வெக்கமா இருக்கு.

அதோட கூட, தி.மு.க அதிமுக போன்ற கட்சிகளில் முன்னுக்கு வருவது ரொம்ப கஷ்டம். ஏன்னா கூட்டமும் போட்டியும் நிறைய இருக்கும். அதனால ஒரு இயக்கம் தொடங்கறப்பவே சேர்ந்தாதான் சீக்கிரம் முன்னுக்கு வந்துடலாம் (ஏன்னா அப்புறம் எல்லார்கிட்டயும் நான் கட்சி தொடங்கின காலத்துலேர்ந்து இருக்குற சீனியர்னு சொல்லிக்கலாமே!) என்று சொல்லி பாரம்பரிய தி.மு.க குடும்ப நண்பன் தடாலடியாக தே.மு.தி.க வில் சேர்ந்தான். இன்றைக்கு ஓரளவுக்கு வளர்ந்தும்விட்டான் என்பது வேறு கதை. அதனால் அதே இசுடைலை இந்தாளை நம்பி பண்ணலாமா என்று தயவு செய்து சொல்லவும்.

கொசுறு: தன் சொத்தையெல்லாம் வித்து புது இயக்கம் தொடங்கி விரைவில் தமிழகத்தை இவரும் கலக்கப் போறாராம். பார்க்க ஜூ.வி. இந்த இயக்கத்துல சேர மினிமம் ரிக்குவிஸிட்: சொத்தையெல்லாம் வித்து இயக்கத்துக்கு கொடுக்கணுமாம். அப்படிச் செய்றவங்கள மட்டுமே சேர்த்துப்பாராம்.

217. Wii+Mii=We-Me

மகளிர் மட்டும் படத்துல சிவாஜி சொல்ற - dreadful மிட்-லைப் டெபனிஷன் டயலாக்கான 'டெக்னாலஜி ஹேஸ் இம்ப்ரூவ்ட் வெரி மச்'னு எங்க முப்பது வயசுக்குள்ளயே சொல்ல வச்சுருவாங்களோனு அப்பப்ப பயமுறுத்துற மாதிரி விஷயங்கள் சிலது. நிறைய கண்ல பட்டாலும், விநோதமானதே நம்ம கண்ல படும்கறதால இதோ. இதையே ஒரு தொடரா போட்டு ஒப்பேத்துவோமில்ல. அன்லிமிடட் சப்ளை.

இன்னிய மேட்டர் குடும்பத்துள் கசமுசா...

வழக்கமான கதை. ஒரு அழகான குட்டி குடும்பம். ஆத்துக்காரர இராக் போய் டார்கெட் ப்ராக்டிஸ் பண்ணிட்டு வானு புஷ் அண்ணாச்சி அனுப்பி வச்சுருக்காரு. போன ஆத்துக்காரர் திரும்ப வர ஒரு வருஷம் ஆயிடறது. ஒரு வருஷ பணி முடியறதுக்கு முன்னாடி கொஞ்ச கொஞ்சமா இராக்லேர்ந்து தன்னோட பெர்ஸனல் ஐடம்ஸ்லாம் ஊருக்கு அனுப்பி வைக்கறாரு. திரும்ப வந்த ஆத்துக்காரருக்கு பயங்கர ஷாக். தன் அன்பு மனைவியுடன் யாரோ ஒரு மர்மக்காதலன் விளையாடிருக்கான்னு அவருக்கு தெரியவருது. இதக் காரணமா வச்சு மனைவிய கொளுத்தாம, ரீஜண்டான முறையில விவாகரத்து கோரியிருக்காரு.

இதுல என்ன புதுசு அப்படிங்கறீங்களா? புருஷன் எப்படி மனைவிக்கு காதலன் இருந்தான்னு கண்டுபிடிச்சாங்கறது தான்.

இந்த Wii னு ஒரு வஸ்து இருக்கு. இளவயசுப்பசங்க யாருனாச்சும் கிட்டக்க இருந்தா கேட்டுபாருங்க. அவங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். என்ன கிறிஸ்துமஸ் ஷாப்பிங் நேரத்துல கேட்கப்போய் அவங்களுக்கு வாங்கிக்கொடுக்கத்தான் கேக்கறீங்கனு நிறையவே அளந்துவிடுவாங்க. (இப்பல்லாம் கிறிஸ்துமஸ்/புது வருஷத்துக்கு இது வேணும்னு நேரடியா கேக்கறதோட இல்லாம, பெரிய ஆளுங்க வேற வந்து ரெகமெண்ட் பண்றாங்க. விவரம் இங்கே.)

ஆகமொத்தம் இந்த வீ ங்கறது ஒரு ப்ளேஸ்டேஷன் மாதிரி விளையாட்டு சாதனம். புரட்சிகரமானதுன்னா மிகையில்ல. குடும்பத்தோட விளையாட ஏத்தது. அது எப்படி குடும்பத்துல கலகம் செஞ்சுது?

புருஷன் நாட்டுக்கு திரும்பின உடனே அவனோட நண்பர்களும் அக்கம்பக்கத்தவர்களும் மனைவியப் பத்தி கொஞ்சம் விவகாரமா சொல்லிருக்காங்க. ஆனா அண்ணாச்சி நம்பல. மனைவிய கேட்டால் அவ இல்லவே இல்லேன்னு சாதிச்சிருக்கா. பாவம், அண்ணாச்சி நொந்து போயி ஒரு நாள் ஆசையாசையா தன்னோட Wii அ ஆன் செஞ்சு தன்னோட பேவரிட் கேமான பவுலிங்கை ஆரமிச்சுருக்காரு. அங்கன சிக்கிருச்சு பட்சி.

விஷயம் என்னன்னா அந்த கேம்-குள்ள ஆத்துக்காரர், அவரோட நண்பர்கள், மனைவி தவிர ஒரு புதிய profile (Miiனு பேரு இதுக்கு) இருந்திருக்கு. பளிச்னு ப்ளாஷ். இந்தாளு கூட ஒரு சின்ன fling இருந்துச்சு ஆனா அது முடிஞ்சு போன மேட்டர்னு மனைவி சொல்லிருந்தது நியாபகத்துக்கு வந்துருக்கு. ஏன் வந்துச்சுன்னா இந்த மீ ஒர் டிஜிடல் 'அவதார்'. அக்டோபர் மாசம் கலகம் பண்ணின அதே பாதகனோட அச்சு அசல் மாதிரி இருந்திருக்கு இந்த அவதார். புருஷன் சுதாரிச்சுகிட்டு உடனே மீ ஓட ஆன்லைன் ஃபாரம்களில் தேடவே அழகா அவரோட மனைவியும் அந்த அவதாரும் எந்தெந்த நாளைக்கு என்னென்ன விளையாட்டு (Wii console-ல மட்டுமே) விளையாடினாங்கனு புட்டு புட்டு வச்சுருந்திருக்காங்க அந்த ஃபாரம்களில்.

இப்படி அசைக்கமுடியாத ஆதாரம் கொடுத்தோன்ன மனைவி என்ன பதில் சொல்றதுன்னு தெரியாம முழி முழின்னு முழிச்சிருக்காங்க. லேட்டஸ்ட் நியுஸ் விவாகரத்துக்கு போயிருக்கு கேஸ். சாட்சி சொல்ல Wii வருமான்னு பொறுத்திருந்துதான் பார்க்கணும்.

முழு விவரம் இங்கே

என்னத்த சொல்ல, டெக்னாலஜி ஹேஸ் இம்ப்ரூவ்ட் வெரி மச்!

PS: எனக்கென்னவோ அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து வீ விளையாடின நாட்கள விட்டுட்டு விளையாடாத நாட்களப் பத்தி விசாரிக்க ஆரமிச்சா இன்னும் relevant details வரும்னு தோணுது! :)

216. பிறவிக்குணம், மூளை கழண்ட கேஸு

பிறந்த பிறவியினாலேயே வரும் குணங்கள் ஒரு சாராருக்கு மட்டுமே என்று நாம் இங்கே விவாதம் நடத்தி கிட்டத்தட்ட ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்திருக்கும் இந்த வேளையில், சன் ரீவியில் என்ன காரணத்தாலோ ஒளிபரப்பத் துவங்கப்பட்டு பாதியிலேயே நின்று போன அரசு திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் தமிழக முதல்வர் டாக்டர். கலைஞர் தன் பேச்சிலே குறிப்பிட்டு சொன்ன ஒரு விஷயம் என் கவனத்தை ஈர்த்ததனாலும் அதை வலையுலகில் யாரும் இதுவரை பதிவு செய்யாததன் காரணமாகவும் இதோ அதன் சாராம்சம். (quote unquote அல்ல. ஆனா அது மாதிரி இது...)

ஆட்சியில் இருக்கும் போதோ இல்லாத போதோ; ஆட்சிச்சக்கரம் சுழலும் போதோ சுழலாத போதோ; தமிழக மக்களுக்கு பணியாற்ற வேண்டியது என் பிறவியிலேயே வந்த கடமை என்ற உணர்வு இருப்பதாலேயே இந்த வயதிலும்.....

இப்படி அவர் பேசி முடித்ததும் சன் டிவி என்ன காரணத்தாலோ திடுதிப்பென்று நிகழ்ச்சியை பாதியிலேயே நிறுத்தி விட்டார்கள். நமீதா Uவாக இடுப்பில் அணிந்திருந்த ஆடை சற்றே நழுவி A ஆக அவையில் அனைத்து அகவையிலும் இருந்த கலையுலகத் தொடர்புடையவர்கள் மட்டுமே கண்டு களித்த அந்த வரலாற்று நிகழ்வை இருட்டடிப்பு செய்த சன் டிவிக்கு - இது வேண்டுகோள் வைக்கக்கூடிய இடமா என்று தெரியாததால்- கடுமையான கண்டனத்தையும் மறைக்காமல் முழுமையாக ஒளிபரப்ப வேண்டும் என்று ஒரு சாதா தமிழனாக இருப்பதால் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனிவே அடுத்த மேட்டர் - அதுல் சொந்தி

பார்த்தவுடனேயே இரத்தம் கொதித்தது எனக்கு. இப்படிப்பட்ட ஒரு காரியத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க நாதியே இல்லையே என்று உள்ளம் கலங்கும்வேளையில் நானாவது நமது பண்பாட்டின்படி எதிர்க்க வேண்டும் என்று துணிந்து இப்படி எழுதக்கூடியவன் ஒரு (குடிகாரன், எனக்கும் அவனுக்கும் ஜென்மப்பகையல்ல, அதுல் என்ற பெயருக்கு நான் எதிர்ப்பாளனுமல்ல, சொந்தி என்ற பெயரை படித்தவுடன் அவன் தொந்தி எப்படி என்று ஆராயும் முட்டாளுமல்ல) மூளை கழண்ட கேஸு - இவன் மூ.க.கேவாக இருக்கலாம் என்று விக்கிபீடியா கட்டுரை எழுதியவரே சொல்லியிருக்கிறார். நான் சொல்லவில்லை. விக்கிபீடியா சொல்கிறது. நான் சொன்னால் படிக்கும் உங்களுக்கு சந்தேகம் வராது என்று தெரிந்தாலும் சந்தேகமிருப்போரின் வீடுகள் அருகில் இல்லாத காரணத்தால் இதோ சுட்டி தருகிறேன். படித்துத் தெளிவுறலாம்.

ஷா ருக் என்று பிரபலமாக இந்திப்படவுலகில் அறியப்படும் நடிகரின் அல்லக்கைதான் இந்த சொந்தி. உண்மையில் சொல்லப்போனால் ஆடு/குரங்கு மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஷா ருக் 'அசத்தப்போவது யாரு'வில் வந்தால் நிரந்தர சாம்பியனாகியிருப்பார். உலகெங்குமுள்ள தமிழர்களின் உள்ளங்களில் ஒளிவிளக்கேற்றும் பேரன்புமிக்க இயக்குநர் திலகம் ஆண்ட்ரூ இவரை ஷோ வில் சேர்க்க ஆவன செய்தால், தமிழன் டிவி பார்த்து சிரித்தே சிரித்தே தன் சோகமனைத்தையும் மறந்துவிடுவான். உடனே போய் நேச்சர் பவர் பார் சோப்பும் வாங்குவான்.

இந்த சொந்தி ஒரு எளுத்தாளனே அல்ல என்பதற்கு என்னிடம் ஆதாரம் இருக்கிறது. இவனுடைய 'படைப்புகள்' காலச்சுவட்டிலோ, தீராநதியிலோ ஒருதடவை கூட பிரசுரிக்கப்பட்டதில்லை. சிற்றிலக்கிய சம்மேளனத்தின் R&D பிரிவான ஞாநியின் பூணூல் என்ற நுண்ணாராய்ச்சியில் இவன் பங்கெடுத்ததில்லை. சல்மாவிடம் கில்மா பண்ணியதில்லை. பா.ராவையோ எஸ்.றாவையோ இவன் வைததில்லை. சிவாஜிக்கு பின் (பா.) விஜயாவது தெரியுமா இவனுக்கு? நவீன இதிகாசகர்த்தா கவிப்பேரரசுவைத் தெரியுமா? குறைந்தபட்சம் வெளிக்கிட்டிருக்கும் மார்பகங்களும் கீறப்பட்ட யோனிகளும் என்று ஒரு கவிதையாவது எழுதியிருந்தானெண்டால் இவன் பெண்ணீயவாதி என்றாவது ஒத்துக்கொண்டிருக்கலாம். அதற்கு வழியில்லை. இதை நான் சொல்லவில்லை. வரலாறு சொல்கிறது. பேரறிஞர்கள் சொல்கிறார்கள். நான் வழிமொழிகிறேன் அவ்வளவே.

ஆகமொத்தம் எளுத்தாளனல்லாத ஒரு வெத்துவேட்டு ப்ளாக்கர்.காம்/ஐ.பி.என் தளம் இலவசமாக எழுதத்தருகின்றதே என்ற -ஓசியில் கொடுத்தால் எதையும் நக்கிப்பார்க்கும் அறிவிலிகளின் வழியில் ஒரு ப்ளாகை ஆரம்பித்து இவன் எழுதிக்கிழிப்பதையும் எழுத்து/படைப்பு/ஆக்கம் என்ற போலிப்போர்வையில் படிப்பவரை ஏமாற்றிக்கொண்டிருக்கிறான்.

இந்த சொந்தி சொல்கிறான். ஷாருக் கான் இந்திய சினிமாவின் ரோஜர் பெடரராம். @#@$^#&*@*(&^@)(*__(_*(*@^#@%%$@!

நீயெல்லாம் ஒரு ஆம்பிளையாடா? குடிபோதையில் இருப்பவர்கள் எழுதியதையெல்லாம் பிரசுரிக்கும் ஐ.பி.என் ஏனிப்படி ஷாருக்கிற்கு அல்லக்கையாக இருக்கிறது? ஒரு கமல்ஹாசனோடு ரோஜரை ஒப்பிட்டாலும்கூட பொறுத்திருந்திருப்பேன். போயும் போயும் ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்டோட கம்பேர் செய்ய என்ன துணிச்சல்? நீ எந்தக் கடையில் சாராயம் வாங்குகிறாய்?

உனக்கு ஷா ருக்கை அப்படி பிடிக்குமென்றால் பால் அபிஷேகம் செய், கட் அவுட் வை, அலகு குத்தி காவடி எடு. எப்படி என்று சொல்லிக்கொடுக்க எங்கள் சூப்பர் ஸ்டார்/தளபதி/அஞ்சா நெஞ்சனின் தொண்டர்கள் வரிசையில் நின்று காத்திருக்கிறார்கள். ஆனா அடக்கம் என்ற சொல்லிற்கும், திறமை என்ற சொல்லிற்கும் நவீன விளையாட்டுலக அகராதியில் இலக்கணமாக திகழும் ரோஜரை தயவு செய்து உன்னோட குப்பைத்தொட்டிற்குள் இழுக்காதே. விளைவுகள் விபரீதமாக இருக்கும்.

215. தங்கர் பச்சானின் நாரிப் போன சிஸம்

சன் டி.வி காமெடி டைம் நிகழ்ச்சி இன்னிக்கு. தங்கர் பச்சான் சிறப்பு விருந்தினர். சிட்டிபாபு கொஞ்சம் ஒதுங்கியே நின்று கொண்டிருந்தார். அது தங்கரிடம் இருக்கும் பயம் காரணமாகவா அல்லது வாகாக பக்கத்திலிருக்கும் பெண்ணிடம் உரசவா என்று சந்தேகம் வரும் அளவுக்கு ஒதுங்கி இருந்ததாலேயே இதுகூட இப்பதிவில் ஒரு வரிக்காக ஒதுக்கீட்டை பெற்றிருக்கிறது என்று நீங்கள் புரிந்துகொள்ளலாம்.

முதலில் பேசிய தங்கர் தான் லட்ச லட்சமாய் சம்பாதிக்க வாய்ப்புகள் இருந்தும் சினிமா என்னும் மீடியத்தின் ஆளுமையையும் அதை சினிமாக்காரர்கள் எப்படி பொறுப்பில்லாமல் கையாளுகிறார்கள் என்பதையும் கண்டு வெந்து வெதும்பி நொந்து நொறுங்கி சினிமாவையே redefine செய்து தன் கரத்தில் நிலைநிறுத்த இத்துறையில் இறங்கி சமூக சேவை செய்து வருவதாக சொல்லிக்கொண்டிருந்தார்.

