மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்...

'மூன்றெழுத்து கெட்டவார்த்தை அந்த வார்த்தை, சிஷ்யா'னு நினச்சு வந்தீங்கன்னா அதுக்கு நான் பொறுப்பில்ல. இது ஒரு அறிவுப்பூர்வமான ஆழமான பதிவாக்கும், சொல்லிட்டேன். மூன்று எழுத்துகள்கறது ரொம்ப முக்கியமானது. ஆங்கிலத்துல இருக்கற இருபத்தியாறு எழுத்துகளையும் மாத்தி மாத்தி போட்டா பதினேழாயிரத்தி சொச்சம் தடவை இந்த மூணேழுத்த வச்சே வித்த காட்டலாம். சரி, இப்போ எதுக்கு மூணெழுத்து? காரணம் இருக்கே. இன்னிக்கு மெட்ரோல வரச்சே என்ன காரணத்தாலோ நம்ம மூளை வேலை செய்ய ஆரமிச்சது. அது என்னடா அது, எல்லா abbreviation-களும் (பெரும்பாலான) மூன்றெழுத்துகளில் தான் இருக்குதுன்னு. ஏன் மூணெழுத்துன்னு விடை கண்டுபிடிக்க முடியல. ஆனா, இதப்பத்தியும் என்னைய மாதிரி புத்திமான்கள் ஆராய்ச்சியெல்லாம் செஞ்சிருக்காங்கன்னு புரிஞ்சு புளங்காகிதம் ஆயிடுச்சு. இதுக்கு ஆங்கிலத்துல TLA (three-letter abbreviation: இதுவும் TLA!)னு சொல்றாங்க.

உதாரணங்கள்

1. விண்டோஸ் OS இல் பயன்படுத்தும் அனைத்து file extensions

.jpg, .htm

2. கணினி சார்ந்தவை
FDD, HDD, RAM, CPU, IBM, AMD

3. ஊடகங்கள்
BBC, CNN, CBS, PBS, ABC, AIR

4. மோட்டார் வாகனங்கள் சார்ந்தவை
BMW, ABS, EBD, SUV, KIA, MUL, CDI

5. தயாரிப்பு நிறுவனங்கள்
TDK, DAC

6. ஃபார்மாட்கள்
DVD, VCD, VHS

7. அரசு நிறுவனங்கள்
FBI, KGB, FSB, CIA, CID, RAW, ISI

8. பொறுப்புகள்
CEO, CTO, COO, CFO

9. Time Zones
IST, MST, GMT, PST, EST, CST

10. உலகெங்குமுள்ள அனைத்து விமானநிலையங்களுக்கும் மூன்றெழுத்து குறியீடுகள் தான்
LED, SVO, LAX, SFO

11. பணங்கள் பற்றிய குறியீடுகள்
FRA, USD, RUR, INR

ஏன் மூணு எழுத்து மட்டும்?

ஏன்? ஏன்? ஏன்?

இன்னும் நிறைய மூன்றெழுத்து குறியீடுகளை அறிந்து கொள்ள இங்கே செல்லவும். அங்க போய் கத்துகிட்டு இங்க வந்து சமத்தா உங்களுக்கு தெரிஞ்ச TLA வ பின்னூட்டத்துல போட்டுடுங்க. அப்பாடா, பதினாறாயிரத்து சொச்சம் பின்னூட்டங்களுக்கு வழி செஞ்சாச்சு. இதுல தமிழ்மணம் மட்டுமில்ல, ப்ளாக்கர்.காமே திணறிடணும்...பின்னூட்ட புரட்சியாளர்னு உங்களுக்கு பட்டமும் கொடுத்திடலாம்.

248 Comments:

  1. rv said...

    அட அரசியல விட்டுட்டேனே...

    BJP, DMK, GOP, PMK, INC


  2. rv said...

    அதோட நாடுகளையும் சேத்துக்கலாம்..

    IND, RUS, PAK, USA, UAE, AUS


  3. சின்னவன் said...

    இ.ப.ந
    ( இந்த பதிவுக்கு நன்னி என்கிறதின் TLA தான் :-) )


  4. முகமூடி said...

    வ.வ.உ (வரிககு வரி)


  5. rv said...

    சின்னவர் மற்றும் முகமூடி (பமக)
    உ.பி.ந (உங்கள் பின்னூட்டத்துக்கு)


  6. குமரன் (Kumaran) said...

    ஐ.ஐ.ஐ.


  7. குமரன் (Kumaran) said...

    ஐயோ ஐயோ ஐயோ.


  8. குமரன் (Kumaran) said...

    பின்னூட்ட ஆசைதானே இப்படியெல்லாம் எங்களை வாட்டுது. அதனால உங்க ஆசை தீர ஒரு பின்னூட்டத்தப் பிச்சுப் பிச்சு மூணாப் போட்டாச்சு. வாழ்ந்து போங்க.


  9. தருமி said...

    3. ஊடகங்கள்
    BBC, CNN, CBS, PBS, ABC, AIR

    எங்க ஊரு 'SUN'விட்டுட்டீங்க?

    அதுக்குப் பிறகு. சிவாஜி, எம்.ஜி.ஆர்., கமல். ரஜினி...அட அத உடுங்க..எங்க காலத்து 'பப்பி' உங்க காலத்து அஸின்.......... :-) என்ன "ராம்ஸ்' நான் (தருமி) சொல்றது?


  10. நாமக்கல் சிபி said...

    அது சரி உங்க கண்ணியில con அப்படிங்கற பேருல ஒரு ஃபோல்டர் உருவாக்க முடியுதான்னு பாருங்க ராம்ஸ்.

    இனிஷியலில் இரண்டெழுத்து பயன்படுத்துபவர்கள் மிகப் பிரபலமடைவார்கள்.

    உ.ம்: எம்.ஜி.ராமச்சந்திரன், டி.என்.சேஷன், வி.பி.சிங், பி.வி.அலெக்சாண்டர், ஐ.கே.குஜரால், டி.கே.பட்டம்மாள், பி.எஸ்.வீரப்பா, எம்.என்.நம்பியார், வி.கே.ராமசாமி, என்.எஸ்.கிருஷ்ணன்...

    இப்படிக்கு,
    என்.ஆர்.ஜெகன் மோகன்


  11. dvetrivel said...

    அண்ணா! தி.மு.க, ப.ம.க, பி.ஜே.பி...
    இதையெல்லாம் உட்டுபோட்டீங்களே??? என்னங்கண்ணா நியாயம்?


  12. dvetrivel said...

    அட சாரிங்கண்ணா! முதல் பின்னூட்டத்தை பாக்காம எழுதிபோட்டேன்!


  13. ஏஜண்ட் NJ said...


    முருகா!

    காக்க!
    காக்க!!


  14. துளசி கோபால் said...

    தருமி சொல்றதுபோல 'து ள சி' இது எப்படி இருக்கு?

    ராம்ஸ்,

    இதுதானா மூன்றெழுத்து.
    நான் நினைச்சேன் இப்படின்னு.
    'டி கி ரி' படிச்சு முடிச்சுட்டா மூச்சிருக்கும்.


  15. `மழை` ஷ்ரேயா(Shreya) said...

    விமானநிலையம் மட்டுமில்ல, துறைமுகங்களுக்கும் மூன்றெழுத்துதான்.. ஆனா முன்னுக்கு நாட்டோட இரண்டெழுத்து இருக்கும். உதாரணமா சிட்னிக்கு: AUSYD

    கார், எனக்குப் பிடிச்ச கார் நிறுவனங்கள் மூன்றெழுத்து இல்லை (SAAB & VW), அவற்றின் தயாரிப்புகளிலும் (ஒன்றிரண்டு தவிர, like the SAAB 900) மூன்றெழுத்தில்லை.

    குளிரென்னும் மூன்றெழுத்தில் வாடியது போதும் என்று வெயிலென்னும் மூன்றெழுத்தில் களிக்கும் நண்பரே, மூன்றெழுத்துப் பற்றிப் பதிவு என்னும் மூன்றெழுத்தைப்போட்டு எங்களை யோசனை என்னும் மூன்றெழுத்தை செய்ய வைத்தீரே!! வாழ்க!

    அதுசரி.. விரைவில் ஏதாவது "சிறப்பா?"


  16. தாணு said...

    ராமநாதன்,
    சத்தமா சொல்லாதீங்க, இந்த மூணு எழுத்து `மந்திரத்தை' பிடிச்சுகிட்டு வாஸ்து மாதிரி ஏதாச்சும் ப்புது `பேஸ்து' மந்திரம் தொடங்கிடப் போறாங்க!


  17. டிபிஆர்.ஜோசப் said...

    ஏங்க இராமநாதன் TBR விட்டுட்டீங்க?
    ஹி..ஹி..


  18. G.Ragavan said...

    மூன்று தமிழ்
    முக்காலம்
    முப்பெருந்தேவியர்
    மூதேவி
    மூம்மூர்த்திகள்
    முப்பால் (திருக்குறள்)
    முக்கண்

    சூர்யா, விஜய், ஜோதிகா, த்ரிஷா இன்னும் என்ன வேணும்.


