பச்சோந்தி மக்கள் கட்சியின் நிரந்தர நம்பர் 2வின் வெளிப்படையான எண்ணங்கள்.
வின்னரில் கைப்பு என்னும் வின்னரால் தொடங்கிய வ.வா. சங்கம் இன்று வலையுலகில் பல வின்னர்களைக் தன்னுள்ளே கொண்டு பல வின்னர்களை அடித்து இன்று விண்ணைமுட்டும் விண்வெளிவீரர்களின் விண்கலத்திலுள்ள வீணான விண்டோக்களையெல்லாம் விஞ்சி வீ.வி.வ.வா.வீ..வு.. (Vtop Vyving 'V' Vor V's vake!! - இது என் கீபோர்ட் சொன்னது) வளர்ந்துள்ளார்கள் என்பது வெள்ளிடைவலை மலை.
ஓராண்டு கண்டுள்ள சிங்கங்களின் பணி சாதாரணமானது என்று சவடால்விடும் எதிரிக்கட்சி ஏகாம்பரம் இல்லை நான். சங்கத்தினருக்கும் நமக்கும், அதாவது பச்சோந்தி மக்கள் கட்சிக்குமான தொடர்பு நீண்டு நெடுங்காலமாய் கல்தோன்றி மண்தோன்றாக்காலத்திலிருந்தே சமீபத்தில் சுமாராய் ஓரண்டு காலமாய் தொடர்ந்துவந்துள்ளது. ஆரம்பத்தில் தேர்தல் நேரத்தில் சூடுபிடித்து சிலபல அறிக்கைகளை சங்கத்துச் சிங்கங்களும் பமகவின் தலிவர்களும் பரிமாறிக்கொண்டனர். பின்னர் சங்கத்துச்சிங்கம் தேவ் ப.ம.க.வில் இணைந்து அதை மறைத்துமீண்டும் சங்கத்திற்கே சென்ற கதையெல்லாம் நான் சொன்னால் இங்கே நன்றாக இருக்காது. இருந்தும் குறிப்பிடவேண்டியதற்கான காரணத்தைச் சொல்லிவிடுகிறேன்.
அதற்குமுன் கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலின்போது ஜொள்ளுப்பாண்டி, தேவ், பொன்ஸ், பெருசு எனப் பல சங்கச்சிங்கங்களின் பதிவுகளைப் பார்த்தாலே புரியும். நமக்கு நாமே கண்ட இயக்கத்திலிருந்துகொண்டு சொந்தமாய் சொறிந்துவிடாமல் விடுவேனா?
கட்சித்தொண்டனுக்கு நான் எழுதிய அவசர கடிதம் மற்றும் சுவாமி குஜிலியானந்தாவின் பரபரப்பு பேட்டி
இவற்றை இங்கே குறிப்பிட்டாக வேண்டிய காரணத்தைச் சொல்லிவிடுகிறேன். சென்ற வாரம் கொத்தனாருடன் சாட்டிக்கொண்டிருந்தபோது எங்கள் பேச்சு சுழன்றுகொண்டிருந்த fulcrum - "how i miss those good old days, we had so much fun" என்பதுதான் எங்களின் நாஸ்டால்ஜியா நாமசங்கீர்த்தனமாக இருந்தது. காரணம் clean fun. good humour. ஆங்கிலத்தில் போட்டதற்கான உள்குத்துகளில் தொடங்கி வெட்டி உப்புமா என மட்டுமே துவளாமல் தனியாக பதிவொன்றையே தொடங்கி எவரையும் offend செய்யாமல் தரமான நகைச்சுவையை இத்தனை நாளாக தரமுடிவதற்கு சங்கத்து சிங்களுக்கு ஒரு ஷொட்டு.
நகைச்சுவை என்பதில் எனக்குத் தெரிந்து இரண்டுவிதம். அடி கொடுப்பது அடி வாங்குவது. கவுண்டமணி பார்த்துவளர்ந்த நமக்கு இரண்டுமே காமெடிதான். கொடுப்பதற்குண்டான லைனில் கூட்டம் மாளாது. ஆனால் வாங்கத்தான் ஆளில்லாமல் இருந்தார்கள். தங்களையே கிண்டல் செய்துகொள்ளும் self-depreciation நகைச்சுவை கஷ்டமானது. செய்வதற்கு, அடிகொடுப்பதைவிட, திறமையும் தில்லும் வேண்டும். அதே சமயம் நாகரிகமாகவும் இருக்கவேண்டும். non offensive humour என்றால் என்ன தமிழ்நாட்டில் பலருக்கும் பாடம் நடத்தவேண்டிய நிலையில், how to take/make satire என்பதை ஸ்பூன்போட்டு சொல்லிக்கொடுக்கவேண்டிய துரதிருஷ்டமான நிலையில்தான் பலரும் இருக்கிறோம். இதில் அடுத்தவரின் மனம் புண்படாதவாறு கலாய்த்தலோ, தம்மைத்தாமே கிண்டலடித்துக்கொள்வதோ ரொம்பவே கஷ்டமான காரியங்கள். And Everybody gives into that Temptation to slander.... eventually!
ஆனால் கண்ணியம் காத்தலை மிகத் திறமையாகவே செய்துவந்துள்ளனர் சங்கத்தினர். தல கைப்புவை நக்கலடிக்கவென்று ஒரு கூட்டம். அதையும் அவர் மிகுந்த தாராளமனத்தோடு ஏற்றுக்கொள்வதில் தொடங்கி பலபுது வடிவங்களைத் தாங்கி, புதிய அங்கத்தினர்களையும் சேர்த்துக்கொண்டு இன்று வ.வா.ச என்று சொன்னால் தெரியாதவர்கள் இருக்கமுடியாது என்ற செல்வாக்குள்ள நிலைக்கு வந்துள்ளனர். பல வலையுலகப் பெருந்தலைகளையும் இன்றுதன் ரசிகர் பட்டாளத்தில் குறிப்பிட முடிகிறதென்றால் இந்த a-political நகைச்சுவையினால்தான். அட்லாஸ் வாலிபர்களென இன்னும் சிலரையும் கூட்டி நட்சத்திர வாரத்தை போன்றதொரு செலிப்ப்ரிட்டி லாப்டர் சேலஞ்சு மாதிரி கொண்டு சென்றதும் தனிச்சிறப்பு.
