அலெக்ஸாந்தரும் ஸ்கந்தனும்
Skanda: The Alexander Romance in India
ரொம்ப பெரீரீய்ய கட்டுரை. படிக்க ரொம்பவே பொறுமை வேண்டும். ஆனால், சொல்லப்பட்டிருக்கும் விஷயம் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது. க்ரேக்க மன்னனான அலெக்ஸாண்டர் தான் மௌரியர்களின் ஆட்சிக்காலத்தில் தெய்வமாக்கப்பட்டு ஸ்கந்தன் என்று வணங்கப்படும் கடவுளானார் என்கிறார் ஆசிரியர். தமிழ்க் கடவுளான முருகன் அலெக்ஸாந்தருக்கு முற்காலத்திலேயே வணங்கப்பட்டு வந்துள்ளார் என்றும் காலப்போக்கில் கந்தனும் ஸ்கந்தனும் ஒன்றானார்கள் என்றும் கூறுகிறார்.
முன்னரே இந்தப் பெயர்க்குழப்பம் குறித்து இராகவன் பதித்திருக்கிறார். அதையும் பார்க்கவும்.
சிவனைப் பற்றியும் Zeus பற்றியும் கொஞ்சம் சொல்லியிருக்கிறார்.
படித்துவிட்டு கருத்துகளை கூறுங்கள்.
சுட்டிக்கு நன்றி: சன்னாசி
அலெக்ஸாண்டரும் ஸ்கந்தனும்
Subscribe to:
Post Comments (Atom)
12 Comments:
எங்கடா ஆளைக் காணோமேன்னு பாத்துக்கிட்டு இருந்தேன். விவகாரத்தோடத் தான் வந்திருக்கீங்க. சீக்கிரம் இரண்டாவது முறை தமிழ்மண நட்சத்திரம் ஆகிடுவீங்க போல இருக்கே. :-)
என்ன குமரன்,
கருத்து சொல்லவேண்டிய முக்கியமான ஆளெ இப்படி எஸ்கேப் ஆகுறீங்களே? :))
இராமநாதன், இந்தக் கூற்று எவ்வளவு ஏற்புடையது என்று தெரியவில்லை.
ஆனாலும் சிலவற்றை நான் சரியாகப் பார்க்க வேண்டியிருக்கின்றது.
1. முருக வழிபாடு என்பது தமிழில் ஆதி வழிபாடு.
2. கந்தன் என்ற பெயரும் ஸ்கந்தன் என்ற பெயரும் வெவ்வேறு பொருள் கொண்டவை. வெவ்வேறு மொழிகளில் இருந்து வந்தவை.
3. வடநாட்டின் ஸ்கந்த வழிபாட்டால் தமிழ் நாட்டின் முருக வழிபாடு செறிவூட்டப் பட்டது.
இவைகளை எல்லாம் வைத்து இந்தக் கட்டுரையை ஆராய வேண்டும்.
இந்தக் கட்டுரை அலெக்ஸாண்டர்தான் முருகன் என்று சொல்லவில்லை. ஆனால் அலெக்ஸாண்டர்தான் ஸ்கந்தன் என்கிறது. பிற்பாடு தமிழோடு சேர்ந்து கொண்டது என்கின்றது.
ஸ்கந்த வழிபாடு பிற்பாடு முருக வழிபாட்டோடு சேர்ந்து செறிவுற்றது என்பது ஏற்புடையதே.
ஆனால் அலெக்ஸாண்டர்தான் ஸ்கந்தன் என்று சொல்வது எவ்வளவு தூரம் ஏற்புடையது என்று தெரியவில்லை. இது போன்ற விஷயங்களில் ஆராய்ச்சி இன்னும் தேவை. படக்கென்று முடிவிற்கு வந்து விட முடியாது. உண்மையாகவும் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்.
ஒரு விஷயத்தை வைத்து இந்தச் செய்தியின் உண்மையைத் தீர்மானிக்கலாம். காளிதாசரின் காலத்திற்கும் கவுடில்யரின் காலத்திற்கும் உள்ள வேறுபாட்டைக் கொண்டு ஒரு முடிவுக்கு வர முடியும்.
கவுடில்யரை விட காளிதாசர் பழையவர் என்றால், இந்தக் கட்டுரையை அப்படியே ஓரமாக வைத்து விடலாம். ஏனென்றால் குமார சம்பவம் எழுதியவர் காளிதாசர்.
