சர சரவென புனித பிம்பங்கள் ஐபி என்னு வலையில் சாய்ந்து கொண்டிருக்கும் இந்த புண்ணிய காலத்திலே என் கவுண்டர் சும்மா எத்தன பேரு ஆன்லைன்ல இருக்காங்கன்னு காட்டிகிட்டு தூங்கிட்ருந்தாரு... இப்படி தூங்கவா கஷ்டப்பட்டு வேலைமெனக்கெட்டு ப்ளாக்ல வேலை செய்யச் சேர்த்தேன்னு திட்டி என்னமோ ஐ.பியாமே அதையும் சேர்த்து பிடிச்சுவைங்க கவுண்டரேனு சொல்லிவச்சுருந்தேன்..
நான் ஏதோ கோக்குமாக்க கெண்டமீனுக்கு வளைச்ச வலையில சுறாமீனே மாட்டிருக்குன்னா ஆச்சரியப்படாம எப்படி? இவ்வளவு பெருந்தலை தெரியல-வின் கவுண்டரில் வந்து விழும் என்று நானே எதிர்பார்க்கவில்லை. அதுவும் சந்தேகத்திற்கே இடமில்லாதவாறு கனகச்சிதமா ஸ்க்ரீன் ஷாட் பிடிச்சு வச்சி எனக்கு அலெர்ட் மெயிலனுப்பினாரு கவுண்டரு..
அந்தப் பிரபலம் யாருன்னு நான் பேரச் சொல்லலாமா இல்ல பூடகமா சொல்லி அனாமதேயமா மொத்தலாமான்னு இன்னும் எங்கள் கட்சிப் பொதுக்குழு முடிவெடுக்காத பட்சத்திலும்; பேரு சொல்லாம விடற அளவுக்கு இரக்க குணமெல்லாம் எனக்கு கிடையாதுங்கறதுனாலயும்; விஷயத்தினோட க்ராவிட்டிய கருதி, தார்மீக காரணங்களுக்காக மற்ற பதிவர்களையும் உஷார் படுத்த வேண்டியதான என் சமூகப் பொறுப்பினது அவசியத்தையும் உணர்ந்து எந்த இடர்பாடு வரினும் அந்த திமிங்கலத்தின் பேரை வெளியிடுவது என்று முடிவெடுத்துவிட்டேன்.
அதற்கு முன்னர் Operation "make the fat lady sing" விவரங்கள்....
எப்படி இந்த குறிப்பிட்ட நபர் தான் என் பதிவிற்கு வந்தார் என்று முடிவு செய்தேன் சிறுபிள்ளைத்தனமாக பலர் கேள்விகேட்க கூடும். அதற்கு என் பதில் - தமிழ் வலையுலகில் எனக்கும் சரி, அனைவருக்கும் சரி இந்த நாட்டிலேயே இவர் ஒருவரைத் தவிர வேறு ஒருவரையும் பரிச்சயம் கிடையாது. ஏனென்றால் அவ்ளோ பிரபலமான பழம்பெரும் ஆள் இவர். குட்டியூண்டு நாட்டில் அமர்ந்துகொண்டு சொந்தமாக வெப்சைட்டே வைத்து நடத்திவரும் இவர், தன்னை யாரும் கண்டே பிடிக்க முடியாது என்று பகல் கனவு கண்டு என் கவுண்டரிடம் வகையாகச் நேற்றைக்கு சிக்கியிருக்கிறார்.
வந்த ஐபி அட்ரஸ்: 2*2.*7.*0*.223 (சம்பந்தப்பட்டவரின் ப்ரைவஸியை பாதுகாக்கவேண்டி ஐபியை மாஸ்க் செய்துள்ளேன். மேலதிக விவரங்களுக்கென எந்த கோர்டிலும் வந்து நிருபிக்க மேலும் பல விவரங்களைத் தர முடியும்)
Browser: MSIE 6.0; OS: Windows XP; Resolution: 1024x768; 15th May 2007 12:11:28 PM
சிக்கிய அன்று என் பதிவில் பார்த்த முதல் பதிவு
சிக்கிய அன்று என் பதிவில் பார்த்த கடைசி பதிவு
இதற்கு மேல் விவரங்கள் வேண்டுவோர் என்னை தனி மடலில் தொடர்பு கொள்ளலாம்.
