நான் ஒரு இந்து!

வலையில் மட்டுமில்லாம மிச்ச எல்லா இடத்திலேயும் இதப்பத்தி பேசிப்பேசி ஒய்ந்து விட்டிருப்பார்கள் என்றாலும் ப்ளாக் பண்ணனும்னு தோணினதால பண்றேன். நான் இந்து என்று சொல்வதற்கு நம்மில் பலரும் பெருமையாச் சொல்றதில்லைன்னு நினைக்கிறேன். இந்து என்றாலே இந்து அடிப்படைவாதிகள் என்ற நிலைப்பாட்டிலேயே பி.பி.சி போன்றவையே சொல்கின்றன. இத்தனைக்கும் மிகவும் tolerant-ஆன ஒரு மதத்தை வாய்க்கூசாமல் மற்றவர் சொல்லும் நிலைக்கு வந்துவிட்டோம். என்னைப் பொறுத்தவரை நான் ஒன்னும் பெரிய believer கிடையாது. கிட்டத்தட்ட humpty-dumpty நிலைதான் எனக்கும். இருந்தாலும் ஒரேயடியா இந்துமதமென்றாலே ஜாதியை மட்டுமே முன்னிறுத்தி தூற்றுவோர் நிறையப்பேராகி விட்டனர். இதில் பாதி உண்மை பாதி பொய். எது என்னவென்பது விளங்காததால் தான் purpose of life-ஐ தேடிக்கொண்டிருக்கிறோம். என்னைப்பொறுத்தவரை கடவுள்களை நம்பினாலும் நம்பாவிட்டாலும் இந்து என்பதை என்னுடைய identity-களுல் ஒன்றாக நினைக்கிறேன்.

அதென்னமோ விஹெச்பியை எதிர்க்கும் அளவுக்கு (அவர்கள் அடிப்படைவாதிகள் என்பதில் ஒரு சந்தேகமுமில்லை) மிச்சவற்றை பற்றி நாம் கவலைப்படுவதில்லை. இந்துக்களாகிய நாம் இந்த விஷயத்தில் post-war ஜெர்மனியர்கள் போல் 'நாங்கள் அவர்களில்லை' என்ற மனோபாவத்திலேயே நம் மதத்தை (இவ்விடத்தில் கலாச்சாரத்தை) தூற்றுகிறோமென்றே எனக்கு சில நேரம் படுகிறது. மீடியாவும் ஒரு வித pseudo-secular uber-sensitive attitude-ஐ இந்துக்களிடத்தில் காண்பிக்கின்றன. எல்லா மதங்களிலும் சில காலத்திற்கொவ்வாத விடயங்கள் இருக்கத்தான் செய்கின்றது. வர்ணாசிரமம் என்பது எதற்காக உருவாக்கப்பட்டது என்பதே சரியாக தெரியாத நிலையில் அதன் தற்போதைய கோர ரூபத்தை மட்டுமே கொண்டு இந்துக்கள் என்றாலே pagan and inferentially fundamentalists என்ற மேற்க்கத்திய நோக்கும் இதற்கு காரணமாக இருக்கலாம். இதில் மேற்க்கத்திய, குறிப்பாக ஐரோப்பிய நாடுகளுக்கு அவைகளின் மதங்களும் அதன் கடவுள்களுமே உண்மையான வழியென்றும் அதைப் பின்பற்றுவதாலேயே intellectual center of humanity அவைகளே என்ற நம்பிக்கையும் முக்கியமானது(கிரேக்கர்களும் இப்போது இ.யூ. வில்!). அப்படிப்பட்ட மேற்க்கத்திய ஆதிக்கநாடுகளுக்கு பலவாயிரம் ஆண்டுகளாய் continuous-ஆக அவற்றிற்கு இணையாகவும் சில விஷயங்களில் மேலாகவும் வேறோரு சமுதாயம் இருந்திருக்கிறது என்பது மட்டையடி போன்றது. இதனால் இப்போது பேசிப்பேசிப் புளித்துப்போய் விட்ட aryan invasion போன்ற விஷயங்களையும் கட்டவிழ்த்து விடுவதில் inherent bias இருந்திருக்கவேண்டும் என்பது லாஜிக்கலான விஷயம்.

