தமிழ்மணத்தில் நிலவும் பிரச்சனைக்கும் வள்ளலார் அழகா இந்தப் பாட்டில் ஒரு வரி சொல்லிருக்கார்.
ஆகவே எனக்கு மிகவும் திருவருட்பாக்களில் ஒன்றை குமரனின் பதிவில் சொன்னது போல, அருமையான கருத்துகளை உள்ளடக்கிய இப்பாடலை வலையேற்றியிருக்கிறேன்.
பாடியது: விஜய் சிவா
கேட்க
ஈஎன்று நான்ஒருவர் இடம்நின்று கேளாத
இயல்பும்என் னிடம்ஒருவர்ஈ
திடுஎன்ற போதவர்க் கிலைஎன்று சொல்லாமல்
இடுகின்ற திறமும்இறையாம்
நீஎன்றும் எனைவிடா நிலையும்நான் என்றும்உள
நினைவிடா நெறியும்அயலார்
நிதிஒன்றும் நயவாத மனமும்மெய்ந் நிலைநின்று
நெகிழாத திடமும்உலகில்
சீஎன்று பேய்என்று நாய்என்று பிறர் தமைத் (பிறத்தமைன்னும் அர்த்தம் கொள்ளலாமே!)
தீங்குசொல் லாத்தெளிவும்
திரம்ஒன்று வாய்மையும் தூய்மையும் தந்துநின்
திருவடிக் காளாக்குவாய்
தாய்ஒன்று சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே!
கேட்டுப்பாருங்கள்.
---
கேட்பதில் சிக்கல் ஏதும் இருப்பின், இப்பதிவின் இடப்பக்கத்தில் உள்ள கந்தர் அநுபூதிக்கான சுட்டிக்கு பக்கத்தில் இருக்கும் [?] கிளிக்கவும்.
128. பிறத்தமை தீங்குசொல்லாத் தெளிவும்!
Subscribe to:
Post Comments (Atom)
22 Comments:
Hi,
Thanks for the song link. Will download from home and listen.
Do you have more Vallalar songs (not in text format but in oli vadivam) on internet somewhere? if so, can you pleae give me the links (except vallalar.org)
Have you seen http://www.vallalar.org
Thanks and regards, PK Sivakumar
கேக்கிறதுல சிக்கல் இருந்தால் மன்னிக்கப் படலாம். படிக்கிறதுலயே சிக்கல் இருந்தால்? ஒன்னும் புரிய மாட்டேங்குதே இராம்ஸ். கொஞ்சம் விளக்கமும் சொல்லி எங்கள் ஆன்மிக விளக்கம் தரும் குழுவுக்குள்ள வந்து ஐக்கியம் ஆகியிருக்கலாமே. விளக்கம் சொல்லாட்டி உங்களுக்கு குழுவுல அனுமதியில்லை. :-)
இப்படிக்கு
அ.உ.ஆ.சூ.ஸ். :-)
ஞான்ஸ் பாட்டு போடறாரு, நீங்க பாட்டு போடறீங்க.
என்னயா நடக்குது. பாட்டுக்குப் பாட்டா ?
பிகேஎஸ்,
நன்றி.
வள்ளலார்.ஆர்க் சுட்டிக்கு நன்றி.
என்னிடம் இதுமட்டும் தான் இருந்தது. இணையத்தில் கிடைத்தால் தங்களுக்கு கண்டிப்பாக தெரிவிக்கிறேன்.
அ.உ.ஆ.சூப்பு நச்சத்திரமே,
இது உமக்கே டூ மச்சா தெரியல?
அ, ஆ எழுதுனாலும் வெளக்கம் கொடுங்கறீரு???
சின்னவரே,
இந்த வாரம் பாட்டு வார்ர்ர்ர்ர்ரம்..
நீரும் போடும்!
ச்சு..ச்சு...ச்சு...கொன்னுட்டீங்க ரஷிய வள்ளலாரே!
கைப்புள்ள,
கொன்னவங்க கோச்சுக்காம இருந்தா சரி!
நன்றி நன்றி நன்றி!
