144. ஆதலால் தானம் செய்வோம்

என்னதான் நவீன மருத்துவம் வளர்ந்திருந்தாலும், சில நேரங்களில் வாகன உதிரிப்பாகங்களைப் போலவே நோயினால் பழுதடைந்த உடற்பாகங்களை சரிசெய்ய முடியாமல் போய்விடுகிறது. ஆனால், நல்லவேளையாக இறந்த உடலிலிருந்தோ சில சமயங்களில் உயிருள்ளவர்களிடமிருந்தோ நல்ல பாகங்களை தேவைப்படுவோர்க்கு கொடுக்க இயலும். அது சாத்தியப்படுகிறது.

முதலில் என்னென்ன பாகங்களை தானமாக கொடுக்கலாம் என்று பார்ப்போம்.

1. எலும்புகள்
2. கண்கள்
3. சில வகை இரத்த நாளங்கள்
4. இருதயம் மற்றும் வால்வுகள்
5. சிறுநீரகம்
6. தோல்
7. கல்லீரல்
8. நுரையீரல்
9. பான்க்ரீயாஸ்
10. குடல்

இன்னும் சில உள்ளன ஆனால் மேற்கூறியவையே பெரும்பாலும் புழக்கத்தில் உள்ளவை.

உயிருடன் இருக்கும்வரை இரத்தமோ, விந்தணுக்களோ, கருமுட்டைகளோ கொடுக்கத் தயங்காத மக்கள் உடல் பாகங்கள் என்று வரும்போது தயங்குவது வழக்கம். அதுவும் இறந்தபின்னும் கூட. சில நாடுகளில் இறந்தவர் வெளிப்படையாக தன் பாகங்களை யாருக்கும் கொடுக்கக்கூடாது என்று உயிலில் தெரிவித்திருந்தாலேயொழிய de fault-ஆக உறுப்புகள் தானத்திற்கு என்று அரசு எடுத்துக்கொள்ளலாம் என்று சட்டங்கள் உள்ளன. இன்னும் சில நாடுகளில் உறவினர்களின் சம்மதத்தோடு செய்ய முடியும்.

இறக்காமல் brain-dead எனப்படும் சூழ்நிலைகளிலும் உறவினர்கள் தயங்குவதுண்டு. இதில் கொஞ்சம் சிக்கல் உண்டு. மூளை-இறப்பு என்பது முற்றிலுமாக மறுபடி உயிர் பெற வாய்ப்புகள் அறவே அற்ற இறந்த மூளையாகும். இதை நிறுவுவதற்கு சில ஆய்வுமுறைகள் உள்ளன. அவ்வாறு முற்றிலுமாக இறந்த மூளை என்று கருதப்படும் நோயாளியின் இருதயம் இன்னும் இயங்கக்கூடும். ஆனால், மூளை இறந்தது இறந்ததுதான். மருத்துவத்தைப் பொருத்தவரை vegetative state அதாவது ஒரு உயிரற்ற காய்கறி நிலைக்கு சமானம்.

அமெரிக்காவில் மட்டும் ஆண்டொன்றுக்கு ஒரு லட்சத்து சொச்சம் மாற்று உறுப்புகள் தேவைப்படுவதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆவரேஜாக ஒரு நோயாளி மூன்று வருடங்கள் வரை காத்திருக்கவேண்டும் ஒரு சிறுநீரகத்துக்காக. ஆனால், இவ்வளவு donor கள் இருக்கிறார்களா என்றால் அதுதான் இல்லை. இந்தியாவில் ஒன்றரை லட்சம் பேர் வரை ஆண்டொன்றுக்கு சிறுநீரக மாற்று தேவைப்படுகிறது. கிடைப்பதோ மூவாயிரத்தி சொச்சம்.


இருந்தாலும், சில நேரங்களில் பணவசதி முக்கிய பங்கு வகிக்கிறது. வளர்ந்த நாடுகளில் கிட்டத்தட்ட ஐம்பது லட்சம் வரை செலவாகும் அறுவை சிகிச்சை பாதி விலையில் மூன்னேறும் நாடுகளில் சாத்தியம். இதனாலேயே இப்போது organ transpant tourism கூட வந்துவிட்டது.

மேலும் ஒரு இறந்த உடலிலிருந்து கிடைக்கும் உறுப்பு மிகக்குறைந்த நேரமே viable ஆக இருக்கும். அதற்குள் தகுந்த முறையில் பழைய உடலிலிருந்து எடுக்கப்பட்டு, சரியான முறையில் transport செய்யப்பட்டு நோயாளியின் உடலில் பொறுத்தப்படவேண்டும். இதுவும் ஒரு முக்கிய காரணம்.

உடல் உறுப்பு தானத்திற்கு மக்கள் தயங்குவதற்கு சில காரணங்கள் உள்ளன. முக்கியமாக மத சம்பந்தப்பட்ட விஷயங்கள். கண் கொடுத்தால் அடுத்த ஜென்மத்திற்கு என்ன செய்வது என்பது மாதிரியான சந்தேகங்கள். இவை அறிவின்மை என்று ஒதுக்கித்தள்ள முடியாது. ஏனெனில் மக்களின் நம்பிக்கைகள் அப்படி. மேலும், தானம் தர சுயநினைவோடு ஒத்துக்கொண்டாலும் பின்னர் தான் தானம் தர ஒப்புக்கொண்டதால் தனக்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்று சஞ்சலங்கள் நோயாளியின் மனதிலும், அவர் நினைவிலில்லாத பட்சத்தில் உறவினர்கள் மனதிலும் தோன்றக்கூடும். இன்னும் சில இடங்களில் துக்கம் விசாரிக்க வருகிறவர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும் உடலில் ஏதேனும் disfigurement இருக்கக்கூடுமோ என்ற அச்சம். இதைத்தவிர யார் உறுப்புகள் கொடுத்தார்கள் என்று பெறுபவருக்கோ, பெறுபவர் யார் என்று கொடுப்பவருக்கோ தெரிந்துவிடுமோ என்கிற அச்சம். (இதற்கு 21 கிராம்ஸ் படம் நல்ல உதாரணம்)

இரண்டாவது சொன்ன மூளை இறந்த நோயாளிகளின் (இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 60,000) விஷயத்தில் பெரும்பாலும் மனைவி மக்கள் போன்றவர்களே, நோயாளி வெளிப்படையாக எதுவும் அறிவிக்காத பட்சத்தில், முடிவெடுக்கிறார்கள். மருத்துவப் பார்வையில் இனி உயிர் பிழைக்க வாய்ப்பே இல்லை என்று 100% சொன்னாலும், அவர்களுக்கு படுத்தவர் எழுந்து வரமாட்டாரா என்கிற ஆவல் தானத்திற்கு குறுக்கே நிற்கிறது.