  19. G.Ragavan said...

    அப்புறம் மேவேந்தர், முக்கனிகள் எல்லாம் விட்டுட்டேனே.


  20. rv said...

    குமரன்,
    இந்த மாதிரி சிந்தனையத் தூண்டுற பதிவப் பாத்துட்டு தலைல அடிச்சுக்கிறீங்க?

    மூணு போட்டதுக்கு நன்றி!


  21. rv said...

    பெரீய்யப்பா,
    அதானே.. Sun, Raj, விஜய் எல்லாம் விட்டுட்டேனே..

    அதே போல ஷ்டாருங்களையும் மறந்துட்டேன்.. அஸின்னு எழுதி வச்சு படிச்சாலே எனக்கெல்லாம் மயிர் கூச்செரியுதே? ஏன் ஏன் ஏன்?

    நாமக்கல் சிபி,
    இப்பப் புரியுது எதுக்கு உங்க பேர்ல என்.ஆர் சேத்து போடறீங்கன்னு? வருங்கால ஷ்டாரா வர வாழ்த்துகள்.

    நன்றி


  22. rv said...

    ஆல்தோட்டம்,
    என்னப்பா 'ஆல்' தோட்டம் பேர வச்சுகிட்டு இப்படி பண்றீங்களே.. சரி சரி. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.

    ப.ம.க கறது நம்ம ப.ம.க-வா அந்த பா.ம.க-வா? நம்ம ப.ம.கன்னா பெரிய கட்சிங்க கூட சேத்ததுக்கே உம்ம துணைப்பொதுச்செயலாளர் ஆக்கிடலாமே. தல என்ன நினைக்கறாரோ..


  23. rv said...

    ஏஜெண்டு,
    மூணுவரில மூணெழுத்து எழுதி தத்துவ பிட்ட போட்டுட்டீரு. வாழ்க!

    ஆச்சர்ய குறி மட்டும் குறைச்சலா இருக்கே?

    அக்கா,
    அட அக்காவும் மூணெழுத்து.. நீங்களும் மூணெழுத்து. ஷ்டார்-உம் மூணெழுத்து. என்னவோ நடக்குது. மர்மமா இருக்குது!


  24. rv said...

    மழை,
    உங்களுக்கும் Saab புடிக்குமா? அதென்னவோ அந்த கார்கள பாத்தாலே அவங்க பண்ற விமான எஞ்சின்கள் நினைவுக்கு வருவதால், எனக்கும் ரொம்பப் பிடிக்கும்.

    //குளிரென்னும் மூன்றெழுத்தில் வாடியது போதும் என்று வெயிலென்னும் மூன்றெழுத்தில் களிக்கும் நண்பரே//
    மாத்திப் போட்டு என் வயித்தெரிச்சல கிளப்பறீங்களே. இத படிக்கலியா?

    அத்தை,
    பேஸ்தும் மூணெழுத்து. புதுசா இருக்கே. இன்னும் கொஞ்சம் டெவலப் பண்ணா இதவச்சே முன்னுக்கு வந்துடலாம் போலிருக்கே.


  25. rv said...

    ஜோசஃப் சார்,
    உங்க பேருமே மூணெழுத்துதானே.. உங்க அம்மாப்பா TLA அருமை புரிஞ்சு உங்களுக்கு TLA^2 பேர கொடுத்துட்டாங்க போலிருக்கு. :)

    இராகவன் (இல்ல கோரா ஜீராவா?),
    நீங்க கொடுத்த லிஸ்ட்ல எனக்கு புடிச்சது மூதேவி தான். தமிழ்லயும் மூணுக்கு இவ்வளவு முக்கியத்துவமா? அது ஏன்னுதான் புடிபடலை.


  26. rv said...
    This comment has been removed by a blog administrator.

  27. rv said...

    என்னப்பா அநியாயமா இருக்கு.. பதினாறாயிரம் வரதுக்கு ஸ்கோப் இருந்தும் முப்பதயே தாண்டலையே. நான் ஒரு இட்லிவடை, டோண்டுவாகவே முடியாதா?

    நம்ம போட்டோவ இன்னுமொரு பாருங்க. இந்த அழகு மூஞ்சிய அழுமூஞ்சியாக்கி பாக்கணும்னு உங்களுக்கெல்லாம் என்ன வக்கிர மனம்???


  28. குமரன் (Kumaran) said...

    ஐ.ஐ.ஐ.


  29. குமரன் (Kumaran) said...

    ஐயகோ ஐயகோ ஐயகோ


  30. குமரன் (Kumaran) said...

    ஆமாம் இராமநாதன் TLA பத்தி சுவையா ஒரு பதிவு போட்டிருக்கீங்க. முப்பது பின்னூட்டம் கூட வராட்டி எப்படி. முப்பது ஆக்கியாச்சு. அழாதீங்க. தாங்க முடியாது. I mean சகிக்க முடியாது. :-) Just kidding... :-)


  31. rv said...

    குமரன்,
    உங்களுக்கு புரியுது!!

    அது சரி, எதுக்கு எமனோட பொஞ்சாதிய எல்லாத்துக்கும் கூப்புடறீங்க?


  32. குமரன் (Kumaran) said...

    அடப் பாருடா. எமன் கூட மூன்றெழுத்து. அவர் பொஞ்சாதி ஐயகோ பேரும் மூன்றெழுத்து. மூச்சு என்பதும் மூன்றெழுத்து. ஆகா அதான் சொன்னீங்களா மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்ன்னு? மேல சொன்ன மூன்றெழுத்துகள் வராத வரை தானப்பா மூச்சிருக்கும். :-)

    என்ன இதெல்லாம் TLA இல்லை. :-(


  33. இரா. செல்வராசு (R.Selvaraj) said...

    கொஞ்சம் பழசு. இருந்தாலும் சம்பந்தப்பட்ட மூ.எ.சு. பதிவு இங்கே.


  34. rv said...

    செல்வராஜ்,
    சுட்டிக்கு நன்றி. இரண்டு வருஷம் முன்னாடியே இந்தப்பதிவின் தலைப்பு உட்பட எழுதிட்டீங்க. இப்ப இதப் பாத்ததும் deja vu ஆட்டம் இருந்துச்சா?

    :)


  35. தி. ரா. ச.(T.R.C.) said...

    அம்மா, அப்பா ஆசான்,தேவன், இவையும் மூன்று தான்


  36. rv said...

    நன்றி தி.இரா.ச (நீங்களும் TLA தானா!) :))


  37. rv said...

    குமரன்,
    //ஆகா அதான் சொன்னீங்களா மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்ன்னு? மேல சொன்ன மூன்றெழுத்துகள் வராத வரை தானப்பா மூச்சிருக்கும். :-) //
    உங்க பின்னூட்டத்த மிஸ் பண்ணிட்டேனே.

    என்ன ஒரு தத்துவம்! நீங்க சொன்ன அதே அர்த்தத்துல தான் நானும் தலைப்பை வச்சேன்னு பிட் போட்டுடவா? தத்வார்த்த பதிவாளர், பின்னூட்டாளர் னு 'நமக்கு நாமே' திட்டத்த வச்சு முதுகு தட்டிப்போம்! :))


  38. குமரன் (Kumaran) said...

    அதானே பார்த்தேன். என்னடா இராம்ஸ் நம்மளை இக்னோர் பண்றாரேன்னு யோசிச்சுக்கிட்டு இருந்தேன். இக்னோர் பண்ணலை; மிஸ் பண்ணிட்டீங்க. தாட் இஸ் ஓகே.

    நமக்கு நாமே திட்டத்துல தானே ஒலகமே நடந்துக்கினு கீது. முதுகு தட்டிக்கிட்டா சரிடே. குத்திக்கிட்டாத் தான் தப்பு. என்ன சொல்றிய? :-)

    தத்துவமோ உள்குத்தோ தேடாதீகப்பு. சும்மா எகனை மொகனைக்கு போட்டது.


  39. குமரன் (Kumaran) said...

    முப்பது ஆக்கியவனும் நானே நாற்பதும் ஆக்குகிறேன். அடுத்தப் பதிவு சீக்கிரம் போடாட்டி ஐம்பதுக்கும் நான் தான்; அறுபதுக்கும் நான் தான். சொல்லிப்புட்டேன் ஆமா.


  40. rv said...

    குமரன்,
    //முதுகு தட்டிக்கிட்டா சரிடே. குத்திக்கிட்டாத் தான் தப்பு. என்ன சொல்றிய? :-) //
    அதே அதே. பழைய தமிழ்மணத்துல குத்து. இப்பதான் எல்லாம் குலுக்கலாயிடுச்சே!

    //தத்துவமோ உள்குத்தோ தேடாதீகப்பு. சும்மா எகனை மொகனைக்கு போட்டது.
    //
    நானா வலிய வந்து உங்களுக்கு புரட்சி தத்துவ பின்னூட்டாளர்னு சகல கலா சத்வ பாரதியோட சேத்துக்கொடுத்தா வேணாங்கரீங்களே?? :)

    //முப்பது ஆக்கியவனும் நானே நாற்பதும் ஆக்குகிறேன்//
    யாமிருக்க பயமேன் மாதிரி குமரனிருக்க கமெண்ட் கவலையேன் எனக்கு உணர்த்தியமைக்கு நன்றி! தொடரவும்.. ஹி ஹி.

