215. தங்கர் பச்சானின் நாரிப் போன சிஸம்

சன் டி.வி காமெடி டைம் நிகழ்ச்சி இன்னிக்கு. தங்கர் பச்சான் சிறப்பு விருந்தினர். சிட்டிபாபு கொஞ்சம் ஒதுங்கியே நின்று கொண்டிருந்தார். அது தங்கரிடம் இருக்கும் பயம் காரணமாகவா அல்லது வாகாக பக்கத்திலிருக்கும் பெண்ணிடம் உரசவா என்று சந்தேகம் வரும் அளவுக்கு ஒதுங்கி இருந்ததாலேயே இதுகூட இப்பதிவில் ஒரு வரிக்காக ஒதுக்கீட்டை பெற்றிருக்கிறது என்று நீங்கள் புரிந்துகொள்ளலாம்.

முதலில் பேசிய தங்கர் தான் லட்ச லட்சமாய் சம்பாதிக்க வாய்ப்புகள் இருந்தும் சினிமா என்னும் மீடியத்தின் ஆளுமையையும் அதை சினிமாக்காரர்கள் எப்படி பொறுப்பில்லாமல் கையாளுகிறார்கள் என்பதையும் கண்டு வெந்து வெதும்பி நொந்து நொறுங்கி சினிமாவையே redefine செய்து தன் கரத்தில் நிலைநிறுத்த இத்துறையில் இறங்கி சமூக சேவை செய்து வருவதாக சொல்லிக்கொண்டிருந்தார்.

காமெடி டைம் சுயசொறிதல் டைமாக (நன்றி: மோகன்) மாறிக்கொண்டிருப்பதை உணர்ந்த சிட்டி வாரந்தோறும் வரும் லட்சோப லட்சம் கடிதங்களிலிருந்து ஒன்றை பொறுக்கி வழக்கமான கெக்கே பிக்கேவை விடுத்து நேரடியாக காமெடி டைம் சிட்டிபாபு என்றவுடன் பளிச்சென்று அடையாளம் கண்டுகொண்டார் இரும்புலியூரைச் சேர்ந்த நேயர்.

சிட்டி சொ.செ.சூ வாங்க ஆசைப்பட்டோ என்னவோ நேயரிடம்..."இன்னிக்கு நமக்கு சிறப்பு விருந்தினர் இருக்காரு.. அவர் யாருன்னு தெரியுமா?

மறுமுனை: தெரியலையே சார்..

சிட்டி: பள்ளிக்கூடம் படம் பாத்தீங்களா..

மறுமுனை: பாத்தேனே

சிட்டி: அதுல வர்ற அம்மாடி கேரக்டர் பண்ணவரத் தெரியுமா

ம.மு: தெரியலையே...

சிட்டி: சரி அந்தப் படத்தோட டைரக்டரத் தெரியுமா?

ம.மு: நினைவுக்கு வரல சார்

(இப்போது தங்கரின் முகத்தை பார்த்திருக்க வேண்டும்... :))

சிட்டி: சரி.. அழகி படமாவது பாத்தீங்களா?

ம.மு: பார்த்தேனே சார். பார்த்தீபன் நடிச்ச படம்.

சிட்டி: அந்தப்படத்தோட டைரக்டரத் தெரியுமா?

ம.மு: உஹும்.. தெரியல சார்...

சிட்டி: நிலைமை காமெடியாக மாறுவதை புரிந்து உஷாராகி கேள்விகளை மேலும் கேட்காமல் 'தங்கர் பச்சான் சார் வந்துருக்காரு. அவரத்தெரியுமா?'

ம.மு: ஓ... தெரியும் சார்.. ஆனா முன்னால பேரு மறந்துருச்சு..

சிட்டி: சரி.. இப்ப அவருகிட்ட பேசுங்க..

பேச ஆரம்பித்த தங்கர் கேட்ட கேள்விகளையும் பாத்துருவோம். என்ன செய்ய எனக்கு ரொம்ப போரடிக்குது. டைப்படிக்கணும்னு ஆசையாவும் இருக்கு.

