மறக்க முடியாத விளம்பரங்கள்

நேத்திக்கு நண்பனுடன் ஸ்கூல் போன்ற கற்கால நிகழ்வுகளை அசைபோட்டுக்கொண்டிருந்தேன். அப்போது பேச்சு டிவியில் வந்த பிரபலமான விளம்பரங்கள் பக்கம் திரும்பியது. அவை விளம்பரம் செய்த பொருட்களை மறக்கமுடியாத அளவு தாக்கத்தை ஏற்படுத்தியவை என்று சொல்லவும் வேண்டுமா? அவற்றில சிலவற்றை இங்கே இடலாம் என்று எண்ணுகிறேன்.

1) பஜாஜ் ஸ்கூட்டர் - ஹமாரா பஜாஜ் என்ற அருமையான பாடலுடுடன் மிகவும் செண்டியான விளம்பரம்.

2) கெல்வினேட்டர் - ஓடுகளின் மேல் ஓடும் திருடன் வெப்பம் தாளாமல் தவிப்பான். ஆனால் ஓரே ஒரு வீட்டின் ஒடுகள் மட்டும் ஜில்லென்று இருக்கும்.

கெல்வினேட்டர் - இதே போல சில கலக்கல் விளம்பரங்கள் வைத்திருந்தனர். சங்கீதம் கற்றுக்கொண்டிருக்கும் ஒருவரின் மனைவி பிரிட்ஜை ஓப்பன் செய்தால் பிர்ஹாக்களாக பொளந்து கட்டுவார். பல் செட்டை கழட்டி வைத்து பிரிட்ஜ் ஒப்பன் செய்யும் தாத்தா..

3) பெவிகுவிக் - மிகவும் புரபஷனல் உபகரணங்களோடு மீன் பிடிக்க திண்டாடும் ஆசாமி பார்த்துக்கொண்டிருக்கையில் ஒரு குச்சியில் பெவிகுவிக் தடவி வரிசையாய் மீன் பிடிப்பான் ஒரு கோயிஞ்சாமி!

4) நேஷனல் எக் கார்ப்பரேஷன் - அண்டா கா பண்டா என்ற சூப்பர் பாட்டுடன் முட்டைகள் குறித்தது.

5) சோனி எரிக்ஸன் GF788 (மாடல் சரியாக நினைவிலில்லை) - ரெஸ்டாரண்டில் உட்கார்ந்திருக்கும் பெண்ணிடம் வழியப்போய், அந்தப் பெண் காபி பிளீஸ் என்று நக்கல் விடும் விளம்பரம். விருது கூட வாங்கியது என்று நினைக்கிறேன்.

6) க்ளோஸ் அப் - "மே ரோஸ் க்ளோஸ் அப் யூஸ் கர்த்தா ஹூ" என்ற ரீதியில் ஒரு வினோதமான குரல் பாட, சோடா பாட்டில் கண்ணாடி போட்டவர் ஆடும் வித்தியாச விளம்பரம்.

7) புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா??

8) விக்கோ டர்மரிக் கீரீம் - "விக்கோ டர்மரிக் இல்லை காஸ்மெடிக்.. விக்கோ டர்மரிக் ஆயுர்வேதிக் கீரிம்.." டீவியில் பார்த்ததாய் நினைவு இல்லை. எல்லா சினிமா தியேட்டர்களிலும் வரும். எரிச்சலூட்டும் என்றாலும் விக்கோவை மறக்க முடியாது.

9) ரீகல் சொட்டு நீலம் - சொட்டு நீலம் டோய் என்று குஷ்பு தீப்பந்தம் எல்லாம் எடுத்துக்கொண்டு ஓடுவார்..

10) உஜாலா - நான் உஜாலவுக்கு மாறிட்டேன். அப்ப நீங்க?

நிறைய இருக்கு இந்த மாதிரி. உங்களுக்கு நினைவில் வருவதை சொல்லுங்களேன்.

Disclaimer: This Blog is not sponsored by any of the products mentioned above. The blogger doesnt endorse any of the products mentioned as well and hence doesnt receive any form of financial compensation from the respective companies, though wont mind if they decide to.