காமெடி டைம் சுயசொறிதல் டைமாக (நன்றி: மோகன்) மாறிக்கொண்டிருப்பதை உணர்ந்த சிட்டி வாரந்தோறும் வரும் லட்சோப லட்சம் கடிதங்களிலிருந்து ஒன்றை பொறுக்கி வழக்கமான கெக்கே பிக்கேவை விடுத்து நேரடியாக காமெடி டைம் சிட்டிபாபு என்றவுடன் பளிச்சென்று அடையாளம் கண்டுகொண்டார் இரும்புலியூரைச் சேர்ந்த நேயர்.

சிட்டி சொ.செ.சூ வாங்க ஆசைப்பட்டோ என்னவோ நேயரிடம்..."இன்னிக்கு நமக்கு சிறப்பு விருந்தினர் இருக்காரு.. அவர் யாருன்னு தெரியுமா?

மறுமுனை: தெரியலையே சார்..

சிட்டி: பள்ளிக்கூடம் படம் பாத்தீங்களா..

மறுமுனை: பாத்தேனே

சிட்டி: அதுல வர்ற அம்மாடி கேரக்டர் பண்ணவரத் தெரியுமா

ம.மு: தெரியலையே...

சிட்டி: சரி அந்தப் படத்தோட டைரக்டரத் தெரியுமா?

ம.மு: நினைவுக்கு வரல சார்

(இப்போது தங்கரின் முகத்தை பார்த்திருக்க வேண்டும்... :))

சிட்டி: சரி.. அழகி படமாவது பாத்தீங்களா?

ம.மு: பார்த்தேனே சார். பார்த்தீபன் நடிச்ச படம்.

சிட்டி: அந்தப்படத்தோட டைரக்டரத் தெரியுமா?

ம.மு: உஹும்.. தெரியல சார்...

சிட்டி: நிலைமை காமெடியாக மாறுவதை புரிந்து உஷாராகி கேள்விகளை மேலும் கேட்காமல் 'தங்கர் பச்சான் சார் வந்துருக்காரு. அவரத்தெரியுமா?'

ம.மு: ஓ... தெரியும் சார்.. ஆனா முன்னால பேரு மறந்துருச்சு..

சிட்டி: சரி.. இப்ப அவருகிட்ட பேசுங்க..

பேச ஆரம்பித்த தங்கர் கேட்ட கேள்விகளையும் பாத்துருவோம். என்ன செய்ய எனக்கு ரொம்ப போரடிக்குது. டைப்படிக்கணும்னு ஆசையாவும் இருக்கு.

அதோட கொஞ்சம் அதிகமாகவே பிரசங்கிக்கொண்டிருந்த நார்ஸிஸ்ஸம் நாரிப்போன ஸிஸம் ஆனதில் பொங்கிக்கொண்டிருந்த தங்கர் பேசியதுதான் காலத்தின் கொடுமை. அதுக்கு அந்த நேயர் என்ன காரணத்தினாலோ பதிலே சொல்லாம விட்டுட்டாரு.

தங்கர்: வணக்கம்..

ம.மு: வணக்கம் சார். சாரி. சட்டுனு பேர் நினைவுக்கு வரலை..

தங்கர்: என்ன பண்ணிகிட்டிருக்கீங்க?

ம.மு: (என்ன சொன்னார்னு எனக்கு நினைவில்லை)

தங்கர்: சரி. என்ன படிச்சிருக்கீங்க?

ம.மு: நான் டிகிரி படிச்சிருக்கேன் சார்

தங்கர்: டிகிரி படிச்சிருக்கேன்னு சொல்றீங்க. ஆனா ஒரு படத்தோட டைரக்டர் யாருன்னு தெரியலேன்னு சொல்றீங்களே..

ம.மு: மறந்துருச்சு சார்.

தங்கர்: ஒரு படத்துல நடிக்கறவங்க மூஞ்சியே பாத்துகிட்டிருந்தா எப்படி? அதுக்கு காரணகர்த்தா டைரக்டர் தானே?

ம.மு: ???????

தங்கர்: இது உங்களுக்கே வெட்கமா இல்லியா?

ம.மு: ??????? (சொல்லாமல் விட்டது WTF?)

காமெடி டைம் சீரியஸ் டைம் ஆகறத உணர்ந்த சிட்டி: இதோ உங்களுக்கான காமெடி காட்சிய பார்த்து எஞ்சாய் பண்ணுங்க....

--------------------------
தங்கருக்கு கோவம் வந்ததுக்கு காரணம் தான் யாருன்னு தன் படத்தோட பேர வச்சு நேயரால கண்டுபிடிக்க முடியாம போனதுனாலயாம். அதோட தன் பேர விட்டுட்டு ஹீரோ பேரப் போய் ஞாபகம் வச்சுத் தொலச்சிருந்தது இன்னமும் வெறுப்பேத்திருச்சு.

--------------------------
இதுக்கு சம்பந்தம் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். வேறொரு படத்தோட டயலாக்..

பாண்டி: ஜானகி.. கொஞ்சம் மரியாதையா பேசு.. சார் தான் டைரட்டரு..

ஜானகி: என்ன பெரிய டைரக்டரு? இந்தாளு என்ன அசோக் லேலண்டுக்கு டைரக்டரா இல்ல டிவிஎஸ்ஸோட டைரக்டரா...? வெறும் சினிமா டைரக்டர் தானே?

பாண்டி & டைரக்டர்: ???????

படம்: அவ்வை சண்முகி
டைரக்டர்: கே.எஸ்.இரவிக்குமாராக இருக்கலாம்
காட்சியில் நடித்த நடிகர்கள்: கமல்ஹாசன், மீனா, ரமேஷ் கிருஷ்ணா, டான்ஸ் மாஸ்டர் ரகுராம்
---------------------------

டிஸ்கி:
1. இப்படி கேனத்தனமா நேயர் மேல தங்கர் கோவப்பட்டது மட்டுமே இப்பதிவிற்கான காரணம்.
2. தங்கர் பச்சானின் படங்களை எதுவும் நான் இதுவரை பார்த்ததில்லை.
3. சன் டிவி. காமெடி டைமெல்லாம் பாக்குற கேஸானு கேக்கறவங்களுக்கு பதில் சொல்லாமல் என் தலையை குனிந்து கொள்கிறேன்.

214. கொத்தனாரின் இனவெறி நுண்ணரசியல்!

சமீபத்தில் கொத்ஸோட ராஜ் பட்டேல் பற்றிய பதிவை படிக்க நேர்ந்தவுடன் ரொம்ப நாளாக எழுத நினைத்துக்கொண்டிருந்த இவ்விஷயத்தை எழுதியே விடுவது என்று முடிவெடுத்தேன். பிரபலமான ஆர்ச்சீஸ் காமிக்ஸில் புதிதாய் நுழைந்திருக்கும் ராஜ்பட்டேல் என்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. பிச்சைக்கார இந்தியனாக காட்டாமல் நல்லமுறையில் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்ட வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவன் என்றும் சொல்லப்பட்டிருப்பதை குறிப்பிடுகிறார். ஆனால் என்னை இப்பதிவை எழுத தூண்டியது பின்வரும் வரிகள் தான்..

//அமெரிக்காவில் இந்தியர்கள் எங்கும் வியாபித்து வருவதை காண்பிக்க இப்படி ஒரு பாத்திரத்தை உருவாக்கிய ஆர்ச்சி காமிக்ஸ் நிறுவனத்தாருக்கு நமது பாராட்டுக்கள்.//

மதர் இந்தியா ஜிந்தாபாத் என்று கோஷம் போடவில்லையென்றாலும் ஒருவிதமான பெருமை தொனிக்கும்படியே இவ்வரிகள் எழுதப்பட்டிருக்கின்றன. இதைப்பற்றி சாட்டிலேயே கேட்டிருக்கமுடியும் என்றாலும் நிற்க வைத்து சாட்டையை இப்படி சுழற்றினால் மேலும் பலரின் பார்வைகளையும் புரிந்துகொள்ளமுடியுமே என்ற ஆசையினாலேயே இது. அமெரிக்காவில் மற்ற இனத்தின் வம்சாவழியினரை விட இந்தியர்கள் பெரும்பாலும் நல்ல நிலைகளில் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே! :) இதற்குரிய காரணங்களை ஆராய்வது நம் நோக்கமல்ல. அமெரிக்கா தவிர ஏனைய மேற்கத்திய நாடுகளிலும், இந்தியர்கள் தத்தமது நாடுகளில் இருக்கும் கலாச்சாரத்தோடு மற்ற இனங்களை விட இணக்கமாக இருக்கிறார்கள் என்பதும் கண்கூடு. அப்படி சுமூகமான நிலை நிலவும் பட்சத்தில் ஒரு சித்திரக் கதையில் இந்திய கதாப்பாத்திரம் சேர்க்கப்பட்டது newsworthyஆ என்ற கேள்வி நெருடுகிறதா இல்லையா? வெள்ளைக்காரனிடம் நற்சான்றிதழ் வாங்க வேண்டிய ஆர்வம் இருப்பதும் தெளிவாகிறதே?

ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்று பிடிக்கும். ஆர்ச்சீஸ் பிடித்ததால் அதிலும் தன்னால் அடையாளப்படுத்திக்கொள்ள கூடிய ஒரு கதாபாத்திரம் இணைக்கப்பட்டுள்ளதை மட்டுமே வெளிப்படுத்தியிருந்தால் இந்த சிற்றிலக்கிய சிண்டுபிடிக்கும் பதிவு கண்டிப்பாக வந்திருக்காது. ஆனால் கடைசி வரிகள்? வெளிநாடு வாழ் இந்தியர்கள்/இந்திய வம்சாவழியினர்/இந்தியாவின் இந்தியர்கள் இவர்கள் அனைவரும் ஒன்றே என்ற நிலைப்பாட்டுடன்: இதில் ஒரு அமெரிக்க சிறுவர் பத்திரிக்கையில் சித்திரப் பட கதாபாத்திரம் தோன்றியதால் இந்தியர்களின் தகுதியும், திறமையும், பாரம்பரியமும், உழைப்பும் அதற்கு கிடைத்த சமூக அந்தஸ்தும் இன்னும் ஒருமுறை நிருபிக்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி என்ற பொருள் வருகிறதல்லவா? இப்படி நம் இருப்பை நிருபிக்கவேண்டியதற்கான அவசியமோ நிர்பந்தமோ இருப்பதாக தெரியாத போது இதன் பயன் தான் என்ன?

இதே இழையில் தொடர்வோம். ஏனெனில் இது இந்தப்பதிவின் மையக்கருத்தல்ல. கொத்ஸின் பதிவிலும் அதன் பின்னூட்டங்களிலும் வெளிப்பட்டிருக்கும் சில கருத்துகள் benign வகையென்றால் நம் இந்தியர்களிடையே இருக்கும் இதே நோயின் கோர வடிவம் இன்னமும் malignant ஆனது. அதை நம் அரசியல்வாதிகள் சுரண்டி மைலேஜ் பெற முயல்வது புரிந்துகொள்ளக் கூடியதென்றாலும் படித்த மக்களும் அதற்கு துணைபோவது மிகவும் வருந்தத்தக்கது.

பெருமைமிகு இந்தியர்கள் சிறு பட்டியல் பார்ப்போமா? இவர்களை உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக தெரிந்திருக்கும். முழுமையான லிஸ்ட் ரொம்ப ரொம்ப பெருசு.

1. சுனிதா வில்லியம்ஸ் (விண்வெளி விஞ்ஞானி)
2. கல்பனா சாவ்லா (விண்வெளி விஞ்ஞானி)
3. சுப்ரமண்யம் சந்த்ரசேகர் (நோபல் பரிசு பெற்றவர்)
4. அமர் போஸ் (bose corp)
5. மனோஜ் நைட் சியாமளன் (திரைப்பட இயக்குநர்)
6. இந்த்ரா நூயி (பெப்சியின் தலைவர்)
7. அமர்த்யா சென் (நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர்)
8. ஹர் கோவிந்த் குரானா (நோபல் பரிசு பெற்றவர்)
9. ஜுபின் மெஹதா (கம்போஸர்)
10. மிரா நாயர் (க்ராஸ் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்)
11. சபீர் பாட்டியா (ஹாட்மெயில் கண்டுபிடித்தவர்)
12. அருண் சாரின் (வோடாபோன் CEO)

இவர்களின் சாதனைகளை இந்திய பத்திரிகைகள் வாயிலாக நாமும் அறிந்துகொண்டுள்ளோம். இவர்கள் அனைவரும் இந்தியர்கள் என்று ஏதாவதொரு கட்டத்தில் உங்கள் வெளிநாட்டு நண்பர்களுடன் சண்டையிட்டிருப்பீர்கள்..பாருங்க நாங்க எவ்வளவு புத்திசாலியென்று. இந்திய அரசாங்கமே இவர்களில் பலரை கௌரவப்படுத்தியுள்ளது. இவர்கள் படித்த பள்ளிக்கூடங்கள் கல்லூரிகள் போன்றவற்றிற்கு ம்யூசியம் டூர் வைக்கக்கூடிய அளவுக்கு கூட்டம் வருகிறது. இவர்களின் வாழ்க்கை ஒவ்வொரு இந்தியனுக்கும், அதாவது கனவு காணும் "இந்தியனு"க்கும் ஒரு படிப்பினை என்று திரும்ப திரும்ப சொல்லப்படுகிறது.

இவ்வளவு தெரிந்த உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? இவர்களில் யாருமே இந்தியர்களே இல்லை!

1. திருமதி சுனிதா தான் இப்போதைய ஹாட் பேவரிட். இவர் முழுக்க இந்திய வம்சாவழியினர் அல்லர். ஸ்லோவேனியத் தாயும் இந்தியத் தந்தையும் கொண்டவர். இவர்களின் பெற்றோர் அமெரிக்காவில் செட்டிலாகி அங்கேயெ பிறந்தவர் சுனிதா.

2. திருமதி கல்பனா சவ்லா - இவர் இறந்தபோது இந்தியாவே அழுதது. மனிதாபிமான முறையில் அதைப்பற்றி தவறு கூற இயலாது. 1983 அமெரிக்கரை மணந்த கல்பனா, 1990களில் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்.

3. திரு சந்த்ரசேகர் - சித்தப்பா சி.வி.இராமனுடன் இருந்த குடும்பப்பிரச்சனைகளாலும், கேம்ப்ரிட்ஜில் சந்தித்த கல்விசார்ந்த பிரச்சனைகளாலும் அமெரிக்காவில் குடியேறியவர். 1953-ல் குடியுரிமை பெற்றவர்.

4. சுதந்திர போராட்டத்தில் பங்குபெற்ற போஸின் தந்தை கல்கத்தாவில் ஆங்கிலேய ஆட்சியின் நெருக்கடியால் வெளியேறியவர். சுதந்திரத்துக்கு பிறகு தாயகம் திரும்பவில்லை. திரு அமர் போஸ் அங்கேயே பிறந்து படித்து வளர்ந்து தொழில் தொடங்கி வெற்றி பெற்றவர்.

5. திரு மனோஜ் சியாமளன் - சென்னையில் பிறந்தவரென்றாலும் இவரின் குடும்பமும் அமெரிக்காவின் குடிகள்.

6. திருமதி இந்திரா நூயி - சென்னையைச் பிறந்த இந்திரா நூயி, அமெரிக்காவிற்கே நடுவிரலை காட்டியவரென்றாலும் அமெரிக்க பிரஜை ஆனதுதான் வரலாறு.

இது சாம்பிள்தான். ஆகக்கூடி, சொந்த காரணங்களுக்காகவோ அல்லது பெற்றோர்கள் இந்தியாவை விட்டு வெளியேறிய காரணத்தாலோ விதிவசத்தால் இவர்கள் அமெரிக்க பிரஜைகள் ஆகிவிட்டனர். இவர்கள் இந்தியர்களோ அல்லது வெளிநாடு வாழ் இந்தியர்களோ இல்லை. (Indian citizens or NRIs). இவர்கள் வெளிநாடு வாழ் இந்திய வம்சாவழியினர் (People of Indian Descent). முன்னே சொன்னவற்றிற்கும் வம்சாவழியினருக்கும் இருக்கும் வித்தியாசத்தை நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இவர்கள் அனைவரும் சாதித்தவை சாதாரணமானவை அல்ல. அவற்றை நான் குறைத்து மதிப்பிடவில்லை. அமெரிக்க குடியுரிமை பெற்றபின் இந்தியாவின் மேல் இவர்களுக்கு பாசமும் இருக்கலாம். ஆனால் இவர்கள் இந்தியர்கள் என்ற பட்டம் எதற்கு வழங்கவேண்டும்? இவர்களின் சொந்த தேவைகளுக்காகவோ, பெற்றோர்களின் வற்புறுத்தல்களுக்காகவோ நம் நாட்டு குடியுரிமையைத் துறந்தவர்களை நமக்கு ரோல் மாடல்களாக காட்டுவதன் அவசியம் என்ன?

