சூப்பரின் சாதனையை இருட்டடிக்கும் ஆங்கில வெப்சைட்கள்!

இப்போதான் பார்த்தேன்! வசூலில் உலகத் திரைப்படங்களின் வரிசையில் சந்திரமுகி 23-ஆவது இடத்தில் உண்மையிலேயே இருக்காம்! தமிழ்சினிமா.காம் சொல்லிருக்கு. பின்ன இல்லாமேயா?

உலகத் திரைப்பட வசூலில் 23 -வது இடம் யாருக்கு? என்று boxofficemojo.com -ஐ பாத்தா

23. Star Wars: Episode II - Attack of the Clones - மொத்த வசூல் 649.4 மில்லியன் US$
ஜார்ஜ் லூகாஸ்னு ஒரு கிறுக்குபயபுள எடுத்த டப்பா படம் எங்க தலைவர விட நிறைய வசூல் செஞ்சுட முடியுமா? செய்யத்தான் விட்டுடுவோமா?

ஓண்ணு அந்தப் பயலுகளுக்கு நம்ம சூப்பர் ஸ்டார தெரியல, இல்லேன்னா இந்தியன் முன்னுக்கு வந்திடக்கூடாதுன்னு இப்படி போட்டு வச்சுருக்கான். தமிலன் நான் யார்ட போய் இதப் பத்தி முறையிடறுதுன்னு சொன்னீங்கன்னா வெளக்குமாறு, செருப்பு எடுத்துகிட்ட கிளம்பிடுவோம்!

நம்மூர் கணக்குக்கு வெறும் 3,250 கோடி ரூபாய் தான் வரும்.

இந்த ஜுஜுபி வசூல சந்திரமுகி தாண்டிருக்காதுன்னு நினக்கீறீங்களா?

--
தமிழ்சினிமா.காமின் முட்டாள்தனத்தைப் பற்றி மட்டுமே எழுதியது என்று டிஷ்க்ளேய்மர் போட்டுக்கறேன்!

33 Comments:

 1. Priya said...

  போட்டுத் தாக்கிட்டீங்க ராமநாதன். நல்லாவே சிரிப்புக் காட்டுறீங்க. சின்ன வயசுல சிவாஜி அய்யா வீட்டுக்குப் போனதா எழுதுனீங்களே கொஞ்ச நாள் முந்தி.உங்களுக்கு ஊரு எது?


 2. சின்னவன் said...

  இராமநாதா,
  உன் போக்கே சரியில்லை.
  நிச்சயம் KGB உம்மை சைபிரீயாவில போடுதோ இல்லையோ,
  இரசிகருங்கோ போட்டுத் தாக்கப் போறாங்கோ!

  ( கதவை யாரோ தட்டறாங்க பாருங்க ... )


 3. Unknown said...

  //நம்மூர் கணக்குக்கு வெறும் 3,250 கோடி ரூபாய் தான் வரும்.

  இந்த ஜுஜுபி வசூல சந்திரமுகி தாண்டிருக்காதுன்னு நினக்கீறீங்களா?//

  அதுதானே....??!!!


 4. முகமூடி said...

  ரஷ்ய துரோகிகள் தலைவருக்கு எதிராக பிரச்சாரம். சந்திரமுகியை விட நட்சத்திர சண்டை (ஸ்டார்வார்ஸ்) வசூலில் ஜாஸ்தி என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சி - தமிழ்டமாரம் நாளிதழ்

  ***

  இந்த அவமானம் தாங்காமல் 5 ரசிகர்கள் தீக்குளிப்பு... 15 ரசிகர்கள் சாதா குளிப்ப்


 5. Suresh said...

  :-)))


 6. தாணு said...

  ஜோதிகா லக்கலக்கன்னு கனவுலே வந்து டான்ஸ் ஆடி உங்களைத் தூக்கி எண்ணெய்க் கொப்பரையில் போடப் போறாங்க!!


 7. rv said...

  ப்ரியா சிவராமகிருஷ்ணன்,
  நன்றி. நமக்கென்ன ஊருன்னு நைசா கேட்டு ஆட்டோ அனுப்பலாம்னு பாக்கறவங்களுக்கு ஹெல்ப் செய்யறீங்களே? நியாயமா?