    //நம்மளை இக்னோர் பண்றாரேன்னு யோசிச்சுக்கிட்டு //
    அய்யய்யோ,
    ஒரு பின்னூட்டத்த மிஸ் பண்ணதுக்கே இவ்ளோ விபரீதமா யோசிக்கிறீங்களே. நான் அப்படியெல்லாம் செய்யற ஆளா குமரன்? :(

    உங்க பின்னூட்டம் என்ன காரணத்தாலோ ஜிமெயிலில் வரலை. அதுக்கு பதில் செல்வராஜ் அவர்கள் ரெண்டு தடவ பதிச்சதா வந்திருந்தது. அதனால, பதிவுல உங்க பின்னூட்டத்த தேடக்கூட தோணலை. :((


  41. G.Ragavan said...

    இராமநாதன்...தமிழிலில் மூன்றுக்கு மிகவும் பெரிய இடமுண்டு. எதையும் பாருங்கள்.

    எளிமை
    இனிமை
    குளுமை
    பெருமை
    அருமை
    கருமை
    வளமை
    இளமை
    பொறுமை
    சிறுமை
    கொடுமை
    தலைமை
    அடிமை

    இப்படி பண்புப் பெயர்கள் எல்லாமே மூன்றெழுத்துகளாகவே வரும். பெரிய பட்டியலே போடலாம்.


  42. குமரன் (Kumaran) said...

    ஆஹா. ஜீரா வெறும் மையல் சொற்களாக பட்டியல் இட்டுள்ளாரே. என்ன மையல் சொற்கள் இல்லையா? அட ஆமாம். நான் மையில் முடியும் சொற்கள்னு சொல்ல வந்தேன். அது சரி. யாருக்குத் தெரியும். ஜீராவுக்கு யார் மேல் மையலோ? அட மையல் கூட மூன்றேழுத்து தான்.

    ஆனால் பட்டியலில் இருக்கும் எதுவுமே (மையல் உட்பட) TLA கிடையாதே. அவை வெறும் மூன்றெழுத்துச் சொற்கள்.


  43. rv said...

    இராகவன்,
    நிறைய சொற்களை பட்டியலிட்டுள்ளீர்கள். அவை TLA இல்லாவிடினும் தமிழில் முக்கியத்துவம் பெற்றவை என்ற வகையில் ஏன் மூன்றெழுத்துகள் என்ற கேள்வி எழுகிறது.


  44. rv said...

    குமரன்,
    // ஜீராவுக்கு யார் மேல் மையலோ?//

    மயிலார் போன பாரம் படிக்கலியா? "Excuse Me".. ஹி ஹி.. எல்லாமே மையல்தான்பா!

    மூன்றெழுத்து சொற்களாக இராகவன் குறிப்பிட்டிருப்பவை, தமிழ்மொழியில் மூன்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று உணர்விக்கவே, அன்றி TLA க்கள் பற்றி அல்ல என்றே நினைக்கிறேன்.


  45. கைப்புள்ள said...

    ராமநாதன்,
    எனக்கு தெரிந்த சில நிறுவன பெயர் TLAக்கள்
    IBM - International Business Machines
    SUN - Stanford University Network
    BMW - Bavaria Motor Works
    SAP - Systems, Analyses and Processes
    இதில் BMWக்கும் SAPக்கும் காரணமான ஊடகம் முதலில் ஜெர்மன் மொழியில் உருவானது.

    ஒரு சந்தேகம் - நமக்கு வடிவேலு போல உங்களுக்கு காரி காஸ்பரோவா?

    சரி! ரஷியாவை எப்ப சுத்தி காட்ட போறீங்க?


  46. rv said...

    கைப்புள்ள,
    மிக்க நன்றி.

    Sun எனக்கு புதுசு!

    //
    நமக்கு வடிவேலு போல உங்களுக்கு காரி காஸ்பரோவா?
    //
    அது காஸ்பரோவ் அல்ல. நானேதான். ஏன்பா யாருமே நம்ப மாட்டேங்கறீங்க? எல்லாம் நம்ம லீகல் அட்வைசர் பண்ணகுழப்பத்துனால வந்தது. க்ளூ கொடுத்துட்டேனே! :)

    //ரஷியாவை எப்ப சுத்தி காட்ட போறீங்க?//
    சுத்திக்காட்டலாம்னு ஆரமிச்சு அஞ்சு பதிவு வரைக்கும் போட்டேன். அஞ்சாவது இங்கே(. ரொம்ப டயர்டாகி விட்டுட்டேன். :)


  47. G.Ragavan said...

    // ஆஹா. ஜீரா வெறும் மையல் சொற்களாக பட்டியல் இட்டுள்ளாரே. என்ன மையல் சொற்கள் இல்லையா? அட ஆமாம். நான் மையில் முடியும் சொற்கள்னு சொல்ல வந்தேன். அது சரி. யாருக்குத் தெரியும். ஜீராவுக்கு யார் மேல் மையலோ? அட மையல் கூட மூன்றேழுத்து தான். //

    வையலுக்குக் கூடத் தப்பித்தவர் உண்டு. மையலுக்குத் தப்பித்தவர் உண்டா? சொல்லுங்கள் குமரன்.

    // ஆனால் பட்டியலில் இருக்கும் எதுவுமே (மையல் உட்பட) TLA கிடையாதே. அவை வெறும் மூன்றெழுத்துச் சொற்கள். //

    ஆமாம். இவையெல்லாம் TLA அல்ல. ஆனாலும் மூன்று என்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தவே நான் இட்டேன். அதைத்தன் இராமநாதன் கீழே சொல்லியிருக்கிறார்.


  48. rv said...

    ஜீரா,
    //மையலுக்குத் தப்பித்தவர் உண்டா? சொல்லுங்கள் குமரன்//
    ஆகமொத்தம் மயிலார் பாரம் போன ரகசியம் கிட்டத்தட்ட வெளியில வந்துடுச்சு! :)

    அதிருக்கட்டும், இந்த மாதிரி சென்ஸிடிவ் மேட்டரெல்லாம் குமரனக் கேக்கலாமா? ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்தியெட்டில் சின்ன பச்சாவா ஸ்கூலுக்கு போனப்போ ஏழாங்க்ளாஸுல பக்கத்து டேபிள் தனலஷ்மிகிட்ட வாங்கி கட்டிக்கொண்டதோட மையல் முடிஞ்சிடுச்சுன்னு பிட்டு போடக் கூடும். :P

    (ஸ்மைலி தெரியுதுல்ல குமரன்???)


  49. குமரன் (Kumaran) said...

    Unfortunately அந்த பிட்டு போட முடியலை இராமநாதன். கல்யாணம் ஆகும் வரை அந்த மையல் தொடர்ந்துகிட்டுத் தான் இருந்துச்சு - ஆளுங்க தான் மாறிகிட்டே இருந்தாங்க. :-)

    கல்யாணம் ஆனபின்னாடியும் மையல் உண்டு. ஆனா ஒரே ஆளுகிட்ட தான்னு சொல்லிக்குவேன். மையல் தொடரும். ஐம்பதிலும் ஆசை வரும். இல்லையா? ஐம்பதுன்னு சொன்னது ஐம்பதாவது பின்னூட்டத்தை. சொன்னதை செய்ய வாய்ப்பளித்தமைக்கு நன்றி. :-)


  50. குமரன் (Kumaran) said...

    சின்ன திருத்தம் இராமநாதன். 1978ல நான் ஏழாம் வகுப்பு படிக்கலை. விட்டா கிழவன் ஆக்கிடுவீங்க போல இருக்கே?


  51. ramachandranusha(உஷா) said...

    51


  52. ramachandranusha(உஷா) said...

    52


  53. ramachandranusha(உஷா) said...

    53
    :-)))))))))))))))))))))))))))))))))))


  54. rv said...

    குமரன்,
    //கல்யாணம் ஆகும் வரை அந்த மையல் தொடர்ந்துகிட்டுத் தான் இருந்துச்சு - ஆளுங்க தான் மாறிகிட்டே இருந்தாங்க//
    வரவேற்க்கத்தக்க மாற்றம்!!!! :)

    // ஐம்பதிலும் ஆசை வரும். இல்லையா? ஐம்பதுன்னு சொன்னது ஐம்பதாவது பின்னூட்டத்தை. //
    வரும் வரும் வ்ரும் வ்ரும் ரும் ரும் ம்ம்ம்ம்ம்...

    முப்பது, நாப்பது, ஐம்பது என்று பட்டையக் கிளப்புவதற்கு நன்றி!!!


  55. rv said...

    குமரன்
    //1978ல நான் ஏழாம் வகுப்பு படிக்கலை. விட்டா கிழவன் ஆக்கிடுவீங்க போல இருக்கே?
    //
    1968ன்னு எழுதலாம்னு இருந்தேன். இருந்தாலும் 80 வரைக்கும் நான் பொறக்கவேயில்லைங்கறதாலே, யூகிச்சு 78-னு போட்டுட்டேன்! :)


  56. rv said...