என்ன இருந்தாலும் அண்டம் பதினான்கிலும் அங்கத்தினர்களை கொண்டுள்ள எங்கள் மகாசமுத்திரமான ப.ம.கக்கு முன்னால் வ.வா.ச ஒரு புழலேரி என்றாலும், எதிரிக்கட்சியென்றும் உதிரிக்கட்சியென்றும் பலமுறை நானே குறிப்பிட்டிருந்தாலும் இந்த ஓராண்டு காலத்தில் அவர்களின் வெற்றியைக் கண்டு எனக்கும் மிகவும் மகிழ்ச்சியே. காரணம் தமிழரிடையே நகைச்சுவை உணர்வு வஞ்சமில்லாமல் இருக்கிறது என்பதை காட்டுவதனால்.
அன்றாட அழுத்தங்களின் பாரத்தால் அவ்வப்போது தேவையில்லாத, உப்பு பெறாத விடயங்களுக்கும் டென்ஷன் ஆகிறோம். இங்கேயே பல உதாரணங்கள் கொடுக்கமுடியும். அவை திசைதிருப்ப வல்லவை என்பதுதான் இங்கே நான் சொல்லவிரும்பும் சோகமும் கூட.
தரமான நகைச்சுவையை அடுத்தவர் மனம் புண்படாமல் தொடர்ந்து கண்ணியமாக தந்துவரும் சங்கத்திற்கும், அவ்வ்வ்வ்வ்வ்வ் என்று நினைத்தமாத்திரத்திலே அழுதுவிடக்கூடிய நல்லவரான தலையையும் சிரிப்பு பட்டாசுகளாய் வெடித்து படிப்போர் மனதில் மத்தாப்புகளாய் மகிழ்வித்திடும் மற்ற சங்கச்சிங்களின் பணி இன்றுபோலவே எந்நாளும் தொடர்க, வாழ்க, வளர்கவென்று சொல்வதில் அதைப்படித்து ரசிக்கின்றவர்களுள் ஒருவனாய் என் சுயநலமும் இருக்கத்தான் செய்கிறது.
அப்படி தொடர்ந்து படிப்பவர்களின் பொருட்டாவது சங்கத்தினர் எத்தனை ஆணிபுடுங்கவேண்டிய துர்பாக்கியநிலைக்கு தள்ளப்பட்டாலும் இந்தச் சங்கத்தை இப்பொழுதுபோலவே முனைப்புடன் நடத்தியும் வரவேண்டுகிறேன். வாழ்த்துகிறேன். இப்போதைக்கு போதும்கறேன்னு நீங்களெல்லாம் சொல்லுமுன் முடித்தும்கொள்கிறேன்.
இப்படிக்கு,
'இரம்'நாதன்,
கொள்கை பரப்புச் செயலாளர்
கட்சி #2, பச்சோந்தி மக்கள் கட்சி
ஸ்விஸ்ஸாபுரம்
ரஷ்ய மாவட்டம்
சங்கத்தினருக்கு அடுத்து ஆப்பு வைக்க நான் அழைக்கவிரும்புவது, who else, இலவசக்கொத்தனார்.
வ.வா.சங்கத்தினருக்கு ஆப்புரேசல்
Subscribe to:
Post Comments (Atom)
102 Comments:
/காரணத்தைச் சொல்லிவிடுகிறேன். சென்ற வாரம் கொத்தனாருடன் சாட்டிக்கொண்டிருந்தபோது எங்கள் பேச்சு சுழன்றுகொண்டிருந்த fulcrum - "how i miss those good old days, we had so much fun" என்பதுதான் எங்களின் நாஸ்டால்ஜியா நாமசங்கீர்த்தனமாக இருந்தது. காரணம் clean fun. good humour.///
டாக்டர்,
ஒங்க ரெண்டு பேருக்கும் இம்புட்டு இங்கிலிசு வார்த்தைக தெரியுமா???
:)
//ஆனால் கண்ணியம் காத்தலை மிகத் திறமையாகவே செய்துவந்துள்ளனர் சங்கத்தினர். தல கைப்புவை நக்கலடிக்கவென்று ஒரு கூட்டம். அதையும் அவர் மிகுந்த தாராளமனத்தோடு ஏற்றுக்கொள்வதில் தொடங்கி பலபுது வடிவங்களைத் தாங்கி, புதிய அங்கத்தினர்களையும் சேர்த்துக்கொண்டு இன்று வ.வா.ச என்று சொன்னால் தெரியாதவர்கள் இருக்கமுடியாது என்ற செல்வாக்குள்ள நிலைக்கு வந்துள்ளனர். பல வலையுலகப் பெருந்தலைகளையும் இன்றுதன் ரசிகர் பட்டாளத்தில் குறிப்பிட முடிகிறதென்றால் இந்த a-political நகைச்சுவையினால்தான். அட்லாஸ் வாலிபர்களென இன்னும் சிலரையும் கூட்டி நட்சத்திர வாரத்தை போன்றதொரு செலிப்ப்ரிட்டி லாப்டர் சேலஞ்சு மாதிரி கொண்டு சென்றதும் தனிச்சிறப்பு.
//
மிகச்சிறந்த ஆப்புரேசலைத் தொடங்கிவைத்த ப.ம.கவின் இராம்ஸ் அவர்களுக்கு சங்கத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்(கொல்கிறேன் அல்ல).
//நகைச்சுவை என்பதில் எனக்குத் தெரிந்து இரண்டுவிதம். அடி கொடுப்பது அடி வாங்குவது. கவுண்டமணி பார்த்துவளர்ந்த நமக்கு இரண்டுமே காமெடிதான். கொடுப்பதற்குண்டான லைனில் கூட்டம் மாளாது. ஆனால் வாங்கத்தான் ஆளில்லாமல் இருந்தார்கள். தங்களையே கிண்டல் செய்துகொள்ளும் self-depreciation நகைச்சுவை கஷ்டமானது. செய்வதற்கு, அடிகொடுப்பதைவிட, திறமையும் தில்லும் வேண்டும். அதே சமயம் நாகரிகமாகவும் இருக்கவேண்டும். non offensive humour என்றால் என்ன தமிழ்நாட்டில் பலருக்கும் பாடம் நடத்தவேண்டிய நிலையில், how to take/make satire என்பதை ஸ்பூன்போட்டு சொல்லிக்கொடுக்கவேண்டிய துரதிருஷ்டமான நிலையில்தான் பலரும் இருக்கிறோம். இதில் அடுத்தவரின் மனம் புண்படாதவாறு கலாய்த்தலோ, தம்மைத்தாமே கிண்டலடித்துக்கொள்வதோ ரொம்பவே கஷ்டமான காரியங்கள். And Everybody gives into that Temptation to slander.... eventually!///
நன்றி.. நன்றி...நன்றி...நன்றி....நன்றி...நன்றி...நன்றி..