  சின்னவரே,
  என்ன சைபீரியாவில தள்ளறதில ரொம்ப மும்முரமா இருக்கீக போலிருக்கு. கதவ இன்னும் தட்டல. லைட்லாம், ஸ்பீக்கர் வால்யுமெல்லாம் முன்கூட்டியே கம்மி பண்ணிட்டேன்


 8. rv said...

  அப்டிபோடு,
  //அதானே//
  இதே கேள்வியத்தான் நானும் கேட்டேன். என்னையப் போய் ரஷ்ய துரோகின்னு முத்திரை குத்திட்டாங்களே!

  சுரேஷ்பாபு,
  சிரிப்புல ஏதாவது உள்குத்து, வெளிக்குத்து, ஆழக்குத்து எதுனாவது இருக்குதா?


 9. rv said...

  தாணு,
  ஜோதிகா லகலகன்னு ஆடற கொடுமை மட்டும் போறாதா? அத பாத்தப்புறம் எண்ணெய் கொப்பரைக்குள்ள தூக்கியெல்லாம் போடவேணாம். நானே குதிச்சிடுவேன்!

  தல,
  உங்கக் கட்சி தொண்டருக்கெதிரா ஏதோ செக்கூலரிஸ்ட் பத்திரிகை செய்திபோடுது. இந்த சின்ன தொண்டர தாக்குறது மூலமா நீங்க எழுதுன 'மான் வேட்டை கத' தொடருதோன்னு சந்தேகம் வருது. இதுக்கு என்ன பதிலடி கொடுக்கப்போறீங்க?

  //இந்த அவமானம் தாங்காமல் 5 ரசிகர்கள் தீக்குளிப்பு... 15 ரசிகர்கள் சாதா குளிப்ப் //
  கலக்கல்!


 10. Priya said...

  ஒரு ஆட்டோ இருந்தா விடுமுறைல வர்ரப்ப மொத்த குத்தகை எடுத்துனு சென்னையச் சுத்தலாம்னு இருக்கேன். என்னையப் போயி ஆட்டொ அனுப்பப் பாக்குறேன்னு சொல்லிட்டீங்களே. இது நியாயமா?
  சும்மா ஊரச் சொல்லுங்கப்பு, ருசிய நாட்டுல இருக்குறதுக்கே பயராதவரு ஆட்டோக்கெல்லாம் அயரலாமா!


 11. குமரேஸ் said...

  "ரஷ்ய துரோகிகள் தலைவருக்கு எதிராக பிரச்சாரம்"

  முகமூடியாரே எய்த அந்தணனை விட்டு அம்பு ராமநாதனை நோகின்றீர், என்ன செக்கூலரிஸமப்பா?


 12. யாத்ரீகன் said...

  அஹா.. கிளம்பிட்டாங்கய்யா.. கிளம்பிட்டாங்கய்யா..

  பி.கு:
  இரும்புத்திரை வரலாறு.. ஆர்வமூட்டும் தொடரா இருக்கு .. நேரம் கிடைக்கும் போது கட்டாயம் படிக்கிறேன்..


 13. rv said...

  நன்றி செந்தில்,
  தொடர்ந்து வாங்க..

  குமரேஸ்,
  உங்களுக்காவது புரிஞ்சுதே..ஆறுதலா இருக்கு.

  பதிவின் அடிப்படை ஆதங்கம், நம் தமிழ்நாட்டு சிங்கத்தை இவ்வாறு மேற்கத்திய பாசிஸ தளங்கள் மேல் ஊடக வன்முறை செய்கின்றன என்பதுதான். ஆழமான பதிவு எப்படி போடுவது என்று பதிந்தவர், பின்னூட்டத்தை வெறும் மேலூட்டமாக இட்டது பதிவு புரியாத காரணத்தாலா இல்லை, ஜூடோ-செக்கூலரிஸ்டு கண்ணாடியைப் போட்டுக்கொண்டு எல்லா பதிவுகளையும் பார்ப்பதாலா என்று எனக்கு விளங்கவில்லை.

  ப்ரியா சிவராமகிருஷ்ணன்,
  ஹா ஹா.. பதிவுகள பாத்து இன்னுமா புரியவில்லை? நமக்கு தஞ்சாவூருங்க! (திருவிளையாடல் சிவாஜி ஸ்டைலில்)


 14. கும்பகோணம் கோவாலு said...