    உஷா அக்கா,
    51-க்கு நன்றி


  57. rv said...

    52-க்கு நன்றி


  58. rv said...

    53-க்கும் ஸ்மைலிகளுக்கும் நன்றி.

    குமரன்,
    அறுபதையும் உங்களுக்கே தருகிறேன்! :)


  59. துளசி கோபால் said...

    'கலை' வளர்த்தலுக்கு வாழ்த்து(க்)க்கள்!


  60. rv said...

    அக்கா,
    என்ன "கலை"ன்னு சொல்லவேயில்லியே!!

    அறுபத கைபற்றியதற்கு வாழ்த்துகள்!

    குமரனுக்கு எழுபதாவது வாச்சிருக்கான்னு பாக்கலாம்! :))


  61. குமரன் (Kumaran) said...

    சே, ஜஸ்ட் மிஸ். பார்க்கலாம் 70வது வாய்ச்சிருக்கான்னு.

    இராமநாதன், என்ன கலைன்னு நெசமாவே தெரியலையா? துளசி அக்கா இன்னும் தெளிவா சொல்லமுடியாதே.

    இந்த நன்றியெல்லாம் நினைவில வச்சிருந்து இந்த வாரத்துல நான் இடப்போறப் பதிவுகளில் காட்டுங்க. :-)


  62. rv said...

    kumaran,
    //என்ன கலைன்னு தெரியலப்பா// !!!

    //இந்த வாரத்துல நான் இடப்போறப் பதிவுகளில் காட்டுங்க. :-)
    //
    அடுத்த வார நட்சத்திரமோ??????


  63. குமரன் (Kumaran) said...

    உங்கப் பதிவுக்கு மட்டும் 70, 80ன்னு பின்னூட்டம் வரணும்ன்னு நினைக்கிறீங்களே. நம்ம பதிவுகளுக்கும் வந்து பின்னூட்டம் போடுங்க. வந்து ரொம்ப நாளாச்சேன்னு சொன்னேன். :-)


  64. குமரன் (Kumaran) said...

    இராமநாதன், அக்கா சொல்றது பின்னூட்டக் கலையை. சொல்லித் தெரிவதில்லை பின்னூட்டக் கலை. அது உங்களுக்கு இயற்கையாகவே கைவந்திருக்குன்னு சொல்றாங்க.


  65. கைப்புள்ள said...

    என்னது அது காஸ்பரோவ் இல்லையா? போங்க ராமநாதன் ஆனாலும் உங்களுக்கு ரொம்ப தான் குறும்பு!


  66. குமரன் (Kumaran) said...

    //அடுத்த வார நட்சத்திரமோ??????
    //

    கூர்மையான புத்தி ஐயா உங்களுக்கு. :-)


  67. இலவசக்கொத்தனார் said...

    postal codes - நம்ம ஊரில் PIN, அமெரிக்காவில் ZIP.

    அது சரி, காஸ்பரோவுக்கும் (GKK), மான்டோயாவிற்கும் (JPM) அவ்வளவு சாயல் ஒற்றுமை இருக்கா என்ன?


  68. குமரன் (Kumaran) said...

    அட ஆமாம். இலவசக் கொத்தனார். நீங்க சொன்னது இதுவரை தோன்றவில்லையே.


  69. குமரன் (Kumaran) said...

    70வது பின்னூட்டம். இராமநாதன். இந்த ஆட்டத்துல இருந்து இதோட நின்னுக்கிறேன். என்ன? :-)


  70. குமரன் (Kumaran) said...

    PIN என்றால் Postal Index Number. ZIP என்றால்?


  71. இலவசக்கொத்தனார் said...

    பிரபலங்கள் - மேலும் சிலர். ஆர்.எம்.வீரப்பன், எம்.எஸ்.சுப்புலட்சுமி, டி.எஸ்.பாலைய்யா, வி.என்.ஜானகி, சி.என்.அண்ணாதுரை, டி.என்.சேஷகோபாலன், டி.எம்.கிருஷ்ணா....


  72. இலவசக்கொத்தனார் said...

    Zone Improvement Plan என்பதன் மூ.எ.சு. நமது பின்கோடின் உபயோகம்தான்.


  73. இலவசக்கொத்தனார் said...

    என்னங்க குமரன், மினஸோட்டாவிலே இருந்து கொண்டே இப்படி கேக்கறீங்களே.. சும்மானா காலை வாரரீங்களா?


  74. முகமூடி said...

    சரி... TLAவாவது ஒண்ணாவது, எப்படியும் பின்னூட்டக்குத்துன்னு முடிவு பண்ணியாச்சு... அடிச்சு ஆடிடுவோம்... (பிற்காலத்துல தேவைப்படும்போது நம்மள கண்டுக்கணும் சொல்லிபுட்டேன்)


  75. முகமூடி said...

    ஷகீலா :p


  76. முகமூடி said...

    ரேவதி (குட்டி அல்ல)


  77. முகமூடி said...

    கே.பி.எஸ் (alias அவ்வையார்)


  78. முகமூடி said...

    குஷ்பு (என் சிறு வயது தங்கத்தலைவி இவங்கதான்)


  79. முகமூடி said...

    நிரோஷா (செந்தூரப்பூவே ஞாபகம் இருக்கா.. நான் பிறந்தன்னிக்கி ரிலீஸ் ஆன படம் இது)


  80. முகமூடி said...

    சில்க் (பாட்டி பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா)


  81. முகமூடி said...

    த்ரிஷா (யெஸ்டர் இயர் கனவுக்கன்னி)


  82. முகமூடி said...

    அஸின் (எப்போதும் கனவுக்கன்னி)


  83. முகமூடி said...

    நமீதா (என்னத்த சொல்ல)


  84. முகமூடி said...

    கஜோல் (வெண்ணிலவே வெண்ணிலவே)


  85. முகமூடி said...

    ஷில்பா (மெல்லிசையே)


  86. முகமூடி said...

    ஷ்ரேயா (மழையில நனைஞ்சா தும்மல் வந்திடாது)


  87. முகமூடி said...

    சினேகா (நாகப்பாம்பு ரவி வெவகாரம் முடிஞ்சி இப்பத்தான் மூச்சு விடறேன். என்ன ஏம்பா வம்புக்கி இழுக்கறீங்க)


  88. முகமூடி said...

    கிரண் (ஆனாலும் தமிழ் ரசிகருங்கள...)


  89. முகமூடி said...

    கௌதமி


  90. முகமூடி said...

    ஸ்ரீதேவி (எப்படிய்யா இன்னைக்கும்)


  91. முகமூடி said...

    ராதிகா (குட்டி பேர்ல ஒரு டிவி நடிகை இருக்காங்கல்ல)


  92. முகமூடி said...

    நக்மா (அதாம்பா நம்ம ஜோ குட்டியோட சிஸ்டர்)


  93. முகமூடி said...

    மனீஷா (உயிரே... உயிரே)


  94. முகமூடி said...

    ரம்பா (பள்ளி ஜொள்ளு சங்க தலைவி)


  95. முகமூடி said...

    ஷாலினி (நல்ல வேளை சீக்கிரமே கல்யாணம் கட்டிகிட்டாங்க)


  96. முகமூடி said...

    ஷுஷ்ஷு (நம்ம ஷுஸ்மிதா சென் ஹிஹி)


  97. முகமூடி said...

    ஐஸ்ஸு (யாருன்னு தனியா சொல்லணுமா)


  98. சின்னவன் said...

    அடடா. என்னய்யா நடாக்குது. இங்கே
    பின்னூட்டத்துக்கு கஸ்மால பொடி ஏதாச்சும் கொடுக்கறாங்களா ?
    செஞ்சுரி போட்டாச்சா ?


  99. முகமூடி said...

    சந்யா (நம்ம காதல் பட நாயகிதாம்பா... கற்பனை பஞ்சம்தாம்... ஒரு "த்" உட்டு போச்சி கண்டுகாதீங்க... )


  100. இலவசக்கொத்தனார் said...

    முகமூடி, வேணாம். விட்டிடுங்க.


  101. முகமூடி said...

    100

    நூறு

    100

    நூறு

    one zero zero

    நூறு


  102. இலவசக்கொத்தனார் said...

    முகமூடி, வேணாம். விட்டிடுங்க.


  103. குமரன் (Kumaran) said...

    ஆஹா. வந்துட்டான்ங்கய்யா வந்ட்டான்ங்க. இது நமக்குத் தெரியாம போச்சே.


  104. சின்னவன் said...

    அடடா. என்னய்யா நடாக்குது. இங்கே
    பின்னூட்டத்துக்கு கஸ்மால பொடி ஏதாச்சும் கொடுக்கறாங்களா ?
    செஞ்சுரி போட்டாச்சா ?

    என் பின்னூட்டம் எங்கே போச்சு ??

    199 runout ஆட யூணூஸ் கான் மாதிரி ஆகிப் போச்சே :-(


  105. முகமூடி said...

    200 பின்னூட்டம் யார் போட்டாலும் இராம்ஸ் எனக்கு ஒரு தங்க பேனா தருவதாக வாக்களிப்பார் என்ற என் நம்பிக்கையை இந்த நேரத்திலே ஜோடா குடிக்காமலேயே ஆணித்தரமாக அடித்துக்கூற விரும்புகிறேன்...


