பிரபல சுவாமி குஜிலியானந்தா அவரது ஸ்விஸ்ஸாபுரம் தோட்டத்தில் தங்கி ஆன்மிக பணியாற்றி வருவது தெரிந்ததே. நேற்று மாலை நமது தினமூடி நிருபர் அவரைச் சந்தித்து வ.வா.ச, தேர்தல், தமிழக மக்கள் மற்றும் சில திடுக்கிடும் உண்மைகள் ஆகியவற்றை பற்றி பேட்டி கண்டார். சுவாமிஜியின் சூடான பதில்கள் இதோ.
கே: வணக்கம் சுவாமிஜி. சில ஆண்டுகாலமாக தமிழ்நாட்டு அரசியலில் உங்களைக் காணமுடியவிலலையே. அதற்கு என்ன காரணம்?
ப: தமிழ்நாட்டு அரசியல் முன்னாடி நறுமணம் கமழும் நந்தவனமாட்டம் இருந்தது. அப்போது என்னைப் போன்ற ஆன்மிகவாதிகளை ஆலோசனைகேட்டு ப.ம.க போன்ற கட்சிகள் சிறப்பாக செயல்பட்டு வந்தன. நாங்களும் மக்கள் நலப்பணியில் ஈடுபட்டு வந்திருந்தோம். வயதாகிறதே. ப.ம.க மாதிரி நல்ல ஆட்சியாளர்களிடம் பொறுப்பை ஒப்படைத்த திருப்தியில் இங்கே ஸ்விஸ்ஸாபுரத்தில் ஆயிரம் ஏக்கரில் சின்ன பண்ணை தொடங்கி ஜிராந்தையார் என்னும் பதினொன்றாம் நூற்றாண்டு சித்தர் சொன்னது போல 'மாதேவா சம்போ கந்தா' என்று இறைப்பணியில் என்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறேன்.
கே: தமிழகத்தேர்தல் நெருங்கிவிட்டதே. இத்தனை நாள் அறிக்கைவிடாமல் இருந்துவிட்டு இப்போது வெளியில் வந்துள்ளீரே சுவாமி. என்ன காரணமோ?
ப: நான் சொன்ன நந்தவனம் முன்னாடி இருந்துது. ஆனா இப்போ என்ன நடக்கிறது? 'யத்திந்தாம் சித்திந்தாம் பத்தினானாம் குத்தினானாம், சுவாஹாவாம் இங்கதாம் வசவாம்' அப்படின்னு ரிக்வேதத்துலேயே டுபிங்கஸுவ சம்ஹிதைல சொல்லிருக்கு. வசவாம்ங்கறது வ.வா.ச வோட திரிபு. அதாவது இங்கதாம்னா மக்கள். மக்களை சுவாஹான்னு சொல்லி வசவாம்னு பேர வச்சிண்டு வரவா சாப்டுடுவான்னு ரெண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடியே சொல்லிவச்சுட்டு போயிருக்கா பெரியவா. அதான் நானும் சொல்றேன். இப்போ வ.வா.ச ன்னு வந்துருக்கறது இந்த துஷ்டால்லாம் சேர்ந்து நம்ம பாவப்பட்ட மனுஷால்ல டின்னரா சாப்டுட்டு போயிடுவா. அப்படி சாப்படறச்சே,யத்திந்தாம் தித்திந்தாம்னு ஆடிண்டே சாப்புடுவாளாம். அதான் சொல்லிருக்கு. அதான் க்ருஷ்ண பகவான் போல வந்துருக்கார் முகமூடி சார்.
கே: முகமூடி வெறும் ஒரு கட்சித்தலைவர். அவரப்போய் க்ருஷ்ணர்னு சொல்லறீங்களே ஸ்வாமிஜி?