இந்த விவரங்கள் போதுமா புனிதபிம்பமே? ஒழுங்காக மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுத்திருந்தால் இந்த அவல நிலை ஏற்பட்டிருக்குமா? எண்ணிப்பாருங்கள்...
இந்தத் திமிங்கிலத்திடம் நானே மெயிலனுப்பி கேட்டும் "அர்த்தமற்ற முறையில் ப்ளாக்மெயில் செய்கிறேன்" என்று பதிலனுப்பாத படியால் இதோ அவரின் முகத்திரையை கிழிப்பதென முடிவு செய்து, எப்படி அணுகலாம் என்று சிந்தித்த போது இவ்விஷயங்களில் நமக்கு முன்னோடியான பெனாத்தலாரின் துணையை நாடினேன். அவரும் ப்ளாஷில் போட்டு ப்ளாஷ் செய்யலாம் என்று ஐடியா கொடுக்கவே.. கீழுள்ள ப்ளாஷில் அந்த திமிங்கலத்தின் முகத்திரை கிழிவதை பாருங்கள்...
என் கவுண்டரில் இவரின் தடயங்கள் இன்னும் இருக்கின்றன. வேண்டுவோர்க்கு ஸ்க்ரீன் ஷாட் அனுப்பி வைக்கப்படும்.
201. என்-கவுண்டரில் மாட்டிய பெருந்தலை
Subscribe to:
Post Comments (Atom)
58 Comments:
congrats for 200th post
டாக்டரு,
அநியாத்துக்கு தான் யோசிக்கீறிங்க.... கிரவுண்ட் இருக்கிறோப்பவே நினைச்சேன்... :))
ஹி ஹி congrats for 200th post...
ஒரு சந்தேகம்,
நான்,
இதுக்கு கிழே ரெண்டு பேரு இருக்கே?? ஏன் அப்போ நீங்கத்தான் இலவசமா??
வாழ்த்துக்கள்
200ஆவது இடுகைக்கு கட்சித்தலைவரை அழைக்காமல் வேறு ஒருவருக்கு போஸ்டர் அடித்து ஒட்டியது ஏன்?
சமீபத்தில் வந்த கருத்துக் கணிப்புக்கும் இதற்கும் தொடர்பு உண்டா?
இரட்டை சதத்திற்கு வாழ்த்துக்கள்
வெட்டிப்பயல்,
டாங்க்ஸுங்கோ...
இருநூறு அடிக்கிறத விட ஐ.பி விஷயம் முக்கியமில்லியோ??? அதப் பத்தி ஒண்ணும் சொல்லலேன்னா எப்ப்டி?
இராம்,
நன்றி...
கிரவுண்டா??? எங்கய்யா இருக்கு?????
கொத்ஸு வேற டைம்ஜோன்ல கீறதால.. for obvious reasons இருக்காரு... ஹி ஹி...
//இவ்விஷயங்களில் நமக்கு முன்னோடியான பெனாத்தலாரின//
விளக்கம் ப்ளீஸ்!
கொத்ஸு,
மாட்டிருக்கறவரு இன்னும் பெரிய ஆளுப்பா..
தலைவர இன்னும் சந்திக்க முடியல.. கணிப்பு வந்ததிலேர்ந்து நம்மள கண்டுக்க மாட்டேங்குறாரு...
மின்னுதுமின்னல், பெரீய்யப்பா
நன்றி..
வெட்டிப்பயலுக்கு கொடுத்த பதிலை சற்றே சிரமம் பார்க்காமல் வாசிக்கவும்..
//
இருநூறு அடிக்கிறத விட ஐ.பி விஷயம் முக்கியமில்லியோ??? அதப் பத்தி ஒண்ணும் சொல்லலேன்னா எப்ப்டி?
