Indians - safest, most committed and most satisfied

வருடாவருடம் போலவே இந்த ஆண்டும் 41 நாடுகளில் 317,000 மக்களிடம் உலகின் மிகப்பெரும் ஆணுறை நிறுவனமான டியுரெக்ஸ் தனது DGSS எனப்படும் செக்ஸ் குறித்த கருத்துக்கணிப்பை நடத்தியிருக்கிறது. அதில் இந்தியர்கள் அளித்த சில பதில்கள் இதோ..

முன்பின் தெரியாதவர்களுடன் உடலுறவு கொள்வோர் - 21% (global ave. 47%)

வாழ்நாளவில் உறவு கொள்ளும் பார்ட்னர்களின் எண்ணிக்கை - 3 (9 - துருக்கியில் 14.5 பேர்!)

One Night Stands - 13% (44%)

வர்ஜினிடி இழக்கும் சராசரி வயது: 19.8 (17.6, ஐஸ்லாந்து - 15.6)

தங்கள் செக்ஸ் வாழ்க்கை திருப்திகரமாய் இருப்பதாய் சொன்னவர்கள்: 46 (44%)

தங்கள் செக்ஸ் வாழ்க்கை போரடிப்பதாய் சொன்னவர்கள்: 3 (7%)

போர்னோகிராபி வழக்கமாய் படிப்போர்/பார்ப்போர் - 37%

மக்களிடம் எதைப் பற்றி இன்னும் அதிக விழிப்புணர்வு வரவேண்டியிருக்கிறது? எய்ட்ஸ்/ஹெச்.ஐ.வி - 87%

வருடத்திற்கு - 75 நாட்கள் (103, கிரீஸ் - 138, க்ரோயேஷியா - 134, ஜப்பான் - 45)

47% இந்தியர்கள் பள்ளிகளில் செக்ஸ் பாடத்திட்டத்தை 14 வயதிலிருந்து புகுத்த வேண்டுமென்று சொல்லியுள்ளனர்.

மேலதிக விபரங்களுக்கு: Durex GSS05

இந்த கணிப்பு நம் நாட்டில் எந்தெந்த ஊர்களில் நடத்தப்பட்டது என்று தெரியவில்லை. பிரத்தியேக ஆணுறைகள் உபயோகிப்பதாக 28% இந்தியர்கள் வாக்களித்துள்ளதால் நகரங்களாகத்தான் இருக்கவேண்டும் என்பது என் கணிப்பு. அதே போல பள்ளிகளில் செக்ஸ் பாடத்திட்டத்தை புகுத்த வேண்டும் பாதிக்கு பாதி பேராவது சொல்லியிருப்பதும் ஆறுதலானாலும் மிச்ச 50 சதவிகிதம் பேர் என்ன நினைக்கிறார்கள் என்று விளங்கவில்லை. நாடெங்கும் எய்ட்ஸ் அசுர வேகத்தில் பரவிக்கொண்டிருக்கும்போது மக்களிடையே இதைக்குறித்த விழிப்புணர்வு, நகரங்களுக்கு மட்டுமாவது வந்து சேர்ந்திருக்கிறதோ? இல்லை இதுவே வெறும் பகல்கனவா? இன்னமும் கிராமப்புறங்கள்..

6 Comments:

  1. தாணு said...

    இந்தியா டுடே பெண்களைப் பேட்டியெடுத்தது, ட்யூரெக்ஸ் ஆண்களை கருத்துக் கேட்கிறது. எதுவானாலும், `தீப்பிடிக்க தீப்பிடிக்க' சூடாக இருக்கும் விஷயங்களைத்தான் விவாதிக்கிறார்கள்


  2. rv said...

