பிறந்த பிறவியினாலேயே வரும் குணங்கள் ஒரு சாராருக்கு மட்டுமே என்று நாம் இங்கே விவாதம் நடத்தி கிட்டத்தட்ட ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்திருக்கும் இந்த வேளையில், சன் ரீவியில் என்ன காரணத்தாலோ ஒளிபரப்பத் துவங்கப்பட்டு பாதியிலேயே நின்று போன அரசு திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் தமிழக முதல்வர் டாக்டர். கலைஞர் தன் பேச்சிலே குறிப்பிட்டு சொன்ன ஒரு விஷயம் என் கவனத்தை ஈர்த்ததனாலும் அதை வலையுலகில் யாரும் இதுவரை பதிவு செய்யாததன் காரணமாகவும் இதோ அதன் சாராம்சம். (quote unquote அல்ல. ஆனா அது மாதிரி இது...)
ஆட்சியில் இருக்கும் போதோ இல்லாத போதோ; ஆட்சிச்சக்கரம் சுழலும் போதோ சுழலாத போதோ; தமிழக மக்களுக்கு பணியாற்ற வேண்டியது என் பிறவியிலேயே வந்த கடமை என்ற உணர்வு இருப்பதாலேயே இந்த வயதிலும்.....
இப்படி அவர் பேசி முடித்ததும் சன் டிவி என்ன காரணத்தாலோ திடுதிப்பென்று நிகழ்ச்சியை பாதியிலேயே நிறுத்தி விட்டார்கள். நமீதா Uவாக இடுப்பில் அணிந்திருந்த ஆடை சற்றே நழுவி A ஆக அவையில் அனைத்து அகவையிலும் இருந்த கலையுலகத் தொடர்புடையவர்கள் மட்டுமே கண்டு களித்த அந்த வரலாற்று நிகழ்வை இருட்டடிப்பு செய்த சன் டிவிக்கு - இது வேண்டுகோள் வைக்கக்கூடிய இடமா என்று தெரியாததால்- கடுமையான கண்டனத்தையும் மறைக்காமல் முழுமையாக ஒளிபரப்ப வேண்டும் என்று ஒரு சாதா தமிழனாக இருப்பதால் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனிவே அடுத்த மேட்டர் - அதுல் சொந்தி
பார்த்தவுடனேயே இரத்தம் கொதித்தது எனக்கு. இப்படிப்பட்ட ஒரு காரியத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க நாதியே இல்லையே என்று உள்ளம் கலங்கும்வேளையில் நானாவது நமது பண்பாட்டின்படி எதிர்க்க வேண்டும் என்று துணிந்து இப்படி எழுதக்கூடியவன் ஒரு (குடிகாரன், எனக்கும் அவனுக்கும் ஜென்மப்பகையல்ல, அதுல் என்ற பெயருக்கு நான் எதிர்ப்பாளனுமல்ல, சொந்தி என்ற பெயரை படித்தவுடன் அவன் தொந்தி எப்படி என்று ஆராயும் முட்டாளுமல்ல) மூளை கழண்ட கேஸு - இவன் மூ.க.கேவாக இருக்கலாம் என்று விக்கிபீடியா கட்டுரை எழுதியவரே சொல்லியிருக்கிறார். நான் சொல்லவில்லை. விக்கிபீடியா சொல்கிறது. நான் சொன்னால் படிக்கும் உங்களுக்கு சந்தேகம் வராது என்று தெரிந்தாலும் சந்தேகமிருப்போரின் வீடுகள் அருகில் இல்லாத காரணத்தால் இதோ சுட்டி தருகிறேன். படித்துத் தெளிவுறலாம்.
ஷா ருக் என்று பிரபலமாக இந்திப்படவுலகில் அறியப்படும் நடிகரின் அல்லக்கைதான் இந்த சொந்தி. உண்மையில் சொல்லப்போனால் ஆடு/குரங்கு மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஷா ருக் 'அசத்தப்போவது யாரு'வில் வந்தால் நிரந்தர சாம்பியனாகியிருப்பார். உலகெங்குமுள்ள தமிழர்களின் உள்ளங்களில் ஒளிவிளக்கேற்றும் பேரன்புமிக்க இயக்குநர் திலகம் ஆண்ட்ரூ இவரை ஷோ வில் சேர்க்க ஆவன செய்தால், தமிழன் டிவி பார்த்து சிரித்தே சிரித்தே தன் சோகமனைத்தையும் மறந்துவிடுவான். உடனே போய் நேச்சர் பவர் பார் சோப்பும் வாங்குவான்.