இந்தியாவில் பிறந்த இந்தியர்களுக்கு இவர்கள் எப்படி வழிகாட்டிகளாக இருக்க முடியும்? இந்தியாவில் வேலையில்லை என்ற வேலிடான காரணமோ, அல்லது பெற்றோர்கள் இந்தப் படுகுழியிலிருந்து எப்போது தப்பிப்போம் என்ற காரணத்திற்காக இந்தியாவைத் துறந்தது நியாயப்படுத்த வேண்டுமா? வேலையில்லை என்றால் வெளிநாடுகளுக்கு சென்று வேலை பார்ப்பதை தவறு என்று சொல்லவில்லை. நம் அனைவரின் சூழ்நிலை காரணமாக வெளிநாடுகளுக்கு செல்லவேண்டியது அவசியமாகிறது. ஆனால் இந்திய குடியுரிமையை தொலைக்க வேண்டியது அவசியமானதா?

சரி அவர்கள் தொலைக்கிறார்கள்.. சொந்த காரியங்களுக்காக. அவர்கள் அப்படி தொலைத்தபின்பும் வலுக்கட்டாயமாக இந்தியர்கள் என்று தலையில் தூக்கிவைத்துக்கொண்டு கோமாளி ஆட்டம் போட வேண்டியது நமக்கு ரொம்ப தேவைதானா? இந்திய இளைஞர்களுக்கு ஊக்கமளிக்க இந்தியாவைக் கைவிடாத வேறு முன்மாதிரிகளே இல்லையா? மற்ற நாடுகளைப் பொறுத்தவரை ஒருவர் குடியுரிமையை துறக்கும்வரை அவர்களுக்கு கொடிபிடிப்பார்கள். அதே துறந்துவிட்டால் அவர்கள் வெளிநாட்டுக்காரர்கள் ஆகிவிடுவார்கள். இதுதான் பெரும்பாலும்.

இப்படி இந்தியாவை துறந்தவர்களின் உதவியில்லாமல் நம் பாரம்பரியத்தையோ, உழைப்பையோ, உலகில் நம் இருப்பையோ நியாயப்படுத்திக்கொள்ள முடியாதா?


டிஸ்கி: 1. சுனிதா இந்தியா வந்தபோது பிரதீபா பாட்டிலும் மன்மோகனும் அவர்களை சந்தித்திருக்கிறார்கள் என்ற செய்தி படித்தவுடனேயே இதை பதிய நினைத்தேன்.

2. அப்புறம் வெளிநாடு போனாலும் இந்தியர்கள் இந்தியர்கள் தானு சொல்றவங்களுக்கு: இத்தாலியைச் சேர்ந்த சோனியா அம்மையார் ராஜிவை திருமணம் செய்தவுடன் இந்தியர் ஆகிவிட்ட லாஜிக்கின் படி இந்த வாதம் செல்லாது என்று சொல்ல விரும்புகிறேன்.

3. டைட்டிலுக்கு காரணமும் சொல்லணுமா?? :)

213. மன்னர்களின் கிராமம்!

எழுத ஒண்ணும் மேட்டர் பெரிசா இல்லாததால போட்டோ போட்டு கதை சொல்லலாம்னு நினைக்கிறேன். Tsarskoye Selo (மன்னர்களின் கிராமம்) பீட்டர்ஸ்பர்க் நகரத்திலும் அதன் சுற்றுப்புறத்திலும் இருக்கும் பல அரண்மனை வளாகங்களில் முக்கியமானது.

இந்த வளாகத்தில் இரண்டு முக்கியமான அரண்மனைகள் இருக்கின்றன. அவற்றின் உள்ளே பிறிதொரு நாள் செல்லலாம். அதுவரைக்கும் வெளியே சுற்றுவோம்.

மென்ஷிக்கோவ் என்பவருக்கும் சொந்தமான இடத்தை 1708-ல் பீட்டர் மன்னர் (Peter the Great) தன் மனைவி கேத்தரீனுக்கு பரிசாக அளித்தார். கேத்தரீன் ராணியானபின் உருப்பெற்றதே இந்த வளாகம். சுமார் 750 ஏக்கர்கள் பரந்துவிரிந்து கிடக்கிறது அரண்மனைகளும் சுற்றியுள்ள தோட்டங்களும். அரச குடும்பத்தினரின் கோடைக்கால வாசஸ்தலமாக சுமார் இரண்டு நூற்றாண்டுகள் பிரபலமாக இருந்தது. அதற்கப்புறம் என்னாயிற்று என்று கடைசியில் பார்ப்போம். அதற்கு முன்னர் வளாகத்தினுள் நுழைவோம்.

சீராக பராமரிக்கப்படும் தோட்டமும் அதிலுள்ள சிற்பங்களும் அட்டகாசமானவை. அரண்மனையின் பிராதான கட்டடத்துக்கு செல்லும் அழகிய பாதை இதோ...


1. The Main Alley




இதே பாதையில் முன்னே சென்றால் இரு குளங்களைக் காணலாம். வலப்புறம் இருப்பது கண்ணாடிக்குளம் என்றழைக்கப்படுவது. ஏன் என்று சொல்லவேண்டியதில்லை என்று நினைக்கிறேன். அதில் தெரியும் மஞ்சள் கட்டடம் அரச குடும்பத்தினரின் தனிப்பட்ட குளியல் குதூகலங்களுக்கானது. :) இரண்டாம் உலகப்போரின் போது முற்றிலுமாக அழிக்கப்பட்டிருந்தாலும் 1950 களில் அசலுக்கு இணையான முறையில் புணர்நிர்மாணம் செய்யப்பட்டது.


2. The Mirror Pond and The Washroom of their Highnesses




முதலாவது எகேத்தரீன் ராணி (Catherine the Great) இங்கே தன் வாழ்க்கையின் பெரும்பாதியை கழித்த அரண்மனை. முற்றிலுமாக புணர்நிர்மாணம் செய்யப்பட்டு கண்ணைக்கவரும் ரஷ்யன் பரோக் வடிவமைப்பில் ஜொலிக்கிறது. செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கிலுள்ள ஹெர்மிடாஜ் அரண்மனைக்கும் இதற்கும் வடிவமைப்பில் நிறைய ஒற்றுமைகள் இருப்பதை எளிதில் கண்டுகொள்ளலாம். இதன் பிரம்மாண்டத்தையும் நீலம், வெள்ளையுடன் தங்கம் ஜொலிப்பதை போட்டோவில் justify செய்ய முடியாதென்றே நினைக்கிறேன். உலகப்போரின் போது பெரும் சேதமடைந்த இந்த அரண்மனையில் மொத்தம் 57 அறைகள் இருந்திருக்கின்றன. இப்போதோ வெறும் 29 மட்டுமே பொதுப்பார்வைக்கென திறக்கப்பட்டுள்ளன. மற்றவற்றில் இன்னமும் வேலைகள் நடைபெறுகின்றன. இவ்வரண்மனைக்குள் இருக்கும் அறைகள் உலகின் மற்ற அரச குடும்பங்களையே கூனிக்குறுக செய்துவிடும் அளவுக்கு இருப்பவை. உதாரணமாக இங்கே சென்று பார்க்கலாம்.

அரண்மனையைச் சுற்றி ஆங்கில ஸ்டைலில் சிறிய structured parkஉம் அதைச் சுற்றி பரந்த landscaped parkஉம் இருக்கின்றன.


3. Baroque Facade of The Catherine Palace




சார்லஸ் கேமரோன் என்ற ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கட்டிடவியல் வல்லுநரை பணிக்கமர்த்தி உலகின் பல்வேறு கலாச்சாரங்களின் கட்டிட சின்னங்களை ஒரே இடத்தில் கொண்டு வர கேத்தரீன் ராணி விரும்பினார். விளைவு ரோமன் தூண்களும், பாபிலோனியா ஸ்டைலில் தொங்கும் தோட்டங்கள் என புதையலே இருக்கிறது.

4. Cameron Gallery









அருகிலுள்ள பெரிய ஏரியை சுற்றி அழகான நடைபாதை போட்டு வைத்திருப்பதால் நடக்க அருமையான இடம். பகோடாக்கள், எகிப்தின் ஓபெலிஸ்க்கள் என பல காட்சிகளில் முதன்மையானது முற்றிலும் மார்பிளால் ஆன இந்தப் பாலம்.

6. The Marble Bridge





டூரிஸ்ட்களின் தாகம் தீர்க்க அரண்மனை வாயிலில் முளைத்திருக்கும் கபேயிலிருந்து...
7. The Regular garden - view from the cafe





ஓரளவுக்கு சுத்தியாச்சா.. சரி கொஞ்சம் தாண்டி அரண்மனைக்கு பின் பக்கம் போவோம். சுற்றுலாப்பயணிகளின் கண்களில் இன்னும் அவ்வளவா படாதது இது. அலெக்ஸாண்டர் அரண்மனை. கேத்தரீன் பாட்டி தன் செல்லப்பேரன் அலெக்ஸாண்டர் பாவ்லோவிச்சுக்காக ஆசைஆசையா கட்டினது இது. கேத்தரீன் அரண்மனைக்கும் முற்றிலும் மாறுபட்ட வடிவில் இருக்கும் இவ்வரண்மனையும் அதைச் சுற்றியிருக்கும் தோட்டமும் இன்னமும் முழுதாக புணரமைக்கப்படவில்லை. காரணம் முற்றிலுமாக ஜெர்மானியர்கள் ஆக்கிரமிப்பின் போது அழிக்கப்பட்டதுதான்.

இவ்வரண்மனைக்கு இன்னும் ஒரு 'சிறப்பு' இருக்கிறது. பின்னால் இருக்கும் கேத்தரீன் ரஷ்ய அரச பரம்பரையின் பொற்காலத்தை காட்டுகிறது என்றால் இவ்வரண்மனையில் தான் அரச பரம்பரையே முடிவுக்கு வந்தது. 1917-ல் புரட்சிப்படையினரால் சைபீரியாவுக்குச் அழைத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டனர் என்று பலருக்கும் தெரியும். ஆனால் அதே வருடம் மார்ச் முதல் ஆகஸ்ட் மாதம் நிக்கோலாஸ் II மன்னரும் அலெக்ஸாண்ட்ரா ராணியும் அவர்களின் ஐந்து குழந்தைகளும் இங்கேதான் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தனர். நிக்கோலாஸும் அலெக்ஸாண்டராவும் தோட்டங்களில் உலாவ பெருந்தன்மையாக அனுமதிக்கப்பட்டிருந்தார்களாம்! என்ன கொடுமை சரவணன் இது?

அவர்கள் நினைவாக ஒரு சிறிய மார்பிள் தக்டு இருக்கிறது அரண்மனையின் பிரம்மாண்டமான வாயிலில். அவ்வளவுதான். அரச பரம்பரையின் வரலாறு முற்றும் என்று நினைவுபடுத்தும் வகையில்.


8. Ruins of Alexander Palace




நியு யார்க் டைம்ஸில் 1917-ஆம் வருடம் நிக்கோலாஸின் வீட்டுச்சிறைப் பற்றி வந்த கட்டுரை.


அதிகாரப்பூர்வமான தளம்

----
இவற்றைத் தவிர அலெக்ஸாண்டர் லைசியம் (Lyceum) என்ற கல்வி நிறுவனமும் இங்கே இருக்கிறது. இதன் மிகப் பிரபலாமான மாணவர் அலெக்ஸாண்டர் செர்கெயெவிச் புஷ்கின். ரஷ்யாவின் முதன்மையான கவிஞர் என்று கருதப்பட்டவ்ர். இவரின் நூற்றாண்டை ஒட்டி 1930களில் இந்த ஊருக்கே புஷ்கின் என்று பெயர் சூட்டியது சோவியத் அரசு. பெரும்பாலான ஊர்களைப் போல் அதன் பழமையான பேரே மீண்டும் வைக்கப்பட்டிருக்கிறது, சோவியத் வீழ்ச்சிக்கு பிறகு.

212. இராமர் பாலம் பற்றி...

Боже Мой! Мост Рама. Кажется, главная тема в Мире тамильского блогса в течение прошлых нескольких недель и видя, что мелкое препирательство продолжается, поскольку ещё в полном колебании, чувствуя, чтобы не быть не учтен, думал, будет хорошая идея, по крайней мере иметь пост с названием пользы названия.

Однако как всегда Му. Ка (மு.க.) и его так называемое едкое остроумие только продолжаеться подчеркнуть на факте, что калайнгяр все ещё не учился быть политически правильным или не заботится так или иначе. Менее сказанный лучше, как придерживание политически правильных стендов сохранены для оппозиции в нашей великолепной демократии. Это также, не принудительный для каждого из них.

Так или иначе, училься ли Рам в технической школе - вопрос, игнорируемый только для его ребячливости. Что является более интересным, - то, что много 'рационалистов' включают другие несвязанные аспекты его жизни с этим незначимим вопросом, включая этническую принадлежность его главного противника.

В эти дни я автоматически улыбаюсь, видя такую риторику особенно когда таким фанатизмом и уклоном открыто щеголяют и фактически считается признаком прогрессивной культуры, что это не потрясает меня больше.

Кто действительно хочет знать то, что большинство людей думают? Если подвергнуто сомнению, эти рационалисты бросят другую беспечную рукавицу объявляющую, как будто была установленная правда. 'ведик индусы, являющиеся отличающимся от цивилизованных индусов" - следовательно в этой окольной логике ведик индусы фактически формируют меньшинство. В чем, я не знаю, приобретут ли они квалификацию каких-нибудь специальных поддержек!:))

Ну ладно, думаю что отступаю.. Факт, которую я хотел доказать в этом, был очень прост: с таким названием, приложенным к посту, я предполагаю, что люди пойдут в любые длины, чтобы прочитать блог как это, даже если это было написано на незнакомом языке. Однако, большинство этих людей говорит со смыслом ложной власти, которая только иллюстрирует их минимальный пониманию действий Рамы - характеризируют и изучают юего в пути который удовлетворяет их собственному невежеству - будет интересно знать эсли этих же людей занимают хотябы одну минуту, чтобы исследовать то, что сказано в первоначальном тексте и множестве его интерпретаций, связанных с каждым решением и действие Рама.

Наконец, если люди рассматривают меня, безработный для издание полного блога на русском языке, то, как называть людей, которые фактически идут в боли перевода и чтения этого ничего не стоящего уппума? Ещё смешное будет если не понимает даже о чём идёт речь! :P

பின் குறிப்பு: இப்பதிவு வேற்றுமொழியில் இருப்பது தற்செயலானதல்ல.

மொழிபெயர்ப்பு உதவிக்கு இங்கே சுட்டவும். இங்கேயும் சுட்டலாம்.

211. என் அப்பா மரு. இராமதாஸ் இல்லையே!

மத்திய அமைச்சர் அன்புமணி இராமதாஸோட திட்டம் புல்லரிக்க வைக்குது. கிராமத்துல, சிறுநகரங்கள் கட்டாய சேவைனு மருத்துவ படிப்பை இன்னும் ஒராண்டு நீட்டுறாராம். அவனவன் அரியரில்லாம படிச்சு முடிச்சு பட்டம் வாங்கவே வயசு இருபத்தியஞ்சு ஆயிடுது. வெறும் எம்.பி.பி.எஸ்னா நீங்க என்ன.. கிராமத்து ஆளுங்க கூட போவாங்களா?

டாக்டர் கிட்ட போகணும்னா ஒடனே எம்.எஸ், எம்.சி.ஹெச் கிட்ட மட்டுமே போவோம்க வேண்டியது. ஒரு எம்.எஸ்ஸோ எம்.டியோ வாங்க ஒரு மனுசன் எவ்வளவு உழைப்பும் காலமும் செலவழிக்கணும்னு ஒருத்தருக்கும் இங்கே கவலையில்ல. சீட் அளவ அதிகப்படுத்துங்கன்னா அதுவும் மாட்டீங்க. எழுது பரிட்சைய பத்துவாட்டி. அந்தாளு பாவம் ஒரு இருபது வருஷத்த, மத்த தொழில் ஆளுங்களவிட அதிகமா செலவழிச்சு நாப்பது வயசுல வெளிய வந்தாருன்னா "இதோ பாருய்யா.. ஒண்ணுமில்லாத கன்சல்டிங்குக்கு இருநூறு ரூபாய் வாங்குறான்னு" கமெண்ட் அடிக்க வேண்டியது. ஏன் பிசாத்து சிவாஜி சினிமா படம் பார்க்க இருநூறு ருபாய் ஒரு டிக்கட் கொடுத்து பாக்குறீங்க. இருநூறு ருபாய்க்கு க்வார்ட்டர் வாங்கி அடிக்கிறீங்க. ஆனா இருபது வருஷம செலவழிச்சு படிச்சு வந்த தகுதியான ஒரு ஆளுக்கு கொடுக்கன்னா மட்டும் கசக்குது.

ஸோ இருபதுவருஷம் எக்ஸ்ட்ரா படிக்கணும்.. பீஸா இருபது ரூபாய்க்கு மேல வைக்கக்கூடாது. வாங்க, அப்படியே வந்து அல்லாரும் லாலிபாப் வாங்கி வாயில் வச்சுட்டு போங்க..