40 Comments:

 1. sundlight said...
  This comment has been removed by a blog administrator.

 2. dvetrivel said...

  ஜண்டு பாம் ஜண்டு பாம் தலைவலி நீக்கும் பாம்

  "நானா? காலேஜா?" என அழகான பெண் கெட்க, அருகே "அம்மா" என சின்ன குழந்தை வந்து காலை கட்டிக் கொள்ளும் சந்தூர் சோப் விளம்பரம்


 3. பால் ரவிசங்கர் said...

  எனக்குப் பிடித்த 10 விளம்பரங்கள்

  1. உட்வர்ஸ் கிரைப் வாட்டர் - கொடுத்திட்டியா.. நீயும் சின்னப்பிள்ளையா இருக்கும்போது அதான் கொடுத்தேன்.

  2. சோனாட்டா கைக்கடிகாரம் - நான் காலத்தின் முன்னே செல்கின்றேன். எனது பயணம் 2 நொடிகள் முன்னே.

  3. அஜந்தா வாட்சஸ் - அந்தப் பின்னனி இசை இன்னும் காதுக்குள் இருக்கின்றது.

  4. சாலிடர் டிவி - பழைய சாலிடர் டிவி விளம்பரம். Solidaire for Sunday Movie.. என்று செல்லும் அந்தப் பாடல் மற்றும் Sunil, Your Dinner is Getting Cold என்ற ஒரு விளம்பரமும்.

  5. லியோ காப்பி - காலத்தை வெல்லும் ரசனை இதுவே.. என்ற மென்மையான பாடலுடன் கூடியது. அரவிந்த சாமி நடித்தது என்று நினைக்கின்றேன்.

  6. ரேமாண்ட்ஸ் - The Complete Man என்று முடியும் எல்லா ரேமாண்ட்ஸ் விளம்பரங்களும், குறிப்பாக அப்பாவின் காலில் தூங்கும் மகள் என்பது போன்று கவிதை போன்ற ஒரு விளம்பரம்.

  7. 3 ரோசஸ் டீ - இந்த டீயில் நிறமில்லை என்ற பாடலுடன் கூடியது

  மற்றும் நீங்கள் குறித்தவற்றிலிருந்த்து

  8. பஜாஜ்
  9. ரீகல் சொட்டு நீலம
  10. உஜாலா

  அழகான சிறுபாடல் ( Jingles ), ஒரு செண்டிமெண்டான காட்சியமைப்பு இருந்தால் எல்லோரையும் கவரும் என்பதில் சந்தேகமில்லை.


 4. கீதா said...

  நிறைய இருக்குங்க

  1. நிர்மா நிர்மா வாஷிங் பவுடர் நிர்மா...
  2. Nescafe - 'open your heart.. open your thoughts you cant stay behind.. ' இப்படி ஒரு பொருள் நிறைந்த பாட்டோட அருமையா இருக்கும் அந்த விளம்பரம்.
  3. பொன்வ்ண்டு பொன்வண்டு போட்டுபாருங்க..(ரேடியோல நிறைய முறை வந்திருக்கு)

  நிறைய இருக்குங்க

  :)


 5. நல்லடியார் said...

  1) பித்தம்,வாந்தி,மயக்கம்,கை-கால் பிடிப்பு,தலைவலி நீங்க அஞ்சால் அலுப்பு மருந்து

  2) சிங்கப்பூர், மலேசியா மற்றும் உலக நாடுகளுக்கும் ஏற்றுமதியாவது கோபால் பல்பொடி

  மறக்க முடியாத விளம்பரங்கள்.

  உங்க புண்ணியத்துல இலவசமா விளம்பரம் செஞ்சாச்சு!

  ;-)


 6. குழலி / Kuzhali said...