அதோட கொஞ்சம் அதிகமாகவே பிரசங்கிக்கொண்டிருந்த நார்ஸிஸ்ஸம் நாரிப்போன ஸிஸம் ஆனதில் பொங்கிக்கொண்டிருந்த தங்கர் பேசியதுதான் காலத்தின் கொடுமை. அதுக்கு அந்த நேயர் என்ன காரணத்தினாலோ பதிலே சொல்லாம விட்டுட்டாரு.

தங்கர்: வணக்கம்..

ம.மு: வணக்கம் சார். சாரி. சட்டுனு பேர் நினைவுக்கு வரலை..

தங்கர்: என்ன பண்ணிகிட்டிருக்கீங்க?

ம.மு: (என்ன சொன்னார்னு எனக்கு நினைவில்லை)

தங்கர்: சரி. என்ன படிச்சிருக்கீங்க?

ம.மு: நான் டிகிரி படிச்சிருக்கேன் சார்

தங்கர்: டிகிரி படிச்சிருக்கேன்னு சொல்றீங்க. ஆனா ஒரு படத்தோட டைரக்டர் யாருன்னு தெரியலேன்னு சொல்றீங்களே..

ம.மு: மறந்துருச்சு சார்.

தங்கர்: ஒரு படத்துல நடிக்கறவங்க மூஞ்சியே பாத்துகிட்டிருந்தா எப்படி? அதுக்கு காரணகர்த்தா டைரக்டர் தானே?

ம.மு: ???????

தங்கர்: இது உங்களுக்கே வெட்கமா இல்லியா?

ம.மு: ??????? (சொல்லாமல் விட்டது WTF?)

காமெடி டைம் சீரியஸ் டைம் ஆகறத உணர்ந்த சிட்டி: இதோ உங்களுக்கான காமெடி காட்சிய பார்த்து எஞ்சாய் பண்ணுங்க....

--------------------------
தங்கருக்கு கோவம் வந்ததுக்கு காரணம் தான் யாருன்னு தன் படத்தோட பேர வச்சு நேயரால கண்டுபிடிக்க முடியாம போனதுனாலயாம். அதோட தன் பேர விட்டுட்டு ஹீரோ பேரப் போய் ஞாபகம் வச்சுத் தொலச்சிருந்தது இன்னமும் வெறுப்பேத்திருச்சு.

--------------------------
இதுக்கு சம்பந்தம் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். வேறொரு படத்தோட டயலாக்..

பாண்டி: ஜானகி.. கொஞ்சம் மரியாதையா பேசு.. சார் தான் டைரட்டரு..

ஜானகி: என்ன பெரிய டைரக்டரு? இந்தாளு என்ன அசோக் லேலண்டுக்கு டைரக்டரா இல்ல டிவிஎஸ்ஸோட டைரக்டரா...? வெறும் சினிமா டைரக்டர் தானே?

பாண்டி & டைரக்டர்: ???????

படம்: அவ்வை சண்முகி
டைரக்டர்: கே.எஸ்.இரவிக்குமாராக இருக்கலாம்
காட்சியில் நடித்த நடிகர்கள்: கமல்ஹாசன், மீனா, ரமேஷ் கிருஷ்ணா, டான்ஸ் மாஸ்டர் ரகுராம்
---------------------------

டிஸ்கி:
1. இப்படி கேனத்தனமா நேயர் மேல தங்கர் கோவப்பட்டது மட்டுமே இப்பதிவிற்கான காரணம்.
2. தங்கர் பச்சானின் படங்களை எதுவும் நான் இதுவரை பார்த்ததில்லை.
3. சன் டிவி. காமெடி டைமெல்லாம் பாக்குற கேஸானு கேக்கறவங்களுக்கு பதில் சொல்லாமல் என் தலையை குனிந்து கொள்கிறேன்.

29 Comments:

  1. இலவசக்கொத்தனார் said...

    ஆஹா!!