அதனாலேயே வெறும் ஒரு விஷயத்திற்காக, உலகத்திற்கு அறிவியலில், தத்துவத்தில், தெய்வீகத்தில் இந்துக்களின் பங்களிப்பு இருட்டடிப்பு செய்யப்படுகின்றது. செய்பவர் பலர் நம்மாட்கள் தான். அதுதான் வருத்தமாயிருக்கிறது. நான் இந்து என்று பெருமைப்பட்டு சொல்வதினாலேயே நான் விஹெச்பி ஆளில்லை. இந்த புரிதலில்லாமல் இருப்பது ஒரு fashion ஆகவும் போய்விட்டது என்பதென் தாழ்ந்த கருத்து. இந்தியன், தமிழன் இப்டியெல்லாம் politically correct identity-களை விட்டு எதுக்கு இதப்பத்தி பதிவு என்று நீங்கள் நினைத்தால் அதற்கு பதில் நானல்ல.. அன்னி பெசண்ட் தருகிறார்.

"Hinduism is the soil into which India's roots are struck, and torn of that she will inevitably wither, as a tree torn out from its place. Many are the religions and many are the races flourishing in India, but none of them stretches back into the far dawn of her past, nor are they necessary for her endurance as a nation. Everyone might pass away as they came and India would still remain. But let Hinduism vanish and what is she? A geographical expression of the past, a dim memory of a perished glory, her literature, her art, her monuments, all have Hindudom written across them. And if Hindus do not maintain Hinduism, who shall save it? If India's own children do not cling to her faith, who shall guard it? India alone can save India, and India and Hinduism are one."

என்னமோ எழுதப்போய்.. ஒரு விஷயத்திலும் focus இல்லாம கச்சாமுச்சானு பதிவாக்கிவிட்டேன்..என்னடா இன்னோரு ஆர்.எஸ்.எஸ் invasion-ஆன்னு நீங்க தலையில் அடிச்சுக்கொள்வதற்கு முன்னர் ஓடிவிடுகிறேன். பலரும் தமிழ்மணத்தில் சுட்டி பார்த்து நினைத்திருப்பீர்கள். அதுதான் இந்தப்பதிவின் நோக்கே.

இது நல்ல கூத்து

பணத்துக்காக என்னென்னவெல்லாம் கூத்து அடிக்கிறாங்க.. நெட்ல பாத்த செய்தி இது. recipes செக்ஷன் - ல எப்டியெல்லாம் சமைக்கலாம்னு வேற ஐடியா தந்திருக்கார் புண்ணியவான். இதுக்கு மக்கள் பணம் வேறே தந்திருக்காங்க.

Save Toby

இன்னொரு கூத்து இங்கே.. பணந்த்ராட்டி u will be sniped! :)

பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே!

இந்தமாதிரி இப்போ பேசினா கேனையன்னுதான் பட்டம் கிடைக்கும்னு நினைக்கிறேன். இருந்தாலும்ஆழமான அர்த்தங்கள் கொண்ட பாடலிது. மனித இனத்திற்கும் மற்ற உயிரினங்களுக்கும் இருக்கும்பெரிய வித்தியாசமே இந்தமாதிரி பகைவர்களையும் மன்னிக்கும் கருணையென்பது என் கருத்து. வள்ளுவப்பெருமான்சொன்ன இதே "அவர் நாண நன்னயஞ்செய்து விடல்" என்னும் குணம் இப்போது கொஞ்சம் குறைந்துவிட்டதாகவே தோன்றுகிறது.அவன் அன்னிக்கு இதச் சொன்னானே.. போனவருஷம் இப்படி செய்தானே என்று மனதிற்குள்ளேயே கருவிக்கொண்டு எப்போது அவனைகவுக்கலாம்னே எல்லாரும், நான் உள்பட, அலைகிறோம். விவேக் சொல்றமாதிரி நமக்கெல்லாம் ஆயிரம் புத்தர்களும், பாரதிகளும் வந்தாலும்
போதாது!


பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே! - பாரதியார்


புகை நடுவினில் தீயிருப்பதை பூமியில் கண்டோமே!
பகை நடுவினில் அன்புருவான நம் பரமன் வாழ்கின்றான்!பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே!


சிப்பியிலே நல்லமுத்து விளைந்திடும் செய்தியறியாயோ?
குப்பையிலே மலர்க்கொஞ்சும் குறுக்கத்திக்கொடி வளராதோ?பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே!


வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது வாழ்வுக்கு நேராமோ?
தாழ்வைப் பிறர்க்கெண்ண தானழிவானென்ற சாத்திரம் கேளாயோ?
பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே!


உண்ணவரும் புலி தன்னையும் அன்போடு சிந்தையில் போற்றிடுவாய்!
அன்னை பராசக்தி அவ்வுருவாயினும் அவளைக் கும்பிடுவாய்!
பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே! பகைவனுக்கருள்வாய்!

சாவிகளும் பாவிகளும்

கொஞ்சம் பிசியாக இருப்பதால் எனக்குப் பிடித்த தமிழ்ப்பாடல்கள் சிலவற்றின் வரிகளை போஸ்ட் பண்ணலாமேயென்று தோன்றிற்று. இந்த மாதிரியே கொஞ்ச நாள் தொடர உத்தேசம்.

நவசித்தி பெற்றாலும் - நீலகண்ட சிவன்

நவசித்தி பெற்றாலும் சிவபக்தி இல்லாத நரர்கள் வெறும் சாவி
எவர் புத்தியும் தள்ளி சுயபுத்தியும் இல்லாதிருப்பவர் பெரும்பாவி

நாதன் அருள் மறந்து போதமில்லா கூற்று நடிப்பவர் வெறும் சாவி
சீத்தமதி யணியும் சிவனை நினையாமல் இருப்பவர் பெரும்பாவி

தாய் தந்தை மனம் நோகச்செய்கின்ற குருத்துரோகத் தலைவர்கள் வெறும் சாவி
நாய்ப்போல் எவரையும் சிறீச் சண்டைத் தொடரும் நலங்கெட்டோர் பெரும்பாவி

பாவமும் புண்ணியமும் கணியாமல் பணத்திற்கே பறப்பவர் வெறும் சாவி
கோபமும் லோபமும் கொண்டு நல்லகுணத்தைக் குலைப்பவர் பெரும்பாவி

கேட்டும் கண்டும் அநுபவித்தும் உண்மையுணரா கர்விகள் வெறும் சாவி
என்றும் வாட்டமில்லாத கதி கொடுக்கும் நீலகண்டனின் அன்பில்லார் பெரும்பாவி

ஓ ரங்கசாயி - காம்போதி - தியாகராஜர்

இதுவரைக்கும் அருணா சாயிராமும், டி. எம். கிருஷ்ணாவுமே பாடிக்கேட்டுக்கொண்டிருந்தேன். இந்த பாட்டு எனக்கு மிகவும் பிடித்ததானதற்கு காரணமே கிருஷ்ணாதான். அவரின் "ஓ ரங்கசாயி" என்கிற ஆல்பம் மிக அருமை.

இதே பாடலை மஹாவித்வான்களான செம்மங்குடியும் எம். எஸ்-ஸும் பாடுவதை கேட்டுப்பாருங்கள்.

நேற்றுதான் எதேச்சையாக இந்த பாட்டை மறைந்த செம்மங்குடி பாடிய version இந்த சைட்டில் கிடைத்தது. அமிர்தம். நேற்று மாலையிலிருந்து என் ப்ளேயரில் repeat-லேயே ஓடிக் கொண்டிருக்கிறது. நீங்களும் கேட்டுப்பாருங்கள்.

அதேபோல் எம். எஸ் அம்மா பாடிய version திரு. சிவகுமார் வைத்திருக்கும் இந்த comprehensive-வான தளத்தில் உள்ளது.

டாக்டர்..... நீங்க நல்லவரா? கெட்டவரா?