  'சின்னஞ்சிறு உலகம்' அப்படி என்று செல் ஒன் விளம்பரம் சமீபத்தில் வந்துள்ளதே, எனக்கு அதன் கருத்தாக்கம் மிக பிடித்துள்ளது, எனக்கு சமீபத்தில் மிக பிடிக்காத விளம்பரமெனில் அதுவும் செல் ஒன் தான், செல்பேசி செலவு குறைக்க நடக்கும் ஒரு அலுவலக கூட்டம்... செல் ஒன்னிற்கான அத்தனை நல்ல விளம்பரம் போட்டு விட்டு அதே செல் ஒன்னிற்காக இவ்வளவு அரத பழைய விளம்பரம்...


 7. rv said...

  ஆல்தோட்டபூபதி,
  ஜண்டு பாம்? மகள் அம்மாவிற்கு பாம் தடவிவிடுவதுதானே?

  அந்த சந்தூர் சோப் விளம்பரமும் நல்ல விளம்பரம்...

  கீதா,
  நெஸ்காபே விளம்பரமும் பொன்வண்டு விளம்பரமும் கேள்விப்பட்டதில்லை.

  வாஷிங் பவுடர் நிர்மா தியேட்டர்களில் வந்துதான் பார்த்ததுண்டு..


 8. rv said...

  பவுல்ரவிசங்கர் (பவுல்னா என்னன்னு கேக்கலாமா??),
  நீங்க சொன்னதில் வுட்வர்ட்ஸ் க்ரைப்வாட்டர், லியோ காப்பி (என் தலைவர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்தது), ரேமண்ட்ஸ் நினைவுக்கு வருகின்றன. மற்றவை தெரியாவில்லை.


 9. rv said...

  நல்லடியார்,
  கோபால் பல்பொடியை மறக்கமுடியுமா? ஆனா டிவியில வந்தது கிடையாதுன்னு நினைக்கிறேன். ரேடியொவில் தானே?

  அஞ்சால் அலுப்பு மருந்து? இன்னுமா விளம்பரம் வருது? இப்பல்லாம் Franch oil NH தானே?? :))


 10. Jay said...

  ஹார்லிக்ஸ் - குடிக்க வேண்டாம்; அப்படியே சாப்பிடுவேன்!
  காம்ப்ளான் - வளரும் பையனிவன் - உயர உயரவே துள்ளுபவன்


 11. Ramya Nageswaran said...

  1. மனதில் நிற்கும் ம்யூஸிக் - Titan
  2. மனதில் நிற்கும் விஷுவல்ஸ் - பவுல்ரவிசங்கர் சொல்லியிருக்கும் Solidaire TV விளம்பரம்:

  Solidaire for the various news, Solidaire for sports,
  Solidaire for the Sunday movies, Solidaire Solidaire..
  We want we want true colors,
  We want we want real sound,
  We know what we want we want Solidaire, Solidaire
  (நினைவிலிருந்து எழுதுவது..சரி தானா என்று தெரியவில்லை)

  குழந்தைகள் வருவதில் பிடித்தது: Videocon washing machine மற்றும் இபான், குபான், எப்பான் - latest Horlicks விளம்பரம்

  Irritating tagline: "இதெல்லாம் பொம்பளைங்க சமாசாரம்..போய் இதயம் நல்லேண்ணய் வாங்கிட்டு வாங்கன்னா வாங்கிட்டு வாங்களேன்."

  மிக எரிச்சலூட்டிய டிவி விளம்பரம்: Fair and Lovely கருப்பாக(?) இருக்கும் பெண்ணிற்கு வேலை கிடைக்காது. இது போதாதென்று அப்பா வேறு "பிள்ளையா பொறந்திருந்தா.." என்று ஏதோ உளறுவார். இவள் வெள்ளையான பிறகு ஏர் ஹோஸ்டஸ் ஆகி அப்பாவிற்கு காபி வாங்கிக் கொடுப்பாள். அபத்தத்தின் உச்சகட்டம்! சில பெண்கள் அமைப்பின் pressure காரணமாக எடுத்துவிட்டார்கள் என்று கேள்விப்பட்டேன்.


 12. Govind said...

  "ஐ லவ் ரஸ்னா" என்ற வார்த்தைகளோடு முடியும் அனைத்து ரஸ்னா குளிர்பான விளம்பரங்கள்....