இந்த சொந்தி ஒரு எளுத்தாளனே அல்ல என்பதற்கு என்னிடம் ஆதாரம் இருக்கிறது. இவனுடைய 'படைப்புகள்' காலச்சுவட்டிலோ, தீராநதியிலோ ஒருதடவை கூட பிரசுரிக்கப்பட்டதில்லை. சிற்றிலக்கிய சம்மேளனத்தின் R&D பிரிவான ஞாநியின் பூணூல் என்ற நுண்ணாராய்ச்சியில் இவன் பங்கெடுத்ததில்லை. சல்மாவிடம் கில்மா பண்ணியதில்லை. பா.ராவையோ எஸ்.றாவையோ இவன் வைததில்லை. சிவாஜிக்கு பின் (பா.) விஜயாவது தெரியுமா இவனுக்கு? நவீன இதிகாசகர்த்தா கவிப்பேரரசுவைத் தெரியுமா? குறைந்தபட்சம் வெளிக்கிட்டிருக்கும் மார்பகங்களும் கீறப்பட்ட யோனிகளும் என்று ஒரு கவிதையாவது எழுதியிருந்தானெண்டால் இவன் பெண்ணீயவாதி என்றாவது ஒத்துக்கொண்டிருக்கலாம். அதற்கு வழியில்லை. இதை நான் சொல்லவில்லை. வரலாறு சொல்கிறது. பேரறிஞர்கள் சொல்கிறார்கள். நான் வழிமொழிகிறேன் அவ்வளவே.
ஆகமொத்தம் எளுத்தாளனல்லாத ஒரு வெத்துவேட்டு ப்ளாக்கர்.காம்/ஐ.பி.என் தளம் இலவசமாக எழுதத்தருகின்றதே என்ற -ஓசியில் கொடுத்தால் எதையும் நக்கிப்பார்க்கும் அறிவிலிகளின் வழியில் ஒரு ப்ளாகை ஆரம்பித்து இவன் எழுதிக்கிழிப்பதையும் எழுத்து/படைப்பு/ஆக்கம் என்ற போலிப்போர்வையில் படிப்பவரை ஏமாற்றிக்கொண்டிருக்கிறான்.
இந்த சொந்தி சொல்கிறான். ஷாருக் கான் இந்திய சினிமாவின் ரோஜர் பெடரராம். @#@$^#&*@*(&^@)(*__(_*(*@^#@%%$@!
நீயெல்லாம் ஒரு ஆம்பிளையாடா? குடிபோதையில் இருப்பவர்கள் எழுதியதையெல்லாம் பிரசுரிக்கும் ஐ.பி.என் ஏனிப்படி ஷாருக்கிற்கு அல்லக்கையாக இருக்கிறது? ஒரு கமல்ஹாசனோடு ரோஜரை ஒப்பிட்டாலும்கூட பொறுத்திருந்திருப்பேன். போயும் போயும் ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்டோட கம்பேர் செய்ய என்ன துணிச்சல்? நீ எந்தக் கடையில் சாராயம் வாங்குகிறாய்?
உனக்கு ஷா ருக்கை அப்படி பிடிக்குமென்றால் பால் அபிஷேகம் செய், கட் அவுட் வை, அலகு குத்தி காவடி எடு. எப்படி என்று சொல்லிக்கொடுக்க எங்கள் சூப்பர் ஸ்டார்/தளபதி/அஞ்சா நெஞ்சனின் தொண்டர்கள் வரிசையில் நின்று காத்திருக்கிறார்கள். ஆனா அடக்கம் என்ற சொல்லிற்கும், திறமை என்ற சொல்லிற்கும் நவீன விளையாட்டுலக அகராதியில் இலக்கணமாக திகழும் ரோஜரை தயவு செய்து உன்னோட குப்பைத்தொட்டிற்குள் இழுக்காதே. விளைவுகள் விபரீதமாக இருக்கும்.
216. பிறவிக்குணம், மூளை கழண்ட கேஸு
Subscribe to:
Post Comments (Atom)
27 Comments:
ரொம்ப தெளிவா வெளங்கிருச்சு.... :(
// இந்த சொந்தி சொல்கிறான். ஷாருக் கான் இந்திய சினிமாவின் ரோஜர் பெடரராம்.//
ஷாருக்கானின் பிறந்த தினத்தில் அவரைப்பற்றி மேலும் அறிவதற்கு தாங்கள் மேற்குறிப்பிட்ட சுட்டி மிகவும் உதவியாக இருந்தது. உங்களுக்கு நன்றி ஐயா.