அரசு மருத்துவர்கள் பற்றி கொஞ்ச நாள் முன்னாடி எழுதியிருந்தேன். அதன் தொடர்ச்சியாக...


கோழியால் முட்டை வந்ததா என்பது மாதிரியான கேள்வி - இன்று மருத்துவர்களை services விற்கும் vendor-களாக மக்கள் பார்ப்பதனால் மருத்துவர்களும் business-ஆக தம் தொழிலை கருதுகிறார்களா இல்லை இதனால் அது வந்ததா?


இப்போதும் கிராமங்களிலிருந்து வரும் மக்கள், குடும்ப மருத்துவரை, தம் குடும்பத்தினராகவே கருதுவதை பார்க்கிறோம். ஆனால் அங்கேயும்சுகாதார மையங்கள் ஒழுங்காக இயங்குகின்றனவா என்பது பல இடங்களில் சந்தேகமென்று நினைக்கிறேன். இதைப்பற்றி எனக்கு அவ்வளவு பரிச்சயமில்லாத்தால் தெரிந்தோர் கூறினால் நன்று. ஆனால் நமக்கு பழக்கப்பட்ட நகர்ப்புறங்களில், நான் பார்த்தவரையில். ஒரு டிவி வாங்கினோம். அதற்காக கடைக்காரனை என்ன கட்டிக்கொள்கிறோமா? அதே போல ஒரு மருத்துவ நிபுணர் நம்மை குணப்படுத்துகிறார் என்றால் சும்மா ஒன்னும் செய்யலியே. பணம் கொடுத்துத்தானே அவரோட service-ஐ வாங்குகிறோம் என்ற மனப்பான்மை பெருகிவருகிறது.


நமக்கு ஒரு குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றி கெட்ட எண்ணம் தோன்றிவிட்டால். ஏன், அச்சமூகத்தைச் சேர்ந்த பத்துப்பேரைக் கூட நமக்கு தெரியாமல் இருக்கும். ஆனால், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதை, wrong context-இல் எடுத்துக்கொண்டு சர்வசாதாரணமாக generalize பண்ணுவது நம் பழக்கமாகிவிட்டது. அரசியல் என்றாலே சாக்கடை. இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள். இதெல்லாம் இந்த அறிவற்ற generalization வரும் inference-கள் என்று சொல்லலாம். இதுபோல் தனியார் மருத்துவர்கள் காசு புடுங்க காத்துக்கொண்டிருக்கிறார்கள். மருத்துவமனைகள் எல்லாம் பில்-ஏற்றி ஹார்ட் அட்டாக் கொடுக்கும் என்பதும். இவை நகைச்சுவைக்காக சொல்வதெனில் பரவாயில்லை. அல்லது ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் நடப்பதை எடுத்துச் சொல்லலாம். ஆனால் generalize செய்வதால் பிரச்சனை.


ஒரு உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு ரத்த அழுத்தம் என்று வைத்துகொள்வோம். ரத்த அழுத்தத்திற்கு 2 ரூபாய்க்கும் மாத்திரை எழுதலாம். 100 ரூபாய்க்கும் எழுதலாம். இதில் மருத்துவருக்கும் dilemma இருக்கும். உங்களின் நிலையைப் (status) பொறுத்தே மருந்து கொடுக்க வேண்டும். அதேசமயம் அது நோய்க்கான தீர்வாகவும் இருக்க வேண்டும். 100Rs க்கு எழுதுகிறார் என்று வைத்துக்கொள்வோம். நான் சொன்ன 2 ரூபாய், 100 ரூபாய் மாத்திரைகள் இரண்டுமே ரத்த அழுத்தத்தைக் கட்டுபடுத்துபவைதானே. இவர் ஏன் 100 Rs க்கு எழுதுகிறார் என்ற கேள்வி நியாயமாக எழக்கூடிய ஓன்று. அதற்கு பதில் - ரிசல்ட் ஒன்றானாலும், உங்களின் உடலிற்கேற்ப, conditions-களுக்கேற்ப எது தேவையோ அதைத்தான் எழுதமுடியும். ஆனால், யோசிக்காமல் மக்கள் உடனே கூறுவது, "doctor-க்கு மருந்து கடைலேர்ந்து கமிஷன் போது போல"-னு சர்வ சாதாரணமாக இகழ்வர். நீங்கள் போகும் மருத்துவர் தெரியாத்தனமாக சைடு பிஸினஸாக
மருந்துகடை வைத்திருந்தாரென்றால் இன்னும் மோசம். "கடை ஆரம்மிச்சாலும் ஆரம்மிச்சார், இப்டி எழுதி தள்ளிகினே போறாரே" என்று டயலாக் வரும். இதில் நல்லது செஞ்சாலும் கெட்ட பேர்தான்.