ப: அப்பா.. எல்லாருக்கும் எல்லாமும் புரிஞ்சிடாது. அப்படிப் புரிஞ்சிட்டா அப்புறம் எங்களுக்கு என்ன வேலை? தெய்வம் பேசறத எல்லாராலும் புரிஞ்சிக்க முடியாது. புரிஞ்சிட்டா தாங்கிக்கவும் முடியாதுப்பா. நான் ஞான திருஷ்டில ஸ்ரீலஸ்ரீ ஜிராந்தையார் என் கனவுல வந்து பேசறதச் சொல்றேன். அவரவிட ஒரு பெரிய மகான் இருக்க முடியுமா? எல்லாம் தெரிஞ்ச அவதாரம் அவர். ஜீவ சமாதியாகியிருந்தாலும் இன்னும் அவர் சமாதி பக்கம் போனீங்கன்னா 'எக்ஸ்சூஸ் மீ' னு ஜபம் சதா சர்வகாலம் கேட்டுண்டுருக்கும். வாழுற தெய்வம் அவர். அவர் வந்துசொன்னது தான். கைப்புள்ளைவாள் கரவர் கரனோட அவதாரம். 'மகாபாரதத்துல' மெயின் வில்லன் ரோல் கிடைக்காததால, சர்வேஸ்ரரான விஷ்ணு கரனுக்கு பூலோகத்துல கைப்புள்ளைவாள்னு பேரு கொடுத்து பொறக்கவச்சுருக்கார். கூடவே சூர்ப்பனகை, தூஷணன் அப்புறம் ஆயிரம் அசுராளும் பொறந்து வந்துருக்கா. துவாபர யுகத்துல துறவிகளுக்கு தொல்லை கொடுத்தவா, இப்போ மக்களுக்கு தொல்லை கொடுக்க வந்துருக்கா.
யதா யதாஹி தர்மஸ்தன்னு ராமானந்த் சாகர் சீரியல் டைட்டில் முயுசிக்ல வரமாதிரி இப்போ முகமூடி ரூபத்துல சாட்சாத் க்ருஷ்ணரே வந்துருக்கார்.
கே: என்னவோ சாமி. வித்தியாசமா என்னன்னமோ சொல்றீங்க. இந்த தேர்தலுக்கு மக்களுக்கு என்ன அறிவுரை கொடுக்கப்போறீங்க?
ப: சுவாமி பாத்துண்டே இருக்கார். அதர்மம் என்னிக்கும் ஜெயிக்காது. ஜெயிக்கறா மாதிரி தெரிஞ்சாலும் க்ருஷ்ணர் வந்துட்டார் உங்கள காப்பாத்துவார். கவலைப்படாதீங்கோ. டெய்லி சுவாமிய வேண்டிக்கோங்கோ.
கே: அப்போ இந்த வருஷம் உங்க வோட்டு பமக வுக்கத்தானா சுவாமி?
ப: 'தார் டின்னாய, சிபிஐகேஸாய, ஜெயில்பேஸாய, பெயில்கேஸாய, சொத்துசொத்தாய, நகைக்கடையாய, பண்ணைவாயாயானாம் ஹேண்ட்சைல்டாய நாசகாய நம ஓம்:' னு சொல்லி ஒரு ஸ்லோகம் இருக்கு. எல்லாரும் தினமும் பாராயணம் பண்ணலாம். ரொம்ப நல்லது. நாட்டுக்கும் நல்லது. வீட்டுக்கும் நல்லது. பண்ணுங்கோ. இந்த ஸ்லோகத்துலேயே சொன்ன மாதிரி கர, தூஷண, சூர்ப்பணகைகளுக்கு யாராவது ஓட்டு போடுவாளா? க்ருஷ்ணனுக்குத்தான் போடுவா. அதான் நானும் பண்ணுவேன். நீங்களும் பண்ணுங்கோ. இந்த வரிய நன்னா பெர்சா போடுங்கோ.
பேட்டியின் பாகம் ரெண்டு அடுத்த இதழில் தொடரும்.
37 Comments:
//ஸ்ரீலஸ்ரீ ஜிராந்தையார் // இது யார்ன்னு தெரியுது. ஆனா குஜிலியானந்தா யாரு ராம்ஸ்?
'கட்சியானாம் கொள்கையானாம் கரெக்டாவே சொன்னாராம்'. ஜிராந்தையார் வழி வந்த குஜிலியானந்தா வாழ்க.
இரண்டாம் பாகம் எப்போ ரீலீஸ் என்று ஆவலுடன் எதிர்பார்க்கும்
அன்புத் தொண்டன்.