இவ்வளவு பேருக்கு பாகங்கள் தேவைப்படுகிறது. ஆனால் சப்ளை இல்லையே என்கிற உடன் முளைக்கிற விஷயம் தான் கள்ள மார்க்கெட். இது உலகெங்கும் கொடி கட்டிப் பறக்கிறது. இந்தியா போன்ற நாடுகளில் ஏழைகளின் பணத்தட்டுப்பாட்டிற்கு கிட்னியை விற்பது என்பது மிகவும் சாதாரணமான விஷயமாகப் போய்விட்டது. அவர்கள் தானம் கொடுப்பது நல்லதுதான் என்றாலும், கொடுப்பவர்களுக்கு பெரும்பாலும் அதில் நஷ்டமே. தரகர்களுக்கும் சில unscrupulous மருத்துவர்களும் கமிஷன் அடித்து பின் அவர்களுக்கு வருகிற தொகை சொற்பமானதாகவே இருக்கும். தைவானிற்கும் இஸ்ரேலுக்கும் நம்மூரிலிருந்து கிட்னிகள் போகின்றன என்பது அதிர்ச்சி தரக்கூடிய விஷயம். இம்மாதிரி ஏழைகள் வெறும் ஆயிரம் டாலர் (50,000 INR) பெற்றாலே பெரிய விஷயம். சர்வதேச சந்தையில் விற்கப்படும் நாட்டைப்பொறுத்து இருபதாயிரம் டாலர்கள் வரைக்கும் விலை போகும். கிட்னி எடுப்பது என்பதொன்றும் ஒரு நட் போல்ட் கழட்டுவது போலல்ல. அறுவை சிகிச்சைக்கு பின்னர் தகுந்த முறையில் post-op care, இதர செலவுகள் வேறு இருக்கின்றன. தானம் கொடுப்பவருக்கு சொல்லப்போனால் ஒழுங்காக செய்யப்பட்ட அறுவைச் சிகிச்சையால் ஒரு கோளாறும் வரக்கூடாதென்றாலும், பல இடங்களில் பணமே பிரதானம் என்று வந்தபின் கொடுப்பவர், அவர் ஏழைஎன்றுவேறு ஆகிவிட்டால், அரைகுறையாக செய்யப்படுவதால் நிறைய பிரச்சனைகள் வரக்கூடும். இதற்கு சர்வதேச அளவில் human trafficking, drug trafficking போல organ trafficking இருக்கிறது. இதற்கென்று தனி மாபியாவும் உண்டு. பல பின் தங்கிய நாடுகளில் ஏழைகள் இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் டிமாண்டை நேர்மையான வழிகளில் அரசுகளால் சமாளிக்க முடியாததுதான்.

உலகிலேயே உறுப்புதானத்தில் முன்னோடியாக இருப்பது ஸ்பெயின் தான். பத்து லட்சம் பேருக்கு (மக்கள் தொகையில்) 32 பேர் உறுப்பு தானம் செய்கிறார்கள். அங்கே சட்டப்படி, இறந்தவர் வெளிப்படையாக தானத்திற்கு சம்மதிக்காமல் உயில் வைத்திருந்தாலே தவிர, அரசு உறுப்புகளை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்தியாவில நூறுகோடி மக்கள்தொகையில் ஆண்டுதோறும வெறும் 30-40 உடல்தானங்களே நடக்கின்றன என்று சில புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்தது கொடுப்பதிலேயே பிரச்சனைகள். எய்ட்ஸ் தொடங்கி தொற்றுநோய்கள் மற்றும் பெறுபவரின் நோயெதிர்ப்புச் சக்தியுடன் ஒத்துப்போகும் தன்மை போன்றவையும் சப்ளை குறைவாய் இருப்பதற்கு காரணங்கள்.

இவற்றிற்கு மாற்றாக stem cell research, க்ளோனிங்க் முறைகள் மூலம் உறுப்புகள் உற்பத்தி சாத்தியம் என்பதற்கான கூறுகள் தெரிந்தாலும், அமெரிக்கா உட்பட பல வளர்ந்த நாடுகளில் இவற்றிற்கு முழுக்க தடையோ அல்லது மிகவும் கட்டுப்பாடுகளுக்கிடையேயோ இயங்கவேண்டியிருக்கிறது.

வருடாவருடம் உறுப்புகள் தேவைப்படுபவர்களின் எண்ணிக்கை பலமடங்கு ஏறிக்கொண்டே போகிறது. ஆனால் கொடுப்பவர்கள் எண்ணிக்கை அதே மடங்குகளில் உயர்வதில்லை. இதற்கு மக்களிடம் இருக்கும் உறுப்புகள் தானம் பற்றிய அறியாமையையும், பயத்தையும் களைய வேண்டும். அதற்கு அரசு பொறுப்பாய் செயல்படவேண்டும். இளைஞர்களும் முன்மாதிரியாகவும், தம்மக்களிடமாவது விழிப்புணர்ச்சியை எழுப்ப பாடுபட வேண்டும். அப்போதுதான் இப்பிரச்சனைக்கு தீர்வு எங்கிருக்கிறதென்பாவது கண்ணில் தெரியும்.

