1. பனியில் உறைந்திருக்கும் பூங்கா
2. Church of Spilt Blood - இதப்பத்தி ஏற்கனவே ஒரு பதிவு போட்டுருக்கேன் இங்க
3. Anichkov Bridge பார்த்தோமில்லியா. அது பக்கத்தில இருக்கற ஒரு கட்டிடத்தின் facade. டியோடரண்ட் நல்லா வேலை செய்யுதா இல்லியான்னு பாக்கறாங்க
4. Peter & Paul Fortress இல் இருக்கற சர்ச். இந்த அரண்மனை தான் முதல் முதலில் பீட்டர்ஸ்பர்க்கின் ஆதாரம். பீட்டர்ஸ்பர்க் பத்தின பழைய பதிவு இங்கே.
5. Vladimirskyi Cathedral - வீட்டுப் பக்கத்தில இருக்கற கதீட்ரல்.
நம்மூர் போட்டோ இல்லாமலியா.. நாள நாளன்னிக்கு போடறேன்.
Click on Images to view Full size
28 Comments:
அழகான புகைப்படங்கள்.
இன்னும் கொஞ்சம் பெரிதாகப்போட்டிருக்கலாமே?
நம்ம ஊர் படங்களைப்போட்டமாதிரி..
நேத்திவரைக்கும் உங்க பெரியகோயில் படமொன்றுதான் என் கணினித் திரையை அலங்கரிச்சது. இன்னிக்கு சரவணன்(சரவ்) தஞ்சை போற வழில எடுத்த படத்தைப்போட்டுட்டேன். பனிக்காலத்தில வயக்காட்டைப்பார்க்கலாம்னு. ;)
-மதி
4,5 are very nice.
(
If you could have avoided those power lines .... :-)
)
மதி,
நன்றி.
//இன்னும் கொஞ்சம் பெரிதாகப்போட்டிருக்கலாமே//
5 மெகாபிக்ஸெல் படங்களைத்தான் அப்லோட் பண்ணேன். photobucket ஏதோ குளறுபடி செய்திருக்கிறது. இன்னொரு முறை முயற்சி செய்து பார்க்கிறேன்.
காத்திருந்து காத்திருந்து பதிவு வந்தவுடனே படிச்சா உருப்படியா ஒண்ணும் எழுதாம இதென்ன இராமநாதன் படம் காமிக்கிறீங்க....நட்சத்திரப் பதிவு போல இல்லையே? Disappointed. :-(
ஆனந்த்,
நன்றி
//If you could have avoided those power lines .... :-)//
இங்க இதுதான் பிரச்சனை. எல்லா இடத்திலேயும் குறுக்கே நெடுக்கே மேலே கீழே எங்கேயும் பவர் லைன்ஸ் பறந்துக்கிட்டிருக்கிம்.
குமரன்,
இன்னிக்கு வேலை ஜாஸ்தி.. (சரி சரி, வெட்டி சாக்கு)
பீட்டர்ஸ்பர்க் பத்தி ஏற்கனவே எழுதிருக்கேனே..
நன்றி
Peter & Paul Fortress படம் எடுக்கப்பட்ட விதம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. different perspective...
(ஒன்னு)
அப்புறம் உங்க படம் http://cars.grandprix.com.au சைட்டுல பார்த்தேன். முழு சிட்டு என்னாத்துக்கு இப்போ.. எல்லாம் பின்னூட்டப்பரிசு அறிவிப்பு முடிஞ்சி பாத்துக்கலாம்.. முடிவ பொறுத்து ;-)))
(ரெண்டு)
போன பின்னூட்டம் கறுப்பு மெயிலை போல் தொனிக்குதா? அது சும்மனாங்காட்டிக்கு... ஆனாலும் நாட்டாம, பரிசு கொடுக்கும் முன் ஒன்னு முறைக்கு ரெண்டு முறை யோசித்து முடிவெடுக்கவும் (மூன்று)
அருமையான படங்களும் , இடங்களும்.
எல்லாப் படங்களும் நன்றாயிருக்கின்றன இராமநாதன்.
இதுக்கு மேல என்ன எழுதுறதுன்னு தெரியல... :-)
ஸ்டாலின்,லெனின் படம் போடலயா? ஷோசலிசம் போயி ஐக்கிய சோவியத் குடியரசு உடஞ்சு போனோன்ன எல்லாருக்கும் தகிரியம் வந்துருச்சுல்ல!
தல,
நன்றி.. நம்ம படம் வலபூராவும் போடுறாங்களா?? முதல்ல கேஸ் போடணும். அப்பத்தான் அடங்குவாங்க.
