Scrubs

இந்த வீக்கெண்டிற்கு புகழ்பெற்ற, எனக்கு மிகவும் பிடித்த தொடர்களில் ஒன்றான அமெரிக்க சிட்காமான Scrubs டிவிடிகள் கிடைத்தன. மெகாத்தொடர்களுக்கு மத்தியில் வித்தியாசமானதாகவும், மருத்துவ சம்பந்தப் பட்டதாகவும் இருப்பதாலும் இது எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாகிப் போனது. ஏனோ, friends போன்றவை மனதில் ஒட்டுவதில்லை. இந்தியாவில் ரீரன் ஏதேனும் வருகிறதா என்று தெரியவில்லை. ஆனால், வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாய் பாருங்கள். நகைச்சுவையும், செண்டியும் சரியான விகிதத்தில் கலக்கப்பட்ட அட்டகாசமான தொடர்.

சரி, விஷயத்துக்கு வருவோம். இதுவரையில் நான் பார்த்த பல மருத்துவமனைகளில் மருத்துவர்களில், குறிப்பாய் சர்ஜன்கள் மிகவும் ஜாலியான பேர்வழிகளாய் இருப்பர். ஏகப்பட்ட macho ஜோக்குகள், பல விரசமானவை ஆப்பரேஷன் டேபிள்களில் கூட பறக்கும். மருத்துவர்களும் இந்த விஷயத்தில் குறைந்தவர்களில்லை. நோயாளிகளின் முன்னேயே பல சமயங்களில் ஜோக்கடிப்பர். அது எப்பேர்ப்பட்ட critical நோயாளிகளாயிருந்தாலும். இன்று இந்தத் தொடரில் நான் விட்டுப்போன ஒரு பகுதியை பார்க்கும்வரை நானும் பலசமயம் முகம் சுளித்ததுண்டு. என்னடா இது, நோயாளிகளிடத்தில் இவ்வளவு insensitive ஆக இருக்கிறார்களேயென்று. ஒரு முறை யூராலஜி வகுப்பு. ரவுண்டுஸுக்கு போயிருந்தோம். ESWT செய்யபடவேண்டியுள்ள கிட்னி ஸ்டோன் உள்ள நோயாளி. அவரின் ஹிஸ்டரியை ஆசிரியரிடம் விளக்கிக்கொண்டிருந்த நான் என்ன காரணத்தாலோ, நோயாளிக்கு பெல்ட் போல வலி இருக்கிறது என்பதை என் இடுப்பை சுற்றி சைகையால் காண்பித்தவாறே சொன்னேன். இடைமறித்த ஆசிரியர் "I hope you wont ever have to work in gynaecology" என்று ஒரு போடு போட்டார். எனக்கு மிகவும் அசிங்கமாக போய்விட்டது. அதே நேரத்தில் இப்படி பொறுப்பில்லாமல், இன்ஸென்ஸிடிவ்வாக கமெண்ட் அடிக்கிறாரே என்று வேறு கோபம். இது ஒரு உதாரணம் தான்.


ஆனால், பல சமயம் இந்த துணுக்குகள் insider jokes ஆகவே இருக்கும். அதாவது, மருத்துவம் சாராதவர்களுக்கும் பெரும்பாலும் புரிய வாய்ப்பில்லை. எங்கள் தெரபி ஆசிரியை எங்களை வாருவதுண்டு "I asked you to auscultate her heart, not palpate her tuberculi". இதில் வெளியாட்களுக்கு என்ன நடக்கிறதென்று புரியாது. மருத்துவமோ லத்தீனோ தெரிந்தவர்கள் மட்டுமே புரிந்து கொள்வார்கள். பல இருக்கிறது இந்த மாதிரி. அதற்கு பதில், இந்த தொடரிலிருந்து தெரிந்து கொண்டேனென்றால் நம்புவீர்களா? எனக்கும் அதிசயமாக இருந்தது.