எங்கள் கூட்டணிக்கட்சித்தலைவர் கைபுள்ளையை பற்றி தவறாக பேசிய குஜிலியானந்தா மன்னிப்பு கேட்காவிட்டால் 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரப்படும் என்பதை அ.உ.ஆ.சூ சங்கம்+மல்லிகை அணி+வ.வா சங்க முப்படை கூட்டணி சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்
செல்வன் சொல்வதை வழி மொழிகிறேன்..
செல்வன், ஒரு கோடி ரொம்ப கம்மியா தெரியலை?? அதிலும் உங்க மல்லிகை, அ.உ.ஆ.சூ சங்கம் எல்லாம் பிரிச்சா ஒண்ணும் தேறாது!!!
//அ.உ.ஆ.சூ சங்கம்//
செல்வன் என்ன இது? சங்கத்தோட பேர்ல முக்கியமான பகுதியைக் காணாமே? கொஞ்சம் விட்டா சங்கத்தையே வேற யாருக்காவது மாத்திக் குடுத்துடுவீங்க போல இருக்கு?
ராமநாதரே
தோள் தட்டி புறப்பட்டு விட்டது எமது படை.
இங்க பாருங்க
http://thacnathaku.blogspot.com/
நகைச்சுவை உணர்வு உங்களில் உள்ளதா அல்லது நகைச்சுவை உணர்வில் நீங்கல் உள்ளீர்களா?
நோயாளிகளை சிரிக்க வெச்சே கொன்னுடுவிங்க போலிருக்கே.
'தார் டின்னாய, சிபிஐகேஸாய, ஜெயில்பேஸாய, பெயில்கேஸாய, சொத்துசொத்தாய, நகைக்கடையாய, பண்ணைவாயாயானாம் ஹேண்ட்சைல்டாய நாசகாய நம ஓம்'
ராமனாதன் ச்லொகத்தை எவ்வளொ தடவை ஜபிக்கணும்? இதுக்கு தனி உபவாசம் உன்டா? தயவு செஞ்சு டயட்டை தெளிவு படுத்தவும்.இஙக பக்த கோடிகள்ளாம் கைல சப்பளா கட்டையும் கால்ல கஜ்ஜையொடையும் ரெடியா இருக்கா.
அதெல்லாம் சரி பம க ஓட கட்சி கொடி என்ன??
ராதா
நம ஓம் க்கு பதிலா ஸ்வாஹா ஆ ந்னு இருந்தா ஒரு special effect இருக்கும். 10008 ஆவிருத்தி யாகம் பண்ணினா கர தூஷணா, சூர்பநகைக்கெல்லாம் தோல்வி நிச்சயம்.
//அ.உ.ஆ.சூ சங்கம்//
செல்வன் என்ன இது? சங்கத்தோட பேர்ல முக்கியமான பகுதியைக் காணாமே? கொஞ்சம் விட்டா சங்கத்தையே வேற யாருக்காவது மாத்திக் குடுத்துடுவீங்க போல இருக்கு?//
தலைவா குமரா,
உங்கள் பெயரை விடுவேனா?நான் சரியாகத்தான் அனுப்பினேன்.மாற்றுகட்சி ஊடகத்தில் என் அறிக்கையை தணிக்கை செய்து வெளியிட்டு சதி செய்து விட்டனர்.சன்டிவி, ஜெயடீவி வேலை நடக்கிறது.:-))
விரைவில் உங்கள் பெயரை தாங்கிய பத்திரிக்கை 1 ரூபாய்க்கும், இலவச டிவியும் வெளிவர இருக்கிறது.தொண்டர்கள் நிதியை பொருளாளராகிய என்னிடம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்
'மாதேவா சம்போ கந்தா'
முதல் சொல்லில் வரவேண்டிய blank space இரண்டாம் சொல்லில் வந்துவிட்டதா?
:-)
யத்திந்தாம் தித்திந்தாமுக்கு குஜிலியானந்தா கொடுத்த விளக்கம் சரிதான், ஆனால், பினாத்தலானந்தா என்ன சொல்கிறார் என்றால், வசவாம் என்பது வ வா ச வுக்கும் பொருந்தும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய வசவுக்கும் பொருந்தும். எதை நீங்கள் விரும்புகிறீர்களோ அதை நீர் எடுத்துக்கொள்ளலாம் என்பதைத்தான் கிறுக்கு ஸ்மிருதியில் "அதிந்தோம் ஆடியபட்டோம் எத்திந்தோம் எதையும் எடுத்துகிட்டொம்"என்று பாடப்பட்டிருக்கிறது.