//ரெண்டு முறை யோசித்து முடிவெடுக்கவும் //
யோசிக்கறேன்!
அக்கா,
நன்றி
குமரன்,
நீங்க நேத்திக்கு சொன்னவுடனே, சரி எதுனாவது வித்தியாசமா இன்னிக்கு பண்ணிடனும்னு காலையிலேயே எழுந்து என் வாழ்க்கையிலேயே முததடவையா ஒண்ணு பண்ணிருக்கேன். கொஞ்சம் பொறுமை.
வெளிகண்டநாதரே,
//எல்லாருக்கும் தகிரியம் வந்துருச்சுல்ல!
//
அவுத்து விட்ட கழுதை தெரியுமா உங்களுக்கு? அதான் இப்போ நடக்குது இங்கே. Lenin Who?
ஐயா இராமநாதா....நேத்து பூரா பதிவு வரலையேன்னு ராத்திரி வரைக்கும் திரும்பத் திரும்ப பாத்துட்டு வீட்டுக்குப் போயிட்டேன். இன்னைக்கு வந்து பாத்தா கண்ணுக்கு விருந்தாகும் கலர் போட்டோ. நல்லாருக்கு.
அது சரி. இந்த பீட்டர்ஸ்பெர்க்தானே முன்னாடி ஸ்டாலின் கிரேடு?
ராகவன்,
நன்றி..நேத்திக்கு கொஞ்சம் வேலை ஜாஸ்தி.. இன்னிக்கு சீக்கிரமாவே பதிவு போட்டாச்சு. :)
//இந்த பீட்டர்ஸ்பெர்க்தானே முன்னாடி ஸ்டாலின் கிரேடு?
//
அது வேற ஊர். இது முன்னாடி Leningrad.
ஓ அது வேற இது வேறயா!
அப்புறம் அந்த மூனாவது படத்த எடுக்கும் போது, அந்தக் கட்டிடத்தை சாச்சுப் பிடிச்சிக்கிட்டது யாருன்னு சொல்லவே இல்லையே!
நீங்க வேற ராகவன்,
deo spray சரியில்லேன்னு அவங்களே வருத்தத்துல தலைய சாச்சுகிட்டாங்க..
public static void main(String[] args) throws thamizmanamExceptions
{
System.out.println("அழகான புகைப்படங்கள்./nநன்றி இராமநாதன்.");
}
மோகன்தாஸ்,
//public static void main(String[] args) throws thamizmanamExceptions
{
System.out.println("அழகான புகைப்படங்கள்./nநன்றி இராமநாதன்.");
}
//
என்ன இது என்ன இது என்ன இதுவோ????? ஹேக்கிங் Hacking-ஆ??
என்னவோ.. நான் வேலைக்கு கிளம்பறேன்..
ராம்ஸ், படமெல்லாம் நல்லா இருக்கு, ஆனா உங்க தஞ்சாவூர் படங்களை மிஞ்ச எதுவுமே இல்லை போலருக்கு.
தாங்கள் கிரம்ளின் மாளிகையை படம் பிடித்து போடுங்கள் தலைவர் காமராஜர் ஒருவர் தான் தமிழர் முறைப்படி வேட்டி சட்டையுடன் சென்றவர் மேலே உள்ளதில் எழுத்துப்பிழை இருந்ததால் நீக்கிவிட்டேன்.
தற்போது உள்ள படம் நன்றாக உள்ளது.
பவர் லைன் என் கண்ணுக்குத்தெரியாமல் போனது என்ன...?
நாட்டாம, பரிசு கொடுக்கும் முன் ஒன்னு முறைக்கு ரெண்டு முறை யோசித்து முடிவெடுக்கவும் (ஐந்து)(சும்மா ஒரு நம்பர கொடுத்து வைப்போமேன்னுதான்..!)
சுதர்ஸன்,
நன்றி.
என்னார்,
நன்றி.
//தாங்கள் கிரம்ளின் மாளிகையை//
என்னோட வீட்ட பாக்கணும்னு அவ்ளோ ஆசையா? :)
பெரீய்ய்யப்பா,
அஞ்சாவது படத்துல குறுக்கே நெடுக்கே கறுப்பா பறக்குதே... தெரியலியா??
நன்றி.
பீட்டர்ஸ்பர்க் மையமா வச்சி ஒரு ரஷ்சிய புதினம் படித்த நாள் முதலா பீட்டர்ஸ்பர்கை பார்க்கணும்ன்னு அகோரப் பசிக்கு உஙக படங்கள் நொருக்குத்தீனி :-) படங்களுக்கு நன்றி :-)
ரவிகுமார் ராஜவேல்,
மிக்க நன்றி.
Post a Comment