ஆகமொத்தம் வெறும் எம்.பி.பி.எஸ் பத்தாது. அதுக்கப்புறம் வெட்டி முறிச்சு திரும்ப ப்ளஸ் டூ பரிட்சை மாதிரி விழுந்து விழுந்து சில வருஷங்கள் படிச்சாக்ககூட பெரும்பாலும் க்ளினிகல் சப்ஜெக்ட்ஸ் கிடைக்காது. ஏதாவது கிடைக்கும். அப்படி இப்படி அடிச்சு பிடிச்சு அதுவரைக்கும் சொந்தக்காரங்க தொடங்கி 'எங்காத்து அம்பி லாஸ் ஏஞ்சலீஸ்ல "Le Code" எழுதுறான்; விப்ரோல தெரியுமோ னோக்கு.. லட்சத்துக்கு ரெண்டு ரூபா குறைச்சலாத் தராளாம்.. அதனால இன்போஸிஸ் போயிட்டா பொண்ணு' அப்டினு அளந்து விடும்போதே "ஏண்டிம்மா நம்ம விஜய் என்ன செய்றான்.. இன்னும் படிச்சுண்டு தான் இருக்கானா? இந்த நாலாவது அட்டெம்ட்லயாவது செப்டம்பர் Chandigarh PGI லிஸ்ட்ல வருவானா?" அப்படின்னும் கேட்டுப் போறதையும் வாங்கிகிட்டு, வீட்ல இருந்து வெட்டிச்சோறுன்னு பெத்தவங்க சொல்லலேன்னாலும் வீம்புக்காக ஏதாவது பெரிய ஊர்ல பார்ட் டைமா பத்தாயிரத்துக்கும் பதினஞ்சாயிரத்துக்கும் எங்காவது வேலைக்குச் சேர்ந்து படிக்கவும் செஞ்சு ஒருவழியா ஏதாவது மேல்படிப்பு கிடைச்சு அத முடிக்கறதுக்குள்ள முப்பது வயசு காரண்டி. அப்படியே படிச்சு முடிச்சாலும் என்ன வெறும் எம்.டியாப்பா? மேல எந்தப் பீல்டுல பா ஸ்பெஷலைஸ் செய்யப் போறேனு அதே மாமி வந்து கேட்டு, இன்னும் ஏதாவது படிக்க ஆசைப்பட்டு அதே சைகிள் ரிப்பீட் ஆகி வெளிய வரதுக்கு முப்பத்தேழு கம்மி.

இதுல என்னமோ சுரைக்காய் மாதிரி சும்மாதானே கெடக்குற.. போய் இன்னும் ஒரு வருஷம் லேட்டாத்தான் செட்டிலாகேனு அன்புமணி அண்ணாச்சி சொல்றாரு. அதென்னய்யா அது அநியாயம்? மருத்துவர்களெல்லாம் மட்டும் ஏழை, 'தலித்' மக்களோட வரிப்பணத்த சுரண்டி ஏப்பம் விட்டு படிச்சு வந்து நன்றிகெட்ட நாதாரிகளாட்டம் கிராமத்துக்கு போகமாட்டோம்னு போராட்டம் நடத்துறாங்கனு அப்படிங்கற மாதிரி பில்டப்?

வெளிநாடுகளுக்கு போறதோ ஏன் நம்மூர் தனியார் காலேஜ்ல முப்பது நாப்பது கொடுத்து மேல்படிப்பு வாங்கறதோ எல்லாரலையும் முடியிற காரியமா? இங்க இருக்குற எல்லாருக்கும் என்ன மாக்ஸிமம் ஒரு 35 வயசு இருக்குமா? உங்க பாட்ச்ல மெடிசின் எடுத்த பசங்க இப்ப என்ன செஞ்சிகிட்டிருக்காங்கனு யாருக்காவது தெரியுமா? சும்மாதானே இருக்கான்.. போடா கிராமத்துக்குன்னா. நான் கேட்கிறேன்.. "ஏண்டா போவனும்? உனக்கு ஆசையாயிருந்தா நீ போ.. இல்ல அப்டி போயே ஆகணும்னா செட்டில் ஆக வழி சொல்லு.. பணத்த கொடு.. தன்னால போவான். சட்டமே போட வேணாம்"

இன்னிய தேதிக்கு ஸ்டைபண்ட்னு சொல்லி என்ன கொடுக்கிறாங்கனு யாருக்காவது தெரியுமா? +2 முடிச்சு மருத்துவம் சேர்ந்தா என்ன எல்லாரும் தியாகிங்க ஆயிடுவாங்களா? அவனுங்களும் குழந்த குட்டி குடும்பம்னு ஒண்ணுத்த கட்டிக் காப்பாத்த வேணாமா? அததுக்குன்னு வயசுன்னு இருக்கா இல்லியா?

சரி.. இது சம்பந்தமில்லாதது.. விடுங்க.. இங்கன எங்கியோ படிச்சேன்.. எம்.எல்.ஏ எம்.பியெல்லாம் ஆகணும்னா கிராமத்துல வேலை செய்யணும்னுட்டு. நானும் அதே தான் நினைச்சேன். இஞ்சினியரெல்லாம் கிராமத்துக்கு ஒரு கோட் எழுதினாதான் பாரினோ பெங்களூரோ போவ முடியும்னு சட்டம் போடுவீங்களா? ஆடிட்டர்லாம் பண்ணையார் கணக்குப்பிள்ளையாய் ஒரு வருஷம் இருக்கணுமா? வக்கில் ஆர்கிடெக்ட்டெல்லாம்? பி.ஏ, பி.எஸ்.எஸி, பி.எட் படிக்கிறவங்க அப்பன் ஆத்தால்லாம் சொந்தமா காசு போட்டு காலேஜ் கட்டி படிக்கவைக்கிறானுங்களா? என்னங்கய்யா கத விட்டுகிட்டிருக்கீங்க.

கிராமத்து மக்களுக்கு மருத்துவ சேவை வேண்டாம்னு எங்கியாவது சொல்லிருக்கோமா? வேணும்தான். essential servicesனு பந்தாவா பெத்த பேரு கொடுக்கிறீங்க. essential servicesஉக்கு உண்டான தகுதியான பணம் கொடு. போவோம். அம்புட்டுதான் மேட்டரு. கடன உடன வாங்கி படிச்சு எப்போ லைப்ல எழுந்து நிப்போம்னே புரியாம முழிபிதுங்கி நிக்கிற மெடிகோஸ் மேலயா பாத்து பாத்து ஏனுங்கப்பா குண்டு போடறீங்க?

ஏன் பணம் பணம்னு அலையிறோமா? எங்கப்பா இன்னா மரு. அய்யாவா? சோனியாஜிய செல்லுல கூப்பிட்டு 'போனாப் போகுது.. நம்ம பையனுக்கு ஒரு மத்திய அமைச்சர் பதவியாவது போட்டுக்கொடுங்க"னு கேட்கிறதுக்கு. நாங்கள்லாம் சாதாரணப்பட்டவங்க.. எங்கள விட்ருங்க.

210. அம்மநாம் அஞ்சு மாறே

புற்றிள்வாள் அரவும் அஞ்சேன் பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்
கற்றைவார் சடைஎம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி
மற்றும்ஓர் தெய்வந் தன்னை உண்டென நினைந்தெம் பெம்மாற்கு
அற்றிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 516

வெருவரேன் வேட்கை வந்தால் வினைக்கடல் கொளினும் அஞ்சேன்
இருவரால் மாறு காணா எம்பிரான் தம்பிரா னாம்
திருவுரு அன்றி மற்றோர் தேவரெத் தேவ ரென்ன
அருவரா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 517

வன்புலால் வேலும் அஞ்சேன் வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன்
என்பெலாம் உருக நோக்கி அம்பலத் தாடுகின்ற
என்பொலா மணியை ஏத்தி இனிதருள் பருக மாட்டா
அன்பிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே
. 518

கிளியனார் கிளவி அஞ்சேன் அவர்கிறி முறுவல் அஞ்சேன்
வெளியநீ றாடும் மேனி வேதியன் பாதம் நண்ணித்
துளியுலாம் கண்ணராகித் தொழுதழு துள்ளம் நெக்கிங்கு
அளியிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 519

பிணியெலாம் வரினும் அஞ்சேன் பிறப்பினோ டிறப்பும் அஞ்சேன்
துணிநிலா அணியினான்தன் தொழும்பரோடழுந்தி அம்மால்
திணிநிலம் பிளந்துங் காணாச் சேவடி பரவி வெண்ணீறு
அணிகிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 520

வாளுலாம் எரியும் அஞ்சேன் வரைபுரண் டிடினும் அஞ்சேன்
தோளுலாம் நீற்றன் ஏற்றன் சொற்புதம் கடந்த அப்பன்
தாளதா மரைகளேத்தித் தடமலர் புனைந்து நையும்
ஆளலா தவரைக்
கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 521

தகைவிலாப் பழியும் அஞ்சேன் சாதலை முன்னம் அஞ்சேன்
புகைமுகந் தெரிகை வீசிப் பொலிந்த அம்பலத்து ளாடும்
முகைநகைக் கொன்றைமாலை முன்னவன் பாதமேத்தி
அகம்நெகா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 522

தறிசெறி களிறும் அஞ்சேன் தழல்விழி உழுவை அஞ்சேன்
வெறிகமழ் சடையன் அப்பன் விண்ணவர் நண்ண மாட்டாச்
செறிதரு கழல்கள் ஏத்திச் சிறந்தினி திருக்கமாட்டா
அறிவிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே
. 523

மஞ்சுலாம் உருமும் அஞ்சேன் மன்னரோ டுறவும் அஞ்சேன்
நஞ்சமே அமுத மாக்கும் நம்பிரான் எம்பிரானாய்ச்
செஞ்செவே ஆண்டு கொண்டான் திருமுண்டம் தீட்ட மாட்டாது
அஞ்சுவா ரவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 524

கோணிலா வாளி அஞ்சேன் கூற்றவன் சீற்றம் அஞ்சேன்
நீணிலா அணியினானை நினைந்து நைந்துருகி நெக்கு
வாணிலாங் கண்கள் சோர வாழ்ந்தநின்றேத்த மாட்டா
ஆணலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 525

திருச்சிற்றம்பலம்

--------------------
இதுக்கு மேல சொல்ல என்ன இருக்கு?

மாணிக்கவாசகர் மணிமணியாச் சொல்லிட்டு போயிருக்காரு. அம்புட்டுதேன்!

சென்ற பதிவிற்கும் இதற்கும் தொடர்பு இருக்கலாம். இல்லாமலும் போகலாம். இருக்குற மாதிரி தெரிஞ்சா இருக்கு. இல்லாத மாதிரி தெரிஞ்சா இல்ல. இருக்குற மாதிரி தெரியறவங்க இல்லாதவங்கள படுத்தாதீங்க. இல்லன்னு சாதிக்கிறவங்க இருக்குங்கறவங்களத் தொல்லப் பண்ணாதீங்க. இருக்கா இல்லியான்னு குழப்பமாவே இருந்துச்சுன்னா அந்தப் பக்கம் போய் ஓரமா உக்காந்துகினே யோசிச்சு இருக்கா இல்லியானு ஒரு முடிவெடுத்துட்டு வந்து அப்புறமா இருக்குங்குறீங்களா இல்லேன்னு நினைக்கிறீங்களானு பிட் நோட்டீஸ் வேணாம், பின்னூட்டமாவே சொன்னாப் போதும். எப்படியும் இருக்கா இல்லியான்னு நாம பேசி முடிவெடுத்து ஒண்ணும் ஆவப்போறதில்லேன்னு மட்டும் சொல்லிக்கிறேன். அதோட அப்புறம் இருக்குன்னு சொல்றவன் 'இல்லாதவன'ச் சுரண்டறான்னு இல்லனு சொல்றவங்க சொல்றதும், இல்லங்கறவன் வந்து தடியால போடுறான்னு இருக்குங்கறவங்க வந்து சொல்றதும் இப்ப எதுக்குண்ணேன்?

209. That silent knowledge of the whole tree!

Then one of the judges of the city stood forth and said, "Speak to us of Crime and Punishment."

And he answered saying:
It is when your spirit goes wandering upon the wind,
That you, alone and unguarded, commit a wrong unto others and therefore unto yourself.
And for that wrong committed must you knock and wait a while unheeded at the gate of the blessed.

Like the ocean is your god-self;
It remains for ever undefiled.
And like the ether it lifts but the winged.

Even like the sun is your god-self;
It knows not the ways of the mole nor seeks it the holes of the serpent.
But your god-self does not dwell alone in your being.

Much in you is still man, and much in you is not yet man,
But a shapeless pigmy that walks asleep in the mist searching for its own awakening.
And of the man in you would I now speak.

For it is he and not your god-self nor the pigmy in the mist, that knows crime and the punishment of crime.

Oftentimes have I heard you speak of one who commits a wrong as though he were not one of you, but a stranger unto you and an intruder upon your world.

But I say that even as the holy and the righteous cannot rise beyond the highest which is in each one of you,
So the wicked and the weak cannot fall lower than the lowest which is in you also.
And as a single leaf turns not yellow but with the silent knowledge of the whole tree,

So the wrong-doer cannot do wrong without the hidden will of you all.
Like a procession you walk together towards your god-self.
You are the way and the wayfarers.

And when one of you falls down he falls for those behind him, a caution against the stumbling stone.
Ay, and he falls for those ahead of him, who though faster and surer of foot, yet removed not the stumbling stone.


And this also, though the word lie heavy upon your hearts:
The murdered is not unaccountable for his own murder,
And the robbed is not blameless in being robbed.
The righteous is not innocent of the deeds of the wicked,
And the white-handed is not clean in the doings of the felon.

Yea, the guilty is oftentimes the victim of the injured,
And still more often the condemned is the burden-bearer for the guiltless and unblamed.

You cannot separate the just from the unjust and the good from the wicked;
For they stand together before the face of the sun even as the black thread and the white are woven together.

And when the black thread breaks, the weaver shall look into the whole cloth, and he shall examine the loom also.


If any of you would bring judgment the unfaithful wife,
Let him also weight the heart of her husband in scales, and measure his soul with measurements.

And let him who would lash the offender look unto the spirit of the offended.

And if any of you would punish in the name of righteousness and lay the axe unto the evil tree, let him see to its roots;

And verily he will find the roots of the good and the bad, the fruitful and the fruitless, all entwined together in the silent heart of the earth.

And you judges who would be just,
What judgment pronounce you upon him who though honest in the flesh yet is a thief in spirit?
What penalty lay you upon him who slays in the flesh yet is himself slain in the spirit?
And how prosecute you him who in action is a deceiver and an oppressor,

Yet who also is aggrieved and outraged?

And how shall you punish those whose remorse is already greater than their misdeeds?

Is not remorse the justice which is administered by that very law which you would fain serve?
Yet you cannot lay remorse upon the innocent nor lift it from the heart of the guilty.

Unbidden shall it call in the night, that men may wake and gaze upon themselves.

And you who would understand justice, how shall you unless you look upon all deeds in the fullness of light?


Only then shall you know that the erect and the fallen are but one man standing in twilight between the night of his pigmy-self and the day of his god-self,
And that the corner-stone of the temple is not higher than the lowest stone in its foundation.

-

-Ch. 11. Crime & Punishment

from The Prophet by Kahlil Gibran

கலீல் கிப்ரான் சென்ற நூற்றாண்டின் ஜீனியஸ்களில் மிகவும் முக்கியமானவர். லெபனானில் பிறந்து அமெரிக்காவில் குடியேறிய இவரின் லெகஸி ஒரு பதிவுக்குள் அடக்கமுடியாதது. இவரைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள இங்கே போங்க.

208. வாழ்க்கையைத் தேடி அலையும் மாந்தர்காள்!



பணம் பணம் என்று முடிவில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறோமே! ஓயாமல் ஓடுவதினால் விலைகொடுத்து வாங்க முடிந்த காரும் மோரும், வீடும் வசதியும், அன்பும் வம்பும் இனிக்கிறவரை நன்று!

இப்படி நம்மிடமும் கருணைகொண்டு படியளக்கும் ஈசனை இமைப்போதும் நினையாமல் ஆலாய்ப் பறக்கும் இந்த ஓட்டத்தினை ஒருநிமிடம் நிறுத்தி... எதைவிடுத்து எதைநாடி ஓடுகின்றோமோ, அது 'வெய்யிற் கொதுங்க வுதவா வுடம்பின் வெறுநிழல்போற்கையிற் பொருளு முதவாது காணுங் கடைவழிக்கே' என்று புரியும் வேளையில் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமாய் தொலைத்த 'வாழ்க்கையைத் ' இதுபோல சாலையோரத்து மைல்கல்களில் தேடிக்கொண்டிருக்க வேண்டியதுதான்.


207. நன்றி! மீண்டும் தருக!

தொண்டர்கள் மனமுவந்து கொடுத்த ஒவ்வொரு ரூபாய் நன்கொடையைக் கொண்டு வாங்கிப்போட்டிருக்கும் வீட்டின் புகைப்படங்கள் சில.

1. A fine mantlepiece

2. The Italian Hall

3. The Main Staircase

4. The Flemish Hall

5. An exquisite door

6. The Dutch Hall

7. The Greeks and their Statuettes

7. Adonis and Cupid

இதை வாங்கறதுக்கே நிதி மொத்தமும் செலவாயிட்டதால, என் இனமானத் தொண்டர்களே!

இதோடு சோர்ந்துவிடலாமா? இன்னும் உங்களின் அன்புக்குரிய கட்சியின் உப தலைவர் மவுண்ட் ரோடில் டிவி ஸ்டுடியோ மற்றும் ஆபீஸ் தொடங்க வேண்டாமா? லண்டனில் ஹோட்டல் வாங்க வேண்டாமா? பாண்டிச்சேரியில் மெடிகல் காலேஜ் கட்டவேணாமா?

