வாங்கு வாங்கென்று வாங்குகிறது நம் India

சில நாட்களுக்கு முன் பிபிசியின் தெற்க்காசிய பக்கங்களைப் புரட்டியதில் ஆச்சரியமான ஒரு தகவல் கிடைத்தது. முன்னேறி வரும் நாடுகளில் உலகிலேயே அதிக அளவு ஆயுதங்களை வாங்கிக்குவிப்பது எந்த நாடு தெரியுமா? சீனா, சவூதி அரேபியா, இரான் என்று நீங்கள் நினைக்க ஆரம்பித்தால்.. ஒரு நிமிடம். ஆயுதங்களை அதிகமாய் வாங்கிக்குவிப்பது நம் இந்தியா தான். நம்புவதற்கு கஷ்டமாக இருக்கிறதா?

1997-2004 எட்டு ஆண்டு காலத்தில் உலகம் முழுவதும் நடந்த ஆயுத ஒப்பந்தங்களில் 10% இந்தியாவுடையது. இந்த காலத்தில் நாம் கையெழுத்திட்ட ஒப்பந்தங்களின் மதிப்பு சுமார் 69 ஆயிரம் கோடி (15.7 bln US$). 2001-2004-ல் சீனா முன்னணி வகித்தாலும், 2004-ல் நம். 1 இடத்தை நாம் மீண்டும் கைபற்றியிருக்கிறோம். கடந்த ஆண்டில் மட்டும் இந்தியா வாங்குவதாய் கையெழுத்திட்ட ஆயுதங்களின் மதிப்பு சுமார் 25 ஆயிரம் கோடி (5.7 bln US$). இதற்காகவும் ஏற்கனவே ஒப்புக்கொண்டவற்றிற்காகவும், வரும் நிதியாண்டில் 18% அதிக நிதி ஒதுக்கியுள்ளார் சிதம்பரம். inflation-ஐ கணக்கில் கொண்டால் உண்மையில் 6-7% வளர்ச்சி என்று சொல்ல வேண்டும் என்கிறார்கள்.

சரி, அப்படி என்னதான் வாங்குகிறோம்? சில சாம்பிள்கள்.

1. Admiral Gorshkov - Aircraft Carrier
கொடுப்பது: ரஷ்யா
விலை: இலவசம்!

என்னடா, இலவசம் என்று இருக்கிறதே என்று நினைக்காதீர்கள். 80-களின் ஆரம்பத்தில் முடிக்கப்பட்ட இந்த போர்க்கப்பல் இந்தியாவிற்கு எங்கள் பரிசு என்று இனிப்பாய் சொன்னாலும், இதை நவீனப்படுத்த ஆகும் செலவு சுமார் 3000 கோடி என்று பில் கொடுக்கிறார்கள் ரஷ்யர்கள். மேலும், இதுதவிர இடம்பெற 18-20 ரஷ்ய MiG-29k ரக போர்விமானங்கள் வாங்க தனியாக சுமார் 4500 கோடி. இந்த கப்பல் வாங்குவது ஒரு பெரிய தவறென்று முன்னாள் கடற்படை அட்மிரல் ஒருவர் எழுதியுள்ளது இங்கே.

2. Mirage போர்விமானங்கள்
கொடுப்பது: பிரான்ஸ்
விலை: 126 விமானங்கள் ஒவ்வொன்றும் 132 கோடி என்ற விலையில் மொத்தம் 16 ஆயிரம் கோடி

3. Hawk Trainer Fighters
கொடுப்பது: இங்கிலாந்து
விலை: 48 கோடி மதிப்புடைய 66 விமானங்கள். மொத்தம் 3,100 கோடி

4. Howitzer Guns
கொடுப்பது: தெற்கு ஆப்பிரிக்கா, இஸ்ரேல், ஸ்வீடன்
விலை: 1200-1500 ஆயுதங்கள் வாங்குவது குறித்து இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடக்கிறது. கடைசியில் மொத்த பில் மதிப்பு 13,200 கோடி இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

5. Scorpene class Submarines
கொடுப்பது: பிரான்ஸ், ஸ்பெயின்
விலை: 1,300 கோடி மதிப்பில் ஆறு சப்மரீன்கள்: மொத்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 7,800 கோடி

இவைதவிர இஸ்ரேலிடமிருந்து Phalcon ரக Early Warning Systems விமானங்கள் வேறு போன்ற மற்றவை தனி.