  106. `மழை` ஷ்ரேயா(Shreya) said...

    ஹி.. ஹி..

    எல்லாம் அவசர அவசரமா வாசிக்கிறதால வர்ற வினை! //இன்னிக்கு மெட்ரோல வரச்சே//ங்கறதை "இன்னிக்கு மெட்ராஸ்ல"னு வாசிச்சுட்டேன். அதுதவிர, இங்கே 35°C< கொளுத்துது இல்லையா.. அந்தத் தாக்கமும்தான்!! :O)


  107. பிரதீப் said...

    மூணெழுத்துக்கு முன்னூறு பின்னூட்டங்கள்!
    கலக்கிட்டீங்க சார்!


  108. டிபிஆர்.ஜோசப் said...

    உங்க அம்மாப்பா TLA அருமை புரிஞ்சு உங்களுக்கு TLA^2 பேர கொடுத்துட்டாங்க போலிருக்கு. :)//

    என்னாங்க இராமநாதன் புரியலீங்க..

    என் மூன்றெழுத்தின் விரிவாக்கம் வேனுமா?

    THOMAS BOSCO ROSARIO JOSEPH!!!!

    போதுமா. அத சொல்லி சொல்லி எல்லார் நாக்கும் சுளுக்கிறப் போதுன்னு பயந்துதான் வேலைக்கு சேர்ந்ததுமே டிபிஆர். ஜோசப்புன்னு சுருக்கிட்டேன்.. எம்ஜிஆர் மாதிரி டிபிஆர்.. எப்படி :-))


  109. rv said...

    //அக்கா சொல்றது பின்னூட்டக் கலையை. //
    அட ஆமாம். தூக்கக் கலக்கத்துல நேத்திக்கு தோணல. அவங்க ப்ரெஷ்ஷா எழுந்து வந்து எழுதிருப்பாங்க.

    அவங்க ஸ்டைலிலேயே பின்னூட்டம் போடறேன். (பின்ன மூன்றெழுத்து பதிவு முன்னூறாவது ஆக வேணாமா? :))


  110. rv said...

    கைப்புள்ள,
    //ஆனாலும் உங்களுக்கு ரொம்ப தான் குறும்பு!
    //
    அப்படியென்னங்க நான் குறும்பா சொல்லிபுட்டேன்? என் போட்டோன்னு தானே சொன்னேன். :)


  111. rv said...

    குமரன்,
    //நம்ம பதிவுகளுக்கும் வந்து பின்னூட்டம் போடுங்க. வந்து ரொம்ப நாளாச்சேன்னு சொன்னேன்//
    வந்தாச்சு. செஞ்சாச்சு.

    //70வது வாய்ச்சிருக்கான்னு//
    இருநூறு வாய்க்க வாழ்த்துகிறேன். எல்லாம் "நமக்கு நாமே" திட்டந்தான்.


  112. rv said...

    //கூர்மையான புத்தி ஐயா உங்களுக்கு//
    இ.ரொ.ந

    TLA வ மறந்துடக்கூடாதே?

    கொத்தனாரே,
    //காஸ்பரோவுக்கும் (GKK), மான்டோயாவிற்கும் (JPM) அவ்வளவு சாயல் ஒற்றுமை இருக்கா என்ன?
    //
    இதுக்கு மேல இந்த விஷயத்த பத்தி இங்க பேசினா, ஜனநாயக முறைப்படி பின்னூட்ட மட்டுறுத்தல் அமலாக்கப்படும் என்று உங்களின் இதுசார்ந்த பின்னூட்டங்கள் அழிக்கப்படும் என்றும் எச்சரிக்கிறேன். :)))))


  113. rv said...

    குமரன்,
    //70வது பின்னூட்டம். இராமநாதன். இந்த ஆட்டத்துல இருந்து இதோட நின்னுக்கிறேன். என்ன? :-)
    //
    அதுக்குள்ள சோர்வா? தமிழ் பின்னூட்ட சாதனையாளர்கற புரட்சிமிகு எழுச்சியில் நீங்களும் பங்குகொள்ளணுமின்னா இன்னும் ஆர்வத்தோட இருக்கணும்!

    கொத்தனாரே,
    அது!! பதிவுக்கு சம்பந்தமுள்ள ஆழமான பின்னூட்டம். டி.என்.சேஷன், வி.எஸ்.இராகவன், எம்.எல்.வசந்தகுமாரி, கே.எஸ்.இரவிக்குமார், எம். ஆர். இராதா இன்னும் நிறைய பேர் இருக்காங்களே.


  114. rv said...

    இ.கொ,
    //Zone Improvement Plan //
    இது நமக்கும் தெரியாதேயா. தெரியாதத சொல்லி பின்னூட்டப் போட்டு மட்டுமில்ல, விஷயஞானமும் அடங்கிய பதிவுன்னு நிருபிச்சதுக்கு நன்றி.


  115. rv said...

    தல,
    வருக வருக.

    //எப்படியும் பின்னூட்டக்குத்துன்னு முடிவு பண்ணியாச்சு... அடிச்சு ஆடிடுவோம்... (பிற்காலத்துல தேவைப்படும்போது நம்மள கண்டுக்கணும் சொல்லிபுட்டேன்)
    //

    இன்னும் அள்ளித்தருக தருக.

    புல் பார்மில் விளையாடி குவார்ட்டர் (சதந்தான்) அடிச்சிருக்கீங்க. அதுக்கு ஷ்பெஷல் டேங்க்ஸ். பிற்காலத்துல கண்டிப்பாய் கவனத்தில் கொள்ளப்படும். :)


  116. rv said...

    //ஷகீலா//
    எடுத்தோனயே அடல்ட்ஸ் ஒன்லியா?? நடக்கட்டும். நடக்கட்டும். ஆனா, PG-13 பதிவு இது. கொஞ்சம் சாக்கிரதை.

    //ரேவதி (குட்டி அல்ல)//

    ஒரிஜினலவிட குட்டி தான் இப்பல்லாம் பாப்புலர்னு நினைக்கிறேன்.


  117. rv said...

    //கே.பி.எஸ் (alias அவ்வையார்)//
    ஞானப்பழத்தை பிழிஞ்சு ஜூஸ் எடுத்தவங்களாச்சே! மறக்கமுடியுமா?

    //குஷ்பு (என் சிறு வயது தங்கத்தலைவி இவங்கதான்)//
    போட்டிக்கட்சி ஆரமிக்கபோறதா மண்டபத்துல பேசிக்கறாங்களே.


  118. rv said...

    //நிரோஷா (செந்தூரப்பூவே ஞாபகம் இருக்கா.. நான் பிறந்தன்னிக்கி ரிலீஸ் ஆன படம் இது)
    //
    இது என்ன 89-லயோ என்னவோ தானே வந்துது? பொறந்த வருஷம்னு பொளந்து கட்டுறீரு?

    //சில்க் (பாட்டி பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா)
    //
    தனியா நேத்து இராத்திரி யம்மான்னு ஒரு பதிவையே இவங்களுக்குன்னு டெடிகேட் செஞ்சிருக்கேனே.


  119. rv said...

    //த்ரிஷா (யெஸ்டர் இயர் கனவுக்கன்னி)//
    ஹூம். எப்படி இருந்திருக்கவேண்டிய ஆளு. பாத்ரூம், பீச்னு இப்படி ஆயிடுச்சே!

    அது சரி, செனோடாப் ரோடுல விஜய் மல்லையா, டிவிஎஸ் க்கு போட்டியா வீடு வாங்கியிருக்காங்களாமே? உண்மையா?


    அஸின்,
    அப்பா.. அவங்க பேர இனிமே இங்க சொல்லாதீங்கையா..

    பழைய பின்னூட்டத்தின் மறுவெளியீடு.
    அஸின்னு எழுதி வச்சு படிச்சாலே எனக்கெல்லாம் மயிர் கூச்செரியுதே? ஏன் ஏன் ஏன்?


  120. rv said...

    //நமீதா (என்னத்த சொல்ல)//
    வ.வ.உ

    //கஜோல் (வெண்ணிலவே வெண்ணிலவே)
    //
    அது ஒரு கனாக்காலம்!

    //ஷில்பா (மெல்லிசையே)//
    ஹூம்ம்...(பெருமூச்சு!)


  121. rv said...

    //ஷ்ரேயா (மழையில நனைஞ்சா தும்மல் வந்திடாது)
    //
    இன்னும் இவங்கள பாக்கலியே. தலீவர் படத்தில வேற நடிக்கறாங்க. அப்ப பாத்துக்க வேண்டியதுதான்.

    //சினேகா (நாகப்பாம்பு ரவி வெவகாரம் முடிஞ்சி இப்பத்தான் மூச்சு விடறேன். என்ன ஏம்பா வம்புக்கி இழுக்கறீங்க)
    //
    இந்தப்பூனையும் பால் குடிக்குமான்னு நம்காலத்து புன்னகை அரசி என்னத்துக்கு இப்டியெல்லாம் மாட்டிக்கிட்டாங்க? அவர் போட்டோவல்லாம் வேற வர்ல்ட்வைட் ரீலீஸ் செய்வேன்னு வேற பயமுறுத்தராராமே.