குமரன்,
குஜிலியானந்தா நிஜமாவே தெரியாதா? இல்ல கிண்டலா? :)
எத்தோ எத்தோ தெருவஸ்ய
குப்புறஸ்க விழுவாஸ்ய
மீசையோம் மண்ணில்லாத்திரியம்பம்
இதுவும் குஜிலியானந்தா சொல்லிக் கொடுத்ததுதான். இதச் சொல்லிப் பழகிக்கிறதும் நல்லதுதான்.
அதே போல அவரோட தேர்தல் தோஷ நிவாரணங்களும் ரொம்பப் பிரசித்தம்.
தினமும் காலைல முந்திரியும் திராட்சையும் ரஷ்ய நாட்டு மருந்துல ஊற வெச்சி.....அதை தொண்டர்களுக்குக் கொடுத்தா விரைவில் நல்ல பலன் தெரியும். அதே போல தங்கம், வெள்ளி, கலர் டீவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஒரு ரூபா நாளிதழ் மந்திரங்களை எல்லாம் மகேசனின் அவ-தாரங்களாகிய மக்களுக்கு மொட்டை வெயிலில் சொல்லி வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும். இந்த மந்திரங்களைச் சொல்லும் பொழுது குறிப்பாக டாட்டா சொல்லக் கூடாது.
ஜீராந்தையாரும் குஜிலியானந்தாவும் இன்னமும் நெறைய சொல்லீருக்காங்க. அதுக்கெல்லாம் விளக்கம் எழுதி மக்கள் கிட்ட கொண்டு போய்ச் சேர்க்கனும்.
கொத்தனார்,
ஸ்வாமிஜி ஸ்விஸ்ஸிலிருந்து இன்னும் இரண்டு மூன்று நாட்களில் வந்துவிடுவார். வந்ததும் பாகம் 2 வெளியிடுவார்னு நினைக்கறேன்.
செல்வன்,
நானும் பொருத்துப் பொருத்துப் பாக்கறேன். நீங்க அளவுக்கு மீறிப் பேசறீங்க. :)) (மேஜர் ஸ்டைல்ல படிக்கவும்)
பின்ன, என்ன விளையாட்டு இது. எங்க கட்சிக்காரர் பெயரைப் பயன்படுத்தி கட்சி வச்சுருக்கீங்க. போனாப்போகுதுன்னு பாத்தா, எங்க சாமிஜி மேலேயே கேஸ் போடறீங்களா?
ஒழுங்கா, எங்க கட்சிக்காரர் ஆன்மிக அணி இணைத்தலைவர், சிலேடைச் செல்வர், செந்தமிழ் காப்பு அணியின் தலைவர் திரு. குமரன் அவர்களின் பெயரை உங்கள் கட்சி பெயரில் இனியும் இணைத்து பிரச்சாரம் செய்தால் நாங்கள் உங்கள் (கட்சியில் இருக்கறதே நீங்க ஒருத்தர் மட்டும்தானே) மீது கேஸ் போடுவோம்னு சொல்லிக்கறேன்.
பொன்ஸு,
உங்களுக்கும் நாங்க போடப்போற கேஸ்ல பங்குவேணுமா? யோசிச்சு பதில் சொல்லுங்க :))
கும்ஸ்,
ஏன் டென்ஷன் ஆகறீங்க? இப்ப புரியுதா? சும்மா உங்க பெயர யூஸ் பண்ணி பணம் பண்ண முயற்சி செய்யறாங்க. இனிமே டிஷர்ட், டபரா டம்ளர், வாட்ச், போஸ்டர் எதுலயும் உங்க பேர பயன்படுத்தக்கூடாதுன்னு அறிக்கை விடுங்க.