142. Unfathomable Zealotry - WP

//In Africa, Asia, too much of the world -- it is Joseph Conrad much of the time: "The horror! The horror!".//

//In our boundless optimism, we consign them to the "too hard" file of horrors we cannot figure out: the Khmer Rouge, the Nazis, the communists of the Stalin period. Now, though, this awful thing returns and it is not just a single country that would kill a man for his beliefs but a huge swath of the world that would not protest. There can be only one conclusion: They were in agreement.//

Unfathomable Zealotry - Richard Cohen - WP

ஒரு குறிப்பிட்ட நாட்டைப் பற்றி கட்டுரையில் சொல்லப்பட்டிருந்தாலும், நம் நாட்டிலும் பல வடிவங்களின் இந்தக் கொடுமைகள் நடந்து வருகிறது. என்று திருந்தப் போகிறோமோ? இதை வெறும் 'வெள்ளைக்காரன் சொல்றான், நாம என்னத்த கேக்கறது, நம் பாரம்பரியம் என்ன, அவனோட கலாச்சாரம் என்ன' என்ற கண்ணோட்டத்தில் இல்லாமல் சிந்திப்பதற்கும் விவாதிப்பதற்கும் நம்மில் பலருக்கு கடினமாக, அதுவும் படித்த தமிழ் இணையத்தில் உள்ளவர்களுக்கே, இருக்கும்போது சாதாரணமான மக்களை பற்றி நினைத்தும் பார்க்க முடியவில்லை. மட்டுறுத்தல் வந்தவுடன் ஓரளவுக்கு குறைந்திருக்கிறதென்றாலும், இப்பவெல்லாம் பதிவர்கள் பதிவுகளிலேயே எழுத ஆரம்பித்துவிட்டனர்.

யார் என்ன எழுதினாலும், சொன்னாலும் உடனே அவன் முப்பாட்டனார் ஜாதகம் வரைக்கும் அலசி ஆராய்ந்து நீ அந்தப்பய மவந்தானே, வேறெப்படி பேசுவ என்று அகழ்வாராய்ச்சி செய்வதிலேயே இவ்விஷயங்களை பேசுவதில் பலனில்லாமல் போய்விடுகிறது.

அது என்ன அவ்வளவு paranoia-வோ? ஏன் மற்ற எல்லாருமே ஒரு டைமென்ஷனல் அஜெண்டாவோடு தான் இயங்குகிறார்கள் என்று ஒவ்வொரு்ம் முடிவு கட்டிக்கொண்டே தொடை தட்டுகிறோம்? இது ஒரு பரவலான வியாதியாகவே இருக்கிறது எனக்குத்தெரிந்த வரைக்கும்.

இன்னொன்று: sanctimonitis. இதன் தொல்லை தாங்க முடியவில்லை. எதைப் பற்றியும் எழுதும்போதும் அப் கோர்ஸ், வரையறை என்பது இருக்க வேண்டியதுதான். அது நிஜமாகவே கருத்துப் பரிமாற்றம் வேண்டும் என்று நினைக்கும் பதிவராக இருந்தால் அவர் பதிவை எழுதும்போதே லக்ஷமண ரேகை எங்கே என்று தெரியும். பின்னால் ஒருவர் வந்து சொல்லித்தான் பதிவின் தீவிரத்தைக் குறைக்க வேண்டும் என்பதில்லை. ஆனால், அப்படிப்பட்ட நியூட்ரலாக எழுதப்படும் பதிவுகளிலும், sanctimonious anonymous clubஇலிருந்து வரும் பின்னூட்டங்களும் பெரும்பாலும் வாதத்தை மேற்சொன்ன பாரனோயா பார்வையுடனே பதிவை படித்ததால் எழுதப்படுகின்றன. அதோடு விட்டாலும் பரவாயில்லையே. அவருக்கு பதில் கொடுக்க அந்தக் கூட்டத்துக்கு தனி எதிர்கோஷ்டி. மொத்தத்தில் சத்தியமூர்த்தி பவன் தான். இவை போதாதென்று தன்னார்வ தொண்டர்களும் சம்பந்தா சம்பந்தமில்லாமல் தனி ஆவர்த்தனம் நடத்துகின்றனர்.

பதிவோ பின்னூட்டமோ யாரைப் பற்றியோ எதைப் பற்றியோ எழுதும்போது எடுத்தவுடனேயே அவன் ஒரு ****** இவன் ஒரு ******** என்று ஏகவசனம், அது ஒரு குப்பை, இதைச் செய்பவன் முட்டாள் என்று ஆரம்பித்துவிட்டுதான் மற்றதே. ப்ரீஜுடிஸ் எல்லாருக்கும் இருப்பதுதான். அது நல்லவிதமாகவோ கெட்டவிதமாகவோ இருந்துவிட்டு போகலாம். ஆனால், நமக்கு கெடுதல் என்று தோன்றுவது அடுத்தவருக்கு நன்மையெனத் தெரியலாம். அதற்கு அவருக்கு தனிப்பட்ட சமூகக் காரணங்கள் இருக்கலாம். நம் ப்ரீஜுடிஸும் ஈகோவும் சேர்ந்து வலைப்பதிவர்களின் sensitivity-ஐ அழித்துவிட்டதோ என்று எனக்கு சந்தேகம் வரத்தோன்றியிருக்கிறது. ஒரு மேடையிலோ இல்லை நம் வீட்டிலோ கருத்துப் பரிமாற்றங்கள் நடந்து கொண்டிருக்கிறது. அங்கேயும் பெரும்பாலும் நாம் இங்கே பேசும் விஷயங்களை பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், வலையில் எழுதும்போது மட்டும் நம் தரத்தை நாமே குறைத்துக்கொள்வது ஏனோ? நம்மை யாருக்கும் தெரியாது என்கிற தைரியமும், நம் அடிமன வக்கிரங்களுக்கு அப்படி நம்மை யாருக்கும் தெரியாது என்பது மிகவும் சாதகமாக இருக்கிறது என்பதுமா?