மற்றபடி உங்களின் புலம்பல்களுக்கு NO Commands.
இராம்,
எழுதின எனக்கே தெளிவா ஒண்ணும் விளங்கலை..
உமக்கு என்னய்யா விளங்கிருச்சு இப்போ? :)
ஷாருக்கானின் விசிறி,
ஏதோ என்னாலானது. நன்னி.
பிறந்த தினம் வேறயா.. கொண்டாட்டங்களில் அஜெண்டா என்ன? :)
அப்ப கோக் விளம்பரத்தில் வர இந்தி நடிகைங்க எல்லாம் மார்டினா ஹிங்கஸா ???
அந்த கோக்கும் இந்த கோக்கும் ஒன்னா ??
நல்லாவே தெரியுமய்யா நீ ரோஜர் விசிறினு.... இப்படி எல்லாம் பதிவு போட்டு தான் சொல்லனுமா என்ன...
அட இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை, வழக்கு வரலாறு எழுதுற வேலை இல்லை. தலை திருகுற வேலை தான். தலை சரியா திருக்கிட்டு எங்களையும் திருகுறது என்ன நியாயமோ?
கலைஞரின் பிறவி(!!!)யிலேயே வாங்கிய வரம் போல இருக்கு எங்க நிலைமையும் :)
முருகனே...எப்ப ராமநாதன் எழுதுற பதிவு எனக்குப் புரியுமோ!!!!!
இந்த ரோஜர் பெடரரு யாருன்னு கேட்டா...என்னையும் பதிவுல சொல்லீருக்குற மாதிரி திட்டுவீங்களா :(
"சொந்தி என்ற பெயரை படித்தவுடன் அவன் தொந்தி எப்படி என்று ஆராயும் முட்டாளுமல்ல"
அப்பப்பா..என்ன ஒரு ஆவேசம், என்ன ஒரு ஆக்ரோஷம்.....ம்ம்ம்??!!
ஏங்க ராம்ஸ், ராஜர் இவங்கெல்லம் தொட முடியாத இடதில இருக்கார்..... நீங்க ஏன் இப்படி எனர்ஜி வேஸ்ட்?? ஓம் ஷாந்தி ஓம்......!!!
முதல்ல உங்காள ப்ரெஞ்சு ஓப்பன் கெலிச்சிகிட்டு வர்ற சொல்லுங்க. அப்பாலீக்கா, அவர பாலிவுட் பாதுஷாவோடு கம்பேர் பண்றதா வேணாமான்னு யோசிக்கலாம். :-))
ஸ்ரீதர்.......நீங்க ராம்ஸோட ரொம்ப சென்சிடிவான நெர்வ தொட்டுடீங்க.....!!
கொஞ்சம் தள்ளி போய் நின்னுகோங்க....
ட்ராகன் மாதிரி நெருப்ப வுடபோராரு.....அவர் :):)
//இராம்,
எழுதின எனக்கே தெளிவா ஒண்ணும் விளங்கலை..
உமக்கு என்னய்யா விளங்கிருச்சு இப்போ? :)//
டாக்டரு எழுதினது கெமிஸ்ட்'க்கே புரியமே என்னத்தோயோ எடுத்து கொடுக்கிறாரு...
அதையெல்லாம் நாங்க எதுவும் சொல்லாமே வாங்கி தின்னு தொலைக்கிறோம், இப்போ டாக்டருக்கே தெளிவா புரியாமே உளறாருன்னு எங்களுக்கு கட்டாயமா விளங்கினுமின்னு இல்ல???
ஏம்பா ராம்ஸு
உமக்கு வர வர சாதாரணமா எழுதவே முடிய மாட்டேங்குது போல! சதா ரண களமாவே பதிவு போடறீங்க.
உள்குத்துப் புரியாம மக்கள்ஸ் எல்லாம் மேலெழுந்தவாரியா தெரியற பொருளுக்கு மட்டும் பதில் போடறாங்க.
எனக்கெல்லாம் என்ன சொன்னா எங்க வெடிக்குமோன்னே பயமா இருக்கு. நல்லா இருடே!!
ஆனந்த்,
ஹிங்கிஸுக்கு என்ன கோக் பிடிக்குமோ.. லைட்டா ரெகுலரா?