இவற்றில் பாதி ஒப்பந்தங்கள் கடந்த பாரதீய ஜனதா ஆட்சிக்காலத்தில் கையெழுத்திடப்பட்டவை. அவற்றையும் ஏற்றுக்கொண்டு, அதற்கு மேல் சொந்தமாகவும் வாங்க அதிக அளவு நிதியை காங்கிரஸ் அரசு ஒதுக்கியுள்ளதாக செய்தித்தளம் கூறுகிறது.

துக்கடாவாக ஆயுதங்கள் வாங்குவதில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையேயான ஒப்பீடும் பிபிசியில் செய்துள்ளார்கள். அது கீழே

Image courtesy: news.bbc.com


தகவலுக்கு நன்றி: BBC செய்தித்தளம்

சுட்டிகள்
சுட்டி 1
சுட்டி 2
இந்தியப் பாதுகாப்பு அமைச்சகம்

7 Comments:

  1. துளசி கோபால் said...

    மெய்யாலுமா இவ்வளவு ஆயுதம் வாங்கறோம்?

    இது 'காந்தி புட்டின தேசம்' இல்லையா?


  2. Ganesh Gopalasubramanian said...

    காந்தி தேசமே காவலில்லையா
    நீதி தேவனே நியாயமில்லையா?ன்னு
    சூப்பர் ஸ்டார் மாதிரி பாடத்தோணுதுங்க....
    அநியாயமா இருக்கு.......


  3. Karthikeyan said...

    அப்பிடியா? ஒன்னும் சொல்வதற்க்கு இல்லை


  4. தாணு said...

    ஆயுதங்கள் தற்காப்புக்குன்னு ஒரு சப்பைக் கட்டு கட்டிகிட்டே உயிர்களைப் பலி வாங்குவது என்று முடிவடையும்?


  5. rv said...

    அக்கா, கணேஷ், கார்த்திக், தாணு

    நன்றி

    //காந்தி தேசமே //
    இதெல்லாம் இந்தக் காலத்தில் ஒத்துவருமா என்பதும் ஆராயப்பட வேண்டிய ஒன்று. போர் என்ற ஒன்றே இல்லாமல் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால், அப்படி இருக்கமுடிவதில்லையே.

    //ஆயுதங்கள் தற்காப்புக்குன்னு ஒரு சப்பைக் கட்டு கட்டிகிட்டே உயிர்களைப் பலி வாங்குவது என்று முடிவடையும்? //

    conventional arms-இன் அளவை கூட்டாமல், அதை நவீனப்படுத்துவதில் பணம் செலவிட்டால் இன்னும் பயனுள்ளதாய் இருக்கும் என்பது என் எண்ணம். அதைத்தான் செய்து வருகிறோம் நாம். வருங்காலத்தில் உலகப்போர் நடக்க எல்லாம் சாத்தியம் குறைவு. தீவிரவாதிகளுடனும், பிற நாடுகளுடன் skirmishes போன்றவையே நடக்க வாய்ப்பு அதிகம் அதனால் surgical strikes பண்ணக்கூடிய இந்த மாதிரி நவீன படைகளுக்குத்தான் தேவை இருக்கும்.

    நமக்கு உபயோகம் இருக்கோ இல்லியோ, வெச்சுக்கிறது ஒருவகையில நல்லதுன்னு எனக்கு தோணுது. இந்த ரஷ்யாவ பாருங்க, அவங்களோட மிகவும் சக்திவாய்ந்த Strategic Rocket Forces-ஐ வச்சு பயம் காட்டியே நிறைய காரியங்களை சாதிச்சுகிறாங்க.


  6. G.Ragavan said...

    இன்றைய சூழலில் ஆயுதமே வாங்காமலும் இருக்க முடியாது.

    தேவைக்கேற்ப ஆயுதங்களை வாங்குவது அறிவுடமைதான்.

    இன்றைய சூழலில் இத்தனை வாங்கினாலும் இந்தியா வீணாக யார் மீதும் பிரயோகம் செய்ததில்லை என்றே நினைக்கிறேன். வளர்ந்து வரும் தீவிரவாதத்தைக் கட்டுப் படுத்த இதுவும் உதவும்.


  7. rv said...

    //இன்றைய சூழலில் ஆயுதமே வாங்காமலும் இருக்க முடியாது.//

    ஆமாம் ராகவன் சார்,
    இது உண்மைதான். ஆனால் வளரும் நாடுகளுக்கிடையே, உலகிலேயே அதிகமாய் வாங்குவது நாம் தான் என்பது எனக்கு ஆச்சரியமான விஷயமாய் இருந்தது.


 

வார்ப்புரு | தமிழாக்கம்