ஒரு மாசமாவது தமிழ்மணம் மற்றும் தமிழ்வலைப்பதிவுலக பக்கமே எட்டிப்பாக்காம இருந்தா பைத்தியம் பிடிக்குதா இல்லியான்னு செஞ்சுகிட்ட சுயபரிசோதனை எக்ஸ்ட்ராவா அப்படி ஒரு மாசம் இருந்தும் பைத்தியம் பிடிக்காம தோல்வியில் முடிஞ்சே விட்டது. இதுக்கு நடுவுலே மோகன்தாஸைத் தவிர வேற ஒருத்தர் கூட 'ஏண்டாப்பா எழுதறத விட்டுட்டே'ன்னு கேட்காததிலிருந்து எல்லாருக்கும் என்னோட தாக்கம் நிறைஞ்ச எழுத்துகளக் கண்டு பொறாமை என்பதையும் அனைவரும் 'இவன் எப்ப போவான் திண்ண எப்ப காலியாவும்'னு காத்திருந்தா மாதிரியே மவுனம் காத்த விதத்தை மறப்போம் மன்னிப்போம் வகையறாவில் சேர்த்து....
கடைசியில்... எவ்வளவு நாட்களுக்குத்தான் அறிவார்ந்த தெளிந்த அனாலிஸெஸ்கள் மூலம் சமூகத்தை கொத்துபுரோட்டா போட்டு கொத்தி, திடீர் சீர்த்திருத்த இடியாப்பம் இடித்து மற்றும் இன்னபிற ஆத்மவிசாரங்களை மத்தவங்க எழுத - நான் படிக்கிறது? இப்படி ஒன்சைடடா போறதவிட டூப்பு விட்டாவது டூப்ளே ஆக்கணும்னு அதெல்லாத்தையும் ஒண்ணு ரெண்டு மூணுன்னு சிவாஜி மாதிரி கவுண்ட் வச்சுகினு இப்போ ரிட்டர்ன் பண்ண வந்தாச்சு.
இன்னும் ஆயத்தப்பணிகள் நடந்து கொண்டிருக்கிறதென்றபடியால், இப்போதைக்கு படம் மட்டும் போட்டு கிளம்பறேன். தெரியலேன்னு புலம்ப மீண்டும் ப்ளாக்கர் பகவான் அருளென்றென்றைக்கும் தடையின்றி இருக்குமென்று பணிவுடன் வேண்டியபடியே இதோ படங்கள்.
வழக்கம்போல் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் படங்கள்.
1. The Winter Palace
2. Kazanskiy Sobor
3. View from the Fontaka Most
4. The Throne Room
5. The Room of the Russian Generals
6.
7. The Marble Hall
8. The Golden Room
9. The Corridor
டிஸ்கி: உப்புமாவுக்கு டிஸ்கி செக்ஷன் இல்லேன்னா ரிஸ்கி. அதனால சம்பிரதாயத்துக்காக இது.
20 Comments:
நேத்துதான் நான் வந்தேன். இன்னிக்கு நீரும் வந்தாச்சா? வெல் கம். வெல்கம்!!
டாக்டரு,
இது நீங்க எடுத்த போட்டோஸா??? :)
கொத்ஸ் & இராம்ஸ், பேசி வச்சிக்கிட்டு திரும்பி வந்த மாதிரி தானே இருக்கு. இதுல என்னமோ ஒன்னும் தெரியாத மாதிரி ஒரு இடுகை - அதுக்கொரு பின்னூட்டம்.
எங்கேய்யா போயிருந்தீங்க ரெண்டு பேரும் இம்புட்டு நாளு?
குமரன், அன்னியனும் அம்பி மாதிரி ரெண்டு பேரும் ஒண்ணா :-)
Kumaran,
reNdu peraiyum Rhine nathikkaraiyoraththila paarththaakak keLvi.
pesi vittuththaan sernthu vanthu irukkaanga.:))
Welcome back Doctor.
கொத்ஸ்,
வாரும் வாரும்..
நேத்திக்கு நீர் வந்ததோட லின்க் பண்ணி நானும் நீரும் ஒரே ஆளுன்னு சொல்லிட்டா பாருங்கோ... இப்படி பேசறவா வாய்க்கு அவல் போட்டுட்டேளே!!
இராம்,
நக்கல் தானே வேணாங்கறது..