பெருசு,
வாங்க.. நீங்க கட்சியில இருக்கீங்கன்னு கூட பாவம் உங்க வ.வா.ச வுக்கு தெரியல. இதுல உங்க தோள நீங்களே தட்டிகிட்டு புறப்பட்டா எங்களுக்கு என்னப்பா வந்தது?
கால்கரி சிவா,
நன்றி.
இராதா ஸ்ரீராம்,
உபவாசம் பத்தியெல்லாம் சொல்லலியே சுவாமிஜி. நாளை நாளன்னிக்கு வந்துடுவார் தமிழ்நாட்டுக்கு. கேட்டுட்டு சொல்றேன். அதுவரைக்கும் பக்தகோடிகள்லாம் சப்ளாக் கட்டையெல்லாம் தொலைச்சிடாம பாத்துக்கங்க.
பமக கட்சிக் கொடி பற்றிய விரிவான பதிவு விரைவில். பொறுமை.
//'தார் டின்னாய, சிபிஐகேஸாய, ஜெயில்பேஸாய, பெயில்கேஸாய, சொத்துசொத்தாய, நகைக்கடையாய, பண்ணைவாயாயானாம் ஹேண்ட்சைல்டாய நாசகாய நம ஓம்:'//
எப்படிங்க இப்படியெல்லாம்?! எப்படி உங்களால மட்டும் முடியுது?! :)
ஜெயஸ்ரீ,
நானும் சுவாமிஜியிடம் கேட்டேன். சுவாஹாவும் சொல்லலாமாம். சொன்னா கண்டிப்பா யாகமெல்லாம் செய்யணும். எல்லாராலும் முடியாதேன்னு சொல்லிதான் சுலோகத்தை மாத்திக்கொடுத்திருக்காராம். யாரால்ல முடியுதோ அவங்க ஹோமம் பண்ணுங்கன்னு சொல்லிருக்காரு. விரிவா ரெண்டு மூணு நாள்ல இன்னும் வந்து விளக்கம் சொல்றேன்னு சொல்லிருக்காரு.
செல்வனார்,
//.மாற்றுகட்சி ஊடகத்தில் என் அறிக்கையை தணிக்கை செய்து வெளியிட்டு சதி செய்து விட்டனர//
மீண்டும் மீண்டும் அவதூறு. ஒரே நேர்மையான நாணயமான ஊடகம் எங்களுடையது மட்டும்தான். இந்த பாயிண்டையும் உங்கள் மீது போடப்போகும் மானநஷ்ட வழக்கில் ஏன் சேர்க்க கூடாது என்று எங்கள் பொதுக்குழு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
லதா,
நீங்களே விபரீதமா பதம் பிரிச்சு பாக்கறதுக்கெல்லாம் சுவாமிஜி பொறுப்பெடுத்துக்க முடியுமா? அவர்தான் தெளிவா சொல்லிருக்காரே. :))
பெனாத்தலார்,
பினாத்தலானந்தர் தினமூடி பேட்டியெடுக்க டேட்ஸ் கொடுக்க முடியலேன்னு சொல்லிட்டாராம். அவர் சொல்ற விளக்கமும் நல்லாதான் இருக்கும்.
கிறுக்கு ஸ்மிருதியில் இருந்து அழகான பொருள்பதிந்த எடுத்துக்காட்டு கொடுத்திருக்கார். அவர் ஞானமே ஞானம்.
எப்படியும் துஷ்ட வ.வா.ச வுக்கு வசவாம் தான். :)
//....டேட்ஸ் கொடுக்க முடியலேன்னு...// LION டேட்ஸா இல்ல ANIL டேட்ஸா?
கொஞ்சம் தேளிவா சொல்ல சொல்லுங்க அப்ப தான கலெக்ஷன் பண்ண வசதியா இருக்கும்.
:-))
மக்கா ஆமா இன்னாதிது? 'குஜிலி'ன்னா இன்னானு தெரியும் இதென்ன புச்சா 'ஆனந்தா?'
இப்டி ஆனந்தா ஆகாவளினந்தாகிட்டேல்லாம் பேட்டிய வாங்கிபோட்டு அப்ளாஸ் வாங்கிடலாம்னு நெனப்பா? இந்த 'ஆனந்தா' என்ன சொல்றாருன்னு ஆருக்காச்சும் புரிங்சுச்சாப்பா? இன்னா சொல்ல வாராரு இந்தப்பெருசு? ம்ம்ம்ம்ம்
அல்லாருக்கும் புரியரமாதிரி பேசச் சொல்லுங்கோன்னேன்.