  தோழிகள் பரீட்சை முடிவுகளைப் பற்றி, வாழ்க்கையைப் பற்றி என கேட்கும்பொழுதெல்லம் " i dont care" என பதில் அளிக்கும் நாயகி, முக அழகைப்பற்றி வரும்பொழுது மெளனமாகிறாள்... வீட்டிற்கு சென்று அம்மாவிடம் கூறி,சோப்பை மாற்றும் லைப்பாய் கோல்ட் .....

  மாமியாருக்கும் மருமகளுக்கும் நடக்கும் ஏரியல் வாஷிங் பவுடர்.....

  விதவிதமான குழந்தைகளைக் காட்டும் ஜான்ஸன் & ஜான்ஸன் ....

  ஒரு பெண் க்ரிக்கெட் மைதானத்தில் ஆடும் dairy milk சாக்லெட் விளம்பரம்
  அருமையான பாடலுடன்...

  நெஸ்கபே விளம்பரங்கள் வரும் பாடல்... தற்போது வரும் அஜீத்-சிம்ரன் விளம்பரமும் பிடித்த ஒன்று...


 13. துளசி கோபால் said...

  அச்சச்சோ,

  இதுலே வந்த விளம்பரம் எதுவும் பாத்ததில்லையே ஒண்ணைத்தவிர.
  அதான் வீக்கோ டர்மெரிக் வேனிஷிங் க்ரீம் படக்கேஸட் லே வந்திருந்தது.

  தனி 'மயில்' ஒண்ணு போட்டுருக்கேன். பாருங்க.


 14. நல்லடியார் said...

  கோபால் பல்பொடி ரேடியோவில்தான்னு நினைக்கிறேன். இருந்தாலும் கணீர் குரல்.

  இவையும் மறக்க முடியாத ரேடியோ/டி.வி/சினிமா விளம்பரங்கள்தான்.

  "என்னசார்..வீட்டுக்கு போகாம நடு ரோட்டில நிக்கிறேன்னு பார்க்கறீங்களா? அதான் வீட்டை விட்டு கிளம்பும்போதே சொல்லிட்டாளே, மறக்காம இதயம் நல்லெண்ணை வாங்கிட்டு வரனும்னு"

  "லைப்ப்ப்ப்பாய்!!!" "லைப்பாய் எவ்விடமோ ஆரோக்கியம் அவ்விடமே!"

  "வஜ்ர்தந்தி,வஜ்ர்தந்தி,வஜ்ர்தந்தி.. இயற்கை நமக்கு பல மூலிகைகளை வழங்கியுள்ளது...."

  "பாக்டம்பாஸ் 20:20:20" உழவர்களின் தோழன்!

  எனக்கு பிடிக்காத சமீபத்திய விளம்பரம் "ஹமாம் சோப்", ஒரு தாய் பெண்ணிடம் சோப்பு வாங்கிவரச் சொல்லும் போது சோப்பின் பெயரைச் சொல்லாமல் பிறகு பதறியபடி ஓடுவது.மற்ற சோப்புகளை வாங்கினால் முகப்பரு வந்து தாழ்வு மனப்பான்மை வந்துடுமாம்.

  ப்ரான்ச் ஆயில சமையல் தவிர எல்லாத்துக்கும் பயன் படுத்தாலம்னு நிணைக்கிறேன் ;-))


 15. rv said...

  குழலி,
  நீங்க சொன்னத பாக்கலியே? எனக்கு தெரிந்து பெரும்பாலும் செல் ஒன் விளம்பரங்கள் எல்லாம் 90-ஸ் தூர்தர்ஷன் தரத்திலேயே தான் இருக்கு..

  jay,
  ஹார்லிக்ஸ எப்படி மறந்தேன்னு தெரியலயே. கலக்கலானது அது. காம்ப்ளானும் பாருங்க - அவ்தாப் வளர்ந்து சினிமால கூட நடிச்சாச்சு..


 16. rv said...

  ரம்யா அக்கா,
  டைட்டன் பயன்படுத்தற fur elise க்காகவே ஒவ்வொருமுறையும் அந்த விளம்பரத்தை விடாம பார்த்ததுண்டு.