நான் ஏதோ அஞ்சுரூவா போஸ்ட்கார்ட் வாங்கி ஸ்கேன் பண்ணிப்போட்டேன்... :))
குமரன்,
எங்கியும் போகலையா.. பெரிய பெரிய மனுசங்கள்லாம் வந்து போய்கிட்டிருந்தாங்க.. அதான் நாங்க எங்க லெவல் அறிஞ்சு ஒதுங்கி இருந்தோம்..
உஷா அக்கா,
யாரு அந்நியன் யாரு அம்பின்னுதான் ஊருக்கே தெரியுமே.. அந்த மாதிரி தான் கிட்டத்தட்ட.. இதுல என்ன விசேஷம்னா ஒரு அந்நியன் அம்பியானதும் என்னாலதான்.. :)))
//யாரு அந்நியன் யாரு அம்பின்னுதான் ஊருக்கே தெரியுமே//
அப்ப ஒங்க ரெண்டு பேர்ல யாருமே ரெமோ இல்லியா?
காணோமேன்னு நினைச்சேன், இவ்வளவு பெரிய பாலஸ் கட்டிட்டு இருந்தீங்கன்னு இப்போத் தான் புரிஞ்சது. :P
ரொம்ப நாளாச்சா, உங்க மெயில் ஸ்பாமிலே கிடந்தது. தேடிப் பிடிச்சுப் பின்னூட்டம் கொடுத்திருக்கேன். கடமை உணர்ச்சியைப் பாராட்டுவீங்கனு நினைக்கிறேன். :P
என்னப்பா ராம்ஸ்,
நலமா? ரெட் ரூம் ஷாண்டிலியர் ரொம்ப நல்லா இருக்கே. அக்காவுக்காகக் கடத்திக்கிட்டு
வரக்கூடாதா?
இந்த வூட்டுக்கு எவ்ளோ வாடகை தர்றீங்க?
இந்த வூட்டுக்கு எவ்ளோ வாடகை தர்றீங்க?
கே.ஆர்.எஸ்,
//அப்ப ஒங்க ரெண்டு பேர்ல யாருமே ரெமோ இல்லியா?//
அதான் நீங்க இருக்கீங்க இல்ல?? அப்புறம் நாங்க ரெண்டு பேரும் எங்க போறது??? :))
கீதா சாம்பசிவம்,
//இவ்வளவு பெரிய பாலஸ் கட்டிட்டு இருந்தீங்கன்னு இப்போத் தான் புரிஞ்சது. //
ஹி ஹி.. ஆமாம்.. இதக் கட்டுறதுக்குள்ள கட்சி வளர்ப்பு நிதியில சைஸபிள் அமவுண்ட் தீர்ந்துடுச்சு..
தொண்டர்களெல்லாம் பெரிய மனசு பண்ணி நிதி கொடுத்தா இன்கம் டாக்ஸ்ல கணக்கு காமிச்சுருவேன்..
அப்படியே 24/7 சினிமா தெரியிற மாதிரி டிவி சேனலும் தொடங்கி தொண்டர்கள் கலை/அறிவுப்பசிய தீர்த்துருவோம்.
//ரொம்ப நாளாச்சா, உங்க மெயில் ஸ்பாமிலே கிடந்தது. தேடிப் பிடிச்சுப் பின்னூட்டம் கொடுத்திருக்கேன். கடமை உணர்ச்சியைப் பாராட்டுவீங்கனு நினைக்கிறேன். //
ஆளு கொஞ்ச நாளு அப்ஸ்காண்ட் ஆனா ஸ்பாம்ல தள்ளிடறதா.. சரி சரி..
ஆனாலும் குப்பையை கிளறி கண்டெடுத்த மாணிக்கம்னு நீங்க என்ன பாராட்டறதா நானே என்னைய தேத்திகிட்டு உங்க கடம உணர்ச்சியப் பாராட்டுறேன்.
நன்றி! நன்றி!
அக்கா,
//ரெட் ரூம் ஷாண்டிலியர் ரொம்ப நல்லா இருக்கே. அக்காவுக்காகக் கடத்திக்கிட்டு
வரக்கூடாதா?
//
சீக்கிரமே பூடின் இங்கேருந்து பாம்பர் ப்ளேன் அனுப்புவாரு.. அதுல கார்கோவா போட்டு அனுப்பறேன். :)
படங்கள் நன்றாக உள்ளது
Post a Comment