நமக்குத்தெரிஞ்சதெல்லாம் ஒண்ணே ஒண்ணுதான் அதுதான்
ஸ்வாகா !!!!
இராகவன்,
குஜிலிக்கு மூடு வந்தால் இந்த மாதிரி தத்துவங்கள் வந்து விழறது தெரிஞ்ச விஷயம் தானே. நீங்கள் சொன்ன பாட்டை நான் மறந்துவிட்டேன். நினைவூட்டியதற்கு நன்றி.
தேர்தல் நேரத்து உபவாசங்கள் பத்தி ஏற்கனவே இராதா கேட்டுருக்காங்க. இன்னும் ரெண்டு மூணு நாள்ல விரிவா பேட்டி கொடுக்கறேன்னு சொல்லிருக்காரு குஜிலி. அதுக்குள்ள டவுட் வந்தா உங்கள கேக்கச் சொன்னார். நீங்களும் சொல்லிட்டீங்க.
ஜிராந்தையார் சொன்னது பத்தி என் கைவசம் புத்தகம் எதுவுமில்லை. உங்க கிட்ட இருக்குமே. அதுலேர்ந்து எடுத்து இன்னும் கொஞ்சம் இங்க போட்டீங்கன்னா, படிச்சுட்டு போற மக்களுக்கு புண்ணியமா போகும்.
இளவஞ்சி,
வாங்க வாங்க.
சிறுகதை, கவிதை, கட்டுரை எழுதற சிற்றிலக்கியவாதி அணிக்கு இணைத்தலைவர் போஸ்ட் காலியாருக்கு. வந்து பமக ஜோதில ஐக்கியமாகிக்கங்களேன். அப்படியே வடகர்நாடக கொ.ப.சே பதவியும் உங்களுக்காகவே காத்திருக்கு.
விண்ணப்ப படிவம் அனுப்பறேன். பூர்த்தி பண்ணி அனுப்பிச்சிட்டீங்கன்னா, இந்த தேர்தல்லேயே நின்னுடலாம்.
நன்மனம்,
உங்களுக்கு என்ன டேட்ஸ் வேணுமோ அத சப்ளை பண்ண பமக சார்புல குஜிலி ரெடியா இருக்காரு. வந்து சேந்துட்டீங்கன்னா, கலெக்ஷனுக்காக அலைய வேணாம். வீடு தேடி வந்து கொடுத்துட்டு போயிடுவோம்.
ஜொள்ளுப்பாண்டி,
இப்படி அப்பாவிப் பாண்டியா இருக்கீங்களே?
எந்த சுவாமியாவது பேசறது புரியுமா? புரிஞ்சா அப்புறம் அவங்க சுவாமின்னு சொல்லிக்கத்தான் முடியுமா?
//சிறுகதை, கவிதை, கட்டுரை எழுதற சிற்றிலக்கியவாதி அணிக்கு இணைத்தலைவர் போஸ்ட் காலியாருக்கு// "சிற்றிலக்கிய" + "இணைத்தலைவர்"! ஏன்? அடிப்படை உறுப்பினர்னு நேரடியா சொல்லவேண்டியதுதானே?!
20 கோடி என்ன? 40 கோடி கொடுத்தாலும் அணிமாற மாட்டான் இந்த இலக்கியகபோதி இளவஞ்சி என்பதினை இங்கே ஆணித்தரமாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்!!!
(வ.வா.ச மக்களே!! என்னோட ரேட்டு காதுல விழுதா?! சீக்கிரம் முடிவை சொல்லுங்க!!? )
ஒரு முக்கிய அறிவிப்பு
பமக தொண்டர்களே! என் சிங்கங்களே! உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!
வ.வா.சவின் முக்கிய நிறுவனர்-தலைவர்களில் ஒருவரான பாசமிகு அண்ணன் தேவ் அவர்கள் இன்றுமுதல் நம் பமக வில் இணைகிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். ஸ்விஸ்ஸாபுரத்தில் நேற்று மாலை ஸ்ரீலஸ்ரீ குஜிலியானந்தாவைச் சந்தித்து இம்முடிவை தெரிவித்து ஆசீர்வாதம் பெற்றுச் சென்றுள்ளார்.