அவங்களுக்கே தெரியாதாமே.. :)
புலி,
//அட இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை, வழக்கு வரலாறு எழுதுற வேலை இல்லை. தலை திருகுற வேலை தான். தலை சரியா திருக்கிட்டு எங்களையும் திருகுறது என்ன நியாயமோ?//
ஹி ஹி.. ஏதோ நம்மாலானது.
//கலைஞரின் பிறவி(!!!)யிலேயே வாங்கிய வரம் போல இருக்கு எங்க நிலைமையும் :)//
இதுல என்னய்யா வருத்தம்? மகிழ்ச்சியளிக்கிற செய்திதானே?
ஜிரா,
//முருகனே...எப்ப ராமநாதன் எழுதுற பதிவு எனக்குப் புரியுமோ!!!!!//
இதுக்கு அவன் பதில் சொன்னா, எனக்குச் தெரிவிக்கவும்.
//இந்த ரோஜர் பெடரரு யாருன்னு கேட்ட//
இப்ப கேக்குறீரா இல்ல கேக்கறதுக்கு நூல் விடுறீரா.. என்ன செய்றீருன்னு சொன்னீங்கன்னா பதில் வேறுபடும்.
குடிபோதையில் இருப்பவர்கள் எழுதியதையெல்லாம் பிரசுரிக்கும் ஐ.பி.என் ஏனிப்படி ஷாருக்கிற்கு அல்லக்கையாக இருக்கிறது
யார் குடிபோதையில் இருக்கிறாங்கனு நல்லாவே விளங்கிடுச்சுங்கோவ்!!!!!!!!!!! :P :P:P
ரோஜர் பெடரர் இந்த புட்பால்லே ரன் எடுத்து ஹோம்ரன் ஓடினாரே அந்த ஆளுதானே? அவருக்கும் தலை ஷா ருக்கிற்கும் ஏன்ன சண்டை? எனக்கும் கோவம்தான் வருது டாக்குட்டர்!
ராதா ஸ்ரீராம்,
//நீங்க ஏன் இப்படி எனர்ஜி வேஸ்ட்?? ஓம் ஷாந்தி ஓம்......!!!//
ஆஹா! கடைசியில சொன்னீங்களே தலை படப் பேரு.. அந்த உள்குத்து யாருக்குப் புரிஞ்சுதோ இல்லையோ.. எனக்கு புரிஞ்சுது :-)
கொத்தண்ணா, எனக்கும் பயமாத்தான் இருக்கு இப்பல்லாம் டாக்டர் பதிவ ஒப்பன் பண்ணனும்னாலே.. ரத்தக்களறியால்ல கொந்தி (சொந்தி இல்லப்பா.. அடிக்க வராதே) வச்சுருக்காரு..
இராதா,
//ராஜர் இவங்கெல்லம் தொட முடியாத இடதில இருக்கார்..... நீங்க ஏன் இப்படி எனர்ஜி வேஸ்ட்?? //
இது புரிஞ்ச நீங்க //ஓம் ஷாந்தி ஓம்......!!!//னு போடலாமா? :(((((((
ரெண்டு பேரையும் ஒரே வாக்கியத்துல சம்பந்தப்படுத்தறதே மகாபாவம்! :)
ஸ்ரீதர்,
Dont go there! :)
அடுத்தவங்க பொழச்சு போகட்டும்னுதான்.. அவங்களுக்கும் புள்ள குட்டி இருக்குல்ல.. காப்பாத்தவேணாமா?
நான் சொல்லலை.. தலீவரே 'சொல்லிருக்காரு'. பார்க்க இங்க. தானே ஜெயிச்சு போரடிச்சு போச்சு.. அதான் விட்டுவச்சுருக்காரு.
//ட்ராகன் மாதிரி நெருப்ப வுடபோராரு.....அவர் :):)//
ஹி ஹி.. நாமெல்லாம் தொடற இடத்துல ஸ்ரீதர் இருக்காரோ இல்லியோ ஷா ரூக் கனவுலகூட தொட முடியாத நிலமைல இருக்காரு பெடெக்ஸு! ஆனா அதச் சொல்லமட்டுமில்ல இந்தப் பதிவு. ;)
திராவிடப் பரம்பரையில் வந்த நீதிவழுவா நல்பாண்டியனைப் பற்றிய உங்கள் கருத்தென்ன? :))
இராம்,
//டரு எழுதினது கெமிஸ்ட்'க்கே புரியமே என்னத்தோயோ எடுத்து கொடுக்கிறாரு//
டாக்டரு கோழிக்கிறுக்கு கிறுக்கறது பேஷண்டுக்கு புரியக்கூடாதுன்னுதான். கெமிஸ்டுக்கு புரிஞ்சாலும் புரியாட்டியும் எந்த ப்ராப்ளமும் இல்லை.