எங்கெங்கோ இருக்கும் எவ்வளவோ புதுப்புது நண்பர்களையும் நல்லமனிதர்களியும் இவ்விணையம் அறிமுகம் செய்து பெற்றுத்தந்திருக்கிறது என்பதைத் தவிர எனக்கு வலைப்பூவில் எழுதுவதில் பெரிய பயனொன்றும் கிட்டியதாய்த் தெரியவில்லை. இந்த தமிழ்வலைப்பூக்கள் இல்லையென்றால் நம்மில் பலர் சந்தித்துக்கொண்டே இருந்திருக்க மாட்டோம். என்னளவிலே எடுத்துக்கொண்டால் நான் எழுதும் பொதுப்பாட்டு எனக்காகவே. ஆனால், இந்த வலைப்பூவை நான் இப்படித்தான் பார்க்கிறேன். நண்பர்களுக்கிடையில் ஸ்கூல காலேஜில் லஞ்ச் ப்ரேக்கிலும், இண்டர்வெல்லிலும் அரட்டை அடிப்பதைப்போல. இப்போது அந்தக் கட்டங்களைத் தாண்டி வந்த நமக்கு புது நண்பர்களை அடைய இது ஒரு அரிய வழி. நாம் பலரும் வெளியில் இருப்பதால் தமிழில் தமிழர்களோடு பேசுவதில் தனி சுகமும் அந்நியோன்யமும் ஏற்படுகிறது. அதுவே முதல் பயனாய்ப் பார்க்கிறேன். தமிழ் வளர்க்கிறேன் என்றெல்லாம் நான் ஜல்லியடிக்கப்போவதில்லை.

வளர்ப்போரை நான் குறை சொல்கிறேன் என்றில்லை. ஏதோ காரணத்தால் இயற்கையாய் ஒரு கூட்டம் சேர்ந்து விடுகிறது. எழுதும் விஷயங்களினால். அக்கூட்டத்திற்குள் நாம் பேசிக்கொள்ளும் போது என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம். நண்பர்கள் வட்டம் என்கிற உரிமையில். அதுவே என் பதிவில் நான் எழுதினால் அது எங்கே சென்று முடியும் என்று சொல்லித்தெரியவேண்டியதில்லை. இதுவே தான் ஒவ்வொரு குழுவிற்குள்ளும் நடக்கிறது என்று நினைக்கிறேன். மற்றவர்களை பற்றி எழுதுகையில் இன்னும் அதிக எச்சரிக்கையுடன் செயல்படவேண்டியிருக்கிறது. அது ஒருவிதத்தில் நல்லதுதான் என்றாலும் மேற்சொன்ன இருகாரணங்களினால் சிலவிஷயங்களை, கண்ணியமாக எழுதினாலும் அவற்றிற்கு வரும் எதிர்வினைகள் ஒரே விதமாகவே பெரும்பாலும் இருப்பதாய் தோன்றுகிறது. நான் ஒன்றும் அப்படி எழுதிக்கிழிக்கவில்லையென்றாலும், சார்புநிலை கொண்டிருந்தாலும் கண்ணியமாக எழுதுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சிறுபான்மையினரோ என்று தோன்றும் வகையில் பலரின் பதிவுகளின் தலைப்பிலிருந்து, பின்னூட்டங்கள் வரை இருக்கிறது. sensationalism வைத்துதான் ஓட்டவேண்டும் என்ற அளவுக்கா இங்கே காம்பெடிஷன் இருக்கிறது? ஆயிரத்தைக் கூட தாண்டாத ஒரு கூட்டத்துக்குள் என்னவோ ஜன்மப்பகைகள் போல இத்தனை சண்டைகளா. தமிழ் நம்மை இணைத்துதானே இங்கே வந்தோம். அந்த இணைப்பு முற்றிலும் மறந்து வெறும் வெறுப்பு மட்டுமே மிஞ்சியிருக்கறாற் போல இருக்கிறது.

---
நானும் மேற்சொன்ன தவறுகளை அறிந்தோ அறியாமலோ செய்திருக்கலாம். இனிமேல் தவிர்க்க முயற்சிக்கவாவது செய்வேன்.

காலம் மாறுகிறது - ஒரு கேள்வி

என்னடா இது கேள்வி மேல கேள்வி கேட்டுகிட்டுருக்கானேன்னு யோசிக்காதீங்க. மிகவும் அவசியமான, கேட்கப்படவேண்டிய கேள்வி இது. மக்கள் பலரும் இந்த மாதிரி கேள்வி கேட்டா நம்மகூட இனிமே யாரும் பேசவே மாட்டாங்கன்னு பயந்துகிட்டே பலவாண்டுகளாக கேட்கப்படாமல் இருக்கற கேள்வி இது. கொத்ஸு தான் புதிர் போடற ஆளாச்சே. அவரக் கேப்போம்னா அவருக்கே தீர்க்கமா பதில் சொல்லத்தெரியல.

கேள்வி இதுதான்.

ஒரு பேச்சுக்கு நியுஸிலாந்துல வோட்டு போடும் வயசு 18னு வச்சுக்கோங்க.

இப்போ நியுஸிக் குடிமகனான பையன் ஒருத்தன் அமெரிக்கால லாஸ் ஏஞ்சலீஸ்ல இருக்காரு. அவருக்கு வயசு இன்னைக்கு 17 வருஷம் 363 நாட்கள். சரியா. இன்னிக்கு திங்கள் இராத்திரி 930 மணிக்கு எல்.லே ப்ளைட் புடிச்சு நாளன்னிக்கு புதன் காலை 530 மணிக்கு போய்ச் க்ரைஸ்ட்சர்ச் சேர்ந்துடறாரு. மொத்த விமானப் பயண நேரம் : 12 1/2 மணி நேரம். அதோட நேர வித்தியாசத்தையும் சேத்துப்போம். நியுஸில இறங்குன அன்னிக்கு அவருக்கு வயசு என்ன இப்போ? 18 வயசு ஆச்சா? ஆனா, உண்மையான வயசென்ன? 17 வருஷம் 363 நாள் 12/12 மணி தான். இப்போ நியுஸில தேர்தல் நடக்குதுன்னா இந்த ஆளு வோட்டு போட முடியுமா?

