இப்பல்லாம் பாருங்க.. தெருவுல போனா அப்டியே ஜிவ்வுன்னு இருக்கு... பொண்ணுங்கல்லாம் கர்சீப்ப கட்டிகினு தெருவுல நடக்கிறாங்க.. இக்கரைக்கு அக்கரை பச்சைனு சொல்ற அளவுக்கு ஸீத்ரு டாப்ஸ்... சாதாரணப் பொண்ணுங்களே இந்த மாதிரி அரைகுறையா வருதுங்க.. டீசண்டான நம்மளப் போல உள்ள ஆளுங்களுக்கே வெலவெலக்கும்போது ரவுடிப்பசங்க சும்மா இருப்பாங்களா? கிண்டல் அடிக்கிறாங்கோ.. மேல விழுந்து பிரச்சனை செய்றாங்கோ...
ஆனா அதுக்கு அந்தப் பொண்ணுங்க என்ன சொல்றாங்க... நான் எனக்கு பிடிச்ச மாதிரி ட்ரஸ் போட்டுக்கறேன். முற்காலத்துல "பழமையான தொழில் செஞ்சவங்க" மட்டுமே இந்த மாதிரி தொழில்முறை சீருடையா போட்டிருந்திருக்கலாம்; ஆனா இப்ப 'அவங்க' உடைய போட்டிருக்கறதால மட்டுமே நான் அந்த மாதிரி பெண் கிடையாதுன்னு ஆண்களெல்லாம் புரிஞ்சிக்கணும்னு சொல்றாங்கோ....
ஹூம்.. உண்மைதான்... ஆண்களே.. கேட்டுக்கங்க. என்னமாதிரி வேனா அவங்க ட்ரஸ் போடலாம்.. ஆனா அந்த மாதிரிய உடைய வச்சுமட்டுமே தப்பான பெண்ணுன்ணு நாம எடை போட்டிரக்கூடாது... ஏன்னா போடுற டிரஸ் அவங்களோட தனிமனித சுதந்திரம்.
ஆனா, பெண்மக்கள்ஸ்.. நீங்களும் ஓண்ணு புரிஞ்சிக்கணும்.. ஆம்பிளைகளோட சிம்பிளான crocodile மூளைக்கு இந்த மாதிரி subtle வித்தியாசமெல்லாம் புரியாதுங்க. ஏன்னா அவங்க மூளை ஒரே கோணத்துலதான் எப்போதும் பாக்கும்... அது என்னன்னு சொல்லித்தெரியணுமா...சரி அத விடுங்க...
எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருது... ஒரு நாள் சாயங்காலம் தெருவுல நடந்துபோயிகிட்டிருந்தேன்... திடீர்னு ஒரு ரவுடி வந்து கத்தியைக் காட்டி மிரட்டி என் பர்ஸ பிடுங்கிகிட்டு ஓடிட்டான். அதுல ஏகப்பட்ட பணம் இருந்துச்சு... என்ன செய்யறதுன்னு சுத்திமுத்தி பார்த்தேன்... அப்பனு பார்த்து அங்கன தெய்வாதீனமா ஒரு போலீஸ்காரர் வந்தார்.. நான் உடனே அவர்கிட்ட போய் 'சார்.. அதோ பாருங்க சார்.. என் பர்ச மிரட்டிப் பறிச்சு ஒருத்தன் ஓடிகிட்டிருக்கான்.. எப்படியாவது அவன பிடிச்சு..." சொல்லி முடிக்கறதுக்குள்ள அவரு 'ஏன்யா.. போலீஸ் யூனிபார்ம் போட்டதுனால மட்டும் என்னைய பாத்து எந்த தைரியத்துல போலீஸ்னு நினைப்பே"னு என் சட்டையப் பிடிச்சிட்டாரு.. என்ன சொல்றதுன்னு தெரியாம ஓட்டம் பிடிச்சிட்டேன்.
----------------------
இது சொந்த சரக்கில்லை... Dave Chappelle's 'Killing Them Softly' லேர்ந்து சுட்டு வறுத்தது....
சம்மர் வந்தாச்சே... அதான் ஹாட் மேட்டர்ல ஒரு பதிவு போடலாமின்னு.. ஹி ஹி....
அப்புறம் டிஸ்கி: ஹ்யூமரிஸம் தவிர்த்து எந்த இசத்துக்கும் ஆதரவோ (அல்லது எதிர்ப்போ) இந்த பதிவில் தெரிவிக்கப்படவில்லை.
