இ. பி - 3: யூனியனின் கடைசி அத்தியாயம்

சென்ற பதிவை படிக்காதவர்கள் அதைப் படித்துவிட்டு தொடர்ந்தால் இப்பதிவு இன்னும் எளிதாக இருக்கும். பதிவின் முடிவில் இருவரைப் பற்றிச் சொன்னேனல்லவா? அவர்களில் ஒருவர் உலகெங்கும் கொண்டாடப்படும், ஆனால் ரஷ்யாவில் அடியோடு வெறுக்கப்படும் கோர்பசேவ். ஆனால், அந்த இரண்டாவது அதிரடி ஆசாமி யார் என்று இன்னும் புரியாதவர்களுக்கு - அவர் தான் போரில் யெல்ட்சின் (Boris Yeltsin). இவர் என்ன செய்தார் என்று சிறிது நேரத்தில் பார்ப்போம்.

முதலில் கோர்பசேவ். இவரின் "பெரிஸ்ட்ரோய்கா", "க்ளாஸ்நோஸ்த்" மற்றும் "உஸ்கோரெனியெ" பாலிஸிகள் மிகவும், குறிப்பாய் மேற்கத்திய நாடுகளில் பிரபலமானவை. முறையே மறுகட்டுமானம், transparency மற்றும் விரைவுபடுத்துதல் என்று பொருள் கொள்ளலாம். 1987-இல் இத்திட்டங்களில் மூலம் சோவியத் யூனியனை ஊறித்தேங்கிப் போன ஊழலலிருந்தும், ரெட்-டேப்பிலிருந்தும், அதிதீவிரமான சென்ஸார்ஷிப்பிலிருந்தும் விடுவிக்க முயன்றார் கோர்பசேவ். ஆனால், ஆட்சிசுகத்தில் திளைத்திருந்த அவரின் கட்சிசகாக்கள் இந்த மாற்றங்களை விரும்பவில்லை. கருவிக்கொண்டே காத்திருந்தனர். ஆனால், அவரால் கட்டவிழ்க்கப்பட்ட பேச்சு சுதந்திரம் அவருக்கே எதிரியாய்ப் போனது. சோவியத் யூனியனின் குளறுபடிகள், குழப்பங்கள் எல்லாம் ஊடகங்களின் மூலம் வீதிக்கு வந்தது. அன்றளவிலும் தெய்வமாய் வணங்கப்பட்ட ஸ்டாலினின் கொடுங்கோல் முறைகள் அம்பலமாயின. அதுவரை பொறுத்திருந்த மத்திய ஆசிய நாடுகளின் anti-russian எண்ணங்கள் தீவிரமாய் வேரூன்றத்தோன்றியது. செய்வதறியாது தவித்த கோர்பசேவ், சோ.யூ-வின் முதல் ஜனநாயக தேர்தலை நடத்தி அதில் முதலும் கடைசியுமாக சோவியத் ஜனாதிபதியானார்.

இந்த நிலையில் இடையில் புகுந்தார் யெல்ட்சின். சோ.யூவின் அங்கமான Russian Socialist Republic இன் Congress of soviet deputies தலைவராய் தேர்ந்தெடுக்கப்பட்டவர், முதல் காரியமாக சோவியத் யூனியனின் சட்டங்கள் சில தங்களுக்கு ஒவ்வாது என்று குண்டைப் போட்டார். கோர்பசேவ்வை பொதுவில் பலமுறை அவமானப்படுத்தி சோ.யூவின் பொதுச் செயலாளர் ஒன்றும் கடவுள் இல்லை என்று உணர்த்தினார். கோர்பசேவ் zero வாகவும் யெல்ட்சின் ஹீரோவாகவும் மாறியது: ஆகஸ்ட் மாதம் 1991-ஆம் வருடம் தீவிர கம்யூனிஸ்ட் கட்சியினர் சிலர் இராணுவத்தின் உதவியோடு கோர்பசேவை வீட்டுச் சிறை பிடித்து, சுதந்திரப் பிரகடனம் செய்த ரஷ்யாவை அடக்க அதன் வெள்ளை மாளிகை மேல் டாங்கிகளை ஏவினர். ஆனால், பொறுமையிழந்த மக்கள் யெல்ட்ஸினின் பின்னால் அணி திரண்டு செய்த ஆர்ப்பாட்டத்தினால் இராணுவம் பின்வாங்கியது. ஒரு வழியாய் 24 ஆகஸ்ட் 1991 விடுதலை என்று வந்தது. கோர்பசேவ் ஜனாதிபதி என்று விடுவிக்கப்பட்டாலும், அவரின் ஆட்சி அதிகாரம் செல்லுபடியாகவில்லை. ஆனாலும் 91-ல் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பெரும்பாலான மக்கள் சோவியத் யூனியன் நிலைத்திருக்க வேண்டுமென்றே விரும்பினர். ஆனால், மற்ற நாடுகளை அடக்கியாளும் தெம்பு கோர்பசேவிடத்தில் இல்லை.