அப்படியே 18 வயசாச்சுன்னு வோட்டு போடவிடறாங்கன்னு வச்சுப்போம். போட்டுட்டு உடனே அடுத்த ப்ளைட்ட பிடிக்கறாரு. புதன் கிழமை இரவு 930க்கு நியுஸிலேர்ந்து கிளம்பி, செவ்வாய்க்கிழமை எல்.ஏக்கு மத்தியானம் மூணு மணிக்கு செவ்வாய்க்கிழமை அன்னிக்கு வந்துடறாரு. இப்போ வயசு 17 வருஷம் 364 நாள் சொச்சம் மணி தான்.

இப்போ கேள்வி என்னன்னா, அவரு நியுஸில போட்ட வோட்டு செல்லுமா?

----
இந்த மாதிரி திடீர்னு ஏன் அறிவுப்பூர்வமா கேக்கறேன்னு நினைக்கறீங்களா. ஒண்ணுமில்ல எங்க ஊர்ல DST ஆப் பண்ணிட்டாங்க. ஒரு மணி நேர தூக்கம் போனதுங்கற கடுப்புல யோசிச்சது.

141. கட்டமொன்று போட்டேன்...

இந்த மாதிரி கட்டம் போட்டு கேள்வி கேக்கணும்னு ரொம்ப நாளா ஆசை. அதாங்க குறுக்கெழுத்து. அதனால இதோ.

முத தடவைங்கறதால, க்ளூவெல்லாம் சரியாக் கொடுத்திருக்கேனான்னு தெரியல. ரொம்ப மண்டையப் பிச்சுக்கறா மாதிரி இருந்தா சொல்லுங்க, ஹிண்ட்களும் சேர்த்துப் போடறேன். seinfeld கேள்விகளுக்கு பதில் நாளை. அதுக்குள்ள இன்னும் யாராவது முயற்சி பண்ணனும் நினச்சீங்கன்னா, இங்க போங்க.


across
1. மானே! ஆண்மானே!
2. பதினாறாவது எழுத்து - கணக்கு
3. ஸ்விடிஷ் கையுறையாய் இருந்து முறையாய் மாறியது
4. இயற்கை sunscreen
5. பசு தின்னும் பாம்பு
6. பிரபலமான சாஸ். கொஞ்சம் முயற்சி செய்தால் பல்லிலும் தயாரிக்கலாம் :)
7. காற்று வீசுது இத்தாலியில்
8. உள்வலை
9. தீவு. கென்னடிக்கு சம்பந்தம் உண்டு.
10. ஐரோப்பாவை இந்தச் சாட்டையால் அடித்தார் கடவுள்
11. எலும்பில் முக்கால்

down
1. இத்தாலிய அரிசியைக் கொண்டு செய்யப்படும் உணவு
2. நண்பன் - format
4. ஆசிரியர் திருத்தம்
5. fiber உள்ள தானியம்
12. munich-இல் வந்தார்
13. விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்
14. ரஷ்ய விண்வெளி சாதனையாளர் - உலக-ன்னும் சொல்லலாம்
15. போரில் இறந்தால் - கார்
16. பீச்சுக்கு போனால் கிடைக்கும். நமக்கல்ல.
17. நெப்போலியனின் ஆங்கில சத்ரு

140. கொஞ்ச நேரம் கொஞ்சும் நேரம்!

அருகில் சென்றேன். மிரண்டு போனாள்!
ஆனால் எதிர்க்கவில்லை!

உள்ளே நடுங்கினாலும்,
வெளியே துணிந்தேன்!
அவளை மெதுவாய் நெருங்கினேன்!
பதமாய் கரம் பற்றினேன்!
பிடித்து அருகில் இழுத்தேன்!
அவள் கை நகம் பட்டென்னைக் கீறியது!
அட, ஊடலில் இதுவும் சகஜம் தானே!
இப்பொழுதும் எதிர்ப்பில்லை!
ஆனால் மென்குரலில் முனகினாள்!
பிடித்திருந்தது போலும்!

என்னுள்ளே பாட்டு!
கொஞ்ச நேரம் கொஞ்சும் நேரம்!
நான் கொஞ்சிப் போகக்கூடாதா?
வாய்விட்டு பாடினேன்! பதிலில்லை!

மேலும் துணிவு எங்கிருந்தோ வந்தது!
அவள் மென்மையான கூந்தலை கோதினேன்!
பற்றிய என்னை வள்ளென குதறி பின் வெடுக்கென
துள்ளி யோடிவிட்டாள் என் ஜூலி!

------
கவிஞர் பவுர்ணமி பாண்டியன் மற்றும் ஏஜெண்டுக்கு இக்காவியம் சமர்ப்பணம்!

------

தமிழ் இணைய சரித்திரத்துல ஒரு மாபெரும் நிகழ்ச்சி நடந்து முடிஞ்சி போச்சு. ஆனா யாரும் கண்டுகிட்டதா தெரியல. அதுக்குத்தான் இந்த கவிதைக்காவியம். என்னன்னு இன்னுமா புரியவில்லை? இந்த 'தெரியல' ஆரமிச்சு அதுக்குள்ள ஒரு வருஷம் (ஒரு வருஷம் ஒரு வாரம்) ஓடிப்போச்சு! இதுதான் சாக்குன்னு திவசம் செஞ்சு ஓரேடியா அனுப்பிச்சுடாதீங்கப்பு!

இந்தக் கேள்விகளுக்கு என்ன பதில்?