  சாலிடேர், ஏதோ கொஞ்சம் நியாபகம் வருது. சாலிடேர், டர்பன், டயனோரால்லாம் புழக்கத்தில இருந்த போது நான் பச்சா! இப்பவும் தான் :)

  இப்பத்திய ஹார்லிக்ஸ் இபான் குபான் கூட நல்லாத்தான் இருக்கு. குழந்தைகள் வர விளம்பரம்னா இப்பத்திய Hutch கூட நல்லா இருக்கு.

  இதயம் நல்லெண்ணெய் சித்ரான்னே பேர் வாங்கிக்கொடுத்திருச்சே. அப்போ இருந்த காலகட்டத்தில யாரும் பெரிசா கவலைப்படலேன்னு நினைக்கிறேன்.

  fair and lovely, fairever விளம்பரங்கள்லாம் எப்போதுமே இப்படித்தானே இருக்கு.


 17. rv said...

  அபிமன்யு,

  ஆமா.. அந்த விளம்பரங்கள பாத்துட்டு வீக்கெண்ட்னா ரஸ்னா வாங்கியே ஆகணும்னு அடம்பிடிச்சதெல்லாம் நினைவுக்கு வருது.. :)

  லைப்பாய், ஏரியல் விளம்பரங்கள் பார்த்த மாதிரி தெரியல.

  //ஒரு பெண் க்ரிக்கெட் மைதானத்தில் ஆடும் dairy milk சாக்லெட் விளம்பரம்
  அருமையான பாடலுடன்...
  //
  ப்ரீத்தி ஜிந்தா தான் அந்தப் பெண்ணு பட்சி சொல்லுது. அவங்க ஏற்கனவே லிரில்.. சரி சரி.. ;) இல்ல ஜெனிலியாவா? கமெண்டரி பாக்ஸ்லேர்ந்து எழுந்து மைதானத்துக்கு ஓடுவாங்களே?

  சன்ரைஸ் கூட நல்லாருக்கும். சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி வருவாங்கல்ல?


 18. rv said...

  துளசியக்கா,
  //இதுலே வந்த விளம்பரம் எதுவும் பாத்ததில்லையே ஒண்ணைத்தவிர.
  அதான் வீக்கோ டர்மெரிக் வேனிஷிங் க்ரீம் படக்கேஸட் லே வந்திருந்தது.
  //
  இப்படி வாழ்க்கையையே வீணடிச்சிருக்கீங்களே.. அதுசரி காலையில் எழுந்தவுடன் தமிழ்மணம்னு இருந்தா உலக விஷயங்கள்லாம் எப்பத்தான் தெரிஞ்சுக்கறது?? ;)

  வீக்கோவின் விளம்பரங்கள் அபத்தமானவைங்கற காரணத்துக்காகவே பலருக்கும் ப்ராடக்ட் ஞாபகத்துக்கு வருது. irony..

  நல்லடியார்,
  //"பாக்டம்பாஸ் 20:20:20" //
  என்ன போட்டுத்தாக்கறீங்க? இதெல்லாம் எந்த டிவியில வந்தது? வருது?? :)

  சாண்டோஸ் எக்கோலக்ஸ் மட்டும் தான் எனக்கு தெரியும்..

  //ப்ரான்ச் ஆயில சமையல் தவிர எல்லாத்துக்கும் பயன் படுத்தாலம்னு நிணைக்கிறேன்//
  அப்படித்தான் செய்யறாங்க மக்கள் :)


 19. கீதா said...

  இது Dairy Milk விளம்பரத்தில் வருமொரு jingle..

  "சில விஷயமே.. நம்மிடமே
  சில விஷேஷமே.. நம்மிடமே
  விஷயமே... விஷேஷமே...
  சில சுவைகளே...
  நல்ல விஷேஷமே.. வாழ்விலே.."

  அருமையான picturisation. மனதை வருடு. நிச்சயமான விளம்பரம் முடியும்போது ஒரு புன்னகையை நம்முடன் விட்டுச் செல்லும்.


 20. துளசி கோபால் said...

