போன தடவை பிரச்சனை என்னன்னு பார்த்தோம். மேலோட்டமா வெறும் விலைவாசி சண்டைங்கற மாதிரி தெரிஞ்சாலும் இதுக்கு பின்னாடி இருக்கற அரசியலைக் கொஞ்சம் இங்கே பார்ப்போம்.
இதுக்கும் சோவியத் யூனியன்லேர்ந்துதான் ஆரம்பிக்கணும். சோவியத் யூனியன் இருந்தவரை அதன் துணைக்கோள்களான நாடுகளுக்கு மாஸ்கோ தான் எல்லா பிரச்சனைகளிலும் ultimate authority. ஆனால் சோ.யூ வீழ்ந்தபின் ரஷ்யா தன்னைத்தானே சோ.யூவின் ஏகோபத்திய வாரிசாக நினைத்து பிரிந்து சென்ற நாடுகளை CIS என்ற புதுப்பெயரில் ஒருங்கிணைத்து தன் கட்டுப்பாட்டிற்குள்ளேயே வைத்துக்கொள்ள விரும்பியது. ஆனால், மேற்கத்திய நிதி பெருமளவில் புனர்நிர்மாணத்திற்கு தேவைப்பட்டதால் பல கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மேற்கு பக்கம் சாயத்தொடங்கின.
ரஷ்யாவின் தயவு அவர்களுக்குத் தேவையாய் இருக்கவில்லை. மேலும், பல முன்னாள் சோவியத் நாடுகள் உதா: ஹங்கேரி, போலந்து, செக் ரிபப்ளிக் போன்றவை தங்களை proper ஐரோப்பியர்கள் என்றும், மாஸ்கோவின் சதியால் ஐரோப்பிய கூட்டமைப்பில் இத்தனை ஆண்டுகள் புறக்கணிக்கப்பட்டுவிட்டதாகவும் கருதத்தொடங்கின. எஸ்டோனியா, லாத்வியா, ஜியார்ஜியா போன்ற நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையத்துடித்தன. அதற்கு விலையாய் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுடனான தங்களின் நெருங்கிய படை மற்றும் பொருளாதாரத்தொடர்பை துண்டித்து, சோ.யூ ஜென்மப் பகையான நாட்டோவில் தங்களை இணைத்துக்கொள்ளவும் ஆரம்பித்தன.
இதில் ரஷ்யாவின் நிலைமை ஆற்றாமையே. சோ.யூவின் நேரடி வாரிசு என்று பிரகடனப்படுத்தியபின்னர், மேற்கோடு ஓவராக ஒட்டி உறவாட முடியாது. நிதிநிலைமை, படைபலம் எல்லாம் சீர்குலைந்து இருந்த முன்னாள் வல்லரசின் வாரிசுக்கு, வெந்தபுண்ணிலேயே வேலைப் பாய்ச்சுவதுபோல் முன்னாள் நட்புநாடுகள் பிரிந்துசென்றது ஆனது. அவர்களைத்தன் வழிக்குக் கொண்டுவர ஒரு ஆயுதம் கூட ரஷ்யாவின் கையில் இருக்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. ஆனால் அதை (அனைவருக்கும் தெரிந்திருந்தாலும்) பகிரங்கமாக ஒப்புக்கொள்வது சர்வதேச அளவில் மானப்பிரச்சனை. இந்த காலகட்டத்தில் வாய்மூடி மவுனியாய் வேடிக்கை மட்டுமே பார்க்கமுடிந்தது. இந்த நாடுகள் தன் கையை விட்டுப்போவதில் பொருளாதார இழப்பு பிரதானமானதில்லை. strategic காரணிகளே முக்கியமானவை.