//
இன்னும் பதிவ படிக்கலனு அர்த்தம்...:)
என்னமோ ஏதோனு வந்து பாத்தா நக்கலு
இதுக்கு பேசாம உங்கள்ட ஏதாவது ஒன்னுக்கு டிரீட்மெண்ட்க்கே வந்துருக்கலாமே
//
சிக்கிய அன்று என் பதிவில் பார்த்த முதல் பதிவு
சிக்கிய அன்று என் பதிவில் பார்த்த கடைசி பதிவு
///
லிங்கே கானும்
:))
200 பதிவுக்கு ஏதாவது நோக்கு மாக்கு பண்ணுவீங்க என்று எனக்கு காலையிலே டவுட்.... ரொம்ப "முக்கி"யமான மேட்டருனு வேற கூவும் போதும் அவரு ரொம்பவே முக்கியமான ஆளு என்று நினைச்சேன், சரியா போச்சு...
200 வாழ்த்துக்கள்
//சிக்கிய அன்று என் பதிவில் பார்த்த முதல் பதிவு
சிக்கிய அன்று என் பதிவில் பார்த்த கடைசி பதிவு///
ஒ பார்த்த பதிவு தானா, நான் கூட ஏதோ படிச்ச பதிவோனு நினைச்சேன்.
சும்மா வந்து பிராக்கு பாத்துட்டு போய் இருப்பார். விடுங்க. இதை எல்லாம் பெரிசு பண்ணிக்கிட்டு....
கொத்ஸு,
//விளக்கம் ப்ளீஸ்!//
அதெல்லாம் சீக்ரெட்.. வெளியில வெளியி்ட முடியாதுங்கோ... I will be compromising him.. இதெல்லாம் உளவுவேலை பாக்குறவங்களுக்குத் தெரியும்...
அனானி,
//இதுக்கு பேசாம உங்கள்ட ஏதாவது ஒன்னுக்கு டிரீட்மெண்ட்க்கே வந்துருக்கலாமே//
என்னிடம் டிரீட்மெண்டுக்கு வந்தால் கண்டிப்பாக நக்க(ல்) மாட்டேன்னு உறுதிமொழி எடுத்துக்கட்டுமா???? :)))
மின்னுது மின்னலு,
//இன்னும் பதிவ படிக்கலனு அர்த்தம்...:)//
பேருக்கேத்தா மாதிரியே மின்னலு மாதிரி படக் படக்னு அதிர்ச்சி கொடுத்துட்டு போறீங்க...
200வது பதிவு கண்ட மறத் தமிளனே வாளுக! உன் கொற்ற(ட்ட)ம் ஓங்குக!
கவுண்டரை அடிக்கடி நல்லா கவனிச்சு போஷாக்கா வச்சிருக்கீங்க போலருக்கு :-)
நல்லாருங்க!
தம்பி ராமநாதா..
உன் பெயர் பதிவுலக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றுவிட்டது. பல உருப்படியான விஷயங்களுக்காக மட்டுமே கூட்டுப்பதிவு பயன்பட்டுவந்த வலையுலகில், உப்புமாவுக்காக கூட்டுப்பதிவை உபயோகப்படுத்திய உன் செயல் போற்றத்தக்கது!
200ஐத் தாண்டியும் ஓடட்டும் உப்புமாப்புரவி.
மின்னல்,
//லிங்கே கானும்//
இருக்கே.. எனக்குத் தெரியுதே.... ஆராச்சும் ஹாக் பண்ணி contentsa மாத்திட்டாங்களா?
புலி,
இவ்வளவு உயிரையும் பணயம் வச்சு துப்பறியும் வேலை செஞ்சிருக்கேன்.. என்னையப் போய் கோக்கு பெப்சின்னுட்டு...
வாழ்த்துகளுக்கு நன்னி!
//ஒ பார்த்த பதிவு தானா, நான் கூட ஏதோ படிச்ச பதிவோனு நினைச்சேன்.
//
யோவ் இதானே வேணான்றது... பின்ன என்ன படம் பாக்க வந்துட்டு போனாரா???