டிசம்பர் 8, 1991 - உக்ரேயின் மற்றும் பெலாருஸ்ஸூடன் சேர்ந்து ரஷ்யா, சோவியத் யூனியன் இனி செல்லுபடியாகாது என்றும் அதற்கு பதில் தன்னிச்சையான CommonWealth of Independent States உருவாக்கப்படும் என்று பிரகடனம் செய்தது. டிசம்பர் 24, ரஷ்யா ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் சோவியத் யூனியனின் இடத்தை ஏற்றது. அடுத்த நாளே பதவியை ராஜினாமா செய்த கோர்பசேவ், அதன் மூலம் சோவியத் யூனியனிற்கு முடிவுரை எழுதினார்.

சரி, ஒருவழியாய் குழப்பம் தீர்ந்து நல்ல காலம் பிறக்கப்போகிறது என்று எண்ணிய ரஷ்யர்களின் தலையில் விழ மாபெரும் இடியொன்று காத்திருந்தது தெரியாமல் ஆர்வத்துடன் பொற்காலத்தை எதிர்பார்த்திருந்தார்கள். சோவியத் கால நிலைமையே தேவலை என்று மக்களை நினைக்க வைக்கும் அளவிற்கு இருந்தது அந்த அதிர்ச்சி. அப்படி என்ன அதிர்ச்சி என்று பார்ப்பதற்குமுன் - எப்படி மக்கள் அந்த பழைய அடிமை வாழ்க்கையையே மீண்டும் விரும்பி ஆதரிக்குமளவிற்கு மாறினார்கள் என்று உங்களில் சிலர் ஆச்சரியப்படலாம். அப்படி அதிசயப்படுபவர்களுக்கு சோவியத் நாடுகளில் இருந்த propaganda பீரங்கிகளுக்கு நிகராக அதே அளவு வீரியத்துடன் மேற்கத்திய நாடுகளிலும் பிரச்சார பீரங்கிகள் இயங்கி வந்தன என்பதே செய்தியாய் இருக்கலாம். சோவியத் யூனியன் பூலோக நரகம், அங்கு இருந்தவர்கள் எல்லோரும் கொடியவர்கள் என்பது மேற்கத்திய பீரங்கிகளின் நிரந்தர பிரச்சாரம். அப்படி உண்மையாகவே பூலோக நரகமா, சுவர்க்கமா என்று அடுத்த பதிவில் பார்ப்போம்.
-----
சரி, இப்போ ஒரு புது பகுதி: தினசரி ஐந்து ரஷ்ய வார்த்தைகள் - பயனுள்ளதாய் இருக்கும் என்று நினைக்கிறேன்

எப்படி ஒலிக்கவேண்டும் என்பதை மட்டும் rough-ஆக ஆங்கிலத்தில் சொல்லி விடுகிறேன். "-" syllable பிரிவதைக் குறிக்கிறது.
1. வணக்கம் - formal : Drasth-vy-iche - Здраствуйте
2. வணக்கம் - informal : Pri-vy-et - Привет
3. நீங்கள் ஆங்கிலம் பேசுவீர்களா?: Vi Ga-va-ri-che pa Ang-lis-ki? - Вы говорите по Английский?
4. நன்றி: Spasibo - Спасибо
5. Bye - formal: Das-vi-dan-ya До-Сведения

-----
இன்னொரு புதிய பகுதி: Local Tips
1 US$ = 28.5 Rubles
1 Euro = 35.6 Rubles
1 Ruble = 55.29 INR
ரூபிள்ஸ் கரன்ஸி நோட்டுகள்: 10,20,50,100,500,1000 மதிப்புகள்
ரூபிள்ஸ் சில்லறை மதிப்புகள்: 1,2,5, 10 (அரிது)

1 ruble = 100 Kopeks
கோபெக்ஸ் மதிப்புகள்: 1,5,10,50
------------

(தொடரும்)

முந்தைய பாகங்கள்:
1. some facts
2. குட்டி வரலாறு

14 Comments:

 1. lokokid said...
  This comment has been removed by a blog administrator.