ஆஹா. சின்னவர் இங்க இருந்து தான் பாட்டு வாரத்தைத் தலைப்புல போட எடுத்தாரா? வாழ்க வளர்க.
அ.உ.ஆ.சூப்பு,
அது ஒரு "வழக்கமான" சின்னவர் பதிவு.
//வாழ்க வளர்க//
நன்னி.
அப்பாடா, எங்க நான் முன்னாடி எழுதுன பின்னூட்டத்துக்கும் பொருள் புரியல, அதனால விளக்கமா சொல்லுங்கன்னு சொல்லிடுவீங்களோனு பயந்துகிட்டிருந்தேன். :))
இராம்ஸ். சூப்பு ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்னா மாதிரி. அதனாலத் தான் இன்னொரு தடவை விளக்கம் சொல்லுங்கன்னு கேக்கலை. ஆனாலும் இந்தப் பாட்டுக்கு நீங்க விளக்கமும் சொல்லியிருந்தா இன்னும் நிறைய பேருக்குப் புரியும்; பின்னூட்டமும் பிச்சிக்கிட்டுப் போகும் :-)
இராம்ஸ். சூப்பு ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்னா மாதிரி. அதனாலத் தான் இன்னொரு தடவை விளக்கம் சொல்லுங்கன்னு கேக்கலை. ஆனாலும் இந்தப் பாட்டுக்கு நீங்க விளக்கமும் சொல்லியிருந்தா இன்னும் நிறைய பேருக்குப் புரியும்; பின்னூட்டமும் பிச்சிக்கிட்டுப் போகும் :-)
சூப்பு,
//. சூப்பு ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்னா மாதிரி//
ஒருவாரம் நட்சத்திரமானதுக்கே இந்த துள்ளலா? இதெல்லாம் நல்லதுக்கில்லை! :))
என்ன ராமநாதன் , இளவல்கள் எல்லாம் ஓவர் ஆன்மீகத்தில் இறங்கிட்டீங்க?
இராம்ஸ்...இந்த துள்ளல் எல்லாம் கூடப் பொறந்தது. நட்சத்திரம் ஆனதுனால இல்லை. :)
அப்புறம் எப்ப விளக்கம் சொல்லப் போறீங்க...எனக்கெல்லாம் புரியமாட்டேங்குதே...
அத்தை,
அதெல்லாம் ஒரு சீசன் தான். "எங்காத்துக்காரரும் கச்சேரிக்கு போறார்" கதை. :)))
சூப்பு,
//அப்புறம் எப்ப விளக்கம் சொல்லப் போறீங்க...எனக்கெல்லாம் புரியமாட்டேங்குதே... //
சரி சரி.. இன்னிக்கோ நாளைக்கோ குள்ள சொல்லிடறேன். :)
என்னென்ன வேண்டும்
//ஈஎன்று நான்ஒருவர் இடம்நின்று கேளாத இயல்பும்//
ஒரு பொருளை எனக்கு தானமாக கொடுங்கள் என்று நான் யாதொருவரிடமும் போய் "ஈ" (யாசகமாக கொடு) என்று மன்றாடக்கூடிய நிலையும், அப்படிக் கேட்பதையே என் இயல்பாக கொள்ளாமையும்
//என் னிடம்ஒருவர்ஈ திடுஎன்ற போதவர்க் கிலைஎன்று சொல்லாமல் இடுகின்ற திறமும்//
என்னிடம் ஒருவர் வந்து ஒரு பொருளை தானமாக தந்துதவுங்கள் என்று கேட்கும்போது அவர் கேட்பதை மறுக்காமல், கேட்கும் பொருளை அளித்துதுதவ வேண்டும் என்று நிலைதவறாத, உறுதியான கொள்கையும்
//இறையாம் நீஎன்றும் எனைவிடா நிலையும்//
யாவர்க்கும் இறைவனான நீ என்னை மறவாமல், எந்நேரமும் என்னருகில் இருந்து அருளக் கூடிய உன்னத நிலையும்
//நான் என்றும்உள நினைவிடா நெறியும்//
நான் ஒரு நொடிகூட உள்ளத்தால் உன்னை மறவாமல், எந்நேரமும் உன்னையே சிந்தையில் வைத்து போற்றிப் பாடக் கூடிய பக்தி நெறியும்
//அயலார் நிதிஒன்றும் நயவாத மனமும் //
அடுத்தவர்களின் பொருள் மீது பேராசைப் பட்டு, அதனை கவர வேண்டாம். அதனை திருட வேண்டும் என்ற எண்ணம் கூட வாராத நல்ல மனமும்
//மெய்ந் நிலைநின்று நெகிழாத திடமும்//
மெய்யானாதான உனை அடையும் வழியிலிருந்து என்றென்றும் பிறழாமல், மனம் தளராமல் இருக்கக்கூடிய உறுதியும்
//உலகில்சீஎன்று பேய்என்று நாய்என்று பிறர் தமைத் (பிறத்தமைன்னும் அர்த்தம் கொள்ளலாமே!)