அதுக்காக மருத்துவர்கள் எல்லோரும் தேவையானவற்றையே எழுதுவார்கள் என்ற நம்பிக்கையும் வைக்காதீர்கள். நான் யாருக்கு சப்போர்ட்-னு உங்களுக்கு சந்தேகம் வந்தாலும் பரவாயில்ல. சொல்ல வந்தத சொல்லிடறேன். சும்மா கமிஷன் வாங்கிண்டு கன்னாபின்னானு எழுதும் டாக்டர்களும் பலர் உள்ளார்கள். உங்களுக்கு எழுதப்படும் ஒவ்வொரு மருந்தும் மாத்திரையும் என்னது, எதற்க்காக கொடுக்கப்படுகின்றது, இது இல்லையென்றால் வேறென்ன சாப்பிடலாம் என்பவற்றை எல்லாம் விவரமாக மருத்துவரைக் கேளுங்கள். படித்தவர்கள் கூட சிவப்பு கலர் capsule, மஞ்ச கலர் மாத்திரை என்ற நிலையிலேயே நம்மூரில் இருக்கிறார்கள். இப்பல்லாம் மருத்துவமனைகளிலேயே நோயாளிக்கென ஒரு folder போட்டு விடுகிறார்கள். அதிலேயே மருந்துசீட்டின் கூடவே இந்த விவரங்கள் பின் பண்ணி வைத்துகொள்ளுங்கள். தனியாக ஒரு பேப்பரில் எழுதி உங்க ப்ளட் க்ருப் கூடவே இந்த விவரங்களையும் எழுதி பர்ஸ்-ல வெச்சுக்கறதும் நல்லது. இத்துடன் இன்று ஒரு தகவல் முடிவடைகிறது.

இப்பல்லாம் ரத்த பரிசோதனைக்கூடம் , ஸ்கேன் சென்டர் ஏன் மருத்துவமனைகள் கூட ஒரு நோயாளிக்கு இவ்வளவு என்று
கொட்டிக்கொடுப்பதும் நடக்கிறது. இதைத்தவிர, மருந்து கம்பெனிகள் கொடுப்பது தனி. சும்மா ஏனோதானோனு எழுதினிங்கனால்லாம் வெறும் நோட்பாட், பென் ஸ்டாண்ட் காலெண்டர் தான். ஆனா, கிட்டத்தட்ட அவங்க சொன்ன டார்கெட் தொட்டுட்டீங்கன்னா ஏசி, பிரிட்ஜில் ஆரம்பிக்கும். எனக்கு தெரிஞ்சு ஒரு கம்பெனி எங்க ஊர்லேயே Honda City கொடுத்திருக்கிறது மூணு பேருக்கு. உனக்கு எப்படிடா தெரியும்னு நீங்க கேட்கலாம். இதெல்லாம் தெரிஞ்சுதானே மருத்துவம் படிக்கணும்னே முடிவு பண்ணேன்! :)


ரொம்ப பெரிய பதிவாப் போச்சு. மிச்சம் அடுத்த தடவை.

ஹிந்தியா? தமிழா?

சிறிது நாட்களுக்கு முன் இந்த விவாதம் எனக்கும் என் மஹராஷ்ட்ரிய நண்பருக்கும் நிகழ்ந்தது. அவரின் கேள்வி: அதன் கிட்டத்தட்ட சரியான தமிழாக்கம்.

