ஈ நாட்டி நோமு பலமு!

ஈ நாட்டி நோமு பலமு! ஏ தான பலமு-ன்னு பாடத்தோணுது. பின்ன, எனக்கும் ஒருவார நட்சத்திரமா இருக்க வாய்ப்பு கிடச்சுதே. அதுக்கு முதல்ல
மதி மற்றும் தமிழ்மண நிர்வாகிகளுக்கு நன்றி.


அப்புறம், வஞ்சனையில்லாம வாழ்த்தி, பின்னூட்டி ஊக்கப்படுத்திய நண்பர்களுக்கு (பம்பர் பரிசு வச்சது ஒரு காரணம்னாலும். சரி, அடிக்க வராதீங்க)
ரொம்ப ஸ்பெஷல் நன்றி.

பரிசு என்னன்னும் யார் வெற்றி பெற்றாங்கன்னும் நாளக்கி சொல்றேன். இன்னிக்கு வேலை. மன்னிச்சுடுங்க. ஞாயித்துகிழமதானே. மத்தியானமா பதிவு
போடலாமுன்னு நினச்சேன். ஆனா, எதிர்பாரா விதமா முடியாம போச்சு. அதனால ரொம்ப நாள் முன்னாடி எழுதினத பதிச்சிட்டேன்.

நாளைக்கு நட்சத்திரமா போறவர்க்கு அட்வான்ஸ் வாழ்த்துகள். இந்த வாரம் தேறிச்சா இல்லியான்னு நீங்க தான் சொல்லணும்.

எல்லோருக்கும் மீண்டும் நன்றி!!

19 Comments:

  1. ilavanji said...

    நல்ல வாரம்!

    தீயினால் சுட்ட புண் - அருமை!
    விடுதலை - நல்ல கதை!

    அதெல்லாம் இருக்கட்டும். நட்சத்திரவாரம் முடிய இன்னும் ஒரு நாள் இருக்கப்பு! இன்னொரு பதிவை எதிர்பார்க்கிறோம்! :)


  2. பத்மா அர்விந்த் said...

    Ramanathan
    I was expecting more medical related blogs and your experince in Inidan hospitals etc:)


  3. தாணு said...

    சித்தன் வீடு கிரஹபிரவேச விழாவில் பங்கேற்ற விதமாக போன வாரம் முழுதும் பிஸியாகிவிட்டதால், உங்க நட்சத்திர வாரத்தில் முழுமையாக பங்கேற்க முடியவில்லை. இப்போதுதான் எல்லா பதிவும் பார்த்தேன். வாழ்த்துக்கள்


  4. வானம்பாடி said...

    நன்றி, நல்ல வாரம் நட்சத்திரமே!


  5. ramachandranusha(உஷா) said...

    pass, 50% :-)


  6. சிங். செயகுமார். said...

    பாஸ் பண்ணிட்டேள். இன்னும் சிறப்பா பண்ணி இருக்கலாம்


  7. rv said...

    இளவஞ்சி,
    இன்னிக்கும் ஒரு ஒப்புக்கு சப்பாணி பதிவு போட்டுட்டேனே!

    தேன்துளி,
    எழுத முயற்சிக்கிறேன். எழுதுன வரைக்கும் புடுச்சிருந்ததா? :)

    தாணு,
    அநியாயமா, பம்பர் போட்டியிலிருந்து விலகிக்கொண்டுவிட்டீங்களே. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!


  8. rv said...

    சுதர்ஸன்,
    நன்றி

    உஷா அக்கா,
    எங்க பீல்டுல 50% வாங்கினாலே சூப்பர் பிரில்லியண்டுன்னு அர்த்தம். :) வேணும்னா அத்தைய கேட்டுப்பாருங்க.

    சிங். செயக்குமார்,
    //பாஸ் பண்ணிட்டேள்//
    நன்றி. எல்லாம் உங்கள மாதிரி பெரியவா ஆசீர்வாதம். :)

    //இன்னும் சிறப்பா பண்ணி இருக்கலாம் //
    அப்படீன்னு எனக்கும் இப்போ தோணுது. ஹூம்.. :(


  9. பத்மா அர்விந்த் said...