இந்த மூன்றெழுத்தை தவிர வேற எதுவும் தோணலை :)
//என்ன இருந்தாலும் அண்டம் பதினான்கிலும் அங்கத்தினர்களை கொண்டுள்ள எங்கள் மகாசமுத்திரமான ப.ம.கக்கு முன்னால் வ.வா.ச ஒரு புழலேரி என்றாலும்,//
அதான பார்த்தேன்! ஆப்புரேசல்லயும் கொஞ்சம் அல்வா கலந்து கொடுக்கிற மாதிரி இருக்கு!
//how i miss those good old days, we had so much fun//
உண்மைதான் ராம்ஸ்!
we miss all those days!
மாறி மாறி அறிக்கை விட்டுகிட்டு! எவ்ளோ ஜாலியா போச்சு!
// நமக்கு நாமே கண்ட இயக்கத்திலிருந்துகொண்டு சொந்தமாய் சொறிந்துவிடாமல் விடுவேனா//
அடப்பாவி! ஜாலிம்லோஷன் பார்ட்டியா நீரு??
மாடுஓட்டறத தற்காலிகமா நிறுத்திருக்கேன்.
காரணங்கள் சொல்லித்தெரியவேண்டியதில்லை.. :))
//ஓராண்டு கண்டுள்ள சிங்கங்களின் பணி சாதாரணமானது என்று சவடால்விடும் எதிரிக்கட்சி ஏகாம்பரம் இல்லை நான்//
ஒத்துக்கங்கய்யா ஒத்துக்கங்க!
எங்களை சிங்கங்கள் என்று எதிரி/உதிரிக்கட்சியின் no.2(என்னய்யா உதாரணம் இது) சொன்னதே ஆப்புரைசல் வெற்றி.
//மாடுஓட்டறத தற்காலிகமா நிறுத்திருக்கேன்.
காரணங்கள் சொல்லித்தெரியவேண்டியதில்லை.. :))///
நன்றி டாக்டரு.....
//
ஒங்க ரெண்டு பேருக்கும் இம்புட்டு இங்கிலிசு வார்த்தைக தெரியுமா???//
ஆங்கில வார்த்தைகளுக்கு நடுவிலும் தமிழ் எழுதுனதுக்கு சந்தோஷப் படவேனாமா? தமிழ் (என்) அவ்ளோ வீக்காருக்குபா... கண்டுக்கபடாது..
அப்புறமா இந்த பதிவையே நான் ரஷ்யன்ல போடலாம்னுல்ல நினச்சிருந்தேன்.. போட்டுருக்கலாம் போல..
சிபி,
//(கொல்கிறேன் அல்ல).//
யோவ்.. என்ன விபரீதமெல்லாம் இது? புடிச்சாலும் புடிக்காட்டியும் யாரயும் அட்டாக்காத ஆளுங்களாச்சே நீங்க...
பரோட்டா பாவலர் எங்களண்ணன் கொத்ஸ் இல்லாத நேரத்தில் பதிவை இட்ட டாக்டரை வாழ்த்த வயதில்லை...
வணங்கி அமர்கிறேன்.... நன்றி :))
//ஆப்புரேசல்லயும் கொஞ்சம் அல்வா கலந்து கொடுக்கிற மாதிரி இருக்கு!//
ஆப்புரேசல்னாலே அதான டெபனிஷன்.. என்ன இருந்தாலும் கட்சிப்பாசம்னு ஒண்ணூ இருக்கவேணாமா?
//உண்மைதான் ராம்ஸ்!
we miss all those days!
மாறி மாறி அறிக்கை விட்டுகிட்டு! எவ்ளோ ஜாலியா போச்சு!//
உண்மைதான்.... பொற்காலம் தான்.. ஆனா இப்படி பேசினாலே நமக்கு வயசாயிடுச்சோன்னு தோணுறதால இப்படியெல்லாம் அந்தக்காலத்த பத்தி பேசமுடியறதில்ல.. :))
பெருசு,
//அடப்பாவி! ஜாலிம்லோஷன் பார்ட்டியா//
இது என்ன மொழி? பெருவியனா?
//ஆங்கில வார்த்தைகளுக்கு நடுவிலும் தமிழ் எழுதுனதுக்கு சந்தோஷப் படவேனாமா? தமிழ் (என்) அவ்ளோ வீக்காருக்குபா... கண்டுக்கபடாது..//
அப்பிடியா??? பார்த்தா ஒன்னும் தெரியலை'யே??? :)
//அப்புறமா இந்த பதிவையே நான் ரஷ்யன்ல போடலாம்னுல்ல நினச்சிருந்தேன்.. போட்டுருக்கலாம் போல..//
ஓ ஒங்களுக்கு ரஷ்யன் மொழி வேற தெரியுமா???? :))
பெருசு,
//எங்களை சிங்கங்கள் என்று எதிரி/உதிரிக்கட்சியின் no.2(என்னய்யா உதாரணம் இது) சொன்னதே ஆப்புரைசல் வெற்றி.//
அரசியல் கட்சி அறிக்கையாட்டம் இல்லாம நான் எவ்ளோ ரீஜண்டா எளுதிருக்கேன்???
இப்ப என்னைய கார்னர்ல நீர் தள்ளினதால நான் ஏதாவது வியாக்கியானம் சொல்லப்போயி.. வேணாம்.. விட்ரு...
இதென்ன வ.வ.சவோட ஆப்புரேசலை இவர் பண்ணுறார்!
பிரைவேட் ஆப்புரேசலா?
அது சரி! இவரு ஆப்புரேசன்ல பண்ணுவாருன்னு இருந்தேன்!
//ஆனா இப்படி பேசினாலே நமக்கு வயசாயிடுச்சோன்னு தோணுறதால இப்படியெல்லாம் அந்தக்காலத்த பத்தி பேசமுடியறதில்ல//
இப்ப ஞாபகமறதி வேறயா??
//இது என்ன மொழி? பெருவியனா//
பக்கத்துலே கொலம்பியாவுலே இருந்துகிட்டு இது தெரியலியா.
////மாடுஓட்டறத தற்காலிகமா நிறுத்திருக்கேன்.
காரணங்கள் சொல்லித்தெரியவேண்டியதில்லை.. :))///
நன்றி டாக்டரு.....//
எனது சுயநலம் சிறிதுமற்ற செய்கைக்கு மனமுவந்து நன்றி சொன்ன இராம் அவர்களுக்கு இந்த பின்னூட்டத்தை காணிக்கையாக்குகிறேன்.