இத்தனை (என்ன பெரிசா, 7 வருஷம்) அனுபவமிருந்தும் நம்மால் இந்த சின்ன சைக்காலாஜிக்கல் விஷயத்தை புரிந்து கொள்ள முடியவில்லையே என்று. அது என்னவென்றால், நோயாளியை third person ஆக கருதுவது. அதாவது, எந்தப் பிரச்சனையுமே, நோய்கள் உட்பட, நமக்கோ நம் நெருங்கிய உறவினர்/நண்பர்களுக்கோ வந்தால் அதை நாம் எதிர்கொள்ளும் விதமே வேறு. அப்போது, எப்போதுமில்லாத ஒரு personal dimension, வந்து நம்மை படுத்திவிடும். அதனாலேயே, தீவிரமான நோய்களுக்கு அடுத்த மருத்துவரின் உதவியை நாடுவது வழக்கம். இதற்கு என்னுடைய psychiatry cycle தான் நினைவுக்கு வருகிறது. அதில் தினமும் படிக்கும் ஒவ்வொரு மனநோயும் நமக்கோ நம் உறவினருக்கோ இருக்கிறதோ என்று தேவையற்ற பயம் தொற்றிக்கொள்ளும். எங்கள் ஆசிரியர், தினமும் முன்னுரையாக, "Never Diagnose, especially self diagnose, if you aint a competent, qualified doctor yet!" என்று எச்சரித்தாலும், அது தவிர்க்கமுடியாத ஒன்று. ஏனென்றால், நம் சொந்தம், நாம், நம் உறவு போன்ற பந்தங்கள் often cloud our judgements. அவற்றிலிருந்து விலகி objective ஆக அணுகுவதற்கு மிகவும் அனுபவம் வேண்டும்.

வசூல்ராஜா படத்தில் 'நோயாளிகளை objects ஆக பார்க்காதீர்கள், subjects ஆக பாருங்கள்' என்ற holier-than-thou அறிவுரையை கமல் வழங்குவார். அது தவறென்பது என் கருத்தாகும். நோயாளி உங்கள் நண்பரென்றால், அவருக்கு கீமோதெரபிக்கு ரெகமண்ட் செய்வதற்கோ இல்லை scalpel வைக்கவோ ஒரு நிமிடம் மனது பதைபதைக்கும். ஏனென்றால், மருத்துவர்களும் மனிதர்கள்தானே. ரோபாட்கள் அல்லவே. அதனால், குடும்ப டாக்டர் என்பவர் நண்பர் என்ற உறவில் சிக்காமல் இருப்பதே நலம். நோயாளியில் gratitude இனால் அவரின் குடும்ப நிகழ்ச்சிகளிலோ, பிரச்சனைகளிலோ தலையிடும் உரிமையை தங்கள் மருத்துவர்களுக்கு தருகின்றனர். அவ்வகையில், கலந்து கொள்ளலாம். ஆனால், அதற்கு ஒரு limit இருக்கிறது. என்று ஒரு நோயாளியை உங்கள் நண்பராகவோ, சொந்தமாகவோ கருத ஆரம்பிக்கிறோமோ அன்றே objectivity போய்விடுகிறது. இதற்கு exceptions உண்டு. ஆனால், முன்கூறியவாறு அதற்கு மிகவும் அனுபவம் வேண்டும். என்னைப் போன்ற சின்னப்பசங்களுக்கு இது மிகவும் கஷ்டமான விஷயம். பந்தம் என்னும் சுழற்சியில் சிக்கிக்கொள்கிறோம். தேன் துளி, தாணு போன்ற அனுபவம் வாய்ந்தோர் இதை எப்படி எதிர் கொள்கின்றனர் என்பதை அறிய ஆவல்.
---------------

5 Comments:

  1. ENNAR said...

    // இந்தியாவில் ரீரன் ஏதேனும் வருகிறதா என்று தெரியவில்லை.//
    வந்தால் கண்டிப்பாக பார்க்கவேண்டும்


  2. G.Ragavan said...

    இராமநாதன், மருத்துவர்கள் என்றாலே நோபிள் புரபொஷன் தானே. அதில் இதுதான் சரி. இதுதான் தப்பு என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாது என்று நான் கருதுகிறேன். ஆனாலும் கனிவாகப் பேசும் டாக்டர் கிட்டப் போனா சந்தோஷமா இருக்கு.