  122. rv said...

    //கிரண் (ஆனாலும் தமிழ் ரசிகருங்கள...)//

    மறுபடியும் வ.வ.உ (பதிவோட மையக்கருத்த மறந்துடக்கூடாதே)

    //கௌதமி//
    மழ வருது மழ வருது. குட கொண்டு வா!


  123. rv said...

    //ஸ்ரீதேவி (எப்படிய்யா இன்னைக்கும்)
    //
    தலீவா, உணர்ச்சிவசப்படாதே. என்னிக்கு இருந்தாலும் சிப்பியிருக்குத மறக்க முடியுமா?

    //ராதிகா (குட்டி பேர்ல ஒரு டிவி நடிகை இருக்காங்கல்ல)//
    இவங்களும் டிவி. குட்டியும் டிவி. இரண்டு பேரும் அடிச்சிகிட்டா நமக்கு பொழுதுபோகுமில்ல. இப்ப மாதிரி?


  124. rv said...

    //நக்மா (அதாம்பா நம்ம ஜோ குட்டியோட சிஸ்டர்)
    //
    (ஆனாலும் தமிழ் ரசிகருங்கள...) இதையே இதுக்கும் போட்டுக்கலாம். ஸ்கூல் படிக்கறச்சே ஒரு பிரண்டு சொன்னான். 'வெள்ளப் பல்லிய திருப்பிப்போட்டா மாதிரி இருக்காங்களேனு'. அன்னிலேர்ந்து இவங்கள பாத்தா பல்லிதான் நியாபகத்துக்கு வந்து தொலைக்குது. ஜோ குட்டி ஆயிட்டாங்களா??

    //மனீஷா (உயிரே... உயிரே)
    //
    மனீஷான்னு சொன்னோனயே மனசுல ஒட்டுறா மாதிரி நச்-னு ஒரு பாட்டு போட்டீங்களே. அதுக்கு நன்றி. ம்யூசிக் இண்டியா ஆன்லைன் சுட்டி கிடைக்கலியா? அது இல்லாம எப்படி? நான் தரேன். இதோ


  125. rv said...

    //ரம்பா (பள்ளி ஜொள்ளு சங்க தலைவி)
    //
    அழகிய லைலா. சந்தனப் பேலா.. அடுத்த சுட்டி தரவா?? இங்கே

    //ஷாலினி (நல்ல வேளை சீக்கிரமே கல்யாணம் கட்டிகிட்டாங்க)//
    உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு படத்துக்கு பாட்டு பாடினத நிசமாக்கிட்டாங்களே.


  126. rv said...

    //ஷுஷ்ஷு (நம்ம ஷுஸ்மிதா சென் ஹிஹி)
    //
    :)))) ஷகலக்க கலக்க லக்க லக்க க்க க (விக்கல்)

    //ஐஸ்ஸு (யாருன்னு தனியா சொல்லணுமா)
    //
    அடடா, செல்லப்பெயர் வைக்கறதில கில்லாடியா இருக்கீங்களே. வெண்ணிலா வெண்ணிலா வந்ததே முதற்காதல். இதோட நிறுத்திக்கறேன். :)


  127. rv said...

    //சந்யா//
    சனியான்னு சொல்ற மாதிரி இருக்குது. தல, பேர மாத்து! காதல் குட்டிக்கு அவப்பெயர் கற்பித்ததை கடுமையாக கண்டிக்கிறேன். (க.க.க - அப்பாடா திரும்ப பதிவுக்கு வந்தாச்சு).

    முக்கியமான சானியா - மறந்தாச்சா??? இதுலயும் பெயர்ப்பஞ்சமா? ஹரிணி, ரேக்கா (இது ஷோக்கா?), நதியா, சிம்மு, சரிகா னு நிறைய இருக்காங்களே..?


  128. rv said...

    ஒரு டமிளன் பின்னூட்ட சாதனை படைப்பதை தடுக்க முயற்சிக்கும் பாசிஸ ரேஸிஸ லெப்டிஸ இரத்தத் தெறிப்பற்ற வன்முறையாளர்களாம் சின்னவன் மற்றும் இலவசக்கொத்தனார் என்று அறியப்படும் இருவரையும் தமிழ் கூறும் நல்லுலகம் வன்மையாக கண்டிக்கின்றது என்று தமிழகமெங்கும் போஸ்டர் ஒட்டப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.


  129. முகமூடி said...

    இலக்கிய உலகுக்கும் ப்ளாக் உலகுக்கும் வித்தியாசம் தெரியாமல், ப்ளாக் உலகில் வந்து கண்டபடி இலக்கியம் பேசும் ஞானபீடத்தை ப.ம.க வன்மையாக கண்டிக்கிறது.


  130. கைப்புள்ள said...

    ராமநாதன்,
    அது உங்க போட்டோவா? அப்போ நீங்க ஒரு தமிழ் பேசும் ரஷியர்னு சொல்லுங்க. தமிழ் மொழியின் மேல் கொண்ட காதலின் காரணமாக 'ரோமனாவ்' என்ற தங்கள் இயற்பெயரை 'ராமநாதன்' என்று வைத்துக் கொண்டுள்ளீர்கள்...சரி தானே?


  131. rv said...

    தலை,
    огромны вам спасибо.
    //100

    நூறு

    100

    நூறு

    one zero zero

    நூறு
    //
    அடடா...என் பதிவில் முதல் நூறு. அதற்கு என்றென்றும் நன்றி! நூறு முன்னூறாகாதான்னு ஒரு ஆசைதான். அதையும் நீங்களே முன்னின்று நடத்தித் தரவேணும்னு அன்போட கட்சி தொண்டன் கேட்டுக்கறேன். மறுக்க மாட்டீங்களே??


  132. rv said...

    குமரன்,
    //ஆஹா. வந்துட்டான்ங்கய்யா வந்ட்டான்ங்க//
    இப்படிச் சொன்னா எப்டி? வந்ததுக்கு ஒரு மூணு போடறது??? :)))

    சின்னவரே,
    //இங்கே
    பின்னூட்டத்துக்கு கஸ்மால பொடி ஏதாச்சும் கொடுக்கறாங்களா ? //
    கஸ்மாலப் பொடி கொடுத்து கூட்டம் சேக்கவேண்டிய அவசியம் ப.ம.க தொண்டர்களுக்கு இல்லையென்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். தொண்டனுக்கு ஒன்றென்றால் ஓடோடி வர தன்மானத்தலைவரும், அலையென திரண்டெழ இருபதுகோடி தமிழர்களும் இருக்கிறோம் என்பதையும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

    //என் பின்னூட்டம் எங்கே போச்சு ??//
    எங்கேதான் போச்சு????


  133. rv said...

    /// எனக்கு ஒரு தங்க பேனா தருவதாக வாக்களிப்பார் என்ற என் நம்பிக்கையை//
    நம்பிக்கையே வாழ்க்கை

    ஆடு இல்லாவிட்டால் ரோடு இருக்குமா?

    சந்திரன் இல்லாவிட்டால் சக்கரைப்பொங்கலும்தான் கிட்டுமா?

    (ஞா.பீ ஸ்டைலில்)


  134. rv said...

    மழை,

    //அதுதவிர, இங்கே 35°C< கொளுத்துது இல்லையா.. அந்தத் தாக்கமும்தான்!! :O)
    //
    வெயிலோட சேர்த்து என் வயித்தெரிச்சலும் உங்களை சுட்டெரிக்கக் கடவது!!! :))

    ப்ரதீப்,
    //மூணெழுத்துக்கு முன்னூறு பின்னூட்டங்கள்!
    //
    வருமுன் கூறும் ஆருடமோ? இல்லை வாழ்வாங்கு வாழ ஆசிகளோ? இரண்டுக்கும் நன்றி!


  135. rv said...

    ஏஜெண்டு,
    இலக்கியமெனும் மேல்பீடத்தில் அமர்ந்துகொண்டு தூற்றும் உம்மை ஏன் 'ம்' விட்டு என் தலைவர் அழைக்கிறார் என்று புரிந்துகொள்ள உதவியதற்கு நன்றி! நன்றி!! நன்றி!!!

    ப.ம.க வின் கண்டனத்தை நான் வழிமொழிகிறேன்!


  136. rv said...

    ஜோசப் சார்,
    //என்னாங்க இராமநாதன் புரியலீங்க..//

    TBR மூன்றெழுத்து. ஜோசப்-பும் மூணெழுத்துன்னு சொன்னேன்.

    //எம்ஜிஆர் மாதிரி டிபிஆர்.. எப்படி :-))
    //
    அடாடா, என்னே தன்னடக்கம்! :)))


  137. rv said...

    கைப்புள்ள,
    இன்னும் கைப்புள்ளையாவே இருக்கீரே!