    முன்னமே இந்தாள் பேட்டி ஒண்ணைப் பார்த்திருக்கேன். கொஞ்சம் தலை சுத்திப் போச்சு. சரி படைப்பாளிக்கே உரிய ஈகோ அப்படின்னு நினைச்சேன். இது ரொம்ப ஓவரால்ல இருக்கு.

    சரி, இந்த காமெடி டைம் பார்க்கும் போது நினைப்பேன் இப்படி எல்லாம் ப்ரோகிராம் வைக்கறாங்களே, யாருதான் பார்ப்பாங்கன்னு - இப்போ புரியுது!! :))

    //டைரக்டர்: கே.எஸ்.இரவிக்குமாராக இருக்கலாம்//

    LOL!!!


  2. ILA (a) இளா said...

    ஹிஹி, இதெல்லாம் ஜகஜம். யாரு குலுங்கிறாங்கிறதுதான் முக்கியம். யாரு குலுக்கிறாங்கன்னு முக்கியம் இல்லே. (இந்த பின்னூட்டத்துக்கு டிஸ்கி எல்லாம் இல்லே)


  3. துளசி கோபால் said...

    இவுங்கெல்லாம் யாரு? ரஷ்யாவுக்கு வந்துருக்காங்களா?


  4. வவ்வால் said...

    ஆமாம் காமெடி டைம்னா என்ன,எந்த டி.வில போடுறாங்க? அடுத்த வாரமும் டிங்கர் பாண்டியன் வருவாரா?


  5. G.Ragavan said...

    :) தங்கர் இதைக் கொஞ்சம் சாதாரணமா எடுத்திருக்கனும். எல்லாருக்கும் எல்லாம் தெரியுமா? இனிமே டிகிரி படிச்சவங்கள்ளாம் படத்தோட டைரக்டர் யார்னு தெரிஞ்சுட்டுதான் படம் பார்க்கனும். ரெண்டு டிகிரின்னா கதாசிரியர் யார்னும் தெரிஞ்சிருக்கனும். டிப்ளமோன்னா இசையமைப்பாளர் வரைக்கும் தெரிஞ்சாப் போதும். எஸ்.எஸ்.எல்.சீன்னா நடிகை மட்டும் தெரிஞ்சாப் போதும்.


  6. Boston Bala said...

    ---காமெடி டைம் சுயசொறிதல் டைமாக---

    நீங்க கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியைத்தானே சொல்றீங்க?


  7. செல்வன் said...

    காமடி டைம் நிகழ்ச்சியின் டிரக்டர் யார்ன்னு தங்கர் கிட்ட அந்த நேயர் கேட்டிருந்தா தங்கர் பேய் முழி முழிச்சிருப்பார்:))


  8. Anonymous said...

    This alone can explain Thangar's all "comments" about purifying tamil cine industry and his bashings of actors...Thangar is just trying to get attention by bashing actors..very bad mind set of a "real Tamilan"


  9. Anandha Loganathan said...

    //3. சன் டிவி. காமெடி டைமெல்லாம் பாக்குற கேஸானு கேக்கறவங்களுக்கு பதில் சொல்லாமல் என் தலையை குனிந்து கொள்கிறேன்.
    //

    முன்னாடியே சரண்டர் ஆகிட்டீங்க. ஆனாலும் நீங்க மன தைரியத்தோட அந்த நிகழ்ச்சியை பாத்துறீக்கீங்க.
    அந்த நேயர் எவ்வளவு Embarass
    ஆகியிருபார்.


  10. T.V.ராதாகிருஷ்ணன் said...

    thangarpachchanukku eppavume than oru arivujeevi nnu ninaippu.Idhukkum mele ninaichchundu irundhavanga pona idam theriyalai. gnapagam irukkattum


  11. பினாத்தல் சுரேஷ் said...