எல்லாரும் புதிர் போடறாங்க. சும்மா போட்டா பரவால்லியே. பத்து கேள்விகேட்டு, அதுக்கு துணை, இணைக்கேள்வியெல்லாம் கேட்டு ஒரு நாலஞ்சு வாரத்துக்கு ஓட்டறாங்க மக்கள். ரீபஸ் ஆர்டினரி பஸ்ஸெல்லாம் நமக்கு தெரியாதுங்கறதால, எனக்குத் தெரிஞ்சதுலேர்ந்து சில கேள்விஸ். இதுல மார்க்கிங் சிஸ்டம் உண்டு. ஈஸி - 5, மீடியத்துக்கு - 10, Hard - 15 (மொத்தம் 150)


எல்லாமே Seinfeld பத்திதான்.

நெட்ல ஆன்ஸர் தேடி ஏமாத்தக்கூடாது. சரியா? சொன்னா கேப்பிங்கதானே?

ஈஸிலேர்ந்து ஆரமிச்சு கஷ்டமானதுக்கு போவோமா? இது இங்க எவ்ளோ பாப்புலர்னு தெரியல. பாப்போம்.

Difficulty: Easy
Q1
. Whats George's Middle Name?

1. Christian
2. Louis
3. Jean
4. Anthony

Q2. Whats the name of the diner/cafe where Seinfeld and his gang meet usually?

1. Pete's
2. Monk's
3. Joe's
4. Pomodoro

Q3. Whats George's ATM Code?

1. Hershey
2. Bosco
3. Twix
4. oHenry

Q4. Whats Kramers first name?

1. Cosco
2. Disco
3. Cosmo
4. Kenny

Q5. Which Famous Baseball team did George work for?

1. NewYork Yankees
2. Baltimore Orioles
3. Atlanta Braves
4. Boston RedSox

Difficulty: Medium

Q6. In the Episode Marine biologist, George dislodges a golf ball from a beached whale's blowhole. Which Brand was it?

1. Wilson
2. MaxFli
3. Callaway
4. Titleist

Q7. Festivus, Frank Constanza's answer to Christmas, falls on which date?

1. Dec 20
2. Dec 22
3. Dec 23
4. Dec 29

Q8. How did Susan, George's Fiancee die?

1. Heart Attack
2. Suicide
3. Licking Toxic Envelopes
4. Car Accident

Q9. What is Newman's favorite soup?

1. Mulligatawny
2. Crab Bisk
3. Jumbalaya
4. French Onion

Q10. Who voiced George Steinbrenner, George's boss at the baseball team?

1. Jerry Lewis
2. Larry David
3. Jack Lemmon
4. Matt Groening

Difficulty: Hard

Q11. Elaine pretends she is a janitor because a Chinese Takeaway wont deliver to her address. What item in their menu was the best in town according to Elaine?

1. Clam Chowder
2. Supreme Flounder
3. Won-Ton Soup
4. Schezwan Fried Rice

Q12. Sally, Susan's ex-room mate was an exec for which company before she decided to try out comedy?

1. DHL
2. Citibank
3. FedEx
4. American Express


Q13. Where is Elaine from?

1. Tucson, AZ
2. Jackson, MS
3. Towson, MD
4. Carson, NV

Q14. How many years was Kramer on strike at H&H Bagels?

1. 8
2. 9
3. 11
4. 12

Q15. Who plays David Puddy, Elaine's off'n'on mechanic boyfriend?

1. John O'Hurley
2. Richard Herd
3. Patrick Warburton
4. Richard Fancy


அவ்ளோ தான்பா இப்போதைக்கு.

திருவிழாக் கோ(கா)லம்!

அப்பாடா! காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி! பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடின்னு நொந்துகிட்டே ஓரமா உக்காந்து பாடிகிட்டிருந்தேன். கிட்டத்தட்ட ஆறு மாசம். ஆறுமாசம் ஆறுவருஷமாட்டம் போச்சு. சரி சரி ஓவர் பில்டப் எதுக்கு. ஒருவழியா இவ்ளோ நாள் ஆவலோட காத்துகிட்டிருந்த திருவிழா எந்தவித தடையுமில்லாம நேத்திக்கு (மார்ச் 12) சண்டை சச்சரவு எதுவுமில்லாம இனிதே நடந்து முடிஞ்சத பாத்தோன நிம்மதிப் பெருமூச்சு விட்டேன்.

அப்படி என்ன திருவிழா அன்னிக்குன்னு யோசிக்கற ஆளா நீங்க? அப்படின்னா, இதுக்கு மேல படிக்காதீங்க. சரி, போனாப் போகுது.. இந்தப் பாழாப்போன கிரிக்கெட்டே கதின்னு கெடக்கற ஆளுகளையும் கரையேத்த வேணாமா? அதுக்காக மேல் விபரங்கள். திருவிழா நடந்தது பஹ்ரைன்ல. Gulf Air Sakhir Bahrain Grand Prix. ஒருவழியா பார்முலா 1 ஆரமிச்சுடுச்சு இந்த வருஷத்துக்கு. என்னடா வழக்கமா ஆஸ்திரேலியால தானே ஆரமிப்பாங்கன்னு யோசிக்கறவங்களுக்கு இன்று ஒரு தகவல். CommonWealth Games இப்போ அங்க நடக்கறதால, Adelaide Park-க்காரங்க கொஞ்சம் காலெண்டர மாத்திக்கோங்கன்னு FIA-வ கேட்டுக்கவே, பஹ்ரைனுக்கு அடிச்சது லக்கி ப்ரைஸ்.

