208. வாழ்க்கையைத் தேடி அலையும் மாந்தர்காள்!



பணம் பணம் என்று முடிவில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறோமே! ஓயாமல் ஓடுவதினால் விலைகொடுத்து வாங்க முடிந்த காரும் மோரும், வீடும் வசதியும், அன்பும் வம்பும் இனிக்கிறவரை நன்று!

இப்படி நம்மிடமும் கருணைகொண்டு படியளக்கும் ஈசனை இமைப்போதும் நினையாமல் ஆலாய்ப் பறக்கும் இந்த ஓட்டத்தினை ஒருநிமிடம் நிறுத்தி... எதைவிடுத்து எதைநாடி ஓடுகின்றோமோ, அது 'வெய்யிற் கொதுங்க வுதவா வுடம்பின் வெறுநிழல்போற்கையிற் பொருளு முதவாது காணுங் கடைவழிக்கே' என்று புரியும் வேளையில் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமாய் தொலைத்த 'வாழ்க்கையைத் ' இதுபோல சாலையோரத்து மைல்கல்களில் தேடிக்கொண்டிருக்க வேண்டியதுதான்.


8 Comments:

  1. இலவசக்கொத்தனார் said...

    என்னய்யா ரொம்ப தத்துவமா எதோ சொல்லி இருக்கீரு?

    (நமக்குத்தான் வழக்கம் போல ஒண்ணும் புரியலை. இப்போதைக்கு தமிழ்மணத்தின் ஹாட் டாபிக்குக்கும் உம்ம பதிவும் எதாவது சம்பந்தம் உண்டா? இது வெறும் தத்துவ போஸ்டா இல்லை டாபிகல் போஸ்டா?)


  2. வல்லிசிம்ஹன் said...

    Thamizh fonts illai.

    puriyalai:))

    Urainadai veNbaavaa.????


  3. rv said...

    கொத்ஸு,
    சம்பந்தம் உண்டுன்னு நான் சொன்னாலும் இல்லேன்னு சொன்னாலும் பின்நவீனத்துவமா சம்பந்தப்படுத்தி விடாம என்னையும் பின்னையும் நையப்படுத்தி அனுப்பிவைக்காட்டா தூக்கம் வராதா??

    இது வெறும் சாதா தத்துவப் பதிவப்பா...


  4. rv said...

    வல்லிசிம்ஹன்,
    இந்த நக்கல் ஆனாலும் கொஞ்சம் டூ மச்சுங்க.. :))

    உரைநடை செய்யுள் நான் எழுதினா பரிசு கொடுக்க நீங்க தயாரா?


  5. Geetha Sambasivam said...

    என்னங்க இது? டாக்டர் தொழில் நல்லாத் தானே போயிட்டு இருக்கு? திடீர்னு என்ன ஆச்சு? பாலஸில் இருந்தீங்க? இப்போ ஆட்டோ வந்துடுச்சா? "தத்துப்பித்துவம்" எல்லாம் பேச ஆரம்பிச்சுட்டீங்க? அந்தக் கொடிக்கும், ஆட்டோவுக்கும் என்ன சம்மந்தம்? சிம்பாலிக்கா ஏதோ சொல்றீங்க போலிருக்கு? :P


  6. Geetha Sambasivam said...

    நீங்க கூப்பிடலைனாக் கூட கடமை உணர்வு உந்தித் தள்ள வந்து கமென்டிட்டேன். :P


  7. rv said...

    கீதா,
    //இப்போ ஆட்டோ வந்துடுச்சா?//
    எனக்கு ஏங்க இப்ப இருக்குற நிலைமையில் வருது?????????????? :((((((

    அப்புறம் தத்துபித்துவமெல்லாம் அப்பப்போ பொழிஞ்சிகினே இருக்கணும். அப்பத்தான் பின்னாடி பொஸ்தகமா போட வசதியா இருக்கும்..

    அப்புறம் படத்துல, ரோட்டு டிவைடர்ல இருக்குற போர்ட பாருங்க.. பாரலெல்லா பிடிக்கவே முடியாதபடி, திருப்தியே வராதபடி போயிகிட்டிருக்கிறோமுங்கறத எத்தினி சிம்பாலிக்கா படம்பிடிச்சு காட்டிருக்கேன்..???? :))))))

    //நீங்க கூப்பிடலைனாக் கூட கடமை உணர்வு உந்தித் தள்ள வந்து கமென்டிட்டேன். :P //

    ஆஹா ஆஹா.. புளகாங்கிதம் அடைந்தேன். உண்மையாகவே.. இப்படிப்பட்ட உண்மையான அன்பு ஒன்றை மட்டுமே மூலதனமாக வைத்து ஒரு நாள் நானும் முதல்வராகி பாரத் ரத்னா வாங்கிடுவேன் என்கிற நம்பிக்கை உறுதிபெறுகிறது.. நன்றி நன்றி!


  8. ramachandranusha(உஷா) said...

    என்னடாப்பா எதுனாச்சும் லவ் பெயிலியரா ???


 

வார்ப்புரு | தமிழாக்கம்