//இதை எல்லாம் பெரிசு பண்ணிக்கிட்டு....//
பெரிய மனுஷங்கள போட்டு பெரிசு பண்ணாதான்பா பெரிய ஆளாக முடியும்..
ரேசுநாதரே,
200க்கு வாழ்த்துக்கள்! :)
சுந்தர்,
//200வது பதிவு கண்ட மறத் தமிளனே வாளுக! உன் கொற்ற(ட்ட)ம் ஓங்குக!
//
யப்பா.. தமிழ குழிதோண்டி மார்ச்லேயே புதைச்சிட்டேனே... :)))
//
கவுண்டரை அடிக்கடி நல்லா கவனிச்சு போஷாக்கா வச்சிருக்கீங்க போலருக்கு :-)//
கவுண்டர மட்டும் போஷாக்கு காட்டி வச்சுகினா அப்புறம் மிச்சவங்கள்லாம் சண்டைக்கு வர மாட்டாங்க இல்ல?? :)
பெனாத்தலார்,
உப்புமாவுக்கு கூட்டு என்பது புதுசு கண்ணா புதுசு என்றாலும் பெஸ்ட் கண்ணா பெஸ்டென்று வாழ்த்திய தங்களின் வாழ்த்தும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பதிவின் ஓர் ஒரத்தில் இடம்பெற்றது கண்டு மகிழ்ச்சி! :))
முதல்ல இந்த உப்புமா ரவி யாருன்னு யோசிச்சேன்.. (கொத்ஸோட ஆபத்பாந்தவரச் சொல்லலையப்பா :))))
அப்புறமா உப்புமா புரவின்னோன டிக்ஷனரி தேடப் போயிட்டேன்.. இனி புரவி வழக்கம்போல ஸ்டெப் போடும்...
டபிள் செண்சுரிக்கு வாழ்த்துக்கள் ராமனாதன்!!
என்னிக்குதான் உங்க சுய ரூபத்த காமிக்க போரீங்க?ம்ம்??
//
கிரவுண்டா??? எங்கய்யா இருக்கு?????//
எங்களுக்கு தெளிவா தெரியுதுங்க.... :)))
ஒங்களுக்கு "தெரியல"ன்னா கண்ணாடி வாங்கி மாட்டி பாருங்க.... :))
அடடா! இவரா! இருக்கும் இருக்கும். உண்மையிலேயே இருந்தாலும் இருக்கும். நம்ப முடியாது. இப்பிடித்தான் யேசுநாதரு என்னுடைய இனியது கேட்கின் எல்லாம் படிக்கிறாராம்.
நிற்க. 200 பதிவுகள் அமைந்தமைக்கு வாழ்த்துகள். நீடு வாழ்க. பீடு வாழ்க.
ஹா! ஹா!
எங்கே என் படம் இருக்குதோன்னு நப்பாசையில் வந்தேன் :)
நீங்க கிண்டிய உப்புமாவில் உப்பு கொஞ்சம் அதிகம் தான் :)
வாழ்த்துகள்.
அன்புடன்
பரஞ்சோதி
//இராமநாதன் said...
வெட்டிப்பயல்,
டாங்க்ஸுங்கோ...
இருநூறு அடிக்கிறத விட ஐ.பி விஷயம் முக்கியமில்லியோ??? அதப் பத்தி ஒண்ணும் சொல்லலேன்னா எப்ப்டி? //
இந்த ஐபி விஷயமெல்லாம் ராமண்ணா மாதிரி பெரியவங்க பேசற விஷயம்... நாங்கெல்லாம் அப்பாவி :-)
நானே மததலைவர்களை அவ்வளவா எல்லாவற்றிலும் எடுத்துகிரது இல்ல. இந்தப் பதிவைப் பார்து
என்னா இதுன்னு யோசிச்சேன், ஏம்பா உங்களுக்கு இவர்தான் கிடைசாரா?ஊருக்கு இளைத்தவன் புள்ளயயார் கோவில் ஆண்டியாம்.திரும்பவும் சந்தேகம் இது உண்மையா? தயவு செய்து சொல்லிடுங்க,புண்ணியமாயிருக்கும்.அப்பதான் வாழ்து சொல்லுவேன்!!!