இந்தவருஷம் நிறைய மாற்றங்கள். எஞ்சின்ல ஆரமிச்சு டெக்னிக்கலாகவும், தகுதிச்சுற்று விதிமுறைகள் போன்ற சில விதிகளிலும், அப்புறம் பொதுவா டீம் களிலும் நிறைய மாற்றங்கள். நான்கு புது டீம்கள் (உண்மையா சொன்னா ஒரு புது டீம், மிச்ச ரெண்டுத்தலயும் change of ownership) வந்தது பார்முலா 1-க்கே புதுரத்தம் மாதிரி இருக்கு. ரெனோ முதலிடத்தைத் தக்கவச்சுக்க என்ன செய்யப்போகுது, இந்த வருஷமாவது கிமிக்கும் மாண்டோயாவிற்கும் உடையாத காரை மெக்லாரன் தருமா, பெராரி-ஷுமாக்கர் என்ன செய்யப்போறாங்க, பார் ஹோண்டாவில் பாரிஷெல்லோவின் பங்கேற்பு, சண்டை போட்டு பிரிஞ்ச வில்லியம்ஸும் பி.எம்.டபிள்யு அணிகளில் யாருக்கு இந்த வருஷம் அதிக வாய்ப்பு, நிக்கோ ரோஸ்பெர்க் மற்றும் ஸ்காட் ஸ்பீட் போன்ற புதுமுகங்கள் ன்னு நிறைய கேள்விகள். எதிர்ப்பார்புகள்.

இந்த வருஷம் விதிமுறைகள்ல ரெண்டு முக்கியமான மாற்றங்கள். முதலில், தகுதிச்சுற்று முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. போன வருஷம், ரெண்டு ரவுண்டா இருந்தது இந்த வருஷம் மூணு ரவுண்ட் ஆகியிருக்கு. எப்படின்னு பாப்போமா? முதல் சுற்று 15 நிமிடங்கள். இதில் 22 கார்களும் பங்கேற்க வேண்டும். எல்லா ஓட்டுநர்களின் லாப்-டைம்களைப் பொறுத்து ஒன்றிலிருந்து வரிசை வழங்கப்படும். இதில் 17-22 வரைக்கும் வருவோர் அடுத்த சுற்றிற்கு செல்ல முடியாது. பந்தயத்தன்று 7-11 வரையிலான வரிசைகளில் தான் ஆரம்பிக்க வேண்டும். மற்ற 15 ஓட்டுநர்கள் அடுத்த சுற்றுக்கு செல்வார்கள். முந்தையதைப் போலவே பதினைந்து நிமிடங்கள். இதில் 11-16 வரையிலான பந்தய இடங்களுக்கு ஓட்டுநர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்தவிரு சுற்றுகளை, சென்ற வருஷத்தோடு ஒப்பிடுகையில் முக்கியமான மாற்றம், எரிபொருளின் அளவு.

சென்ற வருடத்தின் விதிகளின் படி, actual பந்தயத்தில் கலந்துகொள்ளும் போது பயன்படுத்தவிருக்கும் எரிபொருளின் அளவு தகுதிச்சுற்றிற்கு முன்னரேயே முடிவு செய்யப்பட வேண்டும். அதில் மாற்றங்கள் பின்னால் செய்ய முடியாது. அதனால், சென்ற ஆண்டு தகுதிச்சுற்றுகளில் கார்களின் மொத்த potential உக்கு வேலையே இல்லை. பந்தயத்தில் ஒருபகுதிபோலவே இருந்தது. இந்த வருடம் இந்தக் கட்டுப்பாடு நீக்கப்பட்டு மிகக் குறைவான அளவில் எரிபொருள் கார்களுள் இருப்பதால், அவற்றின் வேகம் அதிகமாகும். (இதில் வேறொரு புது விதி வந்துள்ளது, அதைப்பற்றி பிறகு பார்ப்போம்). இன்னும் இண்டெரெஸ்டிங்காக இருக்கிறது இப்புதிய பார்மாட்டில்.

மூன்றாவது இருபது நிமிட கடைசி தகுதிச் சுற்றில், சென்ற ஆண்டைப் போன்று, பந்தயத்திற்கான எரிபொருள் அளவே பயன்படுத்தப் படவேண்டும். இதன் முடிவுகளை வைத்து ஒன்றிலிருந்து பத்து வரைக்குமான வரிசைக்கிரமம் உருவாக்கப்படும். இந்த எரிபொருள் கட்டுப்பாடு தளர்க்கப்பட்டதால் நேற்றைக்கு பெரிதும் பயனடைந்தவர் மெக்லாரனின் கிமி ராய்க்கோனன். தகுதிச்சுற்றின் ஆரம்பத்தில் சஸ்பென்ஷன் தகராறால், பந்தயத்தில் இருபத்தியிரண்டாவது இடத்திலிருந்து தொடங்க வேண்டிய நிலை வந்தும், சமயோசிதமான பிட்-ஸ்டாப் strategy மூலம் பாயிண்ட்களை அள்ள முடிந்தது. தகுதிச்சுற்றில் முதல் மூன்று இடங்கள் பெற்றவர்கள் மைக்கேல் ஷுமாஹர், பெலிப்பே மாஸ்ஸா மற்றும் பெர்னாண்டோ அலோன்ஸோ. அலோன்ஸோவை எதிர்ப்பாத்திருந்தாலும் பெராரியின் முன்னேற்றத்தை நான் எதிர்ப்பார்க்கவில்லை. அதேபோல மாஸ்ஸாவின் இரண்டாவது இடத்தையும்.

