ரஷ்யாவின் துருப்புச்சீட்டு: 1 - Gazprom

Gazprom என்பது ரஷ்ய அரசினால் (க்ரெம்ளின் தலைகளால் என்று படிக்கவும்) நடத்தப்படும் நிறுவனம். ரஷ்யாவின் மிகப்பெரியது என்பதுடன் உலகிலேயே இயற்கை எரிவாயுவில் முதலிடம் பெற்றுள்ள நிறுவனம். உலகின் 25 சதவிகித இயற்கை எரிவாயு கிணறுகளை தன்வசம் கொண்டுள்ளது. க்ரெம்ளினின் பல பெரும் தலைகள் காஸ்ப்ரோமின் மிகப்பெரிய முதலீட்டாளர்கள். அதனால் க்ரெம்ளினை எதிர்க்கும் எந்தக் குட்டி கம்பெனியையும் ஸ்வாஹாஹா பண்ண காஸ்ப்ரோமின் பணபலம் பயன்பட்டுவந்தது.

சிறந்த உதாரணம் தன் வியாபாரத்திற்கு சிறிதும் தொடர்பில்லாத NTV தொலைக்காட்சி ஐ அதன் எதிர்க்கட்சி சார்பிற்காக forceful ஆக க்ரெம்ளினின் ஆணையின்பேரில் கைப்பற்றியது சில வருடங்களுக்கு முன்னர் உலக அரங்கில் சர்ச்சையைக் கிளப்பியது. பயனொன்றும் தான் இல்லை. இன்றைக்கு NTV அரசின் புகழ்பாடும் பல்வேறு ஊடகங்களில் ஒன்றாகிவிட்டது.

சோவியத் யூனியன் காலத்திலிருந்து அதன் கட்டுப்பாட்டில் இருக்கும் நாடுகளுக்கு மிகக்குறைந்த விலையில் எரிவாயுவை விற்றுக்கொண்டிருந்தது காஸ்ப்ரோம். அந்த நாடுகளில் உக்ரைனும் அடக்கம். இப்போது புதிய பிரச்சனை வெடித்து காஸ்ப்ரோமின் பக்கமும் க்ரெம்ளின் ஆளுமையின் பக்கமும் சர்வதேச ஆர்வத்தை திருப்பியிருக்கிறது. பிரச்சனை இதுதான். இதுவரை ஆயிரம் சதுரமீட்டர் எரிவாயுவிற்கு ஐம்பது அமெரிக்க டாலர்கள் என்று இருந்த விலையை திடுமென இருநூற்றிமுப்பது அமெரிக்க டாலர்கள் என்று தடாலடியாக ஏற்றியிருக்கிறது. உலக எரிவாயு விலைகளுக்கு சமமாக விலை ஏற்ற வேண்டிய கட்டாயத்தில்தான் விலையுயர்த்தப்பட்டது என்பது காஸ்ப்ரோமின் கருத்து. இந்த விலையுயர்வும் பொதுவானதாய் இல்லாமல் நாடுகளுக்கு தக்கவாறு arbitraryஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு ஆர்மேனியா, ஜியார்ஜியா போன்ற நாடுகளுக்கு நூறிலிருந்து நூற்றைம்பது டாலர்கள் வரை விலைநிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே சமயத்தில் மிகவும் நட்புநாடான பெலாரஸுக்கு நாற்பத்தியேழு டாலர்கள் என்ற தற்போதைய விலையிலேயே விற்கப்படும் என்று காஸ்ப்ரோம் அறிவித்துள்ளது. உக்ரைனுக்கு மட்டுமே அதிகபட்சமாக இருநூற்றிமுப்பது டாலர்கள். உக்ரைன் இந்த விலையை அளிக்கவேண்டும் இல்லை ஐரோப்பாவிற்கு உக்ரைன் வழியாகச் செல்லும் எரிவாயுக்குழாய்களில் பங்குகளோ அல்லது மொத்தமாகவோ உக்ரைன் காஸ்ப்ரோமிற்கு தருமானால் விலை மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் காஸ்ப்ரோம் கூறியிருக்கிறது. பெலாரஸுக்கு அளிக்கப்படும் சலுகைக்கு குழாய்கள் மீதான் உரிமையை அந்த நாடு விட்டுக்கொடுத்ததால் மலிவான விலையென்றும் சொல்லப்படுகிறது.

மேலும் உக்ரைன் இந்த விலையுயர்வுக்கு உடன்படாவிட்டால் ஜனவரி ஒன்றாம் தேதி காலை பத்துமணிக்கு உக்ரைனுக்கு அளிக்கப்படும் எரிவாயு நிறுத்தப்படும் என்று காஸ்ப்ரோம் அறிக்கைவிட்டது. அதன்பின்னர் இரண்டு புறங்களும் மாறி மாறி அறிக்கைகளில் அடித்துக்கொண்டனர். உக்ரைன் தன் பங்குக்கு Black Sea இல் இருக்கும் செவாஸ்தப்போல் என்னும் துறைமுகத்தில்தான் ரஷ்ய கடற்படையின் Southern Fleet இருக்கிறது. இதற்கான வாடகையை உயர்த்தும் எண்ணத்தில் உக்ரைன் இருப்பதாய் அறிக்கைவிட்டது. அதற்கு ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கண்டனம் தெரிவித்தது. அதுவே மேலும், ஐரோப்பாவிற்கு காஸ்ப்ரோம் வழங்கும் எரிவாய் உக்ரைனின் குழாய்கள் வழியேதான் செல்கிறது. அவ்வாறு காஸ்ப்ரோம் அனுப்பும் எரிவாயுவில் பதினைந்து சதவிகிதம் வரை தனக்கென எடுத்துக்கொள்ள குழாய் உரிமையாளர் என்ற வகையில் உரிமை இருப்பதாக அறிவித்தது. அப்படி செய்வது திருட்டு என்று காஸ்ப்ரோம் பதிலறிக்கை விட்டது. மேலும் இந்தவகையில் உக்ரைன் திருடினால் Arbitration Institute of the Stockholm Chamber of Commerce க்கு இப்பிரச்சனையை எடுத்துச்செல்வதைத் தவிர தனக்கு வேறு வழியில்லையென்றும் எச்சரித்தது.