  இந்தியாவுலே இருந்தப்ப டிவின்னா தூர்தர்ஷனைத்தவிர வேற இல்லாத காலம். இதுலே விளம்பரம்?

  அதுக்காப்புறம் இந்தியாவை விட்டு 24 வருசமாயிருச்சு.
  இப்படி விளம்பரம் பார்க்காம வாழ்க்கையை வீணடிச்சுட்டேனேன்னு இருக்கு.

  அடுத்தமுறை இந்தியா போறப்ப ஒரு நாள் விளம்பர நாள்:-)))


 21. kirukan said...

  Boost is the secret of my energy by Kapildev and later by sachin


 22. Kanags said...

  வணக்கம் இராமநாதன்,
  இந்த இழைக்குப் பொருந்தாத ஒரு கேள்வி. ரஷ்ய மொழி எழுத்துருக்களை எங்கிருந்து இறக்கிக் கொள்ளலாம் அல்லது எப்படித் தட்டச்சுவது குறித்து தெரிவிப்பீர்களா?


 23. Ramya Nageswaran said...

  சுட்ட ம்யூஸிக்கா டைடன்..அதுவே இந்த அசட்டு அக்காவுக்கு தெரியாது :-(
  நல்லாதான் சுட்டிருக்காங்க!


 24. rv said...

  கீதா,
  அந்த விளம்பரம் நினைவுக்கு வருது. நல்ல இசை..

  துளசியக்கா,
  //அடுத்தமுறை இந்தியா போறப்ப ஒரு நாள் விளம்பர நாள்:-))) //
  மறக்காம செய்யுங்க. உங்கள மாதிரி அம்மன்களுக்காகத்தானே "ஜொலிக்குதே ஜொலி ஜொலிக்குதே" மேட்டரெல்லாம் 24 மணி நேரமும் போடறாங்க. :)


 25. rv said...

  கிறுக்கன்,
  //Boost is the secret of my energy by Kapildev and later by sachin//
  அது சூப்பரா இருந்தது. இப்போ கடைசியா சேவாக் ஒரு குழந்தைகிட்ட சண்டை போடறதாவது பரவாயில்ல. இன்னொன்னுத்தில சச்சின் கூட சேர்ந்து எங்கேயோ காட்டுக்குள்ள ஓடறாரே.. தாங்க முடில!

  ரம்யா அக்கா,
  அது பீத்தோவனோட "fur elise" என்னும் விஷயம் பல வருஷம் கழிச்சுத்தான் எனக்கும் தெரியும். நானும் கூட டைட்டனோட சொந்த சரக்குன்னு நினச்சுக்கிட்டிருந்தேன்.


 26. rv said...

  சில விட்டுப்போன விளம்பரங்கள்

  1. அம்ருதாஞ்சன் - போயே போச்சு, போயிந்தி, Its gone.

  2. நிஜாம் பாக்கு - அந்தக் காலத்திலேயே black or white ஸ்டைலில் மார்ப்பிங்கெல்லாம் பண்ணிருப்பாங்க. "பெரியவர் சிறியவர் அனைவரும் விரும்பிடும்.."

  3. நரசுஸ் காபி - உசிலைமணியின் "பேஷ் பேஷ்".

  4. கோல்ட் ஸ்பாட் - The Zing Thing

  5. 50/50 பிஸ்கட் - அவுட் ஆர் நாட் அவுட்


 27. rv said...

  Kanags,
  I have not come across any Unicode converter for Russian like e-kalappai. However Russian language support is in built in XP, u may have to install it from the CD. But to use this, u must know russian Key Board Layout.

  heres how to add Russian to you language bar.
  ---
  If you are using WinXP, Go to Control Panel --> Regional & Language Options --> under the Languages Tab --> click on details --> there you will find Installed Services -- Next to it, will be 'Add' Button. Click on it and a drop down menu will appear, choose 'Russian' in it and click ok.

  Now back in desktop, pressing Alt+Shift(by default) shud change input language to Russian. U will be able to type in notepad with this. But like i said before, requires knowledge of default Russian keyboard layout.

  hope this helps..
  ---
  do mail me at travis2001ATmailDOTru if you need further details..