செயல்வீரர், கொள்கை காவலன் தேவ் அவர்களை பமக சார்பில் தமிழ்நாட்டின் கொள்கை பரப்புச் செயலாளராகவும், பெல்ஜிய நாட்டின் ஜனாதிபதியாகவும், கட்சியின் முக்கிய பிரச்சார பீரங்கியாகவும் நம் தலைவர் பாசத்துடன் நியமித்துள்ளார்.
திரு. தேவ் அவர்களை பமகவின் பலக்கோடி தொண்டர்கள் சார்பாகவும் பொதுக்குழு சார்பாகவும் வருக வருக என்று வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
திரு. தேவ் அவர்கள் அதிகாரப்பூர்வமாக இதுபற்றி பின்னர் அறிக்கை வெளியிடுவார்.
என்ன இளவஞ்சி இப்படி சொல்லிட்டிங்க.. உங்களுக்கு ஐம்பது கோடி கொடுத்து கர்னாடகா வட்டத் தலைவர் பதவியும் இங்க வ.வா.சவில் உக்காந்து கிட்டு இருக்கு..
அதோட, இந்த வாரம் உங்களை ஸ்பெசலா கவனிக்கச் சொல்லி பொன்னுசாமியிலயும் சொல்லி வச்சிருக்கோம்.. அழைத்துப் போக எங்க தலையே வருவாரு... :)
இளவஞ்சி,
அவங்க அம்பது கோடி கொடுக்கப் போறாங்களா? இதெல்லாம் நம்பி ஏமாந்துடாதீங்க. பைனான்ஸ் கம்பனி மாதிரி ஆளுங்க அவங்க. பொன்ஸக்கா ஆர்வத்துல ஏதாவது சொல்வாங்க. அவங்க கட்சிக்கு சொந்தமா சைட் ஆரமிக்க கூட காசில்லை. ப்ரீயா ப்ளாக்ஸ்பாட்டில ஆரமிச்சுருக்காங்க. அப்புறம் நம்ம பதிவுல வர பின்னூட்டங்கள படிச்சா அவங்க டப்பா கம்பூட்டர் க்ராஷ் ஆயிடுதாம். இதான் நிலைமை அங்க. நாம அப்படியா?
பணம் கொடுத்து உங்களைச் சேர்க்க வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை. (பொதுவுல கேட்டா இப்படி தான் சொல்வோம்)
சிற்றிலக்கியவாதி அணி இணைத்தலைவர், வடகர்நாடக கொ.ப.சே அப்புறம் லக்ஸெம்பர்க்கின் பிரதமரா நியமிக்க காத்திருக்கிறோம். நல்ல முடிவை சீக்கிரமா எடுங்க. (ரேட் மேட்டர் தனிமடலில்) பமகவின் வேட்பாளர் பட்டியல் நாளையோ நாளை மறுதினமோ குஜிலியானந்தாவிடம் ஆசிபெற்றுவிட்டு வெளியிடப்படும். அதுக்குள்ள வரவேண்டிய இடத்துக்கு வந்து சேர்ந்துடுங்க.
பாருங்க, அவங்க கட்சிப் பொதுச் செயலாளர் தேவே நம்ம பக்கம் வந்துட்டாரு. இன்னும் பாக்கியிருக்கற அஞ்சு பேரோட சேர்ந்து அறுவரானோம்னு சொல்லிக்க போறீங்களா? இல்ல, பமகவுல சேர்ந்து, நீங்களும் 'வளந்து' கட்சியையும் வளக்க போறீங்களா?
பொன்ஸு தங்கச்சி,
உங்க கட்சி பொதுச்செயலாளர் வந்துட்டாரு. நீங்களும் வந்து நம்ம ஜோதில ஐக்கியமாயிடுங்க சீக்கிரம். இல்லேன்னா போற ரேட்ல தமிழக பூரா நீங்க ஒரே ஒரு வேட்பாளர் தான் நிக்கறா மாதிரி இருக்கும். :))
Post a Comment