    //அது உங்க போட்டோவா? அப்போ நீங்க ஒரு தமிழ் பேசும் ரஷியர்னு சொல்லுங்க. தமிழ் மொழியின் மேல் கொண்ட காதலின் காரணமாக 'ரோமனாவ்' என்ற தங்கள் இயற்பெயரை 'ராமநாதன்' என்று வைத்துக் கொண்டுள்ளீர்கள்...சரி தானே?
    //
    ஹா! ஹா! புரியவில்லை????

    அதுக்குத்தான் க்ளூ கொடுத்துட்டேனே..:)


  138. rv said...

    தன்மானத் தமிழர்களே,
    நூறு கண்ட இந்தப் பதிவு, நூற்றியைம்தை நெருங்கிவிட்டோம். இருநூறும் முன்னூறும் கைக்கெட்டும் தூரத்தில் இருக்கின்றன.

    தமிழ் வளர்க்க அரிய வாய்ப்பு. தட்டி விடாதீர்கள். திரும்ப வராது.

    அடங்க மறு என்று சொல்லி இருநூறை விரைவில் தொடுவோம். கைக்கோர்த்து இல்லை சாவித்தட்டை (கீ-போர்ட்) கோர்த்து!

    நூற்றியைம்பதாம் பின்னூட்டம் இட்டு தமிழுலகில் முத்திரை பதிக்கப் போகும் தமிழார்வலன் நீங்களாகவும் இருக்கலாம். 150 விட்டால் மனச்சோர்வு வேண்டாம். இருநூறும் நம் பக்கத்திலே.

    நன்றி நன்றி நன்றி!


  139. rv said...

    நன்றி சதீஷ்..

    அப்படியே சுருக்கங்களுக்கு முழு அர்த்தத்தையும் சொல்லிருக்கலாம்.


  140. rv said...

    சதீஷ்,
    விட்டுப்போச்சே..

    150 தட்டியதற்கு வாழ்த்துகளும் நன்றியும்.


  141. ENNAR said...

    கருணாநிதி சொல்லுவர் மூன்றுத்தைப்பற்றி அழகாக.


  142. rv said...

    அட,
    அதுக்குள்ள சுருதி குறைஞ்சிருச்சே!

    தன்மானத் தமிழர்களே.. எங்கே உன் கடமை, கண்ணியம், தமிழார்வம்? பின்னூட்டத்தில் சாதனை படைக்கும் இக்கூட்டுமுயற்சியில் அயர்ச்சியின்றி பங்கெடுக்கவேண்டாமா?

    மீண்டும் சில மூன்றெழுத்துகள்.
    எல்லாம் இங்கே பயன்படுத்துவது.

    ARR, KVM, MSV


  143. குமரன் (Kumaran) said...

    MNKஐ விட்டுட்டீங்க. அது தாங்க மல்லி நடராஜன் குமரன்.

    கேள்விப்பட்ட பேரா இருக்கா? இருக்கலாம். ரொம்ப் பாப்புலர் இவரு. :-)


  144. சின்னவன் said...

    பாகிஸ்தான் பிட்ச் கணக்க்கா ஆகிப்போச்சு இந்த பதிவுகள்
    ஆளாளுக்கு செஞ்சுரி, டபுள் செஞ்சுரி அடிக்கிறாங்க

    Shoaib Akthar கிட்டத்தட்ட 50 அடிகிறான்னா பிட்சோடத் தரம் என்ன ?

    இந்த கமெண்டுக்கும் ஏஜெண்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை








    பாகிஸ்தான் பிட்ச் கணக்க்கா ஆகிப்போச்சு இந்த பதிவுகள்
    ஆளாளுக்கு செஞ்சுரி, டபுள் செஞ்சுரி அடிக்கிறாங்க

    Shoaib Akthar கிட்டத்தட்ட 50 அடிகிறான்னா பிட்சோடத் தரம் என்ன ?

    இந்த கமெண்டுக்கும் ஏஜெண்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை !!!!


  145. rv said...

    என்னார்,
    கலைஞர் அழகா என்ன மூண சொல்வார்?

    MNK,
    கேள்விப்பட்டிருக்கேனே! ரொம்பவே பாப்புலரனாவர்தான். :)


  146. rv said...

    சின்னவரே,
    ப்ளாக்மெயில் பதிவு போட்டீரு. மறப்போம் மன்னிப்போம் கற தமிழ் மரபுல அத மன்னிச்சா, இங்க வந்து பிட்ச் சரியில்லன்னு கலாய்க்கிறீரு. இது டு மச்சா இல்ல???

    ஏற்கனவே 160க்கே மூச்சுமுட்டித்தான் வந்துருக்கு. ஒரு மூன்னூறுக்காவது கொண்டு போவணும்னு லட்சிய வெறியோட பாத்துகிட்டுருக்கேன். போதிய ஊட்டச்சத்து இல்லியோ? கஸ்மாலப் பொடி பரிசு கொடுக்காமலேயே பாஞ்சு வரும் தொண்டர்களே.. என் சிங்கங்களே. நீங்கள் எங்கே எங்கே எங்கே? எ. எ. எ? எதற்காக யாருக்காக ஓடி ஒளிந்திருக்கிறீர்கள்???


  147. குமரன் (Kumaran) said...

    எல்லாரும் நம்ம பதிவுக்கு வந்துட்டாங்கப்பு. கடையைக் கட்டுங்க. ஆமாம் சொல்லிப்புட்டேன் :-)


  148. இலவசக்கொத்தனார் said...

    கமல்


  149. இலவசக்கொத்தனார் said...

    ரஜினி


  150. இலவசக்கொத்தனார் said...

    சிவாஜி


  151. இலவசக்கொத்தனார் said...

    சிம்பு


  152. இலவசக்கொத்தனார் said...

    அஜித்


  153. இலவசக்கொத்தனார் said...

    விவேக்


  154. இலவசக்கொத்தனார் said...

    ராஜேஷ்


  155. இலவசக்கொத்தனார் said...

    நாகேஷ்


  156. இலவசக்கொத்தனார் said...

    ரமேஷ் (அரவிந்த்)


  157. இலவசக்கொத்தனார் said...

    கணேஷ் (டெல்லி)


  158. இலவசக்கொத்தனார் said...

    மஹேஷ் (பட்)


  159. இலவசக்கொத்தனார் said...

    குமார் (டெல்லிதானே - அந்த சீரியல் அப்பா)


  160. இலவசக்கொத்தனார் said...

    முத்து (மு க)


  161. இலவசக்கொத்தனார் said...

    இராஜா (பாட்டெல்லாம் பாடுவரே. இது ஓக்கேவா?)


  162. இலவசக்கொத்தனார் said...

    மாதவி (கண்ணு ரொம்ப அழகு. ஆம்பளைங்களை சொல்லி அலுத்துப் போச்சு)


  163. இலவசக்கொத்தனார் said...

    ஜானகி


  164. இலவசக்கொத்தனார் said...

    சித்ராக்ப்


  165. இலவசக்கொத்தனார் said...

    க்ப் தப்பா வந்திருச்சு - அது சித்ராதான்


  166. இலவசக்கொத்தனார் said...

    ஜிக்கி 9பாவம் இறந்துட்டாங்க)


  167. இலவசக்கொத்தனார் said...

    ராகினி


  168. இலவசக்கொத்தனார் said...

    சரோஜா (தேவிதாங்க, அது சரியில்லைன்னா புலியூர்)


  169. இலவசக்கொத்தனார் said...

    ராகினி சொன்னேன் லலிதாவை விட்டுட்டேனே


  170. இலவசக்கொத்தனார் said...

    ஷோபனா - அதே குடும்பம்


  171. இலவசக்கொத்தனார் said...

    ஜெமினி


  172. இலவசக்கொத்தனார் said...

    தனுஷ்


  173. இலவசக்கொத்தனார் said...

    நதியா


  174. இலவசக்கொத்தனார் said...

    அமலா


  175. இலவசக்கொத்தனார் said...

    ஆச்சி (அட இப்போ இவங்க பேரே இதுதான்


  176. இலவசக்கொத்தனார் said...

    ரங்கா (தலைவர் நடித்தாலும் இன்றும் வாழும் பாத்திரம்)


  177. இலவசக்கொத்தனார் said...
    This comment has been removed by a blog administrator.

  178. பினாத்தல் சுரேஷ் said...

    மாங்கு மாங்குன்னு ஹோம்வொர்க் செஞ்சு பதிஞ்சா ரெண்டு, மூணு கமெண்ட்டு வருகின்ற காலத்திலே, 200-ஐ நெருங்கும் ராமநாதர் தன் தொழில்நுணுக்கத்தைப் பரவலாக்க வேண்டும் எனக்கேட்டுக்கொள்கிறேன். அது முடியாத பட்சத்தில் தனி மடலிலாவது!


  179. பினாத்தல் சுரேஷ் said...

    மாங்கு மாங்குன்னு ஹோம்வொர்க் செஞ்சு பதிஞ்சா ரெண்டு, மூணு கமெண்ட்டு வருகின்ற காலத்திலே, 200-ஐ நெருங்கும் ராமநாதர் தன் தொழில்நுணுக்கத்தைப் பரவலாக்க வேண்டும் எனக்கேட்டுக்கொள்கிறேன். அது முடியாத பட்சத்தில் தனி மடலிலாவது!