ஆதலால் பொங்கியெழுங்கள். நிதி சுருட்டுங்கள்.

நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாய்க்கும் முன்கூட்டி இப்பவே என் நன்றி! நன்றி! நன்றி!

------

பி.கு:1. காசோலைகள் மற்றும் வரைவோலைகளை நேரடியாக என் பெயரிலேயே அனுப்பிவைக்கலாம்.

2. நீங்கள் திரட்டித்தரப் போகும் கட்சி உப தலைவர் சுகவாழ்வு நிதிக்கு இன்கம்டாக்ஸ் வரிவிலக்கு கிடையாது.

---------

ஹெர்மிடாஜின் படங்கள் மேலும்

207. நன்றி! மீண்டும் தருக!

தொண்டர்கள் மனமுவந்து கொடுத்த ஒவ்வொரு ரூபாய் நன்கொடையைக் கொண்டு வாங்கிப்போட்டிருக்கும் வீட்டின் புகைப்படங்கள் சில.

1. A fine mantlepiece

2. The Italian Hall

3. The Main Staircase

4. The Flemish Hall

5. An exquisite door

6. The Dutch Hall

7. The Greeks and their Statuettes

7. Adonis and Cupid

இதை வாங்கறதுக்கே நிதி மொத்தமும் செலவாயிட்டதால, என் இனமானத் தொண்டர்களே!

இதோடு சோர்ந்துவிடலாமா? இன்னும் உங்களின் அன்புக்குரிய கட்சியின் உப தலைவர் மவுண்ட் ரோடில் அண்ணா சாலையில் டிவி ஸ்டுடியோ மற்றும் ஆபீஸ் தொடங்க வேண்டாமா? லண்டனில் ஹோட்டல் வாங்க வேண்டாமா? பாண்டிச்சேரியில் மெடிகல் காலேஜ் கட்டவேணாமா?

ஆதலால் பொங்கியெழுங்கள். நிதி சுருட்டுங்கள்.

நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாய்க்கும் முன்கூட்டி இப்பவே என் நன்றி! நன்றி! நன்றி!

------

பி.கு:1. காசோலைகள் மற்றும் வரைவோலைகளை நேரடியாக என் பெயரிலேயே அனுப்பிவைக்கலாம்.

2. நீங்கள் திரட்டித்தரப் போகும் கட்சி உப தலைவர் சுகவாழ்வு நிதிக்கு இன்கம்டாக்ஸ் வரிவிலக்கு கிடையாது.

---------

ஹெர்மிடாஜின் படங்கள் மேலும்

206. Star Cricket

டிஸ்கி முதலில் முழுசா படிக்கவும்.

_____________________________
இதவிட ஒரு pointless சானல் ஆரமிக்க முடியுமா? ரவி சாஸ்திரி அஞ்சு நாள் டொக்கு போட்டது முதக்கொண்டு பக்கத்துதெரு ஸ்கூல் பசங்க 88-ஆம் வருஷம் ஆடின டோர்னமெண்ட் வரைக்கும் ஒவ்வொண்ணுத்தையும் திரும்ப திரும்ப போட்டு அல்வா கிண்டுறாங்க.

ஸ்பான்சர்கள் தயவுக்காக இருக்கற இந்தியாவின் அதிக வருவாய்தர மாட்டை (அதான்பா cash cow) முழுக்க கறக்க ரூபர்ட் முர்டாக்குக்கு மற்றுமொரு சாதனம் (ஹி ஹி.. சிவப்பு மக்கள்ஸ்... அவுஸ்திரேலிய வெளிநாட்டு முதலாளிய திட்டியாச்சு. திருப்திதானே?).

ஏற்கனவே எந்த சானல், எந்த நியுஸ் பார்த்தாலும் இதே கிரிக்கெட்டின *ழவு. சச்சின் மூச்சா போனார், ட்ராவிட் டாட்டா காட்டினார்னுட்டு...

இதுக்கு நடுவுல தனி காமெடி ட்ராக்கா ICLனு என்னவோ சண்டை வேற. ஒரு pie அ பிரிச்சுக்கறதுக்கு எத்தன அடிதடி? அப்படியாவது விளையாடிக் கிழிக்கறாங்களான்னா அதுவும் இல்ல.

அவனவன் என்னமோ மகாவிஷ்ணுவோட அடுத்த அவதாரமாட்டம் டிவியிலும் பேப்பரிலும் விடுற பந்தா என்ன, அலப்பறை என்ன.. தாங்கலடா சாமீகளா!

ஆனா கிரிக்கெட்னு எழுதி சச்சின் பேரச் சொல்லி எலி புழுக்க வித்தாலும் வாங்கி வாயில் போட்டுக்குற ஜனங்க இருக்குற வரைக்கும் இவனுங்களச் சொல்லி என்ன? கம்பெனிகளையும் தப்பு சொல்லமுடியாது. ஆட்டக்காரங்களையும் தப்புச் சொல்லமுடியாது. வழக்கம்போல மக்கள்ஸ் மேலதான் தப்பு சொல்லணும். பின்ன, மேட்ச் பிக்ஸிங், டீம் பாலிடிக்ஸ், செலக்ஷன் பாலிடிக்ஸ், அட்வர்டைஸ்மெண்ட்ல மட்டும் பார்முன்னு அவங்க எத்தன அடி கொடுத்தாலும் நம்ம இந்திய மக்கள் நல்லவங்களாவே இருக்காங்களே.

கடசியா ஸ்டார் கிரிக்கெட்டுக்கு eat, live, sleep cricket 24x7 னு அட்வர்டைஸ்மெண்ட்ல சொல்றாங்க.

நான் சொல்றேன் - F*** cricket!

--------------------------
டிஸ்கி: ரொம்ப நாள் கோவம். அதுனால் கொஞ்சம் பிலோ தி பெல்ட் தான். வேண்டாதவங்க படிக்காம ஸ்கிப் செஞ்சிருங்க.

ரஜினியத்திட்டினா பெரியாள் ஆகலாம். இன்னும் சில ஆளுங்களத் திட்டினா அறிவுஜிவி ஆகலாம். அதுமாதிரி ரொம்ப நாள் கழிச்சுவந்து பப்ளிசிடிக்கு என்ன செய்யிறது? அதான் கிரிக்கெட்ட திட்டலாம்னுட்டு...சரிதானே?

205. வந்தேன் வந்தேன்! மீண்டு(ம்) நானே வந்தேன்!

ஒரு மாசமாவது தமிழ்மணம் மற்றும் தமிழ்வலைப்பதிவுலக பக்கமே எட்டிப்பாக்காம இருந்தா பைத்தியம் பிடிக்குதா இல்லியான்னு செஞ்சுகிட்ட சுயபரிசோதனை எக்ஸ்ட்ராவா அப்படி ஒரு மாசம் இருந்தும் பைத்தியம் பிடிக்காம தோல்வியில் முடிஞ்சே விட்டது. இதுக்கு நடுவுலே மோகன்தாஸைத் தவிர வேற ஒருத்தர் கூட 'ஏண்டாப்பா எழுதறத விட்டுட்டே'ன்னு கேட்காததிலிருந்து எல்லாருக்கும் என்னோட தாக்கம் நிறைஞ்ச எழுத்துகளக் கண்டு பொறாமை என்பதையும் அனைவரும் 'இவன் எப்ப போவான் திண்ண எப்ப காலியாவும்'னு காத்திருந்தா மாதிரியே மவுனம் காத்த விதத்தை மறப்போம் மன்னிப்போம் வகையறாவில் சேர்த்து....

கடைசியில்... எவ்வளவு நாட்களுக்குத்தான் அறிவார்ந்த தெளிந்த அனாலிஸெஸ்கள் மூலம் சமூகத்தை கொத்துபுரோட்டா போட்டு கொத்தி, திடீர் சீர்த்திருத்த இடியாப்பம் இடித்து மற்றும் இன்னபிற ஆத்மவிசாரங்களை மத்தவங்க எழுத - நான் படிக்கிறது? இப்படி ஒன்சைடடா போறதவிட டூப்பு விட்டாவது டூப்ளே ஆக்கணும்னு அதெல்லாத்தையும் ஒண்ணு ரெண்டு மூணுன்னு சிவாஜி மாதிரி கவுண்ட் வச்சுகினு இப்போ ரிட்டர்ன் பண்ண வந்தாச்சு.

இன்னும் ஆயத்தப்பணிகள் நடந்து கொண்டிருக்கிறதென்றபடியால், இப்போதைக்கு படம் மட்டும் போட்டு கிளம்பறேன். தெரியலேன்னு புலம்ப மீண்டும் ப்ளாக்கர் பகவான் அருளென்றென்றைக்கும் தடையின்றி இருக்குமென்று பணிவுடன் வேண்டியபடியே இதோ படங்கள்.
வழக்கம்போல் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் படங்கள்.


1. The Winter Palace



2. Kazanskiy Sobor



3. View from the Fontaka Most


4. The Throne Room


5. The Room of the Russian Generals


6. REDRUM The Red Room


7. The Marble Hall


8. The Golden Room


9. The Corridor


டிஸ்கி: உப்புமாவுக்கு டிஸ்கி செக்ஷன் இல்லேன்னா ரிஸ்கி. அதனால சம்பிரதாயத்துக்காக இது.

204. Killing 'Us' Softly! - A/UA

இப்பல்லாம் பாருங்க.. தெருவுல போனா அப்டியே ஜிவ்வுன்னு இருக்கு... பொண்ணுங்கல்லாம் கர்சீப்ப கட்டிகினு தெருவுல நடக்கிறாங்க.. இக்கரைக்கு அக்கரை பச்சைனு சொல்ற அளவுக்கு ஸீத்ரு டாப்ஸ்... சாதாரணப் பொண்ணுங்களே இந்த மாதிரி அரைகுறையா வருதுங்க.. டீசண்டான நம்மளப் போல உள்ள ஆளுங்களுக்கே வெலவெலக்கும்போது ரவுடிப்பசங்க சும்மா இருப்பாங்களா? கிண்டல் அடிக்கிறாங்கோ.. மேல விழுந்து பிரச்சனை செய்றாங்கோ...

ஆனா அதுக்கு அந்தப் பொண்ணுங்க என்ன சொல்றாங்க... நான் எனக்கு பிடிச்ச மாதிரி ட்ரஸ் போட்டுக்கறேன். முற்காலத்துல "பழமையான தொழில் செஞ்சவங்க" மட்டுமே இந்த மாதிரி தொழில்முறை சீருடையா போட்டிருந்திருக்கலாம்; ஆனா இப்ப 'அவங்க' உடைய போட்டிருக்கறதால மட்டுமே நான் அந்த மாதிரி பெண் கிடையாதுன்னு ஆண்களெல்லாம் புரிஞ்சிக்கணும்னு சொல்றாங்கோ....

ஹூம்.. உண்மைதான்... ஆண்களே.. கேட்டுக்கங்க. என்னமாதிரி வேனா அவங்க ட்ரஸ் போடலாம்.. ஆனா அந்த மாதிரிய உடைய வச்சுமட்டுமே தப்பான பெண்ணுன்ணு நாம எடை போட்டிரக்கூடாது... ஏன்னா போடுற டிரஸ் அவங்களோட தனிமனித சுதந்திரம்.

ஆனா, பெண்மக்கள்ஸ்.. நீங்களும் ஓண்ணு புரிஞ்சிக்கணும்.. ஆம்பிளைகளோட சிம்பிளான crocodile மூளைக்கு இந்த மாதிரி subtle வித்தியாசமெல்லாம் புரியாதுங்க. ஏன்னா அவங்க மூளை ஒரே கோணத்துலதான் எப்போதும் பாக்கும்... அது என்னன்னு சொல்லித்தெரியணுமா...சரி அத விடுங்க...

எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருது... ஒரு நாள் சாயங்காலம் தெருவுல நடந்துபோயிகிட்டிருந்தேன்... திடீர்னு ஒரு ரவுடி வந்து கத்தியைக் காட்டி மிரட்டி என் பர்ஸ பிடுங்கிகிட்டு ஓடிட்டான். அதுல ஏகப்பட்ட பணம் இருந்துச்சு... என்ன செய்யறதுன்னு சுத்திமுத்தி பார்த்தேன்... அப்பனு பார்த்து அங்கன தெய்வாதீனமா ஒரு போலீஸ்காரர் வந்தார்.. நான் உடனே அவர்கிட்ட போய் 'சார்.. அதோ பாருங்க சார்.. என் பர்ச மிரட்டிப் பறிச்சு ஒருத்தன் ஓடிகிட்டிருக்கான்.. எப்படியாவது அவன பிடிச்சு..." சொல்லி முடிக்கறதுக்குள்ள அவரு 'ஏன்யா.. போலீஸ் யூனிபார்ம் போட்டதுனால மட்டும் என்னைய பாத்து எந்த தைரியத்துல போலீஸ்னு நினைப்பே"னு என் சட்டையப் பிடிச்சிட்டாரு.. என்ன சொல்றதுன்னு தெரியாம ஓட்டம் பிடிச்சிட்டேன்.

----------------------
இது சொந்த சரக்கில்லை... Dave Chappelle's 'Killing Them Softly' லேர்ந்து சுட்டு வறுத்தது....

சம்மர் வந்தாச்சே... அதான் ஹாட் மேட்டர்ல ஒரு பதிவு போடலாமின்னு.. ஹி ஹி....

அப்புறம் டிஸ்கி: ஹ்யூமரிஸம் தவிர்த்து எந்த இசத்துக்கும் ஆதரவோ (அல்லது எதிர்ப்போ) இந்த பதிவில் தெரிவிக்கப்படவில்லை.

பழைய சம்மர் பதிவு ஒண்ணு

203. பேரக் கேட்டோனச் சும்மா.. அதிருதில்ல....

நிரந்தர சூப்பர் ஸ்டார் இவரு மட்டுந்தான். அதுவும் ரெண்டு வருஷம் தள்ளிப் போயிகிட்டேயிருந்த கனவு. நடுவுல புது வில்லனும் வந்து ஜெயிச்சுப்புட்டான்.... இந்த தடவையாவது நம்ம தலைவரு வருவாரா? ஜெயிப்பாரா? எல்லார் மனதிலும் இருக்கும் கேள்விகள் இதுதான் இப்போதைக்கு.

இந்த வருஷம் புதுக்களம்... என்றும் இளமையான நாயகன். இதுவரைக்கும் வந்த லுச்சா பசங்களையெல்லாம் தூக்கி பந்தாடி சூப்பர் ஸ்டார்னா அது ஒருத்தன் தானு நிருபிச்சாச்சு! பாதிக்கிணறு தாண்டியாச்சு.. ஆனா இனிமே ஆரமிக்கறது அடுத்த கட்ட ஆட்டம். வில்லனும் லேசுபட்டவன் இல்ல...

ஆனா ஆட்டதோட ட்ரெயிலர் பாத்தவரைக்கும் எந்த பச்சாவும் வாலாட்ட முடியாதுன்னு சொல்லி அடிக்கிறாப் போலவே இருக்கு...

வாடா வாடா வாங்கிப்போடா... வாய்ல பீடா போட்டுக்கடா...
போடா போடா பொழச்சுப்போடா.... நடாலு.... வாடா வாடா வாங்கிப்போடா....


ஆஆஅமா... பேரக் கேட்டோனச் சும்மா.. அதிருதில்ல...

ரோஜர் பெடரர்!

202. ஜனநாயகம் வாழ்க! ராதிகா செல்வி வாழ்க வாழ்க!

சமூகம் தனக்கு இழைத்த கொடுமைகளுக்காக வாளேந்திய மாவீரன் வெங்கடேச பண்ணையாரை அநியாயமாக காவல்துறை அடியாட்கள் மூலம் போட்டுத்தள்ளிய ஜெயலலிதா என்னும் கொடூர அரக்கியின் மூக்கை அறுக்க வழியென்ன? வெங்கடேச பண்ணையாரின் விதவையை, முற்றிலும் தொலைத்த அன்பு மனைவியை - மத்திய உள்துறை இணையமைச்சர் ஆக்கிப் பார்ப்பதே சரியான தீர்வு! கொடூர காவல்துறையினரை கட்டுப்படுத்தி மட்டுப்படுத்த அவர்களால் பாதிக்கப்பட்ட ஒருவரையே அவர்களின் தலைவியாக ஆக்குவதை ஸ்வீட் ஐரனி என்பதா சர்க்கிள் ஆப் லைப் என்பதா?

அப்படியே அவ்வப்போது பம்மும் நாடார் சமூகத்தையும், தனிக்கட்சி தொடங்க வித்திடும் சுப்ரீம் ஸ்டாரையும் வழிக்கு கொண்டு வந்தாற்போலாயிற்று!

என்னே மதிநுட்பம்! அர்த்தசாஸ்திரத்தை மிஞ்சும் சாணக்கியத்தனம்! கண்டு உள்ளம் மகிழ்கிறது ஐயா! எப்படி நன்றி சொல்வது என்று தெரியாமல் விக்கித்து திகைத்து ஸ்தம்பித்து நிற்கிறேன்!