 2. Dianna said...
  This comment has been removed by a blog administrator.

 3. பரணீ said...

  //1 Ruble = 28.5 USS$ / 35.6 Euro / 55.29 INR//

  கணக்கு தப்பா இருக்கும் போல இருக்கே :-)

  1 $ = 28.5 Rouble


 4. rv said...

  ஆமா பரணீ,
  இப்போ மாத்திட்டேன்


 5. கீதா said...

  சுவாரஸ்யமான பதிவு. ஒரு சந்தேகம்.. USSR என்று எந்த காலகட்டத்தில் குறிப்பிட்டனர்?

  கீதா

  http://geeths.info


 6. rv said...

  கீதா,
  1922-1991 வரை Union of Soviet Socialist Republics என்று அழைக்கப்பட்டது.

  ரஷ்ய மொழியில் இதற்கு பெயர் - СССР
  (Союз Советских Социалистических Республиках - Soyuz Sovietskikh Sotsialisticheskikh Respublikakh)

  நன்றி


 7. கீதா said...

  விளக்கத்திற்கு நன்றி இராமநாதன். அடுத்த பதிவை படிக்க ஆவலாக உள்ளேன்.

  கீதா

  http://geeths.info


 8. dvetrivel said...

  இந்த தொடர் அருமை!!!

  அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்.


 9. rv said...

  கீதா, ஆள்தோட்டபூபதி,

  நன்றி


 10. rv said...

  என்னோட சூப்பர் பத்திய பதிவின் வெள்ளத்தில இந்த இ.பி.3 பதிவு அடிச்சிகிட்டு போயிடுச்சுன்னு நினைக்கிறேன்...

  யாருமே கண்டுக்கறமாட்டேங்கறாங்களே!


 11. துளசி கோபால் said...

  சுருக்கமா இருந்தாலும் நல்லாப்புரியரமாதிரிதான் எழுதியிருக்கீங்க.
  அதுக்கு வாழ்த்துக்கள்.

  நான் ஹீஸ்டரி, ஜியோகரஃபி டீச்சருன்னா என் தம்பி கணக்கு டீச்சரா?

  பேஷ் பேஷ்.

  சீக்கிரம் ஒரு குடும்பப்பாடல் எடுத்துக்கணும்:-)


 12. Alex Pandian said...

  http://www.indianexpress.com/full_story.php?content_id=79889

  NEW DELHI, OCTOBER 12: The first-ever visa regime between India and Russia will be inked during Prime Minister Dr Manmohan Singh’s visit to Russia this December.

  Before the fall of the erstwhile USSR, its close economic and military ties with India did not necessitate a formal visa regime. But now, with the massive growth of the Indian economy, and recovery of the Russian market, delay in getting visa was becoming a major hurdle in commerce between the two countries


 13. rv said...

  //தம்பி கணக்கு டீச்சரா?//
  நீங்க வேற அக்கா. நான் சொதப்பினத பரணீ கண்டுபிடிச்சுட்டார். நல்ல வேளை நிறைய பேர் பாக்குறதுக்குள்ள மாத்திட்டேன்.

  //சீக்கிரம் ஒரு குடும்பப்பாடல் எடுத்துக்கணும்:-) //
  ஒரு பாட்டும் ஞாபகத்துக்கு வரமாட்டேங்குது. Outsource பண்ணலாமா? :)


 14. rv said...

  சுட்டிக்கு நன்றி அலெக்ஸ் பாண்டியன். அம்பானிக்கே விசா மறுப்பா? அது என்ன கூத்துன்னு தெரியல.


 

வார்ப்புரு | தமிழாக்கம்