இதற்கு நடுவில் இதுவரை மௌனம் காத்துவந்த ரஷ்ய அதிபர் பூடின் நேற்று உக்ரைனுக்கு இந்த விலையேற்றத்தை சமாளிக்க ரஷ்யா மூன்றரை பில்லியன் டாலர்கள் வரை கடனாய் வழங்கத் தயாராக இருப்பதாய் அறிவித்தார். மேலும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கப்பட்டிருக்கவேண்டிய விஷயத்தை உலகச்சந்தியில் சிரிக்கவைத்துவிட்டதாய் இரண்டு தரப்புகளையும் கடிந்தும் கொண்டார். ஆனால் அவரின் கடன் தேவையில்லை என்று உக்ரைன் நிராகரித்துவிட்டது.

இந்த வருடத்திய குளிர்காலத்தை ஓட்டிவிடும் அளவிற்கு உக்ரைனிடம் கைவசம் எரிவாயு இருக்கிறதெனினும் காஸ்ப்ரோம் சொன்னவாறு எரிவாயுவை நிறுத்திவிட்டால் பிரச்சனை வராமலிருக்க, கவனமாய் உபயோகப்படுத்துமாறு பொதுமக்களிடம் வேண்டியிருக்கிறார் உக்ரைனிய அதிபர் யூஷென்கோ. பிரச்சனையின் குறியே அவர் தான் என்பதுதான் இதில் காமெடி. மிகவும் நீண்டுவிட்டதால் இதற்கு பின்னாலிருக்கும் அரசியலை அடுத்த பதிவில் பார்ப்போம்.

(தொடரும்)

9 Comments:

  1. குமரன் (Kumaran) said...

    இன்னுமொரு கிழக்கிந்தியக் கம்பெனியா? கடன் குடுக்குறேன்னு சொல்றது, பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடற மாதிரி இருக்கு.


  2. rv said...

    // பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடற மாதிரி இருக்கு.
    //
    அதேதான் குமரன். மேலும் உக்ரைனின் பக்கமே நியாயம் இருப்பதாய் எனக்குப் படுகிறது. ரஷ்யா இந்த விஷயத்தை தனது அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துவதாய் நினைத்துக்கொண்டு தன்னைத்தானே உலக அரங்கில் மேலும் தனிமைப்படுத்திக்கொள்வதே இந்த சர்ச்சையின் முடிவாய் இருக்கும். விவரமாய் அடுத்த பதிவில்.

    நன்றி.


  3. தருமி said...

    Is might always right??


  4. rv said...

    தருமி,
    //Is might always right?? //
    இன்றைய உலகில் might is always right. கேள்வியெல்லாம் நமக்குள்ளேயே கேட்டுக்கொள்ளவேண்டியதுதான். :)


  5. Sudhakar Kasturi said...

    very useful information. The subsidies of USSR era are now taken as the weapons to show the strength.. "When the elephants fight, it is the grass that suffers the most". Do you think Ukrain can withstand this winter with reduced gas supply? Can they be self sufficient with their gas /oil reserves?
    Thanks for a nice article.
    with regards
    K.Sudhakar


  6. பெத்தராயுடு said...

    நேத்துதான் TVல ந்யூஸ் பாத்தப்போ Gazprom பத்தி சொல்லிட்டிருந்தாங்க...

    நல்ல கட்டுரை.


  7. rv said...

    நன்றி Srimangai மற்றும் பெத்தராயுடு

    உக்ரைனியர்கள் இந்த மார்ச் வரை பிரச்சனை எதுவும் இல்லையென்றுதான் கூறுகிறார்கள்.

    இன்னும் சில வாரங்களுக்குள் கண்டிப்பாக ஒரு முடிவு தெரிந்துவிடும்.

    நன்றி


  8. G.Ragavan said...

    அடேங்கப்பா...இராமநாதன்..இத்தனைநாளா இதைப் பாக்கலை. இப்பப் பாத்திருக்கிறேன். அடுத்த பாகத்தையும் படிச்சிட்டு கமெண்ட் போடுறேன்.


  9. G.Ragavan said...

    அடேங்கப்பா...இராமநாதன்..இத்தனைநாளா இதைப் பாக்கலை. இப்பப் பாத்திருக்கிறேன். அடுத்த பாகத்தையும் படிச்சிட்டு கமெண்ட் போடுறேன்.


 

வார்ப்புரு | தமிழாக்கம்