என்னமோ எதோன்னு அலறி அடிச்சுக்கிட்டு ஓடியாந்தேன்.
வந்து பார்த்தா.................வெறும் உப்புமா(-:
வாழ்த்து, போன பதிவுலே(யே) சொல்லியாச்சு.
சரி போனாப்போட்டும், 200க்கு வாழ்த்து(க்)க(ல்)ள்.
நான் கிருஸ்துவ சமையத்தை சார்தவள்.//நானே மதத்தலைவர்களை அவ்வளவாக எல்லாவற்றிலும் எடுத்துக் கொள்வதில்லை என கூறியது உங்கள் மதத்தலைவர்களை தான்//.ரோமிலலிருந்து வரும் அறிக்கைகளை விளக்கம் கேட்கும் உரிமை எல்லா கிருஸ்துவனுக்கும் உண்டு.முக்கியமாக கத்தோலிக்கர்கள் இந்து சகோதரர்களை என்றைக்கும் புண்படுத்தியதில்லை.எங்கள் வழீயும்,ஜீவனுமாகிய ஏசு ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்ட சொல்லி இருக்கிரார்.ஏசு நேசிக்கிரார் உங்களையும்தான
உங்களுக்கு மனதில் உறுதி இருந்தால் இதை பின்னுட்டத்தில் போடுங்கள்.
ரெண்டு நாளா யோசிச்சு இங்கே வந்தால், என்னவோ போங்க! இந்தப் பெனாத்தல் ஐடியாவா இது? நல்லாத் தான் ஏமாத்தறீங்க!
200-வது பதிவுக்கு வாழ்த்துக்கள். பட்டாசு எல்லாம் வெடிக்கலையா? பேனர் ஒண்ணும் காணோம்! தொண்டரடிப் பொடிகள் எல்லாம் என்ன செய்யறாங்க?
உலகம் சுற்றும் வாலிபி,
நடுராத்திரி ரெண்டேமுக்காலுக்கு ஸிம்ப்ஸன்ஸ் பார்க்காம உங்களுக்கு பதில் அடிக்கிறேன்னா அதுக்கு காரணம் இருக்கு...
இந்தப் பதிவிலோ வேறெங்கேயோமோ போப்பாண்டாவர உள்நோக்கத்தோட அவமானப்படுத்தணுங்கற என் நோக்கம் உங்க கண்ல பட்டுருந்த கண்டிப்பா அது என் எண்ணம் கிடையாதுங்கறத சொல்லிக்க விரும்புறேன். அப்படி செஞ்சிருக்கிறதா எனக்கு தோணவேயில்லை.. மாறாக போப்பாண்டவர் படம் போடுவதே தப்பு, திமிங்கிலம், சுறாமீன் வார்த்தைப் பிரயோகங்கள் கூட தவறுன்னு சொல்ல வந்தீங்கன்னா... Welcome to Planet Earth! No Offense Meant, Of Course!
தமிழ் வலையுலக அரசியல் புரியாமல் நீங்க இங்க தேவையில்லாம ரென்சன் ஆயிட்டீங்களோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு.
மதங்களின் அடிப்படையில் மனிதர்களை தாக்குவது இந்தப் பதிவிற்கும் எனக்கும் சுத்தமாக பழக்கமேயில்லை என்பதோடு இப்போதைக்கு முடிச்சிக்கிறேன்!
நன்றி! வணக்கம்!
இது இந்தப் பதிவ தேவையில்லாம திசைதிருப்பாது என்ற hopeless நம்பிக்கையோடு இப்போதைக்கு குட் நைட்!
அதென்னய்யா எப்பப் பார்த்தாலும் இப்படி ' ரென்சன்' ஆயி எங்களையும்
'டென்ஷன்' படுத்தறீங்க?
டீச்சர், இந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்லறேன்.