பழைய சம்மர் பதிவு ஒண்ணு
204. Killing 'Us' Softly! - A/UA
விடுதியா வீடா... தமிழா?
பள்ளி இறுதியாண்டுகள் மற்றும் கல்லூரி நாட்களை formative yearsனு சொல்றோமில்லியா... இந்த நாட்களில் தான் உலகத்தைப் புதிதாக பார்ப்பது தொடங்கி சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ நம் கருத்து என்று ஒன்றை அனைத்து விஷயங்களிலும் உருவாக்கிக்கறோம்.
பொதுவா பள்ளிநாட்களில் காலையில் அம்மா வந்து "கண்ணா எழுந்திருடா.. ஸ்கூலுக்கு போவேணாமா"னு கொஞ்சியபடியே எழுப்பிவிடுவதிலிருந்து "காபி வச்சு எத்தனமணியாச்சு.. சீக்கிரம் எழுந்திருடா"ன்னு அப்பா ஸ்க்ரினெல்லாத்தையும் தள்ள அதுவரையில் இருள்படர்ந்த அறையில் மிதந்துகொண்டிருந்த தூசிகளையெல்லாத்தையும் ஸ்டன்னாக்கியபடி ஜன்னலிலிருந்து கசியும் வெயிலிருந்தும் தப்பிக்க போர்வையை இழுத்துப்போர்த்திக்கொள்வதில் ஆரம்பிக்கும் இனிய பள்ளிக்காலைப் பொழுதுகள் அப்புறம் ட்யூஷனிலோனு ஓடி வந்து ஒரு அவசரகுளியல், நித்தியதர்மமாய் சாமிபடம் முன்னாடி நின்னு பாவ்லா பண்ணி அப்புறம் இருக்குற சுடச்சுட சூப்பர் இட்லியையோ மொறுமொறு தோசையோ அடுப்பிலிருந்து அப்படியே தட்டில்விழ அப்படியே டன் கணக்கில் உள்ளே தள்ளி ஸ்கூல் பஸ்ஸுக்கு ஓடுவதற்குள் டிபன் பாக்ஸையோ தண்ணீர் பாட்டிலையோ மறந்துவைத்திருப்போம். அதை எடுத்துக்கொண்டே பஸ்பின்னாடியே வண்டியை எடுத்துக்கொண்டு அப்பா வந்து அடுத்த ஸ்டாப்பிங்கில் கொடுக்க என்று சுகமாய் நகரும் காலைகள். சாயந்திரம் வந்து எதுனாச்சும் நாம கொறிக்கவென்று அம்மா கையில் வைத்துக்கொண்டு நம்பின்னால் சுத்த நாம மட்டையையும் ஷுவையும் தேடி அலைய அப்புறம் விளையாடிவந்த் பிள்ளை ரொம்ப டயர்டாக இருப்பானே என்று பூஸ்டும் கொஞ்சமே படியென்ற அறிவுரையுடன் அதையும் செய்துமுடித்தால் இரவுச்சாப்பாடு தாயார் தயாராக வைக்க அதையும் சாப்பிட்டு சுகமாய் டிவியுடன் தூக்கமென்று நகர்ந்துவந்த துயரில்லாப் பள்ளிப்பருவம்.
இப்படி நாம அனுபவிக்கறதெல்லாம் கண்டு பொறுக்காதவன் ஒருத்தன் வானத்துல உக்காந்து விதிய எழுதுறான்னு தோணுற மாதிரி திடீர்னு ஒருநாள் நீ பெரியவனாயிட்ட.. இனிமே தனியா போய் விடுதியில தங்கிப்படின்னு கொண்டுபோய் திடுதிப்புன்னு கல்லூரி விடுதியில்; பல இடங்களில் சொல்லவே முடியாத அளவு கேவலமாய் இருக்கும்: இடங்களில் முன்பின் தெரியாத நம்ம வயசுப்பசங்க ரெண்டு பேரோட கொண்டுவிட்டு போய்விடுவார்கள். இதுவே வெளிநாடு என்றால் கேட்கவே வேண்டாம். அவன் நம்ம நாட்டுக்கார பசங்களாக் கூட இருக்கமாட்டான். என்ன பேசுறதுன்னு திருதிருன்னு முழிக்கறதுல ஆரமிச்சு இந்தப்பயலுக முழியப்பார்த்தாலே பொறுக்கியாட்டம் இருக்கேன்னு பரஸ்பரம் கைகுலுக்குவதில் தொடங்கும் இந்த உறவு பெரும்பாலும் இந்த ரூம் மேட்ஸே நம் அத்யந்த தோழர்களாய் பெரும்பாலும் மாறுவது அழகுதான்.