"தமிழர்கள் ஏன் தங்களை மற்ற இந்திய மாநிலங்களைப் போல் கருதாமல், இன்னும் தாய்மொழி பற்றி மட்டுமே பெருமிதப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்? இந்தியைக் கற்றுக்கொள்வது ஒன்றும் தமிழ் மொழிக்கு நேரடியாக தீங்கு விளைவிக்கக்கூடியதன்று. அந்நிய மொழியான ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகக் கற்றுக்கொள்ளுவதற்கு காட்டும் ஆர்வத்தை ஏன் இந்தி கற்றுக்கொள்வதற்கு காட்ட மறுக்கிறீர்கள்? மராட்டியையும் ஆங்கிலத்தையும் கற்கும் அதே தறுவாயில் ஹிந்தியையும் கற்கிறோம் நாங்கள். இது வடநாட்டிலுள்ள பல மாநிலங்களுக்கும் பொருந்தும்.

ஏன் ஆந்திர, கர்நாடக மற்றும் கேரள மாநிலத்தோர் இத்தகைய மொழிவெறி என்றே மிகைப்படுத்திக் கூறக்கூடியப் பற்றைக் காட்டுவதில்லை? மொழி என்பது முற்காலத்தில் எப்படியோ! ஆனால் இன்றைய நிலையில் மொழியின் அடையாளம் பலர் புரிந்து கொள்வது ஒன்றே மிக அவசியமாகிறது. இதில் ஹிந்தியை கற்றுக்கொண்டால் என்ன பாவம்? இந்நாட்டில் பலராலும் பேசப்படும் மொழி ஹிந்தி. ஹிந்தியின் ரிஷிமூலம் நதிமூலம் பார்க்கவேண்டியதில்லை. இப்போதைக்கு தேவைப்படும் மொழி என்றளவில் கற்கலாமே. அதிலென்ன தவறு?

சரித்திரத்தின் வழி பார்த்தால் சம்ஸ்கிருதம், தமிழ், ஹிப்ரூ, லாத்தீன் தவிர வேரேதெயுமே கற்பது பயனற்றது. இன்னும் சொல்லப்போனால், கற்காலத்து மனிதர்கள் ஒலி வழியே மொழியின்றி பேசிக்கொண்டனர். அவ்வாறெனில் அம்மொழியே சிறந்ததென்று கூறமுடியுமா? 2000 வருடங்களுக்கு முன் தமிழில் தொல்க்காப்பியம் உருவானதென்று கூறுவது இந்தியர்களெல்லாம் பெருமை அடையச் செய்யும் விஷயம். அப்பேர்ப்பட்ட மொழி இன்றளவினும் பேசப்படும் மொழியாக இருப்பது இன்னமும் பெருமையளிக்கிறது. ஆனால், ஒரே கூண்டுக்குள் பறக்கும் பறவையாக இன்னமும் ஏன் பறந்து கொண்டிருக்கிறீர்கள்? அரசியல் மட்டுமே இவ்விஷயத்தில் காரணமா?

தமிழ்நாட்டில் மட்டுமே இன்றும் ஹிந்தியென்று சொன்னால் பூகம்பமே ஏற்படுகின்றது. அரசியல் மட்டும் காரணமில்லையெனில் தமிழ் மட்டுமே உலகில் சிறந்த மொழியென்ற நினைப்பும் அதிலுண்டா? மொழியென்பது வெறும் communication device தானே. முன்னர் BASIC பயின்றோர் C பயின்றனர். இப்போது C++ பயில்கின்றனர். இவ்வாறு பயிலும் போது BASIC ஓ C-ஓ இப்போதைக்கு உபயோகமில்லாவிடினும், அவை பயனற்றதென்று எவரும் கூறுவதில்லை. அது போலவே மொழியும். அவ்வாறிருக்கையில் தமிழ், ஹிந்தி பற்றி மட்டுமேன் இவ்வளவு சர்ச்சை?"

இதைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன??

 

வார்ப்புரு | தமிழாக்கம்