க்யூபன் மிஸ்ஸைல் பிரச்சனையும் இதே போன்றதுதான். சோ.யூ மிஸ்ஸைல்களை தன் நாட்டில் அமைக்க அனுமதிப்பது க்யூபாவின் பிரத்தியேக உரிமை. ப்ரெஷ்னேவ் அமெரிக்காவை ஒருபோதும் தாக்க எண்ணவில்லை, மாறாக சர்வதேச அரங்கில் "பார்த்தாயா, உன் வீட்டு முற்றத்திலேயே என் ஆயுதங்களை குவித்திருக்கிறேன்" என்று அமெரிக்காவிற்கு அவமானத்தை உண்டாக்கவே செய்த முயற்சி அது. அதை தடுக்க நினைத்து வெற்றியும் பெற்ற அப்போதைய அமெரிக்க நிலைப்பாட்டிலேயே இப்போது ரஷ்யா இருக்கிறது. ஆனால் படைபலமும் பொருள்பலமும் இல்லாத நிலையில், அமெரிக்கா அன்று அவமானப்பட்டதைவிட இன்று பலமடங்கு அவமானப்பட்டிருக்கிறது. வல்லரசு நாடுகளுக்கென்று விசிலடிச்சான்குஞ்சு நாடுகள் எப்போதும் இருக்கும். அவை விட்டுப்போனதுதான் பிரச்சனையே. இந்த அவமானம் எப்படியெல்லாம் வடிவெடுக்கிறது என்பது சர்வதேச அளவில் ரஷ்யாவின் இன்றைய இமேஜை வைத்தே தெரிந்துகொள்ளலாம். லாத்வியா, ஜியார்ஜியா போன்ற 'பச்சா' நாடுகளெல்லாம் ரஷ்யா ஒரு பல்லிழந்த கிழப்புலி என்ற ரேஞ்சிற்கு மானத்தை வாங்கி ஐரோப்பிய அரசியல் செய்யும்போது முன்னாள் வல்லரசு என்ற வகையில் ஏற்படும் கோபமும், ஆற்றாமையும் புரிந்துகொள்ளக்கூடியவையே இல்லையா? படைபலம் குறைந்தது உண்மைதான். ஆனால் இன்றளவும் உலகத்தையே மொத்தமாக சிலபல முறைகள் அழிக்கவல்ல பலம் பொருந்திய நாடு, பொருளாதாரச் சீர்கேட்டில் சிக்கி இருப்பதால் குட்டி நாடுகள் எல்லாம் போங்கு செய்வதை எப்படி தடுக்கலாம் என்று விழிபிதுங்கிக் கொண்டிருக்கும்போது ஆபத்பாந்தவனாய் வந்திருக்கிறது காஸ்ப்ரோம்.
இப்போது உக்ரைன் இந்தப் பிரச்சனையில் சிக்கியிருப்பது மேற்சொன்ன அரசியலே காரணம். அதுவும் ரஷ்யா இவ்வளவு சர்வதேச பிரஷருக்கும் பின்னரும் விடாப்பிடியாக இருக்கிறதென்றால் அதற்கு மேற்கத்திய நாடுகள் உக்ரைனின் சென்ற தேசிய தேர்தலில் செய்த அரசியலே முழுமுதற்காரணம். அமெரிக்காவின் தயவில் நடத்தப்பட்ட 'ஆரஞ்சு புரட்சியே' இப்படியான கத்திமேல் நடப்பது போன்ற ஒருவிஷயத்தை இமேஜ் போனாலும் செய்வது என்று வரிந்துகட்டிக்கொண்டு ரஷ்யா செய்கிறது.
(தொடரும்)
ரொம்பவே நீட்டிமுழக்கி எழுதறேனோ? எனினும் ரொம்ப நாளா தொடர் போடாத குறையை இதுமூலமா தீர்த்துக்கொள்ளலாம்னு நினைக்கிறேன்.
Gazprom - 2
Subscribe to:
Post Comments (Atom)
11 Comments:
இராமநாதன். சோவியத் யூனியனுக்குப் பின் இந்தியா அமெரிக்கா பக்கம் அதிகம் சாயத் துவங்கியதே. அப்போது ரஷ்யாவின் ரியாக்சன் எப்படி இருந்தது?
க்யூபன் மிஸ்ஸைல் பிரச்னை நடந்தது குருச்சேவ் காலத்தில்தானே?
தொடர்ச்சியாக ரஷ்ய, முன்னாள் CIS நாடுகள், முக்கியமாக Central Asian Republics பற்றியெல்லாம் தொடர்ந்து எழுதுங்கள். நீங்கள் ஒருவர்தான் இந்த ஏரியாவில் இருந்து எழுதுகிறீர்கள் - "Resident Russia Expert"!