    தாணு,
    இந்த மாதிரி விஷயங்களை குறித்து எழுதுவதில் அவர்களுக்கு வியாபார நோக்கம் தான் பிரதானம் என்றாலும், செக்ஸ் கல்வி, விழிப்புணர்வு, தற்காப்பு போன்ற விஷயங்களில் நம் சமூகம் எப்படி சிந்திக்கிறது என்று ஒருவித consensus தெரியவருவதால் இத்தகைய கருத்துக்கணிப்புகளை நான் வரவேற்கவே செய்கிறேன்.


  3. Ganesh Gopalasubramanian said...

    //cஒன்சென்சுச் தெரியவருவதால் இத்தகைய கருத்துக்கணிப்புகளை நான் வரவேற்கவே செய்கிறேன்.//
    உண்மை தான். ஆ.வில மதன் அடிக்கடி இது போல கணிப்புகள் போடுவார். இதில் தவறேதுமில்லை என்பதே என் கருத்து.


  4. G.Ragavan said...

    என்னுடைய கருத்தும் அதுவே. செக்ஸ் விஷயத்தில் இன்னும் கொஞ்சம் விழிப்புணர்ச்சியும் பாதுகாப்பும் தேவை என்று இந்தியாவின் இன்றைய நிலையிலிருந்து தெரிகிறது.

    ஒரு தொண்டு நிறுவத்தோடு தொடர்புடைய நண்பருடன் பேசிக் கொண்டிருந்தேன். இதுவும் ஒரு கதைக் கருவிற்காகத்தான். அப்பொழுது கிடைத்த செய்தி மிகவும் கலங்க வைப்பதாக உள்ளது.

    இந்தக் காலத்தில் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அவசியமாகிறதாம். நகரங்களில் மட்டுமல்ல. கிராமங்களிலும்தான். நகரங்களை விட கிராமங்களில் குழந்தைகளுக்கு, குறிப்பாக பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு மிகவும் குறைவாக இருக்கிறதாம்.

    இந்தப் பாதுகாப்பின்மை அனைத்துத் தட்டுகளிலும் இருப்பதே மிகக் கொடுமை. good touch, bad touch கற்றுக் கொடுத்து அவர்கள் குழந்தைத் தன்மையை அழித்தாவது குழந்தைகளைக் காக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று தெரிகிறது. பெங்களூரில் இருந்தும் அதன் சுற்றுப்புற ஹள்ளிகளில் (பட்டிக்காடுகளில்) இருந்து பல குழந்தைகள் இங்கு வருகிறார்களாம்.

    மிகவும் வருத்தத்திற்கு உரிய விஷயம் என்னவென்றால் குழந்தைப் பருவத்தில் அவர்கள் பெறும் அந்த கொடூர அனுபவம் நின்று நிலைத்து கடைசி வரை வருகிறதாம். கேட்டுக் கொண்டிருந்த எனக்கு பேச்சே வரவில்லை.

    வயது வந்தவர்கள் முறையான செக்ஸ் அறிவைப் பெற்றிருந்தால் மட்டுமே இந்த நிலை கொஞ்சமாவது மாறும் என நினைக்கிறேன். ஆகையால் நாட்டில் பள்ளியில் இருந்தே செக்ஸ் கல்வி மிகவும் அவசியமாகிறது. ஆண்பிள்ளைகளும் பெண்பிள்ளைகளும் சங்கோஜமின்றி பழகும் நிலையும் வர வேண்டும்.

    இராமநாதன், நீங்கள் ஒரு மருத்துவர். இந்த விஷயத்தை இன்னும் விளக்கமாகவே சொல்ல வேண்டும். வயது வந்தவர்களுக்குள் உண்டாகும் பாலியல் வன்முறை என்பது ஒரு புறம் இருக்க, குழந்தைகள் மேல் எப்படி ஒருவருக்கு ஈடுபாடு உண்டாகிறது? இதற்கு அறிவியல் காரணங்கள் எதுவும் உண்டா?


  5. rv said...