//யோவ்.. என்ன விபரீதமெல்லாம் இது? புடிச்சாலும் புடிக்காட்டியும் யாரயும் அட்டாக்காத ஆளுங்களாச்சே நீங்க... //
ஹிஹி..நீங்க, கொத்ஸ் எல்லாம் இதுல விதிவிலக்கு!
//இப்படி பேசினாலே நமக்கு வயசாயிடுச்சோன்னு தோணுறதால இப்படியெல்லாம் அந்தக்காலத்த பத்தி பேசமுடியறதில்ல.. :)) //
ஆமாமா! இல்லேன்னா 18 வயசுங்கறதே மறந்து போயிடுது இல்லையா இராம்ஸ்!
:))
டாக்டர்,
இது பதிவுக்கு சம்பந்தமில்லாத கேள்வி,
நீங்க ஒரு பக்கமாவே திரும்பிட்டு பார்த்திட்டு இருக்கீங்களே??? கழுத்து வலிக்காதா??? :)
அரசமீன்பிடிப்பான்களின் பிடியில் அவர் மாட்டியிருக்கலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து செய்திகள் வருவதால் அவர் எப்போதுவருவார் என்று நாமெல்லாம் தள்ளாட்டதிலும் எதிர்பார்த்திருக்கிறோம்.
////மாடுஓட்டறத தற்காலிகமா நிறுத்திருக்கேன்.
காரணங்கள் சொல்லித்தெரியவேண்டியதில்லை.. :))///
நன்றி டாக்டரு.....//
இதுக்கு நாந்தேன் நன்னி சொல்லோணும்!
//ஓ ஒங்களுக்கு ரஷ்யன் மொழி வேற தெரியுமா????//
எனக்கு பாபெல்.ஆல்டாவிஸ்டா பயன்படுத்தத் தெரியுமா என்று மறைமுகமாக சிங்கம் சவால் விடுகிறதா?? :)
//அரசமீன்பிடிப்பான்களின் பிடியில் அவர் மாட்டியிருக்கலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து செய்திகள் வருவதால் அவர் எப்போதுவருவார் என்று நாமெல்லாம் தள்ளாட்டதிலும் எதிர்பார்த்திருக்கிறோம்//
அரசமீன்பிடிப்பானுக்கேவா?
அடக் கடவுளே!
நாங்க எல்லாம் ரெண்டு லிட்டர் பெப்ஸிய ஒரே மொடக்குல குடிச்சிட்டு ஸ்டெடிய நிக்குற ஆளுங்க!
ஆவி அம்மணி,
//இவரு ஆப்புரேசன்ல பண்ணுவாருன்னு இருந்தேன்!//
வழக்கம் போலில்லாமல் இந்த முறை ஆப்புரேசன் செய்யப்பட்டவர் பிழைத்துக்கொண்டுள்ளார்.. இதுவே அதிசயம் தானே?
//நீங்க ஒரு பக்கமாவே திரும்பிட்டு பார்த்திட்டு இருக்கீங்களே??? கழுத்து வலிக்காதா??? :) //
இராம்,
பழைய அட்லாஸ் வாலிபர் ஒருத்தரை இப்ப எதுக்கு வம்புக்கு இழுக்குறீங்க?
பெருசு,
//பக்கத்துலே கொலம்பியாவுலே இருந்துகிட்டு இது தெரியலியா.//
கொலம்பியாலே கொலம்பிகினே இருந்ததால கொயப்பமா போச்சுபா.. கண்டுக்காத..
//
உண்மைதான்.... பொற்காலம் தான்.. ஆனா இப்படி பேசினாலே நமக்கு வயசாயிடுச்சோன்னு தோணுறதால இப்படியெல்லாம் அந்தக்காலத்த பத்தி பேசமுடியறதில்ல.. :))//
அப்பிடியென்னா ஒங்களுக்கு வயசாயிடுச்சு???? போனவருசந்தானே முப்பத்தெட்டு முடிஞ்சு எட்டுவருசமின்னு சொன்னீங்க!!!
இந்த வருஷம் அது என்ன ஒன்னே ஒன்னு கூடிருக்க போகுது, அவ்வளோதானே???
:))
சிபி,
//ஹிஹி..நீங்க, கொத்ஸ் எல்லாம் இதுல விதிவிலக்கு!//
எதுக்கு விதிவிலக்கு??????????????? திகிலா இருக்கு....
//இல்லேன்னா 18 வயசுங்கறதே மறந்து போயிடுது இல்லையா //
பதினென் கீழ்க்கணக்கு தெரியுமா உமக்கு??? பதினெட்டுக்கப்புறம் வயசெல்லாம் மேல கூட்டக்கூடாது..
இராம்,
//நீங்க ஒரு பக்கமாவே திரும்பிட்டு பார்த்திட்டு இருக்கீங்களே??? கழுத்து வலிக்காதா??? :)//
ஒரு பக்கமா திரும்பியிருந்தா தப்பில்ல.. ஒரு பக்கமாவே சாய்ஞ்சுருந்தாத்தான் முதுகுல விழுற மொத்துக்களால வலிக்கும்.
மக்கள்ஸ் ஓடியாங்க ஓடியாங்க
இங்க ஒருத்தரு ஆப்புரைசல்ன்னு சொல்லி படங்காட்டுனாரு, அவுருக்கே அரை அவுரா ஆப்புரைசல் நடந்துகிட்டு இருக்கு.
ஓடியாங்க! ஆடியாங்க!
அவசரக்காரரே..
நன்னின்னு வெறுமனே சொல்லிட்டு அவசரமா ஓடுறதா???
இதுக்கும் பதில் சொல்றதுதான் எங்க மரபுங்கறதால சொல்லிட்டேன்...
//எனது சுயநலம் சிறிதுமற்ற செய்கைக்கு மனமுவந்து நன்றி சொன்ன இராம் அவர்களுக்கு இந்த பின்னூட்டத்தை காணிக்கையாக்குகிறேன்.///
ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
சிபி,
//அரசமீன்பிடிப்பானுக்கேவா?//
அதெல்லாம் எத்தன மீன்பிடிப்பான்கள்கறத பொறுத்திருக்கு....
பெப்ஸிய அடிச்சுட்டா.. பெப்ஸி adulteratedஆ சாதாவா?? ஒண்ணுமில்ல.. இந்தியால இருக்கற பெப்ஸி நல்ல தண்ணியில்லியாமே.. அதான் கேட்டேன்...
ராம்ஸ்
எங்களுக்கு ஆப்புரேசல் செய்த உன் பெரிய மனதுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!