தீங்குசொல் லாத்தெளிவும்//
அடுத்தவரை சீ, பேய், நாய் என்று இகழ்சொற்களால் தூற்றாமல் இருக்கக்கூடிய தெளிவான, அன்பான சிந்தனையும்
இதில் பிறத்தமை என்று அர்த்தம் கொண்டால் இன்னும் நன்றாக இருக்கும் என்பதென் கருத்து.
ஒருவரின் பிறப்பைக் கொண்டு அவரை வன்சொற்களால் இகழாத அன்பான சிந்தனையும்
//திரம்ஒன்று வாய்மையும் தூய்மையும் தந்துநின் திருவடிக் காளாக்குவாய்//
உறுதியாய் இவையெல்லாவற்றையும், அவற்றுடன் கூட முக்கியமாக சத்தியத்தையே என்றும் பேசும் தன்மையும், உடற்தூய்மையுடன் சேர்த்து மனத்தூய்மையும் எனக்கு அருளிச்செய்து, உன் அழகிய தெய்வீகத் திருவடிகளை அடையக் கூடிய தகுதியை உடையவனாக என்னை செய்வாய்!
யார் இவையெல்லாம் தந்தருள வேண்டும்?
//தாய்ஒன்று சென்னையில் கந்தகோட் டத்துள்வளர் தலம்ஓங்கு கந்தவேளே//
சென்னையிலிருக்கும் கந்தக்கோட்டத்தமெனும் போற்றப்படற்குரிய(வளர்) தலத்தில் அனைவரும் புகழ, என் தாயின் ஸ்தானத்தில் நிற்கும் கந்தவேளே!
//தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே!//
தனக்குள்ளேயே எல்லாமுமாய் நிற்கும் மணியே!
உன்னையே நினைத்து, தம்முள் இழுத்து, நிறுத்தியிருப்போர்க்கு முடிவில்லாமல் அருளும் சைவ மணியே!
ஆறுமுகத்தை உடைய என் தெய்வமணியே!
விளக்கம் நல்லா இருக்கு இராமநாதன். பின்னூட்டத்துல மட்டும் இல்லாம இனிமேல் பதிவுலயும் விளக்கம் போட்டுட்டீங்கன்னா நல்லா இருக்கும். :) விளக்கத்துக்கு ரொம்ப நன்றி.
இதை வாங்குறதுக்கு எவ்வளவு கஷ்டப்படவேண்டியிருக்கு....ஹும்.
இராம்ஸ். நீங்க சொன்ன விளக்கம் போக அங்கங்கே கொஞ்சம் அடிசனல் விளக்கம் தோணுது. சொல்லலாங்களா?
தாராளமா சொல்லலாம். கேக்கணும்னெல்லாம் அவசியமேயில்ல.
//இதை வாங்குறதுக்கு எவ்வளவு கஷ்டப்படவேண்டியிருக்கு....ஹும்.
//
ஹி ஹி.. :))
//இராம்ஸ். நீங்க சொன்ன விளக்கம் போக அங்கங்கே கொஞ்சம் அடிசனல் விளக்கம் தோணுது. சொல்லலாங்களா? //
குமரன்,
எக்ஸ்ட்ரா விளக்கங்கள அங்க வந்து சொல்லுங்க. சரியா?
நன்றி
Post a Comment