  /*நம் தமிழ்நாட்டு சிங்கத்தை*/

  நம் தமிழ்நாட்டு அசிங்கத்தைன்னு கூட எழுதலாம்.


 15. Priya said...

  தனிமடல்ல ஆட்டோ வந்திருக்கும் போயிப் பாருங்க!


 16. வாசகன் said...

  //இல்லேன்னா 'இந்தியன்' முன்னுக்கு வந்திடக்கூடாதுன்னு இப்படி போட்டு வச்சுருக்கான்.//

  'INDIAN' isn't a Kamalahasan film?


 17. பினாத்தல் சுரேஷ் said...

  Tamil typing vasathi illai. mannikka!

  iraNtoo mUnRO enap poota veeNtiyathai, tamilcinema.com thaan 23 enRu pootukiRathu enRaal, 23il mattumee theedivittu thalaivar pataththai athan vasuulai kiNtal atikkum rashya eekaathipaththiyavaathikku aattoo anuppinaalthaan enna thavaRu enath thamiz kURum nallulagam keetpathil thavaRu enna irukka mutiyum ena patiththavarkaL, paNpuLLavarkaL keetkum kural unggaL kaathil vizukiRathaa?


 18. rv said...

  கும்பகோணம் கோவாலு,
  மேலும் மேலும் வம்புல மாட்டிவிடறீங்களே.. வேணாம் சார்..

  ராஜா,
  குத்தம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் சிலரும் இருக்காங்கறது இதானா?? :)

  பமக கொ.ப.சே,
  இரண்டாவதோ மூன்றாவதோவா.. இருக்கட்டுமே..தமிலனுக்கு இன்னும் பெருமைதானே.. வெள்ளைக் கிறுக்கன் ஜார்ஜ் லூகாஸ் படத்தை 23 இடத்தில் போட்டதை கண்டித்தேன். அது கண்ணில் படவில்லையா இல்லை வேறேதேனும் திரை கண்ணை மறைக்கிறதா? தமிழகத்தின் தன்னிகரில்லாத தலைவனை எதிர்த்து செய்யப்படும் ஊடக வன்முறையை எதிர்க்கும் விதத்தில் தமிழையும் தமிழரையும் ஆதரித்து எழுதினால், .யிரைக் கொடுத்து தமிழைக் காக்கும் கட்சியின் தலைவருக்கும் கொ.ப.சேவிற்கும் கோபம் வருகிறதே. அது ஏனென்பதும் தன்மானத் தமிழர்களுக்கு தெரிந்தே தான் இருக்கிறது என்பதை நினைவு படுத்த விரும்புகிறேன்!


 19. rv said...

  ப்ரியா,
  ஆட்டொவுக்கு பதில் டாங்கி அனுப்பிருக்கேன்..

  பாருங்க.


 20. முகமூடி said...

  // இவ்வாறு மேற்கத்திய பாசிஸ தளங்கள் மேல் ஊடக வன்முறை //

  அதானே... இதை கேட்பார் இல்லியா... ரஜினிக்கு மட்டும் டாக்டர் பட்டம் கொடுத்திருந்தா இந்நேரம் இதன் பிண்ணனியில் உள்ள உள்/வெளி குத்து பத்தி யாராவது ரசிகர் ஆராய்ச்சி பண்ணியிருப்பார். என்ன பண்றது எல்லாம் நேரம்..


 21. சின்னவன் said...

  ஒருத்தரை புகழ மற்றவரை இழிப்பதே இந்த இரஷ்ய துரோகிகளின் நடைமுறை.
  ஜார்ஜ் லூகாஸ் என்னையா பாவம் செய்தார் உங்கள் தலைவருக்கு.

  Jar Jar Binks தந்த தவப்புதல்வன் அய்யா அவர். Natalie Portman க்கு கோயில் கட்டவேண்டிய நாம், இப்படி ஒரு தலைவரை இகழ்வது சரியா ?


 22. rv said...