கொத்ஸு,
//சதா ரண களமாவே பதிவு போடறீங்க.தெரியற பொருளுக்கு மட்டும் பதில் போடறாங்க//
என்ன செய்ய மக்களுக்கு உ.கு மேட் ஈஸியெல்லாம் டச் விட்டுப்போச்சு. காரணம் வேறொண்ணுமில்ல. இப்பதான் வெளிப்படையாவே பேரு, ஊருப் (அதான்பா ஆப்கானிஸ்தான்) போட்டே அவங்க வீட்டு ஆளுங்களத் திட்டறது பேஷனா போச்சே..
//எங்க வெடிக்குமோன்னே பயமா இருக்கு.//
ஒங்கியும் வெடிக்காது. அதுல் சொந்தி வந்து இதப்படிச்சு என்ன லிபல் கேஸா போடப் போறாரு. நான் இப்படிச் சொன்னதுக்காகவே யாராச்சும் மொழி'பெயர்த்து' இமெயில் அனுப்பிடாதீங்க சாமிங்களா..
கீதா சாம்பசிவம்,
//யார் குடிபோதையில் இருக்கிறாங்கனு நல்லாவே விளங்கிடுச்சுங்கோவ்//
அறச்சீற்றம் என்ற கேட்டகரியில் வரும் பதிவுகளுக்கு சென்ஸார் சர்டிபிகேட் மற்றும் டெகோரம் சர்டிபிகேட்லாம் தள்ளுபடி என்று அறிவிச்சு பலநாளாச்சே. இந்த அடிப்படை விதி தெரியாதா உங்களுக்கு?
மேலும் சில சமயங்கள்ல அறச்சீற்றம் உச்சிக்கு ஏற நீங்க சொன்ன விஷயங்களும் தேவைப்படலாம்.
பெனாத்தலாரு,
//இந்த புட்பால்லே ரன் எடுத்து ஹோம்ரன் ஓடினாரே அந்த ஆளுதானே?//
ஆமாம்.. அதே ஆளுதான்.. மேட்ச் கூட ஷூமேக்கர் போட்ட பாலில் அடிச்சாரே.. பதினெட்டாவது ஹோல் வரைக்கும் விறுவிறுப்பா MCGல நடந்துச்சே..
யோவ் என்ன.. பூரிக்கட்டையால தங்கமணி வச்சதோட மப்பு இன்னும் இறங்கலியா?
//அந்த உள்குத்து யாருக்குப் புரிஞ்சுதோ இல்லையோ.. எனக்கு புரிஞ்சுது//
இதுல என்னய்யா குத்து? வெளிப்படையாவே சொல்லிருக்காங்க. கடைசி வார்த்தை ஷாருக்குக்கு அர்த்தம் பண்ணிகிட்டா அது தப்புனுதான் வந்து சொல்வாங்க..
இதுவே நோவாக்கும் ஷாருக்கும் ஒண்ணுனு சொல்லிப்பாரும்... புதரகத்துலேர்ந்து மிஸ்ஸைல் வரும். :) சரிதானே இராதா?
//ரத்தக்களறியால்ல கொந்தி (சொந்தி இல்லப்பா.. அடிக்க வராதே) வச்சுருக்காரு..//
நிறைய பேரு நிறைய மிஸ் பண்ணிட்டாங்க. ஒருத்தருக்கு மட்டும் விதியின் வலியோ அதிருஷ்டமோ புரிஞ்சுருச்சு போல. யாருன்னு என் கிட்ட கேக்கக்கூடாது சரியா?
கொத்ஸு,
//திராவிடப் பரம்பரையில் வந்த நீதிவழுவா நல்பாண்டியனைப் பற்றிய உங்கள் கருத்தென்ன? :))//
கொழுப்பு உச்சாணிக்கு ஏறிப்போச்சு போல?
ஆர்மினியா (ரஷ்யாவோட முன்னாள் சேட்டிலைட். நம்ம ஆன்ரே அகாஸியோட அப்பாவும் இதே நாடுதான்) எப்பலேர்ந்து திராவிடநாட்டுல சேர்ந்துச்சு?
எப்படியும் பெடரரு போனாப் போகுதுன்னு கொடுத்ததத் திரிச்சு 'யாருக்கோ' களங்கம் உண்டாக்க நினைக்கிறீரு. உம்ம எண்ணம் நிறைவேறாது.
Post a Comment