    கொஞ்சம் லேட்டா வந்தா எல்லா காமடி பின்னூட்டத்தையும் மத்தவங்க போட்டுடறாங்கப்பா! நான் சொல்ல வந்தவை:

    1. கே எஸ் ரவிக்குமாராக இருக்கலாம் : :-))))))))))))))) நீங்க டிகிரி முடிச்சீங்களா இல்லையா?

    2. எஸ்ஸெல்சின்னா நடிகை பேர் மட்டும் தெரிஞ்சா போதுமா?

    3. காமெடி டைம் டைரக்டர் பேர் என்ன?

    இந்த ஆளுக்கு கொஞ்சம் அந்த சிஸம் அதிகம்தான்! தன் படம் ஓடினாதான் தமிழன் படம் ஓடினதா மதிப்பாராம்!


  12. rv said...

    கொத்ஸு,
    படைப்பாளிக்கு இருக்குற ஈகோவ சக படைப்பாளி கிட்ட காட்டட்டும்.. யாரு வேண்டாம்கிறது? நாமளும் வாரமலர் வாங்கி படிச்சுட்டு போவோம்.

    ஆனா எதேச்சையா போன் செஞ்ச ஆசாமிகிட்ட காட்ட வேண்டிய அவசியம் என்ன?

    யோவ்... நான் பார்க்கிறேனோ இல்லியோ சன் டிவி ப்ரோக்ராம் கைட் பெனாத்தலார் கண்டிப்பாக பார்த்திருப்பார்னு எனக்குத் தெரியும் :))


  13. rv said...

    இளா,
    //யாரு குலுங்கிறாங்கிறதுதான் முக்கியம். யாரு குலுக்கிறாங்கன்னு முக்கியம் இல்லே. //

    ஆஹா.. என்ன ஒரு தத்துவம்.. பின்றீரய்யா..


  14. rv said...

    அக்கா,
    தமிழ்நாட்டுல இருக்கறவங்க கூட கேள்விபடாத படமெல்லாத்தையும் கூட டிவிடில பாத்து விமர்சனம் போடற நீங்களா இவங்கள்லாம் யாருன்னு கேட்கிறது?


  15. rv said...

    வவ்வால்,
    ஆனாலும் இது ஓவர். வாழ்க்கையெல்லாம் வீணா போக்கிக்கொண்டிருக்கீறீர்கள்.

    அர்ச்சனா வந்துகொண்டிருந்தபோது கூடவா சன் டிவி காமெடி டைம் பார்த்ததில்லை?


  16. rv said...

    ஜிரா,
    ஆமா..

    எனக்கென்னவோ பெரும்பாலான படங்களின் இயக்குநர்களோட பேரை மக்கள் மறக்கறதுதான் அவங்களுக்கு நல்லதுன்னு நினைக்கிறேன். :))


  17. rv said...

    பாபா,
    நம்ம ஊர் டிவியில எத சு.சொல சேர்க்கறது? எத விடறது?

    இப்ப கலக்க போவது விஜயில் இல்ல வருது? சன்ல வர்றது அசத்தப்போவது யாரு இல்லியா? எனக்கே குயப்பமா இருக்கு.. :)


  18. rv said...

    செல்வன்,
    //காமடி டைம் நிகழ்ச்சியின் டிரக்டர் யார்ன்ன//
    ஹி ஹி... கேட்டிருக்கலாம்.

    என்ன சொல்லிருப்பாரோ...


  19. rv said...

    அனானி,
    //This alone can explain Thangar's all "comments" about purifying tamil cine industry and his bashings of actors...Thangar is just trying to get attention by bashing actors//
    கண்டிப்பா..

    ஆனா தங்கர் நம்மள மாதிரி சாதா தமிழனில்லை. தான் மட்டுமே "சாதனைத்தமிழன்" என்று சொல்லித் திரிபவர். ஏதோ, நல்லாருந்தாச் சரி.


  20. rv said...

    ஆனந்தா லோகநாதன்,
    ஆமா. இப்படி மதிச்சு கூப்பிடற ஆளப் போய் அவமானப்படுத்தனுமா..