இன்று காலை செய்திகளில் மொத்தமாக எரிவாயு சப்ளையை வெட்டிவிட்டார்கள் என்று பார்த்தேன்... இந்தக் குளிர்காலத்தை உக்ரைன் மக்கள் எப்படியாவது சமாளிப்பார்கள் என்று வேண்டிக்கொள்வோம்... இயற்கை அழிவுகளுக்கு இடையில் செயற்கையாக மனிதர்கள் சண்டைபோட்டு உயிர்களைக் கொல்லாமல் இருந்தால் சரி!
சாதாரண ஜனங்கள் எப்படிக் குளிரைச் சமாளிப்பாங்கன்னு நானும் நினைச்சுக்கிட்டுத்தான் இருந்தேன்.
திரு.குமரன் அங்கு கம்யூனிச ஆட்சிக்காலத்தில் இருந்த மக்கள் வசதிக்கும் இன்றைய மக்கள் வசதிக்கும் உள்ள வித்தியாசம் என்ன? எந்த காலத்தில் மக்கள் வசதியாக சந்தோஷசமாக இருந்தனர். அதாவது இன்றா அல்லது கம்யூனிச ஆட்சிகாலத்திலா?
Kumaran,
Indo-US relations are inevitable which is why Russia wants to form its own axis with China and India. I feel after the break up, India has grown more closer to Russia than it ever was to USSR.
Badri,
Thanks for pointing out. Cuban Crisis happened during Khruschev's reign.
//"Resident Russia Expert"!
//
:)))
Yuschenko has stated that Ukraine has enough supplies to last well into spring. Moreover, Ukraine has also said it will take Russian Gas, meant for Europe, passing through its pipelines if its gas reserves run out. This Gazprom terms as theft whereas Ukraine considers as Transit Fees!
Gazprom is already alleging that Ukraine has stolen close to $25bln worth of Gas. Will write about that in the next post.
Ennar,
I had earlier written some posts on this issue.
Kindly see these.
1
2
I dont think we can simplify things that easily by asking if people were happy then or now. Depends on whom you are asking will be my opinion. :)
Regards
அடேங்கப்பா! எந்த நாட்டுக்குப் போனாலும் அரசியல் பிரமாதமா நடக்குது போல. நம்மூர்ல ஸ்டேட் விட்டு ஸ்டேட்டு அரசியல். அங்க நாடு விட்டு நாடு அரசியல். பேசாம நீங்க சொல்றதெல்லாம் கேட்டுக்கிட்டு மலைச்சுப் போய் உக்காந்திருக்கேன்.
இராகவன்,
//மலைச்சுப் போய் உக்காந்திருக்கேன்.
//
அப்படியே உட்கார்ந்திருந்தீங்கன்னா, ஒரு மாலை போட்டு சிலையாக்கி காசு பாத்துடுவாங்க. :))
நன்றி
இராமநாதன்,
எனக்கு ஒரு சந்தேகம்.. Gazprom உக்ரைனுக்குக் கொடுக்க மாட்டென் என்கிறது. சரி. ஆனால் அது வாயு அனுப்பும் குழாய் உக்ரெயினுக்கூடாகத்தானே போகுது? உக்ரெயினுக்கு அனுப்பாட்டி, அதுக்கு அப்பாலேயும் போகாதுதானே? இது உக்ரெயினுக்குச் சாதகமான விதயம்தானே..இல்லையா?
உக்ரெயினின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசமா பால்டிக் கடல்? அங்கே உக்ரெயினின் அனுமதி பெற்று வாடகை செலுத்தி ரஷ்யப் படைக்கலங்கள் உள்ளன என்று கேள்விப்பட்டிருக்கிறேன் - உண்மையா? இதுவும் உக்ரெயினுக்குச் சாதகமான ஒன்றாக இருக்கிறதே? விளக்கமாகச் சொல்லுவீங்களா?
நன்றி ஷ்ரேயா.
விவரமாக பதிவாகவே போட்டுவிடுகிறேன்.
நேற்றோடு பிரச்சனைக்கு ரஷ்யாவுக்கு சாதகமாக முடிந்துவிட்டது.
//விவரமாக பதிவாகவே போட்டுவிடுகிறேன//
still waiting.. :O(
Post a Comment