201. என்-கவுண்டரில் மாட்டிய பெருந்தலை

சர சரவென புனித பிம்பங்கள் ஐபி என்னு வலையில் சாய்ந்து கொண்டிருக்கும் இந்த புண்ணிய காலத்திலே என் கவுண்டர் சும்மா எத்தன பேரு ஆன்லைன்ல இருக்காங்கன்னு காட்டிகிட்டு தூங்கிட்ருந்தாரு... இப்படி தூங்கவா கஷ்டப்பட்டு வேலைமெனக்கெட்டு ப்ளாக்ல வேலை செய்யச் சேர்த்தேன்னு திட்டி என்னமோ ஐ.பியாமே அதையும் சேர்த்து பிடிச்சுவைங்க கவுண்டரேனு சொல்லிவச்சுருந்தேன்..

நான் ஏதோ கோக்குமாக்க கெண்டமீனுக்கு வளைச்ச வலையில சுறாமீனே மாட்டிருக்குன்னா ஆச்சரியப்படாம எப்படி? இவ்வளவு பெருந்தலை தெரியல-வின் கவுண்டரில் வந்து விழும் என்று நானே எதிர்பார்க்கவில்லை. அதுவும் சந்தேகத்திற்கே இடமில்லாதவாறு கனகச்சிதமா ஸ்க்ரீன் ஷாட் பிடிச்சு வச்சி எனக்கு அலெர்ட் மெயிலனுப்பினாரு கவுண்டரு..

அந்தப் பிரபலம் யாருன்னு நான் பேரச் சொல்லலாமா இல்ல பூடகமா சொல்லி அனாமதேயமா மொத்தலாமான்னு இன்னும் எங்கள் கட்சிப் பொதுக்குழு முடிவெடுக்காத பட்சத்திலும்; பேரு சொல்லாம விடற அளவுக்கு இரக்க குணமெல்லாம் எனக்கு கிடையாதுங்கறதுனாலயும்; விஷயத்தினோட க்ராவிட்டிய கருதி, தார்மீக காரணங்களுக்காக மற்ற பதிவர்களையும் உஷார் படுத்த வேண்டியதான என் சமூகப் பொறுப்பினது அவசியத்தையும் உணர்ந்து எந்த இடர்பாடு வரினும் அந்த திமிங்கலத்தின் பேரை வெளியிடுவது என்று முடிவெடுத்துவிட்டேன்.

அதற்கு முன்னர் Operation "make the fat lady sing" விவரங்கள்....

எப்படி இந்த குறிப்பிட்ட நபர் தான் என் பதிவிற்கு வந்தார் என்று முடிவு செய்தேன் சிறுபிள்ளைத்தனமாக பலர் கேள்விகேட்க கூடும். அதற்கு என் பதில் - தமிழ் வலையுலகில் எனக்கும் சரி, அனைவருக்கும் சரி இந்த நாட்டிலேயே இவர் ஒருவரைத் தவிர வேறு ஒருவரையும் பரிச்சயம் கிடையாது. ஏனென்றால் அவ்ளோ பிரபலமான பழம்பெரும் ஆள் இவர். குட்டியூண்டு நாட்டில் அமர்ந்துகொண்டு சொந்தமாக வெப்சைட்டே வைத்து நடத்திவரும் இவர், தன்னை யாரும் கண்டே பிடிக்க முடியாது என்று பகல் கனவு கண்டு என் கவுண்டரிடம் வகையாகச் நேற்றைக்கு சிக்கியிருக்கிறார்.

வந்த ஐபி அட்ரஸ்: 2*2.*7.*0*.223 (சம்பந்தப்பட்டவரின் ப்ரைவஸியை பாதுகாக்கவேண்டி ஐபியை மாஸ்க் செய்துள்ளேன். மேலதிக விவரங்களுக்கென எந்த கோர்டிலும் வந்து நிருபிக்க மேலும் பல விவரங்களைத் தர முடியும்)

Browser: MSIE 6.0; OS: Windows XP; Resolution: 1024x768; 15th May 2007 12:11:28 PM

சிக்கிய அன்று என் பதிவில் பார்த்த முதல் பதிவு

சிக்கிய அன்று என் பதிவில் பார்த்த கடைசி பதிவு

இதற்கு மேல் விவரங்கள் வேண்டுவோர் என்னை தனி மடலில் தொடர்பு கொள்ளலாம்.

இந்த விவரங்கள் போதுமா புனிதபிம்பமே? ஒழுங்காக மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுத்திருந்தால் இந்த அவல நிலை ஏற்பட்டிருக்குமா? எண்ணிப்பாருங்கள்...

இந்தத் திமிங்கிலத்திடம் நானே மெயிலனுப்பி கேட்டும் "அர்த்தமற்ற முறையில் ப்ளாக்மெயில் செய்கிறேன்" என்று பதிலனுப்பாத படியால் இதோ அவரின் முகத்திரையை கிழிப்பதென முடிவு செய்து, எப்படி அணுகலாம் என்று சிந்தித்த போது இவ்விஷயங்களில் நமக்கு முன்னோடியான பெனாத்தலாரின் துணையை நாடினேன். அவரும் ப்ளாஷில் போட்டு ப்ளாஷ் செய்யலாம் என்று ஐடியா கொடுக்கவே.. கீழுள்ள ப்ளாஷில் அந்த திமிங்கலத்தின் முகத்திரை கிழிவதை பாருங்கள்...



என் கவுண்டரில் இவரின் தடயங்கள் இன்னும் இருக்கின்றன. வேண்டுவோர்க்கு ஸ்க்ரீன் ஷாட் அனுப்பி வைக்கப்படும்.

200. current affairs பாட்டுக்கு பாட்டு!

இந்த பரபரப்பான நேரத்தில், பாடல்கள் எழுதி வெப்பத்தை தணிக்க பவுர்ணமி பாண்டியன் வராத சூழ்நிலையில், ஏற்கனவே வந்து பிரபலமான ரெண்டு பாட்ட போட்டு ஒப்பேத்தலாம்னு நினைச்சதன் பயனே இப்பதிவு! லிரிக்ஸெல்லாம் கிட்டத்தட்ட சரியாத்தான் இருக்குன்னு நினைக்கிறேன். படிக்கறவங்களும் தோணுற பாட்டா போட்டா, சர்வேசன் மாதிரி இங்க தனியா பாட்டுக்கு பாட்டு ஒண்ணே நடத்திடலாம். ஆரம்பத்திற்கு ரெண்டு பாட்டுலேர்ந்து எந்த அடிய வேணா எடுத்துப் பாடலாம்... ஓகே கால்ஸ் & கய்ஸ்! ஸ்டார்ட் தி மீசிக்!

ஒருவன் ஒருவன் முதலாளி (முத்து)
பாடியது: எஸ்.பி.பி
இசை: ஏ. ஆர். ரஹ்மான்

பல்லவி:
ஒருவன் ஒருவன் முதலாளி! உலகில் மற்றவன் தொழிலாளி!
கணிப்பைப்போட்டவன் கோமாளி பாம்-ஐப்போட்டவன் அறிவாளீ

அநுபல்லவி:
தேர்தலை வெல்ல சேனல்கள் எதற்கு?
பூத்தை பறிக்க செல்போன் எதற்கு?
Sun ஆ Son ஆ போர்க்களம் எதற்கு?
ஆசைதுறந்தால் நீ மந்திரியெனக்கு!

சரணம் 1:
மகனின் மீது தலைவருக்கு ஆசை... பதவி மீது எல்லாருக்கும் ஆசை!
மகன் தான் எப்பவும் ஜெயிக்கிறது! இதை பேரனோ உணர மறுக்கிறது!
கையில் ஒரு சேனல் இருந்தால் கட்சிதான் அதற்கு எஜமானன்!
கழுத்துவரைக்கும் காசுஇருந்தாலும் நான் தான் உனக்கு எஜமானன்!
வாழ்வின் அர்த்தம் புரிந்துவிடு! கணிப்பை மாற்றிப் போட்டுவிடு!

சரணம் 2:
வானம் எனக்கு பூமியும் எனக்கு... வரம்புகள் மீறாட்டி வாய்ப்புண்டு உனக்கு!
டிவியும் உனக்கு காசும் உனக்கு, என் ரத்தத்தோடு சண்டைகள் எதற்கு?
ஒதுங்கச்சொல்லுது தலைமையடா! அடங்கி இருப்பது உன் கடமையடா!
சன்னில் மதுரைய பாக்கும்போது ஐயோ ஐயோ எரிகிறதே!
சங்கமப்பொண்ணு பார்க்கும்போது பதவி கேட்டு துளைக்கிறதே!
முத்து எங்கே போவாரு? அட செல்வியும் இனிமே பேசாது!
(or )
பொறுமை உனக்குப் போதாது அட வறுமை எனக்கு வாராது
(இந்த வரி மட்டும் க்ளியரா காதுல விழலை!)

பல்லவி:
ஒருவன் ஒருவன் முதலாளி! உலகில் மற்றவன் தொழிலாளி!
கணிப்பைப்போட்டவன் கோமாளி பாம்-ஐப்போட்டவன் அறிவாளீ
---------------------------
சீச்சீ சீச்சீ..(மஜா)
பாடியது: ஹரிணி, சங்கர் மகாதேவன்

இசை: வித்யாசாகர்

பல்லவி:
தயா: என்ன பழக்கமிது.. சின்ன பிள்ளைப் போல!
முக: பித்து பிடிக்கிறதே! நீ சர்வே போட்டதால!

அநுபல்லவி:
மு.க: வம்பு பண்ணுற வம்பு பண்ணுற! நீ இப்பவே ரொம்ப ரொம்ப வம்பு பண்ணுற!

தயா: டிச்சு பண்ணுற நீ டிச்சு பண்ணுற! சன்ன தாக்கி தேவையில்லாம தப்பு பண்ணுற!

முக: அட என்ன பண்ணுவ இப்ப என்ன பண்ணுவ? உன்ன என்னென்னமோ பண்ணப் போறேன்! என்ன பண்ணுவ!


சரணம் 1:
முக: என்னுடைய ஆசை ஸ்டாலின வைக்க நினைக்க! உன்னுடைய ஆச அத தட்டிவிட நினைக்க! நம்முடைய பாசம் இத்தோட முடிக்க!

தயா: நானோ அங்க சும்மா ஒரமா கிடக்க! உம்மகனோ வந்து வம்பு பண்ணி கெடுக்க! மொத்தத்துல மருதையில் பாம் பல வெடிக்க!

முக: உங்கண்ணன பாத்து கேட்டும் கெஞ்சியும் நான் சொல்ல!

தயா: அவன் வயசு.. கோளாறு.. அவன் சர்வே எடுத்து தொலைக்க..

முக: நீங்க மூக்க நுழைக்க! நான் ஒட்ட அறுக்க! அட மொத்தத்துல தூக்கம்கெட்டு கண்கள்சிவக்க...

பல்லவி:
சீச்சி சீச்சீ...


சரணம் 2:
முக: நள்ளிரவு நேரம் பிடிச்சு போட்ட சீன! திரும்ப திரும்ப போட்டு ஆட்சிக்கு வந்த என்ன! கிளம்பிவிட்ட நீயும் என்னுயிரை தொலைக்க!

தயா: சீனு போட்டு ஆட்சிகொடுத்த சன்ன விட்ட! பாம் போட்டு சீனு விட்ட சன்ன பிடிச்ச! எங்கண்ணன் வருவானே அத்தனையும் கெடுக்க!

முக: அட எதுவும் இனி நடக்கும்! தெரிஞ்சு அடங்கி நீ நடக்க!

தயா: உங்க பெத்தபாசத்தில் நான் சகல பதவியும் துறக்க!

முக: நீ உன்ன பின்னேற்ற! நான் கனிய முன்னேற்ற! இப்போதைக்கு மக்களாட்சி நல்லா நடக்க!

பல்லவி:
சீச்சி சீச்சி!

மு.க: வம்பு பண்ணுற வம்பு பண்ணுற! நீ இப்பவே ரொம்ப ரொம்ப வம்பு பண்ணுற!

தயா: டிச்சு பண்ணுற நீ டிச்சு பண்ணுற! சன்ன தூக்கிவச்சு தேவையில்லாம தப்பு பண்ணுற!

*************************************

பயமறியா தன்மானச் சிங்கம், பாம்-அறியா அஞ்சாநெஞ்சன் பெனாத்தலாருக்கு ஸ்பெஷல் நன்னி!

டோனி ப்ளேர் நமக்குத் தரும் பாடங்கள்

வரும் ஜூன் - 27 அன்று பிரதமர் பதவியிலிருந்து ஓய்வுபெற்றுக்கொள்ளப் போவதாக நேற்று பிரிட்டானியப் பிரதமர் டோனி ப்ளேர் அறிவித்துள்ளார். கிட்டத்தட்ட ஒரு வருடமாக சொல்லிவந்தாலும், அறிக்கை வந்தவுடன் பார்க்க, இந்தியனான எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இவர் என்ன லூசா? இருக்கிற ஐந்து பசங்களெல்லாம் வளர்ந்து பெரியாளாகவில்லை. ப்ரான்சில் திராட்சைத்தோட்டம் வாங்கிப்போடவில்லை. இது எல்லாம் மேலோட்டமாகத் தோன்றினாலும் அடிப்படையிலேயே புரியாத புதிராய்த் தெரிந்தது இந்த அறிவிப்பு. அதுவும் தன் வாரிசு என்று கோர்டன் பிரவுனை ஆதரிப்பதாகவும், ஆனால் கட்சியின் பொதுக்குழுவே அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்குமென்றும் அறிவித்திருக்கிறார்.

ப்ளேரின் ஆட்சி கவிழ்க்கப்படவில்லை. இம்பீச் செய்யப்படவில்லை. தேர்தலில் தோற்கடித்துத் துரத்தப்படவில்லை. தாமாகவே மனமுவந்து (இது சந்தேகமாயிருந்தாலும்) பதவி விலகுகிறார். இதைவிடவும் கலியுகத்தில், ஒரு இந்தியனுக்கு ஆச்சரியம் தரும் விஷயம் இருக்கிறதா என்ன? இருந்தால் ஆட்சிக்கட்டில், இல்லையேல் மரணக்கட்டில் என்ற 'பற்றற்ற' கொள்கையுடைய அரசியல்வாதிகளையே கண்டவர்கள் நாம்.

ஒரு குறிப்பிட்ட ஆண்டுகள் பதவிக்காலத்திற்கு பிறகு தேர்தலில் ஒருவர் போட்டியிடக்கூடாது என்று பெரும்பான்மையான ஜனநாயக நாடுகளைப் போல் சட்டமேற்றுவதில் என்ன பிரச்சனை? நிரந்தர முதல்வர் என்ற முட்டாள்தனமான கனவுதான் காரணமா? இருக்கிற ஐந்துகோடி பேரில் அவர் ஒருவரை விட்டால் திறமையான தலைவர் அடுத்த தலைமுறையில் கூட கிடைக்க மாட்டார் என்ற அவநம்பிக்கையா? நிரந்தரமாக பதவியெடுத்துக்கொள்ளும் ஆட்சிகளெல்லாம் அவை ஆரம்ப காலகட்டத்தில் எத்தகைய மக்களாட்சியாக இருந்தாலும் காலப்போக்கில் பதவிபோதையில் ஒரு கேவலமான மன்னராட்சி நிலைக்குத்தான் சூழ்நிலைகளால் தள்ளப்படுகின்றன. உகாண்டாவின் இடி அமீன் தொடங்கி இன்றைய ஜிம்பாப்வேயின் முகாபே வரைக்கும் முகத்தில் அறையும் உதாரணங்கள் கணக்கில் அடங்கா. அவ்வாறு ஒரு குடும்பத்திற்கோ ஒரு தனியாளுக்கோ மாற்று ஏற்படாதவகையில் அடாவடி அரசியல் செய்யத்தூண்டுவதற்கு காரணம் இந்த நிரந்தர முதல்வர் கனவும் அது தரும் போதையும் தான்.

தனிநபர் ஒழுக்கம் பற்றியெல்லாம் பொழுதைக்கழிப்பது வீண். ஆட்சியாளர்களுக்கு இருக்கவேண்டிய பொறுப்பு இருக்கிறதா என்று சோதித்துப் பார்க்கக் கூட பொழுதில்லாமல் தேர்தல்நேரத்து வாக்குறுதிகளுக்காக வெக்கமில்லாமல் கண்ணைக் கட்டி வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழர்களுக்கு புத்திசொல்ல நான் யார்? ஒருவேளை நான் தமிழனில்லையோ? இல்லை மனநலக் காப்பகங்களில் இருக்கவேண்டியவனோ? மாற்றுக்கட்சிகளும் இல்லை, மாற்றுத்தலைவர்களும் இல்லை என்ற நொண்டிச்சாக்கு சொல்லிக்கொண்டோ, தெரியாத மோகினிக்கு தெரிந்த பிசாசே மேலென்று விதியை நொந்துகொண்டோ திரும்பவும் அதே ரவுடிகளுக்கும் ஊழல்பெருச்சாளிகளுக்கும் தொடர்ந்து வாக்களிக்கும் மக்கள் எக்கேடுதான் இன்னும் கெடவேண்டும்? தேர்தல் புறக்கணிப்பு? புரட்சி, மறுமலர்ச்சி என்றெல்லாம் வாய்கிழியப் பேசும் கட்சிகள் அனைத்தும் ஊழலில் ஊறியதைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறோமே. மக்கள் புரட்சியைக் கையிலெடுத்தால் ரஷ்யாவின் கதியா நமக்கு என்றெல்லாம் அசரவேண்டாம். ரஷ்யர்களின் வாழ்க்கை பல நிலைகளில் நம்மைவிட நன்றாகவே இருக்கின்றது. இதோ போன வாரம் துருக்கியில் நடக்கவில்லை மக்களின் புரட்சி? இசுலாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராக நாடெங்கும் லட்சக்கணக்கில் ஆர்ப்பாட்டம் செய்து பாராளுமன்றமே சட்டத்தை திருத்தி அமைக்கவில்லை?

