மாஸ்கோ மே - 9: படங்கள்: 1

படங்காட்டி பல நாட்கள் ஆகிவிட்டபடியால்...ஒரு படப் பதிவு

கடந்த மே 9-ஆம் தேதி மாஸ்கோவில் இரண்டாம் உலகப்போரில் சோவியத் யூனியன் வெற்றி பெற்ற 60-வது நினைவுதின நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் கலந்து கொள்ள புஷ், ஷிராக், ஷ்ரோடர், நம் மன்மோகன் சிங் உட்பட 60 நாடுகளின் தலைவர்கள் வந்திருந்தனர். அந்த நிகழ்ச்சிக்கு கண்டிப்பாக முன்னிலை வகிக்க வரவெண்டுமென்று எனதருமை நண்பர் பூடின் அழைப்பு விடுத்திருந்தாலும், என் modesty-இன் காரணமாய், கூட்டத்திலேய் ஒருவனாய் நின்றிருந்தபோது எடுத்த படங்கள். :)









Red Square-இல் உள்ள St.Basil's Cathedral-க்கு பின்புறம் எடுத்தது. நான் சொன்ன உலகத்தலைகள் எல்லாம் அந்தப் பக்கம், அதாவது red square-இல் அமர்ந்திருந்தார்கள்.

8 Comments:

  1. சின்னவன் said...

    விளம்பரம் வராத உங்க பதிவே இல்லை போல இருக்கு !


  2. rv said...

    ஆமாம் சின்னவன்.
    ஏதோ பிரைம் டைம் சீரியல் மாதிரி விளம்பரம் போட்டுத்தாக்கறாங்க. எரிச்சலாதான் இருக்கு.

    word verification வெச்சா, கமெண்ட் கொடுக்கறவங்களுக்கு கஷ்டமா இருக்குமேன்னு பாக்கறேன்.


  3. dvetrivel said...

    விளம்பரம் இல்லாம இர்ருக்குமா? சோவியத் யூனியன் போர் வெற்றி விழாவை தலைமை தாங்க அழைப்பு வரும் அளவுக்கு பெரிய ஆள். உங்க பதிவில் விளம்பரம் வெளியிட்டால் உளகெங்கும் காண்பார்கள் என நினைத்துவிட்டார்கள் போலிருக்கிறதே??

    ;)


  4. rv said...

    ஆள்தோட்டபூபதி,

    நீங்க மட்டுந்தான் என் ரேஞ்ச சரியா புரிஞ்சு வச்சிருக்கீங்க... :)

    நன்றி


  5. தருமி said...

    புஷ், ஷிராக், ஷ்ரோடர், நம் மன்மோகன் சிங் -- இவங்க எல்லாம் சரி..அவரு கோர்பச்சாவ் வந்திருந்தாரா? என்ன ஆச்சு அவருக்கு..ஏதாவது தெரியுமா?


  6. rv said...

    தருமி,
    கோர்ப்சேவுக்கு மேற்கத்திய நாடுகளில்தான் நல்ல பெயர். இங்கே ரஷ்யர்களுக்கு அவரை கண்டாலே பிடிக்காது. சோவியத் யூனியன் பிரிந்தபோது அந்தப் புரட்சியில் சிக்கி பாராளுமன்றம் வரை டாங்கிகள் வந்து ரஷ்யா உள்நாட்டு கலகத்தில் தள்ளாடியதற்கு அவரின் தைரியமில்லாத நடவடிக்கைகள் தான் காரணம் என்று நம்புகிறார்கள் இங்குள்ள பலர். படித்தவர் உட்பட. என்ன செய்வது? புஷ்-ஷுக்கு கோர்பசேவ் யாரென்று தெரிந்திருந்தாலே அதிசயம்.. அதனால் விழாவில் இல்லை.


  7. முகமூடி said...

    St.Basil's Cathedral-க்கு அந்தப்பக்கம் ரெட் ஸ்கொயரில் எடுத்த போட்டோவ போட்றாதீங்க... என் அனுமதி இல்லாம என் போட்டோவ போட்டதுக்காக இந்தர்நேசனல் கோர்ட்ல நீங்க பதில் சொல்ல வேண்டி வரும்..


  8. rv said...

    ஆஹா தல,
    காடிலாக், மெர்சிடிஸ்ஸுக்கெல்லாம் நடுவே மான்குட்டி, சிறுத்தை, நரியெல்லாம் நிக்கும் போதே நினச்சேன்.. நீங்கதான அது... ;))


 

வார்ப்புரு | தமிழாக்கம்