 28. நிழல்மனிதன் said...

  திருச்சி விவிதபாரதி வர்த்தக ஒலிபரப்பில்...

  கண்டக்டர்:'சாரதாஸ்லாம் இறங்குங்க.!'
  பயணிகள் முன்டியடித்து இறங்கும் சப்தத்திற்கு பிறகு..
  கண்டக்டர்:'டிரைவர் வண்டிய எடுங்க.!'
  டிரைவர்: 'வெறும் வண்டியையா?'

  வீடியோகான் வாஷிங்மெஷின் விளம்பரத்தில் ஒரு ஜப்பானியர்..
  'ஐ யாம் டேக்கிங் இட் வித் மி டு ஜபான்'


 29. rv said...

  நிழல்மனிதன்,
  சாரதாஸ் விளம்பரம் கேட்டதில்ல.

  'ஐ யாம் டேக்கிங் இட் வித் மி டு ஜபான்' நினைவில் இருக்கு. ஆனா விடியோகான் தானான்னு சந்தேகம் வருது.


 30. அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

  என் நண்பர்களிடமும் சில சமயம் இந்த மாதிரி நினைவுபடுத்தி பேசுவது உண்டு. பாடாவதி நாடகத்தொடர்களை விட பல சமயங்களில் விளம்பரங்கள் நன்றாக இருக்கின்றன. எத்தனை முறை பார்த்தாலும் அலுப்பதில்லை. எல்லா பெவிக்கால் விளம்ரங்கள், ஹட்ச் நாய்குட்டி விளம்பரம் (இதை எப்படி எல்லாரும் சொல்ல மறந்தார்கள்), ஏ. ஆர். ரகுமான் ஏர்டெல் விளம்பரம். மற்றபடி, இங்கு குறிப்பிட்டிருக்கும் பல விளம்பரங்கள் பிடிக்குதோ இல்லையோ மறக்கு முடியாதுங்கிறது உண்மை தான்..


 31. rv said...

  ரவிசங்கர்,
  //இப்பத்திய ஹார்லிக்ஸ் இபான் குபான் கூட நல்லாத்தான் இருக்கு. குழந்தைகள் வர விளம்பரம்னா இப்பத்திய Hutch கூட நல்லா இருக்கு.
  //
  ஹி ஹி.. முதல்ல மறந்துட்டேன். ஆனா அப்புறம் நினைவுக்கு வந்துருச்சி.

  ஏர்டெல் - ஹூம். மறந்தே போச்சு. சூப்பர் ஆட். தலைவருக்காகவே டவுன்லோட் பண்ணி வச்சுருந்தேன்.


 32. பூனைக்குட்டி said...

  ஏதோ ஒரு ஸிமெண்ட் விளம்பரம், கொத்தனாரை கடைசியில் விருநதினருக்கு அறிமுகம் செய்வாங்க அது ரொம்ப பிடிக்கும்.


 33. Priya said...

  ஏதோ ஒரு ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் விளம்பரம்னு நினைக்கிறேன். அம்மா கண்ணீர்ல கரைஞ்ச மையால குழந்தைக்கு திருஷ்டிப் பொட்டு வைப்பாங்க. நமக்கே சிலிர்த்துடும்.
  இன்னொரு விளம்பரத்தில், அம்மா தொலைபேசியில் பேசிக்கிட்டு இருக்கப்பவே குழந்தை எழுந்து நின்னு முதல் முதல் அடியெடுத்து தளர்நடை போடும். அப்போ அந்த அம்மா சிரிப்பாங்க பாருங்க! அதைச் சொல்ல வார்த்தைகளே இல்லை


 34. rv said...

  மோகன்தாஸ்,
  என்ன விளம்பரம்னு ஞாபகத்துக்கு வரலியே???

  ப்ரியா அக்கா,
  ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன்ல வர எல்லா விளம்பரங்களும் பயங்கர செண்டி. நீங்க சொன்ன ரெண்டும் எனக்கு தெரியாது. ஏழு வருஷத்தில மிஸ் பண்ணிருக்கலாம்


 35. Priya said...

  நான் சொன்ன ரெண்டுமே புதுசுப்பா.
  இப்போ எல்லா நிறுவனங்களுமே குழந்தைகளையும், பெத்தவங்க பாசத்தையும் குறிவச்சுத்தானே விளம்பரங்கள் எடுக்குறாங்க.