//பழைய அட்லாஸ் வாலிபர் ஒருத்தரை இப்ப எதுக்கு வம்புக்கு இழுக்குறீங்க?//
யார வம்புக்கிழுக்கறதுன்னே அலையுறாப்போல இருக்கு???
யாருப்பா அது? எனக்கும் சொன்னா சோக்கு புரியுமில்ல...?
/அரசமீன்பிடிப்பான்களின் பிடியில் அவர் மாட்டியிருக்கலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து செய்திகள் வருவதால் அவர் எப்போதுவருவார் என்று நாமெல்லாம் தள்ளாட்டதிலும் எதிர்பார்த்திருக்கிறோம்.//
இப்பொழுது திங்கள் முடிந்து செவ்வாய் பிறந்து ஒரு மணி நேரமாக போகிறது என்று தெரிவித்து கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.....
எங்களுக்கு அந்த படையலுக்கு முன்று தினங்களே மீதமிருக்கின்றன என்பதையும் நினைவூட்ட விழைகிறேன் :)
//போனவருசந்தானே முப்பத்தெட்டு முடிஞ்சு எட்டுவருசமின்னு சொன்னீங்க!!! //
வலையுலக யூத் பாத்து சொல்றதா இது.. எல்லாரும் சலங்க இலக்கியம் படிங்கப்பா.... ஆனாலும் நான் புலில்லாம் இன்னும் யூத்தா இருக்கறது கண்டு நிறைய பேருக்கு காயுது போல...
அடபாவிகளா சங்கத்தை பத்தி போஸ்ட் போட்டா பதிவு போட்ட பத்து நிமிசத்திலே தமிழ்மணத்தை விட்டே தூக்கிட்டிங்களே???
//இங்க ஒருத்தரு ஆப்புரைசல்ன்னு சொல்லி படங்காட்டுனாரு, அவுருக்கே அரை அவுரா ஆப்புரைசல் நடந்துகிட்டு இருக்கு.//
இதுல என்னப்பா உள்குத்து? யாருக்கு அரை அவுரா நடக்குதா??? என்னைய வச்சே காமெடி பண்றாப்போல இருக்கே???? :((
//ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//
ரிப்பீட்டேய்................
பமக வை கலைத்து விட்டு அனைவரும் வ.வா.ச வில் சேர இருப்பதாகவும் அதுக்கு நூல் விடும் நோக்கில் தான் இந்த பதிவு என்று வரும் செய்தியில் எள்ளவும் உண்மை இல்லை என்று தெரிவித்து கொள்கிறேன்.
புலி,
//எங்களுக்கு ஆப்புரேசல் செய்த உன் பெரிய மனதுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!//
இதெல்லாம் போல்ட்ல சொல்லவேணாமோ????? ஹி ஹி.....
//எங்களுக்கு அந்த படையலுக்கு முன்று தினங்களே மீதமிருக்கின்றன //
போன படையலே இன்னும் சிலருக்கு தொடர்ந்துகொண்டிருப்பதுதான் மேட்டர்.... :))
//
இராம்,
பழைய அட்லாஸ் வாலிபர் ஒருத்தரை இப்ப எதுக்கு வம்புக்கு இழுக்குறீங்க?//
தள,
நான் அப்பிடியெல்லாம் பண்ணுவேனா??? யாரு இவரு, எப்பிடி பார்த்தாலும் நம்மாளு.....
அதெல்லாம் நான் பண்ணமாட்டேன் :)
ஹி ஹி
போலீசு,
//அடபாவிகளா சங்கத்தை பத்தி போஸ்ட் போட்டா பதிவு போட்ட பத்து நிமிசத்திலே தமிழ்மணத்தை விட்டே தூக்கிட்டிங்களே???//
இப்பதான்யா புரியுது.. இப்ப நான் தான் நல்லவனாயிட்டேனா??????? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//ஆனாலும் நான் புலில்லாம் இன்னும் யூத்தா இருக்கறது கண்டு நிறைய பேருக்கு காயுது போல... //
என்னய எதுக்கு உங்க கூட துணைக்கு சேர்த்துக்குறீங்கனு தான் எனக்கு தெரியல....
அரை சதம் நான் தான் டாக்ஸ்
ஆகா மொத்தம் கூடி கும்மாளம் அடிச்சி போஸ்ட தமிழ்மணத்தில் இருந்து தூக்கியாச்சு.... சந்தோஷம் தானே!
//பமக வை கலைத்து விட்டு அனைவரும் வ.வா.ச வில் சேர இருப்பதாகவும் //
யோவ்.. சனநாயக பண்பாட்டின்படி வாய்ப்பொரி காறுமுகத்த களத்தில் இறக்கி தாக்கி அறிக்கைவிடாமல், எங்கள் தன்னிகரில்லாத் தலைவரின் அனுமதியுடன் வாழ்த்துபோட்டா அடுப்படிக்கே ஆட்டம்பாம் வைக்கறீங்களே?????
பதிவு இன்னும் த.ம. முகப்புல இருக்கு, அதுக்குள்ள மறுமொழியபட்ட இடுகைகள் காணாம். ஒரே தூக்கா தூக்கியாச்சு....
//யோவ்.. சனநாயக பண்பாட்டின்படி வாய்ப்பொரி காறுமுகத்த களத்தில் இறக்கி தாக்கி அறிக்கைவிடாமல், எங்கள் தன்னிகரில்லாத் தலைவரின் அனுமதியுடன் வாழ்த்துபோட்டா அடுப்படிக்கே ஆட்டம்பாம் வைக்கறீங்களே????? //
உங்களின் மாண்பு, பண்பு எனக்கு தெரியாதா என்ன, நீங்கள் இப்படி ஒரு பதிவு போட்டதும் அது போன்ற ஒரு கிசுகிசு பரவ ஆரம்பித்து விட்டது. அது உண்மை இல்லை என்று ஒரு தன்னிலை விளக்கம் தான் கொடுத்தேன். என்னய போய் சந்தேகப்படலாமா?????????
//
என்னய எதுக்கு உங்க கூட துணைக்கு சேர்த்துக்குறீங்கனு தான் எனக்கு தெரியல....//
கூட்டணி தர்மம்னு ஒண்ணு இருக்குல்ல.. கொள்ளையடிக்க போகும்போது பங்கு. கொள்ளையடிச்சப்புறம் பங்கு இல்லை.
//அரை சதம் நான் தான் டாக்ஸ்//
கடசியா வந்தாலும் சிங்கங்களுக்கு மத்தியில் புலி புலிதான்னு ப்ரூவ் பண்ணிட்டீர்...