இப்படித்தான் நம்ம பதிவுல ஒருத்தங்க வந்து ஏன் அடிக்கடி ரீவி ரீவின்னு எழுதறீங்க அப்படின்னு கேட்டாங்க. அதுக்கு என் பதில்.
//அதாவது இந்த கீ போர்டில் T மற்றும் R பட்டன்கள் பக்கத்துப் பக்கத்தில் இருக்கா. அதான் இப்படி அடிக்கடி ஸ்பெல்லிங் மிஷ்டேக் ஆவுது.நீங்க இதெல்லாம் சாய்ஸில் விட்டு படியுங்க. :)))//
வாழ்த்துக்கள் !!
வலைப்பதிவு description சரியாத்தான் இருக்கு!!:O)
(டிஸ்கி: ஸ்மைலி போட்டிருக்கு!)
வத்திக்கான் என்று வரவே ஏதோ வில்லங்கம் என்று நினைத்தேன். தமிழை தன் தாய்மொழியில எழுதி வாசிக்கிற போப்புக்கு தமிழ்ப்பதிவை வாசிக்கத் தெரிஞ்சிருக்காது.. பார்க்கத்தான் முடிஞ்சிருக்கும். துளசிம்மா சொன்னது போல.. வாழ்த்துக்'கல்' :O))
எல்லாஞ்சரி.. அதென்ன "சன்ய்தேகமற"? இன்சைட்பஞ்ச்சா? :O)
எங்கள் இதயமே... இணைய தீபமே... மருத்துவ மகத்துவமே...சிந்தனைச் சரக்கு கப்பலே...
200 கண்ட நரம்பின் நரம்பே...(ரத்தத்தின் ரத்தமேன்னு இன்னும் எத்தன நாளைக்கு ஓட்டுறது)
இணையத் தொண்டர்களின் அறிவு பசி தீர்க்கும் உப்புமா கடலே.....
வாழ்த்துகிறோம்....
இவண்
தேவ்
சென்னை மாவட்டச் செயலாளர்
ப.ம.க
இளவஞ்சி,
நன்றி.
ரேசுநாதர் இப்பல்லாம் ஒரே தட்டையான ட்ராக்கில் வலம்வலமாய் வருவதாய் நிறைய பேரு வருத்தப்படுறாங்க. இங்கன தான் வரமாட்டேங்குது...
இராதா,
நன்றிங்கோ..
//என்னிக்குதான் உங்க சுய ரூபத்த காமிக்க போரீங்க?ம்ம்??//
அடடா இந்த மேட்டர மறக்காம வச்சிருந்து படுத்துறீங்களே.... :)))
இராம்,
//எங்களுக்கு தெளிவா தெரியுதுங்க.... :))) //
அது எல்லாம் இஷ்டைலுப்பா... அத என்னமோ இயற்கைனு நினச்சுருக்கீங்க போலிருக்கு...
ஜிரா,
அவர வேற பாவம் எதுக்கு வம்புக்கு இழுக்கிறீங்க.. :))
//நீடு வாழ்க. பீடு வாழ்க.//
இதென்ன கன்னத்துல திட்டு???
பரஞ்சோதி,
எங்க.. நீங்கதான் குதிரைல பறந்துகிட்டேயிருக்கீங்களே... :))
உப்பு அதிகமா...??
வாழ்த்துகளுக்கு நன்றி.
வெட்டிப்பயல்,
//ராமண்ணா மாதிரி பெரியவங்க பேசற விஷயம்... நாங்கெல்லாம் அப்பாவி :-)//
சந்தடி சாக்குல பெரியவர்னு பிட்ட போட்டு சின்னப்பையன்னு பேர் வாங்கிக்கறா போல தெரியுது???
புலிகிட்ட கேளும்.. நானும் யூத்துதான்...!
அக்கா,
//என்னமோ எதோன்னு அலறி அடிச்சுக்கிட்டு ஓடியாந்தேன்.