ச்வதர்ம பரிபாலனா என்னும் தர்ம கோட்பாட்டை அதன் அர்த்தமே திரியும் அளவுக்கு சுருக்கி தம் குடும்ப/உ.பி.சகோ குடும்ப பரிபாலனம் என்ரு அர்த்தம் கற்பித்து நாட்டைச் சுருட்டும் இவர்களுக்கு வேண்டுமென்றால் மட்டும் வெட்கமில்லாமல் பிரியாணிப்பொட்டலமும் / உற்சாக பானமும் வாங்கவாவது கட்சி மாநாட்டுக்கூட்டங்களில் லட்சக்கணக்கில் கூடும் தமிழர்கள் ஏன் தங்களுக்கென ஊழலற்ற ஆட்சி/அடிப்படைக் கல்வி/தொழிற் சார்ந்த முன்னேற்றம் போன்றவற்றிற்கு கூடுவதில்லை என்று நினைத்துப்பார்க்கவே நாறுகிறது. அந்த நாற்றத்திற்கு ஏசி ரூமில் சமூகசீர்த்திருத்தம் பேசும் நாமும் காரணம் என்பது நாற்றத்தைவிடவும் குமட்டுகிறது.

நம் மக்களிடையே பரவலான ஜோக் ஆட்டோ அனுப்புவார்கள் என்பது. எண்ணிப்பாருங்கள். இதைவிடவும் கேவலமாக ஜனநாயகம் நடத்தப்பட முடியுமா? எல்லா நாடுகளிலும் லஞ்சமும் உண்டு ஊழலும் உண்டு. ஆனால் நாட்டின் நலன் என்று வரும்போது அதுவே முக்கியத்துவம் பெறுகிறது அல்லது குறைந்தபட்சம் பயம் காரணமாகவாவது அத்தகைய தனிநபர் சுருட்டல்கள் குறைக்கப்படுகின்றன. இது ஏன்? இங்கே வெள்ளைக்காரன் தோல் பெரும்பாலும் வெள்ளையாகவே இருக்கிறது. ஏன் என்பதுதான் ஆச்சரியம். ஆப்ரிக்கா, ஆசியா, தென்னமெரிக்கா போன்ற கண்டங்களில் ஒருசில நாடுகள் தவிர்த்து பெரும்பாலும் இந்த தனிநபர்/ஆட்சியாளர்/தொழிலதிபர் என்று நேரத்திற்கு தகுந்தாற்போல நாட்டையும் ஆட்சியையும் நடத்தும் ஆட்சியாளர்களே அதிகம். அது ஏன்? வெள்ளையர்களின் குறுக்கீடா? அல்லது சுதந்திரம் பெற்றபின்னும், அதன் அர்த்தம் என்னவென்றே உணர மறுக்கும் மக்களின் விதியா?

வெறும் சினிமா நடிகைக்கு ஆயிரம்கோடி சொத்து எங்கேயிருந்து வந்தது? ப்ரூப் ரீடராக வாழ்க்கையைத் தொடங்கியவருக்கு அதைவிடவும் பெரிய அளவிலான சொத்துகள் எங்கேயிருந்து வந்தது? இவை வெறும் தமிழ்நாட்டின் அவலங்கள் தான். அகில இந்திய அளவில் இன்னும் மோசமான உதாரணங்கள் உண்டு.

மறுபடியும் ப்ளேருக்கே வருவோம். அவருக்கு நெருக்கடி இருந்தது உண்மைதான். அது ஈராக்கில் நடந்த யுத்தத்தினால். புஷ்ஷுடன் அவருக்கு இருந்த அத்தியந்த நட்பினால். கோர்டன் பிரவுன் கொஞ்ச நாட்களாக அழுத்தம் கொடுத்துக்கொண்டிருந்தார். ஆனால் இவை மட்டும் அவரை பதவி விலகச் செய்தது என்று சொன்னால் சிரிக்கத்தான் வேண்டும். மூன்றாவது முறையும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தவர் இன்னும் இரண்டு ஆண்டுகள் தாக்குப்பிடிக்க முடியாதா? ப்ளேருக்கு ஆட்டோ அனுப்பத்தெரியாதா? ஈராக் விஷயம் தவிர்த்து அவரின் சாதனைகள் பல. யோசித்துப்பார்த்தால் வட அயர்லாந்தின் புதிய அரசு, ஆப்ரிக்காவிற்கு அதிக நிதி என அவரின் வெளியுறவுத்துறை சாதனைகள் தவிர உள்நாட்டிலேயே பொருளாதாரம், சுகாதாரத்துறை போன்றவை சீரிய அளவில் வளர்ச்சியடைந்து வந்திருக்கின்றன. இப்போது ஏன் விலக வேண்டும்?

ஒரே விளக்கம் தான் தோன்றுகிறது. 'போதுமென்ற மனமே'. ப்ளேரின் கைகள் ஒன்றும் அவ்வளவு சுத்தமில்லை என்று பல சர்ச்சைகள் வந்துபோயிருந்தாலும் நம் நாட்டுடன் ஒப்பிட்டால் லாலு சிலுக்குவார்ப்பட்டியில் ஒரு வீடு வாங்கினார் என்றுதான் ஒப்பிட முடியும். ஒரு மிகச் செல்வாக்குவாய்ந்த/சக்திவாய்ந்த நாட்டின் தலைவராக இருப்பது எத்தனை கடினம் என்று எவருக்கும் சொல்லித் தெரியவேண்டியதில்லை. "but enough is enough" என்று சொல்வார்களே அதுபோல ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் நாட்டின் தலைவராயிருந்தால், நாட்டு மக்களுக்கு தான் சேவகன் என்பது மறந்து நாடே தம் குடும்பச் சொத்து என்ற எண்ணம் வந்துவிடலாம். இதுவும் பல இடங்களில் திரும்பத் திரும்ப நிருபிக்கப்பட்டிருக்கிறது. "the sad part about history is everybody reads it but dont learn from it"

அவ்வளவு சக்திவாய்ந்த பதவியிலிருந்து ஒருவன் எவ்வித சீரியஸான threatகளும் இல்லாத சமயத்திலும் தன்னிச்சையாக வெளியேற முடிகிறதென்னால் அவனுக்கு தமிழனென்ற முறையில் ஆழ்ந்த அனுதாபத்தையும் அவனின் கையாலாகாத தனத்தை எள்ளியும் எதிர்ப்புகளை சமாளிக்கமுடியாத ஆண்மையற்றத்தனத்தை கிண்டலடித்தும் போர்வாளாய் பணியாற்ற மறுத்த சோம்பேறித்தனத்தை கண்டித்தும் என் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

டோனி ப்ளேர் வாழ்க வளமுடன்! நாங்கள் உன்னிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம். கற்றுக்கொள்வோமா என்ற கேள்வி அவசியமற்றது, இப்போதைக்கு.

மற்றுமொரு வயித்தெரிச்சல் பிரான்சில் நடந்த தேர்தல். சார்க்கோஸியும் ராயலும் விவாதம் செய்ததில் தொடங்கி தேர்தல் நடந்த விதம் வரை எத்தனையோ இருக்கு நாம் கற்றுக்கொள்ள.

"திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" - எம்.ஜி.ஆர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (தருமிக்கு நன்றி).

---------------------------------
டிஸ்கி:
1. நான் திமுகவும் கிடையாது. அதிமுகவும் கிடையாது. பாஜகவும் கிடையாது. வி.காந்தும் கிடையாது. மொத்தத்தில் ஒருமுறைகூட ஓட்டே போட்டிராத தமிழன்.

2. இது ஏசி ரூமில் இருந்து எழுதியதுதான்.

3. ஏன் ஒரிசாவில் இல்லையா, குஜராத் எரியவில்லையா என்ற கேள்விகளெல்லாம் இங்கே அர்த்தமற்றதாகின்றது. எல்லா மாநிலங்களில் சேற்றை வாரியிறைத்துக்கொள்கிறார்கள் என்றால் நாமும் ஏன் செய்யவேண்டும்?

4. பிற மாநிலங்களைவிட திராவிட கட்சிகளின் ஆட்சியில் வளர்ச்சி நன்றாகவே இருக்கிறது என்று சொல்வோர் இருக்கலாம். நான் அந்த வாக்கியத்தில் in spite of என்று சேர்த்துக்கொள்ளச் சொல்கிறேன்.

5. ப்ளேர் செய்தது போல இது நம்மூரில் நடக்கும் காலமும் வருமா என்ற வயித்தெரிச்சலில் எழுதியது.

197. No Oil for You! - Russia vs Estonia

சைன்பெல்டோட சூப் நாஜி நினைவுக்கு வர்றாரா? அவர் குடுக்கற சூப்ப வாங்கிட்டு அடக்கமா போகணும். கேள்வி கேட்டாலோ வேற ஏதாவது தப்பு சொன்னாலோ சூப்ப திரும்ப பிடுங்கிட்டு "no Soup for you"னு சொல்லித்துரத்திடுவாரு.

கிட்டத்தட்ட அதே கதை நடக்குது. என்ன கொஞ்சம் பெரிய அளவுல. போன தடவை ரஷ்யா உக்ரைனோட விளையாடினப்போ வேடிக்கை பார்த்த இ.யூ இந்த தடவை கோதாவுல இறங்கியிருக்கு.

முன்கதைச்சுருக்கம்: வழக்கம்போல எஸ்டோனியால ஆரம்பிக்குது. எஸ்டோனியாங்கறது ஒரு குட்டி பால்டிக் நாடு. சோவியத் யூனியனோட பாதுகாப்பிலேர்ந்து வெளியேறி 2004ல ஐரோப்பிய கூட்டமைப்புல இணைஞ்சுது.

இப்ப எஸ்டோனியா காரங்க என்ன செஞ்சாங்கன்னா அவங்க தலைநகரான டாலின்ல இருக்குற ஒரு சோவியத் கால சிலைய எடுத்து வேற இடத்துல வப்போம்னாங்க. சாதா சிலையா இருந்தா ரஷ்யாவும் கண்டுக்காம இருந்திருக்கும். ஆனா இது என்ன சிலைன்னா இரண்டாம் உலகப்போர்ல சிவப்பு ராணுவம் பாஸிஸத்த ஜெயிச்சு வெற்றிபெற்றதுக்கான நினைவுச்சின்னம். சில சோவியத் ராணுவத்தினரோட உடல்களும் அங்க அடக்கம் செய்யப்பட்டிருக்கு அந்தச் சிலைய சுத்தி. அந்த உடல்களையெல்லாம் தோண்டி எடுத்து யாருயாருன்னு identify பண்ணி வேறொரு இடுகாட்டில புதைக்கப்போறோம்னு எஸ்டோனியா சொல்லிச்சு.

ரஷ்யா ரொம்ப பெருமைப்பட்டுக்கற விஷயம்னா இந்த இரண்டாம் உலகப்போர் வெற்றிதான். அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் சேர்ந்து இழந்த ஆட்களவிட பலமடங்கு அதிகம் ரஷ்யர்கள் இறந்துபோயிருக்காங்க. செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரமே நரகமா இருந்துச்சு. அப்புறமா இந்த சிவப்பு ராணுவம் சுதாரிச்சு அதிவீரத்தோட போராடி கிழக்கு ஐரோப்பாவுலேர்ந்து ஹிட்லரோட படைய விரட்டியடிச்சு முதல்ல பெர்லினப் பிடிச்சது வரைக்கும் வரலாறு. இந்தப் போர்ல பங்கெடுத்தவங்களுக்கு வருஷாவருஷம் அஞ்சலி செலுத்தி அதையே பெரிய விழாவாவும் கொண்டாடுறது ரஷ்ய வழக்கம். இப்படி தங்களோட வெற்றிக்கு, பாஸிஸத்தின் அழிவுக்கு சின்னமாக இருக்கும் சிலைய அகற்றக்கூடாதுன்னு எஸ்டோனியால மூணில் ஒரு பங்கு இருக்கற ரஷ்யக்குடியினர் குரலெழுப்பினாங்க. அதுக்கு எஸ்டோனியா நாட்டுக்காரங்க ஜெர்மனி காலனியா இருந்தோம், அப்புறம் சோவியத் காலனியா ஆனோம் இதுல பெருமைப்பட என்ன இருக்கு... எங்களை அம்பது வருஷம் அடிமையா வச்சிருந்த சோவியத்தின் சின்னம் வேணாம்னு சொல்ல ஆரமிச்சுட்டாங்க. ரஷ்யக்குடியினர் சேர்ந்து ஆர்ப்பாட்டமெல்லாம் நடத்தி போலீஸோட சண்ட போட்டதுல ஒருத்தர் செத்தும் போயிட்டாரு. நூத்துக்கணக்கான ரஷ்யக்குடியினர் கைதுசெய்யப்பட்டாங்க. இது நடந்தது ஏப்ரல் 24.

இப்போ ரஷ்யாவோட கண்ல இது பட்டுருச்சு. அது எப்படி சோவியத் காலச் சின்னத்த, அதுவும் ரஷ்யர்களோட பெருமைக்கு சின்னமா இருக்குற ஒரு சிலைய இடமாத்தம் செய்வீங்க.. அதோடு கூட புதைக்கப்பட்ட உடல்களை திரும்பவும் தோண்டி எடுக்குறது ரொம்ப கீழ்த்தரமானதுன்னு அறிக்கைவிட ஆரமிச்சாங்க. சொல்லிப்பாத்தாங்க கேக்கலை. அரசியல் கலந்தா அப்புறம் சூடுக்கு பஞ்சமா? அமெரிக்கா வேற அது எஸ்டோனியாவோட சொந்த விவகாரம்னு சொல்ல ஆரமிச்சோன்ன ரஷ்ய அரசியல் கட்சிகள் சில nationalism த்த கையிலெடுத்தாங்க. மாஸ்கோவோட மேயர் லுஷ்கோவ அறிக்கைவிட்டாரு "ரஷ்யக்கடைகள்ல எஸ்டோனியப் பொருட்களை விற்கக்கூடாதுன்னு". Sedmoi Continent, Kopeika மாதிரி பெரிய பெரிய சூப்பர் மார்க்கெட் செயின்களெல்லாம் கூட இதுல சேந்துக்க ஆரமிச்சாங்க. ஆனா இந்த மாதிரி புறக்கணிப்புகள்னால, க்யூபாவுக்கு எதிர்த்தாப்புல அமெரிக்கா செஞ்சா மாதிரி, ஒரு *யிரும் செய்யமுடியாதுன்னு புரிஞ்சு பழைய அஸ்திரத்த எடுக்க ஆரமிச்சுருச்சு ரஷ்யா.

அதான் வழக்கமான எண்ணெய் எரிவாயு அஸ்திரம். ரஷ்யாவோட மொத்த எரிவாயு மற்றும் எண்ணெய் ஏற்றுமதியில இருபத்திஐந்து சதவிகிதம் எஸ்டோனியாவுக்கு ரயில் மூலமா போய் அங்கேர்ந்து எஸ்டோனியாவோட பங்குபோக மிச்சம் ஐரோப்பாவுக்கு போகுது. மே. 1 லிருந்து ரயில் கம்பெனி எஸ்டோனியா போற ரயில் பாதைய சீரமைக்க போறதா திடீர் அறிக்கைவிட்டு ரயில் போக்குவரத்த பலமடங்கு குறைச்சிருச்சு. இதுமூலமா எஸ்டோனியாவுக்கும், அதன்மூலமா ஐரோப்பாவுக்கும் வரவேண்டிய எரிவாயு வராம சிக்கல் ஏற்பட்டிருக்கு. இதுனால ஏற்றுமதி செய்கிற ரஷ்ய எண்ணெய், கருநிலக்கரி மற்றும் எரிவாயு கம்பெனிகள் ஐரோப்பாவுக்கு அனுப்ப உக்ரைனிய மற்றும் ரஷ்ய துறைமுகங்கள் வழியா அனுப்புவோம்னு சொல்லிருக்காங்க. ரயில்வே நிர்வாகத்தினர் இதுக்கு சுத்தமா அரசியல் சம்பந்தமேயில்லேன்னு அறிக்கைவிட்டாலும் நம்பறது கஷ்டமா இருக்கு.

இதுதவிர, நாஷி "Ours" அப்படின்னு சொல்லி ஒரு அமைப்பு. ரொம்ப nationalist ஆளுங்க. மாஸ்கோவுல எஸ்டோனியாவோட தூதரகத்துக்கு முன்னாடி கடந்த ஆறு நாட்களா கூடாரமே போட்டு "No To Fascists Estonia"னு கலாட்டா செய்ய ஆரமிச்சாங்க. இதுனால தூதரகத்து செயல்பாடுகள் பாதிக்கப்படுதுன்னு எஸ்டோனியா சொல்லியும் போலீஸ் அவங்களை கைது செய்யல. அதுனால தூதரக அலுவல்கள் தற்காலிகமா முடக்கப்படும்னு எஸ்டோனியா சொல்லிருச்சு. இதத்தவிர ரஷ்ய-எஸ்டோனிய பார்டர்லயும் இதே ஆளுங்க சேர்ந்து cross border trafficஐயும் தொல்லைப்படுத்தறத செய்திகள் வர ஆரமிச்சுருச்சு.