    நன்றி கணேஷ்

    ராகவன்,
    நீங்கள் குறிப்பிட்டிருப்பது paedophilia. ஏழெட்டு இருக்கிறது இந்த மாதிரி. Sadism, Masochism, Exhibitionism போன்ற இவற்றை deviant sexual behaviour - "paraphilia" என்று கூறுவார்கள். இன்னொரு பக்கம் இது deviant-ஏ இல்லை. மாறாக ஓரினச்சேர்க்கை மாதிரி சமூகத்தால் ஒத்துக்கொள்ள முடியாத relationships மட்டுமே என்று சொல்வோரும் உண்டு. குழந்தை, பருவநிலை, அடல்ட் என்று வேறுபடுத்துதல் நாட்டுக்கு நாடு மாறுபடுவது ஒரு பிரச்சனை. பொதுவாக, 16 வயதுக்கு மேலுடைய ஒருவர் தன்னை விட ஐந்து வயது குறைந்த 13-18 வயதுடையவரை (வன்/ஒப்புதலோடு) புணர்ந்தால் அது இந்நோய்க்கான கூறு என்று சொல்கிறோம். அதுவும், தொடர்ச்சியாக நடக்க வேண்டும். இதிலும், சில பிரிவுகள் இருக்கின்றன. சமூகத்தால் ஒத்துக்கொள்ளப்படாத ஒன்றானாலும் சில சமயங்களில் பதின்ம வயது குழந்தைகளும் செக்ஸில் ஆர்வம் காட்டலாம்.

    மரபணுக்கள், மூளையின் லிம்பிக் ஸிஸ்டத்தின் குறைபாடு, அதிகப்படியான ஆண் ஹார்மோன்கள், செரடோனின் போன்ற வேறு சில வஸ்துக்கள் என பல தியரிகள் இருக்கின்றன. ஆனால், உண்மையில் எதுவுமே நிருபிக்கப்படவில்லை. சிறுவயதில் பாலியல் வன்முறைக்குள்ளானோருக்கு பிற்காலத்தில் இந்நோய் வரலாம் எனவு ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

    குழந்தைகளை பாலியல் வன்முறைக்குட்படுத்துவோர் எல்லாரும் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூற முடியாது. Established Pedophiles மற்றும் Situational Offenders என்று பிரிக்கலாம். இரண்டாவது வகையே அதிகம். குடும்பங்களுக்குள் நடப்பது பெரும்பாலும் இரண்டாவது வகைதான். அவர்கள் சூழ்நிலையின் காரணமாய் துணிகின்றனர். முதல் வகை நோய்வாய்ப்பட்டவர்கள். இதற்கு மருத்துவத்தின் மூலம் ஓரளவிற்கு நம்பகமான தீர்வு இருந்தாலும் - சட்டச்சிக்கல்களும், சமுதாய புறக்கணிப்பும் மிக அதிகம் என்பதால் மற்ற மனநோய்களைப் போல் சிகிச்சைக்கு தன்னிச்சையாய் வருவோர் மிக குறைவு.

    பாதிக்கப்படும் குழந்தைகளின் நிலை மிகவும் பரிதாபகரமானது. அதற்கு தனி பதிவே போடலாம்.


  6. G.Ragavan said...

    ஐயோ! இராமநாதன். நீங்க இங்கிலீஷ்ல சொல்றீங்க. ஆனா பிரச்சனை ஹள்ளிகள் வரைக்கும் இருக்கே. ஆனா கேக்கும் போது மனசு ரொம்பக் கஷ்டமா இருக்கு.

    எனக்கு ஒரு சின்ன டவுட்? குழந்தைகளை நாமெல்லாம் கொஞ்சுகிறோம் இல்லையா. இந்தக் கொஞ்சல் அளவுக்கு மீறிய வகைதான் peadophilia-வா? அப்படியென்றால் யாரையும் கொஞ்ச விடாமல் குழந்தைகளை வைத்துக் கொள்ளலாம் அல்லவா.


 

வார்ப்புரு | தமிழாக்கம்