2006 க்கு ஒரு நொடி பொறுமை காக்கவும்!

முதலில் எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

இந்த வருடம் பூமியின் புண்ணியத்தால் மாஜிக் போல நமக்கு ஒரு leap second கிடைத்திருக்கிறது. அதாவது நேரத்தின் வேகம் குறைந்து, இன்றைக்கு ஒரு நொடி நீளப்போகிறது.

காரணம் நிலவின் புவியீர்ப்பு சக்தியால் பூமியின் சுழற்சியின் வேகம் குறைகிறது. பதறத்தேவையில்லை. உடனே பூமி நின்றுவிட்டால் நம் கதி என்னவென்றெல்லாம் கவலைப்பட வேண்டாம். இன்னும் பல மில்லியன் வருடங்கள் கழித்துத்தான் இருபத்துநான்கு மணிநேரம் இருபத்தைந்து மணி நேரங்களாகும்.

இந்த ஒரு நொடி சரியாக இன்று இரவு GMT 0000க்கு கூட்டப்படும். அதாவது 2359லிருந்து 0000க்கு மாற வழக்கத்திற்கு மாறாய் பூமியின் புண்ணியத்தில் 61 நொடிகள் இருக்கும். நம்பிக்கையில்லையென்றால் சோதித்துப்பார்த்துவிட்டு அந்த லீப் நொடியை உருப்படியாய் செலவு செய்த்தாக பிறகு பெருமையும் பட்டுக்கொள்ளலாம்.

மீண்டும் எல்லாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.


Slowing planet affords us an extra second

7 Comments:

  1. ஞானவெட்டியான் said...

    தங்களின் இல்லத்திலுள்ளோர் அனைவருக்கும் இதயங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்.


  2. மதுமிதா said...

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்


  3. குமரன் (Kumaran) said...

    எங்கே இராமநாதன். உங்களுக்குப் பின்னூட்டம் போடுவதிலேயே அந்தக் கூடுதல் நொடி காணாமல் போய்விட்டதே. :-)

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள். கொண்டாட்டங்களில் ஈடுபடுவதாய் இருந்தால் safeஆ இருந்துக்கோங்க.


  4. தருமி said...

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.....பெரீயப்பா


  5. G.Ragavan said...

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள் இராமநாதன்.

    நொடி நொடியா யோசிச்சுச் செலவு பண்ற மாதிரியா நெலவரம் இருக்கு.

    பன்னண்டு மணிக்கு டமடமன்னு சத்தம். வேட்டுச் சத்தந்தான். நின்னு நின்னு கேட்டது. சிவகாசி வேட்டான்னு காலைல பேப்பரப் பாத்தாதான் தெரியும். இப்பக் கூட யாரோ ராக்கெட் விடுற மாதிரி சத்தம் கேக்குது. முருகா! முருகா!


  6. Karthikeyan said...

    புத்தாண்டு வாழ்த்துகள் !!!


  7. rv said...

    ஞானவெட்டியான் அய்யா, மதுமிதா, குமரன், இராகவன், கார்த்திக், பெரீய்ய்யப்பா,

    எல்லோருக்கும் என் நன்றியும் புத்தாண்டு வாழ்த்துகளும்.


 

வார்ப்புரு | தமிழாக்கம்