    எழுதினவரைக்கும் நல்லா இருந்தது. (கேட்டா பின்ன எப்படி சொல்றது டாக்டர்)ஆமாம் எந்த மெடிக்கல் காலேஜுல 50% பாஸ்?


  10. துளசி கோபால் said...

    எழுதுனவரை நல்லா இருந்தது.

    முதல் ரெண்டு பதிவுகளும் உண்மைக்குமே நல்லா இருந்தது.

    சிறுகதை முயற்சியும் பரவாயில்லை.
    புகைப்படங்கள் அருமை.

    இவ்வளவு சொன்னதுக்காவது குலுக்கலில் இல்லேன்னாலும் தனியா ஒரு ஸ்பெஷல் பரிசு கட்டாயம் வந்துரணும், ஆமா.


  11. G.Ragavan said...

    இராமநாதன், என்னுடைய வாழ்த்துகள் உங்களுக்கு. நட்சத்திரம் வாரத்தில் மட்டுமல்ல என்றைக்கும் நல்ல பதிவுகளைத் தருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு. இன்னும் சிறப்பாக பல எழுதிப் பெயர் வாங்க வாழ்த்துகிறேன்.

    பிறகு இன்னொரு விஷயம். உங்களுடைய பிளாகில் பின்னூட்டம் இட முயலும் பொழுதெல்லாம் பாப்பப் விண்டோ மிகவும் நேரம் எடுக்கிறது. ஏன் என்றே தெரியவில்லை. காலையிலிருந்து பின்னூட்டம் போட முயன்று இப்பொழுது போட்டு விட்டேன்.


  12. rv said...

    தேன் துளி,
    //கேட்டா பின்ன எப்படி சொல்றது டாக்டர்//

    தெரிஞ்சுதானே கேக்கறோம்! :)))

    //எந்த மெடிக்கல் காலேஜுல 50% பாஸ்?
    //
    அடடா, அதெல்லாம் பொதுவுல சொல்லிடக்கூடாது..


  13. rv said...

    அக்கா,
    //குலுக்கலில் இல்லேன்னாலும் தனியா ஒரு ஸ்பெஷல் பரிசு கட்டாயம் வந்துரணும்//

    வரும் வரும் வரும் வ்ரும் வ்ரும் ரும்...

    நன்றி ராகவன்,
    //பாப்பப் விண்டோ மிகவும் நேரம் எடுக்கிறது. ஏன் என்றே தெரியவில்லை//

    ஏன் என்று தெரியவில்லை. ஆனால், அதே விண்டோவில் பின்னூட்ட பக்கம் வந்தால் சிரமமாக இருக்குமென்பதால் தான் பாப்-அப்.


  14. குமரன் (Kumaran) said...

    நட்சத்திர வாரம்
    நன்றாய் இருந்தது
    இராமநாதன்!!!!


  15. rv said...

    குமரன்,
    நன்றி

    இது என்ன கூத்தா இருக்கு. எழுதி ரெண்டு வாரமாச்சு. ஆனா, இன்னும் துரைங்கள்ளாம் இப்படி ஆர்வக்கோளாறா வந்து வாழ்த்திட்டு போறாங்களே..


  16. G.Ragavan said...

    எல்லாம் ஒரு பாசந்தான் இராமநாதன். நம்மூரு ஆளு மாதிரி இருக்காரேன்னு ஒரு பாசம். வேறென்ன.


  17. G.Ragavan said...

    அட இன்னோன்னு....இராமநாதன்...வெளுத்து வாங்குறீங்க :-))))))))))


  18. rv said...

    ராகவன்,
    முதல் நட்சத்திரப் பதிவுல் முதல்முதல்ல இதே பின்னூட்டம் விட்டவர் ராட் அண்ணா..

    கடைசி பதிவிலேயும் அதே பின்னூட்டத்த விட்டு ஒரு closure தேடறார்னு நினைக்கிறேன். :)


  19. G.Ragavan said...

    ராடு போயி ராச்செல் வந்ததுங்குறது இதுதானா? என்ன நடக்குது இராமநாதன்?


 

வார்ப்புரு | தமிழாக்கம்