இல்லை காளிதாசர் காலத்தால் கவுடில்யருக்குப் பிந்தியவர் என்றால் இந்தச் செய்தி இன்னும் ஆராயப்பட வேண்டியதே.
சிவபெருமானுக்கும் zeusக்கும் உள்ள ஒற்றுமைகள் எனக்கே தோன்றியிருக்கின்றன. அங்கே ஒலிம்பஸ். இங்கே கைலாசம். அங்கும் துணை உண்டு. இங்கும் துணை உண்டு. அங்கும் ஒவ்வொரு டிபார்மெண்டிற்கும் ஒவ்வொரு மேனேஜர். இங்கும் அப்படியே. இந்த ஒற்றுமையையும் கிரேக்கக் கதைகளைப் படிக்கையில் மிகவும் ரசிக்கலாம்.
இராம்ஸ். அந்த ஆராய்ச்சிக் கட்டுரை ரொம்ப நீளமா இருக்கு. அது மட்டும் இல்லாம கொஞ்சம் அதிகமா உளருன மாதிரியும் இருக்கு. அதைப் படிச்சு நேரத்தை வீணாக்கணுமான்னு இருக்கு. நிச்சயமா என் கருத்து வேணும்ன்னு நினைச்சா சொல்லுங்க. உங்களுக்காகப் படிச்சுப் பாத்து என் கருத்து(களைச்) சொல்றேன்.
பின்னே! உங்க கருத்து வேண்டாமா? படிங்க. படிச்சுட்டு சொல்லுங்க.
//பின்னே! உங்க கருத்து வேண்டாமா? படிங்க. படிச்சுட்டு சொல்லுங்க.//
குமரன்,
என் கருத்தும் அதுவேதான். அவசரமில்லை. நேரம் கிடைக்கும்போது படித்து பதில் சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இராம்ஸ். படிக்க ஆரம்பிச்சுட்டேன். முடிச்சுட்டு வந்து கருத்து சொல்றேன். தனிப் பதிவா என் மறுப்புகளைப் போட வேண்டி இருக்கும்ன்னு நினைக்கிறேன். பிப்ரவரி வரை காத்திருங்கள். :-)
நம்பி,
முருக வழிபாடு வடநாட்டின் ஸ்கந்த வழிபாட்டை விட பழமையானது என்ற கருத்திற்கு எதிர்வினையில்லாதபோது...
பிற்காலத்தில் ஸ்கந்த வழிபாடு தென்னிந்தியாவின் முருகனோடு இணைந்ததென்றே கருதத்தோன்றுகிறது,
நன்றி
// பிற்காலத்தில் ஸ்கந்த வழிபாடு தென்னிந்தியாவின் முருகனோடு இணைந்ததென்றே கருதத்தோன்றுகிறது, //
நானும் இராமநாதனுடன் உடன்படுகிறேன். சொல்ல வந்ததைக் கொஞ்சம் குழப்பிச் சொல்லி விட்டேன் என்று நினைக்கிறேன்.
நாட்டாமை,
//இதற்கு தான் ரிஷிமூலம்,நதி மூலம் பார்க்கக் கூடாது என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்//
வேறு ஒரு இடத்தில் சன்னாசி எதேச்சையாக இந்த லின்க்கை கொடுத்தார். படித்துப்பார்த்ததில் ஆச்சரியமாக இருந்தது. அதை வலைப்பூவிலும் பகிர்ந்துகொள்ளலாமே என்ற ஆவல் மட்டுமே காரணம்.
நீங்கள் கொடுத்த லின்க்கையும் படித்துப்பார்க்கிறேன்.
நன்றி.
// ஏசு என்பது ஜூலியஸ் சீஸர் தான் என்று ஒரு யூகம் உண்டு. //
இதென்ன புதுக்குழப்பம்.........அடடா! ஏற்கனவே டாவின்சி கோடு பிச்சிக்கிட்டுப் போகுது. அதுக்குள்ள இது வேறையா!
ஆமாம் இராகவன்,
நானும் முதல்முறை கேள்விப்படுகிறேன். பிபிஸியில் சில வருடங்களுக்குமுன் historical Jesusஉம் கிறிஸ்துவ ஜீஸஸும் வெவ்வேறு என்று விவரணப்படம் காட்டினார்கள். அதிலும் சீசரைப் பற்றிக் குறிப்பிட்டதாக நினைவு இல்லை. நாட்டாமை கொடுத்த சுட்டியை வாரயிறுதியில்தான் பொறுமையாக படிக்கவேண்டும்.
Post a Comment