  // இவ்வாறு மேற்கத்திய பாசிஸ தளங்கள் மேல் ஊடக வன்முறை //

  என் தளத்தை ஹாக் செய்த .யிர் கொடுக்கும் ஜூடோ-செக்கூலரிஸ்டுகளின் தகிடுதத்தங்கள் என்ற பூனை வெளி வந்துவிட்டது பார்த்தீர்களா சகதமிழர்களே?? மேல் என்ற ஒரு வார்த்தையை மாற்றிப்போட்டு அநியாயமாக அப்பாவியின் மேல் பழி போடும் பாசிஸ நிலைப்பாட்டை எதிர்த்து கேட்க நியாயமும், நீதியும் வாழ்க்கைமுறையாய் கொண்ட மனுநீதிச்சோழன் வழியில் வந்த தமிழரே தமிழ்நாட்டில் இப்போது மிச்சமில்லையா?


 23. rv said...

  சின்னவரே,
  மனிதம் பேசும் சித்திரங்கள் படைக்கும் தமிழ் கலைத்துறை இருக்க காய் கவர்ந்தற்று என்பது போல் நம் துறையை இகழும் மேற்கத்திய ஸினிமாவின் மேல் மோகம் கொண்டு லூகாஸுக்கு கொடி பிடிக்கிறீர்களே?

  அசின், ஜோ, குஷ்பு என்று தமிழின பெண்களின் கலைச்சேவை நீங்கள் குறிப்பிட்ட நடாலியிற்கு எவ்வகையில் குறைந்து போயிற்று?


 24. பாண்டி said...

  :(

  இப்படிக்கு,
  கஜினி பக்தர் குசு,
  குண்டன் இஸ்கூல் ஆப் கடிசன்ஸ் ;-)


 25. சின்னவன் said...

  இரம்நாதா
  மன்னிப்பு கேள்


 26. rv said...

  பாண்டி,
  /குண்டன் இஸ்கூல் ஆப் கடிசன்ஸ் ;-) //
  இந்த இஸ்கூல் எங்க இருக்கு??


 27. rv said...

  சின்னவரே,
  உங்கள் எகத்தாளத்திற்கு பதில் உங்கள் நரியின் கோட்டையிலேயே இட்டுள்ளேன். பதிலளிக்க தெம்பிருக்கிறதா இல்லை மண்டபத்தில் இன்னும் யாரும் பதிலெழுத்தித்தரவில்லையா?


 28. சின்னவன் said...

  பதில் உடனக்கு உடன் வந்து இருப்பதிலேயே
  மண்டபத்தில் யாரும் இல்லை என்பது தெளிவாகி இருக்குமே ?


 29. dvetrivel said...

  தலைவர் சரிஞ்சு விழுவதற்கு யானை அல்ல. பாய்ந்து ஓடும் குதிரை. சிவாஜி பதில் சொல்லும். starwars படத்தின் பட்ஜெட்-ஐ கணக்கில் கொல்லவும்...


 30. rv said...

  ஆள்தோட்டபூபதி,
  //தலைவர் சரிஞ்சு விழுவதற்கு யானை அல்ல. பாய்ந்து ஓடும் குதிரை.
  //
  இந்தப் பதிவின் போக்கையே திசைதிருப்பிவிட்ட கழகக்கண்மணிகளுக்கு மத்தியில், பாலைவனத்தில் ஒரு சோலையாய் பின்னூட்டமிட்டதற்கு நன்றி. :)


 31. குழலி / Kuzhali said...

  என்னங்க இராமநாதன் இதை பார்க்கவேயில்லையா? ஆர்வ கோளாறு 30


 32. கும்பகோணம் கோவாலு said...

  கேக்கிறவன் கேணயனா இருந்தா KRVijayavukku ஏழு ... அப்படின்னு சொல்லுவானுங்க எங்க வூர்ல ! நானும் தஞ்சாவூர் மாவட்டம்தான்.
  இதுவும் அப்படித்தான்.(பூக்காரத்தெரு,அருளானந்த நகர், மங்களபுரம் இங்கேயெல்லாம் நான் விளையாடிருக்கேன்)


 33. rv said...

  குழலி,
  இல்லீங்க. இப்பத்தான் பார்த்தேன். இது ஓல்ட் நியுஸ்னு புரியுது! ஆனாலும் தமிழின தலைவருக்கு எதிரா எழுதினாப்புல இருக்கே! :)

  கோவாலு,
  ரஜினியப் புடிக்காதா உங்களுக்கு.. சரி விடுங்க. அவங்கவங்களுக்கு தனி டேஸ்ட்.. தஞ்சாவூரா நீங்க?


 

வார்ப்புரு | தமிழாக்கம்