அதுனால எஸ்டோனியா தன் பக்கத்து நியாயத்த ரஷ்ய மக்களுக்கு சொல்லியாகணும்னு நினைச்சு நேத்திக்கு (02/05/07) எஸ்டோனியாவோட ரஷ்யத்தூதர் மரீனா கல்ஜூரன் ஒரு பிரபலமான நாளிதழோட அலுவலகத்துல பிரஸ் மீட் வச்சாங்க. அது நடந்துகிட்டிருக்கும்போது இந்த நாஷி ஆளுங்க உள்ள புகுந்து கலாட்டா செஞ்சு, தூதரோட பாதுகாப்பு அதிகாரிங்க pepper spray எல்லாம் பயன்படுத்தி தூதர கார்ல ஏத்த படாதபாடு பட்டுருக்காங்க. ஆனா தூதர் மேல எந்தக் காயமும் இல்லை. அவங்க காரைத் துரத்திகிட்டே கொஞ்ச தூரம் நாஷி ஆளுங்க ஓடிருக்காங்க.

நேத்திக்கே சாயந்திரமா எஸ்டோனிய தூதுவர பாத்துட்டு தூதரகத்துலேர்ந்து வெளியே வந்த ஸ்வீடிஷ் தூதுவரோட காரும் தாக்குதலுக்கு உள்ளாயிருக்கு. குழப்பத்துல எஸ்டோனியா தூதுவர்னு நினச்சு ரவுடிக்கும்பல் ரகளை செஞ்சிருச்சு. காரோட சைட் வ்யூ மிரர்கள் உடஞ்சி, ஸ்வீடிஷ் கொடி கிழிக்கப்பட்டு போலீஸ் வந்து காருக்குள்ள பாதுகாப்பா இருந்த தூதுவர சுத்தி கேரோ செஞ்சிகிட்டிருந்த நாஷி ஆட்கள கைதுசெய்ய பதினஞ்சு நிமிஷம் ஆயிருச்சு. இங்கேயும் தூதுவர்மேல கைகூட படல. இந்த ரெண்டு நிகழ்ச்சிகளிலும் போலீஸால கும்பல கைதுசெஞ்சு கேஸெல்லாம் போட முடியல. ஏன்னா ரஷ்ய கிரிமினல் விதிகளின் படி இந்த மாதிரி demonstrations நடத்த பொதுமக்களுக்கு முழு உரிமையும் உண்டு. ஆனா பாதிக்கப்பட்ட ஆளுக்கு அடியோ காயமோ பட்டாலேயொழிய ரகளை செஞ்சவங்களுக்கு வெறும் அபராதம் மட்டும்தான் விதிக்கமுடியும். அதையே செஞ்சு போலீஸும் விட்டிருச்சு. அதுக்கப்புறம் கலாட்ட செஞ்ச அமைப்போட செய்திக்குறிப்புகள்ல தவறா ஸ்வீடிஷ் தூதுவர் கேரோ செய்யப்பட்டதுக்கு மன்னிப்பு கேட்டிருக்காங்க.

ஸ்வீடீஷ் தூதுவர் நேரா ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர்கிட்டயே போய் முறையிட்டும் வேற ஒண்ணும் செய்ய முடியலை. இதுதவிர ஸ்வீடன் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் ரஷ்ய தூதர கூப்பிட்டு கண்டனம் சொல்லிருக்கு. இதுஇப்படியிருக்க, எஸ்டோனிய அதிபர் Toomas Hendrik "try to remain civilized"னு ரஷ்யாவ பாத்து சொல்லிருக்காரு. இதுக்கப்புறமும் இ.யூ சும்மா இருக்கமுடியுமா? ரஷ்யாவுல இருக்கிற ஐரோப்பிய ஒன்றியத்த சேர்ந்த தூதுவர்களுக்கும் தூதரகங்களும் பாதுகாப்பு அளிக்க வேண்டியது வியன்னா கன்வென்ஷன்ல கையெழுத்து போட்டிருக்கிற ரஷ்யாவோட கடமைனு அறிக்கை விட்டிருச்சு. இது என்னன்ன எரியிற தீயில எண்ணெய ஊத்துறா மாதிரி. அவங்க அறிக்கைல எஸ்டோனியாவுக்குன்னு சொல்லலை. ஐரோப்பிய ஒன்றியத்த சேர்ந்தன்னு சொல்லி எஸ்டோனியா எங்காளு, நீ(=ரஷ்யா) வெளியில தனிமைல இருக்குற நாடுங்கறா மாதிரி சொன்னது இப்ப இங்க பிரச்சனையாப் போச்சு.

அமெரிக்கா வேற போலந்துல ஏவுகணைத்தளம் அமைக்கப்போறோம்னு சொல்லிகிட்டிருக்கு. அத ரொம்பத் தீவிரமா எதிர்க்குது ரஷ்யா. ஏன்னா ரஷ்யாவோட ஏவுகணைகள்தான் அதோட primary deterrent. வடகொரியாவுக்கும் ஈரானுக்கும் எதிராத்தான் இந்தத்தளம்னு அமெரிக்கா சொன்னாலும் பூடின் ஒத்துக்கல. ஏன்னா இந்த ஏவுகணைத்தளம் போலந்துல வந்துட்டா ரஷ்யாவோட strategic defense பல்லிளிக்க ஆரமிச்சுரும்.

இப்போ இந்த வெளியுறவுத்துறை பிரச்சனை வேற. பூடினுக்கு இன்னும் ஓராண்டே பதவி பாக்கி இருக்கற இந்த நேரத்துல அமெரிக்கா ஒருபக்கம் ஐரோப்பிய ஒன்றியம் ஒருபக்கம், இதுதவிர தனியா உள்நாட்டுல ஆங்காங்கே பெரிய அளவுல anti government protests.. எல்லாத்தையும் எப்படி சமாளிக்க போறார்னு பொறுத்திருந்துதான் பார்க்கணும்.

-------------
எழுத ஒண்ணுமேயில்லாத நேரத்துல இந்தமாதிரி ஏதாவது வந்து அவலாயிடுது. அந்த வகையில எஸ்டோனியாவுக்கு ரொம்ப நன்றி. என்ன குரூரமான ஆளுன்னு வாயடைச்சு போயிடாதீங்க. இருநூறத் தொடறது ரொம்பவே கஷ்டம்பா...பட்டாதான் தெரியும். :))
------------
சுட்டீஸ்:
http://www.moscowtimes.ru/stories/2007/05/03/001.html
http://www.spiegel.de/international/europe/0,1518,480739,00.html
----------
UpDates on 04/05

இன்றைக்கு எஸ்டோனியாவின் அதிபர் அலுவலகம் அமெரிக்க உள்துறைச் செயலர் காண்டோலீஸா ரைஸ் இவ்விஷயத்தில் எஸ்டோனியாவை ஆதரிப்பதாக தொலைபேசியில் சொன்னதாக அறிவித்துள்ளது.

எஸ்டோனியாவின் கோரிக்கைக்கு இணங்க நாடோவும் ஐ.ஒன்றியமும் மிகக் கடுமையான முறையில் ரஷ்யாவை கண்டித்துள்ளன. ஐ.ஒன்றியம் WTOவில் ரஷ்யா சேர்வதற்கு இது இன்னுமொரு தடைக்கல் என்ற தொனியில் அறிக்கை விட்டுள்ளது. வரும் மே.18 ஐ.ஒ-ரஷ்ய மாநாடு சமாராவில் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்டோனிய தூதர் இருவார விடுமுறையென தாய்நாட்டிற்கு சென்றுவிட்டார். நாஷி அமைப்பு ஆட்கள் எஸ்டோனிய தூதரகத்தின் முன் நடத்திவந்த ஆர்ப்பாட்டத்தை, தங்கள் கோரிக்கைக்கு ஏற்ப தூதர் வெளியேறிவிட்டதால், நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது.

வ.வா.சங்கத்தினருக்கு ஆப்புரேசல்

பச்சோந்தி மக்கள் கட்சியின் நிரந்தர நம்பர் 2வின் வெளிப்படையான எண்ணங்கள்.

வின்னரில் கைப்பு என்னும் வின்னரால் தொடங்கிய வ.வா. சங்கம் இன்று வலையுலகில் பல வின்னர்களைக் தன்னுள்ளே கொண்டு பல வின்னர்களை அடித்து இன்று விண்ணைமுட்டும் விண்வெளிவீரர்களின் விண்கலத்திலுள்ள வீணான விண்டோக்களையெல்லாம் விஞ்சி வீ.வி.வ.வா.வீ..வு.. (Vtop Vyving 'V' Vor V's vake!! - இது என் கீபோர்ட் சொன்னது) வளர்ந்துள்ளார்கள் என்பது வெள்ளிடைவலை மலை.

ஓராண்டு கண்டுள்ள சிங்கங்களின் பணி சாதாரணமானது என்று சவடால்விடும் எதிரிக்கட்சி ஏகாம்பரம் இல்லை நான். சங்கத்தினருக்கும் நமக்கும், அதாவது பச்சோந்தி மக்கள் கட்சிக்குமான தொடர்பு நீண்டு நெடுங்காலமாய் கல்தோன்றி மண்தோன்றாக்காலத்திலிருந்தே சமீபத்தில் சுமாராய் ஓரண்டு காலமாய் தொடர்ந்துவந்துள்ளது. ஆரம்பத்தில் தேர்தல் நேரத்தில் சூடுபிடித்து சிலபல அறிக்கைகளை சங்கத்துச் சிங்கங்களும் பமகவின் தலிவர்களும் பரிமாறிக்கொண்டனர். பின்னர் சங்கத்துச்சிங்கம் தேவ் ப.ம.க.வில் இணைந்து அதை மறைத்துமீண்டும் சங்கத்திற்கே சென்ற கதையெல்லாம் நான் சொன்னால் இங்கே நன்றாக இருக்காது. இருந்தும் குறிப்பிடவேண்டியதற்கான காரணத்தைச் சொல்லிவிடுகிறேன்.

அதற்குமுன் கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலின்போது ஜொள்ளுப்பாண்டி, தேவ், பொன்ஸ், பெருசு எனப் பல சங்கச்சிங்கங்களின் பதிவுகளைப் பார்த்தாலே புரியும். நமக்கு நாமே கண்ட இயக்கத்திலிருந்துகொண்டு சொந்தமாய் சொறிந்துவிடாமல் விடுவேனா?

கட்சித்தொண்டனுக்கு நான் எழுதிய அவசர கடிதம் மற்றும் சுவாமி குஜிலியானந்தாவின் பரபரப்பு பேட்டி

இவற்றை இங்கே குறிப்பிட்டாக வேண்டிய காரணத்தைச் சொல்லிவிடுகிறேன். சென்ற வாரம் கொத்தனாருடன் சாட்டிக்கொண்டிருந்தபோது எங்கள் பேச்சு சுழன்றுகொண்டிருந்த fulcrum - "how i miss those good old days, we had so much fun" என்பதுதான் எங்களின் நாஸ்டால்ஜியா நாமசங்கீர்த்தனமாக இருந்தது. காரணம் clean fun. good humour. ஆங்கிலத்தில் போட்டதற்கான உள்குத்துகளில் தொடங்கி வெட்டி உப்புமா என மட்டுமே துவளாமல் தனியாக பதிவொன்றையே தொடங்கி எவரையும் offend செய்யாமல் தரமான நகைச்சுவையை இத்தனை நாளாக தரமுடிவதற்கு சங்கத்து சிங்களுக்கு ஒரு ஷொட்டு.

நகைச்சுவை என்பதில் எனக்குத் தெரிந்து இரண்டுவிதம். அடி கொடுப்பது அடி வாங்குவது. கவுண்டமணி பார்த்துவளர்ந்த நமக்கு இரண்டுமே காமெடிதான். கொடுப்பதற்குண்டான லைனில் கூட்டம் மாளாது. ஆனால் வாங்கத்தான் ஆளில்லாமல் இருந்தார்கள். தங்களையே கிண்டல் செய்துகொள்ளும் self-depreciation நகைச்சுவை கஷ்டமானது. செய்வதற்கு, அடிகொடுப்பதைவிட, திறமையும் தில்லும் வேண்டும். அதே சமயம் நாகரிகமாகவும் இருக்கவேண்டும். non offensive humour என்றால் என்ன தமிழ்நாட்டில் பலருக்கும் பாடம் நடத்தவேண்டிய நிலையில், how to take/make satire என்பதை ஸ்பூன்போட்டு சொல்லிக்கொடுக்கவேண்டிய துரதிருஷ்டமான நிலையில்தான் பலரும் இருக்கிறோம். இதில் அடுத்தவரின் மனம் புண்படாதவாறு கலாய்த்தலோ, தம்மைத்தாமே கிண்டலடித்துக்கொள்வதோ ரொம்பவே கஷ்டமான காரியங்கள். And Everybody gives into that Temptation to slander.... eventually!

ஆனால் கண்ணியம் காத்தலை மிகத் திறமையாகவே செய்துவந்துள்ளனர் சங்கத்தினர். தல கைப்புவை நக்கலடிக்கவென்று ஒரு கூட்டம். அதையும் அவர் மிகுந்த தாராளமனத்தோடு ஏற்றுக்கொள்வதில் தொடங்கி பலபுது வடிவங்களைத் தாங்கி, புதிய அங்கத்தினர்களையும் சேர்த்துக்கொண்டு இன்று வ.வா.ச என்று சொன்னால் தெரியாதவர்கள் இருக்கமுடியாது என்ற செல்வாக்குள்ள நிலைக்கு வந்துள்ளனர். பல வலையுலகப் பெருந்தலைகளையும் இன்றுதன் ரசிகர் பட்டாளத்தில் குறிப்பிட முடிகிறதென்றால் இந்த a-political நகைச்சுவையினால்தான். அட்லாஸ் வாலிபர்களென இன்னும் சிலரையும் கூட்டி நட்சத்திர வாரத்தை போன்றதொரு செலிப்ப்ரிட்டி லாப்டர் சேலஞ்சு மாதிரி கொண்டு சென்றதும் தனிச்சிறப்பு.

என்ன இருந்தாலும் அண்டம் பதினான்கிலும் அங்கத்தினர்களை கொண்டுள்ள எங்கள் மகாசமுத்திரமான ப.ம.கக்கு முன்னால் வ.வா.ச ஒரு புழலேரி என்றாலும், எதிரிக்கட்சியென்றும் உதிரிக்கட்சியென்றும் பலமுறை நானே குறிப்பிட்டிருந்தாலும் இந்த ஓராண்டு காலத்தில் அவர்களின் வெற்றியைக் கண்டு எனக்கும் மிகவும் மகிழ்ச்சியே. காரணம் தமிழரிடையே நகைச்சுவை உணர்வு வஞ்சமில்லாமல் இருக்கிறது என்பதை காட்டுவதனால்.

அன்றாட அழுத்தங்களின் பாரத்தால் அவ்வப்போது தேவையில்லாத, உப்பு பெறாத விடயங்களுக்கும் டென்ஷன் ஆகிறோம். இங்கேயே பல உதாரணங்கள் கொடுக்கமுடியும். அவை திசைதிருப்ப வல்லவை என்பதுதான் இங்கே நான் சொல்லவிரும்பும் சோகமும் கூட.

தரமான நகைச்சுவையை அடுத்தவர் மனம் புண்படாமல் தொடர்ந்து கண்ணியமாக தந்துவரும் சங்கத்திற்கும், அவ்வ்வ்வ்வ்வ்வ் என்று நினைத்தமாத்திரத்திலே அழுதுவிடக்கூடிய நல்லவரான தலையையும் சிரிப்பு பட்டாசுகளாய் வெடித்து படிப்போர் மனதில் மத்தாப்புகளாய் மகிழ்வித்திடும் மற்ற சங்கச்சிங்களின் பணி இன்றுபோலவே எந்நாளும் தொடர்க, வாழ்க, வளர்கவென்று சொல்வதில் அதைப்படித்து ரசிக்கின்றவர்களுள் ஒருவனாய் என் சுயநலமும் இருக்கத்தான் செய்கிறது.

அப்படி தொடர்ந்து படிப்பவர்களின் பொருட்டாவது சங்கத்தினர் எத்தனை ஆணிபுடுங்கவேண்டிய துர்பாக்கியநிலைக்கு தள்ளப்பட்டாலும் இந்தச் சங்கத்தை இப்பொழுதுபோலவே முனைப்புடன் நடத்தியும் வரவேண்டுகிறேன். வாழ்த்துகிறேன். இப்போதைக்கு போதும்கறேன்னு நீங்களெல்லாம் சொல்லுமுன் முடித்தும்கொள்கிறேன்.

இப்படிக்கு,
'இரம்'நாதன்,
கொள்கை பரப்புச் செயலாளர்
கட்சி #2, பச்சோந்தி மக்கள் கட்சி
ஸ்விஸ்ஸாபுரம்
ரஷ்ய மாவட்டம்

சங்கத்தினருக்கு அடுத்து ஆப்பு வைக்க நான் அழைக்கவிரும்புவது, who else, இலவசக்கொத்தனார்.

 

வார்ப்புரு | தமிழாக்கம்