//ஆகா மொத்தம் கூடி கும்மாளம் அடிச்சி போஸ்ட தமிழ்மணத்தில் இருந்து தூக்கியாச்சு.... சந்தோஷம் தானே!//
இதுதான் இந்தக்கும்மியின் பின்னுள்ள உள்நோக்கமா என்ற கேள்வியை விட இப்படி சங்கத்தை தமிழ்மணத்தைவிட்டு விரட்டியடிப்பதில் சிங்கங்களும் புலியும் அதிவேகமாய் சுழன்று செயல்பட்டதன் பின்னணி என்ன என்பது இன்னும் அவசியமானதாகின்றது..
அதுக்குள்ள 60'ஆ:)
//பதிவு இன்னும் த.ம. முகப்புல இருக்கு, அதுக்குள்ள மறுமொழியபட்ட இடுகைகள் காணாம். ஒரே தூக்கா தூக்கியாச்சு...//
ஏதோ அணிலாகிய என் பங்கு கொஞ்சம் தான்.. கோடு போட்ட இராமரையும் சிபியாரையும் கேளுங்க... :)))
//அது உண்மை இல்லை என்று ஒரு தன்னிலை விளக்கம் தான் கொடுத்தேன். என்னய போய் சந்தேகப்படலாமா?????????//
சந்தேகப்படலையப்பா... ஆனா இன்னமும் வெளிப்படையா புலிகளின் ஆதரவு எனக்குன்னோ புலிகளுக்கு என் ஆதரவுன்னோ சொல்லமுடியாத ஒரு இக்கட்டான இடியாப்பத்தில் சிக்கியிருக்கிறோம்..
//அதுக்குள்ள 60'ஆ:)//
அதேதான் நானும் போடலாமின்னு நினச்சேன்.. ஆனா இன்னும் டாபிக்கலா அப்-டு-டேட்டா
அதுக்குள்ள 62-ஆ?????
முதல் ரெண்டு மூணு பத்தியைப் படிச்சு நீங்க வ.வா. சங்கத்தைத் திட்டறீங்களா வாழ்த்துறீங்களான்னு ஒண்ணுமே புரியல போங்க.. நமக்கு இந்தப் பின்புலக் கதையெல்லாம் தெரியாதுல்ல.. அதான். மத்தபடி போன வருசம் கைப்பு சொன்னதன் பேரில் படிக்க ஆரம்பிச்சதிலிருந்து நம்மளும் வ.வா.சங்கத்து ரசிகை தான்.
//வலையுலக யூத் பாத்து சொல்றதா இது.. //
என்னை வலையுலக யூத்'ன்னு சொன்ன டாக்டர் வாழ்க.. வாழ்க :)))
//ஆகா மொத்தம் கூடி கும்மாளம் அடிச்சி போஸ்ட தமிழ்மணத்தில் இருந்து தூக்கியாச்சு.... சந்தோஷம் தானே!//
இந்த பழிபாவத்துக்கு நான் ஆளாகலே'ப்பா :))
நான் தெரிஞ்சே எந்த தப்பும் பண்ணுறாதில்லை... :)
//ஏதோ அணிலாகிய என் பங்கு கொஞ்சம் தான்.. கோடு போட்ட இராமரையும் சிபியாரையும் கேளுங்க... :)))//
எல்லாம் ஒரு பாசம்ந்தேய்ன்.... :)))
//முதல் ரெண்டு மூணு பத்தியைப் படிச்சு நீங்க வ.வா. சங்கத்தைத் திட்டறீங்களா வாழ்த்துறீங்களான்னு ஒண்ணுமே புரியல போங்க.. நமக்கு இந்தப் பின்புலக் கதையெல்லாம் தெரியாதுல்ல.. அதான்.//
வாங்க மேடம்,
டாக்டரு சங்கத்தை திட்டியிருந்தா அவரேயே அடுத்தமாசத்து அட்லாஸா போட்டு கும்மிறமாட்டோம் கும்மி..:)
//மத்தபடி போன வருசம் கைப்பு சொன்னதன் பேரில் படிக்க ஆரம்பிச்சதிலிருந்து நம்மளும் வ.வா.சங்கத்து ரசிகை தான்.//
அடடா.... :)) ரசிகை மேடத்துக்கு நன்றி நன்றி :)
நூறடிக்கிறதுக்குள்ளே எல்லாரும் தூங்க போயாச்சா???
சேதுக்கரசி,
//முதல் ரெண்டு மூணு பத்தியைப் படிச்சு நீங்க வ.வா. சங்கத்தைத் திட்டறீங்களா வாழ்த்துறீங்களான்னு ஒண்ணுமே புரியல போங்க.. நமக்கு இந்தப் பின்புலக் கதையெல்லாம் தெரியாதுல்ல..//
“If I take refuge in ambiguity, I assure you that it's quite conscious.” ங்கறதுதான் நம்ம அரசியல்ல பாலபாடம்... :))
அப்புறம் பின்புலக் கதை தெரிஞ்சுக்கத்தானே சுட்டில்லாம் சுட்டிருக்கோம்.
இராம்,
//என்னை வலையுலக யூத்'ன்னு சொன்ன டாக்டர் வாழ்க.. வாழ்க :)))//
வலையுலக யூத்னு சொல்லிகிட்டது என்னைய..
//அட்லாஸா போட்டு கும்மிறமாட்டோம் கும்மி..:)//
போட்டு வாங்கறதுங்கறது என் விஷயத்துல கரெக்டா வர்க் அவுட் ஆகும் போலிருக்கே...
//நூறடிக்கிறதுக்குள்ளே எல்லாரும் தூங்க போயாச்சா???//
கொஞ்சம் இளைப்பாற போனேன்.. மாடு ஒட்றதில்லேன்னு ஒப்பனா விட்டுட்டு போனாலும் அவ்ளோதான் போலிருக்கு...
இதுவே பமக பத்தின பதிவாயிருந்தா முந்நூறத் தாண்டி பின்னூட்ட எண்ணிக்கை சார்ங்கம் உதச்ச சரங்களா எகிறியிருக்கும் என்ற சொல்லாடலைத் தவிர்த்து; சங்கமானது எழுபது பெற்று என்றும் எழுக (என்னவோ எனாவுக்கு எனா.. ரொம்ப ஆராயக்கூடாது)னு வாழ்த்திக்கிறேன்..
------------
பிகு: இனிமே தொடர்ந்து கவனிக்க முடியாதபடியால், மாடுஓட்டுறது மறுபடியும் அமலுக்கு வருகின்றது.
This post has been removed by the author.
சும்ம்மா...ஒரு கலாய்ப்பு...!!!!