மணியடிச்சா சோறு ரேஞ்சுக்கு ஹாஸ்டல் மெஸ் பிரச்சனைகள். இந்த மாதிரி காய்கறிகள இவ்ளோ மட்டமா சமைக்கவும் முடியும்னு ஒருவித ரிசர்ச் பெஸிலிடி மாதிரி இந்தப்பசங்க எவ்ளோதான் தாங்குவாங்கன்னு பார்ப்போம்னே மெஸ்காரங்க செய்றா மாதிரி இருக்கும். அப்புறமா வழக்கமான தண்ணி வராது. விளக்கு எரியாது. நமக்கு முன்னாடி இருந்தவனெல்லாம் இந்த ரூம்ல அப்படி என்னதாண்டா பண்ணிருப்பானுங்கன்னு யோசிக்கவைக்கிற அளவுக்கு சுவரில் மேஜையில் என ஆபாச +/- கிறுக்கல்கள், நொடிப்பொழுதுகளில் வைரமுத்து ஆனவர்கள் விட்டுப்போன draft-கள் என சைட் ட்ராக்கில் ஓடுவது; இதனூடே சீனியர்கள் அலம்பல், பாடங்களின் சுமை என இன்னொரு ட்ராக்கில் அது.
இந்த விடுதிகள் இருக்கே அது ஒரு பாரதவிலாஸ் மாதிரி. முழுக்கிறுக்கனும் இருப்பான். அரைக்கிறுக்கனும் இருப்பான். நம்மளை கிறுக்கன்னு சும்மா சொல்றவனும் இருப்பான் (இதுல என்ன விசேஷம்னா நாம அடுத்தவங்கள கிறுக்கன்னு சொல்லலாம்.. ஆனா அடுத்தவங்க நம்மள சொல்லிடப்படாதுங்கறது பாலபாடம்) இப்படி பலதரப்பட்ட மனிதர்கள். வாழ்க்கையில் நாம் சந்திக்கப்போகின்ற பலமுகங்களின் ஒரு digest. பள்ளிக்கும் இங்கேயும் என்ன வித்தியாசமென்றால் நம் பிரச்சனையை நாம்தான் தீர்த்துக்கொள்ளவேண்டும். இரு இரு எங்கப்பாவை கூட்டிகிட்டுவரேன்னு மிரட்டறதெல்லாம் இனிநடக்காது. 'காலேஜ் முடியட்டும் வெளியில வாடா'ன்னு பஞ்ச் டயலாக்தான் அங்கே செல்லுபடியாகும். கிளிகளும் நம்மை லுக் விடும். கூடவே பட்டாளத்தையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். நிஜமாவே காதல், கத்திரிக்காய், போதை, பழக்கமென பல்வேறு தடைகளை தாண்ட வேண்டும்.
சரி, இப்பதிவின் இல்ல சொல்லப்போனா கொத்ஸ்-ஸ்டைல் விவாதமேடையின் நோக்கமே 'விடுதியா வீடா? எது சிறந்ததுன்னு நினைக்கிறீங்க?' வீட்ல படிச்சா அம்மாப்புள்ளையாவே இருப்பாங்க. விடுதியில் படிச்சா ஜகதலப்பிரதாபனா ஆயிடுவாங்கங்கறது தொன்றுதொட்டு இருந்துவரும் நம்பிக்கை. இதுல எந்தளவுக்கு உண்மையிருக்கு? worldwiseனு ஆகறதுக்கு வீடு நல்லதா விடுதி நல்லதான்னும் நாளைக்கே இரண்டுமே சாத்தியமென்றால் உங்க பசங்களை எங்க விடுவீங்கன்னும் நாலுபேரு சொல்லுங்க. அப்புறம் ஒரு முடிவுக்கு வருவோம்.
அப்புறமா சுவாரசியமான கல்லூரி விடுதி /வீட்டில்(அப்படி எதுனாச்சும் இருந்தா... :) எந்த சைடுலயும் நான் இல்லை) அனுபவங்களையும் சொன்னா நல்லா பொழுதுபோகும்.