  180. பினாத்தல் சுரேஷ் said...

    EUI - electronic unit injection


  181. பினாத்தல் சுரேஷ் said...

    CTS - Controlled Throttle Shifting


  182. பினாத்தல் சுரேஷ் said...

    EMS - Electonic Monitoring System


  183. பினாத்தல் சுரேஷ் said...

    கொஞ்சம் எங்க கம்பேனி மேட்டரு.. கண்டுக்காதீங்க!


  184. பினாத்தல் சுரேஷ் said...

    DBS - Dealer Business System


  185. பினாத்தல் சுரேஷ் said...

    இதுதாண்டா இருநூறு!


  186. முகமூடி said...

    200


  187. முகமூடி said...

    200

    200

    200

    200

    200

    200

    200


  188. முகமூடி said...

    சைக்கிள் கேப்ல உள்ள பூந்து 200அ தட்டிட்டேன்னு திட்டாதீங்க பெனாத்தலார். முயற்சி செஞ்சா 300அ தட்டலாம் நீங்க. (ஆனாலும் அப்பவும் என்கிட்ட கொஞ்சம் எச்சரிக்கையாவே இருங்க)


  189. குமரன் (Kumaran) said...

    முகமூடி போட்டுக்கிட்டு ஒருத்தர் வந்திருக்கார்ங்றதாலே தானே நான் இந்த விளாட்டுல இருந்தே விலகினேன். முகமூடிகிட்ட மோத முடியுமா? :-)


  190. பினாத்தல் சுரேஷ் said...

    தனியாத் திறக்கிற கமெண்ட் பாக்ஸில் என்னுடையது இருநூறாவது, பதிவ்வொடு இருப்பதில் மாஸ்க்காருக்கா? இது என்ன அநீதி? சதிவேலை?


  191. rv said...

    குமரன்,
    // கடையைக் கட்டுங்க. ஆமாம் சொல்லிப்புட்டேன் :-)
    //

    என்ன செஞ்சு என்ன? ப.ம.க தொண்டரின் துயர் தீர்க்க வந்திடுச்சி பாத்தீங்களா? இதுக்குத்தான் அரசியலையும் கவனிக்கனும்கறது. :))


  192. rv said...

    கொத்தனாரே,
    நீங்க போற ரூட்ல போனா இன்னும் ஏகப்பட்ட நூறுக்கு ஸ்கோப் இருக்கும் போலிருக்கே!

    தனியாளாய பதிவை அழிவிலிருந்து காப்பற்றியமைக்கு ஸ்பெஷல் நன்றி நன்றி நன்றி!! ந.ந.ந!!!

    ஆனாலும் பேருக்கேத்தமாதிரி freemason வேலையப் பண்ணி யாரோடது இருநூறாவது பின்னூட்டம்னு குழப்ப வச்சிட்டீங்களே! :)) அதுக்கு ந.ந.ந!


  193. rv said...

    பெனாத்தலாரே,
    //தன் தொழில்நுணுக்கத்தைப் பரவலாக்க வேண்டும் எனக்கேட்டுக்கொள்கிறேன். அது முடியாத பட்சத்தில் தனி மடலிலாவது!
    //
    எல்லாம் கேட்டுவாங்கிக்கற நமக்கு நாமே திட்டந்தான். இதில் ரகசியம் என்ன இருக்கு? அரசியல் பின்புலம் இருந்தாத்தான் வலைப்பூ உலகத்துல கூட இப்படியெல்லாம் பண்ணமுடியுது. செய்ண்ட் பீட்டர் வட்டம் நானே செய்யும்போது ஒரு பிரபலமான கட்சிக்கு கொ.ப.செ வான நீங்க என்னவெல்லாம் செய்யலாம் பாருங்க. அனுமார் மாதிரி தம் சக்தி தெரியாமல் இருக்கீரே?

    index படி நீங்கதான் இருநூறு!

    பொது விண்ணப்பம்!
    அழிக்கப்பட்ட பின்னூட்டத்தை ஆட்டத்தில் சேர்க்கலாமா வேணாமா என்று ஆன்றோர்கள் இக்களத்தில் விவாதித்து இருநூறு கண்ட லட்சிய பதிவர் தலையா இல்லை கொ.ப.சே வா என்று விவாதிக்கலாம்!!


  194. குமரன் (Kumaran) said...

    //பொது விண்ணப்பம்!
    //

    ஹூம். இதுக்கு ஒரு நூறு கமெண்ட் வரும்ன்னு பாக்குறீங்களா? நடக்கட்டும் நடக்கட்டும். :-)


  195. rv said...

    தலை,
    content படி இருநூறு உமக்கு!

    //சைக்கிள் கேப்ல உள்ள பூந்து 200அ தட்டிட்டேன்னு திட்டாதீங்க பெனாத்தலார்//

    சரிபாதியா பகிர்ந்து இருநூறு கண்ட பாதி லட்சிய பின்னூட்டாளர்னு உமக்கும் கொ.ப.சேவுக்கும் கொடுக்கவா இல்லை விவாதித்து ஒருவரே வெற்றி பெற்றவர் என்று கொடுக்கவா?

    // முயற்சி செஞ்சா 300அ தட்டலாம் நீங்க. (ஆனாலும் அப்பவும் என்கிட்ட கொஞ்சம் எச்சரிக்கையாவே இருங்க)
    //
    நீர் நினைத்தால் முடியாதது என்ன? இதேபோல் முன்னின்று இப்பதிவை முன்னூற்றிற்கும் ப.ம.க இட்டு செல்ல வேண்டும் என்பதே என் வேண்டுகோள். கட்சியின் பிரதிநிதியாய் போதுமான அளவு விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. கொடுக்கப்படும். இப்பதிவை கட்சியின் மக்களிடம் செல்வாக்கை சோதித்துப் பார்க்க, அல்ல எடுத்தியம்ப ஓரு முயற்சியாய் அன்புடன் கொள்ளவும். (தேவையில்லையெனினும், எதிரிகளுக்கு ஓர் எச்சரிக்கையாக!)

    ஆதரவை என்றும் நாடும்,
    சாதாத் தொண்டன்


  196. குமரன் (Kumaran) said...

    இராமநாதன்,

    பமகன்னா என்னா?


  197. சின்னவன் said...

    ராகுல் ( திராவிட் )
    கபில்
    சுனில் ( கவாஸ்கர் )
    ஜிம்மி ( அமர்நாத், ஆடம்ஸ்)
    திலீப் (வெங்சாகர்
    திலீப் (ஜோஷி)
    ராமன் லம்பா
    ராமன் ( W V )
    பாலாஜி
    ஸ்ரீநாத்
    வெங்கி ( பிரசாத்)
    சுனில் (ஜோஷி)
    ரிக்கி பாண்டீங்
    மார்க் ( டைலர், வாக், ராம்பிரகாஷ் )
    ஆடம் ( கில்கிர்ஸ்ட், ஆண்ட் ரு )
    காலிஸ் ( ஜாக் )
    கெளதம் கம்பீர்
    வாசீம் ( அக்ரம், ஜாபர், மொகமது)
    ஷாகீத் (அப்ரிதி)
    ஷோயம் ( அக்தர், மொகமத் )
    தானீஷ்
    யூனூஸ் (கான், வகார் )
    காதர் ( அப்துல் )
    ஜாவீத் (மியான் தாத் )

    ----------
    இது எல்லாத்தையும் தனித்தனியா போட்ட 300 போயிருக்கும் !


  198. rv said...

    குமரன்,
    //இதுக்கு ஒரு நூறு கமெண்ட் வரும்ன்னு பாக்குறீங்களா?//
    கேள்வியின் தொனியே சரியில்லியே. :))

    //பமகன்னா என்னா?
    //
    ஆஹா... தலைவா... காலைக்காட்டு. கேட்டீரே ஐயா ஒரு கேள்வி. இதுக்கு விடைசொன்னாலே பதிவு ஐநூறைத் தாண்டிடுமே!!! அதனால் விடை சொல்லாமல் விடுகிறேன். எதற்கும் தமிழ்மணம் ஆர்க்கைவ்ஸில் ஜூன், ஜூலை மாதங்களை வைத்துத் தேடவும்.


  199. rv said...

    சின்னவன்,
    ஆட்டத்தில் சேர்ந்தமைக்கு நன்றி. ஆனால், ஒரு பின்னூட்டத்தில் மூன்றுக்கு மேற்பட்ட விஷயங்களை கூறக்கூடாது என்னும் எழுதப்படாத விதியை வேண்டுமென்றே மீறியிருக்கிறீர் என்று கருதுகிறேன்.

    //
    இது எல்லாத்தையும் தனித்தனியா போட்ட 300 போயிருக்கும் !//
    இந்த வரிக்கு அர்த்தம் தமிழ்கூறும் நல்லுலகிற்கு என்னவென்று புரிந்தே இருக்கிறது. அதற்கு தக்க விடையை சமயத்தில் அளிப்பார்கள். :)


  200. முகமூடி said...

    குமரன், ப.ம.க பத்தி தெரியாம ஒரு வலைப்பதிவர் இருக்கலாமா? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க ::


 

வார்ப்புரு | தமிழாக்கம்