    இன்னோன்னு பாத்திருக்கேன். சிடுமூஞ்சி டாக்டரா இருப்பாரு. கூட்டம் வழியும். கேட்டா கைராசி டாக்டர்ன்னு சொல்வாங்க.


  3. தாணு said...

    ராமநாதன் ,
    நல்ல கேள்வி. நோயைக் குணமாக்கும் நேரங்களில் மருத்துவர்-நோயாளி என்ற உணர்வு ஆட்டோமடிக்காக வந்து ஒட்டிக்கொள்ளும். அப்போது ஒருவகையான transformation நமக்குள் வந்துவிடும்தானே. ஏற்கனவே உங்களின் வேறொரு பதிவில் ஐஸ்வர்யாராய் உதாரணத்துடன் சொல்லியிருந்தேன் என்று நினைக்கிறேன். பிரியமானவர்களுக்கோ நெருங்கியவர்களுக்கோ வைத்தியம் செய்யும்போது என் மனம் சஞ்சலப்படுவதோ, குழம்புவதோ இல்லை. கத்தி வைக்கும்போதோ ஊசி குத்தும்போதோ தடுமாறியதும் இல்லை. நமக்கு சொந்தமானவர்களுக்கு நம்மைவிட வேறு யாரால் பொறுப்பாக வைத்தியம் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை வந்துவிடும். எங்க வீட்டில் அடுத்த தலைமுறை வாண்டுகள் நிறைய என் னால் பிரசவிக்கப் பட்டவைதான். என் அம்மா, மாமனார், போன்றோர் புற்றுநோய் தாக்கி இறுதிக் காலங்களில் கஷ்டப்பட்டபோதும், அனைத்து வைத்திய உதவிகளும் நான்தான் செய்தேன். இறப்பதற்கு இன்னும் சில கணங்களே ஆகும் என்ற நேரத்தில், அந்த மறைவு ஆறுதலாக இருந்ததேயன்றி அழுகையை வரவைக்கவில்லை. Better to have an earlier, sufferingless death என்றுதான் தோன்றியது, as we think about anyother person. So I think, a DOCTOR within ourself is a different person..


  4. rv said...

    Ennar,
    வந்தால் மிஸ் பண்ணீடாதீங்க. மிக நல்ல தொடர்.

    ராகவன்,
    // கேட்டா கைராசி டாக்டர்ன்னு சொல்வாங்க//
    இது உண்மைதான். நானும் பலபேரை பார்த்திருக்கிறேன் இந்த மாதிரி.


  5. rv said...

    நன்றி தாணு,
    // DOCTOR within ourself is a different person//
    இதற்கு நிறைய அனுபவம் வேண்டும் என்று புரிகிறது. எங்கள் குடும்பத்திலோ உறவினருக்கோ என்ன பிரச்சனையென்றாலும் என் தந்தை தான் வைத்தியம் செய்வதுண்டு. ஆனால், பல சமயங்களில் எனக்கு அருகில் இருக்கவே கஷ்டமாக இருக்கும். நாளாக சரியாகிவிடும் என்றுதான் என் தந்தையும் கூறுவார்.

    --
    சொல்ல வந்ததையே விட்டுவிட்டேன். ஜோக்ஸ் அடிப்பது ஒருவகை defence mechanism என்றே கருதுகிறேன்.


 

வார்ப்புரு | தமிழாக்கம்