//சந்தேகப்படலையப்பா... ஆனா இன்னமும் வெளிப்படையா புலிகளின் ஆதரவு எனக்குன்னோ புலிகளுக்கு என் ஆதரவுன்னோ சொல்லமுடியாத ஒரு இக்கட்டான இடியாப்பத்தில் சிக்கியிருக்கிறோம்.. //
தேங்காய் பாலோ, சால்னாவோ ஊத்தி சாப்பிட்டுட்டு போய் ஹிஸ்ட்ரி எழுதுற வழிய பாருங்க.... அவ்வளவு தான் சொல்வேன்.
//இதுவே பமக பத்தின பதிவாயிருந்தா முந்நூறத் தாண்டி பின்னூட்ட எண்ணிக்கை சார்ங்கம் உதச்ச சரங்களா எகிறியிருக்கும் என்ற சொல்லாடலைத் தவிர்த்து;//
இந்த நொண்ண நாட்டியத்துக்கு உமக்கு என்றுமே குறைச்சல் கிடையாது....
செந்தழல் ரவி,
//This post has been removed by the author.//
சாமி.. அது நிசமாலுமே நடந்த தவறுபா... அதையெல்லாம் சுட்டிக்காட்டி கலாய்க்கலாமா?
புலி,
//தேங்காய் பாலோ, சால்னாவோ ஊத்தி சாப்பிட்டுட்டு போய் ஹிஸ்ட்ரி எழுதுற வழிய பாருங்க...//
வரலாறு எழுதறதெல்லாம் தினசரி நடக்குறது..
பமகவினர் தினசரி, ஒரு அன்றாட நிகழ்வாக, வரலாறு படைக்கிறார்கள் என்ற உண்மையை state-அ நீங்கள் கொடுத்த சந்தர்ப்பத்திற்கு நன்றி கூறி அமர்கிறேன்.
This post has been removed by the Namakkal Shibi.
//இப்படிக்கு,
'இரம்'நாதன்,
கொள்கை பரப்புச் செயலாளர்
கட்சி #2, பச்சோந்தி மக்கள் கட்சி
ஸ்விஸ்ஸாபுரம்
ரஷ்ய மாவட்டம்//
யோவ் இதை இப்ப தான் பார்த்தேன், என்ன நைனா இது... இந்த பதிவு போடும் போது தெளிவா தானே இருந்தீர், இல்ல ரம் செய்த மாயம் தான் இந்த பதிவா.....
//கடசியா வந்தாலும் சிங்கங்களுக்கு மத்தியில் புலி புலிதான்னு ப்ரூவ் பண்ணிட்டீர்... //
ரொம்பவே புகழ்கின்றீர்... இதில் ஏதும் வில்லங்கம் இல்லயே....
80 பின்னூட்டங்களுக்கு மேல் ஆகியும், பதிவு போட்டு கிட்டதட்ட 24 மணி நேரம் நெருங்கியும் உம் கட்சியை சேர்ந்த இலவசம் வராத காரணம் என்னவோ......
//பமகவினர் தினசரி, ஒரு அன்றாட நிகழ்வாக, வரலாறு படைக்கிறார்கள் என்ற உண்மையை state-அ நீங்கள் கொடுத்த சந்தர்ப்பத்திற்கு நன்றி கூறி அமர்கிறேன். //
வரலாறு என்பது தானாக நிகழ வேண்டும். நீங்களே படைக்க கூடாது ஐ மீன் உருவாக்க கூடாது..... புரியுதோ?
//
*(Vtop Vyving 'V' Vor V's vake!! -
*fulcrum - "how i miss those good old days, we had so much fun"
*self-depreciation
*non offensive humour
*how to take/make satire
*And Everybody gives into that Temptation to slander.... eventually!
*a-political
*who else, //
அநியாயத்துக்கு பீட்டர் விடுறீங்க ராம்ஸ். வேற என்னத்த சொல்ல :-(
//சாமி.. அது நிசமாலுமே நடந்த தவறுபா... அதையெல்லாம் சுட்டிக்காட்டி கலாய்க்கலாமா? //
மெய்யாலுமாவா?
யப்பா ராமநாதா, என்னப்பா இப்படி பண்ணிட்ட? ஒரேடியா இங்கிலிபீசுல இப்படித் தாக்கிட்டியே, நம்மளைப் பத்தி நல்லதா சொல்லறையா இல்லை எதனா கேவலமா திட்டுனியா ஒண்ணும் புரியாம திகைச்சுப் போயி நின்னுட்டேனே.
நல்ல வேளை பக்கத்து வீட்டுப் பையன் வந்தானோ, கொஞ்சமாச்சும் சொல்லித் தந்தான். அவனே நீர் சொன்னதுல நிறையா புரியலைன்னு சொல்லிட்டுப் போயிட்டான். ஆங்கிலத்திலயும் நீர் இலக்கியவியாதியா ஆகிட்டீரா?
இருக்கட்டும் நீர் கேட்டா மாதிரி நானும் சங்க ஆப்புரேசல் போட்டாச்சு. வந்து பாரும்.
//80 பின்னூட்டங்களுக்கு மேல் ஆகியும், பதிவு போட்டு கிட்டதட்ட 24 மணி நேரம் நெருங்கியும் உம் கட்சியை சேர்ந்த இலவசம் வராத காரணம் என்னவோ......//
உண்மை விளம்பி ஆகிட்டேன். இனிமேலும் ஓட்டக் கூடாது. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
சிபி,
//This post has been removed by the Namakkal Shibi.//
இல்லியே போஸ்ட் இன்னும் இருக்கே... :))
புலி,
//இந்த பதிவு போடும் போது தெளிவா தானே இருந்தீர், இல்ல ரம் செய்த மாயம் தான் இந்த பதிவா.....//
இதுக்கு நான் என்ன பதில் சொல்லணும்னு நினைக்கிறீங்களோ அதே பதிலத்தான் சொல்வேன்.
//ரொம்பவே புகழ்கின்றீர்... இதில் ஏதும் வில்லங்கம் இல்லயே....//
அரசியலில் வில்லங்கமும் உண்டு. ஆனா இதில் சத்தியமாக இல்ல..
//80 பின்னூட்டங்களுக்கு மேல் ஆகியும், பதிவு போட்டு கிட்டதட்ட 24 மணி நேரம் நெருங்கியும் உம் கட்சியை சேர்ந்த இலவசம் வராத காரணம் என்னவோ......//
வாணவேடிக்கைனா மொதல்ல கேப்ல ஆரமிச்சு, புஸ்வாணம், சக்கரம், டபுள் சவுண்ட், நூறு, இருநூறு அதுக்கப்புறம்தான் லக்ஷ்மி வெடி அணுகுண்டெல்லாம் வெடிக்கணும்.. பிரியாம பேசுறியே...