வந்து பார்த்தா.................வெறும் உப்புமா(-://
ஹி ஹி.. இப்படி பி.ந தலைப்பு வைக்கலேன்னா சூடாகத்தான் ஆகமுடியுமா? இவ்ளோ பேரு வந்து டேஸ்ட்தான் பண்ணுவாங்களா.. உம்மைத்தொகையெல்லாம் பழைய பாஷன்னு தெரியாதா?
கீதா,
//ரெண்டு நாளா யோசிச்சு இங்கே வந்தால், என்னவோ போங்க! இந்தப் பெனாத்தல் ஐடியாவா இது? நல்லாத் தான் ஏமாத்தறீங்க!//
ரெண்டு நாளா யோசிச்சு வந்தீங்களா???
உப்புமா கிண்டுறதுல வலையுலக முன்னோடி பெனாத்தலார் தானே!
பதிவுக்கு வாழ்த்துகள்..
பட்டாசுதானே... வெடிக்கும் வெடிக்கும்.. மாசா மாசம் ஏதுனாச்சும் கொண்டாடிகிட்டேயிருக்கிறதாலே தொண்டர்களெல்லாம் கொஞ்சம் அசதில இருக்காங்க.
200 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
அக்கா,
கொத்ஸ் சொன்ன விளக்கம் திருப்திகரமா இருந்துச்சு இல்லியோ?
ரொம்ப சந்தோஷம்...
கொத்ஸு,
/இந்த கீ போர்டில் T மற்றும் R பட்டன்கள் பக்கத்துப் பக்கத்தில் இருக்கா.//
ஆமாம்பா.. ரொம்ப பக்கத்துல இருந்து படுத்துது...
மணியன்,
நன்றி..
//ரேசுநாதர் இப்பல்லாம் ஒரே தட்டையான ட்ராக்கில் வலம்வலமாய் வருவதாய் நிறைய பேரு வருத்தப்படுறாங்க. இங்கன தான் வரமாட்டேங்குது...//
வலம் இல்லையா அது இடம். இந்த ஊரில் எதைத்தான் சரியாச் செய்யறாங்க!!
அட மழை,
வாங்க வாங்க. ரொம்ப நாள் கழிச்சு நம்ம பக்கம் வந்திருக்கீங்க...
//போப்புக்கு தமிழ்ப்பதிவை வாசிக்கத் தெரிஞ்சிருக்காது..//
வாசிக்காம வெறும்ன படம் மட்டும் பார்த்துட்டு போவ இது என்ன குமுதம் நடுப்பக்கமா??? ஐ மீன், அறிவார்ந்த விஷயங்களும் நிறைய இருக்குன்னு சொல்ல வந்தேன்.. :P
இன்சைட்பஞ்சு... உ.குவுக்கு நல்ல ஆங்கிலஆக்கம். ஆனா நான் வக்கலேன்னு சொல்லிக்கிறேன். :)
தேவு,
இவ்வளவு புகழ்ச்சி ஆகாதுப்பா..
(புகழறதுன்னு முடிவு பண்ணாக்க இப்படியா ஒரே கமெண்ட்ல எல்லாத்தியும் போடுறது???)
ப.ம.க லயும் இருந்துகினு சங்கத்துக்கும் சவுண்ட் கொடுக்கும் நீர் தான் பமக வில் இருக்கும் உண்மையான பச்சோந்தி!
@@@@@@முக்கியமாக கத்தோலிக்கர்கள் இந்து சகோதரர்களை என்றைக்கும் புண்படுத்தியதில்லை.எங்கள் வழீயும்,ஜீவனுமாகிய ஏசு ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்ட சொல்லி இருக்கிரார்.ஏசு நேசிக்கிரார் உங்களையும்தான
உங்களுக்கு மனதில் உறுதி இருந்தால் இதை பின்னுட்டத்தில் போடுங்கள்.@@@@
இதைப் பின்னூட்டத்தில் போடுவதற்கு நகைச்சுவை உணர்வு இருப்பதே போதுமானது.
இதைப் பின்னூட்டமாய் போட்டதற்கு நன்றி ராமநாதன்.
சோக்கோ சோக்கு !!
Post a Comment