    எனக்கு ரொம்ப நாளா ஆச உண்டு. பெப்ஸி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சிக்கு போன் பண்ணி, அவங்க "ஹலோ! பெப்ஸி உங்கள் சாய்ஸ், நான் உமா பேஸறேனு" சொன்னவுடன "சாரிங்க, இராங் நம்பர்"னு சொல்லி கட் செஞ்சிடனும். என்னிக்கு கொடுத்து வச்சிருக்கோ தெரியல.


  21. rv said...

    டி. வி. இராதாகிருஷ்ணன்,
    //Idhukkum mele ninaichchundu irundhavanga pona idam theriyalai//

    அப்படியெல்லாம் கத்துக்கற ஆளா இருந்தா இந்த 'ஆடற' பிரச்சனையே வராதே..

    ஆனா இவருன்னு இல்ல. இன்னும் நிறைய பேரு இப்படித்தான் திரியிறோம்.


  22. rv said...

    பெனாத்தலார்,
    1. தங்கரின் பார்வைவில் நான் முடிக்கவில்லை. அல்லது முடிச்சும் முழுச்சவிக்கியாக உள்ளேன்.

    2. அஞ்சாம் க்ளாஸுக்குரிய மேட்டர் அது. படத்த பார்த்த நடிகை பேரு சொல்லனும். பத்தாம் க்ளாசுக்கு.. நான் ஓண்ணும் சொல்லப்போறதில்லை. >:[

    3. சத்தியமா எனக்குத் தெரியாதுங்க.

    இது எப்படியின்னா, நம்ம பதிவ படிச்சு பின்னூட்டம் போட்டாதான் அவன் அறிவாளினு சொல்லிக்கிறா மாதிரி! :P


  23. ramachandranusha(உஷா) said...

    ராமநாதா, எனக்கு கூட பெப்சி உமாவிடம் ஏங்க நீங்க இப்படி ஓவரா எண்ணை வழியிற மேக்கப் போட்டுக்கிறீங்க, ஏன் அப்ப அப்ப ஹி ஹின்னு சிரிக்கிறீங்கன்னு கேட்கணும்? ஆனா இப்படி வில்லங்கமா கேள்வி வராமையா இருக்கும்? அதை எல்லாம் கட் செஞ்சிடுவாங்க.


  24. rv said...

    அக்கா,
    //ஏன் அப்ப அப்ப ஹி ஹின்னு சிரிக்கிறீங்கன்னு கேட்கணும்? ஆனா இப்படி வில்லங்கமா கேள்வி வராமையா இருக்கும்? அதை எல்லாம் கட் செஞ்சிடுவாங்க.//
    அப்படித்தான் செய்வாங்களா இருக்கும்.

    நம்மூர்ல குதர்க்கம் பேச ஆளுங்களா குறைச்சல்??? :P


  25. cheena (சீனா) said...

    தங்கர் பச்சானுக்கு இதுவே வேலையாப் போச்சு - விட்டுத் தள்ளூங்க


  26. seethag said...

    thankar has narcissim and many of our directors do..cannt justify it though
    i am not sure if it is 'kalaigan' behaviour or a learned behaviour from other western directors...


  27. Unknown said...

    //வழக்கமான கெக்கே பிக்கே...
    //காமெடி டைம்...
    //கேனத்தனமா..
    இப்படி என் உறவினரைப் பற்றிப் போட்டதற்கு என் முழு எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்கிறேன்..
    பதிவு பத்தி என்ன சொல்றது... , சன் டி.வி. பாக்கறதில்லனு ஒரு வெறி அவ்வளவுதான்...


  28. Unknown said...

    I really liked ur post, thanks for sharing. Keep writing. I discovered a good site for bloggers check out this www.blogadda.com, you can submit your blog there, you can get more auidence.


  29. கருப்பன் (A) Sundar said...

    அப்ப நீங்க TR இடம்பெற்ற காமடிடைமையும் பார்த்திருக்கனுமே???!!!


 

வார்ப்புரு | தமிழாக்கம்