விதிமுறைகளில் இன்னொரு முக்கியமான மாற்றம். Pit Stop Tyre Changes. சென்ற வருடம் இது தடை செய்யப்பட்டிருந்தது. அதாவது ஒரு ரேஸின் இடையில் எரிபொருள் நிரப்புகையில், டயர் மாற்றம் செய்யக்கூடாது என்ற முட்டாள்தனமான விதி இருந்தது. இதனால் பெரும்பாலான ரேஸ்களின் போக்கை இந்த மிஷெலின் vs. பிரிட்ஜ்ஸ்டோன் சண்டையே நிர்ணயித்தது. மேலும், இண்டியானபோலிஸில் நடந்த கேலிக்கூத்தையும் யாரும் அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது. நல்ல வேளையாக இந்த தடவை, மாஸ்லியின் மண்டையில் யாரோ நன்றாக தட்டி, அவரை தெளிவுறச் செய்திருக்கின்றனர். நல்லதுதான். அதனால் இம்முறை எரிபொருள் நிரப்புகையில் டயர்களை மாற்றலாம் என்றும், ஏழு செட் டயர்கள் வரைக்கும் ஒரு ரேஸ் வீக்கெண்டிற்கு பயன்படுத்தலாம் என்று விதி தளர்த்தப்பட்டிருக்கிறது. வீக்கெண்ட் என்றால் வியாழன்று பொதுவாக ஆரம்பிக்கும் பயிற்சி சுற்றுகளையும் சேர்த்து ரேஸ் முடியும் ஞாயிறு வரை.

ரேஸ் பார்த்தவுடனேயே பதிய வேண்டும் என்று நினைத்திருந்தேன். முடியவில்லை. ஆனால், அதைப் பார்த்தவுடன் சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு பார்முலா 1 மிகவும் விறுவிறுப்பாய் இருக்கப்போகிறது என்பது மட்டும் புரிந்துவிட்டது. ரெனோவின் தொடரும் பார்ம், பெராரியின் புத்துணர்ச்சி தவிர மெக்லாரன் மற்றும் BAR ஹோண்டாவும் competitive ஆக இருக்கின்றன. குறைந்தபட்சம், இந்த ஆண்டு இந்த நான்கு முனைப்போட்டியாவது இருக்குமென்று நினைக்கிறேன். சென்ற ஆண்டைப்போல இருமுனைப்போட்டியாக அல்லாமல் இருந்தால் நம்மைப்போன்ற ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தானே. ரேஸைப் பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

தலைவா! இப்போவாவது?சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு!
சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு!
இளவட்ட நடையப்பா.. என்னோட உள்ளதெல்லாம் இளஞ்சிங்கப் படையப்பா!
பின்னால் நூறு படையப்பா!
யுத்தம் என்று வருகையில் பத்துவிரல் படையப்பா!
பாசமுள்ள மனிதனப்பா.. நான் மீசை வச்ச குழந்தையப்பா!
என்றும் நல்லதம்பி நானப்பா!
நன்றியுள்ள ஆளப்பா!
தாலாட்டி வளர்த்தது தமிழ்நாட்டு மண்ணப்பா!

பத்துமாடி வீடு கொண்ட சொத்து சொகம் வேண்டாம்!
பட்டங்களை வாங்கித்தரும் பதவியும் வேண்டாம்!
மாலைகள் இடவேண்டாம்! தங்க மகுடமும் தர வேண்டாம்!
தமிழ்த் தாய்நாடு தந்த அன்பு போதுமே!
என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்தது தமிழல்லவா?
என் உடல்பொருள் ஆவியை தமிழுக்கும் தமிழர்க்கும் கொடுப்பது முறையல்லவா?


உன் கையை நம்பி உயர்ந்திடப்பாரு!
உனக்கென எழுது ஒரு வரலாறு! உனக்குள்ளே சக்தியிருக்கு!
அதை உசுப்பிட வழி பாரு! சுப வேளை நாளை மாலை சூடிடு!
அட! எவனுக்கு என்ன பலம் எவனுக்கு என்ன குணம் கண்டதில்லை ஒருவருமே!ஒரு விதைக்குள்ளே அடைப்பட்ட ஆலமரம் கண்முழிக்கும் அதுவரை பொறு மனமே!
-------------------------------------

கொடுமை அழித்துவிட! கொள்கை ஜெயித்துவிட!
நம் நடைகண்டு அகங்காரம் தூளாக வேண்டும்!
நம் படைகண்டு திசையெல்லாம் பயந்தோட வேண்டும்! சக்தி கொடு! இறைவா!
வெள்ளத்தில் வீழ்ந்தவரை கரையேற்ற சக்தி கொடு!
பள்ளத்தில் கிடப்பவரை மேடேற்ற சக்தி கொடு!
தீமைக்கும் கொடுமைக்கும் தீ வைக்க சக்தி கொடு!
வறுமைக்கு பிறந்தவரை வாழ்விக்க சக்தி கொடு!
எரிமலைகள் என் காலில் தூளாக சக்தி கொடு!
ஒரு வார்த்தை சொன்னாலே ஊர்மாற சக்தி கொடு!முடிவெடுத்த பின்னால் நான் தடம் மாற மாட்டேன்!
முன்வைத்த காலை நான் பின் வைக்க மாட்டேன்!
எனை நம்பி வந்தவரை ஏமாற்ற மாட்டேன்!
வெறும் ஏணியாய் நானிருந்து ஏமாற மாட்டேன்!
உப்பிட்ட தமிழ்மண்ணை நான் மறக்க மாட்டேன்!


உப்பிட்ட தமிழ்மண்ணை நான் மறக்க மாட்டேன்!
நான் உயிர் வாழ்ந்தால் இங்கேதான் ஓடி விட மாட்டேன்!
கட்சிகளை பதவிகளை நான் விரும்ப மாட்டேன்!
காலத்தின் கட்டளையை நான் மறுக்க மாட்டேன்! இறைவா!

-------
இவ்வளவு பாடிய என் தலைவா! நீ எங்கே? எங்கே?? எங்கே??? உன்னை விட்டால் தமிழர்களான எம்மைக் காக்க வேறு யார்? விஜயகாந்த் போன்ற Jokers எல்லாம் அரசியலில் இருக்கையில் இன்னும் என்ன தயக்கம்?

தமிழக அரசியல் குப்பையிலிருந்து இந்தத் தேர்தலிலாவது எம்மக்களைக் காப்பீரா?


இப்படிக்கு,
உன்னையே நம்பியிருக்கும் ரசிகன்

 

வார்ப்புரு | தமிழாக்கம்