  பாரி சுகர்ஸ்கு விளம்பரங்கள்
  1. வீட்டுல போன் அடிக்குது. குழந்தைகிட்ட அம்மா "நான் இல்லைன்னு சொல்லு" னு சொல்றாங்க. குழந்தையும் சமத்தா "ஆன்டி, அம்மா வீட்ல இல்லைன்னு சொல்ல சொன்னாங்க" னு சொல்லிட்டு வைச்சுடுது.

  2. கர்ப்பமா இருக்குற அம்மா பையன்கிட்ட உனக்கு தங்கை வேனுமா னு கேக்குறாங்க, பையன் இல்லைன்னு சொல்றான். "தம்பிக் குட்டி?" - இது அம்மா.
  பையன் வேணாம்னு சொல்ல, அம்மா "பின்ன?"
  பையன் சொல்றான் - "நாய்க்குட்டி!"

  அந்த அம்மா செம்ம க்யூட்!

  இந்த ரெண்டு ஆட்கும் பன்ச் லைன், குழந்தைங்க மனசு மாத்ரியே பாரி சர்க்கரையும் மாசு மறுவில்லாம தூய்மையா இருக்காம்!


 36. rv said...

  ப்ரியா அக்கா,
  பாரி சுகர்ஸா? அவங்க விளம்பரம் கொடுக்கறாங்கறதே எனக்கு நியுஸ்!

  --
  சே..என்ன கஷ்ட காலம். என் பதிவுக்கு நானே விளம்பரம் கொடுத்துக்க வேண்டியிருக்கு. இந்த விளம்பர பதிவுல அப்புறம் வந்ததெல்லாம் அடிச்சுகிட்டு போயிடுச்சு!

  இதப் பாத்தாச்சா?


 37. ஜெயஸ்ரீ said...

  One Black Coffee please ...


  remember ???/


 38. rv said...

  ஜெயஸ்ரீ,
  //One Black Coffee please ...


  remember ???/ //
  இது என்ன? சோனி எரிக்கஸனா??


 39. அன்பு said...

  எனக்குப்பிடித்த சில 'நச்'

  அருண் ஐஸ்க்ரீம் விளம்பரம்:
  உன்னை நினைத்தேன் உலகை மறந்தேன்...

  ஆப்டானிக்கா டிவியின்:
  When a picture speaks
  It must be on Optonica

  மற்ற எல்லாத்தையும் எல்லாரும் சொல்லிட்டதாலையும், கண்டிப்பா நீங்க பார்த்திருக்க வாய்ப்பில்லை என்பதாலும் என்பங்குக்கு சமீபத்திய விளம்பரங்கள் சில:

  1) ப்ளூ டேர்ட் கூரியர் விளம்பரம்
  Large Shipments...

  2) குர் குர் (சிப்ஸ்)
  ஜீஹியின் - என்ன ஃபேமிலாடா...
  சோனியில் - ஹியா ஃபேமிலியே...

  3) DHL couriers விளம்பரங்கள்

  இதெல்லாம் சொன்னா புரியாது, வாய்ப்புகிடைக்கும்போது பாருங்க!


 40. rv said...

  அன்பு,
  ஆப்டானிக்கான்னு ஒரு டிவி இருக்கறதே இப்ப நீங்க சொல்லித்தான் தெரியும் :)

  //மற்ற எல்லாத்தையும் எல்லாரும் சொல்லிட்டதாலையும், கண்டிப்பா நீங்க பார்த்திருக்க வாய்ப்பில்லை என்பதாலும் என்பங்குக்கு சமீபத்திய விளம்பரங்கள் //

  இது உண்மை. நீங்க சொன்னது எதுவும் தெரியாது. DHL-க்கு முன்னாடி ஜம்போ னு ஒரு விளம்பரம் வரும்.


 

வார்ப்புரு | தமிழாக்கம்