புலி,
நீயா வந்து எனக்கு பாயிண்ட் வேற எடுத்துக்கொடுக்குற...
//வரலாறு என்பது தானாக நிகழ வேண்டும். நீங்களே படைக்க கூடாது ஐ மீன் உருவாக்க கூடாது..... புரியுதோ?//
அதாவது வரலாறு நிகழறத பாக்குறவங்க சாதா மனிதர்கள். நாங்கள்லாம் அவங்க பாக்குற வரலாறையே எழுதறவங்க.
சிம்பிளா சொன்னா நீங்க ஹிஸ்டரி சேனல் பாக்கறவங்க. நாங்க ஹிஸ்டரி சானல்ல வர்றவங்க. :))
//அநியாயத்துக்கு பீட்டர் விடுறீங்க ராம்ஸ். வேற என்னத்த சொல்ல :-(//
இப்படித்தான் வார்த்தைகளை அங்கயிங்க மாத்திப்போட்டா படிக்கிறவங்க ஏதோ stuff இருக்கு போலிருக்ன்னு தப்பா நினச்சுகினு மேட்டரே இல்லாத உப்புமா பதிவையும் deep-ஆ படிப்பாங்க.
Elementary! My Dear Watson!
//மெய்யாலுமாவா?//
மெய்யாலுமேதான்பா....
//வாணவேடிக்கைனா மொதல்ல கேப்ல ஆரமிச்சு, புஸ்வாணம், சக்கரம், டபுள் சவுண்ட், நூறு, இருநூறு அதுக்கப்புறம்தான் லக்ஷ்மி வெடி அணுகுண்டெல்லாம் வெடிக்கணும்.. பிரியாம பேசுறியே...//
யோவ் இப்போ என்ன என்னை அணுகுண்டுன்னு சொல்ல வறியா? விட்டா பத்த வெச்சு வெடிக்க விட்டுறுவ போல இருக்கே...
//இப்படித்தான் வார்த்தைகளை அங்கயிங்க மாத்திப்போட்டா படிக்கிறவங்க ஏதோ stuff இருக்கு போலிருக்ன்னு தப்பா நினச்சுகினு மேட்டரே இல்லாத உப்புமா பதிவையும் deep-ஆ படிப்பாங்க.//
எச்சூஸ் மி. ஆனா என்னைப் பத்தி எதுவும் தப்பாச் சொல்லலையே. எல்லாம் ஒரே இங்கிலீஸா இருக்கு, அதான்.
கொத்ஸு,
வாரும்... நீங்க வராதத வெச்சு அரசியல் செய்லாம்னு சிலர் ட்ரை செய்றாங்க..
//நல்ல வேளை பக்கத்து வீட்டுப் பையன் வந்தானோ, கொஞ்சமாச்சும் சொல்லித் தந்தான். அவனே நீர் சொன்னதுல நிறையா புரியலைன்னு சொல்லிட்டுப் போயிட்டான். ஆங்கிலத்திலயும் நீர் இலக்கியவியாதியா ஆகிட்டீரா?//
நமக்கெல்லாம் சரக்கு உள்ள போனாக்கூட தமிழ்ல இலக்கிய்வாதி ஆகமுடியமாட்டேங்குதே நானே பீலா இருக்கேன். இதுல ஆங்கிலத்துல வியாதியா...
ஆப்புரைசல் போட்டாச்சா??? ஹோம்வர்க் குடுத்தா இப்படித்தான் இருக்கணும்...
//உண்மை விளம்பி ஆகிட்டேன்.//
இப்ப பாரு யாரோ தமிழ்ல பிரியாத வார்த்தையெல்லாம் போட்டு என்னமோ சொல்லிருக்காங்க.
//விட்டா பத்த வெச்சு வெடிக்க விட்டுறுவ போல இருக்கே...//
பத்த வைக்குறது பரட்டைக்கு புதுசா என்ன??? ஏற்கனவே நேயர் விருப்பம் என்னென்ன எல்லாம் கேட்டு ரொம்ப தனக்குத்தானே பத்த வச்சுக்குறா மாதிரி இருக்கு... நான் ஹெல்ப் பண்ணாம எப்படி? :P
ஒரு சின்ன டவுட்டு. நீங்க இப்படி ஆப்புரேசல் எல்லாம் செய்யறீங்களே, அந்த சங்கத்துப் பதிவு எதனா ஒண்ணாவது படிச்சு இருக்குக்கீங்க?
நாந்தானே 100?
//ஆனா என்னைப் பத்தி எதுவும் தப்பாச் சொல்லலையே. எல்லாம் ஒரே இங்கிலீஸா இருக்கு, அதான்.//
பாருங்க இதே தான் நான் சொல்லவரேன்..
அந்த கமெண்டல இருக்குற ஆங்கில வார்த்தைகள் ஆறு! தமிழ்ல இருக்கறது தெளிவா புரிஞ்சாலும் ஆங்கிலம் குழப்பிடறதால கொத்ஸுகூட tension ஆயிட்டாரு. இப்ப புரியுதா ஆங்கில effect?
கொத்ஸு,
//நாந்தானே 100?//
சந்தேகமெயில்லாம நீர்தான். அதுக்கு நன்னி.
//அந்த சங்கத்துப் பதிவு எதனா ஒண்ணாவது படிச்சு இருக்குக்கீங்க? //
என்னைய பாத்து என்னா மாதிரி கேள்வி கேக்குற? ஏப்ரல் 28 அன்னிக்கு புதுசா கட்சி ஆரமிக்கிற ஐடியா வெளியில வர்றாப்புல இருக்கு? ரெண்டு பாசக்கார கட்சிகளுக்கிடையில் கோள் மூட்டுற? என்ன வில்லத்தனம்? சங்கத்து ஆளுங்கல்லாம் நல்லவங்க. நானும் ஓரளவுக்கு நல்லவன்.
அந்த சங்கத்து பதிவெல்லாம் மனுசன் படிப்பானான்னு நக்கலா கேள்வியொண்ணு தொக்கி நிக்கிறா போல இருக்கு? இந்த மாதிரி deep seated contempt அ வச்சுகிட்டு வெளியில ஆப்புரேசல் போடுறேன் show காட்டினிகிறியா?
சங்கத்து சிங்கங்களே... பார்த்தீர்களா இந்த கூத்தை???
Post a Comment